Advertisement
தாலாட்டால், குழந்தைகளுக்கு கிடைக்கும் நன்மை குறித்து கூறும், குழந்தைகள் மனநல மருத்துவர் ஜெயந்தினி: அம்மாவின் தாலாட்டை கேட்ட படியே துாங்கும் குழந்தைக்கு கிடைக்கும் முதல் நன்மை, 'நான் தனியாக இல்லை' என்ற பாதுகாப்பு உணர்வு. குழந்தைகளுக்கு பேச்சை விட, பாட்டு ரொம்ப பிடிக்கும். அதுவும், அதிக சத்தமில்லாமல், அம்மாவின் மென்மையான குரலில் பாடப்படும் தாலாட்டை, குழந்தைகள் ரசிப்பர்.அதனால் தான், அழுகிற குழந்தைகளை, தாலாட்டு சமாதானப்படுத்துகிறது; அவர்களின் பிடிவாதத்தை குறைக்கிறது; சந்தோஷப்படுத்துகிறது; துாங்கவும் வைக்கிறது. இன்று, 50- குழந்தைகளில், ஒரு குழந்தை, தாமதமாக பேசுகிறது. அந்தக் காலத்தில், தாமதமாக பேசும் குழந்தைகளின் எண்ணிக்கை, மிக மிகக் குறைவு. அதற்கு காரணம், பிறந்தது முதல், அம்மா, பாட்டி, அத்தை, சித்தி என்று, பலரின் தாலாட்டையும் கேட்டு வளர்ந்தது தான்.தாலாட்டு தான், குழந்தைகள் கேட்கும் முதல் மொழி. அந்த மொழியை கேட்டு வளரும் குழந்தைகள், சரியான வயதில் பேச ஆரம்பித்து விடுவர். தாய்மொழியை குழந்தைகளிடம் சேர்க்கும் முதல் கருவி, தாலாட்டு தான்.இன்றைய அம்மாக்கள், ஆங்கில பாடல்களை போட்டு, குழந்தைகளை துாங்க விடுகின்றனர். அதில் ஒலிப்பது, அம்மாக்களின் குரல் கிடையாது என்பதால், குழந்தைகளுக்கு பாதுகாப்பு உணர்வு கிடைக்காது.அடுத்து, அம்மா பேசுவது தாய் மொழி; ஆங்கில பாடலில் ஒலிப்பது, வேறு மொழியாக இருக்கும். குழந்தை, தாய்மொழியை சரளமாக பேச வேண்டுமென்றால், அம்மாக்கள், தாலாட்டு பாட வேண்டும்.சில தாலாட்டு பாடல்கள், குழந்தைக்கும், உறவினர்களுக்கும் இடையே ஒட்டுதலை, பாசத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கும். உதாரணத்துக்கு, 'யாரடிச்சு நீ அழுதே...' என்ற தாலாட்டில், ஒவ்வோர் உறவின் பெயரையும் குறிப்பிட்டு, 'மாமன் அடிச்சாரோ மல்லிகைப்பூ செண்டாலே, தாத்தா அடிச்சாரோ தாமரைப்பூ தண்டாலே, பாட்டி அடிச்சாரோ பாலுாட்டும் கையாலே' என்ற வரிகள், குழந்தைகளின் பிஞ்சு மனதில் விதைக்கப்படுகிறது. அதாவது, உறவினர்கள் கோபத்தை கூட, தன்னிடம் வலிக்காமல் தான் காட்டுவர் என்ற நம்பிக்கையை, குழந்தைகளிடம் ஏற்படுத்துகிறது.'குழந்தைகளின் மனதுக்குள் மட்டுமல்ல, மூளைக்குள்ளும் இதமான சூழ்நிலையை, தாலாட்டு ஏற்படுத்தும்' என்கின்றன, ஆய்வுகள்.மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது, தாலாட்டு கேட்டு வளரும் குழந்தைகளின் மனதில், வன்முறை எண்ணம் குறைவாக இருக்கும்
|
No comments:
Post a Comment