2-89 இந்திரியங்களைப் பெரியோர்கள் பதினொன்றாக வகுத்துள்ளனர். அதை நான் இப்போது விளக்குவேன் (207)
2-90.காது, தோல், கண், நாக்கு, ஐந்தாவதாக மூக்கு, ஆசன வாய், ஜனன இந்திரியங்கள், கை, கால், பத்தவதாக பேசும் உறுப்பு ஆகியனவும்
2-91. இவைகளில் காது முதல் மூக்கு வரை உள்ள ஐந்தும் ஞானேந்திரியம், ஆசனவாய் முதல் வாய் வரையுள்ள ஐந்தும் கர்மேந்திரியங்கள்
2-92. இந்த பத்து உறுப்புகளையும் கட்டுப்படுத்தும் மனம் பதினோராவது இந்திரியம் ஆகும். அதைக் கட்டுப்படுத்தினால் ஏனைய பத்து இந்திரியங்களையும் கட்டுப்படுத்திவிடலாம். (210)
2-93. புலன் வழிச் சென்று, அதன் போக்கில் இன்பங்களை அனுபவிப்பவன் தவறுகளைச் செய்வான்; ஆனால் இவைகளைக் கட்டுப்படுத்துபவன் இன்பத்தையும் வெற்றியையும் அடைவான்.
Picture posted by S P Ramanathan
2-94. ஆசைகளை நிறைவேற்றுவதன் மூலம் அதைத் திருப்தி செய்வதென்பது முடியாது. ஆசைகளைப் பூர்த்தி செய்ய முயல்வது, தீயில் நெய்யை ஊற்றி அதை அணப்பதற்குச் சமம் ((அதை மேலும் வளர்ப்பது போலாகும்)).
2-95. சிலர் ஆசைகளை நிறைவேற்றலாம்; சிலர் ஆசைகளை அறவே ஒதுக்கலாம்; ஆனால் அறவே ஆசைகளை அகற்றுவதே சிறந்தது.
2-96. ஆசைகளை அகற்றுவதற்கு தெளிந்த ஞானம்தான் உதவும்; அவைகளில் இருந்து தனித்து வாழ்வதால் ஆசைகளை ஒழிக்க முடியாது.
2-97. எவன் ஒருவன் புலன் இன்பங்களில் நாட்டம் உடையவனாக இருக்கிறானோ அவன் செய்யும் யாக யக்ஞங்களும், வேதம் ஓதுதலும், தானமும் தவமும் பயனற்ற செயல்களே.-215
2-98. எவன் ஒருவன் ஐம்புல நுகர்ச்சியால இன்பத்தையோ துன்பத்தையோ அடைவதில்லையோ அவனே புலன்களை வென்றவன் ஆவான்.
2-99. ஐந்து புலன்களில் ஒன்று பலவீனமானாலும், ஓட்டைப் பானையில் இருந்து தண்ணீர் வெளியேறுவது போல ஞானம் வெளியேறி விடும்
2-100. ஆகவே பொறிகளையும் மனதையும் கட்டுப்படுத்தி, உடலை வருத்தாமல், இம்மை மறுமை ஆகியவற்றின் நன்மைகளை நாட வேண்டும்.
Picture posted by Lalgudi Veda
2-101. அதி காலையில் சூரியன் உதயம் ஆகும் வரை நின்றுகொண்டு காயத்ரீ மந்திரத்தை ஜபிக்க வேண்டும். மாலையில் அமர்ந்து கொண்டு ஜபிக்க வேண்டும். நட்சத்திரங்கள் தோன்றும் வரை செய்க (காணாமல், கோணாமல், கண்டு கொடு; சூரியனைக் காணாமல் காலையிலும், நிழல் கோணாமல் நண்பகலிலும், சூரியனைக் கண்டு, அது மறையும் வரை மாலையிலும் காயத்ரீ மந்திரம் சொல்க)
2-102.காலையில் நின்று கொண்டு ஜபம் செய்வதால் இரவில் செய்த பாபங்கள் அழிந்து விடும்; மாலையில் அமர்ந்து கொண்டு செய்யும் தவத்தால் பகற்பொழுதில் செய்த பாவங்கள் நசித்துவிடும்.-220
2-103.யார் ஒருவன் இவ்வாறு காலை மாலை ஜபங்களைச் செய்வதில்லையோ அவன் இரு பிறப்பாளன் என்ற தகுதியை இழக்கிறான்.
2-104.ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்திலோ, நதிக்கரைகளிலோ, ஒன்று குவிந்த மனதுடன் காயத்ரீ ஜபிக்க வேண்டும்.
2-105.இவைகளைச் செய்யக்கூடாத காலம் என்று விலக்கு எதுவும் இல்லை. வேதாங்கம் கற்கவும், வேதம் சொன்ன தினசரிச் சடங்குகளைச் செய்யவும் விடுமுறை நாட்கள் என்பது எதுவும் இல்லை.
2-106.இவை எல்லாம் வேதம் கற்பதின் ஒரு பகுதி என்பதால் விலக்கு எதுவும் இல்லை. அவை வேறு காரணங்களினால் தடைப் பட்டாலும் பலன் குன்றாது
2-107.யார் ஒருவன் ஓராண்டுக் காலத்துக்கு இவ்வாறு இடைவிடாமல், புலனடக்கத்துடன் செய்கிறானோ, அவன் இருக்கும் இடத்தில் பாலும் தேனும் வெண்ணையும் தயிரும் வற்றாது பாயும்-225
2-108. குருகுல வாசம் செய்யும் காலம் முழுதும் ஒரு மாணவன், வேதம் ஓதுதல், அக்னியில் சமித்தினால் ஹோமம் செய்தல், பிச்சை எடுத்தல், குருவுக்குப் பணிவிடை செய்தல், தரையில் படுத்தல் ஆகியவற்றைச் செய்ய வேண்டும்.
2-109.வேத உபதேசம் ஏற்கக் கூடிய பத்து வகை மாணவர்கள் உண்டு: குருவின் மகன், தருமம் அறிந்தவன், ஒழுக்க சீலன் ( தூய்மையுள்ளவன்), உறவினர், கொடையாளி, பணிவுடையன், நம்பத் தகுந்தவன் (பொய்பேசாதவன்), வேதத்தை கற்கும் சக்தியுடையவன், , சேவை செய்பவன், மற்றவர்களுக்கு ஞானம் அளிப்பவன்.
आचार्यपुत्रः शुश्रूषुर्ज्ञानदो धार्मिकः शुचिः ।
आप्तः शक्तोऽर्थदः साधुः स्वोऽध्याप्या दश धर्मतः
2-110. ஒருவர் கேட்காத எதையும் விளக்காதே; குதர்க்கமாகப் பேசுபவர்களுக்குப் பதில் கொடுக்காதே; உனக்கு விஷயம் தெரிந்தாலும் முட்டாள் (ஒன்றும் தெரியாதவன் போல) இரு.
2-111.யார் தர்மத்துக்குப் புறம்பாக கேட்கிறானோ அல்லது தர்மத்துக்கு எதிராக விளக்குகிறானோ, அவர்களில் ஒருவரோ அல்லது இருவருமோ, விரோதம் காரணமாக இறக்க நேரிடலாம்.
2-112. தர்மமோ, தட்சிணையோ, அடக்கமோ இல்லாதவனுக்கு (வேதத்தைக்) கற்பிக்கக் கூடாது; பயன் தராத ஆளுக்குக் கல்வி கற்பது உவர் நிலத்தில் விதைகளை விதைப்பது போலாகும்-230
2-113.வேதம் அ றிந்தவன், ஒரு தவறானவனுக்குக் கற்பிப்பவதைவிட, இறப்பதே மேல்
2-114.வேதம், பிராஹ்மணனிடம் சொன்னது: “நான் பெரும் பொக்கிஷம்;
என்னைக் காப்பாற்று நிந்திப்பவர் எவருக்கும் என்னை அளித்துவிடாதே. அப்போதுதான் நான் மிகவும் சக்தியுடன் விளங்குவேன்”.
विद्या ब्राह्मणमेत्याह शेवधिस्तेऽस्मि रक्ष माम् । %[ं।शेवधिष् टे]
असूयकाय मां मादास्तथा स्यां वीर्यवत्तमा ॥ Bछ्.Sछ्॥
यमेव तु शुचिं विद्यान्नियतब्रह्मचारिणम् । %[ं। विद्या नियतं ब्रह्मचारिणम्]
तस्मै मां ब्रूहि विप्राय निधिपायाप्रमादिने ।
2-115. தூய்மையுடைய, புலன் அடக்கம் உடைய, கிரஹிக்கும் சக்தியுடைய, பொக்கிஷத்தைப் பாதுக்காக்கக் கூடிய பிராமணன் இடத்தில் என்னைக் கொடு
2-116. வேதம் அறிந்த ஒருவரின் அனுமதி இல்லாமல், வேதத்தைக் கற்பவன் வேதத்தைத் திருடியவன் ஆவான். அவன் நரகத்தில் வீழ்வான்.-234
ब्रह्म यस्त्वननुज्ञातमधीयानादवाप्नुयात् ।
स ब्रह्मस्तेयसंयुक्तो नरकं प्रतिपद्यते
(நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்; கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))
எனது கருத்து
இந்தப் பகுதி வேதம் எவ்வளவு புனிதமானது என்பதை விளக்குகிறது.
தகுதி இல்லாதவருக்குக் கற்பிப்பதைவிட அந்த அறிவுடன் இறந்து போனாலும் பரவாயில்லை என்கிறது.
மீண்டும் மீண்டும் ஒழுக்கத்தையும் புலன் அடக்கத்தையும் மநு வலியுறுத்துகிறார்.
புலன் அடக்கமும், ஆசையின்மையும், ஒழுக்கமும்தான் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு பிராமணரை உயர் நிலையில் வைத்தது.
வேதம் பிராமணனிடம் வந்து சொன்ன வாசகம் அருமையானது; நான் ஒரு பொக்கிஷம்; என்னைப் பாது காத்து இதன் மதிப்பை அறிந்த தூயவனிடம் என்னை ஒப்படை.
இன்னும் ஒரு அறிவுரை எல்லோருக்கும் பொதுவானது: கேள்வி கேட்காமல் பதில் சொல்லாதே. குதர்க்கமாக கேட்பவனிடம் முட்டாளைப் போல நடி.
3 நல்ல உவமைகள்
ஆசைகளைப் பூர்த்தி செய்ய விழைவது, தீயில் நெய்யை ஊற்றி அதை அ ணைப்பதற்குச் சமம் என்ற உவமையும்
பயனற்ற ஆட்களுக்கு வேதம் கற்பிப்பது, உப்பு மணலுள்ள நிலத்தில் விதை விதைப்பதற்குச் சமம் என்ற உவமையும்,
இந்திரியங்களில் ஒரு இந்திரியம் (புலன்கள்) பலவீனமாக இருந்து மனதைப் பரிதவிக்கவிட்டாலும், அது ஓட்டையுள்ள தண்ணீர்ப் பைக்குச் சமம் என்ற உவமையும் ரசிக்கக் கூடியவை.
அந்தக் காலத்தில் தோலினால் ஆன தண்ணீர்ப் பை இருந்ததை இந்த ஸ்லோகம் காட்டுகிறது.
பிராமணர்களுக்குச் சொன்ன காணாமல் கோணாமல் கண்டு கொடு- (சந்தியா வந்தனம் செய்) என்பதும் நோக்கற்பாலது.
நண்பகலில் செய்யப்படும் மாத்யாஹ்னிகம் பற்றி மநு ஒன்றும் செப்பாதது வியப்புக்குரியது. அவர்காலத்தில் மதிய வழிபாடு இல்லையா? அல்லது எல்லோருக்கும் தெரிந்ததைச் சொல்ல வேண்டியதில்லை என்று விட்டுவிட்டாரா?tha
No comments:
Post a Comment