Friday, April 7, 2017


அதிதி தேவோ பவ; உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே! (POST NO.3796)

by Tamil and Vedas
Written by London swaminathan

Date: 7 APRIL 2017

Time uploaded in London:- 14-55

Post No. 3796

Pictures are taken from various sources; thanks.

contact; swami_48@yahoo.com


விருந்தோம்பல் என்னும் பண்பை தமிழ், சம்ஸ்கிருத இலக்கியம் வலியுறுத்துவது போல உலகில் வேறு எங்கும் காணமுடியாது.
காளிதாசனும், சங்க இலக்கியப் புலவர்களும் இந்தப் பண்பை எப்படி வலியுறுத்துகின்றனர் என்று ஒரு சில எடுத்துக்காட்டுகளின் மூலம் காண்போம்.

ஆரிய-திரவிடப் பிரிவினைகள் பொய்மையானவை என்பதும்  இந்திய கலாசாரம் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே ஒரே கலாசாரம்தான் என்பதும் இந்த ஒரு பண்பில் -- விருந்தோம்பல் -- என்னும் பண்பில் தெரிந்துவிட்டது. விருந்தினர்களைக் கவனிக்க முடியாத நிலை வந்துவிட்டதே என்று சீதையும் கண்ணகியும் வருத்தப்பட்டதை நமது இலக்கியங்கள் அடிக்கோடிட்டுக் காட்டியதிலிருந்தே நமது பண்பாடு ஒன்று என்பது விளங்கும். அதுமட்டுமல்ல தைத்ரீய உபநிஷத் (1-20) காலத்திலிருந்து இதற்காக பல மந்திரங்களும் பாடல்களும் இருப்பது போல உலகில் வேறு எந்த இலக்கியத்திலும் காணமுடியாது. வள்ளுவர் எழுதிய திருக்குறள் போன்ற நீதி நூல்களில் இதற்கென்று ஒரு அத்தியாயத்தையே ஒதுக்கியதிலிருந்தும் இது விளங்கும்.

அதிதி தேவோ பவ- விருந்தினரைக் கடவுளாகக் கருதுக - தைத்ரீய உபநிஷத் (1-20)
காளிதாசரின் ரகுவம்சத்தில்

“காட்டில் விளையும், ஆரோக்கியத்தைத் தரும் ‘செந்தினை’ எனும் தானியத்தில் ஒரு பகுதி விருந்தினர்களுக்காக ஒதுக்கப்படுகிறதா? அவைகளை மாடுகள் முதலியன மேய்ந்து சேதமாக்காமல் இருக்கின்றனவா? “(ரகுவம்சம் 5-9)

“கருணையுள்ள உமது குரு, உங்களை இல்லற வாழ்வுக்குச் செல்ல அனுமதித்தாரா? ஏனெனில் எல்லா ஆசிரமத்திலுள்ளவர்களுக்கும் உதவுவது இல்லற தர்மம்தான்” (ரகு.5-10)

नीवारपाकादि कडंगरीयैरामृश्यते जानपदैर्न कच्चित्|
कालोपपन्नातिथिकल्प्यभागं वन्यं शरीरस्थितिसाधनं वः॥ ५-९
nīvārapākādi kaḍaṁgarīyairāmṛśyate jānapadairna kaccit
kālopapannātithikalpyabhāgaṁ vanyaṁ śarīrasthitisādhanaṁ vaḥ || 5-9


अपि प्रसन्नेन महर्षिणा त्वं सम्यग्विनीयानुमतो गृहाय|
कालो ह्ययं संक्रमितुं द्वितीयं सर्वोपकारक्षममाश्रमं ते॥ ५-१०
api prasannena maharṣiṇā tvaṁ samyagvinīyānumato gṛhāya
kālo hyayaṁ saṁkramituṁ dvitīyaṁ sarvopakārakṣamamāśramaṁ te || 5-10

இதே கருத்து திருக்குறளிலும் உள்ளது:---
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை
பொருள்: இல்லறம் நடத்துபவன் மற்ற மூவர்க்கும் ( பிரம்மச்சாரி, வானப்ரஸ்தன், சந்யாசி) ஒரு துணையாவான்.

இன்னொரு இடத்தில், “ரகுவம்சத்தில் பிறந்தவர்கள் உயிரையே கேட்டாலும் கொடுப்பார்கள். ஆகவே விஸ்வாமித்ரர் கேட்டபடி ராமரையும் லெட்சுமணரையும் அவருடன் அனுப்பிவைத் தார் தசரதர்”(11-2) காளிதாசன் சொல்கிறான்.

இந்தக் கருத்து புறநானூற்றிலும் வருவது குறிப்பிடத்தக்கது:-

......... இந்திரர்
அமிழ்தம் இயைவது ஆயினும், இனிது எனத்
தமியர் உண்டலும் இலரே; முனிவு இலர்;
துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சி,
புகழ் எனின் ,உயிரும் கொடுக்குவர்பழி எனின்,
உலகுடன் பெறினும்கொள்ளலர்
--புறம் 182, க.மா.இளம்பெருவழுதி

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல் பற்றி வரும் இடங்கள் கணக்கிலடங்கா; இதோ ஒரு சில எடுத்துக் காட்டுகள்;-
புறம்.173-ல் சிறுகுடி கிழான் பண்ணனை 'பசிப்பிணி மருத்துவன்' என்று சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் பாராட்டுகிறான்.
புறம்.18-ல் பாண்டியன் நெடுஞ்செழியனை குடபுலவியனார் பாரரட்டுகையில் உண்டிகொடுத்தோர் உயிர்கொடுத்தோரே; என்ற வரியைப் பாடுகிறார்; இதே வரி பின்னர் மணிமேகலையிலும் வருகிறது.
கோவூர்க்கிழார் பாடிய பாடலில் (புறம்.46), விருந் தின் சிறப்பு தி காட்டப்படுகிறது. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்- தமிழரின் பண்பாடு என்பது கோவூர்க் கிழார் கருத்து; இது குறளிலும் வரும் (322).

புறம்.141 (பரணர்), புறம்134 (முடமோசி)-ல் மறுமைப் பயனை மனதிற் கொள்ளாமல்,மக்களின் வறுமையைத் தீர்க்கவே ஈத்துவப்பர் என்று கூறப்படுகிறது.

அகம்.203, புறம்.177 முதலிய பாடல்களில் வந்த விருந்தினரை உபசரித்துவிட்டு, அடுத்தவர்க்காக காத்திருக்கும் செய்தி வருகிறது!
மணிமேகலையில் சீழ்தலைச் சாத்த்னார் சொல்லுவது:

ஆற்றுனர்க்கு அளிப்போர் அறவிலை பகர்வோர்

ஆற்றா மாக்கள் அரும் பசி களைவோர்

மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை

மண்தினி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே (மணி.11-92)

xxxx
FROM MY OLD POST:--

கிருஷ்ணர் வணங்கும் ஆறு பேர்:--

நித்யான்ன தாதா தருணாக்னிஹோத்ரி

வேதாந்தவித் சந்திர சஹஸ்ர தர்சீ

மாஸோபாவாசீச பதிவ்ரதா ச

ஷட் வந்தனீயா மம ஜீவ லோகே

பொருள்: இந்த மனிதர்கள் வாழும் பூமியில் நான் ஆறு வகையான மக்களை வணங்குகிறேன்: தினமும் அன்னதானம் செய்வோர், தினமும் அக்னிஹோத்ரம் செய்வோர், வேதம் அறிந்தவர்கள், சஹஸ்ர சந்திர தரிசனம் செய்து—சதாபிஷேகம் செய்துகொண்டோர் – மாதா மாதம் உபவாசம் இருப்போர், பதிவ்ரதையான பெண்கள்.

Posted Date : 20:28 (09/01/2017)Last updated : 20:27 (09/01/2017) இரவில் சாப்பிடும் திரிபலா பொடி ஒவ்வொரு காலையையும் மலர்ச்சியாக்கும் அதிசயம்!

இரவில் சாப்பிடும் திரிபலா பொடி ஒவ்வொரு காலையையும் மலர்ச்சியாக்கும் அதிசயம்! #NightDrink


திரிபலா பொடி
`உழைத்தால் உயரலாம்!’ உண்மையா? நூற்றுக்கு நூறு உண்மை... ஒரு காலத்தில்! இன்றைக்கு..? `ஹார்டு வொர்க் பண்றதைவிட, ஸ்மார்ட்டா வொர்க் பண்ணுங்க ப்ரோ... டாப்ல போயிடலாம்’ என இளைய தலைமுறையே இறங்கி வந்து அடித்துச் சொல்கிற காலம் இது. ஆக, எதையும் புத்திசாலித்தனமாகச் செய்யவேண்டியது அவசியமாக இருக்கிறது. அதற்கு முதல் தேவை, உடல் ஆரோக்கியம். உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, வாழ்வியல்முறைகளில் ஒழுங்கு, சமச்சீர் உணவு... என ஆரோக்கியம் காக்க நீளமான பட்டியலே உண்டு. மருந்துகள் உட்கொள்வதும் அவற்றில் ஒன்று. உடல் ஆரோக்கியம் பராமரிப்பதற்காக சில இயற்கை மருந்துகளை இரவில் எடுத்துக்கொள்வார்கள். அவற்றில் `திரிபலா பொடி’ இரவில் எடுத்துக்கொள்ளவேண்டிய மருந்து. சரி, திரிபலா பொடியை ஏன், எதற்கு, மருத்துவர் பாலமுருகன்,எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து விளக்குகிறார் ஆயுர்வேத மருத்துவர் பாலமுருகன்.

திரிபலா பொடி

திரிபலா ஒரு பாரம்பர்ய மருந்து. நெல்லிக்காய், கடுக்காய் மற்றும் தான்றிக்காய் ஆகிய மூன்று மூலிகைகள் சேர்ந்த கூட்டுப்பொருள். நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். அனைத்து வயதினரும் சாப்பிடலாம்.

திரிபலா தரும் நன்மைகள்...

திரிபலா பொடியை இரவில் சாப்பிட்டால், நன்மைகள் ஏராளமாகக் கிடைக்கும். அதை மனதில்கொள்ளவும்.

* முதுமையைத் தாமதப்படுத்தி, இளமையைத் தக்கவைக்க உதவுகிறது.

* இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதயநோய்கள் வராமல் தடுக்கிறது. புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடும்.

* உணவுப் பாதை நச்சுப்பொருட்களை நீக்கி, குடல் இயக்கத்தைச் சீராக்குகிறது. செரிமானக் கோளாறுகளைச் சரி செய்கிறது. உடலில் உள்ள நச்சுப்பொருட்களை நீக்கும். சிறந்த மலமிளக்கியாகவும் செயல்படுகிறது.

* வயிற்றில் உள்ள நாடாப்புழுக்களையும், வளைப்புழுக்களையும் (Ring worms) வெளியேற்ற உதவுகிறது. மேலும், வயிற்றில் பூச்சி வளர்தல் மற்றும் தொற்றுக்களைக் கட்டுப்படுத்துகிறது.


* ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச்செய்கிறது. ரத்தசோகையை சரிசெய்கிறது. ரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது.

* கணையத்தில், இன்சுலின் சுரப்பை அதிகரிக்கச் செய்கிறது. உடலில் குளூகோஸின் அளவை சமநிலைப்படுத்த உதவுகிறது. திரிபலாவில் உள்ள கசப்புச் சுவை, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது.

* உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கும். சீரான உடல் எடையைப் பெற உதவும். உடல்பருமனைக் கட்டுப்படுத்தும்.

* ரத்தத்தில் உள்ள நச்சுப்பொருட்களை சுத்திகரிக்கும். ரத்தத்தைச் சுத்தம் செய்யும். தோல் நோய்கள் மற்றும் தொற்று நோய்கள் வராமல் சருமத்தைக் காக்கும். சருமத்தைப் பளபளப்பாக்கும்.


* உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை சீராக்கும். வளர்ச்சிதை மாற்றத்தால் ஏற்படும் தலைவலியைக் குணப்படுத்தும். கண்பார்வைக் கோளாறைச் சரிசெய்யும்.


எப்போது, எப்படிச் சாப்பிட வேண்டும்?

* கடுக்காய் ஒரு பங்கு, நெல்லிக்காய் நான்கு பங்கு, தான்றிக்காய் இரண்டு பங்கு எடுத்துக்கொள்ளவும். அவற்றை நிழலில் நன்றாக உலர்த்தவும். பின்னர், அரைத்துப் பொடியாக்கவும். இதை வீட்டில் தயாரிக்க முடியாதவர், நாட்டு மருந்து கடைகளில் கிடைக்க கூடிய திரிபலா பொடியை வாங்கி பயன்படுத்தலாம்.

* மழைக் காலங்களில் திரிபலாப் பொடியை சுடுதண்ணீரில் கலந்து சாப்பிட வேண்டும். 

* குளிர் காலங்களில் திரிபலாப் பொடியை நெய்யுடன் சேர்த்து சாப்பிட வேண்டும். வாய்ப்புண் மற்றும் வெடிப்பை சரி செய்யும்.

* பனிக்காலங்களில் தேன் மற்றும் திரிபலாப் பொடியை சேர்த்து சாப்பிட வேண்டும்.

* கோடை காலத்தில் திரிபலாப் பொடியை நீருடன் கலந்து சாப்பிட வேண்டும்.

Last updated : 20:18 (08/12/2014) உங்கள் வீட்டில் இருக்கா 15 மூலிகைகள்? thanks to viktan.com

உங்கள் வீட்டில் இருக்கா 15 மூலிகைகள்?

ந்தக் காலங்களில் வீட்டுக்கு வீடு தாத்தா, பாட்டிகள் இருப்பார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கு எந்த நோய் என்றாலும் அதற்கான மூலிகைகளைக் கொண்டு கை வைத்தியம் செய்தே குணப்படுத்திவிடுவார்கள். ஆனால், இன்று அநேக வீடுகளில் தாத்தா பாட்டிகளே இல்லை. பணம், வேலை என்று பிள்ளைகள் நகர வாழ்க்கையைத் தேடிச் சென்று விட்டதால் தாத்தா, பாட்டிகளின் முக்கியத்துவம் இன்றைய குழந்தைகளுக்கு தெரியாமல் போய்விட்டது.

இன்று 60 சதவீத குழந்தைகளுக்கு தாத்தா பாட்டியின் பாசம், அரவணைப்பு கிடைப்பதில்லை. சின்னத் தும்மல், தலைவலி வந்தால் கூட இன்று உடனே டாக்டரிடம் தூக்கிச் சென்று விடுகிறார்கள். ஆனால், அந்தக் காலத்தில் தலைவலி முதல் பிரசவம் வரை வீடுகளிலேயே கை வைத்தியத்தால் பார்த்திருக்கின்றனர். வீட்டில் வளரும் மூலிகைகளைப் பறித்து உரல் அல்லது அம்மியில் வைத்து அரைத்து கசாயம் போட்டு கொடுக்க இன்று பாட்டிமார்கள் இல்லை. கஷாயம் குடிக்க மறுக்கும் பேரனை ஓடிப் போய் பிடித்து மடியில் உட்காரவைக்க தாத்தாக்களும் இல்லை. ஆனாலும், தாத்தா, பாட்டிகள் இல்லாத குறையைப் போக்க மூலிகை இருக்கிறது நம்மிடம். 

வீட்டில் இருக்க வேண்டிய 15 மூலிகைகள், அவற்றின் பயன்பாடுகள் குறித்து நெல்லை மாவட்டம், பாபநாசத்தைச் சேர்ந்த சித்த மருத்துவர் மைக்கேல் ஜெயராசு விளக்குகிறார். “பெரும்பான்மையான வீடுகளில் மூலிகை வளர்ப்பதை விட்டுவிட்டு அழகுக்காக மலர்ச் செடிகளை வளர்த்து வருகின்றனர். ஒரு வீட்டில் 15 மூலிகைகள் எப்போதும் இருக்க வேண்டும். அவை என்னவென்றால் துளசி, தூதுவளை,சோற்றுக்கற்றாழை, மஞ்சள் கரிசாலங்கண்ணி, பொன்னாங்கண்ணி, நேத்திரப்பூண்டு, நிலவேம்பு, பூலாங்கிழங்கு, ஓமவள்ளி, அருகம்புல், பூனை மீசை, ஆடாதொடை, நொச்சி, தழுதாழை, கழற்ச்சி ஆகியவைதான் இந்த மூலிகைகள். இந்த மூலிகைகள் ஒவ்வொன்றையும் எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.
1. துளசி

துளசியுடன் மிளகு, வெற்றிலை மற்றும் வேம்பு பட்டை ஆகியவற்றை சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் காய்ச்சல் குணமாகும். துளசி இலையை புட்டு போல அவித்து, இடித்து, பிளிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் சளி குணமாகும். துளசி இலையை சாதரணமாக மென்றுத் தின்றால் ஜீரண சக்தி அதிகரிப்பதோடு, பசியும் அதிகரிக்கும்.
2. தூதுவளை

தூதுவளையுடன் மிளகு சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் வறட்டு இருமல் குறையும். தூதுவளை பழத்தை வத்தலாக காயவைத்து, வதக்கி சாப்பிட்டால் கண் குறைபாடுகள் நீங்கும். தூதுவளையில் கால்சியம் சத்துக்கள் அதிகமுள்ளதால் எலும்பையும், பற்களையும் பலப்படுத்தும். அதனால் தூதுவளை கீரையுடன் பருப்பு மற்றும் நெய் சேர்த்து சமைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வர வேண்டும். இதன் முள்செடி, தண்டு, இலை, வேர் ஆகியவற்றை நிழலில் 5 நாட்கள் காயவைத்து பொடி செய்து தேன் அல்லது பாலில் கலந்து சாப்பிட ஆஸ்துமா குறையும். காதுமந்தம், நமச்சல், பெருவயிறு மந்தம் ஆகியவற்றிற்கும், மூக்கில் நீர்வடிதல், வாயில் அதிக நீர் சுரப்பு, பல் ஈறுகளில் நீர்சுரத்தல், சூலை நோய் ஆகியவற்றிற்கும் தூதுவளை கீரை சிறந்தது.
3. சோற்றுக்கற்றாழை

இளம் பெண்களுக்கு வரும் எல்லா நோய்களையும் இது குணப்படுத்துவதால் சோற்றுக்கற்றாழைக்கு குமரிகற்றாழை என்று வேறு பெயரும் உண்டு.சோற்றுக்கற்றாழையை வெட்டி பச்சை நிறத்தோலை நீக்கிவிட்டு, 7 முதல் 8 முறை தண்ணீர்விட்டு நன்கு கழுவி சுத்தம் செய்து, அடுப்பில் ஏற்றி 1 கிலோ கற்றாழைக்கு 1 கிலோ கருப்பட்டியைத் தட்டிப்போட்டு கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். கருப்பட்டி தூள் கரைந்து பாகு பதத்திற்கு வந்ததும் அதனுடன் கால் கிலோ தோல் உரிக்கப்பட்ட பூண்டினை போட்டு மீண்டும் கிளற வேண்டும். பூண்டு வெந்த பதத்திற்கு வந்தவுடன் இறக்கிவிட்டு தயிர்கடையும் மத்தினால் கடைய வேண்டும். அல்வா பதத்திற்கு வந்தவுடன் அதை தனியே எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். காலை, மதியம் மற்றும் இரவு ஆகிய மூன்று வேளைகளும் உணவிற்குப்பின் 1 ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு வெள்ளைப்படுதல், நீர்க்கட்டிகள், நீர் எரிச்சல், மாதவிடாய்க் கோளாறுகள்,பெண்மலடு ஆகியவை உடனே சரியாகும். பெண்கள் மட்டுமின்றி, ஆண்களும் சாப்பிட்டால் உடல் சூடு தணிந்து உடல் வலுவாகும்.
4. மஞ்சள் கரிசாலாங்கண்ணி

ஞானத்திற்குரிய மூலிகை இது. இதைக் கீரையாக சாப்பிட்டால் கல்லீரல் வலுப்படும்.
5. பொன்னாங்கண்ணி

வயல்வெளிகளில் கொடுப்பை என்ற பெயரில் விளையும் மூலிகைதான் பொன்னாங்கன்னி கீரை. 'பொன் ஆகும் காண் நீ' என்பதன் சுருக்கமே பொன்னாங்கண்ணி என்பதாகும். இதை கீரையாக சமைத்து உப்பு சேர்க்காமல் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை உரி பெற்று கூர்மையாகும்.
6. நேத்திரப்பூண்டு

இதற்கு நாலிலை குருத்து, அருந்தலைப் பொருத்தி ஆகிய வேறு பெயர்களும் உண்டு. இதன் இலைகளை தேங்காய் எண்ணையில் ஊற வைத்து வெயிலில் 5 நாட்கள் வைத்து வடிகட்டி கண்களில் இரண்டு சொட்டுகள் விட்டு வந்தால் தொடக்கக் கால கண்புரை நோய் தடுக்கப்படும்.
7. நிலவேம்பு

நிலவேம்பிற்கு சிறியாநங்கை என்ற பெயரும் உண்டு. பார்ப்பதற்கு மிளகாய்ச்செடி போன்று இருக்கும். நிலவேம்பு இலைகளை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொண்டு சிறிது மிளகு சேர்த்து சாப்பிட்டால் விஷக்கடிகள் இறங்கும். நிலவேம்பு இலைகளை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து 30 கிராம் பொடியுடன் 1 லிட்டர் தண்ணீர் சேர்த்து அதை கால் லிட்டர் அளவுக்கு வற்ற வைத்து கஷாயமாக குடித்தால் தீராத காய்ச்சலும் தீரும். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் குடும்பத்திலுள்ள அனைவருமே மாலையில் ஒரு கப் கஷாயம் குடிக்கலாம். இதற்கு ஞாயிற்றுக்கிழமை கஷாயம் என்றே பெயர் உண்டு.

8. பூலாங்கிழங்கு

கிச்சிலி கிழங்கு என்ற பெயரில் கடைகளில் கிடைக்கும். மஞ்சளுடன் சேர்த்து அரைத்து பூசி குளித்தால் உடல் நாற்றம், வியர்வை நாற்றம் இருக்காது. குழந்தைகளை குளிப்பாட்ட ஏற்றது.
9. ஓமவள்ளி

கற்பூரவல்லி என்ற பெயரும் உண்டு. இதன் தண்டு, இலைச்சாறை காலை, மாலை குடித்து வந்தால் தொண்டை சதை வளர்ச்சி குணமாகும். இதன் பருமனான இலைகளை வாழைக்காய் பஜ்ஜி போல பஜ்ஜி மாவில் கலந்து பஜ்ஜியாக சுட்டு குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
10. அருகம்புல்

அருகம்புல், வெற்றிலை, மிளகு சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வருவதோடு ரத்த ஓட்டமும் சீராகும். தோல் நோய்களும் குணமடையும். இவையெல்லாம் தொட்டிகளில் வைத்து வளர்க்க வேண்டியவை.
11. ஆடாதொடை

எல்லா இருமல் மருந்துகளும் ஆடாதொடையிலிருந்துதான் தயாரிக்கப்படுகின்றன. 100 கிராம் ஆடாதொடையை அரை லிட்டர் தண்ணீருடன் சேர்த்து காய்ச்சி 125 மில்லியாக வற்ற வைத்து வடிகட்டி அதனுடன் 100 கிராம் வெல்லத்தை போட்டு மீண்டும் அடுப்பேற்றி பாகுபதத்தில் இறக்கி குழந்தகளுக்கு கொடுத்தால் இருமல் குணமாகும். பேருகால கர்ப்பிணிகள் 8வது மாதம் முதல் இதன் வேரை கஷாயம் செய்து தினமும் குடித்து வந்தால் சுகப்பிரசவமாவது உறுதி. ஆடாதொடை இலையை நிழலில் காயவைத்து, பொடி செய்து காலை, மாலை பாலில் சேர்த்து குடித்து வந்தால் காரணமில்லாமல் வரும் இரத்த அழுத்தம், படபடப்பு குறையும்.
12. பூனை மீசை மற்றும் விஷநாராயணி

இவை இரண்டுமே நமது நாட்டு மூலிகையல்ல. இதன் பூக்கள் பார்ப்பதற்கு பூனை மீசை பேன்று இருக்கும். இதன் இலைகளுடன், மிளகு, பூண்டு ஆகியவற்றை அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து காலை, மாலை உணவுக்குப்பின் சாப்பிட்டால் சிறுநீரக செயலிழப்பு மற்றும் சிறுநீரக கோளாறுகளுக்கும், உப்புநீர் நோய்க்கும் உகந்தது.
13. நொச்சி

நீல நொச்சி, கரு நொச்சி, வெள்ளை நொச்சி என பல வகை நொச்சிகள் உள்ளது. ஆனால், எல்லவற்றிற்குமான மருத்துவ குணம் ஒன்றுதான். நொச்சி இலை, மஞ்சள் சேர்த்து ஆவி பிடிக்க எல்லா தலைவலியும் குறையும் அல்லது நொச்சி இலைகளைப் பறித்து நிழலில் மூன்று நாட்கள் உலர்த்தி தலையணை உறைக்குள் இந்த இலைகளைப் போட்டு நிரப்பி தூங்கினால் ஒற்றைத் தலைவலி குறையும். தலைவலி மாத்திரை, தலைவலி தைலம் என எதுவுமே தேவையில்லை.
14. தழுதாழை

தழுதாழையை வாதமடக்கி இலை என்றும் கூறுவார்கள். இந்த இலையை வெந்நீரில் போட்டு ஆவி பிடித்தால் உடல்வலி குறையும். மூட்டு வலி, மூட்டு வீக்கம் உள்ள இடத்தில் இந்த இலைகளை வைத்து கட்டினால் வலி குறையும். ஒரு செடி வைத்தாலே போதும். இதன் வேர்கள் வேகமாக பரவி பக்கக் கன்றுகள் அதிகம் முளைக்கும்.
15. கழற்ச்சி

இதன் காய் பல வருடங்களுக்கு முன்பு விளையாட்டுப் பொருளாகவும், தராசுகளில் எடைக்கல்லாகவும் பயன்படுத்தப்பட்டது. இதன் விதைப் பருப்பை மிளகு சேர்த்து பொடியாக செய்து சாப்பிட்டு வந்தால் விதை வீக்கம் குணமாகும். இதன் இலையை விளக்கெண்ணெயில் போட்டு வதக்கி விதைப்பையில் கட்டினாலும் வீக்கம் குறையும்'' என்றார்.

Tuesday, April 4, 2017

கஞ்சி... ஆகாரம் மட்டுமல்ல, ஆரோக்கியத்தின் ஆதாரம்! #HealthTi’, `ஒரு வாய் கஞ்சிக்கு வழி இருக்கா சொல்லு’... என விரிகிற சொற்றொடர்கள் எல்லாமே ஆழ்ந்த பொருள்கொண்டவை. அதுதான் மனித வாழ்வின் ஆதாரம் என்பதை அப்பட்டமாக உணர்த்துபவை. மனிதன் உயிர்வாழ ஐந்து நட்சத்திர விடுதி சாப்பாடோ, விருந்தோ தேவையில்லை; உணவாக ஒரு கலையம் கஞ்சி போதும். கஞ்சி, உயிர் காக்கும் ஆகாரம் மட்டுமல்ல, ஆரோக்கியத்தின் ஆதாரம் என்பதே மருத்துவம் உணர்த்தும் உண்மை! கஞ்சி ‘இன்றைக்கு சர்க்கரைநோயாளிகளுக்குப் பரிந்துரைக்கப்படும் ஓட்ஸ் கஞ்சி ஆகட்டும்... அரிசி, நொய், பார்லி, கோதுமை, கேழ்வரகு, கம்பு, கொள்ளு, உளுந்து ஆகியவற்றில் தயாரிக்கப்படுவதாகட்டும்... அனைத்துமே ஒவ்வொருவிதத்தில் நமக்கு நன்மை தரக்கூடியது’ என்கிறார்கள் மருத்துவர்கள். எளிமையான செய்முறை; தண்ணீரில் அல்லது பாலில்கூட இதைத் தயாரிக்கலாம்; எளிதாக செரிமானம் ஆகக்கூடியது. தனியாகத் தயாரிக்கப்படுவது தவிர, சாதம் வடித்ததேகூட ஆரோக்கியமானது; நம் உடலுக்கு பலம் தருவது. பழைய ‘விக்கிரமாதித்தன் கதை’யில் ஒரு சம்பவம் விவரிக்கப்பட்டிருக்கும். நாள்கணக்கில் பட்டினி கிடந்த ஒருவனுக்குச் சாப்பாடு கொடுக்க வேண்டும். அவனால் வாயைத் திறந்து சாப்பிடக்கூட முடியாது. உடல் அவ்வளவு பலவீனம் அடைந்திருக்கும். சோற்றை வடித்த கஞ்சியில் கொஞ்சம் சாதத்தைப் போட்டு, நெய் ஊற்றி அதை ஒரு துணியில் முடிவார்கள். அந்தத் துணியால் அவன் உடல் முழுக்க ஒத்தடம் கொடுப்பார்கள். அப்படி ஒத்தடம் கொடுக்கக் கொடுக்க அவனுக்கு பலம் வந்துவிடும். சிறிது நேரத்தில் எழுந்து உட்கார்ந்துவிடுவான். இது வெறும் கதை அல்ல... இதன் மகத்துவத்தை உணர்ந்தவர்கள் எழுதிய யதார்த்தம். கொள்ளில்... நம் பாரம்பர்யத்தில் மட்டும் அல்ல, மேற்கத்திய நாடுகளிலும் விவசாயிகளின் முக்கிய உணவாக இது இருந்திருக்கிறது; இருக்கிறது. பண்டைய கிரேக்க நாட்டிலும் இதுதான் எளியோர்களின் முக்கிய உணவு. வறுத்த இறைச்சி என்பதெல்லாம், விருந்தில் பெருந்தனக்காரர்களுக்கும், அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் பரிமாறப்படும் ஒன்று. ரொட்டி என்பதேகூட நகரங்களில் மட்டும் சாப்பிடப்படும் ஆடம்பர உணவாகத்தான் கருதப்பட்டிருக்கிறது. மாயா, ஆஸ்டெக் நாகரிகங்களில்கூட கஞ்சி பிரதான உணவாக இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. இதை வெறுமனே அப்படியே குடிக்கலாம்; தொட்டுக்கொள்ள பச்சைமிளகாய், வெங்காயம், ஊறுகாய், கருவாட்டுத்துண்டு இருந்தால் அமர்க்களம். சீனாவிலும் பாரம்பர்ய உணவாக கஞ்சி பல ஆயிரம் ஆண்டுகளாக இருந்துவருகிறது. சீனர்களின் வரலாற்று ஆவணமான `புக் ஆஃப் சோவ்’ (The Book of Zhou), நூலில் `முதன்முதலில் சிறுதானியத்தில் கஞ்சி தயாரித்தது அரசர் ஹுவாங் டி (Huang Di)' என்கிற குறிப்பு இருக்கிறது. பிரபல எழுத்தாளர் சார்லஸ் டிக்கன்ஸ், தன்னுடைய `ஆலிவர் ட்விஸ்ட்’ (Oliver Twist) நாவலில் வறுமையின் அடையாளமாகக் கஞ்சியை சித்தரித்திருப்பார். ஆனால், மென்மையான சத்துள்ள இந்த உணவு, மேல்தட்டு மக்களையும் வசியப்படுத்தியிருக்கிறது. தமிழ்நாட்டில் கஞ்சி... கேரளாவிலும் கர்நாடகாவிலும் ஆந்திராவிலும் கிட்டத்தட்ட இதே பெயரில் அழைக்கிறார்கள். மற்றபடி ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு பெயர்... வங்காளத்தில் `ஜாவு’ (Jaou), ஒடிசாவில் பகல் பாத் (Pakhal Bhat). ஆசிய நாடுகளில் வெவ்வேறு பெயர்கள்... பர்மியர்களுக்கு `ஹ்சான் ப்யோக்’ (Hsan Pyok), போர்ச்சுகீசியர்களுக்கு `கேன்ஜா’ (Canja), தாய்லாந்துகாரர்களுக்கு `காவோ டோம்’ (Khao Tom), ஜப்பானியர்களுக்கு `காயு’... நீள்கிற கஞ்சியின் பெயர்களுக்கு முடிவே இல்லை. இந்தோனேஷியா, கொரியா, பிலிப்பைன்ஸ், லாவோஸ், போர்ச்சுக்கல், இலங்கை, சிங்கப்பூர், துருக்கி... என கஞ்சி இல்லாத தேசமே இல்லை. ஏனென்றால், இது மனிதனின் ஆதி உணவு... ஆதார உணவு. அரிசியில்... இரண்டு நாள் சோறில்லாத ஒருவனுக்கு ஒரு குவளை கம்மங்கஞ்சி சோர்வு நீக்கி, சுறுசுறுப்பு தரும் அற்புத உணவு. இன்றைக்கும் தமிழ்நாட்டு கிராமங்களில் பருவம் வந்த பெண்களுக்கு உளுந்தங்கஞ்சியைக் கொடுக்கும் பழக்கம் உண்டு. இது பெண்ணின் மாதவிடாயைச் சீராக்கும்; இடுப்பு எலும்புகளுக்கு பலம் கொடுக்கும். காய்ச்சல் வந்த நோயாளிகளுக்கு `கஞ்சி மட்டும் கொடுங்க...’ எனப் பரிந்துரைக்கும் டாக்டர்கள் இன்றைக்கும் இருக்கிறார்கள். பாலூட்ட இயலாத தாய்மார்கள் குழந்தைகளுக்குக் கலக்கிக் கொடுக்கும் பல சத்து மாவுகள், கஞ்சியின் இன்னொரு வடிவம்தான். ஆனால், அதுவும்கூட குழந்தைகளுக்கு சத்தில்லாத வெறும் உணவு என்ற வகையில்தான் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. தாய்ப்பாலில் உள்ள ஊட்டச்சத்து இந்தக் கலவைகளில் கிடைப்பதில்லை. வறுமை பாதித்தப் பகுதிகளில் அரசும் அதிகாரிகளும் கடைசி கடைசியாக இறங்கி வந்து செய்கிற வேலை... கஞ்சித்தொட்டி திறப்பது! இது பல இடங்களில் மக்களின் வயிற்றை நிறைத்துவிடுகிறது; பல விஷயங்களை மறந்துபோகவோ ஒத்திப்போடவோ வைத்துவிடுகிறது என்பது யதார்த்தமே! பத்மினி கஞ்சியின் தரும் ஆரோக்கியப் பலன்களைப் பட்டியலிடுகிறார் டயட்டீஷியன் பத்மினி... ``கஞ்சி ஆரோக்கிய உணவு. நோயாளிகளுக்கு மருந்தும்கூட. பொதுவாக நோய்வாய்ப்பட்டவர்களுக்கு அரிசி அல்லது நொய்க் கஞ்சி வைத்துக்கொடுப்பது நம் வழக்கம். அரிசிக் கஞ்சியில் உள்ள கலோரிகள் உடலுக்கு அபாரமான சக்தியை வழங்கக்கூடியவை. காலையில் எழுந்து கஞ்சி குடித்தாலே அன்றைக்கு முழுமைக்குமான சக்தி நம் உடலுக்குக் கிடைத்துவிடும். இதில் உள்ள நார்ச்சத்து மலமிளக்கியாகச் செயல்படும்; மலச்சிக்கலைத் தவிர்க்கும். இதில் இருக்கும் மாவுச்சத்து நம் வயிற்றுக்கு நன்மை தரும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தூண்டி, செரிமானத்தைச் சீராக்கும். கோடை காலத்தில் உடல் அதிகம் வியர்க்கும்; நா வறட்சி ஏற்படும். அரிசிக் கஞ்சித் தண்ணி அருந்துவது இதற்கு மாற்றாக அமையும். உடல் இழக்கும் சத்துகளை மீட்க உதவும். ஏதாவது ஒரு நோய்த்தொற்று காரணமாக ஜுரம், வாந்தி வரும்போது, அவற்றின் காரணமாக ஏற்படும் நீர் இழப்பைத் தடுக்கும். அதனால்தான் ஜுரம் வந்தவர்களுக்கு இதைக் கொடுக்கச் சொல்கிறார்கள். ஜுரத்தில் இருந்து விரைவாக மீள்வதற்கும் இது உதவும். வயிற்றுப்போக்கு உள்ளவர்களுக்கு சிறந்த ஆகாரம் கஞ்சித் தண்ணீர்தான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரைக்கும் இது பயனளிக்கும். வயிற்றுப்போக்கு வந்த குழந்தைகளை சரியான நேரத்தில் கவனிக்காவிட்டால், அவர்கள் மிக மோசமான நிலைக்கு ஆளாகிவிடுவார்கள். கஞ்சித் தண்ணீர், குழந்தைகளின் வயிற்றுப்போக்கைக் கட்டுப்படுத்தும், அதில் இருந்து மீண்டு வருவதற்கும் உதவும். அரிசிக் கஞ்சி மட்டுமல்ல... சாதம் வடித்த கஞ்சிகூட பல பயன்களைத் தரக்கூடியது. சருமம், கூந்தல் அழகு தொடர்பான விஷயங்களுக்கும் இது உதவும். உடலுக்கு ஊட்டம் கொடுக்கும். கிராமங்களில் இதைக் குடித்துவிட்டு வயல் வேலைக்குப் போகிறவர்கள் இன்றைக்கும் இருக்கிறார்கள். இது, உடல் வெப்பத்தை சீரான அளவில் பராமரிக்கும். அதனால்தான் கோடை காலத்தில் கஞ்சி குடிக்கச் சொல்லிப் பரிந்துரைக்கிறார்கள் மருத்துவர்கள். இது, அல்சீமர் போன்ற மறதி நோய் வராமல் தடுக்கும். அரிசி மட்டுமல்ல, பார்லி, கம்பு, கேழ்வரகு, சோளம், ஓட்ஸ்... என எதிலும் கஞ்சி தயாரித்துக் குடிக்கலாம். கஞ்சி, பக்கவிளைவுகள் ஏற்படுத்தாதது; உடலுக்கு ஆரோக்கியம் தருவது!’’ பிறகென்ன... ஒவ்வொரு நாளும் காலையில் ஒருவாய் கஞ்சியைக் குடித்துவிட்டு வேலையை ஆரம்பிக்கலாம்தானே!

கஞ்சி... ஆகாரம் மட்டுமல்ல, ஆரோக்கியத்தின் ஆதாரம்! #HealthTips

‘வயசான காலத்துல ஒரு வாய் கஞ்சி ஊத்த வக்கில்லை’, `ஒரு வாய் கஞ்சிக்கு வழி இருக்கா சொல்லு’... என விரிகிற சொற்றொடர்கள் எல்லாமே ஆழ்ந்த பொருள்கொண்டவை. அதுதான் மனித வாழ்வின் ஆதாரம் என்பதை அப்பட்டமாக உணர்த்துபவை. மனிதன் உயிர்வாழ ஐந்து நட்சத்திர விடுதி சாப்பாடோ, விருந்தோ தேவையில்லை; உணவாக ஒரு கலையம் கஞ்சி போதும். கஞ்சி, உயிர் காக்கும் ஆகாரம் மட்டுமல்ல, ஆரோக்கியத்தின் ஆதாரம் என்பதே மருத்துவம் உணர்த்தும் உண்மை! 
கஞ்சி
‘இன்றைக்கு சர்க்கரைநோயாளிகளுக்குப் பரிந்துரைக்கப்படும் ஓட்ஸ் கஞ்சி ஆகட்டும்... அரிசி, நொய், பார்லி, கோதுமை, கேழ்வரகு, கம்பு, கொள்ளு, உளுந்து ஆகியவற்றில் தயாரிக்கப்படுவதாகட்டும்... அனைத்துமே ஒவ்வொருவிதத்தில் நமக்கு நன்மை தரக்கூடியது’ என்கிறார்கள் மருத்துவர்கள். எளிமையான செய்முறை; தண்ணீரில் அல்லது பாலில்கூட இதைத் தயாரிக்கலாம்; எளிதாக செரிமானம் ஆகக்கூடியது. தனியாகத் தயாரிக்கப்படுவது தவிர, சாதம் வடித்ததேகூட ஆரோக்கியமானது; நம் உடலுக்கு பலம் தருவது. 
பழைய ‘விக்கிரமாதித்தன் கதை’யில் ஒரு சம்பவம் விவரிக்கப்பட்டிருக்கும். நாள்கணக்கில் பட்டினி கிடந்த ஒருவனுக்குச் சாப்பாடு கொடுக்க வேண்டும். அவனால் வாயைத் திறந்து சாப்பிடக்கூட முடியாது. உடல் அவ்வளவு பலவீனம் அடைந்திருக்கும். சோற்றை வடித்த கஞ்சியில் கொஞ்சம் சாதத்தைப் போட்டு, நெய் ஊற்றி அதை ஒரு துணியில் முடிவார்கள். அந்தத் துணியால் அவன் உடல் முழுக்க ஒத்தடம் கொடுப்பார்கள். அப்படி ஒத்தடம் கொடுக்கக் கொடுக்க அவனுக்கு பலம் வந்துவிடும். சிறிது நேரத்தில் எழுந்து உட்கார்ந்துவிடுவான். இது வெறும் கதை அல்ல... இதன் மகத்துவத்தை உணர்ந்தவர்கள் எழுதிய யதார்த்தம். 
கொள்ளில்...
நம் பாரம்பர்யத்தில் மட்டும் அல்ல, மேற்கத்திய நாடுகளிலும் விவசாயிகளின் முக்கிய உணவாக இது இருந்திருக்கிறது; இருக்கிறது. பண்டைய கிரேக்க நாட்டிலும் இதுதான் எளியோர்களின் முக்கிய உணவு. வறுத்த இறைச்சி என்பதெல்லாம், விருந்தில் பெருந்தனக்காரர்களுக்கும், அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் பரிமாறப்படும் ஒன்று. ரொட்டி என்பதேகூட நகரங்களில் மட்டும் சாப்பிடப்படும் ஆடம்பர உணவாகத்தான் கருதப்பட்டிருக்கிறது. மாயா, ஆஸ்டெக் நாகரிகங்களில்கூட கஞ்சி பிரதான உணவாக இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. 
இதை வெறுமனே அப்படியே குடிக்கலாம்; தொட்டுக்கொள்ள பச்சைமிளகாய், வெங்காயம், ஊறுகாய், கருவாட்டுத்துண்டு இருந்தால் அமர்க்களம். சீனாவிலும் பாரம்பர்ய உணவாக கஞ்சி பல ஆயிரம் ஆண்டுகளாக இருந்துவருகிறது. சீனர்களின் வரலாற்று ஆவணமான `புக் ஆஃப் சோவ்’ (The Book of Zhou), நூலில் `முதன்முதலில் சிறுதானியத்தில் கஞ்சி தயாரித்தது அரசர் ஹுவாங் டி (Huang Di)' என்கிற குறிப்பு இருக்கிறது. பிரபல எழுத்தாளர் சார்லஸ் டிக்கன்ஸ், தன்னுடைய `ஆலிவர் ட்விஸ்ட்’ (Oliver Twist) நாவலில் வறுமையின் அடையாளமாகக் கஞ்சியை சித்தரித்திருப்பார். ஆனால், மென்மையான சத்துள்ள இந்த உணவு, மேல்தட்டு மக்களையும் வசியப்படுத்தியிருக்கிறது. 
தமிழ்நாட்டில் கஞ்சி... கேரளாவிலும் கர்நாடகாவிலும் ஆந்திராவிலும் கிட்டத்தட்ட இதே பெயரில் அழைக்கிறார்கள். மற்றபடி ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு பெயர்... வங்காளத்தில் `ஜாவு’ (Jaou), ஒடிசாவில் பகல் பாத் (Pakhal Bhat). ஆசிய நாடுகளில் வெவ்வேறு பெயர்கள்... பர்மியர்களுக்கு `ஹ்சான் ப்யோக்’ (Hsan Pyok), போர்ச்சுகீசியர்களுக்கு `கேன்ஜா’ (Canja),  தாய்லாந்துகாரர்களுக்கு `காவோ டோம்’ (Khao Tom), ஜப்பானியர்களுக்கு `காயு’... நீள்கிற கஞ்சியின் பெயர்களுக்கு முடிவே இல்லை. இந்தோனேஷியா, கொரியா, பிலிப்பைன்ஸ், லாவோஸ், போர்ச்சுக்கல், இலங்கை, சிங்கப்பூர், துருக்கி... என கஞ்சி இல்லாத தேசமே இல்லை. ஏனென்றால், இது மனிதனின் ஆதி உணவு... ஆதார உணவு. 
அரிசியில்...
இரண்டு நாள் சோறில்லாத ஒருவனுக்கு ஒரு குவளை கம்மங்கஞ்சி சோர்வு நீக்கி, சுறுசுறுப்பு தரும் அற்புத உணவு. இன்றைக்கும் தமிழ்நாட்டு கிராமங்களில் பருவம் வந்த பெண்களுக்கு உளுந்தங்கஞ்சியைக் கொடுக்கும் பழக்கம் உண்டு. இது பெண்ணின் மாதவிடாயைச் சீராக்கும்; இடுப்பு எலும்புகளுக்கு பலம் கொடுக்கும். காய்ச்சல் வந்த நோயாளிகளுக்கு `கஞ்சி மட்டும் கொடுங்க...’ எனப் பரிந்துரைக்கும் டாக்டர்கள் இன்றைக்கும் இருக்கிறார்கள். பாலூட்ட இயலாத தாய்மார்கள் குழந்தைகளுக்குக் கலக்கிக் கொடுக்கும் பல சத்து மாவுகள், கஞ்சியின் இன்னொரு வடிவம்தான். ஆனால், அதுவும்கூட குழந்தைகளுக்கு சத்தில்லாத வெறும் உணவு என்ற வகையில்தான் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. தாய்ப்பாலில் உள்ள ஊட்டச்சத்து இந்தக் கலவைகளில் கிடைப்பதில்லை. வறுமை பாதித்தப் பகுதிகளில் அரசும் அதிகாரிகளும் கடைசி கடைசியாக இறங்கி வந்து செய்கிற வேலை... கஞ்சித்தொட்டி திறப்பது! இது பல இடங்களில் மக்களின் வயிற்றை நிறைத்துவிடுகிறது; பல விஷயங்களை மறந்துபோகவோ ஒத்திப்போடவோ வைத்துவிடுகிறது என்பது யதார்த்தமே! பத்மினி
கஞ்சியின் தரும் ஆரோக்கியப் பலன்களைப் பட்டியலிடுகிறார் டயட்டீஷியன் பத்மினி... ``கஞ்சி ஆரோக்கிய உணவு. நோயாளிகளுக்கு மருந்தும்கூட. பொதுவாக நோய்வாய்ப்பட்டவர்களுக்கு அரிசி அல்லது நொய்க் கஞ்சி வைத்துக்கொடுப்பது நம் வழக்கம். அரிசிக் கஞ்சியில் உள்ள கலோரிகள் உடலுக்கு அபாரமான சக்தியை வழங்கக்கூடியவை. காலையில் எழுந்து கஞ்சி குடித்தாலே அன்றைக்கு முழுமைக்குமான சக்தி நம் உடலுக்குக் கிடைத்துவிடும். 
இதில் உள்ள நார்ச்சத்து மலமிளக்கியாகச் செயல்படும்; மலச்சிக்கலைத் தவிர்க்கும். இதில் இருக்கும் மாவுச்சத்து நம் வயிற்றுக்கு நன்மை தரும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தூண்டி, செரிமானத்தைச் சீராக்கும். கோடை காலத்தில் உடல் அதிகம் வியர்க்கும்; நா வறட்சி ஏற்படும். அரிசிக் கஞ்சித் தண்ணி அருந்துவது இதற்கு மாற்றாக அமையும். உடல் இழக்கும் சத்துகளை மீட்க உதவும். ஏதாவது ஒரு நோய்த்தொற்று காரணமாக ஜுரம், வாந்தி வரும்போது, அவற்றின் காரணமாக ஏற்படும் நீர் இழப்பைத் தடுக்கும். அதனால்தான் ஜுரம் வந்தவர்களுக்கு இதைக் கொடுக்கச் சொல்கிறார்கள். ஜுரத்தில் இருந்து விரைவாக மீள்வதற்கும் இது உதவும். 
வயிற்றுப்போக்கு உள்ளவர்களுக்கு சிறந்த ஆகாரம் கஞ்சித் தண்ணீர்தான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரைக்கும் இது பயனளிக்கும். வயிற்றுப்போக்கு வந்த குழந்தைகளை சரியான நேரத்தில் கவனிக்காவிட்டால், அவர்கள் மிக மோசமான நிலைக்கு ஆளாகிவிடுவார்கள். கஞ்சித் தண்ணீர், குழந்தைகளின் வயிற்றுப்போக்கைக் கட்டுப்படுத்தும், அதில் இருந்து மீண்டு வருவதற்கும் உதவும். அரிசிக் கஞ்சி மட்டுமல்ல... சாதம் வடித்த கஞ்சிகூட பல பயன்களைத் தரக்கூடியது. சருமம், கூந்தல் அழகு தொடர்பான விஷயங்களுக்கும் இது உதவும்.  உடலுக்கு ஊட்டம் கொடுக்கும். கிராமங்களில் இதைக் குடித்துவிட்டு வயல் வேலைக்குப் போகிறவர்கள் இன்றைக்கும் இருக்கிறார்கள். இது, உடல் வெப்பத்தை சீரான அளவில் பராமரிக்கும். அதனால்தான் கோடை காலத்தில் கஞ்சி குடிக்கச் சொல்லிப் பரிந்துரைக்கிறார்கள் மருத்துவர்கள். இது, அல்சீமர் போன்ற மறதி நோய் வராமல் தடுக்கும். அரிசி மட்டுமல்ல, பார்லி, கம்பு, கேழ்வரகு, சோளம், ஓட்ஸ்... என எதிலும் கஞ்சி தயாரித்துக் குடிக்கலாம். கஞ்சி, பக்கவிளைவுகள் ஏற்படுத்தாதது; உடலுக்கு ஆரோக்கியம் தருவது!’’
பிறகென்ன... ஒவ்வொரு நாளும் காலையில் ஒருவாய் கஞ்சியைக் குடித்துவிட்டு வேலையை ஆரம்பிக்கலாம்தானே! 

Sunday, April 2, 2017

Posted Date : 07:38 (20/12/2016)Last updated : 07:37 (20/12/2016) அழகு பராமரிப்புக்கு அருமையான உணவுகள்! நலம் நல்லது-31 #DailyHealthDose

அழகு பராமரிப்புக்கு அருமையான உணவுகள்! நலம் நல்லது-31 #DailyHealthDose

அழகு
`அழகு, ஆண்டவன் அளித்த சிபாரிசுக் கடிதம்’ என்று ஒரு கவிதை உண்டு. `பளிச்’ என, அழகாக இருக்க வேண்டும் என்பது இன்று எல்லோருக்குமான ஆசை. ஆனால், பலரும் `சிவப்புதான் அழகு; பகட்டுதான் பளிச்’ நினைக்கிறார்கள். மோர்க்குழம்பு நிறமும், மோனலிசா முகமும் தங்களுக்கு வாய்க்கவில்லையே என தாழ்வு மனப்பான்மையை தங்களுக்குள் வளர்ப்பது தவறு. கறுப்பு நிறத்திலும் களையாக, பளிச்சென உங்களை வைத்துக்கொள்ள உதவும் உணவும் மருந்தும் நம்மிடம் ஏராளம். நிறம் கறுப்பாக இருப்பதில் இன்னொரு மிகப்பெரிய பயனும் உள்ளது... ஆம், சிவப்பைக் காட்டிலும் கறுப்பு நிறத்தவர்களுக்கு நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகம்! 
ஆணோ பெண்ணோ, இளம் வயதில் வசீகரத்துக்காக அக்கறைப்படும் அளவுக்கு வயதான பின்னர் அதைப் பற்றி யோசிக்காமல் இருப்பதும் அழகைத் தொலைப்பதற்கு ஒரு காரணம். செல்லத் தொப்பை/சிசேரியன் தொப்பை என தன்னை அறியாமல் வளரும் தவறைத் திருத்திக்கொள்ளவில்லை என்றால், அழகு அடுத்த வீட்டில்தான் தெரியும். `அதுதான் 40 வயசு ஆகிடுச்சே... இனி எதுக்கு சீவி சிங்காரிக்கணும்?’ என்ற அக்கறையின்மை உடல் வனப்பின் மேல் வேண்டவே வேண்டாம். ஓய்வின்றி ஓடிக்கொண்டே இருக்கும் மனஅழுத்தம் மிக்க நடுத்தர வயதில்தான், துணையும் ஈர்ப்பும் அரவணைப்பும் மிகவும் தேவைப்படும். மண வாழ்க்கையில் எந்த வயதிலும் தம்பதியரிடம் அன்பு நிலைத்திருக்க, இந்தப் `பளிச்’ விஷயம் அவசியம். மேலும், தனக்குள் தன்னம்பிக்கையை வளர்க்கவும், தளர்ச்சியையோ, தள்ளாமையையோ தலைகாட்டவிடாமல் இருக்கவும், கண்ணாடியில் நம் உடலும் முகமும் அழகாக, ஆரோக்கியமாக இருக்க வேண்டும். 
அழகாக இருக்க என்ன செய்யலாம்? 
அழகு என்பது இன்ஸ்டன்ட் இடியாப்பம்போல வருவதல்ல. பளிச்சென மிளிர்வதற்காக கண்ட கண்ட அழகு க்ரீம்களால் முகத்தைப் பாடாகப் படுத்துவதும் அல்ல. முதல் நாள் இரவு சாப்பிட்ட சமோசாவுக்கும் இன்றைய உங்கள் முகச் சோர்வுக்கும் நிறையவே தொடர்பு உண்டு. முதலில் உணவுத் தேர்வில்தான் தொடங்குகிறது அழகு. 
முகத்தின் அழகுக்கு... 
* அகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும். `அகம்’ என்றால், மனம் மட்டுமல்ல; வயிறும்தான். எண்ணெய்ப் பிசுக்கான முகம்கொண்டவர்கள் தினசரி சீரகத் தண்ணீர் அருந்த வேண்டும். பால் வகைகளை ஒதுக்கிவிட்டு, பழ ஆகாரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். குறிப்பாக, பாலிஃபினால் நிறைந்த பப்பாளியை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். கேரட், தக்காளி சேர்த்த ஜூஸ் அதனுடைய ஆன்டிஆக்ஸிடன்ட் தன்மையால், முகத்தில் சுருக்கங்கள் வராமல் பாதுகாக்கும்.  
நிறையப் பருக்கள் (Pimples), சிறு குருக்கள் (Acnes) உள்ள முகமா? வெள்ளைப் பூசணிக்காய் (தடியங்காய்), பாசிப் பயறு சேர்த்துக் கூட்டாகச் சமைத்து, அடிக்கடி சாப்பிட்டால் போதும். கூடவே, ஆவாரம்பூ, ரோஜா இதழ்களை சமபங்கு எடுத்து, இருமடங்கு முல்தானிமட்டி மணலில் கலந்து நன்கு மாவாக பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்தக் கலவையைப் பன்னீரில் குழைத்து முகத்தில் பூசி, நான்கு மணி நேரம் கழித்து கழுவ வேண்டும். இப்படி, வாரத்துக்கு மூன்று நாட்கள் செய்தால், பத்தே தினங்களில் பளிச் முகம் கிடைக்கும். 
* தினமும் உடல் இயக்கத்தின்போது, ஒவ்வொரு செல்லிலும் சேரும் தனி ஆக்சிஜன் அணுக்கள், செல் அழிவை ஏற்படுத்துவதுதான் வயோதிகத்துக்குக் காரணம். தோல் சுருக்கம், நரை, திரை, மூப்பு எல்லாம் இதன் அடிப்படையில்தான் ஆரம்பிக்கின்றன. ஆன்டிஆக்சிடன்ட் சத்துள்ள உணவுகளும் மூலிகைகளும்தான் இந்தச் செல் அழிவைக் கூடியவரை தள்ளிப்போட்டு, அழகுக்கும் ஆரோக்கியத்துக்கும் வித்திடுபவை. இந்தச் சத்துக்கள் அதிகம் இருப்பது வண்ணமிகு காய், கனிகளில்தான். 
வசீகரமான தோலுக்கு... 
இன்றைக்கு பலருக்கும் வைட்டமின் மாத்திரைகளை, `சத்து மாத்திரை’ என வாங்கிச் சாப்பிடும் பழக்கம் இருக்கிறது. தேவையில்லாமல் வைட்டமின் சாப்பிடுவது உடலுக்குக் கெடுதல்; அதோடு, உணவில் இருந்து உடல் உயிர்ச்சத்தை (வைட்டமின்) பிரித்தெடுக்கும் திறனையும் அது குறைத்துவிடும். அழகுக்கு சில வைட்டமின்கள் ரொம்ப அவசியம். அவற்றில் முக்கியமானவை வைட்டமின் ஏ, சி, இ, பயோடின். வைட்டமின் ஏ என்றால் பலருக்கும் நினைவுக்கு வருவது கேரட். ஆனால், முருங்கைக்கீரை, முள்ளங்கி, வெந்தயம், பப்பாளி, ஆரஞ்சு, கறிவேப்பிலை, கொத்தமல்லி இவற்றிலும் பீட்டா கரோட்டின்கள் உண்டு. தோல் வறண்டு போகாமல், வனப்புடன் வசீகரமாக இருக்க, இவையெல்லாம் தினமும் உணவில் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். மஞ்சள் நிறத்தில் இருந்தாலும், அன்னாசியில் இந்த வைட்டமின் ஏ சத்து அதிகம் கிடையாது. ஆனால், பழுத்த இனிப்பு மாம்பழத்தில் வைட்டமின் ஏ சத்து உள்ளது. 
வனப்பான, மென்மையான தோலுக்கு... 
* வைட்டமின் சி-யும், ஏ-வும் தோல் வனப்புக்கு மிகவும் அவசியமான வைட்டமின்கள். இவற்றில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட் தன்மை தோலை வனப்புடன் வைத்திருக்கிறது; இளமையையும் பாதுகாக்கிறது. ஔவைப் பாட்டிக்கு அதியமான் கொடுத்த நெல்லிக்கனிதான் இன்றைய இந்திய மருத்துவ மூலிகைகளின் சூப்பர் ஸ்டார். இதில் நிறைந்துள்ள வைட்டமின் சி சத்து, முதுமையைப் போக்கும் மாமருந்து; நோய் எதிர்ப்பாற்றலை வழங்கிடும் அமுது. தினசரி நெல்லிக்கனியை உணவாகவோ, மருந்தாகவோ சாப்பிட்டால், நீடித்த ஆரோக்கியத்துடன் இளமை நிலைத்திருக்கும். நெல்லிக்கனி தவிர, முட்டைக்கோஸ், முருங்கைக்கீரை, கொத்தமல்லிக்கீரையிலும் வைட்டமின் சி சத்து உண்டு.  
* Rice Bran Oil (அரிசி-தவிட்டு எண்ணெய்), பருத்திவிதை எண்ணெய், நல்லெண்ணெய் ஆகிய தாவர எண்ணெய்களில் வைட்டமின் இ சத்து அதிகம். தவிர, பசுங்கீரைகள், சோளம் ஆகியவற்றிலும் வைட்டமின் இ உண்டு. ஆண்மைக்குறைவு தீரவும், குழந்தையின்மை பிரச்னை நீங்கவும் வைட்டமின் இ அவசியம் என்பது அழகையும் தாண்டிய இன்னொரு செய்தி. 
அழகைத் தரும் காயகல்பம் 
`காயகல்பம்’ என்பது உடலை ஆரோக்கியமாகவும் அழகாகவும் வைத்திருக்க, அந்தக் காலத்தில் தமிழ்ச் சித்தர்கள் காட்டிய உணவுப்பழக்கம், ஒழுக்க முறை, யோகப் பயிற்சிகள்தானே தவிர, எந்த ஸ்பெஷல் சிட்டுக்குருவி லேகியமும் அல்ல. அழகான உடலை அன்றைய சாதுக்கள் பெற்றிருந்ததற்கு இந்தக் காயகல்ப பயிற்சி ஒரு காரணம். அழகு நிலைத்திருக்க, ஒவ்வொருவரும் அவரவர் உடலுக்கேற்ற உணவை, குறிப்பிட்ட மூலிகையை மருத்துவர் ஆலோசனைப்படி தேர்ந்தெடுத்து தினமும் சாப்பிடுவதும், பிராணாயாமப் பயிற்சிகளை தினமும் மேற்கொள்வதும் அவசியம்.

Posted Date : 12:27 (02/04/2017)Last updated : 12:24 (02/04/2017) எடை குறைக்கும்... அழகூட்டும்... ஜில்ஜில் மோர்! #SummerTips

எடை குறைக்கும்... அழகூட்டும்... ஜில்ஜில் மோர்! #SummerTips

யிரோடு ஒப்பிடும்போது மோர் அமுதம். `இந்திரனுக்குக்கூடக் கிடைக்காத அற்புதம்' என மோரின் மேன்மையை வர்ணிக்கிறது ஆயுர்வேதம். கிராமத்து வயல்வெளிகளில் கூலிவேலைக்குச் செல்பவர்கள், பழைய சாதத்துடன் மோர் ஊற்றிக் கரைத்து சின்ன வெங்காயம், பச்சைமிளகாய், மோர் மிளகாய் வகையறாக்களுடன் மதிய சாப்பாடு எடுத்துச் செல்வார்கள். உழைத்துக்களைத்து உச்சி வெயிலில், வயல்வரப்புகளில் அமர்ந்தபடி இந்த உணவை ரசித்து ருசித்து உண்பார்கள். 
மோர்
எந்தவொரு கல்யாணப் பந்தியும் மோர் இல்லாமல் முடிவதில்லை. சாம்பார், காரக்குழம்பு அல்லது வத்தக்குழம்பு, ரசம், மோர் என்ற வரிசையில் சாப்பிடுவது நம்மூரில் எழுதப்படாத ஒரு விதியாகவே இருக்கிறது. கோயில் திருவிழாவில் நீர்மோர் பந்தல், கோடைகாலம் வந்தால் நீர்மோர் பந்தல் என நம் வாழ்வியலில் தவிர்க்கமுடியாத இடம் மோருக்கு உண்டு. மோரில் அப்படி என்ன மகோன்னதம் என்கிறீர்களா? தொடர்ந்து படியுங்கள்...
 
கால்சியம் குறைபாடு நீக்கும்
பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களில் உள்ள லாக்டோஸ் சர்க்கரையை சிலரது உடலால் ஜீரணிக்க முடியாது. இந்தப் பிரச்னை லாக்டோஸ் இன்டோலரன்ஸ் (Lactose intolerance) எனப்படுகிறது. இத்தகைய பிரச்னை உள்ளவர்களுக்கு கால்சியம் குறைபாடு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். எனவே, இவர்கள் மோர் குடிப்பதன்மூலம் உடலுக்குத் தேவையான கால்சியத்தைப் பெற முடியும். ஒரு கப் மோரில் 350 மில்லி கிராம் கால்சியம் உள்ளது. ஆனால், பாலில் 300 மில்லி கிராம் கால்சியம்தான் இருக்கிறது. 
வயிற்றெரிச்சலைக் குறைக்கும்
காரமான உணவுகளை அதிகளவு சாப்பிட்டால் வயிற்றெரிச்சல் பிரச்னை வரும். அப்படிப்பட்ட சூழலில் மோர் குடிப்பதால் அதிலுள்ள புரதம் காரத்தின் ஆற்றலைக் குறைத்துவிடும். இதனால் வயிறு எரிவது குறையும். அத்துடன் நெஞ்செரிச்சலுக்கும் இது நல்ல மருந்தாகும். 
நீரிழப்பைத் தடுக்கும்
தயிருடன் தண்ணீர், உப்பு கலந்த மோர்க்கலவையைக் குடித்தால் உடலில் நீர்ச்சத்துக் குறைபாடு ஏற்படாது. 
மோர்க்கரைசல்
செரிமானத்தை எளிதாக்கும்
தயிரில் செரிமானத்துக்கு உதவும் புரோபயோடிக்ஸ் (Probiotics) பாக்டீரியாக்கள் உள்ளன. தயிரை மோராக மாற்றும்போதும் இதே நன்மைகள் கிடைக்கின்றன. அதிகளவில் ஏப்பம் விட்டுக்கொண்டே இருக்கும் பிரச்னைக்கும் மோர் தீர்வு தருகிறது. 
கொழுப்பைக் குறைக்கும்
மோரில் உள்ள புரதச்சத்து உடலில் சேரும் கொழுப்பின் அளவைக் குறைக்கும். இதை தினமும் குடித்துவந்தால் உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.
உடல் நச்சுகளை வெளியேற்றும்
இதில் வைட்டமின் பி-2 உள்ளது. இது நாம் உண்ணும் உணவை சக்தியாக மாற்ற உதவுகிறது. வைட்டமின் பி-2 செல்களிலுள்ள என்சைம்களின் செயல்பாட்டை ஆரம்பித்துவைக்கும். இது சக்தியாக மாற்றப்படும். இது கல்லீரல் நன்றாக செயல்பட உதவும். உடலில் உள்ள நச்சுப்பொருட்களையும் வெளியேற்றும். 
மோர் குடித்தல்
மலச்சிக்கலுக்கு மருந்து
உணவுப்பழக்கத்தை முறையாகப் பின்பற்றாததாலும், நார்ச்சத்துள்ள பொருட்களைச் சாப்பிடாததாலும் மலச்சிக்கல் ஏற்படுகிறது. மோரை தொடர்ந்து குடித்துவர இந்தப் பிரச்னை முடிவுக்கு வரும். 
எடை குறைக்கும்
குறைவான உணவைச் சாப்பிட்டு எடையைக் குறைக்க முயலும்போது நீரிழப்பு, சோர்வு போன்றவை ஏற்படும். ஆனால் மோர் குடிக்கும்போது இந்தப் பிரச்னைகள் ஏற்படாது. மோர் எளிதில் பசியைத் தணிக்கக்கூடிய உணவு. அதேநேரத்தில் இதில் புரதம், மினரல், வைட்டமின், கால்சியம், மக்னீசியம் போன்ற உடலுக்குத் தேவையான சத்துகளும் உள்ளன. பால், தயிரைவிட இதில் கொழுப்பும் குறைவு. 
முக அழகைக் கூட்டும்
இது உடலில் உள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றுவதால் முகம் அழகாக மாறும். இதைப் பயன்படுத்தி ஃபேஷியல் செய்யலாம். இது சருமத்தைப் பிரகாசமாக்குவதோடு, மென்மையாகவும் மாற்றக்கூடியது. முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறையவும் இது உதவும். குறைந்த வயதில் வயதான தோற்றம் அடையும் பிரச்னைக்கு இது தீர்வு தரும். இதில் லாக்டிக் அமிலம் இருப்பதால், இதை தொடர்ந்து பயன்படுத்திவர முகத்தில் உள்ள புள்ளிகள் மறையும். 
குவளை
வயிற்றுப்புண் குறைக்கும்
வயிறு சம்பந்தமான எல்லாப் பிரச்னைகளுக்கும் மோர் தீர்வு தரும். இதை தொடர்ந்து குடித்துவர வயிற்றுப்புண் நீங்கும்.
வாய்ப்புண் நீக்கும்
தினமும் இரண்டு அல்லது மூன்று கப் மோர் குடிக்க வாய்ப்புண் குணமாகும். மோரை விழுங்குவதற்கு முன்பாக சில நொடிகள் வாயிலேயே வைத்திருந்து பிறகு விழுங்குவது விரைவான பலன் தரும். 
மூல நோய்க்கு மருந்து
சாப்பாட்டுடன் மோர் மற்றும் வாழைப்பழத்தைக் கலந்துகொள்ள வேண்டும். இதனை தினமும் இரண்டுவேளை சாப்பிட்டுவர மூலநோயின் தீவிரம் குறையும். 
வெந்தயம் மோர்
சளியைப் போக்கும்
மோரில் சிறிதளவு இஞ்சி மற்றும் பூண்டு அரைத்துச் சேர்க்க வேண்டும். இதை சில வேளைகள் குடித்துவர வெகு விரைவில் சளி, ஜலதோஷம் நீங்கும். 
சாப்பாட்டின் இறுதியாக மோர் குடிப்பதால் அது வயிற்றைக் குளுகுளுவென மாற்றுவதோடு, செரிமானத்தையும் எளிதாக்குகிறது. ஆனால் இதன் பயன் தெரியாமலே நாம் தொடர்ந்து பின்பற்றி வந்திருக்கிறோம். இவ்வளவு பயன்கள் உள்ள மோரை தொடர்ந்து பயன்படுத்தினால் நாம் என்றென்றும் உடல் நலம் குன்றாமல் வாழ்வது உறுதி என்பதில் மாற்றுக்கருத்தில்லை. 

Saturday, April 1, 2017

கோடை நோய்களை தவிர்க்க! thanks to dinamalar


Advertisement

பதிவு செய்த நாள்

02ஏப்
2017 
00:00
* வெயிலில் அலைவதால் தலையில் ஏற்படும் எண்ணெய் பிசுக்கை போக்க, கசகசாவை ஊற வைத்து, அரைத்து குளிக்கலாம். வடித்த அரிசி கஞ்சியை, வாரத்திற்கு ஒரிரு முறை தேய்த்து குளிப்பதும், பிசுபிசுப்பை நீக்கும். இரவு, விளக்கெண்ணையை உள்ளங்காலில் தேய்த்து, சிறிது நேரம் ஊற வைத்து குளிக்க, நல்ல தூக்கம் வரும்.
* கோடையின் முக்கிய பிரச்னை, 'டீ ஹைட்ரேட்' என, சொல்லப்படும், உடம்பின் நீர் வற்றுதல் தான். உடலில், நீர் சத்து குறையும் போது, சோர்வு ஏற்பட்டு, பல பிரச்னைகளை கொண்டு வரும். இதற்கு, இளநீர், பனை நுங்கு, முலாம்பழம், மாதுளம், வெள்ளரி பிஞ்சு, தர்பூசணி மற்றும் எலுமிச்சை ஜூஸ் அருந்தாலம்.
* விலாமிச்சை மற்றும் வெட்டி வேரை துணியில் கட்டி, மண் பானையிலுள்ள தண்ணீரில் போட்டு அருந்த, உடம்பு, குளிர்ச்சி அடையும். கிராமங்களில், விலாமிச்சை வேரை, தட்டி மாதிரி தயார் செய்து, தண்ணீர் தெளித்து வைப்பர். அந்த ஈரக்காற்று வீட்டிற்குள் இருக்கும் வெம்மையை தணிக்கும்.
பனை நுங்கிற்கு, உடலின் உள் மற்றும் வெளிச்சூட்டை தணிக்கும் சக்தி உள்ளது.
* இஞ்சி மற்றும் கல் உப்பு கலந்த மோர் சாப்பிட, கோடை காலத்தில் வரும் பித்த மயக்கம் போகும்.
* சூட்டை குறைக்க, வெள்ளரி் பிஞ்சில், உப்பு மற்றும் மிளகு சேர்த்து சாப்பிடலாம்.
* கோடை காலத்தில், நீர் காய்களான, பூசணி, பரங்கி, சுரைக்காய், பீர்க்கங்காய் மற்றும் கோவைக்காயை உணவில் அதிகம் சேர்க்கலாம்.
* சிலருக்கு, கோடையில் நீர்ச்சத்து வெளியேறி, மலச்சிக்கல் வரும். இவர்கள், கடுக்காய் தூளை, இளநீரில் கலந்து குடிக்கலாம். உலர் திராட்சை, சுக்கு,ரோஜா மொக்கு, இஞ்சி மற்றும் கடுக்காய் ஆகியவற்றை போட்டு, கஷாயம் செய்து சாப்பிட்டால், வெயில் கால மலச்சிக்கல் ஓடிப்போகும்.
* வெயிலில் அலைந்து திரும்பும் போது, வரும் தலைவலி பாடாய்ப்படுத்தும். இதற்கு, சந்தனக்கட்டை மற்றும் நெல்லி முள்ளி விழுதை, தனி தனியாக அரைத்து, இரண்டையும் கலந்து பத்து போட வேண்டும். ஏலக்காய் மற்றும் சீரகம் சேர்த்து அரைத்து, நெற்றியில் பற்று போட்டாலும், தலைவலி சரியாகும்.