Friday, June 10, 2016

கவிஞர் கண்ணதாசன் கவிதைகள்: கொடி அசைந்ததும் காற்று வந்ததா | நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்

கொடி அசைந்ததும் காற்று வந்ததா

கொடி அசைந்ததும் காற்று வந்ததா?
காற்று வந்ததும் கொடி அசைந்ததா?
நிலவு வந்ததும் மலர் மலர்ந்ததா?
மலர் மலர்ந்ததால் நிலவு வந்ததா?

பாடல் வந்ததும் தாளம் வந்ததா?
பாடல் வந்ததும் தாளம் வந்ததா?
தாளம் வந்ததும் பாடல் வந்ததா?
பாவம் வந்ததும் ராகம் வந்ததா?
பாவம் வந்ததும் ராகம் வந்ததா?
ராகம் வந்ததும் பாவம் வந்ததா?

கண் திறந்ததும் காட்சி வந்ததா?
காட்சி வந்ததும் கண் திறந்ததா?
பருவம் வந்ததும் ஆசை வந்ததா?
ஆசை வந்ததும் பருவம் வந்ததா?

வார்த்தை வந்ததும் வாய் திறந்ததா?
வார்த்தை வந்ததும் வாய் திறந்ததா?
வாய் திறந்ததும் வார்த்தை வந்ததா?
பெண்மை என்பதான் நாணம் வந்ததா?
பெண்மை என்பதால் நாணம் வந்ததா?
நாணம் வந்த்தால் பெண்மை ஆனதா?

ஓடி வந்ததும் தேடி வந்ததும்
பாடி வந்ததும் பார்க்க வந்ததும்
காதல் என்பதா? பாசம் என்பதா?
கருணை என்பதா? உரிமை என்பதா

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை
முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே
தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே

ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்
யாரோ வருவார் யாரோ இருப்பார் வருவதும் போவதும் தெரியாது
ஒருவர் மட்டும் குடியிருந்தல் துன்பம் ஏதுமில்லை
ஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதியில்லை

எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது
பாதையெல்லம் மாறிவரும் பயணம் முடிந்துவிடும்
மாறுவதைப் புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்


நல்லவர்க்கெல்லாம்

நல்லவர்க்கெல்லாம்...
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா
நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் காட்சியம்மா
அதுதான் உள்ளத்தின் காட்சியம்மா
அதுதான் உண்மைக்கு சாட்சியம்மா

நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா தெய்வத்தின் சாட்சியம்மா

நதி வெள்ளம் காய்ந்துவிட்டால் நதி செய்த குற்றம் இல்லை
விதி செய்த குற்றம் அன்றி வேறு யாரம்மா
நதி வெள்ளம் காய்ந்துவிட்டால் நதி செய்த குற்றம் இல்லை
விதி செய்த குற்றம் அன்றி வேறு யாரம்மா
பறவைகளே பதில் சொல்லுங்கள்
மனிதர்கள் மயங்கும் போது நீங்கள் பேசுங்கள்
மனதிற்கு மனதை கொஞ்சம் தூது செல்லுங்கள்

நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா தெய்வத்தின் சாட்சியம்மா

ஆண்டவன் அறிய நெஞ்சில் ஒரு துளி வஞ்சம் இல்லை
அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை
ஆண்டவன் அறிய நெஞ்சில் ஒரு துளி வஞ்சம் இல்லை
அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை
மனிதனம்மா மயங்குகிறேன்
தவறுக்கு துணிந்த மனிதன் அழுவதில்லையே
தவறியும் வானம் மண்ணில் விழுவதில்லையே

நல்லவர்க்கெல்லாம்...
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா
நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் காட்சியம்மா
அதுதான் உள்ளத்தின் காட்சியம்மா
அதுதான் உண்மைக்கு சாட்சியம்மா

வாழ நினைத்தால் வாழலாம்

வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்
ஆழககடலும் சோலையாகும் ஆசையிருந்தால் நீந்தி வா
வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்
ஆழககடலும் சோலையாக ஆசையிருந்தால் நீந்தி வா

பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும் பார்த்து நடந்தால் பயணம்
தொடரும்
பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும் கதவு திறந்தால் காட்சி
கிடைக்கும்
காட்சி கிடைத்தால் கவலை தீரும் கவலை தீர்ந்தால் வாழலாம்.....

வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்
ஆழககடலும் சோலையாகும் ஆசையிருந்தால் நீந்தி வா

கண்ணில் தெரியும் வண்ணப் பறவை கையில் கிடைத்தால்
வாழலாம்
கருத்தில் வளரும் காதல் எண்ணம் கனிந்து வந்தால் வாழலாம்
கன்னி இளமை என்னை அணைத்தால் த்ன்னை மறந்தே
வாழலாம்..........

வாழச் சொன்னால் வாழ்கிறேன் மனமா இல்லை வாழ்வினில்
ஆழக்கடலில் தோணியாக அழைத்துச் சென்றால் வாழ்கிறேன்

ஏரிக்கரையில் மரங்கள் சாட்சி ஏங்கித் தவிக்கும் இதயம் சாட்சி
துள்ளித் திரியும் மீன்கள் சாட்சி துடித்து நிற்கும் இளமை சாட்சி
இருவர் வாழும் காலம் முழுதும் ஒருவராக வாழலாம்

வாழ நினைத்தோம் வாழுவோம் வழியா இல்லை பூமியில்
காதல் கடலில் தோணி போலே காலம் முழுதும் நீந்துவோம்
வாழ நினைத்தோம் வாழுவோம் வழியா இல்லை பூமியில்
காதல் கடலில் தோணி போலே காலம் முழுதும் நீந்துவோம்



பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை

பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா
என்னென்று நான் சொல்லவேண்டுமா

பூ ஒன்று கண்டேன் முகம் காணவில்லை
ஏன் என்று நான் சொல்லலாகுமா
ஏன் என்று நான் சொல்லவேண்டுமா

நடமாடும் மேகம் நவநாகரீகம்
அலங்கார கின்னம் அலை போல மின்னும்
நடமாடும் செல்வம் பணிவான தெய்வம்
பழங்கால சின்னம் உயிராக மின்னும்
துள்ளி வரும் வெள்ளி நிலா
துள்ளி வரும் வெள்ளி நிலா
துவண்டு விழும் கொடியிடையாள்
துவண்டு விழும் கொடியிடையாள்
விண்ணோடு விளையாடும்
பெண் அந்த பெண்ணல்லவோ
சென்றேன் அங்கே
கண்டேன் இங்கே
வந்தேன்

பெண் ஒன்று கண்டேன் பொன் அங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா
என்னென்று நான் சொல்லவேண்டுமா

நான் பார்த்த பெண்ணை நீ பார்க்க வில்லை
நீ பார்த்த பெண்ணை நான் பார்க்க வில்லை
நீ பார்த்த பெண்ணை நான் பார்க்க வில்லை

உன் பார்வை போலே என் பார்வை இல்லை
நான் கண்ட காட்சி நீ காணவில்லை
நான் கண்ட காட்சி நீ காணவில்லை

என் விழியில் நீ இருந்தாய்
என் விழியில் நீ இருந்தாய்
உன் வடிவில் நான் இருந்தேன்
உன் வடிவில் நான் இருந்தேன்

நீ இன்றி நானில்லை
நான் இன்றி நீயில்லையே
சென்றேன் ம்ஹிம்
கண்டேன் ம்ஹிம்
வந்தேன்

பொன் ஒன்று கண்டேன்
பெண் அங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா
என்னென்று நான் சொல்லவேண்டுமா

பூ ஒன்று கண்டேன்
முகம் காணவில்லை
ஏன் என்று நான் சொல்லலாகுமா
ஏன் என்று நான் சொல்லவேண்டுமா


No comments:

Post a Comment