சிறப்பு பகுதிகள் செய்தி
சொல்கிறார்கள்
பல தானிய கஞ்சியை தவிர்ப்பது நல்லது!
Advertisement
குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய, உணவு முறை குறித்து கூறும், ஆயுர்வேத மருத்து வர், சாந்தி விஜய்பால்: பிறந்த குழந்தைக்கு, உணவு விஷயத்தில் மிகக் கவனம் தேவை. ஆறு மாதம் வரை, தாய்ப்பால் மட்டுமே தவறாமல் தர வேண்டும். மற்ற பால், புஷ்டியாக்கலாம்; ஆனால், தாய்ப்பால் மட்டுமே, நோய் எதிர்ப்புச் சக்தியைத் தரும்.ஆறு மாதத்துக்குப் பின், ஆப்பிள், மலை வாழை, கதலி, சப்போட்டா பழங்களை வேக வைத்து கொடுக்கலாம். மாலை, மழை சமயம் மற்றும் குழந்தைக்கு சளி இருக்கும் போது, இவற்றை கொடுக்கக் கூடாது. ஒரு புதிய உணவை அறிமுகப்படுத்தி, மூன்று நாட்களுக்குப் பின், இன்னொன்றை முயற்சிக்க வேண்டும்.குழந்தை, 2.5 - 5 கிலோ வரை, பிறப்பு எடையும்; மூன்றாவது மாதத்தில், இரு மடங்கும்; 1 வயதில், மூன்று மடங்கும் இருக்க வேண்டும். அதிக குண்டான குழந்தைகளுக்கு, பிற்காலத்தில் சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு உள்ளது. ஏழாவது மாதம், காய்கறிகளை வேக வைத்துக் கொடுக்கலாம்; சர்க்கரைவள்ளிக் கிழங்கு, கேரட், மஞ்சள் பூசணி போன்றவை, உடல் எடையை ஏற்று பவை. வேக வைத்த பருப்பு தெளிவு தரலாம்.பூண்டு அதிகம் சாப்பிட்டால், உடல் உஷ்ணமாகி, அரக்கக் குணம் வரலாம். பால் சுரப்பதற்காக, பூண்டை அள்ளி விழுங்கும் அம்மாக்கள், உடல் உஷ்ணத்தை தவிர்க்க, மோர், இளநீர், வெள்ளரி, கரும்புச் சாறு, 'சவ்சவ்' மற்றும் பீர்க்கை போன்ற நீர்க்காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில், சிறுநீர் கழிக்கும் போதெல்லாம், உங்கள் குழந்தை அழும்.எட்டாவது மாதம் முதல், கஞ்சி தரலாம். எந்தக் கஞ்சி கொடுத்தாலும், அதில், சிட்டிகை சீரகத் துாள், மிளகுத் துாள் போட வேண்டும். காரச் சுவை, குடற்புழுக்களை அழிக்கும். பசியைப் பெருக்கி, ஜீரணமாக்க உதவும். பல தானியக் கஞ்சியைத் தவிர்க்கவும். இரண்டு மூன்று புரதங்களை, உங்கள் குழந்தை ஜீரணம் செய்யாவிடில், அலர்ஜி உண்டாகலாம்.ஆறு மாதங்களுக்குப் பின், ஆண் குழந்தைகளுக்கு, இரட்டைப்படை மாதத்திலும், பெண் குழந்தைகளுக்கு, ஒற்றைப்படை மாதத்திலும், அன்ன பிரசன்னம் செய்ய வேண்டும். ஒரு வயது ஆன குழந்தைகளை, காலையில் வேலை ஆவதற்கென, 'லேட்'டாக எழுப்பக் கூடாது. இந்தப் பழக்கமே நாளை, பள்ளி செல்லும்போது தொடரும் என்பதால், இரவு, 10:00 மணிக்கு துாங்க வைத்து, காலை, 6:00 மணிக்கு எழ, பழக்க வேண்டும்.எந்த உணவையும், 15 நிமிடத்திற்குள் ஊட்டுங்கள். 'சாப்பிட்டால்தான் ஆச்சு' என, ஒரு மணி நேரம் ஊட்டும் உணவு, பசியில்லாத உங்கள் குழந்தைக்கு விஷமாகலாம். 'மொபைல்' மற்றும் 'டிவி'க்கு, அடிமையாகும் குழந்தைகள், மற்ற திறமைகளில் பின் தங்கியுள்ளதாக, ஆராய்ச்சிகள் கூறுகின்றன என்பதால், கவனம் தேவை.
No comments:
Post a Comment