Saturday, July 25, 2015

மகாகவி பாரதியார் கவிதைகள்

. சென்றது மீளாது

சென்றதினி மீளாது,மூட ரே!நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்!சென்றதனைக் குறித்தல் வேண்டாம்
இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;
தீமையெலாம் அழிந்துபோம்,திரும்பி வாரா.

Music Review  |  Photo gallery  |  Videos |  Audios | Top 10 Songs  |   New Releases | Lyrics  |  Fun in Music | Tamil Books | Specials |
PROFILES  Music  |  Cinema  |  Dance  |  Drama  | TV  |  Radio  | Variety  |  Mimicrys  | Kavidhai  |  Partners  |  Upcoming Events  |  Logos  |  Contact us  |

ஞானப் பாடல்கள்

92.பக்தி்
ராகம்-பிலஹரி
பல்லவி
பக்தியினாலே-தெய்வ-பக்தியினாலே
சரணங்கள்
பக்தியினாலே-இந்தப்
பாரினிலெய்திடும் மேன்மைகள் கேளடி!
சித்தந் தெளியும்,-இங்கு
செய்கை யனைத்திலும் செம்மை பிறந்திடும்,
வித்தைகள் சேரும்,-நல்ல
வீர ருறவு கிடைக்கும்-மனத்திடைத்
தத்துவ முண்டாம்,-நெஞ்சிற்
சஞ்சலம் நீங்கி உறுதி விளங்கும்.                                       (பக்தியினாலே)

காமப் பிசாசைக் -குதிக்
கால்கொண் டடித்து விழுத்திட லாகும்;இத்
தாமசப் பேயைக்-கண்டு
தாக்கி மடித்திட லாகும்;எந் நேரமும்
தீமையை எண்ணி-அஞ்சுந்
தேம்பற் பிசாசைத் திருகியெறிந்து பொய்ந்
நாம மில்லாத-உண்மை
நாமத்தினாலிங்கு நன்மை விளைந்திடும்,                        (பக்தியினாலே)

ஆசையைக் கொல்வோம்,-புலை
அச்சத்தைக் கொன்று பொசுக்கிடுவோம்,கெட்டட
பாச மறுப்போம்,-இங்கு
பார்வதி சக்தி விளங்குதல் கண்டதை
மோசஞ் செய்யாமல்-உண்மை
முற்றிலுங் கண்டு வணங்கி வணங்கி யோர்
ஈசனைப் போற்றி-இன்பம்
யாவையு முண்டு புகழ்கொண்டு வாழ்குவம்,                 (பக்தியினாலே)

சோர்வுகள் போகும்,-பொய்ச்
சுகத்தினைத் தள்ளிச் சுகம்பெற லாகும்,நற்
பார்வைகள் தோன்றும்,-மிடிப்
பாம்பு கடித்த விஷமகன் றேநல்ல
சேர்வைகள் சேரும்,-பல
செல்வங்கள் வந்து மகிழ்ச்சி விளைந்திடும்
தீர்வைகள் தீரும்,பலபல இன்பங்கள் சேர்ந்திடும்,        (பக்தியினாலே)

கல்வி வளரும்,-பல
காரியுங் கையுறும்,வீரிய மோங்கிடும்,
அல்ல லொழியும்-நல்ல
ஆண்மை யுண்டாகும்,அறிவு தெளிந்திடும்,
சொல்லுவதெல்லாம்-மறைச்
சொல்லினைப் போலப் பயனுள தாகும் மெய்
வல்லமை தோன்றும்,-தெய்வ
வாழ்க்கையுற்றே யிங்கு வாழ்ந்திடலாம்,உண்மைப் (பக்தியினாலே)

சோம்ப லழியும்-உடல்
சொன்ன படிக்கு நடக்கும்,முடி சற்றுங்
கூம்புத லின்றி-நல்ல
கோபுரம் போல நிமிர்ந்த நிலைபெறும்
வீம்புகள் போகும்-நல்ல
மேன்மையுண்டாகிப் புயங்கள் பருக்கும்,பொய்ப்
பாம்பு மடியும்-மெய்ப்
பரம் வென்று நல்ல நெறிகளுண்டாய் விடும்.                (பக்தியினாலே)

சந்ததி வாழும்,-வெறுஞ்
சஞ்சலங் கெட்டு வலிமைகள் சேர்ந்திடும்
இந்தப் புவிக்கே-இங்கொர்
ஈசனுண்டாயின் அறிக்கையிட் டேனுன்தன்
கந்த மலர்த்தாள்-துணை;
காதல் மகவு வளர்ந்திட வேண்டும்,என்
சிந்தை யறிந்தே-அருள்
செய்திட வேண்டும்’ என்றால் அருளெய்திடும்               (பக்தியினாலே)
I

மகரிஷிகளின் வாக்கு - 31 ஜூலை 2015

நன்றி: குமுதம்-ஜோதிடம் - 31 ஜூலை  2015

Tuesday, July 21, 2015

நிதி... மதி... நிம்மதி!

நிதி... மதி... நிம்மதி!
குடும்ப நிதி மேலாண்மை தொடர்
பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி
எது முதலில்..?
‘எப்படிப் பார்த்தாலும், ஐம்பதாயிரம் ரூபாய் ஆகும்னு கணக்குப் போட்டோம் .    ஆனா, அவ்வளவு பணம் வரலை. முப்பதுகிட்டதான் வந்தது...'
‘அட, இதுக்குப் போய் ஏன் இவ்வளவு கவலைப்படறீங்க..? சமாளிச்சிக்கலாம்... விடுங்க.’
‘சமாளிக்கறதா..? எப்படி முடியும்..? எல்லாத்தையுமே குறைச்சி குறைச்சிதானே வாங்கப் போறோம்..?'
‘குறைச்சலா வாங்கினாத் தானே ஐம்பதாயிரம்..?  வாங்காமலே விட்டுட்டா..?’
‘வாங்காமலே   நிறுத்திட லாமா...? என்ன சொல்றே..?’
‘நாம வாங்க நினைச்சதுல, எதெல்லாம் ரொம்ப ரொம்ப முக்கியமோ, அதையெல்லாம் வாங்குவோம். அவ்வளவா முக்கியம் இல்லைங்கறதை, விட்டுடுவோம்.’
‘எல்லாமே முக்கியம்தானே..?’
‘பாருங்க, ரெண்டே ரெண்டு தான் வாங்கறோம்னு வச்சிக்குங்க. அதுலகூட, எது ரொம்ப முக்கியம், எது அத்தனை முக்கியம் இல்லைன்னு சொல்லிட முடியும்.
அவசரமா, நோட்டும் பேனாவும் வாங்கப் போறீங்க. ஏதோ ஒரு காரணத்தால, ஒண்ணு தான் வாங்க முடியுதுன்னு வாங்குவீங்க. என்ன பண்ணு வீங்க..?’
‘நானா இருந்தா நோட்டுதான் வாங்குவேன். ஏன்னா, பேனாவை யார் கிட்டயாவது கடன்வாங்கிக்கூட எழுதிக்கலாம்...’
சொல்லும் போதே, அவனுக்குள் ஒரு புதுத் தெம்பு பிறந்து இருந்தது. தன் மனைவி என்ன சொல்ல வருகிறாள் என்பதைப் புரிந்துகொண்டான். செல்லமாக, தங்களுக்குள் பேசிக் கொள்ளும் மொழியில் ஒப்புக் கொண்டான்.
‘இதனாலதான் சொல்றேன்... நீ ஒரு ‘இன்டலிஜென்டலி...’
இதேபோன்ற சூழ்நிலையை, நாம் ஒவ்வொருவரும் எதிர் கொண்டிருப்போம்; எதிர்கொள் ளவும் போகிறோம். இந்தப் பெண் சொன்னது, செலவு மேலாண்மையின் மிக முக்கியக் கோட்பாடுகளில் ஒன்று.
இரண்டு வகைச் செலவுகள் இருந்தாலும், இரண்டாயிரம் வகைகள் இருந்தாலும், அவற்றில் எது மிக முக்கியம், எது மிக அவசரம்... என்றெல்லாம் இனம் பிரிக்க முடியும்.
தன் சிறு வயது பெண்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு கடைக்குப் போகிறாள் தாய். ஒருத்திக்கு செருப்பும், மற்றவளுக்கு கண்ணாடி வளையலும் வாங்க நினைக் கிறாள். அவளது துரதிர்ஷ்டம், தன் கையில் உள்ள பணத்தை வைத்து, யாரேனும் ஒருவருக்கு வேண்டியதைத்தான் வாங்க முடியும் என்கிற நிலை.
எதை வாங்குவாள்..?
மேலே சொன்ன தாய், படிக்காதவளாக இருந்தாலும், மெத்தப் படித்த அறிஞராக இருந்தாலும், அவருடைய தேர்வு, ஒரேமாதிரியாகத்தான் இருக்கும். இல்லையா..? என்ன தெரிகிறது..?
நம் செலவுகள் எல்லாவற்றை யும், முன்னுரிமைப்படுத்த முடியும். அது மட்டுமல்ல, சில செலவுகளில், அவற்றின் அளவு களை (‘க்வாண்டம்’) குறைத்துக் கொள்ள முடியும். இன்னும் சிலவற்றை, தள்ளிப்போட முடியும். (முடி திருத்துதல் போன்ற செலவுகள்) இன்னும் சிலவற்றையோ, கடன் வாங்கி யாவது, ‘சந்தித்தே’ ஆக வேண்டும்.(வேறென்ன...? கல்விக் கட்டணம் தான்!)
ஓர் ஏழைக் குடும்பம் தொடங்கி, சர்வ வல்லமை தாங்கிய அரசாங்கங்கள் வரை, எல்லாருக்கும் கையோடு உதவக் கூடிய செலவுக் கோட்பாடு, சற்றும் சந்தேகம் இன்றி, முன்னுரிமைப்படுத்துதல்தான். இவ்வாறு முன்னுரிமை தருவதில், ஒரு மிகப் பெரிய பிரச்னை தலை தூக்கத்தான் செய்யும். அதுதான்.., ‘முக்கியம்’, ‘அவசரம்’ என்கிற இரண்டுக்கும் இடையில் ஏற்படும் குழப்பம். மருத்துவச் செலவு - முக்கியம்; பள்ளிக் கட்டணம் - அவசரம். எதைத் தேர்ந்தெடுப்பது..?
இந்த ஆண்டுக்கான பொருளாதார அறிக்கை (‘எக்கனாமிக் சர்வே’)யில், முதன்மைப் பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியன் சொல்கிறார் - “it is necessary to distinguish the important from the urgent.” அதாவது, “அவசரத்தில் இருந்து முக்கிய மானதைப் பிரித்துப் பார்க்க வேண்டியது அவசியம்.”
சமீபத்தில், ‘நிதி ஆயோக்’ (மாற்றியமைக்கப்பட்ட திட்டக் கமிஷன்) அமைப்பின் துணைத் தலைவர் சொன்ன ஒரு கருத்து, மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்படி அவர் என்னதான் சொல்லிவிட்டார்..?
“விவசாயத்தைவிடவும், தொழில் முன்னேற்றத்துக்கு நாம் அதிக முக்கியத்துவம் தர வேண்டும்.” விவசாயத்தைத் தன் ஆத்மாவாகக் கொண்டு இயங்கு கிற தேசத்தில், இயல்பாகவே, அவரது கருத்து கடுமையான தாக்குதலைச் சந்தித்தது.
‘ஒன்று முக்கியம்; மற்றது அவசரம்’ என்பதுதான் ‘நிதி ஆயோக்’கின் துணைத் தலைவர் சொன்ன கருத்தின் சாராம்சம். இதைத் தவறாகப் புரிந்து கொண்டால், அதற்கு யார் காரணம்?
ஆனால், செலவு மேலாண்மை யில், ‘ஆபத்தான’ பணியே, இந்த ‘முன்னுரிமை’ விவகாரம்தான்.சேது சமுத்திர திட்டம். சிலர் இது முக்கியம் என்கின்றனர். சிலரோ அத்தனை முக்கியம் இல்லை என்கின்றனர். சிலருக்கு, இது முக்கியம்தான்; ஆனால், அவசரம் இல்லை. இன்னும் சிலருக்கோ, இது சற்றும் தேவை யற்ற திட்டம்.
தீவிரவாத ஒழிப்பு; அமெரிக்கா, ஆப்கானிஸ்தானில் தனது படைகளை நிறுத்தி வைப்பதை, அமெரிக்கர்களி லேயே சிலர் எதிர்க்கிறார்கள். இது அத்தனை முக்கியம் இல்லை; தேவையில்லாமல் நாட்டின் நிதி, விரயம் ஆகிறது என்பது இவர் களின் கருத்து.
‘உள்நாட்டுத் தேவைகளுக்கு, இந்த நிதியைப் பயன்படுத்திக் கொள்ளலாமே..’ என்பது இவர் களின் வாதம். ‘இல்லை, தீவிரவாத அச்சுறுத்தல், நமது பொருளாதார வலிமையைக் குறிவைத்தே செயல்படுகிறது. ஆகவே, ஆப்கானிஸ்தானில் நமது நடவடிக்கைகள் தொடர வேண்டும்’ என்பவர்களும் உள்ளனர்.
என்ன தெரிகிறது..? நிதி ஒதுக்கீட்டில் முன்னுரிமை என்று வருகிறபோது, ஒருமித்த கருத்துக்கு வாய்ப்பே இல்லை. காரணம், ‘முன்னுரிமை’ என்றாலே, ஏதோ ஒன்று பின்னுக்குத் தள்ளப்படுகிறது. இதனால் பாதிக்கப்படுவோர், நிச்சயம் எதிர்க்கத்தானே செய்வர்..?
பையனுக்கு ‘கிரிக்கெட் பேட்’; அப்பாவுக்கு மூக்குக் கண்ணாடி. இரண்டும் வாங்குகிற அளவுக்கு, தற்போது பணம் இல்லை. இந்த நிலையில், எதை வாங்குவது, எதை விடுவது..? ‘இப்போதைக்குப் ‘பேட்’; மூக்குக் கண்ணாடி பிறகு’ என்று சொன்னால், தாத்தாவுக்கு மனவருத்தம் ஏற்படும். மாற்றிச் செய்தால், ‘பேரனின் அட்டகாசம் தாங்க முடியாது’. இவ்வாறு, சிலருக்கு எதிர்ப்புகளையும் எரிச்சல்களையும் ஏற்படுத்தும் என்றாலும், முன்னுரிமைப் படுத்துகிற செயலைச் செய்து தான் ஆக வேண்டும்.
‘வேண்டாத செலவுகள்’, பெரிய அளவில் சங்கடத்தை உண்டுபண்ணாது. எளிதில் ‘தள்ளி’விட்டுவிடலாம். இரண்டுமே முக்கியம் எனும் போதுதான், ‘மேலாண்மை’ திறன் தேவைப்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், என்ன செய்வது..?
இரண்டு அம்சங்களைச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.
1. பின்னுக்குத் தள்ளப்படும் செலவினத்தால் ஏற்படும் பாதிப்பு, சரி செய்யப்படக் கூடியதா..?
2. இரண்டு செலவுகளுமே, சரி செய்யப்பட முடியாத பாதிப்பு களை ஏற்படுத்தும் என்றால், இரண்டில் எது குறைவான பாதிப்பை ஏற்படுத்தும்..?
தாத்தா, பேரன் உதாரணம் பார்த்தோம். ‘வெளியில் சொல்ல முடியாத ஏமாற்றம்’, நீங்காத வடுவாய் மாறிவிடலாம். இந்த ஆபத்தை உணர்ந்துகொள்ள வேண்டும். அழுது அடம் பிடிக்கிற பிள்ளையை, சமாதானப்படுத்தவும், அவனுக்கு வேண்டியதை வாங்கித் தரவும் கிடைக்கிற கால அவகாசம், பெரியவர் விஷயத்தில் இருக்கி றதா என்பதையும் பார்க்க வேண்டும்.
இப்போது பார்த்த இரண்டு அம்சங்களையும், பெரிய நிறுவனங்களும் அரசாங்கம் போன்ற வல்லமை பொருந்திய அமைப்புகளும், தம்முடைய வழிகாட்டு நெறிமுறைகளாகக் கொண்டால் அனைவருக்குமே நல்லது. அரசுகளின் நிதி ஒதுக்கீடு பற்றி பின்னர், விரிவாகக் காண இருக்கிறோம். அப்போது, இந்த இரண்டு அம்சங்களின் பயன்பாடு, அதன் நடைமுறை சாத்தியங்கள் குறித்து பார்ப் போம்.
முன்னுரிமையில் இருந்து, செலவு மேலாண்மையின் அடுத்தப் படிக்குச் செல்வோம். அதுதான்... ‘கடன்!’ கடன் வாங்க லாமா, கூடாதா..?

நேர மேலாண்மை [ Time Management ]

நன்றி: அவள் விகடன் - 28th ஜூலை 2015
காட்டுப்பாதையில் ஒருவன் நொண்டி நொண்டி ஓடிக்கொண்டிருக்கிறான். அவனை ஒரு சிங்கம் துரத்திக்கொண்டு ஓடுகிறது. காலில் இருக்கும் முள்ளைப் பிடுங்கிப் போட்டுவிட்டு ஓடினால், வேகமாக ஓடமுடியும். சிங்கத்திடமிருந்தும் தப்பிவிட முடியும். ஆனால், முள்ளைப் பிடுங்கிப் போட நேரம் இல்லை என்று நொண்டி நொண்டி ஓடுகிறான்.
- சின்ன வயதில் என் காதில் விழுந்த உபன்யாச கதையொன்றின் சாரம்சம் இது.
இப்போது அன்றாடம் நம் காதுகளில் விழும் ஒரு சில ஏக்கங்களைப் பார்ப்போம்.
‘36 வயதினிலே படம் பார்த்ததில் இருந்து... கடையில் விற்கிற காய்கறிகள் மீது ஒருவிதமான அசூயையே வந்துவிட்டது. ஜோதிகா போல மாடியிலேயே காய்கறித் தோட்டம் போட சிலரைச் சந்திக்க வேண்டும். ஒரு மாதமாக முயற்சித்தும் வேறு வேலைகளால் வீட்டை விட்டே நகரமுடியவில்லை.’
‘கிளாஸ் பெயின்ட்டிங் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசை. ஆனால், டைமே கிடைக்கமாட்டேங்குது!’
‘டூ-வீலர் ஓட்ட கத்துக்கணும்கிறது என் கனவு. ஆனால், அதை நனவாக்க காலமும் நேரமும் வரமாட்டேங்குது!’
- இப்படிப் பலரின் கனவுகள் மெய்ப்படாமல் இருப்பதற்கு என்ன காரணம்?
கொஞ்சம் பழைய மீம்ஸ் டயலாக்தான். இந்த இடத்துக்குப் பொருத்தமாக இருக்கும் என்பதால் நினைவுப்படுத்துகிறேன்... ‘தூங்கும்போது வருவதற்கு பெயர் கனவு இல்லை. எது நம்மை தூங்கவிடாமல் செய்கிறதோ அதற்குப் பெயர்தான் கனவு!’ இதை இங்கே மீண்டும் நினைவுபடுத்துவதற்கு காரணம்... ஒரு விஷயத்தின் மீது உண்மையிலேயே அதீத ஈடுபாடு வந்துவிட்டால்... எத்தனை தடைகள் வந்தாலும் தாண்டிப்போய் இலக்கை தொட்டுவிடுவோம். இப்படி பல விஷயங்களைத் தொட்டும் இருக்கிறோம்.
`உலகத்தில் பிராப்ளம் என்ற ஒன்று இருந்தால், நிச்சயம் விடையும் இருக்கும். அதைக் கண்டுபிடிக்க நிறைய முயற்சியும், கொஞ்சம் சாமர்த்தியமும்தான் வேண்டும்’ என்பார்கள். இங்கே சாமர்த்தியம் என்கிற வார்த்தையை, ’டைம் மேனேஜ்மென்ட்’ என்றுகூட சொல்லலாம்.
‘நம் கையில் இருக்கும் நேரத்தைக்கூடவா நம்மால் கன்ட்ரோல் செய்ய முடியாது?’ என்று நம்மை நாமே கேட்டுக்கொண்டால்... கனவுகள் நனவாவது சாத்தியமே!
உரிமையுடன்,

நிதி... மதி... நிம்மதி!
குடும்ப நிதி மேலாண்மை தொடர்பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி
எது முதலில்..?
‘எப்படிப் பார்த்தாலும், ஐம்பதாயிரம் ரூபாய் ஆகும்னு கணக்குப் போட்டோம் .    ஆனா, அவ்வளவு பணம் வரலை. முப்பதுகிட்டதான் வந்தது...'
‘அட, இதுக்குப் போய் ஏன் இவ்வளவு கவலைப்படறீங்க..? சமாளிச்சிக்கலாம்... விடுங்க.’
‘சமாளிக்கறதா..? எப்படி முடியும்..? எல்லாத்தையுமே குறைச்சி குறைச்சிதானே வாங்கப் போறோம்..?'
‘குறைச்சலா வாங்கினாத் தானே ஐம்பதாயிரம்..?  வாங்காமலே விட்டுட்டா..?’
‘வாங்காமலே   நிறுத்திட லாமா...? என்ன சொல்றே..?’
‘நாம வாங்க நினைச்சதுல, எதெல்லாம் ரொம்ப ரொம்ப முக்கியமோ, அதையெல்லாம் வாங்குவோம். அவ்வளவா முக்கியம் இல்லைங்கறதை, விட்டுடுவோம்.’
‘எல்லாமே முக்கியம்தானே..?’
‘பாருங்க, ரெண்டே ரெண்டு தான் வாங்கறோம்னு வச்சிக்குங்க. அதுலகூட, எது ரொம்ப முக்கியம், எது அத்தனை முக்கியம் இல்லைன்னு சொல்லிட முடியும்.
அவசரமா, நோட்டும் பேனாவும் வாங்கப் போறீங்க. ஏதோ ஒரு காரணத்தால, ஒண்ணு தான் வாங்க முடியுதுன்னு வாங்குவீங்க. என்ன பண்ணு வீங்க..?’
‘நானா இருந்தா நோட்டுதான் வாங்குவேன். ஏன்னா, பேனாவை யார் கிட்டயாவது கடன்வாங்கிக்கூட எழுதிக்கலாம்...’
சொல்லும் போதே, அவனுக்குள் ஒரு புதுத் தெம்பு பிறந்து இருந்தது. தன் மனைவி என்ன சொல்ல வருகிறாள் என்பதைப் புரிந்துகொண்டான். செல்லமாக, தங்களுக்குள் பேசிக் கொள்ளும் மொழியில் ஒப்புக் கொண்டான்.
‘இதனாலதான் சொல்றேன்... நீ ஒரு ‘இன்டலிஜென்டலி...’
இதேபோன்ற சூழ்நிலையை, நாம் ஒவ்வொருவரும் எதிர் கொண்டிருப்போம்; எதிர்கொள் ளவும் போகிறோம். இந்தப் பெண் சொன்னது, செலவு மேலாண்மையின் மிக முக்கியக் கோட்பாடுகளில் ஒன்று.
இரண்டு வகைச் செலவுகள் இருந்தாலும், இரண்டாயிரம் வகைகள் இருந்தாலும், அவற்றில் எது மிக முக்கியம், எது மிக அவசரம்... என்றெல்லாம் இனம் பிரிக்க முடியும்.
தன் சிறு வயது பெண்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு கடைக்குப் போகிறாள் தாய். ஒருத்திக்கு செருப்பும், மற்றவளுக்கு கண்ணாடி வளையலும் வாங்க நினைக் கிறாள். அவளது துரதிர்ஷ்டம், தன் கையில் உள்ள பணத்தை வைத்து, யாரேனும் ஒருவருக்கு வேண்டியதைத்தான் வாங்க முடியும் என்கிற நிலை.
எதை வாங்குவாள்..?
மேலே சொன்ன தாய், படிக்காதவளாக இருந்தாலும், மெத்தப் படித்த அறிஞராக இருந்தாலும், அவருடைய தேர்வு, ஒரேமாதிரியாகத்தான் இருக்கும். இல்லையா..? என்ன தெரிகிறது..?
நம் செலவுகள் எல்லாவற்றை யும், முன்னுரிமைப்படுத்த முடியும். அது மட்டுமல்ல, சில செலவுகளில், அவற்றின் அளவு களை (‘க்வாண்டம்’) குறைத்துக் கொள்ள முடியும். இன்னும் சிலவற்றை, தள்ளிப்போட முடியும். (முடி திருத்துதல் போன்ற செலவுகள்) இன்னும் சிலவற்றையோ, கடன் வாங்கி யாவது, ‘சந்தித்தே’ ஆக வேண்டும்.(வேறென்ன...? கல்விக் கட்டணம் தான்!)
ஓர் ஏழைக் குடும்பம் தொடங்கி, சர்வ வல்லமை தாங்கிய அரசாங்கங்கள் வரை, எல்லாருக்கும் கையோடு உதவக் கூடிய செலவுக் கோட்பாடு, சற்றும் சந்தேகம் இன்றி, முன்னுரிமைப்படுத்துதல்தான். இவ்வாறு முன்னுரிமை தருவதில், ஒரு மிகப் பெரிய பிரச்னை தலை தூக்கத்தான் செய்யும். அதுதான்.., ‘முக்கியம்’, ‘அவசரம்’ என்கிற இரண்டுக்கும் இடையில் ஏற்படும் குழப்பம். மருத்துவச் செலவு - முக்கியம்; பள்ளிக் கட்டணம் - அவசரம். எதைத் தேர்ந்தெடுப்பது..?
இந்த ஆண்டுக்கான பொருளாதார அறிக்கை (‘எக்கனாமிக் சர்வே’)யில், முதன்மைப் பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியன் சொல்கிறார் - “it is necessary to distinguish the important from the urgent.” அதாவது, “அவசரத்தில் இருந்து முக்கிய மானதைப் பிரித்துப் பார்க்க வேண்டியது அவசியம்.”
சமீபத்தில், ‘நிதி ஆயோக்’ (மாற்றியமைக்கப்பட்ட திட்டக் கமிஷன்) அமைப்பின் துணைத் தலைவர் சொன்ன ஒரு கருத்து, மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்படி அவர் என்னதான் சொல்லிவிட்டார்..?
“விவசாயத்தைவிடவும், தொழில் முன்னேற்றத்துக்கு நாம் அதிக முக்கியத்துவம் தர வேண்டும்.” விவசாயத்தைத் தன் ஆத்மாவாகக் கொண்டு இயங்கு கிற தேசத்தில், இயல்பாகவே, அவரது கருத்து கடுமையான தாக்குதலைச் சந்தித்தது.
‘ஒன்று முக்கியம்; மற்றது அவசரம்’ என்பதுதான் ‘நிதி ஆயோக்’கின் துணைத் தலைவர் சொன்ன கருத்தின் சாராம்சம். இதைத் தவறாகப் புரிந்து கொண்டால், அதற்கு யார் காரணம்?
ஆனால், செலவு மேலாண்மை யில், ‘ஆபத்தான’ பணியே, இந்த ‘முன்னுரிமை’ விவகாரம்தான்.சேது சமுத்திர திட்டம். சிலர் இது முக்கியம் என்கின்றனர். சிலரோ அத்தனை முக்கியம் இல்லை என்கின்றனர். சிலருக்கு, இது முக்கியம்தான்; ஆனால், அவசரம் இல்லை. இன்னும் சிலருக்கோ, இது சற்றும் தேவை யற்ற திட்டம்.
தீவிரவாத ஒழிப்பு; அமெரிக்கா, ஆப்கானிஸ்தானில் தனது படைகளை நிறுத்தி வைப்பதை, அமெரிக்கர்களி லேயே சிலர் எதிர்க்கிறார்கள். இது அத்தனை முக்கியம் இல்லை; தேவையில்லாமல் நாட்டின் நிதி, விரயம் ஆகிறது என்பது இவர் களின் கருத்து.
‘உள்நாட்டுத் தேவைகளுக்கு, இந்த நிதியைப் பயன்படுத்திக் கொள்ளலாமே..’ என்பது இவர் களின் வாதம். ‘இல்லை, தீவிரவாத அச்சுறுத்தல், நமது பொருளாதார வலிமையைக் குறிவைத்தே செயல்படுகிறது. ஆகவே, ஆப்கானிஸ்தானில் நமது நடவடிக்கைகள் தொடர வேண்டும்’ என்பவர்களும் உள்ளனர்.
என்ன தெரிகிறது..? நிதி ஒதுக்கீட்டில் முன்னுரிமை என்று வருகிறபோது, ஒருமித்த கருத்துக்கு வாய்ப்பே இல்லை. காரணம், ‘முன்னுரிமை’ என்றாலே, ஏதோ ஒன்று பின்னுக்குத் தள்ளப்படுகிறது. இதனால் பாதிக்கப்படுவோர், நிச்சயம் எதிர்க்கத்தானே செய்வர்..?
பையனுக்கு ‘கிரிக்கெட் பேட்’; அப்பாவுக்கு மூக்குக் கண்ணாடி. இரண்டும் வாங்குகிற அளவுக்கு, தற்போது பணம் இல்லை. இந்த நிலையில், எதை வாங்குவது, எதை விடுவது..? ‘இப்போதைக்குப் ‘பேட்’; மூக்குக் கண்ணாடி பிறகு’ என்று சொன்னால், தாத்தாவுக்கு மனவருத்தம் ஏற்படும். மாற்றிச் செய்தால், ‘பேரனின் அட்டகாசம் தாங்க முடியாது’. இவ்வாறு, சிலருக்கு எதிர்ப்புகளையும் எரிச்சல்களையும் ஏற்படுத்தும் என்றாலும், முன்னுரிமைப் படுத்துகிற செயலைச் செய்து தான் ஆக வேண்டும்.
‘வேண்டாத செலவுகள்’, பெரிய அளவில் சங்கடத்தை உண்டுபண்ணாது. எளிதில் ‘தள்ளி’விட்டுவிடலாம். இரண்டுமே முக்கியம் எனும் போதுதான், ‘மேலாண்மை’ திறன் தேவைப்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், என்ன செய்வது..?
இரண்டு அம்சங்களைச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.
1. பின்னுக்குத் தள்ளப்படும் செலவினத்தால் ஏற்படும் பாதிப்பு, சரி செய்யப்படக் கூடியதா..?
2. இரண்டு செலவுகளுமே, சரி செய்யப்பட முடியாத பாதிப்பு களை ஏற்படுத்தும் என்றால், இரண்டில் எது குறைவான பாதிப்பை ஏற்படுத்தும்..?
தாத்தா, பேரன் உதாரணம் பார்த்தோம். ‘வெளியில் சொல்ல முடியாத ஏமாற்றம்’, நீங்காத வடுவாய் மாறிவிடலாம். இந்த ஆபத்தை உணர்ந்துகொள்ள வேண்டும். அழுது அடம் பிடிக்கிற பிள்ளையை, சமாதானப்படுத்தவும், அவனுக்கு வேண்டியதை வாங்கித் தரவும் கிடைக்கிற கால அவகாசம், பெரியவர் விஷயத்தில் இருக்கி றதா என்பதையும் பார்க்க வேண்டும்.
இப்போது பார்த்த இரண்டு அம்சங்களையும், பெரிய நிறுவனங்களும் அரசாங்கம் போன்ற வல்லமை பொருந்திய அமைப்புகளும், தம்முடைய வழிகாட்டு நெறிமுறைகளாகக் கொண்டால் அனைவருக்குமே நல்லது. அரசுகளின் நிதி ஒதுக்கீடு பற்றி பின்னர், விரிவாகக் காண இருக்கிறோம். அப்போது, இந்த இரண்டு அம்சங்களின் பயன்பாடு, அதன் நடைமுறை சாத்தியங்கள் குறித்து பார்ப் போம்.
முன்னுரிமையில் இருந்து, செலவு மேலாண்மையின் அடுத்தப் படிக்குச் செல்வோம். அதுதான்... ‘கடன்!’ கடன் வாங்க லாமா, கூடாதா..?

நன்றி: அவள் விகடன் - 28 ஜூலை 2015
ஆல் இஸ் வெல்
உறவுகள்... தொடர்கதை!
‘‘உறவுகளை நான் பெருசா நினைக்கிற தில்ல, மதிக்கிறதில்ல. பெரிய என் உறவு வட்டத்தைவிட்டு கொஞ்சம் கொஞ்சமா விலகிட்டே வந்தேன். அதை `மாடர்ன் லைஃப் ஸ்டைல்'னு நான் நினைச்சேன். சமீபத்தில், என் தோழி ஒருத்தியோட வீட்டு கிரகப்பிரவேச விழாவுக்குப் போயிருந்தேன். அவளோட மூன்று தலைமுறை உறவுகளோடும் அவ அரவணைப்பிலேயே இருந்ததோட, விழாவுக்கு அத்தனை பேரையும் வரவழைச்சிருந்தா. அவங்களோட சந்தோஷம், நல விசாரிப்புகள், கேலி, கிண்டல், உரிமை, கடமைனு விழாவே அமர்க்களப்பட்டுப் போனது.
‘உங்க தாத்தாவும் நானும் பெரியப்பா மகன் - சித்தப்பா மகன்’னு தாத்தா ஒருவர் பேரனுக்கு உறவு முறையை விளக்கிக்கொண்டிருக்க, ‘வாட்ஸ்அப்ல இருக்கியா? இனி லெட்ஸ் ஸ்டே இன் டச்!’னு ஒருவருக்கொருவர் அலைபேசி எண்கள் பரிமாறிட்டு இருந்தாங்க இந்தத் தலைமுறை இளைஞர்களும், இளம் பெண்களும்!
‘நீ மெக்கானிக்கல் இன்ஜீனியரிங் முடிச்சிருக்கேனு ஏன்ப்பா எங்கிட்ட சொல்லல? நான் ஆட்டோ மொபைல் கம்பெனி ஹெச்.ஆர்ல இருக்கேன். உன் ரெஸ்யூம் ஃபார்வேர்டு பண்ணு!’னு தன் தூரத்து தங்கையோட மகனுக்கு வேலையை உறுதிசெய்துட்டு இருந்தார் ஒருத்தர்.
‘நாம தாயில்லாப் பொண்ணாச்சேனு எல்லாம் கவலைப்படாதே. உன் டெலிவரி அப்போ சித்தி ஹெல்ப்புக்கு வர்றேன். பெயின் வந்ததும் எனக்கும் ஒரு போன் பண்ணிடு!’னு வளைகாப்பு முடிந்திருந்த ஒரு இளம் பெண்ணோட கைபிடித்துச் சொல்லிட்டிருந்தார் ஒரு பெண்மணி.
இப்படி எல்லா வகையிலும் ஒருத்தருக்கு ஒருத்தர் பலமா இருக்கக்கூடிய உறவுச் சங்கிலியை நான் தொலைத்ததை உணர வெச்சது அந்த விழா. இப்போ என் சொந்தங்களோட கான்டாக்ட் நம்பர் எல்லாம் சேகரிக்க ஆரம்பிச்சிருக்கேன்’’ - நீண்ட கடிதம் அனுப்பியிருந்தார் சென்னை வாசகி ஒருவர்.
இந்த அவசர உலகத்தில், பரபரப்பான வேலைச் சூழலில் சொந்தங்களை எல்லாம் அரவணைத்துச் செல்ல பலருக்கும் நேரமிருப்பதில்லை என்பதை, உறவுகளைத் தொலைப்பதற்கான காரணமாக ஏற்க முடியாது. திருமண அழைப்பிதழ் தந்த உறவினர் வீட்டுக் கல்யாணத்துக்குச் செல்ல முடியவில்லை... வெளியூர் பயணம், அலுவலக மீட்டிங், பிள்ளைகளின் டேர்ம் எக்ஸாம் என்று பல காரணங்கள். சரி. ஆனால், திருமணம் முடிந்த பின்னும்கூட ஒரு வார இறுதி நாளில் அவர்கள் வீட்டுக்குச் சென்று, திருமணத்துக்கு வர இயலாத நிலையைச் சொல்லி, உறவைப் பலப்படுத்தும் வாய்ப்பை ஏன் பலரும் முன்னெடுப்பதில்லை?
அட்லீஸ்ட், ‘கல்யாணம் நல்லபடியா முடிஞ்சதா?! ஸாரி, வர முடியலை. நிச்சயம் அடுத்த முறை ஊருக்கு வரும்போது வீட்டுக்கு வந்து பார்க்கிறோம்!’ என்ற தொலைபேசி விசாரிப்பைக்கூட செய்வதில்லை. ‘அதுக்கெல்லாம் நேரமில்ல’, ‘மெட்ரோ லைஃப்ல நாங்களே பரபரனு ஓடிட்டிருக்கோம்’, ‘வேலை டென்ஷன்ல கல்யாணம் மறந்தே போச்சு’ - இவையெல்லாம் சப்பைக் காரணங்கள். உண்மையான காரணம், அந்த உறவைப் பேணுவதில் ஆழ்மனதில் பிடிப்பு இல்லை. ‘அப்பாவோட தாய்மாமன் பையன். இனி, இந்த சொந்தத்தை எல்லாம் கன்டின்யூ பண்ண முடியுமா? கன்டின்யூ பண்ணணுமா என்ன?’ என்று கேட்கலாம் பலர்.
இங்கு ஒரு பெரிய உண்மையைச் சொல்ல வேண்டும். சமூக வலைதளங்களில், முன் பின் தெரியாத, முகம் தெரியாத நபர்களுடன் எல்லாம் நாள் தவறாத தொடர்பில் இருப்பதும், நெதர்லாந்தில் இருக்கும் ஒரு நண்பன்/தோழிக்கு பிறந்த நாள் வாழ்த்து அனுப்புவதும், வெளிமாநிலத்தில் இருக்கும் ஒரு தமிழனுக்கு உதவி என்றதும், ‘நம்மாளு’ என்று ரத்தம் துடிக்க இணையப் புரட்சியில் இறங்குவதும், ‘ஃப்ரெண்ட் ஆஃப் ஃப்ரெண்ட்’ என்று அறிமுகமான ஒருவருடன் உயிர் நட்பு வளர்ப்பதும் என... யார் யாருடனோ இணைய முடிகிறது இந்தத் தலைமுறைக்கு. ஆனால், உறவுகளைத் தொடரமுடியவில்லை என்பது எவ்வளவு முரண்?! வேர்களை அறுத்துக்கொண்டு, கிளைகள் பரப்ப துடிக்கிற இ்ம்மனநிலையை என்னவென்று சொல்வது?
சமூக வலைதளங்களின் வெற்றிக்கு அடிப்படை என்ன என்று தெரியுமா?! சொந்தங்கள் ஒன்றுகூடி பேசி மகிழும் வீட்டு விசேஷங்கள்தான். கல்யாணத்தில், காதுகுத்தில், சடங்கில், ஊர்த் திருவிழாவில் என அடிக்கடி உறவுகள் அனைத்தும் ஓரிடத்தில் கூடி, பேசி, சிரித்து, அழுது, கோபம்கொண்டு, விருந்து உண்டு, கலைந்து சென்ற நம் முந்தைய தலைமுறையினரின் சந்தோஷம் இந்தத் தலைமுறைக்குக் கிடைக்கவில்லை. உறவினர் விசேஷங்களையும், ஊர்த் திருவிழாவையும் ‘மாடர்ன் வாழ்வில்’ தவிர்த்ததால்... கூடி மகிழ, பேசிச் சிரிக்க வழியற்றுப் போன இந்தத் தலைமுறை, இணைய வீதியெங்கும் ஜனத்திரள் பார்க்க, உற்சாகமாகிப் போனது. யார் யாரிடமோ அறிமுகமாக, பேச, சிரிக்க, கோபம்கொள்ள, வம்பு வளர்க்க, வெளியேற என... பொழுதுபோக்கித் திரிகிறது. அதில் தன் சந்தோஷம் இருப்பதாக நம்புகிறது. எனவே, பிள்ளைகளை ஆபத்துகள் நிறைந்த இணைய வெளியில் இருந்து உறவு வட்டத்துக்கு மடை மாற்றுங்கள். அதற்கு, ‘உறவுகள் வேண்டும்’ என்ற உணர்வு முதலில் வர வேண்டும்.
‘எதுக்கு உறவு? பொறாமை, பகை, புறணி பேசுறதுன்னு... ரொம்ப வெறுத்துட்டேன்!’ என்ற அனுபவம் சிலருக்கு இருக்கலாம்.
உறவுகள் அனைத்துமே அப்படி அல்ல. அது தனி மனித குணத்தின் வெளிப்பாடு. நல்லது, தீயது எங்கும், எதிலும் உண்டு என்பது போல, உறவுகளிலும் நல்லவர்கள், தீயவர்கள், குணம் கெட்டவர்கள் இருப்பார்கள்தானே? அதற்காக ஒட்டுமொத்த உறவுகளும் வேண்டாம் என்று விலக்கத் தேவையில்லை.
‘உங்கப்பாதான் தகப்பன் ஸ்தானத்துல இருந்து என் கல்யாண வேலைகள் எல்லாம் செஞ்சாரு. நீ எங்கே இருக்க, எத்தனை பிள்ளைங்க?’ என்று கண்கள் மல்க விசாரித்து, ‘எங்க இருந்தாலும் நல்லா இருக்கணும்!’ என்று உளமாற வாழ்த்தும் ஓர் அத்தையின் ஆசீர்வாதம், உலகின் மிகத் தூய்மையான அன்பு. ‘நல்லது கெட்டதுனா கூப்பிடுடா... ஒருத்தருக்கு ஒருத்தர் ஒத்தாசையா இருக்கணும்!’ என்று உரிமையும், கடமையுமாகப் பேசும் சித்தப்பாவின் பிரியத்தை, சித்தியின் சிடுசிடுப்பை சகித்துக்கொண்டாவது சுவீகரிக்கத்தான் வேண்டும்.
உங்களுக்கு ஒரு பிரச்னை எனில், உங்களுக்கு முன்பாகவே, ‘எங்க அண்ணனை பேசினது யாருடா..?’ என்று கோபம் கக்கிச் செல்லும் தம்பியுடையோனாக இருப்பதன் பலத்துக்கு இணை இல்லை.
வீடு, பேங்க் பேலன்ஸ், போர்டிகோவில் பெரிய கார், ஆடம்பர வாழ்க்கை என எல்லாம் இருந்தும், உறவுகள் இல்லை எனில், ஒருநாள் இல்லையென்றால் ஒருநாள் அந்த பலவீனத்தை உணரத்தான் வேண்டும். ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். உறவுகளுக்கு எப்போதும் முற்றுப்புள்ளி வேண்டாம். அது ஓர் அழகிய தொடர்கதை!
- ரிலாக்ஸ்...
தொகுப்பு: சா.வடிவரசு

உறவுகளைப் பரிசளியுங்கள்... அடுத்த சந்ததிக்கு!
குழந்தைகளை உறவினர் விழா, விசேஷங்களுக்கு, ஊர்த் திருவிழா வுக்கு அழைத்துச் செல்லுங்கள். அங்கு உறவினர்கள் அனைவரையும் அறிமுகப்படுத்துங்கள். அவர்களுட னான உங்களின் பால்ய வயது நினைவுகளைப் பிள்ளைகளுடன் பகிருங்கள். அவர்கள் உங்கள் வாழ்வில் முக்கியமானவர்கள் என்பதை குழந்தைகளுக்கு உணர்த்துங்கள்.
‘உங்க அத்தை இருக்காளே... பொறாமை பிடிச்சவ...’ என்று நெகட்டிவாக எந்த உறவுகளையும் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக் காதீர்கள். அவர்களைப் பற்றி எதுவும் சொல்லாமலே விட்டுவிடலாம்.  ‘உங்க அப்பா வீட்டு சொந்தம் இருக்காங் களே...’ என்று உறவுகள் என்றாலே உளம் வெறுக்கும் அளவுக்கு குழந்தைகளிடம் எதையும் பேசாதீர்கள்.
உங்கள் வீட்டு இளம் பிள்ளைகளை யும், உறவினர் வீட்டு இளம் பிள்ளைகளையும் பரஸ்பரம் அறிமுகப்படுத்தி, இணைய யுகத்தில் உறவைப் புதுப் பித்துக்கொள்ளவும், தொடர்ந்து செழிக்க வைக்கவும் வழி ஏற்படுத்திக் கொடுங்கள்.
மாமன் முறை என்றால் செய்ய வேண்டிய கடமைகள் என்ன, அத்தை முறை என்றால் செய்ய வேண்டிய சடங்குகள் என்ன என்பது பற்றி அவர்களுக்கு கற்றுக்கொடுங்கள். நாளை உங்கள் மகனும், மகளும் ஒருவருக்கொருவர் அந்த முறை செய்ய வேண்டியவர்களே என்பதையும் சேர்த்துச் சொல்லி குழந்தைகளை வளர்த்தெடுங்கள்.
‘ஃப்ரெண்ட்ஸ் போதும் நமக்கு, ரிலேட்டிவ்ஸ் எல்லாம் வேணாம்’ என்று இன்று பல நகரத்துக் குடும்பங்களில் ஊறிக்கிடக்கும் மனநிலையை மாற்றுங் கள்; உறவுகள் பேணுங்கள்!

அடுத்தவர்களை தவறாக பேசாதீர்கள்

நன்றி: சக்தி விகடன்- 4 ஆக்ஸ்ட் 2015

வழிப்படுத்துவதே வழிபாடு!
ழிபடுவது என்றால், ஏதோ பூக்களைத் தூவி நைவேத்தியம் செய்து, தீபாராதனை காட்டுவது என்று பொருள் அல்ல.  நம்மை வழிப்படுத்துவதே வழிபாடு! ஆகையால், ஜீவன் முக்தர்களைத் தரிசிப்பதோடு நில்லாமல், அவர்கள் நடந்து காட்டிய நல்வழியைப் பின்பற்றி நடக்கவும் வேண்டும். அவ்வாறு செய்து பக்குவம் பெறப் பெற, நாமும் அந்த ஜீவன் முக்தர்களின் நிலையை அடையலாம்.
ஜீவன் முக்தர்களின் நிலையை மேலும் விளக்குகிறார் குருநாதர்.
பஞ்சினை ஊழித் தீப்போல்
பல சன்ம விவித வித்தாம்
சஞ்சிதம் எல்லா ஞானத்
தழல் சுட்டி வெண்ணீறாக்கும்
கிஞ்சில் ஆகாமியம் தான்
கிட்டாமல் விட்டுப் போகும்
விஞ்சின பிராரப்தத்தின்
வினையது பவத்துத் தீரும்.
(கைவல்லிய நவநீதம்  96)
இந்தப் பாடலுக்கான விளக்கத்தைப் பார்ப்பதற்கு முன்னால், இதில் சொல்லப்பட்ட மூன்று தகவல்களைப் பார்ப்போம். அவை...
சஞ்சிதம், பிராரப்தம், ஆகாமியம்.
சஞ்சிதம்: கடந்த பிறவிகளில் செய்யப்பட்டு, பலன் அளித்தது போக, மீதிப்பலனை அளிப்பதற்காகக் காத்துக் கொண்டிருக்கும் நல்வினை, தீவினைகள் சஞ்சிதம் எனப்படும்.
பிராரப்தம்: சென்ற பிறவிகளில் செய்யப்பட்ட, பிறவிக்குக் காரணமான நல்வினை, தீவினைகள் பிராரப்தம் எனப்படும்.
ஆகாமியம்: இப்போதைய பிறவியில் செய்யப்பட்டு, அடுத்த பிறவிக்குக் காரணமாக விருக்கும் நல்வினை, தீவினைகள் ஆகாமியம் எனப்படும்.
இந்தப் பாடலில் வரும், 'பல சன்ம விவித வித்தாம்’ என்பது, நடுங்க வைக்கும் சொற்றொடர்.
'விவித’ என்பதற்குப் 'பலவிதமான’ என்பது பொருள்.
பற்பல பிறவிகளில், பற்பல விதங்களிலும் நாம் செய்தவற்றுக்குப் பிரதிபலனாக நாம் அனுபவித்தது போக மீதி உள்ளவை, நம்மைத் தாக்குவதற்காகக் காத்துக் கொண்டிருக்கும் (அவையே சஞ்சிதம் எனப்படும் என்று பார்த்தோம்). கண்ணால் செய்தவை, காதால் செய்தவை, கையால் செய்தவை, காலால் செய்தவை, வாயால் செய்தவை, உடம்பால் செய்தவை, மனதால் செய்தவை என அனைத்திலும் மீது உள்ளவை நம்மைத் திருப்பி அடிக்கத் தயாராக இருக்கும்.
அவையெல்லாம் ஒரே பிறவியில் நம்மை ஒட்டுமொத்தமாகத் தாக்கிவிட்டுத் தீர்ந்து போகாதா என்றால், முடியாது. அதாவது, அப்படிச் செய்தால் நம்மால் அதைத் தாங்க முடியாது. போன வருடக் கணக்கு வழக்குகளை இந்த வருடம் அனுசரிக்கிறோம் அல்லவா? திருப்பிக் கொடுத்த கடன் போக, பாக்கி வைத்த கடனையும் இந்த வருடக் கணக்கில் கொண்டு வருகிறோமல்லவா? அது போல, நாம் அனுபவித்தது போக மீதி உள்ள வினைகள் இப்பிறவியில் தொடரும். அதுவே சஞ்சிதம் எனப்படும்.
இந்த சஞ்சித வினைகளே நம்மைப் பயமுறுத்தும்போது, இப்பிறவியில் ஆகாமியம் வேறு சேர்வதை நினைத்தால், நெஞ்சம் நடுங்காதா?
ஆனால், ஜீவன் முக்தர்களின் சஞ்சித வினைகளை அவர்களின் ஞானாக்கினி, பஞ்சை தீ எரிப்பதுபோல எரித்துவிடும். ஆகாமியம் அவர்களின் அருகிலேயே நெருங் காது. மீதம் இருக்கும் பிராரப்த வினைகளை அவர்களே அனுபவித்துத் தீர்த்துவிடுவார்கள்.
பொறுமையால் பிராரப்தத்தைப்
புசிக்கும் நாள் செய்த கன்மம்
மறுமையில் தொடர்ந்திடாமல்
மாண்டுபோம் வழி ஏது என்னின்
சிறியவர் இகழ்ந்து ஞானி
செய்த பாவத்தைக் கொள்வர்
அறிபவர் அறிந்து பூசித்து
அறம் எலாம் பறித்து உண்பாரே!
(கைவல்லிய நவநீதம் 97)
கைவல்லிய நவநீதத்தின் அபூர்வமான பாடல்களில் இதுவும் ஒன்று.
ஜீவன் முக்தர்கள், மிகவும் பொறுமையோடு தங்கள் பிராரப்த கர்மத்தை அனுபவித்துத் தீர்ப்பார்கள். உதாரணமாக...
ரமண மஹரிஷி, காஞ்சி மஹா ஸ்வாமிகள், பாம்பன் ஸ்வாமிகள் முதலா னோர் எல்லாம் பொறுமையோடு இருந்து, வந்தவற்றை எதிர்கொண்டார்கள்.
'ஒப்புக்கொள்கிறோம். ஆனால், அந்த ஜீவன் முக்தர்கள் இப்பிறவியில் செய்த நல்வினை, தீவினைகள் காரணமாக அவர்களுக்குப் பிறவி தொடராதா?' என்றால், தொடராது. அது எப்படி?
உணர்ந்து அனுபவிக்கலாம், வாருங்கள்.
மனிதனாகப் பிறவியெடுத்த நாம், தெய்வ நிலைக்கு உயர்கிறோமோ இல்லையோ... கீழ்நிலையை அடையாமல், மனிதர்களா கவாவது வாழ வேண்டுமென்றால், கைவல்லிய நவநீதத்தில் உள்ள இந்த ஒரு பாடல்... ஊஹூம்! முழுப் பாடல்கூட வேண்டாம்; இப்பாடலின் பிற்பகுதியான அரைப் பாடல் மட்டுமே போதும்.
சிறியவர் இகழ்ந்து ஞானி
செய்த பாவத்தைக் கொள்வர்
அறிபவர் அறிந்து பூசித்து
அறம் எலாம் பதித்து உண்பாரே!
உத்தமர்களை, நல்லவர்களை, ஜீவன் முக்தர்களை இகழ்ந்து பேசும் மூடர்கள், அந்த ஞானவான்கள் செய்த பாவங்களைப் பெற்றுக் கொள்வார்கள். அதன் மூலம், அந்த ஜீவன்முக்தர்களின் பாவங்கள் எல்லாம் நீங்கிப் போய்விடும். பாவங்கள் தொலைந்தாலும், அந்த உத்தமர்கள் செய்த நல்வினைகள்  புண்ணியம் இருக்குமே; அவற்றின் மூலம் அந்த உத்தமர்களுக்கு  ஜீவன் முக்தர்களுக்கு மறுபிறவி வாய்க்க வழி உண்டே?
கைவல்லிய நவநீதம் அதற்கும் பதில் சொல்கிறது. 'அறிபவர் அறிந்து பூசித்து அறம் எலாம் பறித்து உண்பாரே’ என்கிறது. அதாவது, உத்தமர்களான அந்த ஜீவன் முக்தர்களை அறிந்து, அவர்களை வழிபடுபவர்கள், அந்த ஜீவன் முக்தர்களின் அறங்களை எல்லாம் கவர்ந்துகொள்வார்கள்.
இவ்வாறு அனைத்தும் நீங்கிய பிறகு, ஜீவன் முக்தர்களுக்கு மறுபிறவி என்பது ஏது?
நல்லவர்களைப் போற்றி, அவர்களின் புண்ணியத்தை அடையாவிட்டால்கூடப் பரவாயில்லை; அவர்களை இகழ்ந்து பேசி, பாவ மூட்டையைப் பெரிதாக்கிக் கொள்ளா மலாவது இருக்க வேண்டும்.
மஹான் ஒருவரைத் தரிசிப்பதற்காகப் போயிருந்த சிலர், அவரிடம் ஒருவரைப் பற்றிய பொல்லாங்குகளைக் கொட்டிக் குவித்துக்
கூறுபோட்டு அடுக்கினார்கள்.
அமைதியாக அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த மஹான் இறுதியில் சொன்னார்... 'அவன் புண்களை உங்கள் நாவால் நீவி, உங்களுக்கு நீங்களே ஏன் நோயை வரவழைத்துக் கொள்கிறீர்கள்? அடுத்தவர் பாவங்களை நாவால் பேசி அலசி ஆராயாதீர்கள். மாறாக, அடுத்தவர்களிடம் இருக்கும் நல்லனவற்றைப் பேசி, ஆனந்தமாக வாழுங்கள்!'
ஜீவன் முக்தர்களின் நிலையை, இயல்பை விவரித்துச் சொன்ன குருநாதர், பிரம்ம நிலையை அறிவதில் ஆர்வமுள்ள சீடனுக்கு, அதுவரை தான் சொல்லியவற்றைத் தொகுத்துச் சுருக்கமாகக் கூறுவதான மூன்று பாடல்களுடன், கைவல்லிய நவநீதத்தின் தத்துவ விளக்கப் படலம் நிறைவு பெறுகிறது. அதன்பின் 'சந்தேகம் தெளிதல்’ படலம் தொடங்குகிறது

Thursday, July 16, 2015

மூலிகை இல்லம்: இன்சுலின் சுரக்க...

நன்றி: டாக்டர் விகடன் - 01 Aug, 2015
மூலிகை இல்லம்!இன்சுலின் சுரக்க...

 ர்க்கரை நோயாளிகள் அதிக அளவில் உள்ள இரண்டாவது நாடு இந்தியா. பெயரில் சர்க்கரை இருந்தாலும் இதைக் கட்டுப்படுத்தத் தவறினால், சில ஆண்டுகளில் இந்த நோய்ப் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துவிடுவோம் என, கசப்பான செய்தியைச் சொல்கிறார்கள்  மருத்துவர்கள். பச்சிளம் குழந்தைகளுக்குக்கூட, டைப் 1 சர்க்கரை நோய் வருகிறது என்பது துயரம்தான். வாழ்வியல் மாற்றங்கள், தவறான உணவுப் பழக்கம், உடல் உழைப்புக் குறைவு, மன அழுத்தம் காரணமாக 25-35 வயதிலேயே பலருக்கும் டைப் 2 சர்க்கரை நோய் வந்துவிடுகிறது.
நாம் உண்ணும் உணவு செரிக்கப்பட்டு, குளுக்கோஸாக மாற்றப்பட்டு ரத்தத்தில் கலக்கிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்போது, அதைக் கட்டுக்குள் கொண்டுவர, மூளை கணையத்துக்கு ஆணையிடும். உடனே, இன்சுலின் சுரந்து திசுக்கள் அந்த குளுக்கோஸைப் பயன்படுத்தத் துணைபுரியும். இன்சுலின் சுரப்பு இல்லாமல் போனாலோ, குறைந்தாலோ, வீரியம் குறைந்தாலோ, சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படும். ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்துவிடும். இதையே, சர்க்கரை நோய் என்கிறோம். நம் உடலில் சர்க்கரையின் அளவு 80-120 வரை இருப்பதுதான் சராசரி அளவு. சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து பரிசோதனை செய்யும்போது, 180-க்கு கீழ் இருக்க வேண்டும்.
உடல் பருமனானவர்கள், தொப்பை உள்ளவர்கள், அதிக மாவுச்சத்து, குறைந்த நார்ச்சத்து உணவுகளை உட்கொள்பவர்கள், உடல் உழைப்பு இல்லாதவர்கள், மரபியல் காரணங்கள் போன்றவற்றால், இன்சுலின் சுரப்பு பாதிக்கும்.
இந்தப் பாதிப்பைச் சரிசெய்ய, உணவுப் பழக்கத்திலும், வாழ்வியல் பழக்கத்திலும் சில மாற்றங்களைக் கொண்டுவர வேண்டியது அவசியம். இதற்கு மூன்று “இ” (Exercise, Eating, Emotional (உடற்பயிற்சி, உணவு முறை, மனநிலை) மிகவும் அவசியம். மூன்றில் ஒருவர் மட்டுமே இந்த மூன்று ‘இ’ யையும் சரியாகப் பின்பற்றுகின்றனர். மற்றவர்கள் இதில் இரண்டைக்கூட பின்பற்றுவது இல்லை.
கணையத்தை பலப்படுத்தும் உணவுகள்
காலங்காலமாகச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த, வெந்தயத்தை தமிழ் மருத்துவம் பரிந்துரைத்து வருகிறது. இப்போது, அமெரிக்காவில் நடந்த ஆராய்ச்சியில் வெந்தயம் கணையத்தைப் பலப்படுத்தி, சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் என நிருபிக்கப்பட்டுள்ளது. வெந்தயம் போன்று, நெல்லிக்காய், ஆவாரம் பூ, வல்லாரைக் கீரையும் கணையத்தைப் பலப்படுத்தக்கூடியவையே.
150 மி.லி நீரில், 100 கிராம் அன்று பூத்த, ஆவாரம் பூவைப் போட்டு, மூடிவைத்து நீர் 100 மி.லி-யாக சுண்டும் வரை கொதிக்கவைக்க வேண்டும். ஐந்து நெல்லிக்காய்களை விதை நீக்கி, 50 மி.லி கிடைக்கும் வகையில் சிறிது நீர் விட்டு, சாறு எடுக்க வேண்டும். நெல்லிச் சாற்றையும், ஆவாரம் பூ டிகாக்‌ஷனையும் தலா 50 மி.லி கலந்து, சிறிது தேன் கலந்து பருக வேண்டும்.
இது, கணையத்தைச் சரிசெய்து இன்சுலின் சுரப்பைச் சீராக்கும். இந்தக் கஷாயத்தை தினமும் வெறும் வயிற்றில் பருகிவர, இன்சுலின் சுரப்பு சீராகும். ஆவாரம் பூவில் கேசைன் (Casein) என்ற ரசாயனம், சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும். இந்த ரசாயனம் புத்தம்புதிய ஆவாரம் பூவில்தான் இருக்கும். மேலும், ஆவாரம்பூ மலச்சிக்கலைத் தீர்க்கும். சிறுநீரகச் செயல்பாட்டை மேம்படுத்தும். ஆவாரம்பூவைத் தேநீரில் போட்டுக் குடித்துவந்தால், சருமம் பளிச்சிடும்.
நெல்லிக்காயில் வைட்டமின் சி, இரும்புச்சத்து, ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைவாக உள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும். சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கும். பார்வைக் குறைபாடு, கை, கால் நடுக்கம், வீக்கம், சிறுநீரகப் பிரச்னையைச் சரிசெய்யும். இந்தக் கஷாயத்தைத் தினமும் எடுத்துக்கொண்டால், சில நாட்களுக்குப் பிறகு சர்க்கரையைக் கட்டுப்படுத்த மாத்திரை, ஊசி எதுவும் தேவை இல்லை.

சர்க்கரை நோய் வராமல் தடுக்க...
அனைவருக்கும் உடல் உழைப்பு அவசியம். ஒரு நாளைக்கு குறைந்தது 30 முதல் 45 நிமிடங்கள் நடக்க வேண்டும்.
உணவில் மாவுச்சத்து குறைவாகவும், நார்ச்சத்தும் புரதமும் அதிகமாகவும் இருக்க வேண்டும். கேழ்வரகு, கம்பு, சோளம், குதிரைவாலி போன்ற சிறுதானிய உணவுகளில் இந்த மூன்று சத்துக்களும் சரியான அளவில் இருக்கின்றன. இதைப் பிரதான உணவாக மாற்றிக்கொண்டால், சர்க்கரை அதிகமாக உடலில் சேராது. சாப்பிட்ட உணவு மெதுவாக செரிமானம் ஆவதால், இன்சுலின் தேவை அதிகம் இருக்காது.
கஞ்சி, கூழ், பழச்சாறு எளிதில் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரித்துவிடும். எனவே, திரவ உணவை, சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டும். இதற்குப் பதில், களி அடையாகச் செய்து சாப்பிடலாம்.
உணர்வுகள் நேர்மறையாக இருக்க வேண்டும். சர்க்கரை நோய் வந்துவிட்டது என்றோ, வந்துவிடுமோ என்றோ பயந்து, கவலைப்பட்டு, நோயின் தீவிரத்தை அதிகப்படுத்தக் கூடாது. பயத்தை விரட்டி எதிர்மறை எண்ணங்களைத் தவிர்த்து, நோயை எதிர்கொண்டு சரிசெய்யுங்கள். ஆல் தி பெஸ்ட்!