Tuesday, June 9, 2020

பழமொழிக்குள் ஒளிந்திருக்கும் மொழி thanks to dinamalar.com


பழமொழிக்குள் ஒளிந்திருக்கும் மொழி

 Added : ஜூன் 10, 2020 
Share

Advertisement
 பழமொழிக்குள் ஒளிந்திருக்கும் மொழி
பழமொழிகள் முன்னோர்களின் அனுபவ மொழி என்பார்கள். ஒரு சிந்தனையை, செதுக்கி எடுத்த சொற்களால் வெளிப்படுத்துவதுதான் அந்த உத்தி. ஆனால் எந்தக் கருத்து வலியுறுத்தத் தோன்றியதோஅதனுடைய உண்மையான அர்த்தத்தை இழந்து திரிந்துவிட்ட பழமொழிகள் உண்டு. அப்படிப்பட்ட சில பழமொழிகளை
பார்ப்போம்.

யானையும், பூனையும்


'ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்'என்பது பழமொழி. வலிமையானவர்கள் ஆணவத்தால் மற்றவர்களைப் பாதிக்கும் காரியங்களைச் செய்தால் பாதிக்கப்பட்டவர்கள், உங்கள் திமிரை அடக்க எங்களுக்கும்ஒரு காலம் வரும் என்று சொல்வார்கள் என்ற அர்த்தத்தில் வழங்கப்படுகிறது. ஆனால் உண்மையான அர்த்தம் வேறு.ஆனை என்பதை ஆ - நெய் என்று பிரிக்க வேண்டும். ஆ என்பது பசுவைக் குறிக்கும். பழைய போர்முறையில் ஆநிரை கவர்தல் என்று ஒரு முறை உண்டு. எதிரி நாட்டோடு போர் தொடங்க அந்நாட்டுப் பசுக்களைக் கவர்ந்து வருவார்கள். ஆ என்றால் பசு; அதன் பாலிலிருந்து கிடைப்பது நெய். சத்தான உணவுக்கு நெய் சேர்த்துச் சாப்பிடுவது நல்லது. அளவோடு சாப்பிட்டால் சத்து.
அதிகமாகச் சாப்பிட்டால் கொழுப்பு கூடிவிடும், நோய் வரும். அப்போதுவைத்தியர் கொடுக்கும் மருந்துப்பொடியைத் தேனில் குழைத்துச் சாப்பிட வேண்டும். பூனை என்பதை பூ - நெய் என்று பிரிக்க வேண்டும். பூவிலிருந்து கிடைப்பது தேன். அது பூ நெய்.ஆனைக்கு ஒரு காலம் வந்தால்பூனைக்கு ஒரு காலம் வரும் என்பதற்கு வேடிக்கையாக வேறு அர்த்தமும் சொல்லப்படுகிறது. அந்த காலத்தில் அரசர்கள் உலா வந்தால் அவர்களின் பாதுகாப்புக்கு யானைப்படை வரும். இந்தக் காலத்தில் உயர் பதவியில் இருப்பவர்கள் பயணம் வந்தால் பூனைப்படை பாதுகாப்புக்கு வருகிறது. ஆக யானைக்கு ஒரு காலம் வந்தது. இப்போது பூனைக்கு ஒரு காலம்
வந்துவிட்டது.'ஊரான் வீட்டுப் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்'மற்றவர்களின் பிள்ளைகளுக்கு உணவு கொடுத்து வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் என்ற பொருளில் வழங்கப்படுகிறது. இது பொருத்தமாக இல்லை. இது கணவன் மனைவி உறவு சம்பந்தப்பட்டது. ஊரான் வீட்டுப் பிள்ளையான ஒரு பெண்ணைத்தான் அவன் மனைவியாக ஏற்றுக் கொண்டான். அவள் கர்ப்பமாகும்போது அவளுக்குநல்ல ஊட்டச் சத்துள்ள உணவைக் கொடுத்துப் பாதுகாத்தால் கர்ப்பத்தில் வளரும் அவனது பிள்ளை நன்றாக உருவாகும். பிறந்த பிறகு தாய்ப்பால் கொடுத்தால் பிள்ளை நன்றாக வளரும். அதற்கும் அவளுக்கு ஊட்டச் சத்துக்களைக் கொடுக்க வேண்டும். இதுதான் ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன்பிள்ளை தானே வளரும் என்ற பழமொழியின் அர்த்தம்.

ஆயிரம் பொய்


'ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணத்தைப் பண்ணலாம்'என்பது பழமொழி. பொய் சொல்லி ஒரு கல்யாணத்தை நடத்தினால் என்றைக்காவது அது தெரியவரும்போது பிரச்னை வரும். அப்படியானால் வேறு பொருள் இருக்க வேண்டும். கல்யாணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர். அதற்கு வலிமையான அடித்தளம் அமைய வேண்டும். சொந்தபந்தங்கள்
பலரிடம் தெரியப்படுத்தி, பலர் முன்னிலையில் நிச்சயதார்த்தம் செய்து, பலரையும் அழைத்து நடத்துவதுதான் ஆழமான திருமணம். ஆயிரம் பேரிடம் போய்ச் சொல்லி ஒரு கல்யாணத்தை நடத்த வேண்டும் என்பதுதான் உண்மையான பொருள்.

கழுதையும் கற்பூர வாசனையும்


'கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை' என்பதில் கழுதைக்கும் கற்பூரத்துக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. சிலருக்குச் சில செயல்களின் மகத்துவம் தெரியவில்லை என்பதை வலியுறுத்துவதற்காக இது பயன்படுத்தப்படுகிறது. அப்படியானால் அதற்கு வேறு பொருட்களான சந்தனம், ஜவ்வாதுபோன்றவற்றைச் சாதாரணமாகச் சொல்லியிருக்கலாம். கற்பூரம்என்று சொல்லியிருப்பதால் இங்கே கவனிக்க வேண்டிய அர்த்தம் இருக்கிறது.கழு என்பது கோரைப் புல்வகைகளில் ஒருவகை. கழு என்ற கோரைப் புல்லில் தயாராகும் பாய் கற்பூர வாசனையைக் கொடுக்கும். சில நோய்கள் குணமாகுமாம். கழு தைக்க வருமாம் கற்பூர வாசனை என்பதே உண்மையான பழமொழி. கழு என்ற கோரைப்புல்வகை நாளாவட்டத்தில் அருகிவிட்டது.

கல்லைக்கண்டால்


'கல்லைக் கண்டால் நாயைக் காணோம்நாயைக் கண்டால் கல்லைக் காணோம்'என்ற பழமொழி, நாய் வரும்போது அதைத் துரத்தக் கல் கிடைப்பதில்லை; கல் கிடைக்கும்போது நாய் வருவதில்லை என்ற அர்த்தத்தில் பயன்படுகிறது. ஆனால் அது பொருள் அல்ல.இங்கு கல் என்று சொல்லப்படுவதுதான் சிந்திக்க வேண்டிய சொல். கடவுளுக்கு உரிய சிற்பத்தைபொருத்தமான கல்லைக் கொண்டுதான் செதுக்குவார்கள். பிறகு அதற்குப் பூஜை செய்து உருவேற்றி கோவிலில் பிரதிஷ்டை செய்வார்கள்.இந்தப் பழமொழியில் நாய் என்பது நாயகன் என்று இருக்க வேண்டும். நாயகன் என்றால் கடவுள். பக்தி சிரத்தையோடு வழிபடும்போது அங்கு கல் தெரியாது. கடவுள் சொரூபம் மட்டும்தான் தெரியும். ஈடுபாடு இல்லாமல் வழிபட்டால் சிலைதான் அதாவது கல்தான் தெரியும். பக்தி ஈடுபாட்டின் எல்லை இது. அதுதான் கல்லைக் கண்டால் நாயகனைக் காணோம்; நாயகனைக் கண்டால் கல்லைக் காணோம்.
இது குறித்துத் திருமூலர் குறிப்பிடும் ஒரு கருத்தைப் பார்ப்போம். ஒரு யானையின் உருவத்தை மரத்தால் செதுக்கலாம். அதை யானையாகப் பார்த்தால் மரம் தெரியாது. வெறும் மரமாகப் பார்த்தால் யானை தெரியாது.'மரத்தை மறைத்தது மாமத யானைமரத்தில் மறைந்தது மாமத யானை'இந்தக் கருத்தை அந்தப் பழமொழியோடு பொருத்திப் பார்க்கலாம்.

அரை வைத்தியர்


'ஆயிரம் பேரைக் கொன்றவன்அரை வைத்தியன்'என்ற பழமொழியின் பொருள் வேறு. முன்பெல்லாம் சித்த வைத்தியம்தான். மூலிகைகளை ஆராய்ந்து அவைகளைப் பிடுங்கி மருந்து தயாரிப்பார்கள். எவ்வளவு மூலிகைகள் ஒரு வைத்தியர்அதிகமாக ஆராய்ந்திருக்கிறாரோ அவரே சிறந்த வைத்தியர். 'ஆயிரம் வேரை' என்று கொண்டால் வைத்தியரின் பெருமை புரியும்.

'சிவ பூஜையில் கரடி'


என்ற பழமொழி, ஒரு நல்ல காரியம் நடக்கும்போது, கெட்ட எண்ணம் கொண்ட ஒருவர் ஊடே புகுந்து காரியத்தைக் கெடுத்துவிடுவதைக் குறிப்பதைப் போல் உள்ளது. இதன் உண்மையான அர்த்தத்தைத் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். இதற்குள் ஓர் ஆன்மிகச் செய்தி அடங்கியுள்ளது. முன்பெல்லாம் சிவாலயங்களில்பல்வேறு இசைக்கருவிகள் இசைக்கப்படும். அபிஷேகம் நடக்கும்போதும், அலங்காரம் நடக்கும்போதும், உற்ஸவர் உலாவரும்போதும் இவை இசைக்கப்படும். இப்போதும் தவில், நாதஸ்வரம் இசைக்கப்படுவதைப் பார்க்கிறோம். அப்படிப்பட்ட இசைக்கருவிகளில் ஒன்றுதான் 'கரடிகை' என்பது.
சுவாமிக்கு அலங்காரம் முடிந்து தீபாராதனை காட்டப்படும்போது இந்தக் கருவி இசைக்கப்படும். மற்ற நேரங்களில் வேறு வேறு கவனத்தில்இருந்த பக்தர்கள், இந்த இசையைக் கேட்டவுடன் தீபாராதனையை அனுபவிக்க ஆயத்தமாகிவிடுவார்கள். கரடிகை என்ற வாத்தியம்தான் பழமொழியில் கரடி என்று மாறிவிட்டது. சிவபூஜையில் கரடிகை என்றே சொல்வோம்.இன்னும் இப்படி நிறைய உண்டு.-முனைவர் இளசை சுந்தரம்முன்னாள் வானொலி நிலைய இயக்குனர், மதுரை98430 62817

Monday, June 8, 2020

அதீத எதிர்மறை எண்ணங்கள் கொண்டவர்களைத் தாக்குமாம் அல்சைமர் thanks to dinamalar.com


அதீத எதிர்மறை எண்ணங்கள் கொண்டவர்களைத் தாக்குமாம் அல்சைமர்!

Advertisement
எதிர்மறை எண்ணங்கள், அல்சைமர்,  Alzheimers, dementia, Negative thinking, Study, researchers, london, new study, Dr. Natalie Marchant,  psychiatrist, PET  brain scan, positron emission tomography, Alzheimer's disease, anxiety, depression
9Shares
facebook sharing button
messenger sharing button
twitter sharing button
லண்டன்: வயதான காலங்களில் ஏற்படும் அல்சைமர், டிமாண்டியா உள்ளிட்ட நோய்களுக்கு சிறுவயதில் ஏற்படும் எதிர்மறையான எண்ண சுழற்சியே காரணம் என விஞ்ஞானிகள் கண்டுபித்துள்ளனர்.

லண்டன் யூனிவர்ஸிடி காலேஜ் மனோதத்துவ ஆராய்ச்சியாளர் டாக்டர் நடாலீ மர்சண்ட் இதனைத் தனது ஆய்வு மூலம் தெரிவித்துள்ளார். 55 வயதுக்கு மேற்பட்ட 350 பேருக்கு போசிட்ரான் எமிஷன் டோமோகிராபி மூளை ஸ்கேன் எடுக்கப்பட்டது. அல்சைமர் நோய்க்கு வழிவகுக்கும் டோ மற்றும் பெடா செல்கள் அதிகரிக்க கடந்த கால வாழ்கையில் செய்த தவறுகள் மற்றும் எதிர்காலம் குறித்த பயம் மற்றும் கவலை ஆகியவையே முக்கிய காரணிகளாக விளங்குக்கிறது என இந்த ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

latest tamil news




மகிழ்ச்சியான மனநிலையில் உள்ளவர்களது மூளையில் இந்த செல்களின் படலம் குறைந்து காணப்படுகிறது. மூளையில் மகிழ்ச்சி ஏற்படுத்தும் ஹார்மோனான செராட்டினான் சுரப்பு மூளையை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. மேலும் பதற்றம் மற்றும் மன அழுத்தும் அதிகமாக உள்ளவர்களது மூளையும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளது. இவர்களிடம் இந்த டாவ் மற்றும் அமிலாய்டு படலம் அதிகமாக காணப்படவில்லை.

எப்போதும் எந்த விஷயத்துக்கும் பதற்றம், பயம் அடையாமல் அதீத எதிர்மறை எண்ணங்களை மனதுக்குள் குப்பைபோல சேர்க்காமல் இருப்பதே இந்த வயதான காலத்தில் டிமாண்டியா, அல்சைமர் போன்ற உயிரைப் பறிக்கும் மன நோய்களில் இருந்து விடுபட சிறந்த மருந்து. ஆகவே எப்போது மனதை புது மலர்போல புத்துணர்ச்சியுடன் வைக்கக் கற்றுக்கொள்வது நல்லது.

Monday, June 1, 2020

விசேஷமான மூலிகை வேலி பருத்தி! thanks to dinamalar.com

விசேஷமான மூலிகை வேலி பருத்தி!

 பதிவு செய்த நாள் : ஜூன் 01, 2020 

Advertisement
 விசேஷமான மூலிகை வேலி பருத்தி!
விசேஷமான மூலிகை வேலி பருத்தி!
கொரோனா போன்ற பல வைரஸ் நோய்களுக்கு காரணம், சுவாசக் கோளாறே.இந்தப் பிரச்னையை தீர்க்கும் அற்புத மூலிகையான, வேலி பருத்தி பற்றி, மூலிகை மருத்துவ வல்லுனர், 'அல்மா' வேலாயுதம்: துாதுவளை, துளசி, கண்டங்கத்திரி, ஆடாதொடை, முசுமுசுக்கை, கரிசலாங்கண்ணி, இம்பூரல் என, பல மூலிகைகள், சுவாசப் பிரச்னைகளுக்கு தீர்வு அளிக்கின்றன. எனினும், சித்தர்களால், 'உத்தாமணி' என அழைக்கப்படும், வேலி பருத்திக்கு, சுவாசக் கோளாறை தீர்க்கும் குணம் அதிகமாக உள்ளது. சாதாரணமாக, வேலிகளில் படர்ந்திருக்கும் இந்த தாவரத்தின் இலை, இதய வடிவில் இருக்கும்; இரட்டை காய்களையும் கொண்டிருக்கும். அந்த காய்கள் வெடித்தால், பஞ்சு போல வெளியே வரும். அதனால் தான், இதை, வேலி பருத்தி என்கின்றனர்.சீந்தில் என்ற மூலிகையும், வேலி பருத்தி போலவே இருக்கும். இலையை காம்புடன் கிள்ளினால், பால் போல திரவம் வடிந்தால், வேலி பருத்தி; தண்ணீர் போல திரவம் வந்தால், சீந்தில் என, முடிவு செய்யலாம்.வேலி பருத்தியின் இலையும், வேரும் மருத்துவக் குணம் கொண்டவை. சுவாசக் கோளாறுடன், வயிற்றுப் பிரச்னை, வயிற்று வலி, குளிர் காய்ச்சல், சளித் தொல்லை போன்ற பிரச்னைகளையும், இது போக்கும். இதன் இலையை பறித்து, இடித்து, சாறு பிழிந்து, தினமும், காலையில் ஒரு ஸ்பூன் குடித்து வந்தால், சுவாசப் பிரச்னை தீரும்; ஆஸ்துமா கட்டுப்படும். இந்த செடியின் இலையை அரைத்து, லேசாக சுட வைத்து, ஆறியதும், அதில் தேன் கலந்து சாப்பிட, காசநோய் கூட காணாமல் போகும்.இதன் இலை மூன்றை பறித்து, ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, ஆறியதும், வடிகட்டி, வாரம் ஒரு முறை குடித்து வந்தால், குழந்தைகளுக்கு சளித் தொல்லை தீரும்.மேலும், உடல் வலி, இடுப்பு வலி, மூட்டு வலி இருந்தால், வேலி பருத்தி இலையை, ஆமணக்கு எண்ணெய்யில் வதக்கி, மெல்லிய துணியில் கட்டி, ஒத்தடம் கொடுத்தால், வலி குறையும்.வேலி பருத்தியை, குழம்பாக வைத்தும் சாப்பிடலாம். ஒரு கைப்பிடி வேலி பருத்தியுடன், மிளகு, பூண்டு, சீரகம், மல்லி ஆகியவற்றை சேர்த்து வதக்கி, அரைத்து, புளி சேர்த்து, குழம்பாக வைத்து, சாதத்திற்கு ஊற்றி சாப்பிடலாம். சற்று கசப்பு சுவையுடன் இருக்கும்.அதுபோல, துவையலாகவும் இதை சாப்பிடலாம். மிளகாய் வற்றல், புளி, உப்பு வைத்து அரைத்து, அதை சாதத்தில் போட்டும், தொட்டும் சாப்பிடலாம்.வேலி பருத்தி சாறுடன், மிளகு சேர்த்து, நாள் முழுதும் ஊறவைத்து, அந்த மிளகை காய வைத்து, தினமும், ஒரு மிளகு சாப்பிட, மூச்சிறைப்பு நோய் குணமாகும். எனினும், தகுந்த மருத்துவர் ஆலோசனைப்படி, இவற்றை தயார் செய்வதே நல்லது!

Wednesday, May 27, 2020

அமெரிக்கா செல்லும் தேங்காய் சிரட்டை thanks to dinamalar.com


அமெரிக்கா செல்லும் தேங்காய் சிரட்டை

 அமெரிக்கா செல்லும் தேங்காய் சிரட்டை
20Shares
facebook sharing button
messenger sharing button
twitter sharing button
விருதுநகர் : தேங்காய் சிரட்டை, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது.

விருதுநகர் மாவட்ட விவசாயிகள், விவசாய கழிவுகளை பதப்படுத்தி, லாபம் பார்க்கின்றனர். அந்த வகையில் ஓட்டல்கள், கொப்பரை தேங்காய் உற்பத்தியாளர்களிடம் இருந்து, தேங்காய் சிரட்டைகளை சேகரித்து, நெருப்பில் வாட்டி, பவுடராக்கி, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர்.விருதுநகர், மூலிப்பட்டி விவசாயி, திருமுருகன் கூறியதாவது:தேங்காய் சிரட்டைகளை, கிலோ, 8 ரூபாய்க்கு வாங்கி, 4 டன், தொட்டியில், நெருப்பில் வேக விடப்படும்.

1 டன்னுக்கு, நன்கு சுட்ட சிரட்டைகள், 350 கிலோ கிடைக்கும்.அவற்றை துாத்துக்குடி தொழிற்சாலைகளுக்கு, கிலோ, 25 ரூபாய்க்கு அனுப்புகிறோம். அங்கு சிரட்டையை பவுடராக்கி, வெளிநாடுகளுக்கு அனுப்புகின்றனர்.அழுக்கு நீக்கும் தன்மை சிரட்டையில் இருப்பதால், அவற்றை மூலப்பொருளாக கொண்டு பியூட்டி கிரீம், குளியல் சோப்பு, ஹேர் டை, தண்ணீர் சுத்திகரிப்பான் உள்ளிட்டவை தயாரிக்க, அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு பெருமளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

Friday, May 8, 2020

பாவத்தின் தந்தை யார்? thanks to tamil and vedas

பாவத்தின் தந்தை யார்? (Post No.7938)
Yahoo/Inbox
  • Tamil and Vedas <comment-reply@wordpress.com>
    To:theproudindian_2000@yahoo.co.in
    Fri., May 8 at 3:09 a.m.
    Respond to this post by replying above this line

    New post on Tamil and Vedas

    பாவத்தின் தந்தை யார்? (Post No.7938)

    by Tamil and Vedas
    WRITTEN BY S NAGARAJAN                     
    Post No.7938
    Date uploaded in London – – – 8 May 2020   
    Contact – swami_48@yahoo.com
    Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
    பாவத்தின் தந்தை யார்?
    ச.நாகராஜன்
    முன்னொரு காலத்தில் அறிவாளியான ஒரு அரசனுக்குத் திடீரென்று ஒரு சந்தேகம் வந்தது.
    பாவத்தின் தந்தை யார்? பாவத்திற்கு ஆதி காரணமாக அமைவது எது?
    யோசித்து யோசித்துப் பார்த்தான். விடை தெரியவில்லை.
    மறுநாள் அரசவைக்கு வந்தவுடன் முதலில் அவன் கேட்ட கேள்வி இது தான்  : “பாவத்தின் தந்தை யார்?”
    அரசவையில் மந்திரி, ராஜகுரு, வித்வான்கள் உள்ளிட்ட அனைவரும்  யோசித்துப் பார்த்தார்கள். சரியான விடையைச் சொல்ல முடியவில்லை.
    மன்னனுக்குச் சற்று வருத்தம் ஏற்பட்டது.
    கற்றறிந்த தலைமை வித்வானாக இருந்த பிராமணரை அவன் பார்த்தான்.
    “பிராமணரே! ஒரு வாரம் உங்களுக்கு கால அவகாசம் தருகிறேன். சரியான விடையைச் சொல்லும். இல்லையேல் அதற்கான தகுந்த தண்டனையும் உண்டு.”
    ஏழை பிராமணர் நடுங்கி விட்டார்.
    இதற்கு எப்படிப் பதிலைக் கண்டுபிடிப்பது?
    வீட்டிற்குச் சென்ற அவர் இரவு முழுவதும் படித்தார். யோசித்தார். ஊஹூம். திருப்திகரமான விடை வரவில்லை.
    அடுத்த நாள் வழக்கம் போல நதிக்கரைக்குக் குளிக்கச் சென்றார்.
    கரையோரம் இருந்த தாசி ஒருத்தி அவரைப் பார்த்தாள். என்றும் தேஜஸுடன் விளங்கும் அவர் முகம் வாடி இருந்தது.
    அவரை அணுகிய அவள், “ஐயனே! ஒருநாளும் இல்லாதபடி இப்படி உங்கள் முகம் வாடி இருக்கிறதே? என்ன காரணம்?” என்று கேட்டாள்.
    அவர் விஷயத்தைச் சொன்னார்.
    “பூ! இவ்வளவு தானா? இதுவும் ஒரு கேள்வியா?  இதற்கு எனக்கு விடை தெரியுமே” என்றாள் அவள்.
    திடுக்கிட்டார் பிராமணர்.
    “சொல்லு, சொல்லு, விடை என்ன?” ஆவலுடன் கேட்டார்.
    “சொல்கிறேன். ஆனால் என் வீட்டு வாயிலுக்கு வர வேண்டும்.”
    அந்தணர் தயங்கினார். தாசி வீட்டு வாசலுக்குப் போகலாமா?
    “சரி, வாயில் வரை தானே! வருகிறேன்” -அந்தணர் தாசியுடன் அவள் வீட்டு வாயிலுக்குச் சென்றார்.
    தாசி: “வந்தது வந்தீர்கள். உள்ளே வாருங்கள். தக்ஷிணையாக நூறு ரூபாய் தருகிறேன். வாங்கிக் கொள்ளுங்கள். உடனே விடையையும் சொல்கிறேன்.”
    அந்தணர் வாயைப் பிளந்தார். நூறு ரூபாயை விட அவருக்கு மனமில்லை. தாசியின் வீட்டிற்குள் நுழைந்தார்.
    நூறு ரூபாயைக் கையில் எடுத்த தாசி அந்தணரைப் பார்த்து, “இதோ நூறு ரூபாய்! ஆனால் என் படுக்கை அறைக்குள் வந்து படுக்கையின் மீது உட்காருங்கள். இருநூறாகத் தருகிறேன்” என்றாள்.
    இருநூறா?
    படுக்கை அறையினுள் நுழைந்த அந்தணர் படுக்கையின் மீது உட்கார்ந்தார்.
    தாசி : “வந்து அமர்ந்து விட்டீர்கள். அருமையாக சமைத்து இருக்கிறேன். மாமிச உணவு தான். கொஞ்சம் எடுத்துக் கொள்ளுங்கள். என்னுடைய தங்க நெக்லஸையும் தருகிறேன்.”
    அந்தணர் யோசித்தார். தங்க நெக்லஸ். கை நிறைய பணம்.
    என்ன பிராயசித்தம் செய்யலாம் என்று யோசித்த அவர் உடனே அவளது கோரிக்கைக்கு இசைந்தார்.
    வேசி சமையலறையிலிருந்து மாமிசத்தை ஒரு தட்டில் வைத்துக் கொண்டு வந்தாள்.
    அதை வாங்கிய பிராமணர் அதில் ஒரு துண்டை எடுத்துத் தான் வாயில் போட வாயைத் திறந்தார்.
    வேசி பளீரென்று அதைத் தட்டி விட்டு, பிராமணரின் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை அறைந்தாள்.
    “இது கூடவா தெரியவில்லை. பாவத்தின் தந்தை ஆசை, பேராசை. போ! ராஜாவிடம் சொல்லு போ!” என்றாள்.
    பேராசை!
    பிராமணர் கண்களில் நீர் துளித்தது.
    மெதுவாக வெளியே சென்றார் - வேசியை வணங்கி விட்டு.
    அடுத்த நாள் ராஜாவின் கேள்விக்கு பதில் சொல்லி விட முடியும் என்பதால் அவர் முகத்தில் பழைய தேஜஸ் ஜொலித்தது; அத்துடன் புதிதாக பெறுதற்கரிய ஞானமும் பெற்றதால் ஞான தேஜஸும் சேர்ந்தது