Friday, March 27, 2020

kamba ramayana padal

தோள்கண்டார் தோளே கண்டார் தொடுகழல் கமலம் அன்ன

தாள்கண்டார் தாளே கண்டார் தடக்கை கண்டாரும் அஃதே

வாள்கொண்ட கண்ணார் யாரே வடிவினை முடியக் கண்டார்

ஊழ்கொண்ட சமயத்து அன்னான் உருவுகண் டாரை ஒத்தார்.





  1. பஞ்சியொளிர் விஞ்சுகுளிர் பல்லவ மனுங்க
    செஞ்செவிய கஞ்சநிகர் சீறடிய லாகியமிள
    மஞ்சையென அன்னமென மின்னும் வஞ்சியென
    நஞ்சமென வஞ்சிமகள் வந்தாள்

  2. கம்ப இராமாயணம் - வஞ்ச மகள் வந்தாள்



    கம்பனின் வார்த்தை விளையாட்டுக்கு கீழ் வரும் பாடல் ஒரு உதாரணம்.

    தன் அரக்கி வடிவத்தை மறைத்து கொண்டு, அழகான பெண் போல உருக் கொண்டு சூர்பனகை வருகிறாள்.

    கம்பனின் பாட்டு கொஞ்சுகிறது.


    பஞ்சி ஒளிர்விஞ்சு குளிர் பல்லவம் அனுங்க,
    செஞ் செவிய கஞ்சம் நிகர்சீறடியள் ஆகி,
    அம் சொல் இள மஞ்ஞை எனஅன்னம் எனமின்னும்
    வஞ்சி எனநஞ்சம் எனவஞ்ச மகள் வந்தாள்.

    சூர்பனகையின் பாதம் நடந்து நடந்து வருந்துகிறது

    அது எவ்வளவு மெல்லிய பாதம் தெரியுமா?


    பஞ்சி = பஞ்சு போன்ற

    ஒளிர் விஞ்சு குளிர் பல்லவம் அனுங்க = பல்லவம் அப்படினா தளிர்.அனுங்க என்றால் வருந்த. குளிர்ச்சியான தளிர்கள் வருந்தும் படி. ஒளி விட்டு விளங்கக்கூடிய , குளிர்ச்சியான தளிர்களை விட (விஞ்ச) மென்மையான பாதம் வருந்த

    செஞ் செவிய = செக்க சிவந்த

    கஞ்சம் நிகர் = தாமரை மலருக்கு நிகரான

    சீறடியள் ஆகி = சிறிய அடி. சிறப்பான அடி. மெல்ல மெல்ல அடி எடுத்து வந்ததால் சிற்றடி

    அம் சொல் இள மஞ்ஞை என = இனிமையாக அகவும் மயில் போல

    அன்னம் என = மென்மையான அன்னம் போல

    மின்னும் வஞ்சி என = மின்னும் வஞ்சிக் கொடி போல

    நஞ்சம் என = விஷம் போல

    வஞ்ச மகள் வந்தாள் = வஞ்சனையாக அந்தப் பெண் வந்தாள்

    பஞ்சு போன்ற மென்மை. இளந்தளிரின் வெதுவெதுப்பான அந்த ஈரம். மயில் போல சாயல். தாமரை மலர் போல சிவப்பு. அன்னம் போன்ற தூய்மை. இத்தனையும் இருக்கிறது. ஆனால், நிஜம் இல்லை. வஞ்ச மகள் வந்தாள். 

    கம்ப இராமயாணம் - கும்ப கர்ணா, கெட் அவுட்

    கம்ப இராமயாணம் - கும்ப கர்ணா, கெட் அவுட் 

    கும்ப கர்ணன் எவ்வளவோ எடுத்து சொல்கிறான் சீதையை விட்டு விடும்படி. இராவண கேட்பதாய்  இல்லை. கடைசியாக சொல்கிறான்....

    மானுடர் இருவரை வணங்கி மற்றும் அக்
    கூன் உடைக் குரங்கையும் கும்பிட்டு உய்தொழில்
    ஊன் உடை உம்பிக்கும் உனக்குமே கடன்யான் அது முடிக்கிலேன் எழுக போகென்றான்




    மானுடர் இருவரை வணங்கி  = இராம லட்சுமணர்களை வணங்கி

    மற்றும் அக் கூன் உடைக் குரங்கையும் கும்பிட்டு = அனுமன் மற்றும் இதர கூனுடைய குரங்குகளை கும்பிட்டு

    உய்தொழில் = உயிர் பிழைக்கும் தொழில்

    உம்பிக்கும் உனக்குமே கடன் = உன் தம்பியான விபீஷனனுக்கும் உனக்குமே கடன்


    யான் அது முடிக்கிலேன் = என்னால அது முடியாது




    எழுக போகென்றான் = நீ எழுந்து போ என்றான்




    ஒரு புறம் கும்ப கர்ணனின் தன் மான உணர்ச்சியை தூண்டி விடுகிறான் - மானிடர்களையும், குரங்குகளையும் உன்னால் வணங்க முடியுமா ? நீ செஞ்சாலும் செய்வ, நான் மாட்டேன் என்று அவனை சமாதானத்தில் இருந்து விலக்கி போருக்கு செல்ல தூண்டுகிறான்.

    மறுபுறம், அவனின் சகோதர பாசத்தை தொடுகிறான். உன் தம்பி விபிஷணன் போய் விட்டான், நீயும் போய் விடு, நான் தனியாக இருப்பேன் என்று மறைமுகமாக சுட்டுகிறான்.


    அதாவது கும்ப கர்ணன் சொன்ன வாதங்களை எல்லாம் விட்டு விட்டான்...அதற்க்கு அவனிடம் பதில் இல்லை. அவனை உசுப்பு ஏத்தி விட்டுஅவனை போருக்கு செல்ல வைக்க வேண்டிஇப்படி சொல்கிறான். கும்ப கர்ணன் provoke ஆனானா இல்லையா இதற்க்கு கும்ப கர்ணன் என்ன சொன்னான் ?


  3. கம்ப இராமாயணம் - சீதை தீக் குளித்த பின்


    கம்ப இராமாயணம் - சீதை தீக் குளித்த பின்

    சீதை தீயில் இறங்கிய உடன், அவள் கற்பின் சூடு தாங்காமல் அக்னி தேவன் அவளை கொணர்ந்து இராமனிடம் தந்து, இவள் கற்பில் சிறந்தவள் என்று சொல்கிறான்.

    அப்போது இராமன் சீதையிடம் ஒரு மன்னிப்பு கூட கேட்கவில்லை. "தெரியாமல் உன் கற்பை சந்தேகப் பட்டேன்" என்றோ "உலகுக்கு உன் கற்பை நிரூபிக்க தான் அப்படி செய்தேன்" என்றோ ஒன்னும் சொல்லவில்லை.

    அவள் அருகில் வருகிறான். அக்னி தேவனைப் பார்த்து சொல்கிறான்....




    அழிப்பு இல சான்று நீஉலகுக்குஆதலால்
    இழிப்பு இல சொல்லிநீ இவளை, ''யாதும் ஓர்
    பழிப்பு இலள்'' என்றனைபழியும் இன்றுஇனிக்
    கழிப்பிலள்என்றனன் - கருணை உள்ளத்தான்.

    அழிப்பு இல = அழிக்க முடியாத

    சான்று நீ = சாட்சி நீ (அக்னி சாட்சி)

    உலகுக்கு = இந்த உலகத்துக்கு

    ஆதலால் = ஆதலால்

    இழிப்பு இல சொல்லி = இவளைப் பற்றி நீ ஒன்றும் இழிவாக சொல்லவில்லை

     நீ இவளை = நீ இந்த சீதையை

    'யாதும் ஓர் பழிப்பு இலள்'' என்றனை = எந்த ஒரு பழியும் இல்லாதவள் என்றனை

    பழியும் இன்று = (எனவே) இவளிடத்தில் ஒரு பழியும் இல்லை

    இனிக் கழிப்பிலள் = இனி இவள் கழிக்க தக்கவள் அல்லள்

    என்றனன் = என்று இராமன் கூறினான்

    கருணை உள்ளத்தான் = கருணை உள்ளம் கொண்டவன்


Monday, March 23, 2020

புளிப்பு, காரங்களை தவிர்ப்பது நல்லது! - நன்றி: தினமலர் - 20200322 தேதியிட்டது


புளிப்பு, காரங்களை தவிர்ப்பது நல்லது!

நன்றி: தினமலர் - 20200322 தேதியிட்டது

கொரோனா வைரஸ், சுவாச மண்டலத்தை நேரடியாக பாதிக்கும் தன்மை உடையது. கொரோனா வைரஸ் பாதித்தால், சாதாரண சளி முதல், நிமோனியா போன்ற தீவிர நோய்கள் ஏற்படும். காய்ச்சலுடன், இருமல், மூச்சுத்திணறல், தொண்டை வீக்கம், உணவை விழுங்குவதில் சிரமம், தலைவலி போன்ற அறிகுறிகள், ஒன்றோ, ஒன்றுக்கு அதிகமாகவோ இதில் இருக்கலாம்.

ஆயுர்வேத முறைப்படி, பின் பனிக்காலத்தில் கபம் அதிகரித்து, இளவேனிற் காலத்தில் சூரிய வெப்பத்தால், கபம் இளக்கப்படுவதால், நம் உடலில் பல விதமான நோய்கள் ஏற்படுகின்றன. இக்காலகட்டத்தில், பலவீனம் ஏற்பட்டு, தொற்றுக் கிருமிகளின் தாக்கம் அதிகமாக இருக்கிறது.

கபத்தை உடனடியாக தணியச் செய்வது முக்கியம். எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தக் கூடிய மஞ்சள், மிளகு, நெல்லி, வேப்பிலை, சீதல் கொடி, துளசி ஆகியவற்றை கஷாயமாகவோ அல்லது இலையாகவோ தினமும் சாப்பிடலாம்.

உடல் வெப்பத்தை அதிகரிக்கச் செய்ய, இஞ்சி டீ, சுக்கு டீ, சீரக தண்ணீர் ஆகியவற்றை பருக வேண்டும். குளிக்கும் போது, கற்பூரம், சந்தனம், அகில், குங்குமப்பூ முதலியவற்றை பூசிக் கொள்ளலாம். மூக்கடைப்பு மற்றும் தொண்டை பகுதியில் ஏற்படும் பிரச்னைகளை போக்க, நசிய சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும்.

இச்சிகிச்சையில், மூக்கில் எண்ணெய் விடுதல் அனுத் தைலம், சய்பிந்து தைலம் உபயோகிக்கலாம். வாந்தி சிகிச்சை செய்வதன் மூலம் நுரையீரல் மற்றும் வயிற்றுப் பகுதியில் உள்ள கழிவுகளை வெளியேற்றலாம்.

கைகளை அடிக்கடி சுத்தம் செய்வதற்கு, மஞ்சள் நீர், எலுமிச்சை சாறு, வேப்பிலை தண்ணீர் பயன்படுத்தலாம். வேப்பிலைகளை பயன்படுத்தி, துாமம் என்ற புகை போடலாம். சுற்றுப்புறத்தில் இருக்கும் கிருமிகள், இதனால் அழியும். நல்லெண்ணெய், கல் உப்பு, திரிபலா குடிநீர் கொண்டு, அடிக்கடி வாய் கொப்பளிப்பது நல்லது. இது, வாய் வழியாக கிருமிகள் உடலினுள் செல்வதை தடுக்கும்.

எந்த உணவாக இருந்தாலும், நன்கு வேக வைத்து சாப்பிட வேண்டும். புளிப்பு மற்றும் காரங்களை தவிர்ப்பது நல்லது. சந்தனம் நீர், தேன் கலந்த நீர், வெட்டிவேர் நீர் ஆகியவற்றை, அடிக்கடி பருகுவதால், உடலில் நீர் சத்து குறையாமல் இருக்கும். பிரணாயாமம் மற்றும் கபால பஸ்தி ஆகியவற்றை செய்வதன் மூலம், நுரையீரலை பலப்படுத்த முடியும்.

டாக்டர் கவுதமன் கிருஷ்ணமூர்த்தி
ஆயுர்வேத மருத்துவர்,
சென்னை
99400 79511


Thursday, March 19, 2020

உலக மொழிகள் தமிழில் இருந்து உதித்தனவா? (Post No.7716) thanks to tamil and vedas

[New post] உலக மொழிகள் தமிழில் இருந்து உதித்தனவா? (Post No.7716)
Yahoo/Inbox
  • Tamil and Vedas <comment-reply@wordpress.com>
    To:theproudindian_2000@yahoo.co.in
    Thu., Mar. 19 at 8:45 a.m.
    Respond to this post by replying above this line

    New post on Tamil and Vedas

    உலக மொழிகள் தமிழில் இருந்து உதித்தனவா? (Post No.7716)

    by Tamil and Vedas
    WRITTEN BY LONDON SWAMINATHAN
    Post No.7716
    Date uploaded in London – 19 March 2020   
    Contact – swami_48@yahoo.com
    Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
    சேலம் என்ற நகரம் அமெரிக்காவிலும் உண்டு. தமிழ்நாட்டிலும் உண்டு. பெர்லின் என்ற பெயரில் 30 நகர்கள் உள்ளன. நல்லூர் என்ற பெயரில் நூற்றுக் கணக்கான ஊர்கள் இருக்கின்றன. இவைகளை வைத்து ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்த முடியாது. வேறு சில வட்டாரங்களில் (SECONDARY EVIDENCE) இருந்து சான்று கிடைத்தால் ஆராய்ச்சியைத் தொடரலாம். 1987-ல் நடந்த ஒரு நிகழ்வு இதோ.
    தொழில் அதிபரும் தமிழ் அறிஞருமான பொள்ளாச்சி மகாலிங்கம் ஆதரவில் சாத்தூர் சேகரன் என்ற மொழி ஆராய்ச்சியாளர் லண்டனுக்கு வந்தார் . சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர்,  பி.பி.சி.யில் (B B C TAMIL SERVICE) சாத்தூர் சேகரனைப் (30-09-1991) பேட்டி கண்டு ஒலிபரப்பினேன். தமிழோசை நேயர்கள் அதற்கு பெரும் வரவேற்பு கொடுத்தனர். ஆனால் அவர் உலகிலுள்ள 140-க்கும் மேலான மொழிகள் தமிழ் மொழியில் இருந்து தோன்றியதற்கான சான்றுகள் இருப்பதாகச் சொல்லி பல புத்தகங்களை எனக்கும் தமிழோசை சங்கர் அண்ணாவுக்கும் வழங்கினார். அவர் சொன்ன கருத்தில் எனக்கு ஒப்புதல் இல்லை என்பதை தனிப்பட்ட உரையாடலில் விளம்பினேன்.
     அதற்குப் பின்னர் லண்டனில் CHANNEL FOUR சானல் ஃபோர் (4) நிகழ்ச்சியில் ஒரு சுவையான நிகழ்ச்சி ஒலிபரப்பாகியது. அதில் புதிய மொழிக் கொள்கையை முன்வைத்த ஒரு ரஷ்யயரையும் இஸ்ரேலியரையும் காட்டினார்கள். அவர்களின் கூற்றுப்படி பைபிளில் கூறப்படும் TOWER OF BABEL பேபல் கோபுரக் கதை உண்மையே என்றும் ஆதிகாலத்தில் நம் முன்னோர்கள் ஒரே கூரையின் கீழ் வாழ்ந்ததால் ஒரு மொழிதான் பேசினர் என்றும் காலப்போக்கில் அவர்கள் பிரிந்து சென்ற பின்னர் மொழிகள் கிளைவிட்டுப் பரவின என்றும் பகர்ந்தனர்.
    அண்மையில் லண்டன் பல்கலைக் கழக நூலகத்த்தில் இருந்து உலக மொழிகளின் அட்லஸ் (ATLAS OF WORLD LANGUAGES) என்ற புத்தகத்தைப் படித்தபோது நியூ கினி (NEW GUINEA) தீவில் ஆதி வாசி மக்கள் 750-க்கும் அதிகமான மொழிகள் பேசுவதும், ஆஸ்திரேலியப் பழங்குடி (AUSTRALIAN ABORIGINES) மக்கள் 250 -க்கும் அதிகமான மொழிகள் பேசுவதும், உலக மொழி இயல் அறிஞர்களுக்குப் புதிராக விளங்குகிறது; பழைய மொழியியல் கொள்கைகளுக்குச் சவாலாக அமைந்துள்ளது என்று செப்பியு ள்ளதை அறிந்தேன்.
    தாமஸ் பர்ரோ, மர்ரே பி. எமனோவ் ஆகிய இருவரும் வெளியிட்ட  திராவிட மூல சொற்கள் சுமார் 4500 மட்டுமே என்று எழுதிய (ETYMOLOGICAL DICTIONARY OF DRAVIDIAN LANGUAGES) புத்தகத்திலும் உள்ள தவறுகளைச் சுட்டிக்காட்டி ஆராய்ச்சிக் கட்டுரை எழுதினேன். அரிசி,  நீர் என்பன மற்ற ஐரோப்பிய மொழிகளில் ஆதிகாலத்தில் இருப்பதைக் காட்டினேன். நீர்த் தேவதைகளை நீரெய்ட்ஸ் என்று கிரேக்கர் அழைப்பர். கிரேக்க மொழியில் பழைய (PALEO) தொலை (TELE) ஓடு (ODOMETER) கை (CHI), நீர் (NEREIDS=WATER NYMPHS)  முதலிய சொற்கள் அலக்ஸாண்டரின் இந்தியப் படையெடுப்புக்கு முன்னரும் இருப்பதைக் காட்டினேன். யவன, ஹோரா (தொல்காப்பியத்தில் ஓரை) முதலிய சொற்கள் பற்றி மயிலை வேங்கட சாமி, வையாபுரிப் பிள்ளை ஆகியோர் எழுதியவையும் தவறு என்று கண்டேன். யவன என்ற சொல் ஆதிகாலத்தில் இருந்தே மஹாபாரதம் முதலிய நூல்களில் உள்ளது.
    ஆக நான் கண்ட உண்மை இதுதான்:
    உலகிலுள்ள பழைய மொழிகளில் சில சொற்கள் ஒன்றாகவே இருக்கும்; தமிழ் சொற்களான அப்பா. அம்மா உலகில் பல மொழிகளில் உள்ளன. இதை வைத்து மட்டும் அவை தமிழில் இருந்த வந்ததாகச் சொல்ல முடியாது. இன்னும் சில சொற்கள் ஒலியை அடிப்படையாக வைத்து வரும் உலகிலுள்ள பெரும்பாலான மொழிகளில் பறவைகளின் பெயர்கள் “கா, கீ, கு, கொ,கெ, கோ, கே” என்ற சொற்களில் துவங்கும்; அவைகளின் ஒலியில் இருந்து மனிதன் உருவாக்கிய சொற்கள் இவை. இதில் வியப்பு எதுவும் இல்லை.
     உலகிலுள்ள பழைய மொழிகளை ஆராய்ந்தால் அவைகளின் சொற்கள் ஸம்ஸ்க்ருதத்தில் இருந்தோ தமிழில் இருந்தோ கிளைவிட்டுப் பரவியிருப்பதைக் காணலாம்.
    சில அடிப்படை மொழி இயல் கொள்கைகளைப் பயன்படுத்தினால் அவை எப்படி மாறின என்பதையும் புரிந்து கொள்ளலாம்.
    உதாரணமாக உலகிலுள்ள எல்லா மொழிகளிலும் ஆர் (R=L) என்பதும் எல் என்பதும் இடம் மாறும்
    எம்- வி- பி (M=V=P/B) என்பன இடம் மாறும்
    ஆர் (R=D) டி என்பது இடம் மாறும்
    த-வும் ச- வும் ஒலி மாறுவதை TION என்று முடியும் சொற்களில் காணலாம்  ( உச்சரிக்கும் விதம் ஷன் SION ). ஆக திரு = ஸ்ரீ = ஸர் பட்டம் என்பதையும் காணலாம். இதை CERES தெய்வமாகவும் காண்கிறோம். லெட்சுமி, லக்ஷ்மீகரம் என்பதே பொருள். திருமிகு என்பதை ஸர்/ SIR (ஸ்ரீ) பட்டம் கொடுத்து ஆங்கிலேயர் கௌரவிப்பர்
    T=S ( சீர், திரு) Sri= Ceres (Goddess of Wealth in the West)
    அடுத்ததாக கண்ணாடி பிரதிபலிப்பு விதி; அதாவது
    மிர்ரர் இமேஜ் (MIRROR IMAGE) ஏற்படும்;
     அதாவது யாளி  (YAALI= LEO) என்பதை எழுதி கண்ணாடியில் காட்டினால் லியோ என்று வரும் (LEO= சிங்கம், சிம்ம ராசி)
    தமிழில் கூட இலக்கணப் போலி உண்டு வாயில் என்றாலும் இல்வாய் என்றாலும் ஒன்றே.
    ஆக எனது கொள்கை இதுதான்.:--
    ஆங்கிலத்தில் ஆயிரக்கணக்கான தமிழ் சொற்கள் உண்டு. அவைகள் அனைத்திற்கும் ஸம்ஸ்க்ருத மூலம் கிடையாது .மொழியியல் அறிஞர்கள் ஆங்கிலம் என்பது ஸம்ஸ்க்ருதத்துடன் தொடர்புடையது, திராவிட மொழி என்பது வேறு என்று இயம்புவர். அது தவறு.
    ஸம்ஸ்க்ருத மூலம் இல்லாத ஆங்கிலச் சொற்களில் தமிழ் மூலமிருப்பதை, உற்று நோக்கினால் புரிந்து கொள்ளலாம். சில சொற்களுக்கு ஸம்ஸ்க்ருதத்தைவிட தமிழ் நெருக்கமாக இருப்பதையும் காணலாம்; ONE ஒன்று=ஒன், EIGHT எட்டு= எய்ட், COT கட்டில்=காட்
     ஆகவே உலக மொழிகள் அனைத்தும் பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் புராணத்தில் புகல்வதைப் போல சிவனின் உடுக்கை ஒலியில் இருந்து (மாஹேஸ்வர சூத்ரம்) பிறந்தவையே; அது ஒரு புறம் தமிழாகவும் மறு புறம் ஸம்ஸ்க்ருதமாகவும் பரிணமித்தது. உலக மொழிகள் அனைத்தும் தமிழ்-ஸம்ஸ்க்ருத மூல ஒலிகளில் இருந்து தோன்றியவையே. அப்படிப் பார்க்கையில் ஆங்கிலமும் தமிழ் -ஸம்ஸ்க்ருத மூல மொழியில் இருந்து பிறந்ததே.
    கீழ்கண்ட சொற் பட்டியல் மாதிரிக்காக கொடுக்கப்பட்டுள்ளது. எனது அகராதி மார்ஜினில் (MARGINAL NOTES) உள்ள சொற்கள் அனைத்தையும் போடுவது இயலாது; அதாவது ஆயிரக்கணக்கான சொற்கள் தமிழ் தொடர்புடையவை. 1991 ஆம் ஆண்டில் சாத்தூர் சேகரன் என்னிடம் பி பி ஸி தமிழோசைப் பேட்டியில் சொன்னது ஓரளவு உண்மையே. அவர் ஸம்ஸ்க்ருதத்தைச் சொல்லத் தவறிவிட்டார் (எனது முந்தைய மொழி இயல் கட்டுரைகளில் மேலும் பல உதாரணங்கள் உள்ளன. கிரேக்க- தமிழ் தொடர்பு ஆராய்ச்சிக் கட்டுரையிலும் பல எடுத்துக் காட்டுகளை முன் வைத்துள்ளேன். கண்டு மகிழ்க!)
    இந்த வகையில் நோக்கினால் ஒரு சொல் தமிழ் சொல்லா, அல்லது ஸம்ஸ்க்ருதச் சொல்லா என்று நீண்ட காலமாக நிகழ்ந்துவரும் சர்ச்சையும், வாதப் ப்ரதிவாதங்களும் முடிவுக்கு வரும்
     COGNATE WORDS
    சில சொற்கள் ஸம்ஸ்க்ருதத்திலும் காணப்படும்
    Tamil/ Sanskrit                                          English
    Deivam/ Deva                                     Deo தெய்வம்;
    Kadavul                                               God கடவுள்
    Periya/ Bruhath                                               Big பெரிய
    Ondru                                                  One ஒன்று
    Ettu /Ashta                                                      Eight எட்டு
     Paraththai/ Para Stree                                    Prostitute பரத்தை
    Veera                                                              Hero வீரன்
    Manathu/ Manas                                            Mind மனது காம
    Kama/ Kama                                       amorous காம
    Patha=Adi                                                        Path, Pedestal, Foot பத, பாத, அடி
    Dharma=aram                                    Moral அறம்
    Neer                                                                Nereids= water nymphs நீர்
    Puttil                                                                Bottle புட்டில்
    Arukan/ Bargo                                    Argos (light, sun) அருகன்
    Andira/ Aindra/Indra                          Andrew (English name) அண்டிரன் /ஐந்திர,  இந்திர
    Pillai                                                                Fille (French) பிள்ளை
    Tarai                                                                Terrain தரை
    Tele (phone, scope, vision)                 Tolai தொலை
    Pazaiya                                                            Paleo (ntology) பழைய
    Piththu                                                 Fad பித்து
    Kuuli                                                                Ghoul/Ghost கூலி
    Vathuvai /Bride                                               Wed வதுவை
    Paiyul (Purananuru)                            Paiyon (Greek)= song பையுள்
    Aiyavi (smallest seed)                         Iota ஐயவி
    Maaya                                                 Magic (g=y) மாய
    Staanu/ Thun                                      Stand தாணு
    AAndu                                                  Annum, annual ஆண்டு
    Duusi                                                               Dust தூசி
     MORE COGNATE WORDS
    TAMIL WORDS                        ENGLISH WORDS
    ATHLETE -ATALAR அடலர் ஏர் உழுதல்;  AUGURY- ARIKURI அறிகுறி
    ARABLE- ER UZAKKUUTIYA/ ஏர் உழுதல்;
    APOLLO- PAKALAVAN (MIRROR IMAGE) பகலவன் AURUM/GOLD- AADAKAM (AOR/HEBREW WORD, MIRROR IMAGE RAYI SKT.WORD) ஆடகம்
     ANTHEM/ANTHOLOGY – SANTHAM சந்தம்; ATHRO(POLOGY)- AAN=MAN ஆண்
    MAN- AAN மனிதன்/மானுடன்; ARGOTER (BEG)- ERPATHU (IKAZSSI) ஏற்பது (இகழ்ச்சி); AVER(T)- THAVIR தவிர் ;A-VENGE- VANJI வஞ்சி; AWE- ACHCHAM அச்சம்; AXIS-ACHU அச்சு A-TTACK- THAAKKU தாக்கு ; ANCHOR- NANGUURAM நங்கூரம்; ATTIRE-AADAI ஆடை ;ARDENT, ARDOUR- AARVAM ஆர்வம் ;CUMULATE/ACUMULATE- KUVI, KUMITHTHU குவி/குமித்து;  AWARE- ARI (VEN) அறி ;ANTIQUITY- AATHI (KUTI) ஆதி ;ALL-ELLAA (MIRROR IMAGE) எல்லா;ATTAIN-ADAI அடை
    ADAMANT- ADAAVADI அடாவடி ;AMPHORA- AMBARAA (SHAPE) அம்பறா (துணி- வடிவம்); BAY-VAAY வாய்; BURG- PURA, UUR புரம்/ஊர்; BOAT-PATAKU படகு
    BETEL-VETTALAI வெற்றிலை; BIRD- PARAVAI, ANNAP’’PEDU’’SEVAR PEDU பறவை/ பேடு; BRIDE- VADUVAI வதுவை; BIRTH-PIRATHTHAL பிறத்தல்
    BARRIER- VARAIYARAI வரையறை; BLAZING- PALAPALAPPU பளபளப்பு
    BARN- ARAN/LOFT பரண்; BLUFF-ULARU உளறு; BOY- PAIYAN பையன்/பியூன்
     BARE – VERUM வெறும் ;BARREN- VARANDA வறண்ட ;BURY-PUTHAI புதை;
    BEAT- PUTAI- NAIYAP PUDAI புடை/ நையப்புடை; BLAST- PILA, VIlAASU பிள/விளாசு; FLAW- PIZAI பிழை ;BATTER- PAATARAI பட்டறை வேகு/வேக்காடு; BAKE- VEGU, VEKKAADU வேகு/வேக்காடு;
    BABY- PAAPPAA பாப்பா ;BAG- PAKKU (SANGAM TAMIL) பக்கு
    C
    CONCH- SANGU சங்கு சரடு கயிறு; CORD- KODI, SARADU சரடு
    COIR- KAYIRU  கயிறு; COWRY- SOZI சோழி; CHIRO- KAI/HAND கை கல் செறி, செழுமை, சீர், திரு; CAL- KAL (STONE), CALCULATE கல் ;CERES- SIIR, SRI, SEZUMAI, THIRU, செறி, செழுமை, சீர், திரு
     CHAFF- SAAVI சாவி செப்பு/செம்பு; COPPER- SEPPU செப்பு/செம்பு
    CRORE- KODI கோடி; CLAY- KALI (MAN) களி; COPRA- KOPPARAI கொப்பறை
    CASH- KAASU காசு; CHOULTRY- SATTHTHIRAM சத்திரம் ; CHIT- SIITU (KKAVI), SITTAI சீட்டு/சிட்டை; CURRY- KARI கறி; CURL- SURUL சுருள் ; CUTE-SUTTI சுட்டி ;
    CHAR- KARI கரி ;CUP- KOPPAI, KUVALAI  கோப்பை,குவளை; CROOKED- KURUKIYA குறுக்கு  குறுகிய
    COLD, CHILL- KULIR குளிர் ; CURVE- SUZIVU சுழிவு ; COOPT- KUUTTU கூட்டு
    CUDDLE-KATTU கட்டு ; CROWD- KUUTTAM கூட்டம்; CHAOS- KUZAPPAM குழப்பம்
    CHEER – SIRI சிரி ; CELEBRATE- KALI (PPU) களி(ப்பு); COARSE- SORASORA(PPU) கரகர, சொர சொர; CHATEAU –KOTTAI கோட்டை; COASTAL- KADAL +ORA கடல் ஓர
    CYST- KATTI  கட்டி; CRACK- KIRUKKU கிறுக்கு ; CODNEMN- KANDI, KANDANAM கண்டி/கண்டனம், ;COIL- SUZAL, சுழல்/குழல்
    இதோ ரிக் வேதத்தில் சில தமிழ்ச் சொற்கள்:-
    எண்கள் பற்றி:-
    ரிக் வேதத்தில் பத்து மண்டலங்கள் உள்ளன. அடைப்புக்குறிக்குள் உள்ள எண்களில்முதலில் மண்டலம், பின்னர் மந்திரத் துதியின் எண், அதிலுள்ள மந்திர வரியின் எண் என்ற வரிசையில் கொடுத்துள்ளேன். இந்த எண்களை எடுக்க உதவிய நூல் பகவான் சிங்கின் ‘வேதிக் ஹரப்பன்ஸ்’ Vedic Harappans என்ற நூலாகும்.
    உஷ் ட் ர – ஒட்டகம் (ரிக். 1-138-2; 8-5-37;8-6-48)
    கர்தப- கழுத (ர=ல)/ கழுதை (1-29-5; 3-53-23)
    காகம்பிர- காகம் (6-48-17)
    மயூர- மயில் (1-191-4; 3-45-1; 8-1-25)
    சிம்ஹ- சிங்கம் (5-44-1)
    உட்ச- ஊற்று (2-16-7)
    கூப – கூவம்/ கிணறு 1-105-17
    குல்யா – குளம் , கால்வாய்
    நீர் – நீர்
    பூமி-புவி 2-14-7
    யூப – 5-2-7 சங்கத் தமிழ்
    புஷ்ப/ பூ – அதர்வ 8-712
    பலி- 1-70-9
    மது- தேன் 1-90-6
    மத்ஸ்ய/ மச்ச – 10-68-8
    ரத்ன- 1-20-7
    ரஜ்ஜுப் பொருத்தம் – ரஜ்ஜு 1-162-8
    ராஜசூயம்- அதர்வ – 4-8-1
    புறநானூற்றின் அடிக்குறிப்பில் ராஜசூயன் வேட்ட பெருநற்கிள்ளி என்ற பெயர் உள்ளது
    சங்கு- அதர்வ 4-10-1
    களம்- நெல் அடிக்கும் களம் (10-48-7)
    சில சொற்களை அப்படியே தமிழ்க் கவிதைகளில் பயன்படுத்தியுள்ளனர். அது ரிக்வேத காலம் முதல் இன்று வரை புழக்கத்தில் இருப்பதும் வியப்புக்குரிய செய்தி. இதோ சில சொற்கள்:
    ரிஷபம் (6-16-47) (இடபம்/விடை – தேவாரத்தில்
    வாரணம் (யானை) – (ஆண்டாள் வாரணம் ஆயிரம்)
    கபி/கவி – குற்றாலக் குறவஞ்சி (10-86-5)
    கோ (3-1-23)- கோவலன்/ கோபாலன் (சிலப்பதிகாரம்)
    xxx
    இன்னும் சில சொற்கள் சர்வ சாதாரணமாக பேச்சு வழக்கிலும் பத்திரிக்கைகளிலும் புழக்கத்தில் இருக்கின்றன.
    ஸர்ப- சர்ப்பம்/பாம்பு (10-16-6),serpent
    ம்ருக (மான்) – மிருகம்
    மேஷ- மேட ராசி/ மேஷராசி
    வராக – வராஹ அவதாரம்
    ஹம்ச- அன்னம் (2-34-5)
    ஆரண்யப் பசு – காட்டு மிருகம்/ எருமை (10-90-8) ;ஆரண்யம் (காடு) என்ற சொல் வேதாரண்யம் முதலிய ஊர்ப்பெயர்களில் காணப்படும்
    பாச (கயிறு)- 2-27-16)
    பஹு அன்ன – நிறைய உணவு
     (பஹு என்பது தமிழில் வெகு என்று மாறும் (ப=வ)
    அன்னம் – உணவு இப்பொழுதும் புழக்கத்தில் உள்ள சொல் – அன்ன தானம்
    அங்குச- அங்குசம் (8-17-10)
     கச (கசையடி)- (5-83-3)
    தண்ட – தடி (8-33-6)
    தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் – தமிழ்ப் பழம்ழொழி
     பந்தன – கட்டுதல் (5-12-4); ரக்ஷா பந்தன்
    தான்ய – தானியம் (5-53-13)
    பீஜ – விதை (ப=வ) (5-53-13)
    சகன் – சாணம் (அதர்வண வேதம் 3-14-4)
    வது/ பெண்5-37-3
    ஸ்வப்ன – சொப்பனம் – 2-28-10
    வசனம், வாக்கியம், வார்த்தை
    இவற்றிலிருந்து என்ன தெரிகிறது?
    ரிக் வேதம் என்பது உலகிலேயே பழைய நூலாக இருந்தாலும் அவற்றிலுள்ள சொற்களை இன்றும் நாம் பயன்படுத்துகிறோம். நான் கொடுத்த எடுத்துக் காட்டுகள் தவிர நூற்றுக் கணக்கான சொற்கள் உள்ளன. இன்னும் ஆங்கிலத்தில் நமக்குத் தெரிந்த சாதாரன சொற்களையும் ஒப்பிட்டால் அடுத்த நிமீடமே நமக்கு ஏறத்தாழ ஆயிரம் ரிக்வேதச் சொற்கள் தெரிந்து விடும். முப்பதுக்கும் மேற்பட்ட ஆங்கில, ஜெர்மானிய, பிரெஞ்சு அறிஞர்கள் வேதங்களைப் பற்றி எழுதியுள்ளனர். இப்படி வெளிநாட்டுக்காரர்களே வேதத்தைப் படிக்க இயலுமானால் நம்மால் முடியாதா? இதை உணர்ந்து அனைவரும் முறையாக வேதத்தைப் பயிலல் வேண்டும்.
     அப்படிச் செய்தால் புதிய உண்மைகள் வெளிப்படும். திராவிட, இந்திய-ஆரிய மொழிக் குடும்பக் கொள்கைகள் தவிடு பொடியாகும்.
    ஆன்றோர்கள் `அரியும் சிவனும் ஒன்னு; அறியாதவன் வாயில் மண்ணு` என்பர். நாம் `தமிழும் சம்ஸ்கிருதமும் ஒன்னு; அது நமக்குக் கண்ணு; அதைப் புரிந்துகொள்ளாதவன் வாயில் மண்ணு` என்போம்.
    வாழ்க தமிழ்
    மொழிகள்,தமிழ் , ஆரிய , மொழிக் குடும்பம், திராவி

Wednesday, March 18, 2020

அகர முதல எழுத்து எல்லாம்- எனது முக்கிய ஆராய்ச்சி (Post No.7653) thanks to tamil and vedas

அகர முதல எழுத்து எல்லாம்- எனது முக்கிய ஆராய்ச்சி (Post No.7653)



WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No.7653
Date uploaded in London – 5 March 2020   
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
இறுதியில் வரும் எனது ஆராய்ச்சியினை படிக்கத் தவறாதீர்கள்
அகர முதல எழுத்து எல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு —  என்று வான் புகழ் வள்ளுவன் மட்டுமா சொன்னார் ? ஏசு கிறிஸ்துவும் சொன்னார்;
அது எப்படி?  எப்படியென்றால் இருவருக்கும் பகவத் கீதை மனப்படமாகத் தெரியும்.
எழுத்துக்கெல்லாம் முதலாவது நிற்பது ‘அ’ என்னும் எழுத்து ; அது போல உலகிற்கெல்லாம் மூல  முதல்வன் இறைவனே! என்பது வள்ளுவனின் முதல் குறள் .அப்படிச் சொல்ல வந்ததையும் முதல் குறளாக வைத்தது வள்ளுவன் ஒரு ஜீனியஸ் — மஹா மேதாவி — என்பதைக் காட்டுகிறது .


Jesus Christ said in the Bible,
‘I am Alpha and Omega, the beginning and the end, the first and the last’- Revelation 22-13
ஏசு கிறிஸ்து நானே ‘ஆல்பா’வும் ‘ஒமேகா’வும் என்று புதிய ஏற்பாட்டில் செப்பினார் . ஆல்பா என்பது கிரேக்க மொழியின் முதல் எழுத்து ஒமேகா என்பது கடைசி எழுத்து. கிறிஸ்துவுக்கு கிரேக்க மொழி தெரியாது ; பைபிளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவனுக்கு தமிழும் தெரியாது; சம்ஸ்கிருதமும் தெரியாது; அந்த இரண்டு மொழிகளும் ஜீசசுக்கும் மோசஸுக்கும் முந்திய மொழிகள் என்பதும் தெரியாது.ஏசு பிரானோ எபிரேய/ஹீப்ரு மொழியில் உபன்யாசம் செய்தார்.
வள்ளுவரும் ஏசுவும் இதுபற்றி கதைப்பதற்கு சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கிருஷ்ண பகவான்  பகவத் கீதையில் ‘அக்ஷராணா ம் அகாரோஸ்மி’ (ப.கீ .10-33)- எழுத்துக்களில் நான் ‘அ’ -காரம் என்று சொன்னார் ; அவர் சொல்லுவது மேற் கூறிய இருவர் செப்பியதைவிட இன்னும் பொருத்தமாக உள்ளது . உலகிலுள்ள உயிருள்ள பொருட்களும் உயிரற்ற பொருட்களும் இறைவனின் அம்சமே என்று அர்ஜுனனுக்கு விளக்கும்போது ஒவ்வொரு வகையிலும் முதன்மையான சிறந்த பொருளை விளக்குகையில் “காலங்களில் நான் வசந்தம் ,மாதங்களில் நான் மார்கழி , எழுத்துக்களில் நான் ‘அ’ என்று……….. நிறைய சொல்லிக்கொண்டே போகிறார் . இதற்கு மூலம், உபநிஷத்துக்களில் இருப்பதை சுவாமி சின்மயானந்தா  , அவரது பகவத் கீதை பாஷ்யத்தில் எழுதியுள்ளார் .


சுவாமி சின்மயானந்தா மேலும் விளக்குகையில், சம்ஸ்கிருதம் இனிமையான மொழியாக இருப்பதற்கு பெரும்பாலான சொற்களில் ‘அ’ இருப்பத்தைச் சுட்டிக்காட்டுகிறார். ஒரு சொல்லை உச்சரிக்க அதில் உயிர் எழுத்து இருப்பது அவசியம் என்பது எல்லா மொழிகளுக்கும் பொது என்றாலும் சம்ஸ்கிருதத்தில் நிறைய சொற்கள் ‘அ’காரத்தில் முடிவது இனிமை சேர்ப்பதோடு சொல்வதற்கும் கேட்பதற்கும் நன்றாக இருக்கிறது என்கிறார் ; ஒரு ஹாலில் / மண்டபத்தில் சம்ஸ்க்ருத பாடல் அல்லது துதிகள் முழங்கியவுடன் மன அமைதியும் சாந்தமும் ஏற்படுவதை எடுத்துக் காட்டுகிறார்.
வள்ளுவர் ஒரு ‘பக்கா’ ஹிந்து என்று சொல்லும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் (Inspector General of Police) , தமிழ் அறிஞர் டாக்டர் எஸ் .எம் . டயஸும் (Dr S M Diaz) பகவத் கீதை , பைபிள் , திருமந்திரம் ஆகியவற்றில் ‘அ’ -கரத்தின் பெருமை வருவதை எடுத்துரைத்து மேலை நாட்டு அறிஞர்களும் கூட இந்தப் பிரபஞ்சம் இயங்கவும் நிலை பெறவும் இறைவனே காரணம் என்பதை புகன்றதை எடுத்துக் காட்டியுள்ளார் . சேக்கிழார் அடிப்பொடி டாக்டர் டி.என் ராமச்சந்திரன் (Dr T N Ramachandran) , அப்பர் பெருமானும் தேவாரத்தில் இதை பாடியிருப்பதை எடுத்துக் காட்டியுள்ளார்.
“ஆனத்து முன் எழுத்தாய் நின்றார் போலும்” – அப்பர் தேவாரம்
உலகம் என்னிடம் தோன்றி என்னிடமே முடிகிறது என்று கீதையில் பகவான் சொன்னதையும் (ப.கீ.7-6) டாக்டர் எஸ்.எம் டயஸ் பொருத்தமாகக் காட்டியுள்ளார்.


“அஹம் கருத்னஸ்ய ஜகத: ப்ரபவ: பிரளயஸ் ததா” (BIG BANG THEORY AND BIG CRUNCH THEORY)  (BG.7-6)
xxx
என்னுடைய 50 ஆண்டுக்கால ஆராய்ச்சி
எனக்கு வயது 72 ஆகப்போகிறது. அந்தக் காலத்தில் காஞ்சி பரமாசார்ய (1894-1994)  சுவாமிகளின் உபன்யாசங்களை காமகோடி மடத்தினரே வெளியிட்டனர். அதில் அவர் சொற்கள் பற்றி ஆற்றிய சொப்பொழிவைப் படித்த காலத்தில் இருந்து ஆராயத்  தொடங்கி 50 ஆண்டுகளில் சில முடிவுகளைக் கண்டேன்.
உலகிலேயே பழமையான நூல் ரிக்வேதம். அதன் முதல் துதியில் முதல்  மந்திரம் ‘அக்நி மீளே’ என்று அ–கரத்தில்தான் துவங்குகிறது; அதே போல இறுதி மந்திரமும் அக்கினி பகவானுக்கே!!  .
உலகில் தோன்றிய முதல் இலக்கண நூல் பாணினி எழுதிய ‘அஷ்டாத்யாயி’ ; அதன் ஒரு பகுதியான மகேஸ்வர சூத்திரத்தில் சிவன் உடுக்கையில் எழுந்த முதல் ஒலி ‘அ’ – தான்
சம்ஸ்கிருதத்தில் ஒரு ஸ்லோகம் உள்ளது ; அதில் தமிழ் மொழியில் உள்ளதை போல ஒரு விதி உளது.


அதாவது ஒரு நூலை மங்களச் சொல்லுடன்தான் துவங்க வேண்டும் ; அதனால்தான் ரிக் வேதமும் திருக்குறளும் ‘அ’ என்னும் எழுத்தில் துவங்குகிறது. சம்ஸ்கிருத ஸ்லோகத்தில் ‘அத’ என்றோ ‘ஓம்’ என்றோ நூலைத் துவக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது .
வேத மந்திரங்கள் அனைத்தும் ‘ஓம்’ என்ற பிரணவ மந்திரத்துடன் துவங்குவதாகக் கொண்டாலும் ‘ஓம்’ என்பது  ‘அ +உ +ம’ என்பதன் வடிவமே என்பதை இரு மொழியினரும் ஒப்புக்கொள்வர் . ஆக இந்தக் கோணத்திலிருந்து நோக்கினாலும் ‘அ’  என்பதே முதல் எழுத்து என்பதை ரிக் வேத காலம் முதல் காண்கிறோம்
சம்ஸ்கிருதம் கற்கப் போகும் ஐந்து வயது மாணவனுக்கு பாடசாலையில் கற்பிக்கப்படும் முதல் இலக்கணம் ‘அகாரந்த புள்ளிங்கஹ ராம சப்தஹ’ — என்று ‘அ’ வில் துவங்கும். இதற்குப்பின்னர் உலகில் தோன்றிய முதல் நிகண்டான அமர கோசத்தை மனப்பாடம் செய்ய வைப்பர் ; அதை எழுதியவர் ‘அ’மரஸிம்மன் ; நூலின் பெயர் ‘அ’மர கோஸம் ; இரண்டும் ‘அ’ – வில் துவங்கும் பெயர்கள்!!
வேறு யாரும் செய்யாத ஒரு ஆராய்ச்சியினை நான் செய்து சில ஆண்டுகளுக்கு முன்னர் இங்கும் எழுதினேன்.அதாவது தமிழுக்கு மிக நெருங்கிய மொழி என்பது சம்ஸ்கிருதம் ஒன்றுதான். திராவிட மொழிக் குடும்பம் என்பது சம்ஸ்கிருதம் எந்த மூலத்திலிருந்து வந்ததோ அதே மூலத்தில் இருந்து வந்ததுதான். சிவனின் உடுக்கையின் ஒரு பகுதியிலிருந்து சம்ஸ்கிருதமும் மற்ற ஒரு  பகுதியிலிருந்து தமிழும் வந்ததென ஆன்றோரும் செப்புவார்கள் . இதனால்தான் வடக்கே இமய மலையில் இருந்த அகத்தியனை தமிழுக்கு இலக்கணம் செய்ய சிவபெருமான் அனுப்பி வைத்தார். இதை பாரதியார் வரை எல்லாக் கவிஞர்களும் பாடிவைத்தனர். புறநானுற்றில் ஒரே பாட்டில் ‘பொதியமும் இமயமும்’ என்ற சொற்றோடர் வருவதற்கும் இதுவே காரணம் . ஒவ்வொரு நூலின் பாடற் முதல் குறிப்பு பகுதியைப் பார்த்தபோது எனக்கு ஒரு வியப்பான உண்மை புலப்பட்டது. அதாவது ‘அ’ என்னும் குறில் (short vowel) எழுத்தில் அதிகமான பாடல்கள் இருக்கும். அடுத்துவரும் ‘ஆ’ என்னும் எழுத்தில் (long vowel) குறைவான பாடல்களே வரும் . ஐ , அவ் (Diphthongs I and Au) என்னும் எழுத்துக்களில் பாடல்கள் துவங்காது அல்லது மிகக் குறைவாக இருக்கும். இதுதவிர உயிர் எழுத்துக்களில் (Vowels) துவங்கும் பாடல்களே அதிகம் இருக்கும் . இதன விகிதாசாரம் கூட தமிழிலும் சம்ஸ்க்ருதத்திலும் ஒரே மாதிரி இருக்கும் .இத்தோடு சந்தி இலக்கணம் இன்றுவரையுள்ள இரண்டே பழைய மொழிகள் சம்ஸ்கிருதமும் தமிழும் என்பதையும் நோக்கும்கால் திராவிட மொழிக்கு குடும்பம்- ஆரிய மொழிக் குடும்பம் என்று சொல்வது தவறு . என்பது உள்ளங்கை நெல்லிக்கனி என விளங்கும்;  ஏறத் தாழ 2500 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரே மூலத்தில் இருந்து இரு மொழிகளும் தனித்தனியே வளர்ந்தன; ஆயினும் அதன் கட்டமைப்பு (Morphological and anatomical structure) ஒன்றே. கீழேயுள்ள கீதை , குறள் துவக்க வரிகளை மட்டும் பாருங்கள். கிருஷ்ணரிடமோ வள்ளுவரிடமோ யாரும் போய் நீங்கள் ‘அ’ என்று துவங்கும் பாடல் இவ்வளவு பாடுங்கள் ‘ஆ’  என்று துவங்கும் பாடல் இவ்வளவு பாடுங்கள்! என்று சொல்லவில்லை .ஒரே மூலத்தில் பிறந்த மொழிகள் என்பதால் அது இயல்பாகவே அமைகிறது . ‘சந்தி’ இலக்கணமும் இன்று வரை இவ்விரு மொழிகள் மட்டும் கடைப்பிடிப்பதற்கும் அதற்கென்றே இலக்கணப் புஸ்தகத்தில் விதிகள் இருப்பதும் நான் சொல்வதை நிரூபிக்கும்.


ஆராய்ச்சி முடிவு-
திராவிட, ஆரிய மொழிக்கு குடும்பங்கள் என்ற பிரிவினை தவறு; இந்திய மொழிக்குடும்பம் என்பதன் இரு பிரிவுகளே தமிழும் சம்ஸ்கிருதமும் . இரு மொழிக் குடும்பத்தினரும் அருகருகே வசித்ததால் ஒன்றின் தாக்கம் (Proximity)  மறறொன்றின் மீது வரும் என்ற வாதம் இங்கே பொருந்தாது.
காரணம் ?
மொழியின் உள் அமைப்புக்குள் (internal structure)  உள்ள , கட்டமைப்புக்குள் உள்ள ஒற்றுமைகள் இவை !!
எனது இரண்டாவது ஆராய்ச்சி முடிவு!
இதுவரையும் யாராலும் படித்தறிய முடியாத (Undeciphered Indus Script) சிந்து- சரஸ்வதி நதி தீர நாகரீக  எழுத்துக்களை எவரேனும் படித்து, உலகமே அதை ஒப்புக்கொண்டுவிட்டது என்று வைத்துக் கொள்ளவோம் . அப்போது நான் மேலே கண்டபடி ‘அ ‘- காரத்தில் துவங்கும் சொற்களோ ஒலியோதான் அதிகம் இருக்கும் . ‘ஆ’ என்னும் நெடிலில் துவங்குவது குறைவாக இருக்கும் . நான் சொல்லும் அணுகு முறைப்படி அணுகினால் சிந்துவெளி முத்திரைகளில் அதிக எண்ணிக்கையில் காணப்படும் வடிவை ‘அ’ என்ற எழுத்தாகவோ (letter or sound) ஒலியாகவோ  உச்சரிக்கலாம் .
இனி எழுதும் புத்தகங்களில் ஆரிய – திராவிட மொழிக் குடும்பம் என்பதை நீக்கிவிட்டு இந்திய மொழிக் குடும்பத்தின் இரு பிரிவுகள் தமிழும் சம்ஸ்கிருதமும் என்று காட்ட வேண்டும் . உலகம் முழுதும் சென்ற இந்தியர்கள் மொழியையும் நாகரிகத்தையும் பரப்பினர் என்றே கொள்ள வேண்டும்
மனிதர்கள் தோன்றியது ஆப்பிரிக்க கண்டம் என ஒப்புக்கொண்டாலும் நாகரீகம் தோன்றியது பாரத பூமியே என்பதை நிரூபிக்கலாம் .
‘பாரத பூமி பழம்பெரும் பூமி’, ‘பாரத நாடு பார்க்கெலாம் திலகம்’ என்று பாரதியார் சொன்னது வெறும் புகழுரை அல்ல; என்றும் அழியாத மஹத்தான உண்மை !


திருக்குறளில் ‘அ எழுத்தில் துவங்கும் குறள்கள் — 157
பகவத் கீதையில் ‘அ’ எழுத்தில் துவங்கும் ஸ்லோகங்கள் – 97
திருக்குறளில் ஆ’ எழுத்தில் துவங்கும் குறள்கள் –23
பகவத் கீதையில் ‘ஆ’ எழுத்தில் துவங்கும் ஸ்லோகங்கள் –17
திருக்குறளில் ‘இ’ எழுத்தில் துவங்கும் குறள்கள்- 114
பகவத் கீதையில் ‘இ’  எழுத்தில் துவங்கும் ஸ்லோகங்கள் –21
திருக்குறளில்  ‘ஈ’ எழுத்தில் துவங்கும் குறள்கள்- 8
பகவத் கீதையில் ‘ஈ’ எழுத்தில் துவங்கும் ஸ்லோகங்கள் –1
திருக்குறளில் ‘உ’ எழுத்தில் துவங்கும் குறள்கள்-81
பகவத் கீதையில் ‘உ’ எழுத்தில் துவங்கும் ஸ்லோகங்கள் –9
திருக்குறளில் ‘ஊ’ எழுத்தில் துவங்கும் குறள்கள்– 21
பகவத் கீதையில் ‘ஊ’ எழுத்தில் துவங்கும் ஸ்லோகங்கள் –2
திருக்குறளில் மொத்தம் 1330 குறள்கள்;
பகவத் கீதையில் மொத்தம் 700 ஸ்லோகங்கள்.
இந்த இரண்டு நூல்களும் எடுத்துக் காட்டுகளே .
கம்ப ராமாயணத்திலும் இதைக் காணலாம்; காளிதாஸனிலும் இதைக் காணலாம் ; திவ்யப் பிரபந்தத்திலும் இதைக் காணலாம் ; தேவாரத்திலும் இதைக் காணலாம்!!


ஒரு அற்புதமான (wonderful pattern) பாணியைக் காண்கிறோம் .
குறில் என்றால் அதிகம்;
நெடில் என்றால் குறைவு .
உலகில் பழைய மொழிகளில் வேறு எங்கும் காண முடியாது .
அது மட்டுமா ? பழங்கால மொழிகளில் நம்மைப் போல அ ஆ இ ஈ ……………. க ச ட த ப ற …………. ய ர ல வ ………… வரிசையும் கிடையாது. அப்படி அகர வரிசையோ கொஞ்சம் சந்தியோ இருந்தால், அவை நமக்குப்  பின்னால் பிறந்த அல்லது நமது செல்வாக்கிற்கு உட்பட்ட மொழியாக இருக்கும்!!
Tags – அகர முதல, நெடில் , குறில், திருக்குறள் , பகவத் கீதை , அ -காரம்
வாழ்க சம்ஸ்கிருதம், வளர்க தமிழ்


–subham–