Saturday, March 23, 2019

மீண்டும் வரவே வராது! thanks to dinamalar.com

கள்

மீண்டும் வரவே வராது!

 பதிவு செய்த நாள் : மார் 23, 2019 

Advertisement
 மீண்டும் வரவே வராது!
பேன் தொல்லையில்இருந்து விடுபட, எளிமையான தீர்வுகளை கூறும், ஆயுர்வேத மருத்துவர், ரா.பாலமுருகன்: பள்ளி பிள்ளைகளுக்கு, பேன் தொல்லை அதிகம் வந்தாலும், பெரியவர்கள், சிறு குழந்தைகள் கூட, இந்த தொல்லைக்கு தப்புவது இல்லை. ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு, தொற்றிக்கொள்ள கூடியது இது; அதேபோல், சீக்கிரமே பெருகவும் கூடியது.ஒரேயொரு பேன் மட்டும், ஒரு மாதத்தில், 300 முட்டை - ஈறுகளை இடுகிறது. இவை, ரத்தத்தை உணவாக உறிஞ்சும். முக்கியமாக, எப்போதும் தலையை சொறிந்தபடி இருக்கும் மிக மோசமான பழக்கமும், இதனால் ஏற்படுகிறது.பேன் மற்றும் ஈரு வராமல் தடுக்க, வாரம் இருமுறை தலைக்கு குளித்து, அழுக்கின்றி சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். தலை வறண்டு போகாமல், எண்ணெய் பதம் இருக்கும்படி பார்த்து கொள்ளலாம். நெருக்கமான சிறிய பல் சீப்பில், அவ்வப்போது சீவி பராமரிக்கலாம். தலை துவட்டும் துண்டு, சீப்பு, தலையணை போன்ற வற்றை, தனியாக பயன்படுத்தலாம்.முடக்கத்தான் இலை அல்லது சீதாப்பழ விதையை அரைத்து தலைக்கு தேய்த்து குளிக்கலாம். படிகாரத்தை தண்ணீரில் கரைத்து அல்லது கருந்துளசி கஷாயம் வைத்து, தலை அலசலாம். வேப்பெண்ணெய் உடன், தேங்காய் எண்ணெயை கலந்து, தலையில் தடவி, ஒரு மணி நேரம் ஊறவைத்த பின் குளிக்கலாம். இப்படி தொடர்ந்து, மூன்று வாரங்களுக்கு தேய்த்து குளிக்க, நீண்ட நாட்களாக இருந்த ஈரு மற்றும் பேன் தொல்லை குறையும்.கறுப்பு அல்லிக்கிழங்கு, சிறுநாகப்பூவை நெல்லிக்காய் சாற்றில் அரைத்து, தலைக்கு தடவினால், பேன் தொல்லை நீங்கும்; மீண்டும் வரவே வராது! வேப்பிலையை அரைத்து தலையில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து அலசினால், பேன் ஒழியும்.வேப்பிலை மற்றும் துளசி இலைகளை, தலையணையின் மீது பரப்பி, அதன் மேல் ஒரு துணியை வைத்து படுக்கலாம். வசம்புடன் தண்ணீர் சேர்த்து அரைத்து, தலையில் தேய்த்து, ஊற வைத்து, முடியை அலசினால், பேன் தொல்லை குறையும்.அரை டீஸ்பூன் வேப்பிலைத் துாள், அரை டீஸ்பூன் கடுக்காய்த் துாள், இரண்டு டீஸ்பூன் வெந்தயத் துாள், இரண்டு டீஸ்பூன் பயத்தமாவு, ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச்சாறு ஆகியவற்றை வெந்நீரில் கலந்து, தலையில் தேய்த்து, 10 நிமிடம் ஊற வைத்து தலையை அலசினால், பேன் தொல்லை நீங்கும்.

Sunday, March 10, 2019

உடல், பொருள், ஆவி - மனைவி thanks to dinamalar .com


உடல், பொருள், ஆவி - மனைவி

 Advertisement
 உடல், பொருள், ஆவி - மனைவி
411Shares


'யாயும் ஞாயும் யாராகியரோ.....எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்யானும் நீயும் எவ்வழி அறிதும்செம்புலப் பெயல்நீர் போலஅன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே”என்னுடைய தாயும், உன்னுடைய தாயும் உறவினரா?என் தந்தையும் உன் தந்தையும் உறவினரா?நானும், நீயும் எவ்வாறு முன்பு அறிந்தோம்?செம்மண் நிலத்தில் பெய்த மழைநீர் போல...மழைநீரானது மண்ணின் நிறத்தை ஏற்று ஒன்றியபின் யாரால் இரண்டையும் மீண்டும் தனித்தனியே பிரிக்க முடியும்? அன்புடைய நம் இருவருடைய நெஞ்சம் இரண்டற கலந்தபின்.....எப்படிப்பட்ட புனிதமானது இந்த கணவன், மனைவி உறவு. அக்னி சாட்சியாக சுக, துக்கங்களில் துணையிருப்பேன் என்று சத்தியம் செய்து, குடும்ப வாழ்க்கையை துவங்குகிறோம். என்னுடைய தோழிகள் இருவரின் வாழ்வில் நடந்த யரங்களையும், ஒருவர் அதிலிருந்து எப்படி மீண்டு வந்தார், இன்னொருவருடைய வாழ்க்கை பயணம் எப்படி கரடுமுரடாகி போனது என்பது பற்றியதே இக்கட்டுரை.

திக்கற்ற காட்டில்


என் தோழியின் கணவர் சாலை விபத்தில் அகால மரணம் அடைந்தார் என்ற செய்தியை கேட்டதும், அதிர்ந்து போனேன். அவளுடன் கல்லுாரியில் படித்த தோழிகள் சேர்ந்து அவள் இருக்கும் ஊர் நோக்கி விரைந்தோம். போகும் வழியெல்லாம், அவள் கல்லுாரி நாட்களில் இளவரசியாக சுற்றி திரிந்தது, பட்டப்படிப்பு, மேற்படிப்பு படிக்கும் பொழுது எங்கள் கல்லுாரியின் தலைவியாக இருந்து திறமையாக செயல்பட்டது, அவளின் அழகு, சுறுசுறுப்பு என்று சந்தோஷமாக திரிந்தவளை இப்படி ஒரு சூழ்நிலையில் சந்திக்க போகிறோமே என வருத்தப்பட்டுக் கொண்டே அவள் வீட்டைச் சென்றடைந்தோம்.தோழி, அவளுடைய அம்மா, அவளுடைய இரண்டு பெண் குழந்தைகளையும் சமாதானம் செய்யும் பொருட்டு அவர்களின் அருகில் அமர்ந்து ஆறுதல் கூறினோம். அப்பொழுது தோழியின் தாய் கூறிய விஷயங்கள் எங்களை மிகவும் மனவேதனையில் ஆழ்த்தியது. தோழியின் கணவர், மனைவியை மதித்து எந்தவொரு விஷயத்தையும் கலந்து பேச மாட்டாராம். அவருக்கு எவ்வளவு வருமானம், எந்த வங்கியில் அவர் கணக்கு வைத்துள்ளார், எங்கெல்லாம் சொத்து வாங்கி வைத்துள்ளார், வங்கி பாஸ்புக், சொத்து பத்திரங்களை எங்கு பாதுகாப்பாக வைத்துள்ளார் என்ற எந்த வொரு விபரத்தையும் மனைவியிடம் கூறியதே இல்லையாம். ஏதாவது இன்ஸ்சூரன்ஸ் செய்துள்ளாரா? என நாங்கள் கேட்டபொழுது தெரியாதும்மா. ஏதாவது விபரம் கேட்டால் உடனே சத்தம் போட்டு என் மகளை மருமகன் அடக்கிவிடுவார். என் மகளும் அவரை எதிர்த்து பேசாமல் அடங்கிவிடுவாள்.இப்பொழுது என்னுடைய மகளின் வாழ்க்கை கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் உள்ளது. மருமகன் இறந்துவிட்டான் என்ற சோகத்திற்கு மேல் தன்னுடைய மகள் இனி எப்படி வாழ்வாள் என்ற பயமே அவரின் அழுகையில் ஓங்கி இருந்தது.


பெண் தொழில் அதிபர்


என் ஒரு தோழியின் கணவர் கட்டுமானத் தொழிலுக்கு தேவையான பொருட்களை விற்பனை செய்யும் கடையை நடத்தி வந்தார். தினமும் டைரி எழுதும் பழக்கம் உள்ளவர். அவர் ஆறடி உயரம், நல்ல சிகப்பு நிறம், அழகான உருவம் கொண்டவர். என் தோழியை அவருக்கு பெற்றோர்கள் தேர்ந்தெடுத்து நிச்சயம் செய்யும்பொழுது நாங்களே பிரமித்துவிட்டோம். தோழி குண்டாக, கறுப்பாக, குட்டையாக இருப்பார். ஆனால், இனிமையாக பேசுவாள், நல்ல குணவதி. தோழியும் அவர் கணவரும் அவ்வளவு அன்னோனியமாக இருப்பார்கள். பார்ப்பதற்கே ஆசையாக இருக்கும் அவர்கள் குடும்பம் நடத்தும்முறை. தினமும் இரவு 10:00 மணிக்கு கடையை அடைத்துவிட்டு, அவர் வரும்வரை வீட்டிலுள்ள அனைவரும் காத்திருப்பார்கள். அவர் வந்தபிறகே அனைவரும் ஒன்றாக சேர்ந்து அமர்ந்து சாப்பிடுவார்கள். சாப்பிடும்பொழுது தோழியின் கணவர் எந்த டீலரிடம் இருந்து எந்த பொருள், என்ன விலைக்கு வாங்கினேன், அன்று எப்படிப்பட்ட கஸ்டமர்கள் கடைக்கு வந்தார்கள், அவர்களை அவர் எப்படி சமாளித்தார், என்ற விபரங்களை குழந்தைகளிடமும், மனைவியுடனும் கலந்து பேசுவார். வீட்டில் ஒரு டைரி வைத்திருப்பார். அதில் வங்கி விபரங்கள், ஆதார், ஸ்மார்ட் கார்டு, எல்லா வகையான இன்சுரன்ஸ் விபரங்கள், சொத்து விபரங்கள், மேலும், சொத்துக்கள் எங்கெங்கு உள்ளது, அவற்றை என்ன விலைக்கு வாங்கினார் என்ற விபரங்களையும் எழுதி வைத்திருப்பார்.சில வருடங்களுக்கு முன்பு டெங்கு காய்ச்சலில் அவர் இறந்துவிட்டார். ஆனால், கணவர் இறந்த ஐந்தாவது நாள் அந்த சோகத்தை மறைத்து கடையில் அமர்ந்து வேலை செய்ய ஆரம்பித்துவிட்டார் என் தோழி. கணவன் நடத்திய வியாபாரத்தைவிட பல மடங்கு வியாபாரத்தை பெருக்கிவிட்டார். இன்று இரண்டு பெரிய கடைகளுக்கு அவர்தான் அதிபர். கணவர் எதையும் மறைக்காமல் மனைவிக்கு அனைத்து தொழில் ரகசியங்களையும் கூறிய காரணத்தால் என்னுடைய தோழி அதே கடை ஊழியர்களை வைத்து, அழகாக திறம்பட பலரும் புகழும் வண்ணம் அந்த கடையை நடத்தி வருகிறார்.

நிச்சயமில்லா வாழ்க்கை


என்னுடைய அம்மா, இரவு துாங்குவதற்கு முன்பு நாளை போக வேண்டிய இடம் அல்லது நாளை செய்யவேண்டிய செயலை நினைவு கூர்ந்தால், உடனே 'பிழைத்துக் கிடந்தால் பிச்சைக்காரனுக்கு” என்பார். இது நிதர்சனம் அற்ற வாழ்க்கை, எடுத்து வைத்த பழைய உணவு பொருட்களை, நாளை காலை நாம் உயிரோடு இருந்தால்தான் பிச்சைக்காரனுக்கு கொடுக்க முடியும் என்பது இதன் அர்த்தம்.ஒவ்வொரு மனிதனுக்கும் இறப்பு என்பது உறுதி. ஆனால், எப்பொழுது என்பது உறுதியில்லாதது. விரும்பியோ, விருப்பம் இல்லாமலோ, பெற்றோரின் வற்புறுத்தலினாலோ அல்லது விதியின் வசத்தாலோ வாழ்க்கை அமைந்து, சட்ட ரீதியாக கணவன், மனைவியாக உறுதி செய்யப்படுகிறதோ அன்றிலிருந்து அவனும் அவளும் வேறு வேறு அல்ல. மனைவி, கணவன் ஆகியோரின் குறைகளையும், நிறைகளையும் இருவரும் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.கணவன், மனைவியாக ஒன்று சேர்ந்து வாழ ஆரம்பித்த நாள்முதல் ஒவ்வொரு நாளையும், நிமிடத்தையும், வினாடியையும் இருவரும் சேர்ந்து அழகான குடும்பமாக செதுக்க ஆரம்பியுங்கள். இந்த தாய், தந்தைக்கு குழந்தையாக பிறக்க என்ன தவம் செய்தோமோ என உங்களது குழந்தைகள் பெருமைப்படும்படி குடும்பத்தை நடத்திச் செல்லுங்கள்.ஆணாகிப் பெண்ணாகிப் நின்றானவன்அவையொன்று தானென்று சொன்னானவன்தான் பாதி உமைபாதி கொண்டானவன்சரிபாதி பெண்மைக்கு தந்தானவன், என அனைத்துலகையும் ஆளும் ஈசனே உமையவளுக்கு தன்னுடைய உடம்பில் சரிபாதியை கொடுக்கும்பொழுது அவனுடைய குழந்தைகளாகிய நாம் எல்லாம் எம்மாத்திரம்...-அமுதா நடராஜன்எழுத்தாளர், மதுரைr_amudha@yahoo.com

Saturday, March 9, 2019

காரம், சூடு வேண்டாமே! - ஜீவன்குமார், குடல் மற்றும் இரைப்பை மருத்துவர். நன்றி: ஹெல்த் விகடன்-20190215


 நன்றி: ஹெல்த் விகடன்-20190215
காரமான உணவுகளிலிருக்கும் `கேப்சாய்சின்’ (Capsaicin) என்ற மூலக்கூறு, வயிறு, குடல், மூச்சுக்குழாய், வாய் போன்ற பகுதிகளில் உபாதைகளை ஏற்படுத்தும். தவிர, அந்தப் பகுதிகளில் வெப்பத்தை அதிகரித்து, எரிச்சலை ஏற்படுத்தும். இது தொடக்கநிலைதான். தொடர்ந்து இதேபோல் சாப்பிட்டுவந்தால், செரிமானக் கோளாறுகள் ஏற்படும். ஏற்கெனவே, நெஞ்செரிச்சல் அல்லது அல்சர் பிரச்னைகள் இருப்பவர்களுக்கு, பாதிப்புகள் தீவிரமடையலாம். 
காரமான உணவுகளில், அமிலங்கள் அதிகமாக இருக்கும் என்பதால், ‘உணவு எதுக்களித்தல்’ பிரச்னை வரலாம். தொடர்ந்து காரமான உணவுகளைச் சாப்பிட்டு வருபவர்களுக்குப் பசியின்மை ஏற்படலாம். காலப்போக்கில் இரைப்பை அழற்சியும் சேர்ந்துகொள்ளும். முதன்முறையாகக் காரமான உணவு சாப்பிடுபவர்களுக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி, செரிமானக் கோளாறுகள் ஏற்படலாம். அவர்கள் உடனே மருத்துவ ஆலோசனை பெற்று உணவு முறையில் மாற்றம் ஏற்படுத்திக்கொள்வது நல்லது.
காரமான உணவுகளைப்போலவே அதிக சூடான உணவுகளும் தவிர்க்கப்பட வேண்டியவை. சுடச்சுட உணவு உண்ணும் பழக்கம் இல்லாதவர்கள்கூட டீ, காபியைச் சூடாகக் குடிப்பார்கள். எந்த உணவையும், வெதுவெதுப்பான சூட்டில் சாப்பிடுவதே சரி. அதிகமாக வறுத்த உணவுகளிலும் கவனமாக இருக்கவேண்டியது அவசியம். காரம் குறைவான, வெதுவெதுப்பான, வேகவைத்த உணவுகளைச் சாப்பிடும் பழக்கமே  ஆரோக்கியமானது.’’

குழந்தைகளிடம் பேசுங்கள்... பேசுவதைக் கேளுங்கள்! thanks to dinamalar.com

குழந்தைகளிடம் பேசுங்கள்... பேசுவதைக் கேளுங்கள்!


குடும்பம்
சிவபாலன் இளங்கோவன், மனநல மருத்துவர்
``ஒரு பிரச்னை என்றால், அறிவும் அனுபவமும் நிரம்பிய பெரியவர்களே சில நேரங்களில் தடுமாறிவிடுகிறோம். சரி, குழந்தைகளுக்குப் பிரச்னை என்றால்? பெற்றோர்தான் அதற்குத் தீர்வுகாண வழிகாட்ட வேண்டும். அதைச் செய்யாமல் குழந்தைகள் மீதே குற்றம் சாட்டும்போது, `அட்டென்ஷன் சீக்கிங் பிஹேவியர்’ (Attention Seeking Behaviour) எனப்படும் கவன ஈர்ப்பு நடத்தையில் குழந்தைகள் இறங்குவார்கள்’’ என்கிறார் மனநல மருத்துவர் சிவபாலன் இளங்கோவன். அட்டென்ஷன் சீக்கிங் பிஹேவியர் என்றால் என்ன, அது ஏன் குழந்தைகளுக்கு ஏற்படுகிறது, தடுக்க என்ன செய்யலாம்? விரிவாக விளக்குகிறார் அவர். 
``கவன ஈர்ப்பு நடத்தை, அனைத்துத் தரப்பு  வயதினரிடமும் இருக்கும் ஒன்று. ஒருவரின் பிரச்னையை மற்றவர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளாதபோது, அதன் தீவிரத்தை மற்றவர்களுக்கு உணர்த்த இப்படி நடந்துகொள்வார்கள். இதைத் தவறு என்றும் சொல்ல முடியாது; வளர்ந்தவர்களைவிட, குழந்தைகளிடம் சற்று அதிகமாகக் காணப்படும். 

பிரச்னையைச் சொல்லும் அளவுக்கு பெற்றோர் சுதந்திரம் கொடுத்தால், குழந்தைகள் கவன ஈர்ப்பு நடத்தையில் இறங்க மாட்டார்கள். பள்ளியில் பிரச்னை; அதை விவாதிக்க பெற்றோர் தயாராக இருந்தால், குழந்தைகள் அவர்களிடம் சொல்லி, தீர்வு கண்டுவிடுவார்கள். ஆனால், பல குடும்பங்களில் பெற்றோரிடம் வெளிப்படைத் தன்மை இருப்பதில்லை. 

பள்ளியில் ஆசிரியர், ஒரு குழந்தைக்குத் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுக்கிறார்; இதனால் குழந்தைக்கு மனஅழுத்தம் ஏற்பட்டு, அவர் பாடம் நடத்தும்போது மட்டும் கவனம் செலுத்த முடியாமல் போகிறது. வீட்டில் சொன்னால், அதைக் கேட்கும் மனநிலையில் பெற்றோர் இல்லை. ஆசிரியரிடம் சென்று விவாதிக்கவும் அந்தக் குழந்தையால்  முடியவில்லை. இந்த நிலையில், `பள்ளிக்குப் போனால்தானே பிரச்னை?’ என்று கருதும் குழந்தை, அதைத் தவிர்க்க, `உடல்நிலை சரியில்லை’ என்று சொல்லும். பெற்றோர், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வார்கள். இதனால், குழந்தைக்கு இரண்டு அனுகூலங்கள். பள்ளிக்குப் போகவேண்டியதில்லை. பெற்றோரிடமிருந்து தொடர்ச்சியான கவனிப்பு கிடைக்கும். இந்த அனுபவம் கிடைத்த குழந்தை, வேறு எந்தப் பிரச்னை வந்தாலும், அட்டென்ஷன் சீக்கிங் பிஹேவியரில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளும்.  
தவிர, பிடிவாதம் பிடிப்பது, கோபப்படுவது, ஒழுக்கமின்றி நடந்துகொள்வது, பெற்றோர் பேச்சைக் கேட்காதது போன்றவற்றில் இறங்குவார்கள். 

அட்டென்ஷன் சீக்கிங் பிஹேவியருக்கான மூன்று காரணங்கள். 

* பெற்றோரிடம் வெளிப்படைத்தன்மை இருப்பதில்லை.

* சொல்வதைக் கேட்க ஆளில்லாமல் போவது. 

* பிரச்னையைத் தீர்க்க உதவாமல், பிறர் தன்னையே குற்றம்சாட்டுவது.

இந்தக் குழந்தைகளை எப்படி அணுகுவது?


நம் கவனத்தை ஈர்க்கத்தான் குழந்தை இப்படியெல்லாம் செய்கிறது என்று பெற்றோருக்குத் தெரிந்தால், கோபப்படக் கூடாது. என்ன பிரச்னை என்று கண்டறிய வேண்டும். திறந்த மனதுடன் குழந்தைகளிடம் பேச வேண்டும். 

மிரட்டுவது, குற்றம்சாட்டுவது போன்ற தொனியில் பேசக் கூடாது. `வா... உன் பிரச்னையை இருவரும் சேர்ந்து தீர்ப்போம்’ என்று ஆதரவு தரும்விதத்தில் பேச வேண்டும். இதனால், பெற்றோர் மீது குழந்தைகளுக்கு நம்பிக்கை ஏற்படும்; எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்வார்கள். அதைத் தீர்க்க வேண்டும் என்ற அவசியம்கூட ஏற்படாது. 

குழந்தைகளுக்கு, பிரச்னைகளை முதிர்ச்சியுடன் அணுகத் தெரியாது. அவற்றைத் தீர்க்க, நம் ஆலோசனைகளும் வழிமுறைகளும் தேவையாக இருக்கும். பின்னாளில், அதேபோல பிரச்னை ஏற்பட்டால், அதை எதிர்கொள்ள பெற்றோர் சொன்ன வழிமுறைகளையே பின்பற்றுவார்கள். 

ஒரு குழந்தை தனது கவனத்தை ஈர்ப்பதற்காக வயிற்றுவலி இருப்பதாகத் தொடர்ந்து பொய் சொல்லும். ஆனால், அப்படி எதுவும் இல்லையென்பதை மருத்துவரிடம் குழந்தையைக் காண்பித்து, உறுதிசெய்திருப்பீர்கள். ஆனால், குழந்தை தொடர்ந்து அதையே சொல்லிக்கொண்டிருந்தால், அதற்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது. குழந்தையின் மீது அக்கறை செலுத்தலாம். ஆனால், குழந்தை வெளிப்படுத்தும் நடத்தை மீதான கவனத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும். வெளிப்படையாக எதையும் பகிர்ந்துகொள்ளும் சுதந்திரத்தை, குழந்தைக்குக் கொடுக்க வேண்டும். நிறைய குழந்தைகள் தங்கள் பிரச்னையை மற்றவர்களிடம் சொல்வார்கள்; பெற்றோரிடம் மட்டும் சொல்ல மாட்டார்கள். அதனால்தான் சிலர் குழந்தையை மிரட்டி சில காரியங்களைச் சாதித்துக்கொள்கிறார்கள்.

இந்த நடத்தை நார்மலானதுதான். ஆனால், அது தொடர்ந்துகொண்டிருந்தால், அது ஓர் ஆளுமையாக மாற வாய்ப்பிருக்கிறது. எனவே, எச்சரிக்கை தேவை!’’ என்கிறார் சிவபாலன் இளங்கோவன்.   
இதற்குத் தீர்வு உண்டா? குழந்தைகள்நல ஆர்வலர் தேவநேயனிடம் பேசினோம்.

``குழந்தையிடம் கெட்ட வார்த்தை பேசக் கூடாது என்கிறோம். ஆனால், குழந்தைக்கு முன்பாக நாமே கெட்ட வார்த்தைகளை உபயோகிக்கிறோம். `பொய் சொல்லக் கூடாது’ என்கிறோம். நாமே பொய் சொல்கிறோம். எது சரி, தவறு என்பது குழந்தைகளுக்குத் தெரியாது. தங்களைச் சுற்றி நடக்கும் விஷயங்களிலிருந்தும் சூழலிலிருந்தும்தான் எல்லாவற்றையும் கற்றுக்கொள்கிறார்கள். 

குழந்தைகள் பிறரின் இயலாமையைத் தெரிந்துவைத்திருப்பார்கள். பெற்றோரிடம் எப்படிப் பேசினால் காரியத்தைச் சாதித்துக்கொள்ள முடியும் என்று அறிந்துவைத்திருப்பார்கள். அம்மா-அப்பாவுக்குள் பிரச்னை என்றால் குழந்தையின் அட்டென்ஷன் சீக்கிங் வேறு மாதிரியாக இருக்கும். அம்மாவைப் பற்றிக் குறை சொல்வதை அப்பா கேட்பார் என்றால், குழந்தை அதைச் சொல்லும். தன் மீது அப்பாவின் கவனம் குவியும் என்பதால், அப்படி நடந்துகொள்ளும். 

இன்றைக்குக் குழந்தைகள் குழந்தைத் தன்மையோடு வளர்வதில்லை. இணையதளங்களில் குழந்தைகள் பேசும் வீடியோக்களில் அதை கவனிக்கலாம். அது, குழந்தைகளின் நலனுக்கு எதிரானது என்பது பற்றி பலரும் யோசிப்பது இல்லை! பிறரைக் கவருவதற்காக குழந்தைகள் நடிப்பது ஆபத்தானது. அதைச் சரிசெய்ய வேண்டுமென்றால், முதலில் நாம் குழந்தைகளிடம் பேச வேண்டும். குழந்தையின் படிப்பு சார்ந்து மட்டும் அல்லாமல், நம் பழக்கவழக்கங்கள், பண்பாட்டுக்கூறுகள், உறவுகளை மீட்டெடுப்பது குறித்தெல்லாம் பேசவேண்டியது அவசியம்’’ என்கிறார் தேவநேயன்.

கோலிக்குண்டு, பல்லாங்குழி, பாண்டி... ஆட்டமெல்லாம் ஆரோக்கியம்! thanks to dinamalar.com


கோலிக்குண்டு, பல்லாங்குழி, பாண்டி... ஆட்டமெல்லாம் ஆரோக்கியம்!

கண்ணன் புகழேந்தி விளையாட்டு மருத்துவ நிபுணர்
விளையாட்டு என்றாலே குதூகலமாகிவிடுவார்கள் குழந்தைகள். பிறந்து சில மாதங்களில் கைகால்களை அசைக்கும் பருவத்திலேயே ஏதாவது ஒரு பொம்மையைவைத்து விளையாடத் தொடங்கிவிடுவார்கள். வளர வளர வயதுக்குத் தகுந்த விளையாட்டுகளில் ஆர்வத்தோடு இறங்குவார்கள். இன்றைக்கு அந்த விளையாட்டு நேரம் வெகுவாகக் குறைந்துவிட்டது; விளையாட்டுகளிலும் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஒரு காலத்தில் பரவலாக இருந்த பாண்டி, கில்லி, கண்ணாமூச்சி போன்றவை காணாமல் போய்விட்டன. கோலிக்குண்டுகளை உருட்டிய, பனங்காயில் செய்த மாட்டுவண்டியை ஓட்டிய காலம் மாறி, இப்போது செல்போன் கேம்ஸ், வீடியோ கேம்ஸ் என டிஜிட்டல் விளையாட்டுகளை மட்டுமே பெரும்பாலான குழந்தைகள் விரும்புகிறார்கள். குழந்தைகள் வெளியே சென்று ஆட விரும்பினாலும், பல பெற்றோர்கள் அதற்கு அனுமதிப்பதில்லை. அதனால், குழந்தையின் கல்வி பாதிக்கப்படுமோ என்று அச்சப்படும் ஆசிரியர்களும் பெற்றோர்களும்தான் அதிகமாக இருக்கிறார்கள். 
``குழந்தைகளின் படிப்பின் மீதிருக்கும் அக்கறையில் விளையாட அனுமதிக்காமல் இருப்பது, அவர்களின் உடலை அலட்சியப்படுத்தும் ஒரு செயல்’’ என எச்சரிக்கும் விளையாட்டு மருத்துவ நிபுணர் கண்ணன் புகழேந்தி, அதன் அவசியத்தை விரிவாக விளக்குகிறார்.

``படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தினால், குழந்தைகளின் மனம் ஒருவித படபடப்புடனேயே இருக்கும். விளையாட்டு மட்டும்தான் அவர்களை ஆசுவாசப்படுத்தும் அற்புத மருந்து. உடலை கவனிக்காமல், படித்து நல்ல நிலைக்கு வந்தாலும், வாழ்வில் வெற்றிபெற உடல் ஒத்துழைப்புத் தர வேண்டும். அதற்கு, சிறு வயதிலிருந்தே குழந்தைகள்   உடற்பயிற்சி செய்யவேண்டியது அவசியம். `ஏதாவது உடல்நலப் பிரச்னை வந்தால், மருத்துவரைப் பார்த்துச் சரிசெய்துகொள்ளலாம்’ என்ற மனப்பான்மைதான் இப்போது அனைவரிடமும் இருக்கிறது. பிரச்னை வராமல் முன்கூட்டியே தடுக்கும் உடற்பயிற்சிகள், விளையாட்டுகள் எல்லாம் நம்மிடம் இருக்கின்றன என்பதை எல்லோரும் மறந்துவிட்டார்கள். 
உலக அளவில் மாரடைப்பால் உயிரிழப்பவர்களில் இளம் வயதினராக இருப்பவர்கள் இந்தியர்களே. இதற்கு நகருதல், ஓடுதல், ஆடுதல் என்று எந்த உடற்பயிற்சிகளும் இல்லாமல் குழந்தைகள் வளர்வதும் ஒரு காரணம். இந்தச் சூழலில் நம் குழந்தைகளைப் பாதுகாக்க உடற்பயிற்சிகளில் ஈடுபடுத்தவேண்டியது அவசியம். பல் துலக்குவது, குளிப்பது போன்று உடற்பயிற்சி செய்வதும் நம் அன்றாடக் கடமைகளில் ஒன்று என்பதை ஆசிரியர்களும் பெற்றோர்களும் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். நேரடியான பயிற்சிகளாக இல்லாமல் விளையாட்டுகள் மூலம் கற்றுத் தரும்போது குழந்தைகள் இன்னும் அதிக விருப்பத்துடன் ஈடுபடுவார்கள். பிடித்த விளையாட்டுகளில் மிகப் பெரிய சாதனையாளராவது ஒருபுறம் இருக்கட்டும், தங்களின் ஆயுளைத் தக்கவைத்துக்கொள்வதற்காவது இன்றைய குழந்தைகள் அவசியம் விளையாட வேண்டும். உலகப் போர்களில் இறந்த மக்களைவிட போதிய உடற்பயிற்சி இல்லாமல் இறந்தவர்களே அதிகம். நம் ஆரோக்கியத்தைக் காப்பாற்றிக்கொள்ள மருத்துவத்துக்காகப் பல லட்ச ரூபாயைச் செலவு செய்வதைவிட உடற்பயிற்சிக்காக சில மணித்துளிகள் செலவு செய்தாலே போதும். விளையாட்டால் உடலுக்கு மட்டுமல்ல, மனதுக்கும் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். 

கிரிக்கெட், ஹாக்கி, ஃபுட்பால், வாலிபால் எனத் தங்களுக்குப் பிடித்த எதையும் குழந்தைகள் விளையாடலாம். அதற்கு வாய்ப்பில்லாத குழந்தைகள் நடப்பது, ஓடுவது போன்ற பயிற்சிகளில் ஈடுபடலாம். நாளொன்றுக்கு 45 நிமிடங்களாவது உடற்பயிற்சியில் ஈடுபடவேண்டியது அவசியம். நம் எதிர்காலத் தலைமுறையைக் காக்கவேண்டிய பொறுப்பு பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடம்தான் இருக்கிறது’’ என்கிறார் கண்ணன் புகழேந்தி. இன்றைய குழந்தைகளிடம் பொறுமை, நிதானம், சகிப்புத் தன்மை, சமூகத்துடன் ஒன்றிணைதல், குழு மனப்பான்மை போன்ற பண்புகள் குறைவாக இருக்கின்றன. பாண்டி, கில்லி, கண்ணாமூச்சி போன்ற நம் பாரம்பர்ய விளையாட்டுகள் வெறும் பொழுதுபோக்கு அம்சமாக மட்டுமல்லாமல் வாழ்க்கைக்குத் தேவையான பல நல்ல விஷயங்களையும் நமக்குக் கற்றுக் கொடுத்தன. 
நம் பாரம்பர்ய விளையாட்டுகளின் மகத்துவம் பற்றி விரிவாக விளக்குகிறார் ஸ்போர்ட்ஸ் சைக்காலஜிஸ்ட் கணேஷ்குமார்.
``கேரம், செஸ் போன்ற உட்கார்ந்து விளையாடும் விளையாட்டுகளாக இருந்தாலும் சரி, கிரிக்கெட், ஃபுட்பால், டென்னிஸ் போன்ற ஓடி, ஆடி விளையாடும் விளையாட்டுகளாக இருந்தாலும் சரி, அவற்றின் மூலம் நம் உடலுக்கும் மனதுக்கும் ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன என்பது உண்மைதான். அதே நேரம் நம் பாரம்பர்ய விளையாட்டுகளின் மூலம் உணர்வுரீதியாகவும், சமூகம் சார்ந்தும் பல நன்மைகள் கிடைத்தன. மனரீதியாக பாதிப்புக்குள்ளாகி, என்னிடம் வரும் பெரும்பாலான குழந்தைகளுக்கு நான் வழங்கும் முதல் பயிற்சியே நம் பாரம்பர்ய விளையாட்டுகள்தான். நல்ல உணர்வுகளைத் தூண்டுவது, பிறருடன் எப்படிப் பேசுவது, பழகுவது, சமூகத்துடன் ஒருங்கிணைவது போன்ற பல நல்ல விஷயங்களை நம் பாரம்பர்ய விளையாட்டுகள் இயல்பாகவே கொண்டிருக்கின்றன. அதற்குப் பல உதாரணங்களைச் சொல்ல முடியும்; பழங்காலத்தில் பெண்களால் விரும்பி விளையாடப்பட்டது, பாண்டி. தரையில் ஆறு அல்லது எட்டு கட்டங்கள் போட்டு, கையில் சதுர வடிவக்கல் ஒன்றை வைத்துக்கொள்வார்கள். ஆட்டம் தொடங்கியதும், அந்தக் கல்லை கட்டங்களைத் தாண்டி வீசிவிட்டு, ஒரு காலைத் தூக்கி, இன்னொரு காலை மட்டும் தரையில்வைத்து ஒவ்வொரு கட்டமாகத் தாண்டுவார்கள். அப்போது, ஒவ்வொரு கட்டத்தின் நான்கு திசைகளிலுமுள்ள எல்லைக்கோடுகளைக் காலால் மிதிக்காதபடி கவனமாகத் தாண்டி, கடைசியில் தாங்கள் ஆரம்பத்தில் தூக்கி எறிந்த கல்லை மிதித்து ஒரு சுற்றை நிறைவு செய்வார்கள். வயிறு மற்றும் இடுப்புப் பகுதிகளை கவனமாக பேலன்ஸ் செய்து விளையாடவேண்டியிருக்கும். 
கண்ணாமூச்சி... கண்களை மூடியபடி மற்றவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் விளையாட்டு. இந்த விளையாட்டின் மூலம் நம் குழந்தைகளுக்கு பொறுமையும் அறிவாற்றலும் பெருகும். கில்லியில் மரத்தால் ஆன ஒரு பெரிய குச்சியையும் ஒரு சிறிய குச்சியையும் வைத்து விளையாடுவார்கள். பெரிய குச்சியை வைத்து, சிறிய குச்சியை யார் கையிலும் சிக்கிவிடாமல் கவனமாக அடிக்க வேண்டும். பிறகு, சிறிய குச்சி சென்று சேருமிடத்திலிருந்து, குழி இருக்கும் இடம்வரை பெரிய கம்பால் அளந்துவர வேண்டும். இதன் மூலம் தசை வளர்ச்சியும் கணித அறிவும் மேம்படும்.

ஒரு கோலிக்குண்டை வைத்து, மற்றொன்றைக் குறிபார்த்து அடிக்கும்போது நம் உடலிலுள்ள சிறிய தசைகள் வலுவடையும். பார்வை, உற்றுநோக்கும் அறிவு மேம்படும். பெண்கள் தட்டாங்கல்லில் ஒரு கல்லை மேலே தூக்கிப் போட்டு, அந்தக் கல் கீழே வருவதற்குள் தரையில் மீதமிருக்கும் கற்களைக் கையால் வழித்து, மொத்தமாகப் பிடிப்பார்கள். இதன் மூலம் கை தசை வளர்ச்சி, பார்வைக் கூர்மை, கண், கை ஒருங்கிணைவு போன்ற பல விஷயங்கள் மேம்படும். பல்லாங்குழியில், எந்தக் குழியிலிருந்து காய்களை எடுத்து விளையாடினால் வெற்றி பெற முடியும் என்ற கணக்கு இருக்கிறது. இதன் மூலம் கணித அறிவு மேம்படும்.  
`ஊதுமுத்து’ என்ற புளிய விதைகளை வைத்து ஆடும் ஆட்டத்தில் வாயால் ஊதி ஒவ்வொரு விதையாக, ஒன்றுடன் மற்ற விதைகள் படாமல் லாகவமாக எடுக்க வேண்டும். இதனால் தசை வளர்ச்சி, அறிவாற்றல் மேம்படும். தாயக்கட்டையில் ஒன்று (தாயம்) போட்டால்தான் ஆட்டத்தையே தொடங்க முடியும். இதனால் குழந்தைகளுக்கு பொறுமை, விடாமுயற்சி போன்ற குணங்கள் வந்துவிடும். பெரியவர்களானாலும் இந்த குணம் அவர்களைவிட்டு விலகாது. பரமபதம், வாழ்வில் வெற்றி, தோல்விகளைச் சமாளித்து எப்படி இலக்கை அடைய வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுக்கும்.

சேர்ந்து விளையாடுவதன் மூலம் மற்றவர்களைப் புரிந்துகொள்ளும் குணம், விட்டுக் கொடுக்கும் குணம் இயல்பாகவே குழந்தைகளுக்கு வந்துவிடும். ஓர் இலக்கின் மீது லட்சியத்தின் மீது எப்போதும் கவனமாக இருக்க வேண்டும் என்ற அக்கறை வந்துவிடும். ஒரு பிரச்னையை எப்படித் தீர்ப்பது என்ற திட்டமிடுதல் தெரியும். கோபம் போன்ற கெட்ட குணங்கள் இருந்த இடம் தெரியாமல் ஓடிப்போகும்.

மொபைல் விளையாட்டுகளில் தோல்வியோ, வெற்றியோ விளையாடுபவருக்கு மட்டுமே தெரியும். ஆனால், மற்றவர்களுடன் இணைந்து விளையாடும்போது தோல்வியடைந்தால், பிறருக்கு முன்பாக அதை ஒப்புக்கொண்டாக வேண்டும். சிறு வயதிலேயே ஒப்புக்கொள்ளப் பழகிவிட்டால், பெரியவர்களானாலும் மற்றவர்களின் மீது பொறாமையோ, காழ்ப்புணர்ச்சியோ, வஞ்சமோ ஏற்படாது. பாரம்பர்ய விளையாட்டுகள், நம் குழந்தைகளை மிகச் சிறந்த மனிதர்களாக  சமுதாயத்துக்கு அடையாளப்படுத்தும். கிரிக்கெட்டில் ஒரு சச்சினாகவோ, செஸ்ஸில் விஸ்வநாத் ஆனந்தாகவோ வருவதற்குக்கூட அவை உதவிபுரியும்’’ என்கிறார் கணேஷ்குமார்.

இரா.செந்தில் குமார் - படங்கள்: க.பாலாஜி

உளவியல் உண்மைகள்!

பெ
ற்றோர்கள், பிள்ளைகள் தாங்கள் சொல்வதைக் கேட்க வேண்டுமென்றால், அவா்கள் தவறைத் திருத்த வேண்டுமென்றால், `நீ செஞ்சது தப்பு’, `நீ ஏன் இப்படி சோம்பேறியா இருக்கே’ போன்ற சுட்டிக்காட்டும் `நீ’ வார்த்தையை விலக்கிவிட்டு `நான்’ வார்த்தையைப் பிரயோகிக்க வேண்டும். பிள்ளை வீட்டுக்கு தாமதமாக வந்தால், `தினமும் நீ லேட்டா வர்றதை நெனைச்சு நான் கவலைப்படுறேம்ப்பா’ என்று உங்கள் உணா்வுகளை வெளிப்படுத்தினால், அவர்கள் தவறை உணா்வதற்கு வாய்ப்பிருக்கிறது.

உளவியல் உண்மைகள்!

உ
ங்களை யாருக்காவது பிடிக்கவில்லை என்றால், அதே நேரம் அவரிடம் நல்லுறவு வைத்துக்கொள்வது முக்கியமென்றால் அவ்வப்போது அவரைப் பார்த்து புன்னகை செய்யுங்கள். சிறு சிறு பாராட்டுகளை (உண்மையான) தெரிவியுங்கள். சின்ன உதவிகளைச் செய்யுங்கள். பிறகு பாருங்கள் மாற்றத்தை! 

காலை எழுந்ததும் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது thanks to dinamalar.com

காலை எழுந்ததும் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?


காலையில் வெகுநேரம் உறங்கி விட்டு அவசர அவசரமாக எழும்புவதும், உடனடியாக வேலைக்கு கிளம்புவதும் எல்லோரும் செய்யக்கூடிய தவறு. ஒரு நாளின் துவக்கமே அமைதியாக தொடங்க வேண்டாமா? எனவே மெதுவாக துயில் எழுங்கள். சென்ற நாளில் நடந்த எல்லா கவலைகளையும் குழப்பங்களையும் மறந்து விடுங்கள். புதிதாக துவங்க இருக்கும் நாள் குறித்து திட்டமிடுங்கள். நீங்கள் கண் விழித்ததும் நேர்மறை எண்ணங்களைத் தோற்றுவிக்கும் இனிய சூழலைப் பாருங்கள். அது உங்களை பிரதிபலிக்கும் கண்ணாடியாகக் கூட இருக்கலாம்.
காலை
எழுந்ததும் சோம்பல் முறிப்பது நல்லது தான். ஆனால் அதை மெதுவாகச் செய்வது நல்லது. ஐந்து நிமிடங்கள் படுக்கையில் அமர்ந்தபடியே ஆழ்ந்து மூச்சு விட்டபடி கண் மூடி தியானத்தில் இருப்பது நல்லது. இது உங்களின் சுவாசத்துக்கு இதயத்துக்கும் நல்லது. பின்னர் கைகால்களை சுழற்றி எளிய உடற்பயிற்சிகளை செய்யலாம். அதற்கு முன்னர் 2 குவளை குளிர்ந்த நீர் அருந்த வேண்டும். இதனால் உங்களின் வயிற்றில் இருக்கும் நச்சுகள் நீங்கும்.
அதிகாலை காற்றை சுவாசியுங்கள். சூரிய ஒளியினை பெற்றுக்கொள்ளுங்கள். இது உங்களுக்கு பல வியாதிகளை வரமால் தடுக்கும். பட்சிகளின் குரலினை கவனியுங்கள். இவை உங்களின் மனதுக்கு புத்துணர்ச்சி ஊட்டும். காலையிலேயே சமுக வலைத்தளங்களில் நேரம் போக்குவது வீணானது. அதற்கு பதில் நல்ல புத்தகங்கள், நாளிதழ்கள் போன்றவற்றை படித்து பயன்பெறலாம். வேண்டுமானால் உங்களின் நண்பர்களுக்கு காலை வாழ்த்தினை சிறிது நேரம் அனுப்பலாம். இது உறவுகள் மேம்பட உதவும்.
அதிகாலை
2 அல்லது 3 நிமிடத்துக்கு மேல் பல்லை விலக்காதீர்கள். குளிர்ந்த நீரிலேயே குளியுங்கள். ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி, சிறிது நேர உடற்பயிற்சி, கொஞ்ச நேரம் படிப்பு என்று உங்கள் காலை தொடர்ந்தால் அன்றைய நாள் முழுவதும் உற்சாகமாக உணரலாம். அதுமட்டுமில்லை வெறும் வயிற்றில் நீங்கள் எடுத்துக்கொள்ளும் முதல் உணவு தான் உங்களின் அன்றைய தினத்தினை வழிநடத்துகிறது. எனவே காலை உணவை தவிர்க்கவே தவிர்க்காதீர்கள்.