Wednesday, March 18, 2020

முடக்கத்தான் போதும் thanks to dinamalar.com



முடக்கத்தான் போதும்!

 பதிவு செய்த நாள் : மார் 19, 2020 

Advertisement
 முடக்கத்தான் போதும்!
நடக்க முடியாமல் அவதிப்படுபவர்களையும் நடக்க வைக்கும் அற்புத மூலிகையான, முடக்கறுத்தான் பற்றி, சித்த மருத்துவர், 'அல்மா' வேலாயுதம்: நாள்தோறும் நடைபயிற்சி மேற்கொண்டால், உயர் ரத்த அழுத்தம் குறையும்; உடல் எடை குறையும்; எலும்புகள், தசைகள் வலுப் பெறும்.ஆனால், முடக்குவாதம் பாதிப்பு உடையவர்களுக்கு, நடமாட முடியாது; நடைபயிற்சி மேற்கொள்ள முடியாது. முடக்குவாதம், ஆண்களை விட, பெண்களையே அதிகமாக தாக்குகிறது. இந்த நோய், கால்களை மட்டுமின்றி, இதயம், நுரையீரலிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.இத்தகைய கொடுமையான முடக்குவாதத்தை கட்டுப்படுத்தும் திறன், படர்ந்து கிடக்கும், முடக்கத்தான் எனப்படும் முடக்கறுத்தான் செடிக்கு உள்ளது. ஆரோக்கிய சமையலில் இடம்பிடித்துள்ள இந்த முக்கிய மூலிகையை, சூப் ஆக தயாரித்தும், தோசையாக வார்த்தும், துவையலாக அரைத்தும், கஷாயமாக மாற்றியும் பயன்படுத்தலாம்.முடக்கத்தான் தோசைக்கு அரைக்க, அரிசி மாவுடன் உளுந்து சேர்க்க தேவையில்லை. உளுந்து அளவுக்கு இந்த கீரையை சேர்த்து அரைத்து, தேசையாக சாப்பிடலாம். இதை, அடையாகவும் தயாரித்து சாப்பிடலாம். உடல் வலி, அலுப்பு காணாமல் போய் விடும்.இதன் இலையை, தேநீர் போல தயாரித்து அருந்தினால், உடல் சோர்வு மறைந்து, உற்சாகம் பிறக்கும். துவையலாக அரைத்து சாப்பிட, முடக்கத்தான் கீரை மூன்று கைப்பிடி, தேவையான அளவு மிளகாய் வற்றல், புளி, வெந்தயம், தேங்காய் துருவல், உப்பு ஆகியவற்றை அரைத்து, விளக்கெண்ணெயில் வதக்கி, நன்கு அரைத்து, சாதத்துடன் தொட்டு அல்லது பிசைந்து சாப்பிட முடியும்.சூப் ஆக தயாரிக்க, இரண்டு கைப்பிடி முடக்கத்தான் இலை தேவைப்படும். அவித்து வரும் தண்ணீருடன், வெங்காயம், தக்காளி, சோள மாவு, உப்பு ஆகியவற்றை தேவையான அளவு சேர்த்து கொதிக்க விட்டு, சூப் போல வந்ததும் பருக வேண்டியது தான்.உடல் சோர்வு, இடுப்பு வலி போன்ற பிரச்னைகளில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும். மலச்சிக்கல் பிரச்னை தீரும்.இந்த கீரையை தொடர்ந்து உணவில் சேர்த்து வர, முதுகுத்தண்டு தேய்மானம், எலும்பு தேய்மானம், மூட்டு தேய்மானம் போன்ற பிரச்னைகள் வராமல் வாழலாம். 40 வயதைத் தாண்டியவர்கள், வாரம் ஒரு முறையாவது, முடக்கத்தான் கீரையை பயன்படுத்துவது, நல்ல பலனைத் தரும். மிகவும் எளிமையான முறையில், இந்த மூலிகையை பயன்படுத்த முடியும். இந்த கீரையை, நிழலில் உலர்த்தி, பொடி செய்து, தண்ணீரில் கலந்து குடித்து வந்தால், மூலநோய், நாள்பட்ட இருமல் குணமாகும்!

Saturday, March 14, 2020

நோய்க்கு தங்கக் குட மருந்து thanks to dinamalar.com

நோய்க்கு தங்கக் குட மருந்து!
Advertisement
 
 
 
Advertisement

 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15மார்
2020
00:00
நோய்கள் தீர, கேரள மாநிலம், சேர்த்தலா, மருத்தோர் வட்டத்திலுள்ள, தன்வந்திரி கோவிலில், தங்கக் குடத்திலுள்ள மருந்து தருகின்றனர்.
தேவர்களும், அசுரர்களும், பாற்கடலை கடைந்த போது, ஜோதி வடிவாக, மஞ்சள் ஆடை உடுத்தி, அமிர்த கலசத்துடன் தோன்றியவர், தன்வந்திரி. ஆயுர்வேதத்தின் பிதா எனப்படுகிறார். நான்கு கைகளை உடைய இவரது கழுத்தில், மூன்று ரேகைகள் காணப்படும்.
வயலார் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர், பல காலமாக, வயிற்று வலியால் அவதிப்பட்டார். பலரிடம் வைத்தியம் பார்த்தும் பலனில்லை. வைக்கம் சென்று, வைக்கத்து அப்பன் சுவாமியை தரிசித்தார். வலி குறைந்தது. கோவிலை விட்டு வெளியே வந்ததும், மீண்டும் வலி வந்தது. எனவே, கோவிலிலேயே தங்கி விட்டார்.
அன்றிரவு, அவரது கனவில் தோன்றிய சிவன், 'பக்தனே... இந்தக் கோவிலை விட்டு வெளியே சென்றதும், உனக்கு மறுபடியும் வலி ஏற்படும்; எனவே, சேர்த்தலா சென்று, 'கேளம்' குளத்தில் மூழ்க வேண்டும். நீரின் அடியில், மூன்று விக்ரகம் கிடைக்கும்.
'முதல், விக்ரகம் சக்தி வாய்ந்ததால், அதை குளத்திலேயே போட்டு விடு. இரண்டாவது விக்ரகத்தை, அந்தணருக்கு தானமாக கொடு. மூன்றாவது விக்ரகத்தை, விதிப்படி பிரதிஷ்டை செய். அப்போது உன் நோய் அகலும்...' என்றார்.
அதன்படி இரண்டாவதாக கிடைத்த, தன்வந்திரி விக்ரகத்தை, ஒரு நம்பூதிரிக்கு தானம் செய்தார். அதை, மண்மூசு என்பவர் உதவியுடன் கோவில் கட்டி, தன்வந்திரியை பிரதிஷ்டை செய்தார்.
குழந்தை பாக்கியத்துக்காக, 'சந்தான கோபாலன்' என்ற கதகளி வழிபாடு நடத்துகின்றனர். 28 மூலிகைகளை தயிரில் கலந்து, முக்குடி எனும் மருந்து செய்வர். பூஜை செய்த மருந்து, தன்வந்திரி கையிலுள்ள தங்கக் குடத்தில் இருக்கும். நோய் தீர, இதைத் தருவர். சுவாமிக்கு சாத்தும் வெண்ணெயும், நோய் தீர தரப்படும்.
ரத்தத்தில், கிருமிகள் இருந்தால், அட்டைப்பூச்சி மூலம் உறிஞ்ச வைப்பது, அக்கால வழக்கம். இதைக் குறிக்கும் வகையில், தன்வந்திரியின் இடது கையில் வெள்ளியால் ஆன, அட்டைப்பூச்சி காணப்படுகிறது. இங்கு நடக்கும் உற்சவத்தின் போது, ஆஸ்துமா, வாதம் குணமடையவும், நினைத்தது நடக்கவும், 'கயற்றேல் வானம்' என்ற பூஜை செய்யப்படுகிறது.
அமாவாசை பிதுர் காரிய நிகழ்ச்சியின் போது, காட்டு சேப்பங் கிழங்கால் தயாரிக்கும், 'தாள்கறி' நிவேதனம் செய்யப்படுகிறது. இந்த கிழங்கை தொட்டாலே அரிக்கும். இதை, மூலிகைகளுடன் சேர்த்து மருந்தாக்கி சாப்பிட்டால், நோய் தீரும். மருந்துகள், முன்பதிவு செய்தால் கிடைக்கும்.
எர்ணாகுளத்திலிருந்து, 40 கி.மீ., துாரத்தில் சேர்த்தலா உள்ளது. இங்கிருந்து, 2 கி.மீ., துாரத்தில் மருத்தோர் வட்டம் உள்ளது.
காலை, 5:00 - 10:30 மணி, மாலை, 5:00,- இரவு, 8:00 மணி வரை கோவில் திறந்திருக்கும்.
தொடர்புக்கு: 092491- 13355.

Monday, March 9, 2020

!சாதம் பிரசாதம் ஆகட்டும்! thanks to dinamalar.com

!சாதம் பிரசாதம் ஆகட்டும்!
செப்டம்பர் 29,2009,
15:05  IST
எழுத்தின் அளவு:
உணவை நல்லமுறையில் சமைப்பது எந்த அளவுக்கு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் அவ்வுணவு தூய்மையான மனதுடன் செய்ய வேண்டும் என்பதும் ஆகும். சமையல் செய்பவரின் மனோபாவமும் அவர் செய்யும் உணவில் கலந்து விடுவது இயற்கையே. சமைப்பவர் நல்ல குணமும், ஒழுக்கமும் கொண்டவராக இருக்க வேண்டும். மிகவும் தூய்மையை விரும்புபவர்கள் நிச்சயமாக தங்கள் தேவைகளை தாங்களே நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்று முற்காலத்தில் நம் முன்னோர்கள் நெறிமுறைகளை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
நாம் நமக்காக சமைக்கும்போது அதை சாதம் என்று அழைக்கிறோம். அதே உணவினை ஆண்டவனுக்கு படைத்த பின் மீண்டும் நம்மிடம் கொண்டுவரும்போது பிரசாதமாகி விடுகிறது. "பிர' என்றால் "கடவுள் தன்மை'. உணவு என்பது மட்டுமல்ல, கடவுளுக்குப் படைக்கும் எந்தப்பொருளும், மேலும் புனிதம் பெற்று நம் மனதைத் தூய்மைப்படுத்துகிறது. கடவுளுக்குப் படைக்கப்பட்ட உணவினால்(பிரசாதத்தினால்) நம் உணர்வுகள் மேன்மைபெற்று வாழ்வு அர்ததமுள்ளதாக மாறிவிடுகின்றன.

Saturday, March 7, 2020

குழந்தை சிவன் - நன்றி: தினmalar


தெய்வமே, சிரார்த்தம் செய்யும் அதிசயம், திருவண்ணாமலை அருகிலுள்ள, பள்ளி கொண்டாப்பட்டு என்ற ஊரில், மாசி மகத்தன்று நடக்கிறது. இவ்வூரின் புராணப் பெயர், சம்பந்தனுார்.

திருவண்ணா மலையை, வல்லாள மகாராஜா ஆட்சி செய்தார். இவரது மனைவியர், மல்லமா தேவி, சல்லமா தேவி. இவர்களுக்கு, குழந்தை இல்லை. அண்ணாமலையாரை வேண்டினார், மகாராஜா.

ஒருநாள், துறவி ஒருவர், வல்லாளன் அரண்மனைக்கு வந்தார்.

'எனக்கு, இரவு வேளையில் சேவை செய்ய, தகுதியான ஒரு பெண் உடனடியாக வேண்டும்...' என்றார்.

'நான், அவருக்கு சேவை செய்கிறேன்...' என்றாள், சல்லமா தேவி.

'ஒரு ஆணுடன், தன் மனைவி தனித்திருப்பதா...' என, மன்னர் யோசித்தாலும், வேறு வழியின்றி சம்மதித்தார். துறவியின் கால்களை, சல்லமா தேவி பிடித்து விட்டுக் கொண்டிருந்தபோது, அவர் மறைந்தார். அங்கே ஒரு குழந்தை தோன்றியது.

சல்லமா தேவிக்கு, மகிழ்ச்சி தாங்கவில்லை. மன்னரை அழைத்து, குழந்தையைக் காட்டினாள். அவரும், அண்ணாமலையாரே தங்களுக்கு குழந்தையாக வந்துள்ளார் என, மகிழ்ந்தார். சற்றுநேரம் அவர்களுடன் இருந்த குழந்தையும், மறைந்து விட்டது. மன்னர் வருந்தியபோது, அண்ணாமலையாரின் குரல் ஒலித்தது.'மன்னா... நானே, துறவியாகவும

குழந்தையாகவும் வந்தேன். அவ்வப்போது தோன்றி உங்களுடன் விளையாடி, மறைவேன். நீயே, என் தந்தை. மல்லமா, சல்லமா என் தாய்மார்...' என்றது.

இதன் பிறகு, அவ்வப்போது, மன்னர் தம்பதிகள் சாப்பிடும்போது, குழந்தை தோன்றி விளையாடும். ஒருநாள், மன்னர் இறந்து போனார். அரண்மனைக்கு வந்தார், அண்ணாமலையார்.

'அன்னையரே... உங்கள் குழந்தையான நானே, தந்தைக்கு, இறுதிக்கடன் செய்வேன்...' என்றார். அதன்படி, இறுதிக்கடனும் செய்தார்.

வல்லாள மன்னர் உயிர் விட்ட, மாசி மகத்தன்று, திருவண்ணாமலையில் இருந்து, 5 கி.மீ., துாரத்திலுள்ள, பள்ளி கொண்டாப்பட்டு கிராமத்துக்கு, அண்ணாமலையார் எழுந்தருள்வார். அங்கு, மன்னனுக்கு, சிரார்த்தம் செய்யும் நிகழ்ச்சி பாவனையாக நடத்தப்படும்.

மேள வாத்தியம் ஏதுமில்லாமல், ஒற்றைத்தாளம் போட்டபடி, அண்ணாமலையார், அமைதியாக பவனி செல்வது மனதை உருக்கும். இங்குள்ள ஒரு கோபுரத்துக்கு, வல்லாளன் கோபுரம் என, பெயர் சூட்டப்பட்டுள்ளது.

மாசி மகமான இன்று, இந்த வரலாற்றை படித்தவர்கள், சொர்க்க பதவி அடைவர்.

தி. செல்லப்பா

காவலன் ஆப்'பை thanks to dinamalar.com

பெண்களின் பாதுகாப்பிற்காக அறிமுகப்படுத்தப் பட்டிருக்கும், 'காவலன் ஆப்'பை பதிவிறக்கம் செய்தேன். பதிவிறக்கம் செய்யும்போது, நம், 'பர்சனல்' தகவல்கள் கேட்கப்பட்டன. விபரங்களை கொடுத்ததும், நமக்கு ஆபத்து வரும்போது, தெரியப்படுத்த விரும்பும் மூன்று பேரின் விபரங்கள் கேட்கப்பட்டன.
அம்மா - அப்பா மற்றும் அக்காவுடைய தகவல்கள், உறவு முறை மற்றும் தொலைபேசி எண்ணும் பதிவு செய்தேன். எல்லாம் முடிந்த பின், 'ஆப் டவுண்லோடு' என்ற செய்தி வந்ததும், எஸ். ஓ. எஸ்., என, ஒரு, 'லோகோ' வந்தது.
அதன்பின், வேறு ஏதாவது வருகிறதா என, 'டச்' செய்தது தான் தாமதம், அந்த நொடியில், அம்மா, அக்கா மொபைலுக்கு, 'மெசேஜ்' வரும் ஒலியுடன், என் போனில் அதிர்வுடன், பேச அழைப்பு வந்தது. எண், 100ஐ பார்த்தவுடன், 'குப்'பென்று வியர்த்தது.
'இவ, இங்க தான இருக்கா... இது என்ன மெசேஜ்...' என்று கேட்டார், அம்மா. ஒரு வழியாக, தைரியத்தை வரவழைத்து, எடுத்து பேசினேன்.
எதிர்முனையில், 'நாங்க, சென்னை, 'கன்ட்ரோல்' அறையில் இருந்து பேசறோம்... என்ன ப்ராபளம்...' என, கேட்டனர்.
நடந்த அனைத்தையும் சொல்லி, வருத்தம் தெரிவித்தேன்.
'இட்ஸ் ஓ.கே.,மா... ஏதாவது பிரச்னைன்னா, அந்த, 'லோகோ'வை, 'டச்' பண்ணினா போதும், எங்க உதவி கண்டிப்பா இருக்கும்...' என்றனர்.
பயத்தில் நடுங்கினாலும், மிக மகிழ்ச்சியாக இருந்தது. வேதனை என்னவென்றால், இதுபற்றி நிறைய பேருக்கு தெரிந்தும், 'ஸ்மார்ட் போன்' வைத்திருந்தும், இதை, 'டவுண்லோடு' பண்ணவில்லை என்பது தான்.
வேலைக்கு செல்லும் பெண்கள் ஒவ்வொருவரும், இந்த காவலன் செயலியை பதிவிறக்கம் செய்தால், ஆபத்து காலத்தில், உதவ முடியும் என்று நம்புகிறேன்.
பயனுள்ள இந்த செயலியை, பெண்கள், அலைபேசியில் உடனடியாக, 'டவுண்லோடு' செய்து கொள்ள வேண்டுகிறேன்.
பிரியா, கோவை

பெண்களின் மன அழுத்தத்தை குறைக்க, சில வழிகள்! thanks to dinamalar.com

பெண்களின் மன அழுத்தத்தை குறைக்க, சில வழிகள்!
Advertisement
 
 
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08மார்
2020
00:00
மன அழுத்தம் - இன்றைய சூழ்நிலையில், அனைவரும் சந்திக்கும் ஒரு மிகப்பெரிய பிரச்னை. குறுகிய கால மன அழுத்தத்திலிருந்து, நீண்ட கால மன அழுத்தம் வரை, அனைத்துமே நமக்கு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது தான்.
மன அழுத்தம் ஏற்படாமல் இருக்க...

* காலையில், 15 நிமிடம் முன்னதாகவே எழுந்து விடுங்கள். உடற்பயிற்சி, யோகா என, இவற்றில் ஏதேனும் ஒன்றை செய்வது, மன அழுத்தத்திற்கு மிகச்சிறந்த மருந்தாகும்
* எங்காவது செல்ல வேண்டியிருந்தால், அதற்குரிய ஆடைகள் மற்றும் பொருட்களை முன்னதாகவே எடுத்து வைத்துக் கொள்ளவும்
* அன்று செய்ய வேண்டிய பணிகளையும், எப்போது செய்யப் போகிறோம் என்பதையும், காகிதத்தில் குறித்து வைப்பதால், எந்த வேலையையும் மறக்காமல் இருக்கவும், அதனால் ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்கவும் வழி செய்யும்
* பேருந்துக்காக காத்திருப்பது சிரமம் என்று கருதாதீர். அச்சமயத்தில், ஒரு புத்தகத்தை படிப்பது, காத்திருத்தலை சுகமாக்கும். அது மட்டுமல்லாமல், தேவையற்ற மன அழுத்தத்தையும் குறைக்கும்
* வேலைகளை பிறகு செய்து கொள்ளலாம் என, ஒதுக்கி வைப்பது, மன அழுத்தத்தை அதிகரிக்கும். செய்ய வேண்டியதை தாமதப்படுத்தாமல் செய்யுங்கள்
* ஒரு இடத்திற்கு செல்ல வேண்டுமென்றால், முன்கூட்டியே செல்ல பழகுங்கள். 10 நிமிடத்தில் செல்லக்கூடிய இடத்திற்கு, 20 நிமிடம் முன்பே செல்லுங்கள்
* தவறாய் போன ஒரு விஷயம் குறித்து, சிந்தித்துக் கொண்டே இருப்பதை விட, சரியாய் நிகழ்ந்த பலவற்றை குறித்து, அடிக்கடி நினைத்து மகிழுங்கள்
* புதிய இடங்களுக்கு செல்வதாக இருந்தால், முதலிலேயே வழியை தெளிவாக கேட்டு கொள்வது சிறந்தது. இதனால், மன அழுத்தத்தை குறைக்க முடியும்
* மனதில் கவலைகள் இருக்கும்போது, உங்களுக்கு பிடித்தவர்களுடனோ அல்லது பிடித்த விஷயத்தின் மீதோ கவனம் செலுத்துங்கள்
* மன அழுத்தம் இருக்கும் சமயத்தில், சிறிது நேரம் அமைதியாக ஓய்வெடுங்கள்
* உணவு, உடை, உறைவிடம் தவிர்த்த எதுவும், உங்களை மன இறுக்கம் கொள்ளச் செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள். எதற்கு முன்னுரிமை கொடுப்பது என்பதில் தெளிவு அவசியம்
* எந்த ஒரு செயலும் சுலபமாக செய்துவிட முடியும் என, நினைத்து, செய்ய துவங்குங்கள். கடினம் என்று நினைத்தால், நமக்கு மன அழுத்தம் தான் அதிகமாகும்.

ஏ.எஸ்.கோவிந்தராஜன்