[New post] கண்ணதாசனின் ‘போனால் போகட்டும் போடா’! (Post No.5273)
Yahoo/Inbox
  • Tamil and Vedas <comment-reply@wordpress.com>
    To:theproudindian_2000@yahoo.co.in
    30 Jul at 10:49 PM
    Respond to this post by replying above this line

    New post on Tamil and Vedas

    கண்ணதாசனின் ‘போனால் போகட்டும் போடா’! (Post No.5273)

    by Tamil and Vedas
    Written by S NAGARAJAN
    Date: 31 JULY 2018

    Time uploaded in London – 5-48 AM   (British Summer Time)

    Post No. 5273

    Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

    கண்ணதாசனின் ‘போனால் போகட்டும் போடா! (Post No.5273)

    .நாகராஜன்

    உலக வாழ்க்கை நிலையில்லை என்பதை வள்ளுவர் முதல்பட்டினத்தார் வரை பிரமாதமாகச் சொல்லி இருக்கிறார்கள்.   (12-9-2015இல் வெளியான எனது கட்டுரை எண்  2149 –‘டொண்டொண்டொடென்னும் பறை என்ற கட்டுரையில் இவர்கள்கூறியவை பற்றி நிறைய விவரங்கள் உள்ளன)

    முக்கியமாக பட்டினத்தார்எவ்வளவு செல்வம் படைத்தவனாகஇருந்தாலும் கூட ‘காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கேஎன்று சொல்லி இருக்கிறார்.


    முழுப்பாடல் :
    வாதுற்ற திண்புயர் அண்ணாமலையர் மலர்ப் பதத்தைப் போதுற்றஎப்போதும் புகலுநெஞ் சேஇந்தப் பூதலத்தில்   தீதுற்ற செல்வமென்தேடிப் புதைத்த திரவியமென்?      காதற்ற ஊசியும் வாராது காணுங்கடைவழிக்கே!
    இத்தோடு நிற்கவில்லை அவர்.

    செத்த பிணத்தைச் சுற்றி அழுது புலம்புபவர்கள் யார் தெரியுமாஇனிசாகப்போகும் பிணங்கள் என்கிறார்.

    பத்தும் புகுந்து பிறந்து வளர்ந்து பட்டாடை சுற்றி         முத்தும் பவளமும்பூண்டோடி ஆடி முடிந்த பின்பு             செத்துக் கிடக்கும் பிணத்தருகேஇனி சாம் பிணங்கள்     கத்தும் கணக்கென்ன காண் கயிலா புரிக்காளத்தியே!

    செத்தவரைச் சுற்றிச் சுற்றமும் நட்பும் அழுது புலம்புவது இயற்கைஆனால் அதை தத்துவ நோக்கில் பார்த்து மனதைத் தேற்றிக் கொள்பவர்எத்தனை பேர்?
    *


    இந்த வகையில் தான் கண்ணதாசனின் போனால் போகட்டும் போடாபாடல் மாறு படுகிறது.
    இந்தப் பாடல் பிறந்த கதை பற்றி வேறுபட்ட கருத்துக்களைப் பார்க்கமுடிகிறது.
    *

    மெல்லிசை மன்னர் விசுவநாதன் கண்ணதாசனின் அத்யந்த நண்பர்அவருடன் நெடுங்காலம் பழகியவர்.
    அவர் கூறுவது இது:

    ஒரு சமயம் ஒரு படத்திற்காகப் பாடல் ‘ரிகார்டிங் செய்துகொண்டிருந்த போதுஒரு துக்கமான செய்தி வந்ததுஎன் இசைக்குழுவிலிருந்த ஒருவரை நாய் கடித்திருந்ததுஅவர் ஆஸ்பத்திரியில்அனுமதிக்கப்பட்டிருந்தார்நாய் விஷம் ஏறி  நாய் போலவேஊளையிட்டு அன்றைய தினம் இறந்து விட்டார் என்பதே அந்த சோகச்செய்திஅந்தப் பாடல் தான் ‘பாலும் பழமும் படத்தில் வரும் ‘போனால்போகட்டும் போடாஇந்தப் பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா!’ என்பதுஅதிலிருந்து அடிக்கடி கவிஞரிடம் சொல்வது,அவச்சொல்வருகிற மாதிரிப் பாட்டே வேணாம்ணேஉங்க வாயிலிருந்து அந்தமாதிரி வார்த்தைகளே வரவேண்டாம்ணே!
    *

     
    கண்ணதாசனின் உடனிருந்த இராம.முத்தையா கூறும் செய்தியோவேறு விதமானதுஅவர் கூறுவது:-
    ஒரு சமயம் கவிஞர் ‘ஆஸ்டின்’ கார் ஒன்றை, 8000 ரூபாய்க்கு விலைபேசி, 1500 ரூபாய் முன்பணம் கொடுத்திருந்தார்அதை எடுத்துஅன்றைய தினமே வட ஆற்காடு மாவட்டத்திலுள்ள திருப்பத்தூர்ப்பொதுக்கூட்டத்திற்குச் சென்றார்போகும் வழியில் டிரைவர் ஓட்டியவழியில் கார் செல்லாமல்ஏதோ ஒரு பக்கம் இழுத்துக் கொண்டேசென்றிருக்கிறதுஉடனே கவிஞர் பயந்து போய்டிரைவரை நிறுத்தச்சொல்லி விட்டுஇறங்கி விபரம் கேட்டார். ‘சேஸிஸ் பெண்டாகிஇருக்கிறது என்றார் டிரைவர்.

    காரை லாரியில் கட்டி இழுத்துக் கொண்டுசென்னைக்குப் போ என்றுடிரைவரிடம் சொல்லி விட்டுஅங்கிருந்து ஒரு டாக்ஸியில் ஏறிக்கூட்டத்திற்குப் போய்விட்டுத் திரும்பி வந்தார்மறுநாளே காரைவாங்கியவர்களிடம் திருப்பிக் கொடுத்து விடு - என்றார் என்னிடம்.

    நாம் கொடுத்த முன் பணத்தைத் திருப்பிக் கொடுக்க மாட்டார்களே!என்றேன் நான்.
    போனால் போகட்டும் போடாநான் பிழைத்து வந்ததே பெரியகாரியம்! என்றார்.

    அன்றைய தினம் எழுதிய பாடல் தான்பாலும் பழமும் என்ற படத்தில்வருகிற போனால் போகட்டும் போடா!
    அன்று மாலை என்னிடம் காரில் போன பணத்தை (1500 ரூபாய்பாட்டுஎழுதிச் சம்பாதித்து விட்டேன் என்று சொன்னார்.

    இப்படி ஏற்படுகிற ஒவ்வொரு நிகழ்ச்சியும்சூழ்நிலையும் கவிஞருக்குப்பாடலுக்குக் கருத்தாக வந்தமையும்.

    *
    இனி கவிஞரின் பாடலை முழுதுமாகப் பார்ப்போம்:

    போனால் போகட்டும் போடாஇந்த
    பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?போனால் போகட்டும் போடா.
    ஓஹோஹோ … ஓஹோஹோ

    வந்தது தெரியும் போவது எங்கே
    வாசல் நமக்கே தெரியாது!வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் இந்த
    மண்ணில் நமக்கே இடமேது?
    வாழ்க்கை என்பது வியாபாரம்வரும்
    ஜனனம் என்பது வரவாகும்அதில்
    மரணம் என்பது செலவாகும்
    போனால் போகட்டும் போடா.
    இரவல் தந்தவன் கேட்கின்றான் ; அதை
    இல்லை என்றால் அவன் விடுவானா?உறவைச் சொல்லி அழுவதனாலே
    உயிரை மீண்டும் தருவானா?
    கூக்குரலாலே கிடைக்காதுஇது
    கோர்ட்டுக்கு போனால் ஜெயிக்காதுஅந்த
    கோட்டையில் நுழைந்தால் திரும்பாது
    போனால் போகட்டும் போடா!
    ஓஹோஹோ ஓஹோஹோ
    எலும்புக்கும் சதைக்கும் மருத்துவம் கண்டேன்
    இதற்கொரு மருத்துவம் கண்டேனா?
    இருந்தால் அவளைத் தன்னந் தனியே
    எரியும் நெருப்பில் விடுவேனா?
    நமக்கும் மேலே ஒருவனடா - அவன்
    நாலும் தெரிந்த தலைவனடா! -தினம்
    நாடகமாடும் கலைஞனடா!
    போனால் போகட்டும் போடா!

    மிக அருமையான வரிகள்பட்டினத்தார் இனி சாம் பிணங்கள் அழுவதுபோல என்று சொன்னாரே அது போலகண்ணதாசன் அழவில்லை.

    போனால் போகட்டும் போடா என்கிறார்.  இரவல் தந்தவன்கேட்கின்றான் அதை இல்லை என்றால் அவன் விடுவானா?கூக்குரலாலே கிடைக்காதுஇது கோர்ட்டுக்கு போனால் ஜெயிக்காதுஅந்தகோட்டையில் நுழைந்தால் திரும்பாது!

    போனால் போகட்டும் போடாஎன்கிறார்ஜனன மரணக் கணக்கை ஒரேபாராவில் தந்து விடுகிறார்வாழ்க்கை என்பது வியாபாரம்வரும்ஜனனம் என்பது வரவாகும்அதில் மரணம் என்பது செலவாகும் - அவ்வளவு தான்போனால் போகட்டும் போடா!!
    பாட்டில் வரும் தலைவன் டாக்டர்அவனால் உயிரை போகாமல்இருப்பதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியவில்லைநமக்கும் மேலேஒருவனடாஅவன் நாலும் தெரிந்த தலைவனடாதினம் நாடகமாடும்கலைஞனடா என்று தன்னைத் தானே சமாதானம் செய்து கொள்கிறான்இறை தத்துவம் இப்படி விளக்கப்படுகிறது!

    அருமையான வரிகளில் பெரும் தத்துவத்தை அனாயாசமாக அள்ளித்தந்து விட்டார் கவிஞர்.

    அந்த வகையில்  இந்தப் பாடல் புகழ் பெற்றதோடு அடிக்கடி அனைவரும்உபயோகப்படுத்தும் போனால் போகட்டும் போடா சொற்றொடரையும்கொண்டிருக்கிறது.

    டி.எம்.சௌந்தரராஜன் குரலில் சிவாஜிகணேசனின் நடிப்பில்விசுவநாதன் ராமமூர்த்தி இசையமைப்பில் பீம்சிங் இயக்கத்தில்1961ஆம் ஆண்டு வெளி வந்த பாடல்!

    கண்ணதாசனின் வைர வரிகளால் அழியாது நிற்கிறது.