Friday, March 3, 2017

பரோட்டா பிரியர்களே... சிறுநீரகம், கல்லீரல் கவனம்! - நன்றி: ஹெல்த் விகடன்-

நன்றி: ஹெல்த் விகடன்-2017/03/02

பரோட்டா பிரியர்களே... சிறுநீரகம், கல்லீரல் கவனம்! #HealthAlert

`பரோட்டா’, `புரோட்டா’, வட இந்தியாவில் `பராத்தா’, மொரீஷியஸில் `ஃபராட்டா’, மியான்மரில் `பலாட்டா’... எப்படி அழைக்கப்பட்டாலும், இது இந்தியர்களை வசீகரிக்கும் ஓர் உணவு. முக்கியமாக தெற்காசியா முழுக்கப் பிரபலமான ஒன்று. இதன் அலாதியான சுவை காரணமாகவே அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, சிங்கப்பூர், மலேஷியா, மொரீஷியஸ், மாலத்தீவுகள், பங்களாதேஷ்... எனப் பல நாடுகளில் பிரபலமாகியிருக்கிறது. இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் மிக எளிமையாகத் தயாரிக்கப்படுகிற, அதே நேரத்தில் பிரபலமான உணவு. பரோட்டா குறித்த சர்ச்சை அவ்வப்போது எழுவதும், ஆறிப்போவதும் இங்கே வழக்கம். பரோட்டா அப்படி என்னதான் நம் உடலுக்குத் தீங்கு விளைத்துவிடும்... தெரிந்துகொள்வோமா?    
பரோட்டா
`இலங்கையில் இருந்து வந்தது’ என்று சிலர் அடித்துச் சொன்னாலுமேகூட, பரோட்டா பிறந்த வீடு இந்தியா என்பதற்கு ஆதாரம் இருக்கிறது. `பராத்தா’ என்கிற வார்த்தை சமஸ்கிருதத்தில் இருந்து வந்தது. வேத காலத்தில், `புரோதாஷா’ என்கிற உணவை, யாகம் செய்யும்போது அக்னி பகவானுக்குப் படைப்பார்களாம். அதில் பருப்பையும் நறுக்கிய காய்களையும் ஸ்டஃப் செய்திருப்பார்களாம். அந்த `பு-ரோ-தா-ஷம்’தான் `பராத்தா’ ஆனது என்கிறார்கள். ஆரம்பத்தில் பரோட்டா செய்யப் பயன்பட்டது நெய்தான். வெகு நாட்களுக்குப் பிறகுதான் எண்ணெயைப் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். 
வட இந்திய பராத்தா முதன்முதலில் பாகிஸ்தானின் பெஷாவரில்தான் உருவானது என்கிறார்கள். அங்கிருந்து மெள்ள மெள்ள வட இந்தியா முழுமைக்கும் பரவியதாம். ஆரம்பத்தில் குட்டி டிபனாக காலை உணவுக்கு மட்டும் இதைச் சாப்பிட்டிருக்கிறார்கள் பஞ்சாபிகள்.  
தென் தமிழகத்தில் பரோட்டாவுக்கு புகழ்பெற்ற சைடுடிஷ் சால்னாவும் குருமாவும். கூடவே, சிக்கன் குருமா, மட்டன் குருமா என்று இருந்தால் கேட்கவே வேண்டாம். இவற்றைத் துணைக்கு வைத்துக்கொண்டு நடிகர் சூரி மாதிரி, `நான் முதல்ல இருந்து சாப்பிடுறேன்... நீ போர்டை அழி’ என்று சவால்விடச் செய்யும் சக்தி பரோட்டாவுக்கு உண்டு. வட இந்தியாவில் உருளைக்கிழங்கையும் மசாலாவையும் உள்ளே வைத்து பராத்தாவாகச் செய்கிறார்கள். ஆலு பராத்தா, சென்னா பராத்தா... என விதவிதமான வகைகள் உள்ளன. இன்னும் பனீர், காய்கறிகள், காலிஃப்ளவர், முள்ளங்கி இவற்றால் ஆன பரோட்டாக்களும் உண்டு. தொட்டுக்கொள்ள ரெய்த்தா, தால் என அமர்க்களப்படுகிறது. சில வட இந்தியர்களுக்கு பராத்தாவுக்கு வெறும் ஊறுகாயும் யோகர்ட்டுமே போதுமானது. 
புரோட்டா
வீச்சு பரோட்டா, கைமா பரோட்டா, கொத்து பரோட்டா, சில்லி பரோட்டா, சிக்கன் பரோட்டா, மட்டன் பரோட்டா, சிலோன் பரோட்டா, கேரளா பரோட்டா... எனப் பல வகைகளில் பட்டையைக் கிளப்பும் இதன் சுவைக்கு ஈடில்லை. அதனால்தான் பரோட்டா ரசிகர்கள் உலகமெங்கும் வியாபித்திருக்கிறார்கள். இன்றைக்கு, பெரும்பாலான தமிழர்களின் இரவு உணவாகிவிட்டது பரோட்டா. ஆரம்பத்தில் இது கோதுமையில் தயாரிக்கப்பட்ட வரை நம் ஆரோக்கியத்துக்குப் பிரச்னை எதுவும் இல்லை. மைதாவுக்கு மாறிய பிறகுதான் சிக்கல். இது குறித்து விரிவாகப் பேசுகிறார் அக்கு ஹீலர் அ.உமர் பாரூக்... அ.உமர் பாரூக்
``இன்றைக்கு பரோட்டாக்கள் தயாரிக்கப்படுவது பெரும்பாலும் மைதாவில்தான். கோதுமைக் கழிவுகள்தான் மைதா உற்பத்தியின் மூலப்பொருட்கள். தெற்கு ஆசியாவில் உள்ள சில நாடுகளில் மரவள்ளிக்கிழங்கில் இருந்தும் உற்பத்தி செய்கிறார்கள். மைதா வந்த புதிதில் பசை காய்ச்சுவதற்குத்தான் பயன்பட்டது. அமெரிக்காவில் இதற்குப் பெயரே `பேஸ்ட்ரி பவுடர்’ (Pastry Powder) என்பதுதான். இரண்டாம் உலகப் போர்... அதன் விளைவாக எழுந்த பஞ்சம் காரணமாக மைதாவை சமையலுக்குள் கொண்டு வந்தார்கள். சமையலுக்குப் பயன்படும் விதத்தில் மைதாவை அறிமுகப்படுத்திய பெருமை அமெரிக்காவையே சாரும். 
கோதுமைக் கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் மைதாவின் நிறம் மஞ்சளாகத்தான் இருக்கும். ஆனால், பல ரசாயனக் கலவைகளால் சுத்தம் செய்யப்பட்ட பிறகு வெள்ளை வெளேர் நிறத்துக்கு வந்துவிடுகிறது. இதற்குப் பயன்படுவது பிளீச்சிங் கெமிக்கல். தெளிவாக, புரிகிற மாதிரி சொல்ல வேண்டும் என்றால், பினாயிலைப் பயன்படுத்தித்தான் மைதாவை அந்த வெள்ளை நிறத்துக்குக்கொண்டு வருகிறார்கள். அதாவது, பென்சாயில் பெராக்ஸைடு (Benzoyl Peroxide) என்ற தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் ரசாயனம்தான் பயன்படுகிறது. இந்த ரசாயனத்தால் சுத்திகரிக்கப்படும் மைதாவை சில ஐரோப்பிய நாடுகளும், சீனாவும், இங்கிலாந்தும் தடை செய்திருக்கின்றன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். 
பரோட்டா
மைதாவையும், அதிலிருந்து தயாரிக்கப்படும் நாண், ஃபுல்கா போன்றவற்றையும் பலரும் விரும்புவதற்குக் காரணம், அதன் மென்மைத்தன்மை. கோதுமை மாவு கொஞ்சம் கடினத்தன்மையோடு இருக்கும். கோதுமைக் கழிவில் இருந்து தயாரிக்கப்படும் மைதா எப்படி மென்மையாக இருக்கிறது? இதற்கும் காரணம் ரசாயனம்தான். அதன் பெயர் `அல்லோக்ஸான்’ (Alloxan). இதுதான் மைதாவின் மென்மைத் தன்மைக்கு உறுதுணையாக இருக்கிறது. இது ஒரு நச்சுப்பொருள். நம் கல்லீரலையும், சிறுநீரகங்களையும் மிக மோசமாகப் பாதிக்கக்கூடியது. அல்லோக்ஸான் ரசாயனம் அதிகமாகப் பயன்படுத்தப்படும் இடம் பரிசோதனைக் கூடங்கள். ஒரு நோய்க்கு பொருத்தமான மருந்து கண்டுபிடிக்க பரிசோதனை நடக்கும் அல்லவா... அந்த இடம். சர்க்கரைநோய்க்கு மருந்து கண்டுபிடிக்க, முதலில் எலிகளுக்கு சர்க்கரைநோயை வரவழைப்பார்கள். அதற்கு அல்லோக்ஸான் ரசாயனம் கலந்த கலவையை அதன் உடலில் செலுத்துவார்கள். பிறகு, எலிகளுக்கு இன்சுலின் சுரப்பு நின்றுவிடும். 
ஆக, அல்லோக்ஸான், சர்க்கரைநோயை வரவழைக்கும் ரசாயனம். மைதாவில் இருக்கும் அல்லோக்ஸான், பென்சாயில் பெராக்ஸைடோடு இணைந்து நம் உடலுக்குக் கேடு விளைவிக்கிறது. இன்றைக்கு இந்தியாவில் உயர்ந்துகொண்டே போகும் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கைக்கு துணையாக நின்றதில் மைதாவுக்கும் பெரும் பங்கு உண்டு; பரோட்டாவுக்கும்!’’ என்கிறார் உமர் பாரூக். 
மெதுவான புரோட்டா
ஏற்கெனவே ரசாயனம் தெளிக்கப்பட்ட, பூச்சிக்கொல்லி மருந்துகளின் தாக்கத்தோடு உற்பத்தி செய்யப்பட்ட தானியங்கள்தான் நம் அன்றாட உணவுக்கானவை என்கிற சூழல். இதில், மைதாவிலும் உடலுக்கு ஒவ்வாத ஏதோ ஓர் எண்ணெயிலும் தயாரிக்கப்பட்ட பரோட்டா நமக்குத் தேவைதானா என யோசிக்கவேண்டிய தருணம் இது.  
பரோட்டா பிரியர்கள் ஒன்று செய்யலாம்... வீட்டிலேயே கோதுமையில் தயாரிக்கப்பட்ட பரோட்டாவை சாப்பிடலாம். அது ஆரோக்கியத்துக்கும் நம் எதிர்காலத்துக்கும் நல்லது. 

Last updated : 07:29 (16/11/2016) மனஅழுத்தம் குறைக்க உதவும் உணவுகள்! நலம் நல்லது - 8! #DailyHealthDose - மருத்துவர் கு.சிவராம thanks to vikatan

மனஅழுத்தம் குறைக்க உதவும் உணவுகள்! நலம் நல்லது - 8! #DailyHealthDose - மருத்துவர் கு.சிவராமன்

மருத்துவர் கு.சிவராமன் 
சமூக எதிர்பார்ப்புகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறும் மனதின் வெளிப்பாடுதான் மனஅழுத்தம். அது மெள்ள மெள்ள உள நோயாக மாறும்போது சிலருக்குப் பயம், சிலருக்குப் புதிது புதிதான கற்பனைகள், சிலருக்குச் சந்தேகம், சிலருக்கு வெறுப்பு என வெவ்வேறு வடிவம் பெறும். அது நோயாக வடிவம் எடுக்காமல் தடுக்கத் தேவையான முக்கியக் காரணங்கள் இரண்டு. ஒன்று... கரிசனம் தரும் பேச்சு. மற்றொன்று... கனிவு காட்டும் முகமொழி. 
மன நோய்கள் ஆரம்பநிலையில் பெரும்பாலும் குணப்படுத்தக்கூடியவை. நாள்பட்ட நிலையிலும் கட்டுப்படுத்த முடியும். அதற்குத் தேவை ஒருங்கிணைந்த சிகிச்சை. உலக சுகாதார நிறுவனம், ‘உடல்நலம்’ என்பதை, `நலம் எனப்படுவது, உடல் நோயில்லாமல் இருப்பது மட்டும் அல்ல; மன நலமும் சமூக நலமும் சேர்ந்த நிலையே முழு உடல்நலம்’  என வரையறுத்திருக்கிறது. கால மாற்றம், நவீன வாழ்க்கைச் சூழலில் மனஅழுத்தம் என்பது எல்லோருக்கும் சகஜமான ஒன்றாக ஆகிவிட்டது. 
பல்வேறு மனஅழுத்த நோய்களுக்கு உறக்கம் இல்லாததே முதல் காரணம். ஆரோக்கிய வாழ்வுக்கு 6 முதல் 7 மணி நேர தடையில்லாத உறக்கம் தேவை. தூங்க ஆரம்பித்த ஐந்து அல்லது பத்து நிமிடங்களில் கனவு வருவதும், அதிகாலையில் விழிப்பதற்கு முன்னர் 5 முதல் 10 நிமிடங்கள் கனவு வருவதும் இயல்பான உறக்கத்துக்கான அறிகுறிகள். 
பெரும்பாலானவர்களுக்கு இரவு உறக்கத்திலும் அலுவல் மற்றும் குடும்பம் சார்ந்த நினைவுகள் மனதை ஆக்கிரமிக்கும். இதுவும் மனஅழுத்தத்தின் அறிகுறிதான். தூங்கச் செல்வதற்கு முன்னர் இனிமையான, மகிழ்வான தருணங்கள் அவசியம். உடற்பயிற்சியும் பிராணாயாமப் பயிற்சியும் நிம்மதியான உறக்கத்தைத் தரும்.   
இங்கே மன அழுத்தம் குறைக்கும் உணவுகள் சில... 
* மாதுளம்பழச் சாற்றை வெள்ளைச் சர்க்கரை, ஐஸ் துண்டுகள் சேர்க்காமல் தினசரி அருந்தலாம். இதில் இருக்கும் நிறமிச் சத்து மன இறுக்கத்தைக் குறைக்க உதவும். 
* மூளையில் சுரக்கும் செரட்டோனின் சத்தைச் சீராக்கும் தன்மை கொண்டது வாழைப்பழம். இந்தச் சத்து குறைவினாலும், சீரற்ற நிலையிலும்தான் பல்வேறு உளவியல் நோய்கள் வருகின்றன. வாழைப்பழம் மனஅழுத்தத்துக்கு நல்லது.
* உறங்குவதற்கு முன் ஒரு குவளைப் பாலில் அரை தேக்கரண்டி அமுக்கரா கிழங்குப் பொடி சேர்த்து, சூடாக அருந்தவும். நிம்மதியான தூக்கம் வரும். 
* பதற்றமும் கற்பனைகளும் நிறைந்த இரவுத் தூக்கத்தில் உழல்பவர்கள், ஒரு சிட்டிகை ஜாதிக்காய்த் தூளை பாலில் சேர்த்து அருந்திவிட்டு உறங்கச் செல்லலாம். நல்ல பலன் கிடைக்கும். 
* மனஅழுத்தம் உள்ளவர்கள் தினமும் சீரகத் தண்ணீர் அல்லது வெட்டிவேர் போட்ட மண்பானைத் தண்ணீரை அருந்துவது நல்லது. 
* தினசரி இருமுறை குளிப்பது அன்றாட அழுக்கோடு மன அழுத்தத்தையும் நீக்கும். மனஅழுத்தத்துக்கு மருந்து எடுத்துக்கொள்பவர்கள், மருத்துவரிடம்ன ஆலோசனை செய்து, அவர்களுக்காகவே பிரத்யேகமாக உள்ள பிரமித் தைலம், அசைத் தைலம், குளிர்தாமரைத் தைலம் இவற்றில் ஒன்றை வாரத்துக்கு ஒருமுறை அல்லது இருமுறை பயன்படுத்துவது நல்லது. 
* எண்ணெயில் பொரித்த உணவுகள் பித்தத்தைக் கூட்டும்; செரிக்கவும் நீண்ட நேரம் ஆகும். தந்தூரி உணவுகளை மனஅழுத்த நோயாளிகள் தவிர்ப்பது நல்லது. ஆவியில் வேகவைத்த உணவுகளே சிறந்தவை. 
* உணவில் சேர்க்கப்படும் செயற்கை நிறமூட்டிகள் குழந்தைகளுக்கு கவனச் சிதைவு நோயை ஏற்படுத்தக் கூடியவை. நிறமூட்டிகள் சேர்க்கப்பட்ட உணவுப் பொருட்களைத் தவிர்க்கவும். 

Last updated : 12:27 (02/01/2017) தூக்கம் தொலைத்தவர்கள் கவனத்துக்கு! நலம் நல்லது - 40 #DailyHealthDose thanks vikatan

தூக்கம் தொலைத்தவர்கள் கவனத்துக்கு! நலம் நல்லது - 40 #DailyHealthDose

தூக்கம்

லகின் மிக உன்னதமான இயந்திரம் மூளை! அதன் தங்கு தடையில்லா செயல்பாட்டுக்கு ஆழ்ந்த தூக்கம் அவசியத் தேவை. உற்சாகமாகச் சிந்திக்க, நினைவாற்றல் மிளிர, நோய் இல்லாமல் வாழ, உடல் இயக்கத்துக்கு அவசியமான சுரப்புகளையெல்லாம் தேவையான அளவில் சுரப்பதற்குத் தூண்ட... மேலும் பல செயல்பாடுகளுக்கு தினசரி 6 முதல் 7 மணி நேரத் தூக்கம் அவசியம், கட்டாயம். அதிலும் கும்மிருட்டில் தூங்க வேண்டும். 
அது என்ன கும்மிருட்டு உறக்கம்? நள்ளிரவு வரை படுக்கையறை டி.வி-யில் கிரிக்கெட் மேட்சோ,  படமோ பார்த்துக்கொண்டே அசந்து தூங்குவதற்குப் பெயர் தூக்கம் அல்ல. `விடி விளக்கு வெளிச்சம்கூட இல்லாத இருட்டில் நடைபெறும் தூக்கத்தில்தான் உடல் இயக்கங்களுக்கு நல்லது செய்யும் மெலடோனின் சுரக்கும். சின்ன வெளிச்சத்திலும் அந்தச் சுரப்பு குறைந்துவிடும்’ என்கிறது நவீன விஞ்ஞானம். இந்த மெலடோனின் சுரப்புதான் நம் உடல் இயந்திரத்தை இரவில் சர்வீஸ் செய்து, மறுநாள் ஓட்டத்துக்குத் தயார்நிலையில் வைக்கிறது; புற்றுநோய் போன்ற பல நோய்கள் வராமல் தடுக்கிறது. பகல் வெளிச்சத்தில் 10 மணி நேரம் தூங்கினால்கூட மெலடோனின் சுரக்காது. அதனால்தான் அந்தக் காலத்திலேயே சித்தர் தேரையர், `பகலுறக்கஞ் செய்யோம்’ எனப் பாடியிருக்கிறார். 
ஏன் தூங்க வேண்டும்? 
ஒருவர், தினமும் நைட் ஷிஃப்ட் வேலை பார்ப்பவராக இருப்பார்; இன்னொருவர், நள்ளிரவில்தான் வீட்டுக்கு வருபவராக இருப்பார்; மற்றவர், சரியான நேரத்தில் வீட்டுக்கு வருபவராக இருந்தாலும், தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுப்பவராக இருப்பார். இந்த மூவருக்குமே மெலடோனின் சுரப்பில் பிரச்னை இருக்கும் வாய்ப்புகள் அதிகம். 
தூக்கமின்மை, முதலில் வாய்வுத் தொல்லையை ஏற்படுத்தும். பிறகு, உயர் ரத்த அழுத்தத்தை உண்டாக்கும். அதனைத் தொடர்ந்து நரம்புத் தளர்ச்சி வரும். இறுதியாக, மன உளைச்சலை ஏற்படுத்தி, மன நோயில் கொண்டுபோய் தள்ளிவிடும். சட்டையைக் கிழித்துக்கொண்டு, கல்லெடுத்து அடிப்பவர்கள், மனநல காப்பகங்களில் இருப்பவர்கள் மட்டும் அல்ல... நம்மில் ஐந்தில் ஒருவர் மனநோயாளியாகத்தான் இருக்கிறோம். உறக்கம் இல்லாமல், மன மகிழ்ச்சி இல்லாமல், எது மகிழ்ச்சி என அறியாமல், எதற்கும் சிரிக்காமல், எதிலும் நிறைவுகொள்ளாமல் பலரும் மன நோயாளியாகத்தான் இருக்கிறோம். இதற்கு, சரியான உறக்கம் இன்மையே முக்கியக் காரணம். 
வரும்போது தூங்கிக்கொள்ளலாம் என்பதும் உடலுக்கு நல்லதல்ல. தூக்கம் இல்லாத மூளையின் ரத்த நாளங்கள் வலுவிழக்கும். உறக்கத்துக்கென மெனக்கெட வேண்டும். இரவு உணவை பரோட்டாவில் ஆரம்பித்து, ஃபலூடாவில் முடிக்கும் பழக்கம் உறக்கத்துக்கு எதிரி. நன்றாக வீசிப்புரட்ட, ஜவ்வாக இழுத்த இழுப்புக்கெல்லாம் வர, அதிக அளவில் மாவில் குளூட்டன் சேர்க்கப்படுகிறது. இந்த குளூட்டன் சிலருக்கு அஜீரணத்தையும், சிலருக்கு குடல் புற்றுநோயையும் ஏற்படுத்திவிடும். குளூட்டன் ஜீரணத்தைத் தாமதப்படுத்துவதால், கண்டிப்பாக உறக்கம் கெடும். எனவே, இரவில் எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுகளையே சாப்பிட வேண்டும். 
நல்ல தூக்கம் வேண்டுமா? 
* இரவுகளில் கொஞ்சம் பழத்துண்டுகள், கம்பங்குருணை அரிசியில் வெங்காயம், மோர் சேர்த்துப் பிசைந்த சாதம் சாப்பிடலாம். கடைசி உருண்டையைச் சாப்பிடும்போதே, உறக்கம் கண்ணைச் சுழற்றிக்கொண்டு வரும். 
* பணி இடங்களில் இருந்து தாமதமாக வீடு திரும்புவோர், இரவு உணவை வேலை பார்க்கும் இடத்திலேயே 8 மணிக்குள் சாப்பிட்டுவிடுவது நல்லது. தூங்குவதற்கு முன் பழம் மட்டும் சாப்பிட்டுவிட்டுப் படுக்கலாம். தூக்கத்துக்கும் உடல்நலத்துக்கும் இது மிகவும் நல்லது. 
* ஆழ்ந்த தூக்கம் கிடைப்பதற்கு, தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டியது அவசியம். `மொட்டை மாடியில் நடக்கிறேன்... வீட்டு வேலை செய்கிறேன்’ என்றெல்லாம் காரணங்கள் சொல்லாமல், தினமும் 45 நிமிடங்களுக்கு மித வேக நடை நடப்பது, தூக்கத்தைச் சீர்ப்படுத்தும்; மனதை ஒருநிலைப்படுத்தி தூங்கவைக்கும்.  
* கசகசா பால், சாதிக்காய்த் தூள் போட்ட பால், அமுக்கராக்கிழங்குப் பொடி, மாதுளம்பழம் இவையெல்லாம் தூக்கம் வரவழைக்கும் இயற்கை உணவுகள் அல்ல... மருந்துகள்! 
வீட்டில், வாழ்க்கைத்துணை, குழந்தைகளிடம் நீடித்து நிலைத்திருக்கும் அன்பு, செல்ல அரவணைப்பு எல்லாமே மன அமைதியைத் தரும்; நல்ல தூக்கத்தையும் தரும். இதை மனதில் கொள்வோம். நல்ல தூக்கத்தால் மட்டுமே உண்மையிலேயே இரவை `குட்நைட்’ ஆக்க முடியும்

Last updated : 12:35 (23/02/2017) குழந்தைகள் முன்பு உடைமாற்றுவதால் இவ்வளவு விபரீதமா? #GoodParenting

குழந்தைகள் முன்பு உடைமாற்றுவதால் இவ்வளவு விபரீதமா? #GoodParenting

Good Parenting
மக்கு, குழந்தைகளே உலகம். ஆனால், குழந்தைகளின் இன்றைய வளர்ச்சி ஜெட் வேகத்துக்கு மாறிவிட்டது. 3 வயது குழந்தை, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறது. வளர்இளம் பருவத்தை எட்டும் சிறுவர்கள், பாலியல் குற்றங்களில் ஈடுபடுவது, பாலியல் படங்களைப் பார்க்கும் நோயாளிகளாக மாறுவது என, குழந்தைகள் சிறு பருவத்திலேயே பாலியல் குழப்பங்களுக்கு ஆளாகின்றனர். பெற்றோர் செய்வதை அப்படியே காப்பியடிப்பதும், கொஞ்சமாகத் தெரிந்த விஷயங்களை ஆர்வத்தோடு தேடித் தெரிந்துகொள்வதும் இந்த வயதின் இயல்பு. 
பெற்றோர் கவனக்குறைவாகச் செய்யும் பல தவறுகள், குழந்தைகளை வேறு பாதைக்குக் கொண்டுசெல்கிறது. அவற்றில் ஒன்று, குழந்தைகள் முன்பு உடை மாற்றுவது. குழந்தைதானே அவர்களுக்கு என்ன புரியப்போகிறது என்ற எண்ணம் ஒரு பக்கம். சிறு வயதிலேயே பெண்ணுடல் பற்றித் தெரிந்துகொண்டால், அவர்களின் எண்ணத்தில் வித்தியாசம் தெரியாது என்று நினைக்கிற அம்மாக்கள் இருக்கிறார்கள்.
இது குறித்து மனநல மருத்துவர் மீனாட்சி கூறுகையில், ‘‘பச்சிளம் குழந்தையாக இருந்தாலும் ஆண், பெண் இருவருமே, அவர்கள் முன்பு டிரஸ் செய்வதைத் தவிர்க்க வேண்டும். குழந்தைக்கு ஒரு வயது ஆகும் போதே அனைத்து விஷயங்களும் தெரியும். ஒரு வயதில் இருந்தே குழந்தையின் முன்பு டிரஸ் செய்வதை கட்டாயம்  தவிர்க்க வேண்டும். வெளிநாடுகளின் கலாச்சாரம் வேறு., எனவே அங்கு வளரும் குழந்தைகளுக்கு உடை என்பது பெரிய விஷயமாக ஈர்ப்பதில்லை. ஆனால் நம் நாட்டு குழந்தைகள் அப்படி வளர்க்கப்படவில்லை. சமூகமும் அதுபோன்று மாறவில்லை எனும்போது நாம்தான் குழந்தைகள் முன்பு ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டும். உடை மாற்றும்போது நம்மை பார்க்கும் குழந்தைகளின் மனதில் அதிர்ச்சி ஏற்படும். அவற்றை அவர்களால் காட்டத் தெரியாது. அவை அப்படியே தொடரும்போது பாலியல் குழப்பத்துக்கு ஆளாவார்கள்.
குழந்தைகள் தன்னைச் சுற்றி நடக்கும் சூழலில் இருந்தே பெரும்பாலான விஷயங்களைக் கற்றுக் கொள்கிறார்கள். குழந்தைகளுக்கு நாம் கற்றுத்தரும் விஷயங்களின் ரோல்மாடலாக பெற்றோரே உள்ளனர். இதை ஒவ்வொரு பெற்றோரும் மனதில் கொள்ள வேண்டும். குளிப்பது, உடுத்துவது என்று பெற்றோரின் தனிமையை குழந்தைகளுக்கு மிகச்சிறு வயதில் இருந்தே புரிய வைக்க வேண்டும். 
வீட்டில் இருக்கும் போது ரிலாக்ஸ்டாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பெற்றோரான ஆண், பெண் இருவருமே குழந்தைகள் முன் முகம் சுழிக்கும் படியாக உடுத்தக் கூடாது. எந்த சூழலிலும் கண்ணியமாக உடுத்த வேண்டும். மற்றவர்கள் மனதில் உறுத்தலை ஏற்படுத்தும் படி உடுத்துவது குழந்தைகளுக்கு ஒரு தவறான முன்னுதாரணமாகவே அமையும். 
நல்ல விஷயங்களை உங்களது குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பதற்கான முன்னுதாரணமாக மாற நீங்கள் செய்ய வேண்டியது இவை தான்...
* உங்கள் குழந்தைக்கான இடங்களில் நீங்கள் அவர்களுக்கான நன்மதிப்பையும் கூட்ட கடமைப்பட்டவர்கள். குழந்தையின் பள்ளி நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போது கண்ணியமாக உடுத்துங்கள். இதுவே உங்களைப் பற்றியும், உங்களது குழந்தை பற்றிய எண்ணங்களையும், மற்ற குழந்தைகள் மனதில் பதிக்க காரணமாக அமையும். 
* எவ்வளவு கோபமான சூழலிலும் உங்கள் குழந்தைகள் முன்பு கெட்ட வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம்.  பிறகு, அவர்களுக்கும் வழக்கமாக மாறிவிடும். 
* வீட்டில் கணவன், மனைவிக்குள் பிரச்னை இருந்தாலும் ஒருவரைப் பற்றி இன்னொருவர் குழந்தைகளிடம்  மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி பேசுவதைத் தவிர்க்கவும்.  இது பெற்றோர் மீது குழந்தைகளின் மதிப்பீட்டை குறைக்கும். 
* மார்டன் என்ற பெயரில் குழந்தைக்கு டைட்டாகவும், மற்றவர்கள் முகம் சுழிக்கும் படியும் உடை உடுத்திவிடும் பழக்கத்தை கை விடவும். குழந்தைகள் கம்ஃபோர்டாக பீல் பண்ணும்படி டிரஸ் செய்வதே என்றும் நல்லது. 
* உங்கள் குழந்தை கண்ணாடி போன்ற பொருட்களை எடுக்கும் போது, உடனே உடைத்து விடாதே என்று சத்தம் போட வேண்டாமே. அவர்களுக்கும் அது தெரியும் என்பதை முதலில் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். 
* உங்கள் குழந்தையிடம் எந்த சூழலிலும் ‘நீ உருப்படவே மாட்ட’ என்ற வார்த்தையை பயன்படுத்தாதீர்கள். அது அவர்களது ஆளுமையையும், நம்பிக்கையையும் சிதைக்கும் வார்த்தை. குறைகளை மிகைப்படுத்தாமல் பாசிட்டிவாகப் பேசுங்கள். 
* வீட்டில் உங்களது குழந்தைக்கு என்று தேவையான விஷயங்கள் இருக்கட்டும். அப்படி இல்லாவிட்டால் அவர்களுக்கு திருடும் எண்ணம் ஏற்படும். 
* வீட்டில் உள்ள வேலைக்கார்களை நாம் மரியாதையாக நடத்த வேண்டும். நம்மையே நம் குழந்தைகள் பின்பற்றுகின்றனர். அவர்களிடம் அளவுக்கு அதிகமாக நெருக்கம் பாராட்டுவதையும் தவிர்க்கலாம். இது பின்வரும் ஆபத்துகளைத் தடுக்க உதவும். 
* உங்கள் குழந்தை வெளியில் செல்லும் போது, உங்களிடம் அனுமதி பெற்றுச் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். 
* வீட்டில் மூடிய அறைகளுக்குள் நுழையும் போது அனுமதி பெறும் பழக்கம் அவசியம். நீங்களும் பழகிக் கொள்ளலாம். 
* புதிய சூழலையும், புதிய மனிதர்களையும் பணிவோடு அணுகும் பக்குவத்தை உங்களது குழந்தைகளிடம் ஏற்படுத்துங்கள். 
இது போல் எந்தெந்த விஷயத்தில் உங்கள் குழந்தை பெட்டராக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவீர்களோ அதிலெல்லாம் உங்களை நெறிப்படுத்துங்கள் பெற்றோரே! 

Thursday, March 2, 2017

Posted Date : 19:19 (17/02/2015) Last updated : 19:25 (17/02/2015) வாதக்கோளாறுகளை விரட்ட... முடக்கத்தான் சாப்பிடுங்க!


வாதக்கோளாறுகளை விரட்ட... முடக்கத்தான் சாப்பிடுங்க!

முடக்கத்தான் என்று அழைக்கப்படும் முடக்கற்றான் மூலிகையை, மொடக்கத்தான் என்றும் சொல்வார்கள். கிராமங்களில் மட்டுமல்லாமல், நகர்ப்புறங்களிலும் தோட்டம் மற்றும் வேலியோரங்களில் தானாகவே வளரக்கூடிய இந்த முடக்கத்தான், கொடி வகையைச் சேர்ந்தது. நகரத்தில் கீரை விற்பவர்களிடம் இந்த முடக்கத்தான் கீரை கிடைக்கும். 

மூட்டுகளை முடக்கி வைக்கும் முடக்கு வாத நோயை விரட்டுவதால், இது முடக்கற்றான் (முடக்கு அறுத்தான்) என்ற பெயரைக் கொண்டிருக்கிறது. பொதுவாக, வாதம், முடக்குவாதம், வாயுத்தொல்லை போன்றவற்றுக்கு இந்த முடக்கத்தான் நல்ல நிவாரணம் தரக்கூடியது.
ஒரு பிடி முடக்கத்தான் இலையை 1 லிட்டர் தண்ணீரில் போட்டு, கால் பங்காக சுண்டக்காய்ச்சி வடிகட்டி, ஒருவேளைக்கு 25 மில்லி வீதம் காலையும், மாலையும் சாப்பிட்டு வந்தால் வாதம், வாயுத்தொல்லை விலகும். பிரச்னையைப் பொறுத்து சில நாட்கள் இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வரலாம். இப்படிச் சாப்பிடும்போது சிலருக்கு சில நேரங்களில் தாராளமாக மலம் போகலாம். பயப்படத் தேவையில்லை. அதிகமானால் எலுமிச்சை சாறு குடிக்கலாம்; மலம் போவது நின்றுவிடும். இதேபோல் கை, கால் மற்றும் முகம் போன்ற பகுதிகளில் வரக்கூடிய வாதக்கோளாறுகளுக்கு முடக்கத்தான் இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி பொறுக்கும் சூட்டில் ஒத்தடம் கொடுத்து வந்தால் நாளடைவில் குணம் கிடைக்கும்.

மேற்சொன்ன பிரச்னை உள்ளவர்கள் காலை உணவான தோசையுடன் இந்த முடக்கத்தானை சேர்த்துக்கொள்ளலாம். அதாவது தோசை மாவுடன், அரைத்து வைத்த முடக்கத்தான் கீரையை கலந்து தோசை வார்த்துச் சாப்பிடுவதால் குணம் கிடைக்கும். இதை அவ்வப்போது செய்து வரலாம். வாதம், வாயுத்தொல்லை உள்ளவர்கள்தான் என்றில்லாமல் எல்லோருமே இந்த முடக்கத்தான் தோசையைச் சாப்பிடலாம். காரக்குழம்பு, சாம்பார், ரசம், சூப் என பலவிதங்களிலும் முடக்கத்தான் கீரையைச் சமைத்து உண்ணலாம்.

இன்றைய அவசர உலகில் ஏதேதோ உணவுகளை உண்பதால் மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் ஏராளமாக உள்ளனர். இதற்காக என்னென்னவோ சிகிச்சை எடுத்தும் நிவாரணம் கிடைக்காத நிலையில், பக்கவிளைவுகளே ஏற்படுகின்றன. அவர்கள் முடக்கத்தான் ரசம் வைத்து அருந்துவதால், தாராளமாக மலம் போகும். ஒரு கைப்பிடி முடக்கத்தான் கீரையுடன், கால் ஸ்பூன் மிளகு, அரை ஸ்பூன் சீரகம், தக்காளி ஒன்று, வெள்ளைப்பூண்டு 5 பல் சேர்த்து கொதிக்க வைத்து உப்பு சேர்த்து பொறுக்கும் சூட்டில் அருந்தினால், மலச்சிக்கலுக்கு நிவாரணம் கிடைக்கும். குறிப்பாக, இரவு வேளையில் இதை செய்தால் காலையில் தாராளமாக மலம் போகும்.

மலச்சிக்கல் நீங்க சில வழிகள்


                                      
காலையில் எழுந்ததும், கையில் செய்தித்தாளும் சுடச்சுட காபியுமாக அமர்ந்து, அன்றைய நாளைத் தொடங்கும் மக்களில் பெரும்பாலோர் சந்திக்கும் முக்கியப் பிரச்னை - மலச்சிக்கல். பரபரப்பான காலை வேளைகளில் மலம் கழிக்கப் பத்து நிமிடங்களுக்கு மேல் நேரம் எடுத்துக்கொள்ள யாரும் விரும்புவதில்லை. இதனால் முழுதாக மலம் கழிக்காமல், அவசர அவசரமாக முடித்து, குளித்துச் சாப்பிட்டு, அலுவலகம் சென்றுவிடுகின்றனர். டீ, காபி குடித்த பின்னர்,  மதிய உணவு உண்ட பின்னர் என அன்றைய நாள் முழுவதும் அவர்களுக்கு  மலம் கழிக்கும் உணர்வு இருந்து கொண்டே இருக்கும்.  இதனால் வேலையில் முழுக் கவனம் செலுத்த முடியாமல் பல தவறுகள் செய்ய நேரிடும். வேலையில் தவறுகள் செய்வது ஒருபுறம் இருக்கட்டும்... மலம் கழிக்காமல் கட்டுப்படுத்துவதால் மலச்சிக்கல் போன்ற உபாதைகள் ஏற்பட்டு, உடல் நலனும் கெடும். 
மலச்சிக்கல் நீங்க சில வழிகள்...
மாறிவிட்ட வாழ்க்கைமுறை, தவறான உணவு பழக்கம் காரணமாக மலச்சிக்கல் என்பது இன்றைக்கு பெரும்பாலானோர் சந்திக்கும் முக்கியப் பிரச்னையாக மாறிவிட்டது. சமீபத்தில் குளோபல் மார்க்கெட்டிங் ரிசர்ச் ஏஜென்சி நடத்திய ஆய்வில், இந்தியாவில் நகர்ப்புறங்களில் வாழ்பவர்களில் 14 சதவிகிதம் பேருக்கு நீண்டகால மலச்சிக்கல் பிரச்னை உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் வேலையில் முழுக் கவனம் செலுத்த முடியாமை, மூட் ஸ்விங், அசௌகரியமான நிலை என அவதிப்படுவதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.  
வழக்கத்துக்கு மாறாக மலம் வெளியேறாமல் இருப்பது, மலம் இறுகிப்போவது, மலம் கழிப்பதில் சிக்கல், மலம் முழுவதுமாகப் போகவில்லை என்கிற உணர்வு, மலம் கொஞ்சம்கூடப் போகாமல் ஆசனவாயை அடைத்துக்கொள்வது போன்ற நிலைமைகளை ‘மலச்சிக்கல்’ என்று அழைக்கிறோம்.

மலச்சிக்கல் ஏன்?
நார்ச்சத்து மிகுந்த உணவை தவிர்ப்பது, அதிக ப்ராசஸ் செய்யப்பட்ட மைதா போன்ற உணவுப் பொருட்களை உட்கொள்வது, பீட்சா, பர்கர் போன்ற மேற்கத்திய உணவுகளை சாப்பிடுவது, ஆல்கஹால், புகை பழக்கம், சரியான நேரத்துக்கு உணவு உட்கொள்ளாமை, உடல்பருமன் போன்ற பல்வேறு காரணங்களால் மலச்சிக்கல் பிரச்னை ஏற்படுகிறது.
வயது ஏற ஏற, செரிமான மண்டலத்தின் செயல்திறன் குறையும். முதுமையில் உணவுமுறை மாறுவது, உடற்பயிற்சி குறைவது, தேவையான அளவுக்குத் தண்ணீர் குடிக்காதது ஆகியவை மலச்சிக்கலுக்கு காரணமாகிவிடும். மூட்டுவலி, இடுப்புவலி உள்ள முதியவர்கள் அடிக்கடி மலம் கழிப்பதைத் தவிர்ப்பதால் அவர்களுக்கு மலச்சிக்கல் வருகிறது.
பெண்கள் கர்ப்ப காலத்தில் மசக்கை காரணமாக அதிகம் தண்ணீர் குடிக்க மாட்டார்கள். இதனாலும், கருவில் வளரும் குழந்தை தாயின் குடலை அழுத்துவது, ஹார்மோன் மாற்றம், ஆசனவாய் சுருங்குதல் ஆகிய காரணங்களாலும் தற்காலிகமாக மலச்சிக்கல் உண்டாகலாம்.
காய்ச்சல், வாந்தி, பசிக் குறைவு போன்ற பொதுவான பிரச்னைகள் ஏற்படும்போதும், வெயிலில் அதிகம் அலையும்போதும் உடலில் நீர்ச்சத்து குறைந்துவிடும். மூலநோய், மூளைத் தண்டுவட நோய்கள், மன அழுத்தம், தூக்கமின்மை ஆகிய பாதிப்புகள் இருக்கும்போது மலச்சிக்கல் ஏற்படும்.
குழந்தைகளுக்குத் தாய்ப்பாலை நிறுத்திவிட்டு செயற்கைப் புட்டிப்பால் தரத்தொடங்கும்போது, மலச்சிக்கல் ஏற்படலாம். கழிப்பறையை எப்படிப் பயன்படுத்துவது என்று தெரியாத குழந்தைகளுக்கு ஆரம்பத்தில் மலச்சிக்கல் வரலாம்.
வயதுக்குத் தேவையான உடற்பயிற்சி இல்லாதது, முதுமையின் காரணமாகவோ, நோயின் காரணமாகவோ படுக்கையில் நீண்ட காலம் படுத்தே இருப்பது போன்றவையும் மலச்சிக்கலுக்குக் காரணங்களாக அமைவதுண்டு.
தீர்வு என்ன?
மலம் கழிப்பதில் சிரமம் என்பதற்காக, மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும் மாத்திரைகளைச் சாப்பிடுவது சரியல்ல. இந்த செயல், பெருங்குடலில் உள்ள உணர்வு நரம்புகளை பாதிக்கும். பிறகு, சாதாரணமாக மலம் கழிப்பதும் சிரமமாகிவிடும். ‘எனிமா’ தர வேண்டிய அவசியம் ஏற்படும். அடிக்கடி `எனிமா’ தருவதும் நல்லதல்ல.
ஆரோக்கியமாக உள்ள ஒருவர் சரியான உணவு முறையைப் பின்பற்றி, தேவையான அளவுக்குத் தண்ணீர் குடித்து, தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். மலம் கழிக்க வேண்டும் என்கிற உணர்வு வந்ததுமே மலம் கழித்துவிடுகிற பழக்கத்தைப் பின்பற்றினாலே போதும்; தினமும் குறிப்பிட்ட நேரத்தில் மலம் கழிப்பது வழக்கமாகிவிடும்.
நாம் சாப்பிடும் உணவு வகைகளில் நார்ச்சத்து நிறைந்த பழுப்பு அல்லது சிவப்பு அரிசி, கோதுமை, கேழ்வரகு, தினை, வரகு, கொள்ளு போன்ற முழு மற்றும் சிறுதானியங்கள் மலச்சிக்கலை தவிர்க்க உதவும்.  
பச்சை நிற காய்கறிகள், வாழைத்தண்டு, பொட்டுக்கடலை, கொண்டைக்கடலை, மொச்சை போன்ற பருப்புகள், கீரைகள், ஆரஞ்சு, கொய்யா, மாதுளை, ஆப்பிள், அத்திப்பழம், பேரீச்சை, மாம்பழம் போன்ற பழங்களில் நார்ச்சத்து அதிகம். இவற்றை தினசரி உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
தினமும் இரண்டரை முதல் மூன்று லிட்டருக்குக் குறையாமல் தண்ணீர் குடிக்க வேண்டும். காலை எழுந்ததும் வெதுவெதுப்பான நீர் அருந்தலாம்.
காபி, தேநீர், மென்பானங்கள் குடிப்பதை தவிர்த்து, இளநீர், பழச்சாறுகளை அதிகம் அருந்த வேண்டும். இனிப்பு வகைகளையும் கொழுப்பு உணவுகளையும் குறைத்துக்கொள்ள வேண்டும். விரைவு உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். இரவில் இரண்டு வாழை பழங்களைச் சாப்பிட வேண்டும்.
தினமும் நடைப்பயிற்சி செய்ய வேண்டியது மிக அவசியம். இயலாதவர்கள் வீட்டிலேயே செய்யக்கூடிய உடற்பயிற்சிகளைச் செய்யலாம்.  
மலம் கழிப்பதற்கென போதுமான நேரத்தை ஒதுக்க வேண்டியது மிகவும் முக்கியம்.
சில மருந்துகளை எடுத்துக்கொள்வதன் மூலமும் மலச்சிக்கல் ஏற்படலாம். உதாரணத்துக்கு இரும்புச்சத்து மாத்திரை எடுத்துக்கொண்டால் மலச்சிக்கல் ஏற்படும். இந்த சூழலில் மருத்துவரிடம் பேசி, மலச்சிக்கலை தவிர்ப்பதற்கான வழிமுறைகளைக் கேட்டறிந்து பின்பற்ற வேண்டும்.

இந்தியன் டாய்லெட்... வெஸ்டர்ன் டாய்லெட்... எது பெஸ்ட்? thanks to vikatan.com

இந்தியன் டாய்லெட்... வெஸ்டர்ன் டாய்லெட்... எது பெஸ்ட்?

கடனில்லா வாழ்க்கை ஆனந்தம். அதிலும் ஒவ்வொருவரும் தீர்த்தே ஆகவேண்டிய முக்கியக் கடன் காலைக் கடன்! காலை நேரத்தில், வயற்காட்டுப் பக்கமும், ஆற்றங்கரைப் பக்கமும் ஒதுங்கவேண்டிய பிரச்னை இன்றைக்குப் பெரும்பாலும் இல்லை. பல வீடுகளில் கழிப்பறை வசதி வந்துவிட்டது. இருந்தாலும், இயல்பாகவே பலருக்கும் இருக்கிற அந்நிய மோகம், கழிப்பறையையும் விட்டுவைக்கவில்லை. `எங்க வீட்ல வெஸ்டர்ன் டாய்லெட்’ என்று பெருமை பொங்கச் சொல்பவர்களும் உண்டு. ரயில்கள், சினிமா தியேட்டர்கள், மால்கள் என எல்லாப் பொது இடங்களிலும் வெஸ்டர்ன் டாய்லெட் வந்துவிட்டது. சொல்லப்போனால், அதிக அளவில் பயன்படுத்தப்படுவது இந்தக் கழிவறைகளே! மேற்கத்திய பாணி கழிவறையை உபயோகப்படுத்துவது எந்த அளவுக்கு ஆரோக்கியமானது என்பது ஒருபுறம் இருக்கட்டும்... `மனிதர்களின் இயல்பான குத்தவைத்து அமரும் நிலையில் (Squatting Method) மலம் கழிப்பதே சிறந்தது’ என்கிறார்கள் மருத்துவர்கள். ஏன்?  
டாய்லெட்
கால்மூட்டுகள் வளைந்து, பிட்டம் பாதத்துக்கு அருகில் இருக்கிற மாதிரி வைத்துக்கொண்டு, மேல் உடம்பை வளைத்து, குந்தியிருக்கும் நிலைதான் (Squatting Position) ஓர் இயற்கையான காலைக் கடன் கழிக்கும் முறை. மனிதன் பூமிக்கு வந்த நாளில் இருந்து அன்றாடக் கடனைத் தீர்க்கும் முறை இப்படித்தான். கருவில் இருக்கும்போதே குழந்தை இந்த நிலையில்தான் இருக்கும். மனிதனின் நாகரிகம் வளர்ந்து, தனக்கென வீடு, உடை, உணவுக்கு வேளாண்மை, தனிமனித-சமூக ஒழுக்கங்கள் எல்லாம் மேம்பட்ட நிலையிலும் குந்தவைத்து அமர்ந்துதான் காலைக் கடனைக் கழித்தான். இந்த நிலையில் அமர்வதால், மனிதர்களுக்குக் கிடைக்கும் அரிய நன்மைகள் குடல் நோய்கள், மலச்சிக்கல், இடுப்புத் தசை நோய்கள் வருவதைத் தவிர்க்கலாம் என்பதே!
ஆயுர்வேதத்தில் இப்படி அமரும் நிலையை `மலாசனம்’ என்று குறிப்பிடுகிறார்கள். இப்படி அமர்ந்தால், மலம் வெளியேறுவது எளிதாக நடைபெறும். மலாசனத்தில் குந்தவைத்து அமர்வதன் மூலம், இடுப்பு மூட்டுகள் ஆரோக்கியமாகும். மலாசனத்தின்போது கொடுக்கப்படும் அழுத்தத்தினால், தசைகள் வலிமையடையும். மூலநோய் வராமல் தவிர்ப்பதும் சாத்தியம்.
வெஸ்டர்ன் டாய்லட்
இனி, மேற்கத்திய பாணி டாய்லெட்டுக்கு வருவோம்... இது கண்டுபிடிக்கப்பட்டது 16-ம் நூற்றாண்டில்! ஆரம்பத்தில் அதற்கான மாதிரி வடிவமே கொஞ்சம் வேடிக்கையானது. ஒரு சிம்மாசனத்தில் ஒரு பெண்ணோ, ஆணோ அமர்ந்திருப்பதுபோல வடிவமைத்திருந்தார்கள். ஆனால், விற்பனையில் சோபிக்கவில்லை. ராயல்டி... அதனால் அதிக விலை என்று மக்கள் வெஸ்டர்ன் டாய்லெட் பக்கம் போகாமல் கொஞ்சம் தள்ளியே நின்றார்கள். ஆனால், அடுத்த சில நூற்றாண்டுகளிலேயே மெள்ள மெள்ள ஐரோப்பா, அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்குள் ஆழமாக ஊடுருவிட்டது இந்த பாணி. புழக்கத்துக்கு வந்த பிறகு, 19-ம் நூற்றாண்டில் மேற்கத்திய மக்களுக்கு இது வழக்கமான ஒன்றாகவே ஆகிவிட்டது. இன்றைக்கு இந்தியா, பாகிஸ்தான், சீனா, கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளிலும் இந்த பாணி கழிப்பறைகளின் பயன்பாடு அதிகமாகிவிட்டது. 
சில பத்து வருடங்களாக மேற்கத்திய நாடுகளில் குடல் சம்பந்தமான அப்பெண்டிசைட்டிஸ், மலச்சிக்கல், மூலநோய், இர்ரிட்டபுள் பவுல் சிண்ட்ரோம் போன்ற நோய்கள் பரவலானதற்கு காரணங்கள், அவர்களின் உணவு மற்றும் வாழ்வியல் முறைகள். இதைத் தொடர்ந்து ஆய்வு செய்த விஞ்ஞானிகளும் மருத்துவர்களும் இந்த நோய்களுக்கு முக்கியக் காரணமாக ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்... அது, வெஸ்டர்ன் டாய்லெட். அதாவது, மேற்கத்திய பாணி கழிவறையில் உட்கார்ந்து மலம் கழிப்பது, மனித உடல் அமைப்புக்கு எதிரானது என்கிறார்கள். அதனாலேயே இதைத் தவிர்க்கச் சொல்லி வலியுறுத்தவும் செய்கிறார்கள். இதற்கு மாற்றாக இருப்பது, நம் பழைய பாணி குந்தவைத்து காலைக்கடன் கழிக்கும் முறையே! 
இந்தியன் டாய்லட்
இந்திய பாணி டாய்லெட் நல்லது... ஏன்? 
மனிதர்களால் மலத்தை அடக்க முடியுமா? ஆசனவாயில் உள்ள சுருக்கத்தை தம்கட்டி லேசாக இழுத்துப் பிடிப்பதன் மூலம் சிறிது நேரம் அடக்கலாம். நீண்ட நேரத்துக்கு இப்படி அடக்க முடியாது. அதாவது, ஆசனவாய் தசையால், இதைத் தன்னிச்சையாக கட்டுப்படுத்த முடியாது. நமது உடலிலிருந்து வெளியேறும் மலக்கழிவுகளின் நிலை, மலக்குடலுக்கும் ஆசனவாய்க்கும் இடையே உள்ள வளைவைச் சார்ந்து இருக்கிறது. நாம் நின்றுகொண்டிருக்கும்போது, 90 டிகிரியில் இருக்கும் `அனோரெக்டல் கோணம்’ (Anorectal Angle) எனப்படும் இந்த வளைவின் விரிவு மலக்குடலுக்கு மேல்நோக்கி அழுத்தம் கொடுத்து, மலம் வெளியேறாமல் வைத்திருக்கும். ஸ்குவாட்டிங் பொசிஷனில் அமரும்போது, இந்த வளைவு சீராகும்.  

தோட்டக்குழாயிலிருந்து தண்ணீர் வெளியேறும்போது குழாயில் இருக்கிற முறுக்குத் தன்மை எப்படி வளைவில்லாமல் நேர்த்தன்மைக்கு வருகிறதோ, அதேபோன்று குந்தவைக்கும் நிலையில், நம் மலக்குடலின் வளைவு நேராகி மல வெளியேற்றம் எளிதாகிறது. ஆக வெஸ்டர்ன் டாய்லெட் வேலைக்காகாது. நம் இந்திய பாணி கழிவறைகளே காலைக்கடன் கழிக்கச் சிறந்தவை. 

கர்ப்ப காலங்களிலும், அதிக உடல் பருமனாலும் மூல நோய் வரலாம். அடிவயிற்றில் கொடுக்கப்படும் அழுத்தத்தால், மலக்குடல் பாதிக்கப்பட்டு, மலக்குடல் வழியாக ரத்தம் கசியும் வாய்ப்பும் உண்டு. அதனால், குந்தவைத்து அமரும் நிலையில் மலம் கழிக்கிறபோது, வயிற்றுப் பகுதியில் அழுத்தம் குறையும். அதோடு, மலம் கழிப்பதும் எளிதாக இருக்கும். 
`எங்களுக்கு வேறு வழியில்லை... வெஸ்டர்ன் டாய்லெட் வசதிதான் இருக்கிறது’ என்கிறவர்கள் ஒன்று செய்யலாம்... கால்களுக்குக் கீழே முக்காலிருந்து ஓர் அடி உயர ஸ்டூலைப் போட்டு, அதில் கால்களை வைத்துக்கொண்டு மலம் கழிக்கலாம். பிரச்னை இல்லாமல் இருக்கும்.