Thursday, June 30, 2016
ஔவையாரின் நல்வழி - கவி எண் 25; இராமச்சந்திரக் கவிராயர் பாடல்
-----------------------------------------------------------------------------------------
விடம் கொண்ட மீனைப் போலும்
வெந்தழல் மெழுகு போலும்
படம் கொண்ட பாந்தல் வாயில்
பற்றிய தேரைப் போலும்
திடம் கொண்ட ராம பாணம்
செருக்களத்து உற்ற போது
கடன் பட்டார் நெஞ்சம்போல
கலங்கினான் இலங்கை வேந்தன்
- இராமச்சந்திரக் கவிராயர்
about success
வெற்றி என்னும் சிகரத்தை யாரும் வானில் பறந்து அடைந்து விடுவதில்லை
நெற்றியின் வியர்வை நிலத்தில் சிந்தாமல் வெற்றி என்பது கிடைத்து விடுவதில்லை
ஊரும் உலகும் உறங்கு கையில் கண் விழித்து உழைப்பவர் தோற்பதில்லை!’’
நெற்றியின் வியர்வை நிலத்தில் சிந்தாமல் வெற்றி என்பது கிடைத்து விடுவதில்லை
ஊரும் உலகும் உறங்கு கையில் கண் விழித்து உழைப்பவர் தோற்பதில்லை!’’
பிராமணர்கள் பற்றி 31 பொன் மொழிகள்
பிராமணர்கள் பற்றி 31 பொன் மொழிகள்
Courtsey: Tamil and Vedas - (Post No.2929)
Courtsey: Tamil and Vedas - (Post No.2929)
நீண்ட முடி (குடுமி) வைப்பதாலோ, பிறப்பினாலோ ஒருவன் பிராமணன் ஆவதில்லை; சத்தியமும், புனிதமான தூய்மையும் கொண்டவனே பிராமணன்; அவன் மகிழ்ச்சிக்கடலில் இருப்பான்.புத்தர் கூறியது, தம்மபதம், 393
மனிதகுலத்தின் உதாரண புருஷன் பிராமணன். ஆகையால் எல்லோரையும் பிராமணர்களாக உயர்த்துவதே திட்டம். இந்திய வரலாற்றைப் படித்தால், இதற்கு முன்னரே இப்படிப் பலர் செய்திருப்பது புரியும்- சுவாமி விவேகாநந்தர்
பிராமணனுக்கு ஒருபோதும் தீங்கு செய்யக்கூடாது; தீங்கு செய்தவர்களுக்கு பிராமணனும் பதிலடி தரக் கூடாது- புத்தர் கூறியது, தம்மபதம், 389
யார் சமய சம்பந்தமில்லாத வேலைகளை எடுக்கவில்லையோ அவன் மட்டுமே பிராமணன். சமய சம்பந்தமற்ற வேலைகள் மற்ற ஜாதிகளுக்கானது. பிராமணத்துவம் என்பது என்ன என்பதை அவர்கள் உணர்வது அவசியம். நற்குணங்களின் உறைவிடமாகப் பிராமணன் திகழ்வதாலேயே அவனுக்கு இவ்வளவு சலுகைகளும், கௌரவங்களும் கொடுக்கப்பட்டிருக்கின்றன என்று மனு கூறுகிறார் -- சுவாமி விவேகாநந்தர்
காலையில் சூரியனும், மாலையில் சந்திரனும் பிரகாசிக்கின்றன; க்ஷத்ரியன், ஆயுதம்தரிப்பதால் பிரகசிக்கிறான்; பிராமணன் தவ வலிமையால் பிரகாசிக்கிறான். புத்தனோ இரவிலும் பகலிலும் பிரகாசிக்கிறான். விழிப்புணர்வுடையவன் பிரகாசிப்பான் -புத்தர் கூறியது, தம்மபதம், 387
பிராமண, க்ஷத்ரிய, வைச்யர்களுக்கு உபநயன கருமம் இருப்பதால், அவர்கள் இருபிறப்பாளர் என்று அழைக்கப்படுவர். அது இல்லாதவன் சூத்திரன். ஐந்தாவது ஜாதி/பஞ்சமன் என்று எதுவும் இல்லை- மனு 10-4
பிராமணனுக்கு ஞானத்தினாலும், க்ஷத்ரியர்களுக்கு வீரத்தினாலும், வைசியர்களுக்கு செல்வத்தினாலும், சூத்திரர்களுக்கு வயதினாலும் மதிப்பு தர வேண்டும் (Sanskrit Sloka)
பிராமணனுக்கு பிழைப்புக்கே வழியில்லை என்றால் கெட்டவர்களிடம் தானம் வாங்கக்கூடாது; கீழே சிந்திய தனியக்கதிர்களையோ, தானிய மணிகளையோ சேகரித்து உண்ணலாம் --மனு 10-112
புன்மயிர்ச் சடைமுடி, புலரா உடுக்கை
முந்நூல் மார்பின் முத்தீச் செல்வத்து
இருபிறப்பாளரோடு பெருமலை அரசன் - சிலப்பதிகாரம், காட்சிக்காதை (இமயமலையில் அந்தணர்கள் குடுமியுடன், ஈரத்துணியுடன், மூன்று வகையான யாகத் தீயை வளர்த்துக்கொண்டு, முப்புரி நூலுடன் இருப்பர்)
மறையோர் ஏந்திய ஆவுதி நறும்புகை
நறைகெழு மாலையின் நல்லகம் வருத்த
கடக்களி யானைப் பிடர்த்தலை ஏறினந் சிலப்பதிகாரம், கால்கோட்காதை (பிராமணர்களின் யாகப் புகை சேரன் செங்குட்டுவனின் மாலையின் நறுமணத்தையும் மிஞ்சிவிட்டது)
முக்கட்செல்வர் நகர்வலம் செயற்கே!
இறைஞ்சுக, பெரும! நின் சென்னி - சிறந்த
நான்மறை முனிவர் ஏந்துகை எதிரே! (புறநானூறு, 6) (பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழிதியின் தலை இரண்டு இடத்தில் மட்டுமே வணங்கும்; சிவபெருமான் கோவிலிலும், ஆசீர்வாதம் செய்யும் அந்தணர் முன்னிலையிலும் மட்டும் தலை தாழ்த்துவான்)
ஆவும், ஆன் இயற் பார்ப்பன மாக்களும்,
பெண்டிரும், பிணியுடையீரும், பேணித்
தென்புல வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
பொன்போல் புதல்வர் பெறாதீரும்
என்அம்பு கடி விடுதும், நும் அரண் சேர்மின் (புறம். 9)
பார்ப்பனர் வீட்டுக்குப் போனால், அருந்ததி போன்ற கற்பு வாய்ந்த பெண்மணி உனக்கு மாதுளங்காயைப் பசு வெண்ணையில் பொறித்து, ராஜ அன்னம் என்ற உயர்ந்த அரிசியில் சமைத்த சோற்றை படைப்பாள். பார்ப்பனப் பெண்கள், விருந்தாளிகளுக்கு மாவடு ஊறுகாயோடு உணவு பரிமாறுவர். - பெரும்பாணாற்றுப்படை (சங்க இலக்கியம்)
பார்ப்பனர் மனைகளில் நாயும் கோழியும் நுழைய முடியாது. கிளிகள் மட்டும், அந்தணர் ஓதும் வேதங்களைத் திருப்பிச் சொல்லிக்கொண்டு இருக்கும் - சங்க இலக்கியம், பெரும்பாணாற்றுபடை
அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுகலான் -திருக்குறள் 30 (எந்த உயிர்க்கும் தீங்கு செய்யாதவர் அந்தணர்)
மறப்பினும் ஒத்துக்கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக்கெடும் -திருக்குறள் 134 (பார்ப்பான், வேதத்தை மறந்தாலும் பரவாயில்லை; ஆனால் ஒழுக்கம்போனால், அவனுக்கு விமோசனம் இல்லை)
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்-திருக்குறள் 543 (அந்தணர்கள் முறையாக வேதம் ஓதுவதற்கும், முறையான அரசாட்சியே அடிப்படை ஆகும்.)
பிராமணர்கள் சாப்பாட்டுப் பிரியர்கள் - துஷ்யந்தி போஜனே விப்ராஹா - சாணக்கிய நீதி 6-18
க்ஷத்ரியர்களின் பலம் எல்லாம் பலமே அல்ல; பிராமணர்களின்ம் தேஜஸ்தான் பெரும் பலம்; திக் பலம் க்ஷத்ரிய பலம், பிரம்மதேஜோ பலம் பலம் - வால்மீகி ராமாயணம் 5-6-23
அந்தணர் கருமங்குன்றில் யாவரே வாழ்வர் மண்ணில்
--விவேகசிந்தாமணி
வாழ்க அந்தணர் வானவர் ஆனினம் --சைவத் திருமுறை
கோப்ராஹ்மணேப்ய சுபமஸ்து நித்யம்
லோகாஸ் சமஸ்தோ சுகினோ பவந்து
பழகினும் பார்ப்பாரைத் தீப்போல் ஒழுக – திரிகடுகம்
வேதம் ஓதிய வேதியர்க்கோர் மழை
நீதி மன்னர் நெறியினுக்கோர் மழை
மாதர் கற்புடைய மங்கையர்க்கோர் மழை
மாதம் மூன்று மழையெனப் பெய்யுமே! --விவேகசிந்தாமணி
பிரம்மத்தையே உணர்ந்த பிராமணன் மிகவும் பலம் பொருந்தியவன் - சாணக்கிய நீதி 8-10
வேதமறிந்தவன் பார்ப்பான், பல
வித்தை தெரிந்தவன் பார்ப்பான் - பாரதியார்
ஒரு பிராமணனும், சந்யாசியும் பூர்வ ஜன்ம பாபத்திலிருந்து விடுபடுகிறார்கள்; தந்தை தாயைக் கொலை செய்திருந்தாலும், இரண்டு அரசர்களைக் கொன்றிருந்தாலும், ஒரு அரசையும் மக்களையும் அழித்திருந்தாலும், பாபங்களிலிருந்து விடுபடுவர்
-தம்ம பதத்தில் புத்தர் - பாடல் 294
பொருநர்க்காயினும் புலவர்க்காயினும்
அருமறை நாவின் அந்தணர்க்காயினும்
அடையா வாயில் -- சிறுபாணாற்றுப் படை
செறுவிற் பூத்த சேயிதழ்த் தாமரை
அறுதொழிலாளர் அறம்புரித்தெடுத்த
தீயோடு விளங்கும் நாடன் (புறநானூறு 397)
ஏ பிராமணனே! ஆசையை விடுத்து, சம்சார சாகரத்தைக் கடந்து செல்; நிர்வாண நிலையை அடைவாய் - தம்மபதம் 383
எதைக் கொடுத்தாலும்ச் திருப்தியடையாத பிராமணன் அழிந்துபோகிறான். அசந்துஷ்டா த்விஜா நஷ்டா: - சாணக்ய நீதி 3-42
யாத்திரை செல்லும் பிராமணன் வணக்கத்துக்குரியவன் - சாணக்கிய நீதி 6-43
Subscribe to:
Posts (Atom)