Sunday, August 30, 2015

முறையான குழந்தை வளர்ப்பு

முறையான குழந்தை வளர்ப்பு

என்பார்வை
நன்றி: தினமலர்-2015/07/06

காலையில் வயிறு காலியா?
பள்ளிக்கு கிளம்பும் அவசரத்தில், நேரமில்லை எனும் காரணம் காட்டி பல மாணவர்கள் காலை உணவைச் சாப்பிடுவதே இல்லை. பெரும்பாலான தினங்களில் காலி வயிற்றுடன் தான் பள்ளிக்குச் செல்லுகின்றனர். இது பல ஆரோக்கியக் கேடுகளுக்கு வழி வகுக்கிறது என்பது அவர்களுக்குப் புரிவதில்லை.
இரவு சாப்பிட்ட பின் 6 முதல் 10 மணி நேரம் வரை எதுவும் சாப்பிடாமல், நீண்ட இடைவெளி விடுகிறோம். இதனால் உடலில் சக்தி குறைகிறது. இந்த சக்தியைப் பெறுவதற்குக் காலையில் உணவு சாப்பிட வேண்டியது அவசியம். காலையில் நாம் சாப்பிடும் உணவு தான், நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச்சியுடனும் செயல்பட, மூளை மற்றும் தசைகளுக்குத் தேவையான சக்தியை தருகிறது.

என்ன பிரச்னை ஏற்படும்? : காலையில் உணவு சாப்பிடாமல் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு விரைவிலேயே ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படுகிறது. இதனால் காலை வகுப்புகளில் அவர்களால் முழுமையாக கவனம் செலுத்த முடிவதில்லை. துாக்கம், களைப்பு, தலைவலி வருகிறது. அவை கற்றல் திறனைப் பாதிக்கின்றன.
இவர்கள் மதிய உணவுக்கு முன்பாக வரும் இடைவேளை நேரத்தில் பசி காரணமாக ஏதாவது ஒரு நொறுக்குத் தீனியை வயிறு நிறைய சாப்பிட்டு விடுகின்றனர். இதனால் மதிய உணவு சாப்பிடுவதும் குறைந்து போகிறது. நொறுக்குத் தீனிகளைச் சாப்பிடுவதால் உடல் பருமன் வருகிறது. இதன் விளைவால் இளம் வயதிலேயே சர்க்கரை நோய் ஏற்படுகிறது.

மேலும், தொடர்ந்து காலை உணவைத் தவிர்ப்பவர்களுக்கு, இரைப்பையில் சுரக்கின்ற அமிலச் சுரப்பு இரைப்பைத் திசுக்களை அரித்துப் புண்ணாக்கிவிடுகிறது. இது பசியைக் குறைத்து விடுகிறது. செரிமானக் கோளாறு தொல்லை தருகிறது. எனவே இவர்களால் அடுத்த வேளை உணவையும் சரியாகச் சாப்பிட முடிவதில்லை. இது ஊட்டச்சத்துக் குறைபாட்டை இன்னமும் அதிகரிக்கச் செய்கிறது. இது உடல் வளர்ச்சியைப் பாதிக்கிறது. நோய் எதிர்ப்புச் சக்தியைக் குறைக்கிறது. இவர்கள் உடலளவிலும், மன அளவிலும் பலவீனமாக இருக்கிறார்கள். இதனால் பொறுமை குறைந்து கோபம், எரிச்சல் அதிகமாக வருகிறது.

ஆரோக்கிய உணவு:காலை உணவு என்பது கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து கலந்த சமச்சீர் உணவாக இருக்க வேண்டும். கொழுப்பு மிகுந்த காலை உணவு மந்த நிலையை உருவாக்கும். ஆகவே அதைத் தவிர்க்க வேண்டும். வழக்கமான
அரிசியில் தயாரிக்கப்பட்ட இட்லி, தோசை, சாதம் என்று ஒரே வகை உணவைச் சாப்பிடுவதற்குப் பதிலாக பல மாற்று உணவுகளைச் சாப்பிடும் வழக்கத்தை கைகொள்ள வேண்டும்.உதாரணமாக கேழ்வரகு இட்லியுடன், நிலக்கடலை சட்னி, ஒரு வாழைப்பழம், கார்ன் பிளேக்ஸ் கலந்த பால்
சாப்பிடலாம். வேகவைத்த காய்கறிகள் சேர்த்த கோதுமை ரவா உப்புமாவுடன், வேகவைத்த முட்டை சாப்பிடலாம்.

அவசரத்துக்கு 'பிரட் சான்ட்விச்' அல்லது வெண்ணெய் தடவிய 'பிரட்' மற்றும் 'ஆம்லெட்' சாப்பிடலாம். சப்பாத்தியுடன், 100 மி.லி., பால், அரை ஆப்பிள் சாப்பிடலாம். இப்படிச் சாப்பிடும் போது ஆரோக்கியத்துக்குத் தேவையான எல்லாச்சத்துகளும் கிடைத்து விடும். அரிசி தோசை ஒருநாள் என்றால், சம்பா தோசை ஒருநாள் சாப்பிடலாம். காலை உணவில் ஒரு பழம் அவசியம். சாமை, வரகு, தினை, குதிரைவாலி போன்ற சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட காலை உணவு ஆரோக்கியத்துக்கு நல்லது.

காலை உணவைச் சரியாகச் சாப்பிடும் குழந்தைகள், நல்ல உடல் நலனுடனும் ஊக்கத்துடனும் செயல்படுகிறார்கள் என்பதும்; இவர்களுக்குச் சிந்திக்கும் திறன், அறிவுத்திறன் போன்றவை அதிகமாக உள்ளது என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இனிமேலாவது மாணவர்கள் காலை உணவைத் தவிர்க்காமல் சமச்சீர் உணவைச் சாப்பிட்டு ஆரோக்கியத்தைக் காக்க முன்
வரவேண்டும்.

மதிய உணவு என்ன : மாணவர்கள் மதிய உணவுக்கு எடுத்துச் செல்வதில் சாதம், சாம்பார் அல்லது பருப்பு, கீரை, கூட்டு, தயிர் இருக்க வேண்டும். இதில் கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு, வைட்டமின், இரும்புச்சத்து, நார்ச்சத்து என எல்லாச்சத்துகளும் அடங்கிவிடும். மதியம் பழம் வேண்டாம். மாலையில் அல்லது இரவில் ஒரு பழம் சாப்பிடலாம். சாப்பிட்டு முடித்த பின்னர் இரண்டு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

சிலர் தக்காளிச்சாதம், லெமன் சாதம், புளிசாதம் என ஏதாவது ஒருசாதம் மட்டும் டிபன்பாக்சில் கொண்டு செல்வார்கள். இவற்றில் தேவையான அளவுக்குக் காய் கறிகள் இருப்பதில்லை என்பதால் இரும்புச்சத்து, வைட்டமின்கள் நார்ச்சத்து ஆகியவை குறைவாகவே இருக்கும்.
இவற்றில் கிடைக்கிற கலோரிகளும் குறைவு. எனவே, சாதம் மட்டும் கொண்டு செல்பவர்கள் கூடவே, பருப்புக்கூட்டு, கீரை சேர்ந்த உருளைக் கிழங்கு பொரியல், வெங்காயமும், வெள்ளரியும் கலந்த தயிர்பச்சடி கொண்டு செல்ல வேண்டும். இப்படிச் சாப்பிடும்போது உடலுக்குத் தேவையான எல்லாச் சத்துகளும் கிடைத்து விடுவதால் களைப்பு தெரியாது. மாலை நேரத்தில் விளையாடுவதற்குத் தேவையான சக்தியும் கிடைத்துவிடும்.

ஞாபக சக்தி அதிகரிக்க வாரம் இரண்டு நாட்களுக்கு மதிய உணவில் பிரண்டைத் துவையல், வல்லாரைத் துவையல் சேர்த்து வந்தால் செரிமானத்துக்கும், ஞாபக சக்தி அதிகரிப்பதற்கும் உதவும். மாலை நேரத்தில் பிட்சா, பர்கர், கேக், பிஸ்கட், சான்ட்விச், சிப்ஸ், சேவு, சீவல், வடை, பஜ்ஜி என நொறுக்குத் தீனிகளைச் சாப்பிடுவதற்குப் பதிலாக சுண்டல், பயறு, பொட்டுக்கடலை, வெல்லமிட்டாய்,கடலைமிட்டாய், அதிரசம், எள்ளுருண்டை, காய்கறியும் பழங்களும் கலந்த சாலட் சாப்பிட்டால், டீ, காபிக்குப் பதிலாக பழச்சாறு குடித்தால், உடல் பருமன் வருவது தடுக்கப்படும்.
மேலும் இவற்றில் ஊட்டச் சத்துகள் அதிகம் என்பதால், இரவில் பாடங்களைப் படிப்பதற்குத் தேவையான ஆற்றலையும் பெறமுடியும்.

ஏட்டில் முடங்கும் தாலாட்டு
நன்றி: தினமலர் - 2015/07/02

'கடன்காரன் வந்தால்கலங்காத நெஞ்சம்
கை மீது பிள்ளை
அழுதாலே அஞ்சும்'
என்று பாட்டு உண்டு. அழுகிற குழந்தையை சமாதானம் செய்வது அவ்வளவு எளிதான காரியமல்ல. மூன்று வேளை நல்ல உணவு கொடுத்து, நல்ல சம்பளமும் கொடுத்து, பிள்ளையை மட்டும் பார்த்து கொள்ள ஆள் தேடுவோமானால், இன்றைய சூழலில் இந்த பணிக்கு ஆள் கிடைப்பது அரிது. இந்த மாதிரி ஒரு பணிக்கு ஆள் கேட்டோமானால், அவர்கள் சொல்வது “பிள்ளை எடுத்து சாப்பிடுவதற்கு, பிச்சை எடுத்து சாப்பிடலாம்” என்கிறார்கள். பொழுதுக்கும் குழந்தையை பார்த்து கொள்வது, அதுவும் இந்த காலத்து குழந்தைகளை பார்த்து கொள்வது என்பது சிரமமான பணி.
அழும் குழந்தையை சமாதானம் செய்வது என்பது ஒரு கலை. குழந்தை எதற்கு அழுகிறது என்று அதற்கு சொல்ல தெரியாது. இதற்காகத்தான் அழுகிறது என்று நம்மாலும் அறுதியிட்டு கூற முடியாவிட்டாலும், ஒரு உத்தேசமாக, இதற்குத்தான் அழுகிறது என்று ஒரு தாயால் ஊகிக்க முடியும்.
பாலுாட்ட நேரமில்லை
அழும் குழந்தையை துாங்க வைக்க ஒரு அருமையான அணுகுமுறை, தாலாட்டு பாடி துாங்க வைப்பது. இந்த காலத்து தாய்மார்களுக்கு “பாலுாட்டவே” நேரமில்லாத போது, “தாலாட்டு” எங்கே பாடப்போகிறார்கள் என்று நினைக்கிறீர்களா. அதிலும் எத்தனை தாய்மார்களுக்கு 'தாலாட்டு' என்று ஒன்று இருப்பதாக தெரியும். 'தாலாட்டு' ஒரு அருமையான சொல்.
நல்ல தமிழ் சொற்களால் தாலாட்டை பாடும்போது, குழந்தை அதைக்கேட்டு ஒரு மயக்க நிலைக்கு வந்து துாங்கி விடுகிறது. இனி குறைந்தது இரண்டு மணி நேரத்திற்காவது கவலை இல்லை, என நிம்மதி பெருமூச்சு விடும் தாய்மார்கள் எத்தனை பேர். தாலாட்டின் வாயிலாக ராமர் கதை, சொக்கர் மீனாட்சி கதை, முருகன் வள்ளியை மணந்த கதை, தாய்வீட்டு பெருமை, புகுந்த வீட்டு பெருமை, கணவனின் பெருமை என எவ்வளவோ தகவல்களை, அந்த தாய் சொல்லி, சொல்லி பாடுகிறாள். தாலாட்டை கேட்டதால் பின் காலத்தில் உருவான கவிஞர்கள் எத்தனையோ பேர், தமிழ்பால் பற்று கொண்டவர்கள் பல பேர்.
கணவன் -மனைவி உறவு
தாலாட்டு குழந்தையை துாங்க வைக்க மட்டும் செய்வதில்லை. கணவன், மனைவி பிணக்கை கூட சரி செய்கிற ஆற்றல், தாலாட்டாய் வரும் தமிழுக்கு உண்டு. கணவன் மனைவிக்குள் பிணக்கு ஏற்படுகின்றது. மூன்று நாட்கள் முழுதாய் முடிந்து விட்டது. அவர்கள் இன்னும் சமாதானம் ஆகவில்லை. கணவனும் மனைவியும் எப்படி சமாதானம் ஆவது, என்று சிந்தனை வயப்பட்டு இருந்தனர். பின் இரவு நேரம் குழந்தை அழுகிறது. மனைவி தாலாட்டு பாடுகிறார்.
''ஆராரோ ஆரிரரோ - என் கண்ணே
ஆராரோ ஆரிரரோ
ஆரடித்தார் ஏனழுதாய்
கண்ணே என் கண்மணியே
அடித்தாரை சொல்லியழு
விளக்கிலிட்ட வெண்ணையை போல்
வெந்துருகி நிற்கையிலே
கலத்திலிட்ட சோறது போல்
கண் கலக்கந்தீர்த்தாயே
கொப்புக் கனியே
கோதுபடா மாங்கனியே
வம்புக் கழுதா யோ
வாயெல்லாம் பால்வடிய
மாமன் அடித்தானோ
மல்லி கைப்பூச் செண்டாலே
அத்தை அடித்தாளோ
அல்லி மலர்ச் செண்டாலே
அடித்தாரை சொல்லியழு
ஆக்கினைகள் செய்து வைப்போம்
தொட்டாரை சொல்லியழு
தோள் விலங்கு போட்டு வைப்போம்
வெண்ணையால் விலங்கு பண்ணி
வெய்யிலிலே போட்டு வைப்போம்
மண்ணினால் விலங்கு பண்ணி
தண்ணீரிலே போட்டு வைப்போம்''
எனப்பாடி தொடரும்போது
''ஆரும் அடிக்கவில்லை
ஐவிரலும் தீண்டவில்லை
தானா அழுகின்றான்
தம்பி துணை வேணுமென்று
அவனா அழுகின்றான்
தங்கை துணைவேணுமென்று''
என்று முடிக்கின்றாள்.
இந்த தாலாட்டை கேட்டதும் முற்றத்தில் படுத்து இருந்த கணவன், வீட்டுக்குள் வந்து விடுகின்றான். அங்கே குழந்தையும் துாங்கிவிட்டது. கணவன், மனைவி சமாதானமும் ஆனது. மனதுகள் சங்கமமும் ஆனது.
-மாமியார் --மருமகள்
மாமியார் ஒருவர் தன் மருமகளை எப்பவும் உன் அப்பன் வீட்டில் இருந்து என்ன பெரிசா கொண்டு வந்து விட்டாய் என்று நிந்தித்து கொண்டே இருப்பாள். மருமகள் கொண்டு வந்து இருந்தாலும், மாமியார் கண்களுக்கு அவை போதவில்லை. அது கண்ணின் குற்றமல்ல பார்வைக்கோளாறு. மருமகள் பாடுகிறார்.
'போட்டு விளையாடப்
பொன்னாலே அம்மானை
வைத்து விளையாட
வைர கிலுகிலுப்பை
கட்டி விளையாடகாசிச் சிண்டுமணி
ஒட்டி விளையாட ஒயிலார ரயில் வண்டி
நெத்திக்கு சுட்டிநிழல் பார்க்க கண்ணாடி
காலுக்கு தண்டை கைக்கு கணையாழி
கொண்டு வந்து தருவார்கள் -
கோதை கிளிக்கு அம்மான்மார்
சங்கினால் பால் கொடுத்தால்
சந்தணர்வாய் நோகுமென்று
தங்கத்தினால் சங்கு செய்து
தருவார்கள் தாய்மாமன் - என்றும்
மாடுகட்டி போரடித்தால்
மாளாது சென் நெல் என்று
யானை கட்டி போரடிக்கும்
அம்மான்மார் சீமையிலே'- என்றும்
தான் பிறந்த வீட்டு பெருமையை தாலாட்டாய் பாடுகின்றார்கள். இப்பாடலை கேட்டு குழந்தை அமைதியானதோ இல்லையோ, மாமியார் அமைதியானார்.
இன்னொரு தாலாட்டு பாட்டில்...
'ஆராரோ ஆரிரரோ
ராமருக்கோ பஞ்சு மெத்தை
பஞ்சுமெத்தை மேலிருந்து - ராமர்
பஞ்சாங்கம் பார்க்கையிலே
வயது நுாறென்று சொல்லி
வாசித்தார் பஞ்சாங்கம்
எழுத்து நுாறென்று சொல்லி
எழுதினார் பஞ்சாங்கம்'
என்று தன் பிள்ளை நுாற்றாண்டு காலம் வாழ வேண்டும் என பாடுகின்றாள். திரும்ப,திரும்ப, தன் பிள்ளையை உயர்த்தியும்,வாழ்த்தியும் பாடுவதால் குழந்தைக்கு தாயின் பரிபூரண ஆசீர்வாதம் கிடைக்கின்றது. நேயர் விருப்பம் போல் சில பிள்ளைகள் தான் விரும்பும் தாலாட்டு பாடலை, தாயை பாடச் சொல்லி கேட்கும்.
பரம்பரை, பரம்பரையாக செவி வழியாக வாழ்ந்து வந்த தாலாட்டு இன்றைய தலைமுறைகளின், செவிகளில் விழாமலே போய்விட்டது பரிதாபம். பாரம்பரியமிக்க பல தாலாட்டு பாடல்கள் காலப்போக்கில் அழிந்து தாலாட்டு என்று ஒன்று இருந்ததா? என கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. எனவே தாய்மார்களே பிள்ளைகளுக்கு தாய்ப்பாலும் ஊட்டுங்கள், கூடவே தாலாட்டும் பாடுங்கள்.ஓடி விளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா
கூடி விளையாடு பாப்பா-
ஒரு குழந்தையை வையாதே பாப்பா
காலை எழுந்தவுடன் படிப்பு
பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுவதும் விளையாட்டு என
வழக்கப்படுத்திக் கொள்ளு பாப்பா''
என பாரதியார், குழந்தைகள் தங்களை எவ்வாறு வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை தன் இனிய பாடல் மூலம் கூறுகிறார்.

விளையாட்டின் முக்கியத்துவத்தோடு, ஒற்றுமை, படிப்பு, சுறுசுறுப்பு போன்ற பண்புகளையும் எடுத்துக் கூறி உள்ளார். விளையாட்டுக்கள் ஓர் இனத்தின் வீரத்தையும், பண்பாட்டையும் வெளிப்படுத்துகின்றன. விளையாட்டின் அடிப்படை நோக்கம் போட்டியிடுதலாகும். உடலிலும் உள்ளத்திலும் உள்ள ஆற்றல்களை வெளியிடவும், எதிர்பாராத தோல்விகளை எதிர்கொள்ளும் மனப்பான்மை மேம்படவும் விளையாட்டு உதவுகிறது.
இது குழந்தைகளின் உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு உறுதுணையாக நிற்கிறது. குழந்தைகளிடம் சகோதரத்துவத்தையும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையையும் வளர்க்கிறது. கிராமங்களில் இரவு நேரங்களில் தெருவில் உள்ள சிறுவர் சிறுமியர் ஒன்று கூடி தங்களின் பெற்றோர்கள் முன்னிலையில் அம்மானை. குலைகுலையா முந்திரிக்காய், பூப்பறிக்க வருகிறோம். திரித்திரிப் பொம்மக்கா போன்ற விளையாட்டுக்களை விளையாடும் போது மகிழ்ந்தவர்கள் குழந்தைகள் மட்டுமல்ல அவர்தம் பெற்றோர்களும் தான். அன்றைய விளையாட்டுகள்
அன்று நாம் விளையாடி மகிழ்ந்த விளையாட்டுக்களாகிய பம்பரம், கிட்டிப்புள், பச்சைக்குதிரை, கபடி, கோலிக்குண்டு, செதுக்கு முத்து, திருடன் போலீஸ், கிளித்தட்டு, காற்றாடு, பந்து விளையாட்டு, ஒற்றையா இரட்டையா, நீச்சல் போன்ற விளையாட்டுக்கள் எங்கே போயின?
பெண் குழந்தைகள் குதுாகலமாக விளையாடிய நொண்டி, தட்டாங்கல், தாயம், பல்லாங்குழி, கண்ணாமூச்சி, பூப்பறித்தல், கரகரவண்டி, ஊஞ்சல் போன்ற விளையாட்டுக்கள் போன இடம் எங்கே? இன்று கிராமங்களில் கூட இவ்விளையாட்டுகளை காணமுடியவில்லை. வெறுமனே மேம்போக்காக நேரத்தைப் போக்க வேண்டும் என்ற நோக்கில் விளையாடப்பட்டவை அல்ல இவை. உடல் ஆரோக்கியத்தையும், உடல் வலிமையையும் குழந்தைகளின் சிந்தனைத் திறனையும், சமயோஜிதப் புத்தியையும் வளர்க்கும் விதத்தில் தான் இருந்தன. எடுத்துக்காட்டாக ஆண்கள் விளையாடும் கபடியை எடுத்துக் கொண்டால் அது கண்களுக்கு பயிற்சி, மூச்சுப் பயிற்சி, கை, கால் தசைகளுக்குப் பயிற்சி அளிக்கும் விதமாக உள்ளது. பெண் குழந்தைகள் விளையாடும் தட்டாங்கல்லை எடுத்துக் கொண்டால் கைவிரல்களுக்கும், கண்களுக்கும் நாம் கொடுக்கும் பயிற்சியாகவே இருக்கிறது.
மண்ணில் விளையாடட்டும்
குழந்தைகளை மண்ணில் விளையாடவிடுங்கள், அப்போதுதான் குழந்தைகளுக்கு எதிர்ப்பு சக்தி கூடும் என அமெரிக்க ஆராய்ச்சி கூறுகிறது. நாம் குழந்தைகளை மண்ணில் இறங்கி விளையாட விடுவதில்லை. குழந்தைகளின் பொழுதுபோக்கு தொலைக்காட்சி பார்ப்பது, வீடியோ கேம்ஸ் விளையாடுவது, அலைபேசியில் சேட்டிங் செய்வது என்றாகி விட்டது. இதன்
விளைவாக ஆரோக்கியத்தையும் கெடுத்துக் கொள்கின்றனர். குழந்தைகளின் அதிக எடை, மெலிந்த தேகம், கண்பார்வை நோய், சர்க்கரை நோய் போன்றவைகளுக்கு முக்கியக் காரணம் ஓடி ஆடி விளையாடாமல் ஒரே இடத்தில் அடைந்து கிடப்பது தான். மன இறுக்கத்திற்கும் இதுவே காரணம் .
முற்காலங்களில் திருவிழா நேரங்களில் கிராமங்களில் வழுக்குமரம் ஏறுதல், உறியடித்தல், மஞ்சள் தண்ணீர் ஊற்றுதல், கபடி மற்றும் கைப்பந்து போன்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தி, பரிசுகள் வழங்கி குழந்தைகளிடையே விளையாட்டு மனப்பான்மையை வளர்த்தார்கள். ஆனால் இன்றோ திருவிழாக் காலங்களில் கிராமங்களில் திரைப்பாடலுக்கு ஆட்டம் போடுகின்றனர்.
வீரவிளையாட்டுகள்
நமது கிராமங்களுக்கே உரிய வீரவிளையாட்டுகளாகிய சிலம்பம், ஜல்லிக்கட்டு, இளவட்டக்கல் துாக்குதல், மற்போரிடல், நீரில் மூழ்கி மண் எடுத்தல், ஏறு தழுவுதல் போன்றவை போன இடம் தெரியவில்லை. இவற்றுக்கான காரணங்களை ஆராய்வோமேயானால் நம் முன்னே நிற்பது நாம் மறந்த கூட்டுக்குடும்ப வாழ்க்கை. பழக்கப்படுத்திக் கொண்ட இயந்திர வாழ்க்கை, கிராமங்களை மறந்து நகரத்துக்கு வந்தது, பெற்றோர் குழந்தைகளுக்கு இடையேயான உறவில் தொய்வு மற்றும் அறிவியல் சார்ந்த தொழில்நுட்ப வளர்ச்சி போன்றவற்றைக் கூறலாம். இன்றைய தினம் விளையாட விளையாட்டுக்கள் இல்லையா? குழந்தைகள் விளையாடவில்லையா? என கேட்கலாம். அன்று நாம் விளையாடிய கிட்டிப்புள் தான் இன்று கிரிக்கெட்டாக உருவெடுத்துள்ளது. அன்று நாம் விளையாடிய தாயம், ஆடுபுலியாட்டம் தான் இன்று செஸ் ஆக மாறியுள்ளது. இன்றைய விளையாட்டுக்கள் அனைத்தும் பணம் சார்ந்ததாகவும் (உபகரணங்களுக்கு ஆகும் செலவு), பிறர் உதவி சார்ந்ததாகவும் (பயிற்சியாளர்) இன்னும் சொல்லப்போனால் மேல்தட்டு மக்கள் மட்டுமே விளையாடக்கூடிய விளையாட்டுக்களாகவே உள்ளன. நடுத்தர மக்களுக்கும், ஏழை மக்களுக்கும் இது எட்டாக்கனியாகவே உள்ளது.
எனவே பெற்றோர்களாகிய நாம் செய்ய வேண்டியது நமக்குத் தெரிந்த, நம் மூத்தோர்கள் அறிந்த பல அழிந்துபோன விளையாட்டுக்களை நம் குழந்தைகளுக்குக் கற்றுத்தர வேண்டும். நாமும் நமது குழந்தைகளோடு சேர்ந்து விளையாட வேண்டும். விழாக்காலங்கள் மற்றும் முக்கியமான நிகழ்வுகளில் உறவினர்களையும், குழந்தைகளையும் சந்திக்கும் போது நாம் விளையாடி மகிழ்ந்த விளையாட்டுக்களை விளையாடச் சொல்லி மகிழலாம். இதனால் குழந்தைகளின் உடல் ஆரோக்கியம் பெருகுவதோடு, உள்ளமும் பண்படும். சகோதரத்துவம் மற்றும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை வளரும். குழந்தைகளின் மன இறுக்கம் அகலும். பெற்றோர், குழந்தைகள் மற்றும் அண்டை அயலாருடன் நட்புறவு ஓங்கும். மொத்ததில் நல்ல பண்புள்ள மாண்புமிக்க மனிதனாக ஒவ்வொரு குழந்தைகளும் உருவெடுப்பர். இது நமது வீட்டிற்கு மட்டுமின்றி நாட்டிற்கும் பெருமை சேர்க்கும்.
-முனைவர் எஸ்.கணேசன்,
பொருளியல் துறைத் தலைவர். அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லுாரி

கசக்கிறதா கறிவேப்பிலை!
நன்றி: தினமலர் - 2015/07/05


நாம் ஆரோக்கியமாக இருக்கவே விரும்புகிறோம். அதற்கென பல்வேறு உணவுப்பழக்கங்களையும், உடற்பயிற்சிகளையும் செய்கிறோம். ஒரு பெரிய நிறுவனத்தின் பெயர் பொறிக்கப்பட்ட இணை உணவினையோ, அல்லது உடலுக்கு போஷாக்கு மற்றும் சக்தி தரக்கூடிய விலை உயர்ந்த உணவுப்பொருட்களையோ அன்றாடம் பயன்படுத்துகிறோம்.ஆப்பிள், ஆரஞ்சு போன்ற கண்களுக்கு இதமான பழங்களில் மட்டுமே சத்துக்கள் நிறைந்துள்ளன எனக்கருதி அவற்றை உண்ண ஆவல் கொள்கிறோம். நாம் தினந்தோறும் நம் உணவில் காணும் பொருள் கறிவேப்பிலையில் எத்தனை வித உயிச் சத்துக்கள் அடங்கியிருக்கின்றன என உங்களுக்கு தொரியுமா...? எத்தனை போர் கறிவேப்பிலையைத் தட்டின் ஓரம் எடுத்துவைக்காமல் உண்டிருப்போம். பழந்தமிழ்ச் சித்தர்கள் கறிவேப்பிலையின் மகத்துவம் உணர்ந்து, அதனை தங்கள் மருத்துவத்தில்
பயன்படுத்தி உள்ளனர். உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை சகலத்துக்கும் நன்மை பயக்கும் கறிவேப்பிலை நமக்கு கிட்டிய வரப்பிரசாதம்.
கறிவேப்பிலை வரலாறு
பாரசீகத்திலிருந்து வந்த ஆரியர்களின் வருகைக்குப் பின், தென்னகத்தில்
திராவிடர்களுக்கு, கறிவேப்பிலை
அறிமுகமானது என வரலாற்றிலிருந்து அறிகிறோம். உலகெங்கும் பரவலாக வளரும் தாவரமாக உள்ள கறிவேப்பிலையின் அறிவியல் பெயர் முராயாகோனிகி. curry leaves என ஆங்கிலத்தில் வழங்கப்படும் இப்பெயர் ஆங்கிலேயர் இந்தியாவை ஆண்டபோது வழக்கில் வந்தது.
இந்திய நறுமணப் பொருள் கழகத்தின் தகவல்படி, 100 கிராம் கறிவேப்பிலை சராசரியாக 6 கிராம் புரதம், 1 கிராம் கொழுப்பு, 4 கிராம் தாதுக்கள், 7 கிராம் நார்ச்சத்து, 19 கிராம் கார்போஹைட்ரேட், 830 மில்லி கிராம் கால்சியம், 57 மில்லி கிராம் பாஸ்பரஸ், 0.930 மில்லி கிராம் இரும்புச்சத்தும் கொண்டது. பீட்டா கரோட்டின், தயாமின், ரைபோபிளேவின், தயாசின், போலிக் அமிலம்,
விட்டமின் ஏ.பி.சி. மற்றும் இ, மாங்கனீசு, குரோமியம் போன்ற தாதுச்சத்துக்களும், கறிவேப்பிலையில் அடக்கம்காலையில் வெறும் வயிற்றில் சிறிதளவு கறிவேப்பிலையைப் பச்சையாக உண்ணும் போது, அதனால் கிடைக்கக்கூடிய பயன்கள் அளப்பரியவை.

பலதரப்பட்ட ஆன்டி ஆக்ஸிடண்ட் மூலக்கூறுகளைக் கொண்ட கறிவேப்பிலை வயிற்றுப்போக்கு, வாயுக்கோளாறு, செரிமானமின்மை, வயிற்றுப் புண், அல்சர், இன்சுலின் குறைபாடு, கெட்ட கொழுப்புகளைக் கரைத்து சமநிலையில் பராமரித்தல் மற்றும் உடலில் தோன்றும் கட்டிகள் மற்றும் புற்றுநோய்க்கு எதிராகச் செயல்படும் ஆற்றலும் இந்த அற்புத மூலிகைக்கு உண்டு.இயற்கை மருத்துவம்நம் தமிழ் இயற்கை மருத்துவத்தில், மனித உள் உறுப்புகளைப் பாதுகாக்கும் மகத்தான பணியினைக் கறிவேப்பிலை செய்கிறது என்பதனை சித்தர்களின்
குறிப்புகளிலிருந்தும் அறிகிறோம்.சிறிது கறிவேப்பிலைச்சாறுடன், எலுமிச்சை பழச்சாறு மற்றும் வெல்லம் சேர்த்துக் காலை நேரத்தில் பருகுவது, நம் மனதையும், உடலையும் சுறுசுறுப்பாகவும், புத்துணர்வாகவும் வைக்கும் என்பதை இயற்கை மருத்துவம் குறிப்பிடுகிறது. காடுகளில் வாழ்ந்த நம் தமிழ் யோகிகள் இவ்வாறான மூலிகைகள் பற்றிய உண்மைகளை அறிந்து போற்றினர். அவற்றைக் குறிப்புகளாகவும் எழுதி வைத்திருந்தனர். காலப் போக்கில் இவற்றையெல்லாம் நாம் மறந்திருக்கிறோம் என்பதும், போற்றிக் கொண்டாட வேண்டிய இயற்கை மருத்துவத்தை கேப்சூல்களாக மாற்றி, வெளிநாட்டுக் கம்பெனிகள் கொள்ளை லாபம் ஈட்டுவதும் கண்கூடு.பாதுகாக்கும் அரண் பலவிதமான நம் உடல் குறைபாடுகளிலிருந்து கறிவேப்பிலை நம்மைக் காக்கிறது. புற்றுநோய், வயிற்றுப்போக்கு, சிறுநீரகப் பிரச்னை, உடல் பருமன் பிரச்னைகளுக்கு நிவாரணம் தருகிறது. உடலில் உள்ள குளுகோசின் அளவைக் கட்டுப்படுத்தி, ரத்த சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது. விட்டமின்கள் இருப்பதால் கண்கள், கேசம், தோல் பகுதிகளுக்கு நிறைந்த பலனையும், பலவித தோல் ஒவ்வாமையிலிருந்தும் காக்கும். ரத்த சோகையை விரட்டும் தன்மை கொண்டது.

கறிவேப்பிலையின் கனி, இலை, வேர், பட்டை என அனைத்தும் உயிர் சத்துக்கள் நிறைந்தவை. மூல நோய்க்கான மருத்துவத்தில் இதன் கனி முதன்மையானது.தமிழ் மருத்துவத்தில் சிறப்பான இடம் பெற்ற கறிவேப்பிலையை நாம் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும். கறிவேப்பிலை துாக்கி எறிந்து விடும் பொருளல்ல. அது நம் உடலைக் காக்கும் அரண். இலை வடிவினில் உடல் நலம் பேணும் இனிய அறம்.

உங்கள் குழந்தை 
உண்மையிலேயே நலமா..?!
நன்றி: அவள் விகடன் - 08 Sep, 2015

‘உங்கள் குழந்தைகள் நலமாக இருக்கிறார்களா?’ என்றால், ‘நல்ல ஸ்கூல்ல சேர்த்துவிட்டிருக்கேன். ரெண்டு, மூணு எக்ஸ்ட்ரா கரிக்குலர் கிளாஸ் போறாங்க. ரிச் ஃபுட். கம்ப்யூட்டர், யூடியூப்னு டெக்னாலஜியிலும் பிரில்லியன்ட். சூப்பரா இருக்காங்க!’ என்பது, பெற்றோர் பலரின் பொதுவான பதிலாக இருக்கும். ஏனெனில், இதையெல்லாம்தான் ‘நலம்’ என்று அவர்கள் நினைக்கிறார்கள்; நம்புகிறார்கள். ஆனால், குழந்தைகளின் நலம் என்பது, இந்த வெளிப்புறக் காரணிகளையும் கடந்து, உள்ளார்ந்து நோக்க வேண்டிய ஒன்று. உடல்நலம், மனநலம், பாதுகாப்பு, கல்வி, ஊட்டச்சத்து என முக்கிய ஐந்து அம்சங்களில், வெளிப்பூச்சைக் கடந்து உங்கள் குழந்தையின் உண்மையான நலனை ஸ்கேன் செய்து அறிந்துகொள்ள, இங்கே ஆலோசனைகள் தருகிறார்கள் துறை சார்ந்த வல்லுநர்கள்!
‘பியூட்டி ஸ்லீப்’ கிடைக்கிறதா உங்கள் குழந்தைக்கு?!
‘‘தடுப்பூசியில் இருந்து தூக்கம் வரை, ஒவ்வொன்றையும் பிள்ளைகளுக்குத் தெளிவுற அமைத்துக் கொடுப்பது பெற்றோரின் பொறுப்பு!’’
- மதுரையைச் சேர்ந்த குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் இளங்கோவன், இப்படி  அடிக்கோடிட்டு ஆரம்பித்தார்...
 தாய்ப்பாலைப் போலவே, தடுப்பூசியும் குழந்தையின் பிறப்புரிமை. சிலர், ‘என் குழந்தை ஆரோக்கியமா, நோய்த் தொற்றுக்கான சூழலில் இருந்து பாதுகாப்பா இருக்கு. எதுக்கு தடுப்பூசி?’ என்ற அர்த்தமற்ற மனநிலையிலும், இன்னும் சிலர், தடுப்பூசி ஏதோ குழந்தையின் நோய் எதிர்ப்புச் சக்தியை பாதிக்கும் காரணி என்பது போன்ற தவறான நம்பிக்கையிலும் இருப்பார்கள். கொடிய நோய்களில் இருந்து குழந்தைகளின் உயிர் காக்கும் கவசமே, தடுப்பூசி. கடந்த 2015 பிப்ரவரியுடன், போலியோ இந்தியாவில் முழுமையாக ஒழிக்கப்பட்டு மூன்று வருடங்கள் ஆகிறது என்பது நற்செய்தி. ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க, தடுப்பூசி முதல் புள்ளி.
 குழந்தைக்குக் குறைந்தது 9 மணி நேரத் தூக்கம், அதன் உடலின் அவசியத் தேவை. தூக்கம், நிலை 1, நிலை 2, நிலை 3 எனக் கடந்தே ஆழ்ந்த உறக்கமாகும். இடையில் குழந்தை விழித்தால், மீண்டும் அது நிலை 1-ல் இருந்து தன் தூக்கத்தை ஆரம்பிக்க வேண்டும். அப்படி எந்தத் தொந்தரவும் அற்ற, 9 - 12 மணி நேரத் தூக்கமான ‘பியூட்டி ஸ்லீப்’பை குழந்தைக்குக் கிடைக்கச் செய்யுங்கள். இரவு 9  மணிக்கெல்லாம் தூக்கம், அதற்கு ஒன்றரை மணி நேரத்துக்கு முன் குடும்பத்துடன் உணவு என்று பழக்கப்படுத்துங்கள். அதிக ரத்த ஓட்டம் செரிமானத்துக்காக வயிற்றுக்குச் சென்றால் தூக்கம் தாமதமாகும் என்பதால்... எளிதாக ஜீரணமாகக்கூடிய, கொழுப்பில்லாத இரவு உணவு அவசியம்.
 காலை உணவைக் குழந்தைகள் ‘ஸ்கிப்’ செய்வது, அடிப்படைத் தவறு. இரவு 9 மணிக்கு சாப்பிட்ட குழந்தை, காலை உணவைச் சாப்பிடாமல் பள்ளி சென்றால், பகல் 12 மணி உணவு இடைவேளை வரை, கிட்டத்தட்ட 15 மணி நேரம் அதன் வயிறு காலியாக இருக்கும். எனில், வகுப்புகளை கவனிக்கும் ஆற்றல், ஆர்வம் அதுக்கு எப்படிக் கிடைக்கும்? சோர்வு, கோபம், வயிற்றுவலி என்று அது படும் பாட்டுக்கு, பெற்றோர்தான் பொறுப்பு.
 ‘அல்ட்ரா சாஃப்ட்’ டூத் பிரஷ், குழந்தைகளுக்கானது. ஒன்றரை வயதில் இருந்து மூன்று வயது வரை அரிசி அளவு பற்பசையும், ஐந்து வயது வரை பட்டாணி அளவு பற்பசையும் குழந்தைகளுக்குப் போதும்.
 ‘வெயிலுக்குக் காட்டாமல்’ குழந்தை களை வளர்ப்பதால் பெருகி வருகிறது விட்டமின்-டி குறைபாடு. தினமும் ஐந்து நிமிடங்கள் சூரிய ஒளி வாங்க வேண்டியது உடலுக்கு  அவசியம்.
 குழந்தைக்குச் சீரான இடைவெளியில் பூச்சிமருந்து கொடுக்க வேண்டும். தூக்கத்தில் குழந்தைகள் பற்களைக் கடித் தால், வயிற்றில் பூச்சி இருக்கிறது என்பது பழைய மருத்துவக்கூறு. ‘பிரக்சிஸம்’ என்ற அந்தச் செயலுக்கு, குழந்தை மனதில் உள்ள விடைகிடைக்காத கேள்விகளும், குழப்பங் களும் காரணம் என்கிறது நவீன மருத்துவம். எனவே, ஒவ்வோர் இரவும் குழந்தை தெளிவுபெற்ற மனதுடன் உறங்கச் செல்ல வேண்டும். அதற்கு பெற்றோருடனான ‘இன்டராக்‌ஷன்’ மிக அவசியம்!’’
- வலியுறுத்திச் சொன்னார், டாக்டர் இளங்கோவன்.
‘‘பேரன்டிங்கா, சைல்டிங்கா...’’
‘‘குழந்தையை, பெற்றோர் தாங்கள் விரும்பும்படி வளர்க்க அவர்கள் செய்யும் அல்லது தவிர்க்கும் செயல்களை, பேரன்டிங் என்கிறோம். 10, 15 வருடங்கள் முன்வரை இதுதான் எல்லா வீடுகளிலும் நடந்தது. ஆனால், இன்று பிள்ளைகள் தங்கள் விருப்பத்துக்கு பெற்றோரை நடக்க வைக் கிறார்கள். இதை நான்‘சைல்டிங்’ என்று கேலியாகச் சொல்வதுண்டு. இதுதான் இன்று எல்லா குடும்பங்களிலும் நடக்கிறது!’’
- சுடும் உண்மைகள் அடங்கியது, மதுரையைச் சேர்ந்த குழந்தைகள் மனநல ஆலோசகர், ‘டாப்கிட்ஸ்’ குழந்தைகள் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை மையத்தின் இயக்குநர், டாக்டர் தீப் பகிர்ந்த விஷயங்கள்...
 குழந்தையின் கையில் கொடுத்த ஒரு பொருளை மீண்டும் வாங்குவது, எளிதான காரியமல்ல. அது பொம்மையைவிட, ஸ்மார்ட்ஃபோன், லேப்டாப், டேப் (tab) என்று கேட்ஜட்களுக்கு இப்போது மிகப்பொருந்தும். ‘இன்டர்நெட் அடிக்‌ஷன் டிஸார்டர்’, ‘இன்டர்நெட் கேமிங் டிஸார்டர்’ என்று பிரச்னைகள் முளைத்துக் கொண்டே இருக்கும் இந்த யுகத்தில், ப்ளஸ் டூ முடிக்கும் வரை ஸ்மார்ட்ஃபோன், ` டேப்’, வாட்ஸ்அப், ஃபேஸ்புக், டூ-வீலர் அனைத்துக்கும் குழந்தைகளுக்கு ‘ஸ்ட்ரிக்ட் நோ’ சொல்லுங்கள்.
 ‘டியூஷன்னு போறதால, சேஃப்டிக்கு நான் தான் வாங்கிக்கொடுத்தேன்’ - பிள்ளையின் அடத்துக்குப் பணிந்து ஸ்மார்ட்ஃபோன் வாங்கித் தந்துவிட்டு பெற்றோர் சொல்லும் சாக்கு இது. தகவல் பரிமாற்றத்துக்கு பேஸிக் மாடல் போன் போதும்.
 கணினியில், மொபைலில், சமையலில், அரட்டையில் பிஸியாக இருக்கும் உங்களை, குழந்தை தொந்தரவு செய்யாமல் இருக்க, ‘இந்தா நீயும் ஒரு `டேப்’ பிடி!’, ‘கார்ட்டூன் பாரு, இதோ ரிமோட்!’ என்று டெக்னாலஜியை ‘மாற்று பெற்றோர்’ (சப்ஸ்டிட்யூட் பேரன்ட்) என ஆக்குபவர்கள் இங்கு அதிகம். அவர்களே தங்கள் குழந்தையின் கேட்ஜட் போதைக்கு, சைபர் விபரீதங்களுக்குக் காரணமான குற்றவாளிகள். தன் அம்மாவிடம் வந்து ‘ரேப்னா என்னம்மா?’ என்று கேட்கும் மூன்றாம் வகுப்புச் சிறுவன், அவர் திகைத்ததும், ‘சரி, ஸ்பெல்லிங் சொல்லு, நான் யூடியூப்ல போட்டு பார்த்துக்குறேன்!’ என்று தன் ‘மாற்று பெற்றோரை’த் தேடி ஓடுகிறான். நன்மையோ, தீமையோ... ஒரு விஷயத்தைக் கற்றுக்கொள்ள, ‘ஸ்பெல்லிங்’ மட்டும் போதும் இன்றைய குழந்தைகளுக்கு!
 குழந்தைக்கு நேரத்தைச் செலவழிக்க முடியாததை ஈடுகட்ட, பணத்தைச் செலவழிக்கிறார்கள் பலர். ‘இல்லை, வார இறுதியில் குழந்தைகளைத் தவறாமல் அவுட்டிங் அழைத்துச் செல்கிறோமே!’ என்கிறீர்களா? எங்கே..? மால், தியேட்டர், ஷாப்பிங், ரெஸ்டாரன்ட் என்று பொருள் சார்ந்த பொழுதுபோக்கையே அவர்களுக்கு அறிமுகப்படுத்துகிறீர்கள். இதில் பெற்றோரின் அன்பு, அரவணைப்பு, பகிர்வது, மனம்விட்டுப் பேசுவது எல்லாம் அவர்களுக்கு எங்கு கிடைக்கிறது? குடும்பத்துடன் நூலகம் சென்று, வாசிப்பின் சுவாரஸ்யத்தை குழந்தைக்கு அறிமுகப்படுத்துவதைப் பற்றி யோசித்ததுண்டா? 
 வளரும் பிள்ளைகளுக்கு உணர்ச்சிகள், எண்ணங்கள், எனர்ஜி லெவல் எல்லாமே நிரம்ப இருக்கும். அதற்கெல்லாம் ஒரு பாஸிட்டிவ் வடிகால் கொடுக்கவில்லை எனில், அது நெகட்டிவ் வழியில் வெடித்துச் சிதறும். எனவே, ஆடிக் களைக்கும் விளையாட்டுப் பொழுதுகளை தினமும் கொடுங்கள்.
 ‘என் குழந்தையை சிறப்பா வளர்க்கணும்’ என்று குழந்தையைக் காரணம் காட்டி, உங்கள் சுதந்திரத்துக்கு கூட்டுக் குடும்பத்தில் இருந்து வெளியேறினீர்கள். எனில், குழந்தை பற்றிய 100% பொறுப்பையும் நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். நடப்பது என்ன? பெற்றோரான பின்னும் டீன் ஏஜ் லைஃப் ஸ்டைலில் நீங்கள் நாட்டமிழக்காமல் இருக்க...  கட்டுப்பாடு, ஒழுக்கம் என்ற கடிவாளம் அற்றுக் கிடக்கிறார்கள் ‘நியூக்ளியர் ஃபேமிலி’ குழந்தைகள்.
 ‘எது கேட்டாலும் கிடைக்கும்’ என்ற, ஏமாற்றங்களே அறியாத வாழ்க்கையை குழந்தைகளுக்குத் தரத் துடிக்கிறீர்கள். அது அவர்களுக்கு நீங்கள் செய்யும் கெடுதல்களில் மற்றொன்று. தோல்விகளைக் கடந்தே வெற்றியை அடைய முடியும். எனவே, ஏமாற்றங்கள், தோல்விகள் கடந்தே வளரட்டும் குழந்தைகள்!
இனி உங்கள் வீடுகளில் ‘சைல்டிங்’ நிறுத்தி, ‘பேரன்டிங்’ ஆரம்பியுங்கள்! இது அவசியமாகச் செயல்படுத்த வேண்டிய மாற்றம்’’
- அழுத்தமாகச் சொன்னர் டாக்டர் தீப்.
‘‘கத்தக் கற்றுக்கொடுங்கள்!’’
‘‘உங்கள் குழந்தை பாதுகாப்பாக இருக்கிறது என்பது உங்களது நம்பிக்கை மட்டுமே, உண்மையல்ல!’’
- நிதர்சனம் சொன்னார் மானாமதுரை, அனைத்து மகளிர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பாரதிப்ரியா.

‘‘ஸ்கூல் பஸ் டிரைவரில் இருந்து, பக்கத்துக் கடைக்காரர் வரை உங்கள் குழந்தையின் உலகத்தில் உள்ள அனைவரையும் பற்றி நீங்கள் அறிந்துகொள்வது முக்கியம். பெண் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, ஆண் குழந்தைகளுக்கும் `குட் டச், பேட் டச்’ சொல்லிக்கொடுங்கள். ஒருவேளை யாரேனும் ‘பேட் டச்’ செய்தால், உரக்கக் கத்தி அருகில் உள்ளவர்களை அழைக்க வேண்டும் என்று அறிவுறுத்துங்கள். குறிப்பிட்ட நபரிடம் குழந்தை பேச, பழக மறுத்தால், தனிமையில் பக்குவமாக அதற்கான காரணத்தை கேட்டறியுங்கள்.
புதியவர்கள் யாரிடமும் பேசவோ, அவர்கள் தரும் பொருட்களை வாங்கவோ கூடவே கூடாதென்று வலியுறுத்திச் சொல்லுங்கள். வீட்டு விலாசம், பெற்றோர் தொலைபேசி எண்களுடன், இப்போது பரவலாகிவரும் ‘குடும்ப பாஸ்வேர்ட்’ ஒன்றையும் உருவாக்கி அவர்களிடம் சொல்லி வையுங்கள். ‘அப்பா கூட்டிட்டு வரச் சொன்னாங்க’ என்று யாராவது அழைத்தால், ‘பாஸ்வேர்டு சொல்லுங்க’ என்று முதலில் கேட்கச் சொல்லுங்கள். அம்மாவிடம் குழந்தை அனைத்தையும் பகிரும் சூழலை உருவாக்க வேண்டியது அவசியம்’’ என்று எச்சரித்தார் பாரதிப்ரியா.
‘‘குழந்தையின் திறனுக்கேற்ற சிலபஸ்!’’
‘‘கல்வி விஷயத்தில் பெற்றோர் கொண் டிருப்பது பெரும்பாலும் பேராசையே!’’
- படிப்பு என்ற பெயரில் குழந்தைகளுக்கு பெற்றோர் தரும் சிரமங்கள் பற்றிச் சொன்னார் டாக்டர் விவேகானந்தர். ஓய்வுபெற்ற பேராசிரி யரான இவர் மதுரை, ‘எலீட்’ போட்டித் தேர்வுகள் பயிற்சி மைய கௌரவ இயக்குநர்.
‘‘மாநில அரசின் ‘சமச்சீர்’ கல்வித்திட்டம், எளிமையானது. மத்திய அரசின் சி.பி.எஸ்.இ, ஐ.சி.எஸ்.இ கல்வித்திட்டங்கள் சிரமமானவை. பெற்றோர் ‘பிலோ ஆவரேஜ்’ குழந்தையை, தங்களின் ஆசைக்காக, சொஸைட்டல் ஸ்டேட்டஸுக்காக சென்ட்ரல் போர்டு சிலபஸில் சேர்க்கும்போது, அவர்களின் திறனுக்கு மீறிய அந்தச் சுமையால் மதிப்பெண் களுடன் தன்னம்பிக்கையையும் இழக்கும் மாணவர்கள் பலர். எனவே, குழந்தையின் ஆற்றலுக்கேற்ற சிலபஸை தேர்ந்தெடுங்கள்.
ஒன்பதாம் வகுப்புப் பாடத்தை நடத்தாமல் பத்தாம் வகுப்புப் பாடத்தை நடத்துவது, பதினொன்றாம் வகுப்புப் பாடத்தை ‘ஹை ஜம்ப்’ செய்து பன்னிரண்டாம் வகுப்புப் பாடத்துக்குச் செல்வது, கல்லூரிகளில் ‘பிளேஸ்மென்ட் செல்’ என்ற பெயரில், பாடம் நடத்த வேண்டிய வகுப்புகளை பலிகொடுத்து, ஒரு நிறுவனத்தின் நேர்காணலில் தேர்வாகும் டெக்னிக்குகளை சொல்லிக் கொடுப்பது... இப்படிக் குறுக்குவழிகள் பெருகிப்போய்க் கிடக்கிறது இன்றைய கல்விச் சாலை. ‘உணவு வேண்டாம்... விட்டமின் டேப்லட் சாப்பிட்டுக் கொள்ளலாம்’ எனும் இந்த கொள்கைக்கு உங்கள் பிள்ளையையும் பலி கொடுக்காமல், பாடங்களைப் புரிந்து, முழுமையாகப் படிக்கும் பண்பை அவர்களிடம் வளர்த்தெடுங்கள். அப்போதுதான், பணியில் ஏணி கிட்டும்.
படிப்பே வரவில்லையா? பரவாயில்லை. விளையாட்டு, அனிமேஷன், கிராஃபிக்ஸ், மீடியா, கேட்டரிங், ஃபேஷன் என்று அவர்களுக்கு ஆர்வமுள்ள துறையில் அவர்களை மடை
மாற்றுங்கள். எட்டாம் வகுப்பு ஃபெயிலானவர்தான், சச்சின் டெண்டுல்கர்!’’
- குருவி தலையில் பனங்காய் வைக்கும் கல்வி நம்பிக்கைகளை களைந்து பேசினார், விவேகானந்தர்.
இப்போது சொல்லுங்கள், உங்கள் குழந்தை உண்மையிலேயே நலமா?!
ஜெ.எம்.ஜன



நாம் என்ன விதைக்கிறோமோ அதுதான் விளையும். கருவேலம் விதைச்சா ஆலமரம் வளராது. அதுபோலதான் குழந்தை வளர்ப்பும். குழந்தைப் பருவத்தில் ஒரு விஷயத்தை கிரகித்துக் கொள்ளும்போது, அந்த விஷயம் வாழ்நாள் முழுக்க மனசைவிட்டு அகலாமல் அப்படியே பசுமரத்தாணிபோல மனதில் பதிந்துவிடும். குழந்தைகளை மனிதத் தன்மையோடு வளர்ப்பது குறித்து,சென்னையைச் சேர்ந்த குழந்தைகள் மனநல மருத்துவர் கீர்த்தன்யாவிடம் பேசியபோது, குழந்தை வளர்ப்பின் மிக முக்கிய அம்சத்தை கையில் எடுத்தார், 
“2013-ம் ஆண்டு மட்டும் 30% நடுநிலைப்பள்ளி மாணவர்கள் அவர்களின் நண்பர்களின் வன்முறைக்கு ஆளாகி உள்ளார்கள். 7 - 12ம் வகுப்பு வரை பயிலும் பெண் குழந்தைகளில் 50 சதவிகிதத்துக்கும் மேலானோர் சக மாணவர்களால் பாலியல் ரீதியாக தொல்லை செய்யப்பட்டுள்ளனர். 50% சதவிகிதத்துக்கும் மேலான மாணவர்கள் தேர்வில் ஆசிரியர்களை ஏமாற்றி காப்பி அடித்துள்ளனர். இரக்கமும் கருணையும் பின்னுக்குத் தள்ளப்படும்போது மாணவ சமுதாயம் அரக்கர்களாகவும், ஏமாற்றுக்காரர்களாகவும், மரியாதை தெரியாதவர்களாகவும்தானே மாறும்? அடிபட்டுக் கிடக்கும் பிராணிகளை வீட்டுக்கு எடுத்துவந்து உதவ நினைக்கும் குழந்தையிடம் கோபம் காட்டாதீர்கள். உங்கள் நேரமின்மையினால் அவர்களின் இரக்க குணத்தை முளையிலேயே கிள்ளி எறியாதீர்கள்.
இன்று பெரும்பான்மையான பெற்றோர், தங்கள் குழந்தைகளை ஒரு நடமாடும் கௌரவ அடையாளமாகத்தான் உருவாக்க விரும்புகிறார்கள். விளைவு... எதிர்காலத்தில் உங்களையும் அவர்கள் உறவாக, உயிராக இன்றி பராமரிப்புப் பொருளாகவே பார்க்கவிருக்கிறார்கள் என்பதை மறவாதீர்கள். பாசம் என்றால் என்னவென்று அறியாமல் அவர்கள் வளர்ந்து நிற்கும்போது, அதற்கான பொறுப்பை மதிப்பெண்களுக்கும், பணத்துக்கும், தனி மனித வெற்றிக்கும் முதல் இடத்தை தந்து பிள்ளைகளை வளர்த்தெடுத்த பெற்றோரே ஏற்க வேண்டும். உங்கள் குழந்தைகள் அனைவர் மத்தியிலும் தனித்துத் தெரிய அவர்கள் நடத்தை, திறமைதான் காரணமாக இருக்க வேண்டுமே தவிர, உடுத்தும் உடை, உபயோகிக்கும் விலைமதிப்புமிக்க பொருட்கள், படிக்கும் பள்ளி, கௌரவம், அந்தஸ்து போன்றவை அவர்களை அடையாளப்படுத்தக் கூடாது!’’
- பெற்றோர் மனசாட்சியினை உண்மை வார்த்தைகளால் உரசிய கீர்த்தன்யா, குழந்தை வளர்ப்பில் பெற்றோர் செய்யும் தவறுகளையும், அதனால் ஏற்படும் பிரச்னைகளையும், அதைக் கையாளும் வழிகளையும் தொகுத்துத் தந்த அட்டவணை...
நடைமுறை
நமது கலாசாரத்துக்கு மாறாக மேற்கத்திய கலாசாரத்தின் கவர்ச்சிகரமான உடைகளை சிறுமிகளுக்கு உடுத்திவிடுவது. வயதுக்கு வந்தபின் அதே மேற்கத்திய உடைகளை அணிய தடை போடுவது.
குழந்தைகள் விரும்பும் பொருட்களை அதன் அதிக விலை பற்றி யோசிக்காமல், கேட்டவுடன் வாங்கிக்கொடுத்து குழந்தைகளின் எதிர்பார்ப்பை வளர்த்துவிடுவது. பின்னர் குடும்ப நிதிநிலைமையில் இறக்கம் ஏற்படும்போது, அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய இயலாமல் போவது.
பள்ளியிலும் சரி, வீட்டிலும் சரி... குழந்தைகளுக்கு எப்படிப் படிப்பது எனப் பொறுமையாகக் கற்றுக் கொடுப்பது இல்லை. ஆனால், பள்ளியில் படிப்பது போதாதென டியூஷனுக்கும் அனுப்பி, எந்நேரமும் படி படி என தொல்லை கொடுப்பது. குழந்தைகள் விருப்பத்துக்கு படிப்பை தேர்வு செய்யாமல், உங்கள் விருப்பத்தை அவர்கள் மீது திணிப்பது.
குழந்தைகள் முன்னிலையில், வீட்டுப் பெரியவர்கள் மற்றும் உறவினர்களை தவறாகப் பேசுவது, வீட்டு பணியாளர்களையும், காய்கறி விற்பவர், ஆட்டோ ஓட்டுநர் போன்ற தொழிலாளர்களை மரியாதை இல்லாமல் நடத்துவது.
உங்களுடைய கௌரவத்துக்காகவும், அடுத்தவர்களிடம் பெருமை பேசுவதற்காகவும் குழந்தைகளை ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும் என நிர்பந்திப்பது, விலைமதிப்புள்ள உடை, பொருட்களை மட்டுமே வாங்கிக் கொடுப்பது என, நாம் வசதி மிக்கவர், உயர்ந்தவர் எனும்  கருத்தை சிறு வயதிலேயே குழந்தைகள் மனதில் பதிய வைப்பது.
பாதிப்பு
(1) சிறு வயதிலிருந்து உடுத்திவந்த உடைக்கு திடீரென தடைவரும்போது எது சரி, எது தவறு என மனதளவில் ஏற்படும் குழப்பம். (2) சக தோழிகள் இதுபோல உடை உடுத்திவரும்போது என்னுடைய சுதந்திரம் ஏன் பறிக்கப்படுகிறது எனும் கேள்வி. (3) பெற்றோரின் உடையை அவர்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்போது, என்னுடைய உடைகளை நானே தேர்வுசெய்தால் என்ன எனும் எண்ணம்.
இதுவரை கேட்ட பொருள் உடனுக்குடன் கையில் வந்ததை வைத்து சக நண்பர்கள் மத்தியில் கிடைத்த மரியாதை, தற்போது ஆசைப்பட்டது எதுவும் கிடைக்காமல், சக நண்பர்களிடம் அவமானப்படுவதால் ஏற்படும் மன உளைச்சல்.
படிப்பின் மீதே வெறுப்பு ஏற்படுவது. தாழ்வு மனப்பான்மைக்கு ஆளாவது. சொந்தமாக முடிவு எடுக்கத் தெரியாமல் போவது.
பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்கத் தவறுவது. சக மனிதர் களை மனிதராகப் பார்க்காமல் மட்டமாக நடத்துவது.
தன்னுடன் படிக்கும் சக மாணவர்களைக் காட்டிலும் நாம்தான் உயர்ந்தவர் எனும் எண்ணம் வலுப்பது, ஏழ்மையில் இருப்பவர்களை தாழ்வாக நினைப்பது. ஒரு கட்டத்தில் குடும்ப பொருளாதாரத்தில் சரிவு ஏற்படும்போது, தாழ்வு மனப்பான்மையினால் மன உளைச்சலுக்கு ஆளாவது.
தீர்வு
(1) குழந்தைகளுக்கு நம் கலாசாரத்தை சிறுவயது முதலே எடுத்துச்சொல்லி வளர்ப்பது.  (2) குடும்பத்தின் பாரம்பர்யத்தையும், கடைப்பிடித்துவரும் ஒழுக்கநெறிகளின் முக்கியத்துவத்தையும் எடுத்துச் சொல்லுங்கள். (3) `என்னுடைய வயதுக்கு எனக்கான சரியான உடைகளை என்னால் தேர்வு செய்துகொள்ள முடியும், நீ என்னைப்போல் வளர்ந்ததும் உனக்கானதை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்’ என உறுதியளியுங்கள்.
உங்கள் குழந்தை ஒரு பொருளை கேட்கும்போது அதன் அத்தியாவசியத்தையும், அநாவசியத்தையும் எடுத்துச் சொல்லி புரிய வைப்பது மற்றும் சமயம் கிடைக்கும்போது அருகிலிருக்கும் ஏதாவது ஒரு குழந்தைகள் காப்பகத்துக்கு அழைத்துச் சென்று, வாழ்வாதாரம் இல்லாமல் இருக்கும் குழந்தைகளின் நிலைமையை கண்முன் காட்டி, இவர்களின் கையால் அவர்களுக்கு ஏதாவது பரிசளிக்கச் செய்வது போன்ற விஷயங்களால், பொருட்களின் அருமை மற்றும் உதவும் மனப்பான்மை என இரண்டு குணங்களையும் வளர்க்க முடியும்.
(1)படிப்பு விஷயத்தில் குழந்தைகளை பெற்றோர்கள் அதிகமாக கண்டிக்கவும் கூடாது, கண்டிக்காமல் விடவும் கூடாது. பக்குவமாக எடுத்துச் சொல்லவும். (2) குழந்தைகளுக்கு மிகவும் நெருக்கமான தாய்மாமன், சித்தப்பா, சித்தி போன்ற மூன்றாம் தரப்பினர் மூலம் படிப்பின் அவசியத்தை ஒரு தோழமையுடன் எடுத்துச்சொல்லி புரிய வைக்கலாம்.
குழந்தைகளுக்கு நல்ல விஷயங்களை கரடியாகக் கத்திப் புரியவைக்க முடியாது. அவர்கள் எப்படி இருக்க வேண்டும் என நினைக்கிறோமோ அதற்கு நாமே சிறந்த உதாரணமாக வாழ்ந்து காட்ட வேண்டும். ஏனெனில், கண்ணால் பார்ப்பதைத்தான் உடனுக்குடன் மனதில் வாங்கிக்கொள்வார்கள்.
மொழியை மொழியாக மட்டுமே பதிய வையுங்கள். 7 வயது வரை குழந்தைகளுக்கு மொழியை கற்றுக்கொள்ளும் திறன் அதிகமாக இருக்கும். அதனால் ஒரு மொழிக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக் காமல் அக்கம்பக்கத்தில் உள்ள வேற்று மொழியாளர்களிடம் பேசவைப்பது என குறைந்தது ஐந்து மொழிகளையாவது கற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுங்கள்.

-டாக்டர். கு. கணேசன்

ஆழ் மனதின் அற்புத சக்திகள்

நன்றி: தினமலர் - 2015/08/29

ஆழ்மனது என்பது கணினியில் உள்ள 'ஹார்டு டிஸ்க்' போன்றது. நம்முடைய கடந்த கால, நிகழ்கால சுவையான, கசப்பான அனுபவங்களை சேர்த்துக்கொண்டே இருக்கும். எப்போதாவது ஏதேனும் புதிய சூழ்நிலையை சந்திக்கும் போது நம்முடைய சுயநினைவு அதை சார்ந்த நினைவுகளை ஆழ்மனதிலிருந்து எடுத்துக்கொள்ளும்.

நம்முடைய ஆழ்மனதில் அதிகமாக எதிர்மறையான சூழ்நிலைகளையும், நினைவுகளையும் சேர்த்துவைக்கும் போது நம்முடைய வாழ்விலும் அதிகமாக எதிர்மறையான சூழ்நிலைகளையே சந்திக்க நேரிட்டு வாழ்வும் தவறான பாதைக்கு சென்று விடுகிறது.

நம்மை இயக்கும் ஆழ்மனம் :ஆழ்மனதில் நேர்மறையான எண்ணங்களை விதைக்கும் போது அது அவர்களுக்குள் சென்று எதிர்மறைகளால் ஏற்பட்ட பிரச்னைகளை சரிசெய்து மனதை குணப்படுத்தும் சக்தியை பகிரங்கமாக காணும்படி செய்யும். ஆழ்மனம், நாம் உறங்கும்போது கனவுகளோடு செயல்படுகிறது. வருகின்ற கனவுகள் நமது ஆழ்மனதின் பிரதிபலிப்பு.

திகில், பயம், குற்ற உணர்வு நிறைந்த கனவுகள் இதற்கு உதாரணம். ஆழ்மனதில் எதிர்மறையான எண்ணங்கள் இருந்தால் அது கனவுகளில் வெளிப்படும். நம் உடலில் இருக்கும் அனைத்து உறுப்புகளையும் இயக்குவது நம் ஆழ்மனமே.ஆழ்மனது நம்முடைய எண்ணங்கள், உணர்வுகள், நம்பிக்கை போன்றவற்றை வைத்தே செயல்படும். செல் உயிரியலாளர் டாக்டர் ப்ரூஸ் லிப்டன் ஆய்வில், 'நம்முடைய நம்பிக்கைகள் டி.என்.ஏ.,வில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது' என்று கூறியுள்ளார்.

நம்முடைய நம்பிக்கைகள் நேர்மறையாக இருந்தால் அவை நமக்குள் இருக்கும் பழைய டி.என்.ஏ., செல்களின் மேல் புதிய டி.என்.ஏ., செல்களை உருவாக்குகின்றது. இதை 'எப்பிஜெனிடிக்ஸ்' என்று கூறுவர். உடலில் ஏற்படும் பல பிரச்னைகளுக்கு நம்முடைய எதிர்மறையாக எண்ணங்களே காரணம். இதை மருத்துவர்கள் 'சைக்கோசொமட்டிக் டிஸ்சாடர்' என அழைக்கின்றனர்.

நம்பிக்கையின் சக்தி :விஞ்ஞானி டாக்டர் கிரக் ப்ராடன் ஆய்வில், 'நம்முடைய உணர்வுகள் மற்றும் நம்பிக்கைகள் நம்முடைய உடலை அதன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது' என கூறுகிறார். அவர் எழுதிய 'டிவைன் மேட்ரிக்ஸ்' என்னும் புத்தகத்தில் ஒருவர் சிறுநீரகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருடைய புற்றுநோய் முற்றிப்போன நிலையிலும் மருத்துவர்கள் அவருக்கு நம்பிக்கை அளித்தனர்.அவர் சீனாவில் பீஜிங் நகருக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு 'சைனங் க்யுகாங்' என்னும் மாறுபட்ட ஒரு சிகிச்சை முறை அளிக்கப்பட்டது. இரண்டே நிமிடங்களில் புற்றுநோய் கட்டி இடம் தெரியாமல் மறைந்துபோனது. இச்சம்பவத்தை வீடியோவில் பதிவு செய்து மருத்துவர்கள், ஒரு கருத்தரங்கில் திரையிட்டனர். அவர்கள் என்ன பேசுவது என தெரியாமல் திகைத்து நின்றனர்.

பின், இந்த சிகிச்சைக்குப் பின்னால் இருக்கும் ரகசியத்தை அவர்களிடம் கிரக் ப்ராடன் எடுத்துரைத்தார்.'அம்மருத்துவர்கள் அப்பெண்ணுக்கு நீங்கள் முழுவதாக குணமடைந்து விட்டீர்கள் என்று முழு மனதாக நம்பும்படி கூறி அவர்களை அம்மனநிலைக்கு எடுத்துச்சென்றனர். பின், அங்கு கூடியிருக்கும் மருத்துவர்களும் அவர்களுக்கு புற்றுநோய் குணமடைந்து விட்டது என, மீண்டும் மீண்டும் கூறிக்கொண்டே அந்த சிகிச்சை அளிக்கும் அறையில் நேர்மறையான உணர்வுகளை அதிகமாக வரவழைத்தனர். எனவே அந்த நேர்மறையின் தாக்கம் அப்பெண்னுக்குள் சென்று அவர்களுக்கு உடனே சுகம் கிடைத்தது' எனக் கூறினார்.

கர்மாவின் தாக்கம் :டாக்டர் மேக்ஸ் ப்ளாக் என்பவர், 'நமக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி உள்ளது; அது நாம் வாழும் உலகத்தில் ஒவ்வொருவரும் எப்படி இருப்பார்கள் என தீர்மானித்துவிடுகிறது. வாழும் உலகை அது அதன் கட்டுப்பாட்டில் கொண்டுள்ளது. அதை டிவைன் மேட்ரிக்ஸ் என்றும் கடவுளின் சக்தி என்றும் அழைக்கலாம்' எனக் கூறியுள்ளார்.

நம்முடைய உணர்வுகள் மற்றும் நம்பிக்கை இந்த கடவுளின் சக்தியிடம் தாக்கம் செலுத்துகிறது. அதற்கேற்றவாறு நம் வாழ்க்கை அமைகிறது. 'நம்முடைய நம்பிக்கைகள் மற்றும் உணர்வுகள் நமது டி.என்.ஏ., வை கட்டுப்படுத்துகிறது' என ஆய்வில் கூறியுள்ளார். 'நாம் நம்முடைய எண்ணங்களையும் உணர்வுகளையும் நேர்மறையாக வைத்திருக்க வேண்டும்' என கூறியுள்ளார்.

நம் வாழ்வில் நாம் செய்யும் அனைத்து நன்மையும் தீமையும் கர்மாவில் சேர்ந்துக்கொண்டே வரும். எளிமையாக சொன்னால் எதை விதைக்கிறோமே... அதை அறுக்கிறோம். கர்மா என்பது பிரபஞ்சத்தின் நீதி என்று கூறலாம்.

எண்ணங்களின் வண்ணங்கள் :நம்முடைய உடலில் 63 ஆயிரம் கோடி செல்கள் உள்ளன. அதில் பல வண்ணங்கள் உள்ளன. மருத்துவரால் அந்த வெவ்வேறு வண்ணத்தின் காரணத்தை கூற முடியவில்லை. ஆனால் அது கர்மாவின் தாக்கம் என கூறலாம். ஒரு மனிதனின் கர்மாவின்படி அவன் உடலில் உள்ள செல்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 'ஆரா கேமரா' மூலம் ஒருவரை படம் பிடித்தால் பல வண்ணங்களை வெளிப்படுத்தும்.

அந்த வண்ணங்களை வைத்து உடலில் உள்ள எலக்ட்ரோ மேக்னடிக் தாக்கத்தை அறிந்து கொள்ளலாம். ஆரா போட்டோவில் உள்ள வண்ணங்களை வைத்து நம் மனநிலையை எளிதில் கணக்கிட முடியும்.டாக்டர் பிரேன் வைய்ஸ் புகழ்பெற்ற மனநல மருத்துவர். மனிதனுடைய ஆத்மா பற்றியும் முற்பிறவி பற்றியும் நிரூபித்திருக்கிறார். ஒருவருடைய கடந்த காலத்தை பார்ப்பதற்கு பல வழிமுறைகள் இருக்கிறது.

ஒருவர் அவருடைய கடந்த கால நினைவுகளை அடையும் போது அவர்கள் தற்காலத்தில் வாழும் நோக்கம் மற்றும் அவர்களின் கர்மா என்ன என்பதையும் அறிந்துகொள்வார்கள். ஒருவர் தம்முடைய எதிர்மறையான கர்மாவிலிருந்து விடுபட இதுவே சிறந்த வழி.

-











வாழ்வின் நோக்கம் மனிதர்களின் நம்பிக்கையை அடிப்படையாக வைத்து அமைகிறது. சில நேரங்களில் நம்மை சுற்றி நிகழும் நிகழ்வுகள் மற்றும் பெரும்பாலான மக்கள் எதை நாடிச் செல்கிறார்களோ அதையே நம்முடைய நோக்கமாக கருதி பின் தொடர்கிறோம். கர்ம வினைகள் கூட நாம் தேர்ந்தெடுக்கும் விஷயங்களை நிர்ணயிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது.
ஆனால் மனிதன், இவற்றையெல்லாம் கடந்து சுயமாக சிந்தித்து நன்மை, தீமைகளை ஆராய்ந்து மேன்மையான பாதையை தேர்ந்தெடுக்கும் ஆற்றல் படைத்தவன்.
படைப்பின் நாகரிகப் பரிமாணம் மட்டுமே மனிதன் கிடையாது. தனக்குள் புதைந்து கிடக்கும் ஒட்டுமொத்த தெய்வீக ஆற்றல்களையும் வெளிப்படுத்தக் கூடிய அற்புதத் திறனுடையவன். ஆகவே தான் அவ்வாற்றல் உடையவனை மறை நுால்கள் 'தீரன்' என்கிறது. 'தீனன்' என்றால் பலவீனன். பாரதியின் மொழியில் சொல்ல வேண்டுமென்றால் 'உண்டு, உறங்கி, பிறர் போல் வாழ்ந்து மடியும் 'வேடிக்கை மனிதன்''.
அரிய மனிதப்பிறவி
'மானிடராய்ப் பிறத்தல் அரிது' என்கிறோம். காரணம்? வினைத் தளைகளை வேரோடு நீக்கும் மர்மம் மனிதனுக்குள் புதைந்துள்ளது. 'என்னை நடத்துவது என் வினையே' என நொந்து வீழும் நிலை அவனுக்கில்லை. இந்த மாபெரும் பாடத்தை போர்களத்தில் கண்ணபிரானிடம் கற்றான் அர்ஜூனன்.
'எல்லாம் என் வினை, இனி செய்வதற்கு ஏதுமில்லை' என தளர்ந்தவனை, பார் வியக்க செய்த பெருமை பரந்தாமனுக்கு உண்டு.
மனம் பதைத்து மதியிழந்தோனின் தோள் தொட்டு ''காலத்திற்கு ஒவ்வாத கண்ணியமற்ற, சற்றும் பொருந்தாத மனநிலை உனக்கு எங்கிருந்து வந்தது. கேடானதும், புகழை அழிப்பதுமான இந்த ஆண்மையற்ற தன்மையை அடையாதே! இழிவான மனத்தளர்ச்சியை உதறிவிட்டு எழுந்து நில்! உண்மை உணர்! நீ அழிவற்றவன்! நித்தியமானவன்'' என்றான் கண்ணன்.
''உறுதி பூண்டவனாய் செயல்படாவிட்டால் மக்கள் என்றைக்கும் உன்னைப்பற்றி அவதுாறு சொல்வார்கள். நன்மதிப்பை பெற்றவனுக்கு இகழ்ச்சியை காட்டிலும் இறப்பே மேலாகும். இன்பம், துன்பம் லாபம், நஷ்டம் வெற்றி, தோல்வி இவற்றை சமமாக பாவித்து போர் (கடமை) செய். அறியாமையால் நெஞ்சில் நிலைகொண்டிருக்கும் சந்தேகங்களை ஞான வாளால் அறுத்துவிடு' என்றார்.
எனவே மனதை வென்றவனே மாவீரன். புறப் பொருட்களை நாடிச் செல்லும் புலங்களை மனதால் நிறுத்துவதே யோகம். கட்டுப்படாத மனம் மனிதனுக்கு நிரந்தரப் பகையே! மனம் அலைபாயக்கூடாது. மனதை புத்தியால் தேய்த்து, கட்டுப்படுத்தி வைக்க வேண்டும். புலங்களை காட்டிலும் மனம் உயர்வானது. மனதை காட்டிலும் நம் புத்தி உயர்ந்தது.
மனித குலத்திற்கு அர்ஜூனனை மையமாக வைத்து கண்ணன் உரைத்த உண்மையிது. ''உன்னை நீயே உயர்த்திக்கொள். உன்னை நீ ஒரு பொழுதும் தாழ்த்திக் கொள்ளாதே. உன்னுடைய மனமே உனக்கு உற்ற நண்பன். உன் மனமே உனக்கு பரம எதிரி''.
திருமூலரின் மந்திரம்
"மனத்திடை நின்ற மதிவாள் உருவி, இனத்திடை நீக்கி இரண்டற வீரத்து" என்பார் திருமூலர். 'இனத்திடை நீக்கி' என்பது மனதை புலன் வழிப்போகாது காத்தல் என்பதாகும்.
செயல்கள் வெறும் உடலால் மட்டும் செய்யப்படுவதில்லை. அதன் பின்னணியில் சக்தி வாய்ந்த மனம் இயங்கிக் கொண்டிருக்கிறது. எந்த எண்ணங்களை மனதில் விதைக்கின்றோமோ அதை செயல்படுத்தும் ஆற்றல் மனதுக்கு உண்டு. ஆகவே நாம் எண்ணங்களை உயர்த்திக்கொள்ள வேண்டும். நல்ல எண்ணங்களை வளர்க்க வேண்டும்.
ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய செயல்களுக்கும், எண்ணங்களுக்கும் ஒப்பில்லாத தரத்தை நிர்ணயித்துக்கொள்ள வேண்டும். தனி மனிதனுடைய தரம் சமுதாயத்தில் பிரதிபலித்து நல்ல தாக்கத்தை உண்டாக்கும். மேன்மக்கள் எதை நடத்தையாகக் கொள்கிறார்களோ அதையே மற்ற மனிதர்கள் பின்பற்றுகிறார்கள். அவர்கள் உண்மையாகக் கூறுவதை உலகம் பின்பற்றுகிறது. 'நல்ல மனிதர்களே பொறுப்பான சமுதாயத்தை உருவாக்குகின்றனர்' என்கிறது கீதை.
வாழ்க்கை போர்க்களம்
வாழ்க்கை ஒரு போர்க்களமே. வாழ்ந்து காட்டியோரின் வழிகாட்டுதல் இல்லாது வெல்ல முடியாது. மண்ணோடு போவதற்கல்ல மனிதப் பிறவி. மண் மீது நின்று தன்னலமற்று பணி செய்து விண்ணோரையும் வியக்கச் செய்வதற்கே இந்த பிறவி! இதுவே வாழ்வின் நோக்கம். கல்வி, செல்வம், பெயர், புகழ் அனைத்தும் ஓர் எல்லைக்குள் அடங்கிவிடும். அவை குணங்களின் வெளிப்பாட்டுக் கவர்ச்சி மட்டுமே. மரியாதைக்குரியதாக இருக்கலாம். ஆனால் அவை என்றென்றும் மாற்றங்களின் வசப்பட்டே நிற்கிறது. ஆகவே அவற்றில் உண்மையில்லை. "உண்மை என்றும் மாறாதது. பொய்மைக்கோ நிரந்தர இருப்பில்லை. இவ்விரண்டின் தன்மை அறிந்தோரே உண்மை உணர்ந்தோர்".
நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறிவு ஆண்மை கடை - வள்ளுவர்.
ஆகவே நிலையான ஒன்றை நாடுவதை, தேடுவதை உயர் லட்சியமாக கொண்டு வாழ்ந்தோரும், வாழ்வோரும் உண்டு; அந்த தேடலே ஆன்மிகம். 'வித்தைகளில் நான் ஆன்ம வித்தை' என்கிறான் கண்ணன். தேடல் உள்ளோரும், தெளிய விரும்புவோரும் விரைந்து நாடும் வீர வித்தை. இப்பயணத்திற்கு தன்னை ஒருவன் நன்கு தயார்படுத்திக்கொள்ள வேண்டும். சிந்தை செம்மையாகப் பக்குவப்பட வேண்டும். ஆர்வம் மட்டும் போதாது. அது ஊக்கமாக உயர வேண்டும். ஊக்கம் உயர
லட்சியத்தில் ஈடுபாடு வேண்டும். சோம்பேறித்தனத்தையும், பலவீனத்தையும் துறந்து விட வேண்டும்.
'Hasten slowly' என்று ஆங்கிலத்தில் மிக அழகாகக் கூறுவார் சுவாமி சின்மயானந்தர். நமது வாழ்க்கை பயணம் துரிதமாக, நிதானமாக, துாய்மையாக, புனிதமாக தொடர வேண்டும். இதனால் வாழ்வின் நோக்கத்தை அடையலாம்.
- சுவாமி சிவயோகானந்தா,
சின்மயா மிஷன், மதுரை.

ஞானப் பாடல்கள்

97. சென்றது மீளாது

சென்றதினி மீளாது,மூட ரே!நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்!சென்றதனைக் குறித்தல் வேண்டாம்
இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;
தீமையெலாம் அழிந்துபோம்,திரும்பி வாரா.

<< PreviousIndex














5. சுய சரிதை
37. பாரதி அறுபத்தாறு
முதற் காண்டம்
 கடவுள் வாழ்த்து-பராசக்தி துதி
எனக்கு முன்னே சித்தர்பலர் இருந்தாரப்பா!
யானும் வந்தேன் ஒருசித்தன் இந்தநாட்டில்;
மனத்தினிலே நின்றிதனை எழுதுகின்றாள்
மனோன் மணியென் மாசகதி வையத்தேவி;
தின த்தினிலே புதிதாகப் பூத்து நிற்கும்
செவய்யமணித் தாமரை நேர் முகத்தாள்; காதல்
வனத்தினிலே தன்னையொரு மலரைப் போலும்
வண்டியைப்போல் எனையுமுரு மாற்றி விட்டாள்.

தீராத காலமெலாம் தானும் நிற்பாள்
தெவிட்டாத இன்னமுதின் செவ்வி தழ்ச்சி,
நீராகக் கனலாக வானாக் காற்றா
நிலமாக வடிவெடுத்தாள்;நிலத்தின் மீது
போராக நோயாக மரண மாக
போந்திதனை யழித்திடுவாள்;புணர்ச்சி கொண்டால்
நேராக மோனமஹா னந்த வாழ்வை
நிலத்தின்மிசை அளித்தமரத் தன்மை ஈவாள்.

மாகாளி பராசக்தி உமையாள் அன்னை
வைரவிகங் காளிமனோன் மணிமா மாயி,
பாகார்ந்த தேமொழியாள்,படருங் செந்தீ
பாய்ந்திடுமோர் விழியுடையாள்,பரம சக்தி,
ஆகார மளித்திடுவாள்,அறிவு தந்தாள்
ஆதிபரா சக்தியென தமிர்தப் பொய்கை,
சோகாட விக்குளெனைப் புகவொட் டாமல்
துய்யசெழுந் தேன்போலே கவிதை சொல்வாள்.

மரணத்தை வெல்லும் வழி

பொன்னார்ந்த திருவடியைப் போற்றி யிங்கு
புகலுவேன் யானறியும் உண்மை யெல்லாம்;
முன்னோர்கள் எவ்வுயிரும் கடவுள் என்றார்,
முடிவாக அவ்வுரையை நான்மேற் கொண்டேன்;
அன்னோர்கள் உரைத்ததன்றிச் செய்கை யில்லை
அத்வைத நிலைகண்டால் மரணமுண்டோ,
முன்னோர்கள் உரைத்தபல சித்த ரெல்லாம்
முடிந்திட்டார்,மடிந்திட்டார்,மண்ணாய் விட்டார்.

பொந்திலே யுள்ளாராம்,வனத்தில் எங்கோ
புதர்களிலே யிருப்பாராம்,பொதியை மீதே
சந்திலே சவுத்தியிலே நிழலைப் போலே
சற்றேயங் கங்கேதென் படுகின் றாராம்,
நொந்தபுண்ணைக் குத்துவதில் பயனொன் றில்லை
நோவாலே மடிந்திட்டான் புத்தன் கண்டீர்!
அந்தணனாம் சங்கரா சார்யன் மாண்டான்;
அதற்கடுத்த இராமா நுஜனும் போனான்!

சிலுவையிலே அடியுண்டு யேசு செத்தான்;
தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான்;
பலர்புகழும் இமனுமே யாற்றில் வீழ்ந்தான்;
பார்மீது நான்சாகா திருப்பேன்,காண்பீர்!
மலிவுகண்டீர் இவ்வுண்மை பொய்கூ றேன்யான்,
மடிந்தாலும் பொய்கூறேன் மானுடர்க்கே,
நலிவுமில்லை;சாவுமில்லை,கேளீர்,கேளீர்!
நாணத்தைக் கவலையினைச் சினத்தைப் பொய்யை.

அசுரர்களின் பெயர்

அச்சத்தை வேட்கைதனை அழித்து விட்டால்
அப்போது சாவுமங்கே அழிந்து போகும்;
மிச்சத்தைப் பின்சொல்வேன்,சினத்தை முன்னே
வென்றிடுவீர்,மேதினியில் மரண மில்லை;
துச்சமெனப் பிறர்பொருளைக் கருதலாலே,
சூழ்ந்ததெலாம் கடவுளெனச் சுருதி சொல்லும்
நிச்சயமாம் ஞானத்தை மறத்த லாலே,
நேர்வதே மானுடர்க்குச் சினத்தீ நெஞ்சில்.

சினத்தின் கேடு

சினங்கொள்வார் தமைத்தாமே தீயாற் சுட்டுச்
செத்திடுவா ரொப்பாவார்; சினங்கொள் வார்தாம்
மனங்கொண்டு தங்கழுத்தைத் தாமே வெய்ய
வாள்கொண்டு கிழித்திடுவார் மானு வாராம்.
தினங்கொடி முறைமனிதர் சினத்தில் வீழ்வார்
... ... .... .... .... .... ....
சினம்பிறர்மேற் றாங்கொண்டு கவலையாகச்
செய்ததெணித் துயர்க்கடலில் வீழ்ந்து சாவார்

மாகாளி பராசக்தி துணையே வேண்டும்;
வையகத்தில் எதற்கும்இனிக் கவலை வேண்டா;
சாகாம லிருப்பதுநம் சதுரா லன்று;
சக்தியரு ளாலன்றோ பிறந்தோம் பார்மேல்?
பாகான தமிழினிலே பொருளைச் சொல்வேன்;
பாரீர்நீர் கேளீரோ,படைத்தோன் காப்பான்;
வேகாத மனங்கொண்டு களித்து வாழ்வீர்
மேதினியிலேதுவந்தால் எமக்கென் னென்றே.

தேம்பாமை

“வடகோடிங் குயர்ந்தென்னே, சாய்ந்தா லென்னே,
வான்பிறைக்குத் தென்கோடு” பார்மீ திங்கே
விடமுண்டுஞ் சாகாம லிருக்கக் கற்றால்,
வேறெதுதான் யாதாயின் எமக்கிங் கென்னே?
திடங்கொண்டு வாழ்ந்திடுவோம்,தேம்பல் வேண்டா;
தேம்புவதில் பயனில்லை,தேம்பி தேம்பி
இடருற்று மடிந்தவர்கள் கோடி கோடி
எதற்குமினி அஞ்சாதீர் புவியி லுள்ளீர்!

பொறுமையின் பெருமை

திருத்தணிகை மலைமேலே குமார தேவன்
திருக்கொலுவீற றிருக்குமதன் பொருளைக் கேளர்!
திருத்தணிகை யென்பதிங்கு பொறுமை யின்பேர்,
செந்தமிழ்கண் டீர்,பகுதி: ‘தணியே னுஞ்சொல்,
பொருத்தமுறுந் தணிகையினால் புலமை சேரும்,
‘பொறுத்தவரே பூமியினை ஆள்வார்’என்னும்
அருத்தமிக்க பழமொழியும் தமிழிலுண்டாம்
அவனியிலே பொறையுடையான் அவனே தேவன்.

பொறுமையினை அறக்கடவுள் தல்வனென்னும்
யுதிட்டிரனும் நெடுநாளிப் புவிமேல் காத்தான்,
இறுதியிலே பொறுமைநெறி தவறிவிட்டான்
ஆதலாற் போர்புரிந்தான் இளையா ரோடே;
பொறுமையின்றிப் போர்செய்து பரத நாட்டைப்
போர்க்களத்தே அழித்துவிட்டுப் புவியின் மீது
வறுமையையுங் கலியினைம் நிறுத்தி விட்டு
மலைமீது சென்றான்பின் வானஞ் சென்றான்.

ஆனாலும் புவியின்மிசை உயிர்க ளெல்லாம்
அநியாய மரணமெய்தல் கொடுமை யன்றோ?
தேனான உயிரைவிட்டுச் சாகலாமோ?
செத்திடற்குக் காரணந்தான் யாதென் பீரேல்,
கோனாகிச் சாத்திரத்தை யாளு மாண்பார்
ஜயதீச சந்த்ரவ கூறுகின்றான்;
(ஞானானு பவத்திலிது முடிவாங் கண்டீர்!)
“நாடியிலே அதிர்ச்சியினல் மரணம்”என்றான்.

கோபத்தால் நாடியிலே அதிர்ச்சி யுண்டாம்;
கொடுங்கோபம் பேரதிர்ச்சி:சிறிய கோபம்
ஆபத்தாம்,அதிர்ச்சியிலே சிறிய தாகும்;
அச்சத்தால் நாடியெலாம் அவிந்து போகும்;
தாபத்தால் நாடியெலாம் சிதைந்து போகும்.
கவலையினால் நாடியெலாம் தழலாய் வேகும்;
கோபத்தை வென்றிடலே பிறவற் றைத்தான்
கொல்வதற்கு வழியெனநான் குறித்திட் டேனே.

கடவுள் எங்கே இருக்கிறார்?

சொல்லடா! ஹரியென்ற கடவுள் எங்கே?
சொல்” லென்று ஹிரணியன் தான் உறுமிக் கேட்க,
நல்லதொரு மகன்சொல்வான்;- தூணி லுள்ளான்
நாரா யணன்துரும்பி லுள்ளான்” என்றான்.
வல்லபெருங் கடவுளிலா அணுவொன் றில்லை,
மஹாசக்தி யில்லாத வஸ்து வில்லை,
அல்லலில்லை அல்லலில்லை அல்ல லில்லை;
அனைத்துமே தெய்வமென்றால் அல்ல லுண்டோ?

கேளப்பா,சீடனே! கழுதை யொன்றைக்
“கீழான” பன்றியினைத் தேளைக் கண்டு
தாளைப்பார்த் திருகரமுஞ் சிரமேற் கூப்பிச்
சங்கரசங் கரவென்று பணிதல் வேண்டும்;
கூளத்தை மலத்தினையும் வணங்கல் வேண்டும்;
கூடிநின்ற பொருளனைத்தின் கூட்டம் தெய்வம்.
மீளத்தான் இதைத்தெளிவா விரித்துச் சொல்வேன்;
விண்மட்டும் கடவுளன்று மண்ணும் அஃதே.

சுத்தஅறி வேசிவமென் றுரைத்தார் மேலோர்
சுத்தமண்ணும் சிவமென்றே உரைக்கும் வேதம்;
வித்தகனாம் குருசிவமென் றுரைத்தார் மேலோர்,
வித்தையிலாப் புலையனு மஃதென்னும் வேதம்;
பித்தரே அனைத்துயிருங் கடவுளென்று
பேசுவது மெய்யானால் பெண்டி ரென்றும்
நித்தநும தருகினிலே குழந்தை யென்றும்
நிற்பனவுந் தெய்வமன்றோ நிகழ்த்து வீரே?

உயிர்களெல்லாம் தெய்வமன்றிப் பிறவொன் றில்லை;
ஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;
பயிலுமுயிர் வகைமட்டு மன்றி யிங்குப்
பார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;
வெயிலளிக்கும் இரவி,மதி,விண்மீன்,மேகம்
மேலுமிங்குப் பலபலவாம் தோற்றங் கொண்டே
இயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;
எழுதுகோல் தெய்வமிந்த எழுத்தும் தெய்வம்;

குருக்கள் ஸ்துதி(குள்ளச்சாமி புகழ்)

ஞானகுரு தேசிகனைப் போற்று கின்றேன்;
நாடனைத்துந் தானாவான் நலிவி லாதான்;
மோனகுரு திருவருளால் பிறப்பு மாறி
முற்றிலும்நாம் அமரநிலை சூழ்ந்து விட்டோம்;
தேனனைய பராசக்தி திறத்தைக் காட்டிச்
சித்தினியல் காட்டிமனத் தெளிவு தந்தான்;
வானகத்தை இவ்வுலகி லிருந்து தீண்டும்
வகையுணர்த்திக் காத்தபிரான் பதங்கள் போற்றி!

எப்போதும் குருசரணம் நினைவாய்,நெஞ்சே!
எம்பெருமான் சிதம்பரதே சிகன்தான் எண்ணாய்!
முப்பாழுங் கடந்தபெரு வெளியைக் கண்டான்,
முக்தியெனும் வானகத்தே பரிதி யாவான்,
தப்பாத சாந்தநிலை அளித்த கோமான்,
தவம்நிறைந்த மாங்கொட்டைச் சாமித் தேவன்.
குப்பாய ஞானத்தால் மரண மென்ற
குளிர்நீக்கி யெனைக்காத்தான்,குமார தேவன்;

தேசத்தார் இவன்பெயரைக் குள்ளச் சாமி
தேவர்பிரான் என்றுரைப்பார்;தெளிந்த ஞானி
பாசத்தை அறுத்துவிட்டான்,பயத்தைச் சுட்டான்;
பாவனையால் பரவெளிக்கு மேலே தொட்டான்;
நாசத்தை அழித்துவிட்டான்;யமனைக் கொன்றான்;
ஞானகங்கை தலைமுடிமீ தேந்தி நின்றான்;
ஆசையெனும் கொடிக்கொருகாழ் மரமே போன்றான்;
ஆதியவன் சுடர்ப்பாதம் புகழ்கின் றேனே.

வாயினால் சொல்லிடவும் அடங்கா தப்பா;
வரிசையுடன் எழுதிவைக்க வகையும் இல்லை.
ஞாயிற்றைச் சங்கிலியால் அளக்க லாமோ?
ஞானகுரு புகழினைநாம் வகுக்க லாமோ?
ஆயிர நூல் எழுதிடினும் முடிவு றாதாம்
ஐயனவன் பெருமையைநான் சுருக்கிக் சொல்வேன்;
காயகற்பஞ் செய்துவிட்டான்; அவன்வாழ் நாளைக்
கணகிட்டு வயதுரைப்பார் யாரும் இல்லை.

குருதரிசனம்

அன்றொருநாட் புதுவைநகர் தனிலே கீர்த்தி
அடைக்கலஞ்சேர் ஈசுவரன் தர்ம ராஜா
என்றபெயர் வீதியிலோர் சிறிய வீட்டில்,
இராஜாரா மையனென்ற நாகைப் பார்ப்பான்
முன்தனது பிதாதமிழில் உபநி டத்தை
மொழிபெயர்த்து வைத்ததனைத் திருத்தச் சொல்லி
என்தனைவேண் டிக்கொள்ள யான்சென் றாங்கண்
இருக்கையிலே அங்குவந்தான் குள்ளச் சாமி.

அப்போது நான் குள்ளச் சாமி கையை
அன்புடனே பற்றியிது பேச லுற்றேன்;
அப்பனே!தேசிகனே!ஞானி என்பார்.
அவனியிலே சிலர்நின்னைப் பித்தன் என்பார்;
செப்புறுநல் லஷ்டாங்க யோக சித்தி
சேர்ந்தவனென் றுனைப்புகழ்வார் சிலரென் முன்னே;
ஒப்பனைகள் காட்டாமல் உண்மை சொல்வாய்,
உத்தமனே! எனக்குநினை உணர்த்து வாயே.

யாவன்நீ? நினக்குள்ள திறமை யென்னே?
யாதுணர்வாய்? கந்தைசுற்றித் திரிவ தென்னே?
தேவனைப்போல் விழிப்ப தென்னே?சிறியாரோடும்
தெருவிலே நாய்களொடும் விளையாட் டென்னே?
பாவனையிற் புத்தரைப்போல் அலைவ தென்னே?
பரமசிவன் போலுருவம் படைத்த தென்னே?
ஆவலற்று நின்றதென்னே? அறிந்த தெல்லாம்,
ஆரியனே,எனக்குணர்ந்த வேண்டும் ” என்றேன்.

பற்றியகை திருகியந்தக் குள்ளச் சாமி
பரிந்தோடப் பார்த்தான்;யான் விடவே யில்லை,
சுற்றுமுற்றும் பார்த்துப்பின் முறுவல் பூத்தான்;
தூயதிருக் கமலபதத் துணையைப் பார்த்தேன்!
குற்றமற்ற தேசிகனும் திமிறிக் கொண்டு
குதிக்தோடி அவ்வீட்டுக் கொல்லை சேர்ந்தான்;
மற்றவன்பின் யானோடி விரைந்து சென்று
வானவனைக் கொல்லையிலே மறித்துக் கொண்டேன்.--26
உபதேசம்

பக்கத்து வீடிடிந்து சுவர்கள் வீழ்ந்த
பாழ்மனையொன் றிருந்ததங்கே;பரமயோகி
ஒக்கத்தன் அருள்விழியால் என்னை நோக்கி
ஒருகுட்டிச் சுவர்காட்டிப் பரிதி காட்டி,
அக்கணமே கிணற்றுளதன் விம்பங் காட்டி,
“அறிதிகொலோ?”எனக்கேட்டான் “என்றேன்”
மிக்கமகிழ் கொண்டவனும் சென்றான்; யானும்
வேதாந்த மரத்திலொரு வேரைக் கண்டேன்.

தேசிகன்கை காட்டியெனக் குரைத்த செய்தி
செந்தமிழில் உலகத்தார்க் குணர்த்து கின்றேன்;
“வாசியைநீ கும்பத்தால் வலியக் கட்டி,
மண்போலே சுவர்போலே வாழ்தல் வேண்டும்;
தேசுடைய பரிதியுருக் கிணற்றி னுள்ளே
தெரிவதுபோல் உனக்குள்ளே சிவனைக் காண்பாய்;
பேசுவதில் பயனில்லை,அனுப வத்தால்
பேரின்பம் எய்துவதே ஞானம்”என்றான்.

கையிலொரு நூலிருந்தால் விரிக்கச் சொல்வேன்.
கருத்தையதில் காட்டுவேன்;வானைக் காட்டி,
மையிலகு விழியாளின் காதலொன்றே
வையகத்தில் வாழுநெறியென்று காட்டி,
ஐயனெனக் குணர்த்தியன பலவாம் ஞானம்,
அதற்கவன்காட் டியகுறிப்போ அநந்த மாகும்,
பொய்யறியா ஞானகுரு சிதம்ப ரேசன்
பூமிவிநா யகன்குள்ளச் சாமி யங்கே.

மற்றொருநாள் பழங்கந்தை யழுக்கு மூட்டை
வளமுறவே கட்டியவன் முதுகின் மீது
கற்றவர்கள் பணிந்தேத்தும் கமல பாதக்
கருணைமுனி சுமந்துகொண்டேன் னெதிரே வந்தான்;
சற்றுநகை புரிந்தவன்பால் கேட்க லானேன்;
தம்பிரானே!இந்தத் தகைமை என்னே?
முற்றுமிது பித்தருடைச் செய்கை யன்றோ?
மூட்டைசுமந் திடுவதென்னே? மொழிவாய்”என்றேன்

புன்னகைபூத் தாரியனும் புகலு கின்றான்;
“புறத்தேநான் சுமக்கின்றேன்; அகத்தி னுள்ளே,
இன்னதொரு பழங்குப்பை சுமக்கி றாய்நீ”
என்றுரைத்து விரைந்தவனும் ஏகி விட்டான்.
மன்னவபன்சொற் பொருளினையான் கண்டுகொண்டேன்;
மனத்தினுள்ளே பழம்பொய்கள் வளர்ப்ப தாலே
இன்னலுற்ற மாந்தரெலாம் மடிவார் வீணே,
இருதயத்தில் விடுதலையை இசைத்தல் வேண்டும்

சென்றதினி மீளாது;மட ரேநீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர் சென்றதனைக் குறித்தல் வேண்டா;
இன்றுபுதி தாப்பிறந்தோம் என்று நெஞ்சில்
எண்ணமதைத் திண்ணமுற இசைனத்துக் கொண்டு
தின்றுவிளை யடியின்புற் றிருந்து வாழ்வீர்;
அஃதின்றிச் சென்றதையே மீட்டும் மீட்டும்,

மேன்மேலும் நினைந்தழுதல் வேண்டா,அந்தோ!
மேதையில்லா மானுடரே! மேலும் மேலும்
மேன்மேலும் புதியகாற் றெம்முள் வந்து
மேன்மேலும் புதியவுயிர் விளைத்தல் கண்டீர்,
ஆன்மாவென் றேகருமத் தொடர்பை யெண்ணி
அறிவுமயக் கங்கொண்டு கெடுகின் றீரே?
மான்மானும் விழியுடையாள் சக்தி தேவி
வசப்பட்டுத் தனைமறந்து வாழ்தல் வேண்டும்.

சென்றவினைப் பயன்களெனைத் தீண்ட மாட்டா;
“ஸ்ரீதரன்யன் சிவகுமா ரன்யா னன்றோ?
நன்றிந்தக் கணம்புதிதாப் பிறந்து விட்டேன்,
நான்புதியன்,நான்கடவுள் ,நலிவி லாதோன்”
என்றிந்த வுலகின்மிசை வானோர் போலே
இயன்றிடுவார் சித்தரென்பார்; பரம தர்மக்
குன்றின்மிசை யொருபாய்ச்ச லாகப் பாய்ந்து,
குறிப்பற்றார் கேடற்றார் குலைத லற்றார்.

குறியனந்த முடையோராய்க் கோடி செய்தும்
குவலயத்தில் வினைக்கடிமைப் படாதா ராகி
வெறியுடையோன் உமையாளை இடத்தி லேற்றோன்
வேதகுரு பரமசிவன் வித்தை பெற்றுச்
செறிவுடைய பழவினையாம் இருளைச் செற்றுத்
தீயினைப்போல் மண்மீது திரிவார் மேலோர்,
அறிவுடைய சீடா. நீ குறிப்பை நீக்கி
அநந்தமாம் தொழில்செய்தால் அமர னாவாய்.

கேளப்பா!மேற்சொன்ன உண்மை யெல்லாம்
கேடற்ற மதியுடையான் குள்ளச் சாமி
நாளும்பல் காட்டாலும் குறிப்பி னாலும்
நலமுடைய மொழியாலும் விளக்கித் தந்தான்;
தோளைப்பார்த் துக்களித்தல் போலே யன்னான்
துணையடிகள் பார்த்துமனம் களிப்பேன் யானே;
வாளைப்பார்த் தின்பமுறு மன்னர் போற்றும்
மலர்த்தாளான் மாங்கொட்டைச் சாமி வாழ்க!

கோவிந்த ஸ்வாமி புகழ்

மாங்கொட்டைச் சாமிபுகழ் சிறிது சொன்னோம்;
வண்மைதிகழ் கோவிந்த ஞானி,பார்மேல்
யாங்கற்ற கல்வியெலாம் பலிக்கச் செய்தான்,
எம்பெருமான் பெருமையையிங் கிசைக்கக் கேளீர்!

தீங்கற்ற குணமுடையான்,புதுவை யூரார்
செய்தபெருந் தவத்தாலே உதித்த தேவன்.
பாங்குற்ற மாங்கொட்டைச் சாமி போலே
பயிலுமதி வர்ணாசிர மத்தே நிற்போன்.

அன்பினால் முக்தியென்றான் புத்தன் அந்நாள்;
அதனையிந்நாட் கோவிந்த சாமி செய்தான்;
துன்பமுறும் உயிர்க்கெல்லாம் தாயைப் போலே
சுரக்குமரு ளுடையபிரான் துணிந்த யோகி;
அன்பினுக்குக் கடலையுந்தான் விழுங்க வல்லான்;
அன்பினையே தெய்வமென்பான் அன்பே யாவான்
மன்பதைகள் யாவுமிங்கே தெய்வம் என்ற
மதிவுடையான்,கவலையெனும் மயக்கம் தீர்ந்தான்;

பொன்னடியால் என்மனையைப் புனித மாக்கப்
போந்தானிம் முனியொருநாள்; இறந்த எந்தை
தன்னுருவங் காட்டினான்; பின்னர் என்னைத்
தரணிமிசைப் பெற்றவளின் வடிவ முற்றான்;
அன்னவன்மா யோகியென்றும் பரமஞானத்
தனுபூதி யுடையனென்றும் அறிந்து கொண்டேன்.
மன்னவனைக் குருவெனநான் சரண டைந்தேன்;
மரணபயம் நீங்கினேன்; வலிமை பெற்றேன்

யாழ்ப்பாணத்து ஸ்வாமியின் புகழ்

கோவிந்த சாமிபுகழ் சிறிது சொன்னேன்;
குவலயத்தின் விழிபோன்ற யாழ்ப்பா ணத்தான்,
தேவிபதம் மறவாத தீர ஞானி,
சிதம்பரத்து நடராஜ மூர்த்தி யாவான்,
பாவியரைக் கரையேற்றும் ஞானத் தோணி,
பரமபத வாயிலெனும் பார்வை யாளன்;
காவிவளர் தடங்களிலே மீன்கள் பாயுங்
கழனிகள்சூழ் புதுவையிலே அவனைக் கண்டேன்.

தங்கத்தாற் பதுமைசெய்தும் இரத லிங்கம்
சமைத்துமவற் றினிலீசன் தாளைப் போற்றும்
துங்கமுறு பத்ர்பலர் புவிமீ துள்ளார்;
தோழரே!எந்நாளும் எனக்குப் பார்மேல்
மங்களஞ்சேர் திருவிழியால் அருளைப் பெய்யும்
வானவர்கோன்.யாழ்ப்பாணத் தீசன் தன்னைச்
சங்கரனென் றெப்போதும் முன்னே கொண்டு
சாரணடைந்தால் அதுகண்டீர் சர்வ சித்தி.

குவளைக் கண்ணன் புகழ்

யாழ்ப்பாணத் தையனையென் னிடங்கொ ணர்ந்தான்,
இணையடியை நந்திபிரான் முதுகில் வைத்துக்
காழ்ப்பான கயிலைமிசை வாழ்வான்,பார்மேல்
கனத்தபுகழ்க் குவளையூர்க் கண்ணன் என்பான்;
பார்ப்பாரக் குலத்தினிலே பிறந்தான் கண்ணன்,
பறையரையும் மறவரையும் நிகராக் கொண்டான்;
தீர்ப்பான சுருதிவழி தன்னிற் சேர்ந்தான்
சிவனடியார் இவன்மீது கருணை கொண்டார்.

மகத்தான முனிவரெலாம் கண்ணன் தோழர்;
வானவரெல் லாங்கண்ணன் அடியா ராவார்;
மகத்தானு முயர்ந்ததுணி வுடைய நெஞ்சின்
வீரர்பிரான் குவளையூர்க் கண்ணன் என்பான்,
ஜகத்தினிலோர் உவமையிலா யாழ்ப்பா ணத்து
சாமிதனை யிவனென்றன் மனைக்கொ ணர்ந்தான்
அகத்தினிலே அவன்பாத மலரைப் பூண்டேன்;
“அன்றேயப் போதேவீ டதுவே வீடு”.

பாங்கான குருக்களைநாம் போற்றிக் கொண்டோம்,
பாரினிலே பயந்தெளிந்தோம்; பாச மற்றோம்
நீங்காத சிவசக்தி யருளைப் பெற்றோம்;
நிலத்தின்மிசை அமரநிலை யுற்றோம் அப்பா!
தாங்காமல் வையகத்தை அழிக்கும் வேந்தர்,
தாரணியில் பலருள்ளார்,தருக்கி வீழ்வார்;
ஏங்காமல் அஞ்சாமல் இடர்செய் யாமல்
என் றுமருள் ஞானியரே எமக்கு வேந்தர்.

பெண் விடுதலை

பெண்ணுக்கு விடுதலையென் றிங்கோர் நீதி
பிறப்பித்தேன்;அதற்குரிய வெற்றி கேளீர்;
மண்ணுக்குள் எவ்வுயிரும் தெய்வ மென்றால்
மனையாளும் தெய்வமன்றோ? மதிகெட் டீரே!
விண்ணுக்குப் பறப்பதுபோல் கதைகள் சொல்வீர்
விடுதலையென் பீர்,கருணை வெள்ள மென்பீர்,
பெண்ணுக்கு விடுதலைநீ ரில்லை யென்றால்
பின்னிந்த உலகினிலே வாழ்க்கை யில்லை.

உபதேசம்

பக்கத்து வீடிடிந்து சுவர்கள் வீழ்ந்த
பாழ்மனையொன் றிருந்ததங்கே;பரமயோகி
ஒக்கத்தன் அருள்விழியால் என்னை நோக்கி
ஒருகுட்டிச் சுவர்காட்டிப் பரிதி காட்டி,
அக்கணமே கிணற்றுளதன் விம்பங் காட்டி,
“அறிதிகொலோ?”எனக்கேட்டான் “என்றேன்”
மிக்கமகிழ் கொண்டவனும் சென்றான்; யானும்
வேதாந்த மரத்திலொரு வேரைக் கண்டேன்.

தேசிகன்கை காட்டியெனக் குரைத்த செய்தி
செந்தமிழில் உலகத்தார்க் குணர்த்து கின்றேன்;
“வாசியைநீ கும்பத்தால் வலியக் கட்டி,
மண்போலே சுவர்போலே வாழ்தல் வேண்டும்;
தேசுடைய பரிதியுருக் கிணற்றி னுள்ளே
தெரிவதுபோல் உனக்குள்ளே சிவனைக் காண்பாய்;
பேசுவதில் பயனில்லை,அனுப வத்தால்
பேரின்பம் எய்துவதே ஞானம்”என்றான்.

கையிலொரு நூலிருந்தால் விரிக்கச் சொல்வேன்.
கருத்தையதில் காட்டுவேன்;வானைக் காட்டி,
மையிலகு விழியாளின் காதலொன்றே
வையகத்தில் வாழுநெறியென்று காட்டி,
ஐயனெனக் குணர்த்தியன பலவாம் ஞானம்,
அதற்கவன்காட் டியகுறிப்போ அநந்த மாகும்,
பொய்யறியா ஞானகுரு சிதம்ப ரேசன்
பூமிவிநா யகன்குள்ளச் சாமி யங்கே.

மற்றொருநாள் பழங்கந்தை யழுக்கு மூட்டை
வளமுறவே கட்டியவன் முதுகின் மீது
கற்றவர்கள் பணிந்தேத்தும் கமல பாதக்
கருணைமுனி சுமந்துகொண்டேன் னெதிரே வந்தான்;
சற்றுநகை புரிந்தவன்பால் கேட்க லானேன்;
தம்பிரானே!இந்தத் தகைமை என்னே?
முற்றுமிது பித்தருடைச் செய்கை யன்றோ?
மூட்டைசுமந் திடுவதென்னே? மொழிவாய்”என்றேன்

புன்னகைபூத் தாரியனும் புகலு கின்றான்;
“புறத்தேநான் சுமக்கின்றேன்; அகத்தி னுள்ளே,
இன்னதொரு பழங்குப்பை சுமக்கி றாய்நீ”
என்றுரைத்து விரைந்தவனும் ஏகி விட்டான்.
மன்னவபன்சொற் பொருளினையான் கண்டுகொண்டேன்;
மனத்தினுள்ளே பழம்பொய்கள் வளர்ப்ப தாலே
இன்னலுற்ற மாந்தரெலாம் மடிவார் வீணே,
இருதயத்தில் விடுதலையை இசைத்தல் வேண்டும்

சென்றதினி மீளாது;மட ரேநீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர் சென்றதனைக் குறித்தல் வேண்டா;
இன்றுபுதி தாப்பிறந்தோம் என்று நெஞ்சில்
எண்ணமதைத் திண்ணமுற இசைனத்துக் கொண்டு
தின்றுவிளை யடியின்புற் றிருந்து வாழ்வீர்;
அஃதின்றிச் சென்றதையே மீட்டும் மீட்டும்,

மேன்மேலும் நினைந்தழுதல் வேண்டா,அந்தோ!
மேதையில்லா மானுடரே! மேலும் மேலும்
மேன்மேலும் புதியகாற் றெம்முள் வந்து
மேன்மேலும் புதியவுயிர் விளைத்தல் கண்டீர்,
ஆன்மாவென் றேகருமத் தொடர்பை யெண்ணி
அறிவுமயக் கங்கொண்டு கெடுகின் றீரே?
மான்மானும் விழியுடையாள் சக்தி தேவி
வசப்பட்டுத் தனைமறந்து வாழ்தல் வேண்டும்.

சென்றவினைப் பயன்களெனைத் தீண்ட மாட்டா;
“ஸ்ரீதரன்யன் சிவகுமா ரன்யா னன்றோ?
நன்றிந்தக் கணம்புதிதாப் பிறந்து விட்டேன்,
நான்புதியன்,நான்கடவுள் ,நலிவி லாதோன்”
என்றிந்த வுலகின்மிசை வானோர் போலே
இயன்றிடுவார் சித்தரென்பார்; பரம தர்மக்
குன்றின்மிசை யொருபாய்ச்ச லாகப் பாய்ந்து,
குறிப்பற்றார் கேடற்றார் குலைத லற்றார்.

குறியனந்த முடையோராய்க் கோடி செய்தும்
குவலயத்தில் வினைக்கடிமைப் படாதா ராகி
வெறியுடையோன் உமையாளை இடத்தி லேற்றோன்
வேதகுரு பரமசிவன் வித்தை பெற்றுச்
செறிவுடைய பழவினையாம் இருளைச் செற்றுத்
தீயினைப்போல் மண்மீது திரிவார் மேலோர்,
அறிவுடைய சீடா. நீ குறிப்பை நீக்கி
அநந்தமாம் தொழில்செய்தால் அமர னாவாய்.

கேளப்பா!மேற்சொன்ன உண்மை யெல்லாம்
கேடற்ற மதியுடையான் குள்ளச் சாமி
நாளும்பல் காட்டாலும் குறிப்பி னாலும்
நலமுடைய மொழியாலும் விளக்கித் தந்தான்;
தோளைப்பார்த் துக்களித்தல் போலே யன்னான்
துணையடிகள் பார்த்துமனம் களிப்பேன் யானே;
வாளைப்பார்த் தின்பமுறு மன்னர் போற்றும்
மலர்த்தாளான் மாங்கொட்டைச் சாமி வாழ்க!

கோவிந்த ஸ்வாமி புகழ்

மாங்கொட்டைச் சாமிபுகழ் சிறிது சொன்னோம்;
வண்மைதிகழ் கோவிந்த ஞானி,பார்மேல்
யாங்கற்ற கல்வியெலாம் பலிக்கச் செய்தான்,
எம்பெருமான் பெருமையையிங் கிசைக்கக் கேளீர்!

தீங்கற்ற குணமுடையான்,புதுவை யூரார்
செய்தபெருந் தவத்தாலே உதித்த தேவன்.
பாங்குற்ற மாங்கொட்டைச் சாமி போலே
பயிலுமதி வர்ணாசிர மத்தே நிற்போன்.

அன்பினால் முக்தியென்றான் புத்தன் அந்நாள்;
அதனையிந்நாட் கோவிந்த சாமி செய்தான்;
துன்பமுறும் உயிர்க்கெல்லாம் தாயைப் போலே
சுரக்குமரு ளுடையபிரான் துணிந்த யோகி;
அன்பினுக்குக் கடலையுந்தான் விழுங்க வல்லான்;
அன்பினையே தெய்வமென்பான் அன்பே யாவான்
மன்பதைகள் யாவுமிங்கே தெய்வம் என்ற
மதிவுடையான்,கவலையெனும் மயக்கம் தீர்ந்தான்;

பொன்னடியால் என்மனையைப் புனித மாக்கப்
போந்தானிம் முனியொருநாள்; இறந்த எந்தை
தன்னுருவங் காட்டினான்; பின்னர் என்னைத்
தரணிமிசைப் பெற்றவளின் வடிவ முற்றான்;
அன்னவன்மா யோகியென்றும் பரமஞானத்
தனுபூதி யுடையனென்றும் அறிந்து கொண்டேன்.
மன்னவனைக் குருவெனநான் சரண டைந்தேன்;
மரணபயம் நீங்கினேன்; வலிமை பெற்றேன்

யாழ்ப்பாணத்து ஸ்வாமியின் புகழ்

கோவிந்த சாமிபுகழ் சிறிது சொன்னேன்;
குவலயத்தின் விழிபோன்ற யாழ்ப்பா ணத்தான்,
தேவிபதம் மறவாத தீர ஞானி,
சிதம்பரத்து நடராஜ மூர்த்தி யாவான்,
பாவியரைக் கரையேற்றும் ஞானத் தோணி,
பரமபத வாயிலெனும் பார்வை யாளன்;
காவிவளர் தடங்களிலே மீன்கள் பாயுங்
கழனிகள்சூழ் புதுவையிலே அவனைக் கண்டேன்.

தங்கத்தாற் பதுமைசெய்தும் இரத லிங்கம்
சமைத்துமவற் றினிலீசன் தாளைப் போற்றும்
துங்கமுறு பத்ர்பலர் புவிமீ துள்ளார்;
தோழரே!எந்நாளும் எனக்குப் பார்மேல்
மங்களஞ்சேர் திருவிழியால் அருளைப் பெய்யும்
வானவர்கோன்.யாழ்ப்பாணத் தீசன் தன்னைச்
சங்கரனென் றெப்போதும் முன்னே கொண்டு
சாரணடைந்தால் அதுகண்டீர் சர்வ சித்தி.

குவளைக் கண்ணன் புகழ்

யாழ்ப்பாணத் தையனையென் னிடங்கொ ணர்ந்தான்,
இணையடியை நந்திபிரான் முதுகில் வைத்துக்
காழ்ப்பான கயிலைமிசை வாழ்வான்,பார்மேல்
கனத்தபுகழ்க் குவளையூர்க் கண்ணன் என்பான்;
பார்ப்பாரக் குலத்தினிலே பிறந்தான் கண்ணன்,
பறையரையும் மறவரையும் நிகராக் கொண்டான்;
தீர்ப்பான சுருதிவழி தன்னிற் சேர்ந்தான்
சிவனடியார் இவன்மீது கருணை கொண்டார்.

மகத்தான முனிவரெலாம் கண்ணன் தோழர்;
வானவரெல் லாங்கண்ணன் அடியா ராவார்;
மகத்தானு முயர்ந்ததுணி வுடைய நெஞ்சின்
வீரர்பிரான் குவளையூர்க் கண்ணன் என்பான்,
ஜகத்தினிலோர் உவமையிலா யாழ்ப்பா ணத்து
சாமிதனை யிவனென்றன் மனைக்கொ ணர்ந்தான்
அகத்தினிலே அவன்பாத மலரைப் பூண்டேன்;
“அன்றேயப் போதேவீ டதுவே வீடு”.

பாங்கான குருக்களைநாம் போற்றிக் கொண்டோம்,
பாரினிலே பயந்தெளிந்தோம்; பாச மற்றோம்
நீங்காத சிவசக்தி யருளைப் பெற்றோம்;
நிலத்தின்மிசை அமரநிலை யுற்றோம் அப்பா!
தாங்காமல் வையகத்தை அழிக்கும் வேந்தர்,
தாரணியில் பலருள்ளார்,தருக்கி வீழ்வார்;
ஏங்காமல் அஞ்சாமல் இடர்செய் யாமல்
என் றுமருள் ஞானியரே எமக்கு வேந்தர்.

பெண் விடுதலை

பெண்ணுக்கு விடுதலையென் றிங்கோர் நீதி
பிறப்பித்தேன்;அதற்குரிய வெற்றி கேளீர்;
மண்ணுக்குள் எவ்வுயிரும் தெய்வ மென்றால்
மனையாளும் தெய்வமன்றோ? மதிகெட் டீரே!
விண்ணுக்குப் பறப்பதுபோல் கதைகள் சொல்வீர்
விடுதலையென் பீர்,கருணை வெள்ள மென்பீர்,
பெண்ணுக்கு விடுதலைநீ ரில்லை யென்றால்
பின்னிந்த உலகினிலே வாழ்க்கை யில்லை.

தாய் மாண்பு

பெண்டாட்டி தனையடிமைப் படுத்த வேண்டிப்
பெண்குலத்தை முழுதடிமைப் படுத்த லாமோ?
“கண்டார்க்கு நகைப்” பென்னும் உலக வாழ்க்கை
காதலெனும் கதையினுடைக் குழப்ப மன்றோ?
உண்டாக்கிப் பாலூட்டி வளர்த்த தாயை
உமையவளென் றறியீரோ? உணர்ச்சி கெட்டீர்?
பண்டாய்ச்சி ஔவை: “அன் னையும் பிதாவும்”
பாரிடை “முன் னறிதெய்வம்” என்றாள் அன்றோ?

தாய்க்குமேல் இங்கேயோர் தெவ் முண்டோ?
தாய்பெண்ணே யல்லளோ? தமக்கை,தங்கை
வாய்க்கும்பெண் மகவெல்லாம் பெண்ணே யன்றோ?
மனைவியொருத் தியையடிமைப் படத்த வேண்டித்
தாய்க்குலத்தை முழுதடிமைப் படுத்த லாமோ?
“தாயைப்போ லேபிள்ளை” என்று முன்னோர்
வாக்குளதன் றோபெண்மை அடிமை யுற்றால்
மக்களெலாம் அடிமையுறல் வியப்பொன் றாமோ?

வீட்டிலுள்ள பழக்கமே நாட்டி லுண்டாம்
வீட்டினிலே தனக்கடிமை பிறராம் என்பான்;
நாட்டினிலே....... .... .... ...
நாடோறும் முயன்றிடுவான் நலிந்து சாவான்;
காட்டிலுள்ள பறவைகள்போல் வாழ்வோம்,அப்பா‘
காதலிங்கே உண்டாயிற் கவலை யில்லை;
பாட்டினிலே காதலைநான் பாட வேண்டிப்
பரமசிவன் பாதமலர் பணிகின்றேனே.

காதலின் புகழ்
காதலினால் மானுடர்க்குக் கலவி யுண்டாம்
கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்;
காதலினால் மானுடர்க்குக் கவிதை யுண்டாம்;
கானமுண்டாம் சிற்பமுதற் கலைக ளுண்டாம்;
ஆதலினால் காதல்செய்வீர்;உலகத் தீரே
அஃதன்றோ இவ்வுலகத் தலைமை யின்பம்?
காதலினர்ல் சாகாம லிருத்தல் கூடும்;
கவலைபோம், அதனாலே மரணம் பொய்யாம்.

ஆதிசக்தி தனையுடம்பில் அரனும் கோத்தான்;
அயன்வாணி தனைநாவில் அமர்த்திக் கொண்டான்;
சோதிமணி முகத்தினளைச் செல்வ மெல்லாம்
சுரந்தருளும் விழியாளைத் திருவை மார்பில்
மாதவனும் ஏந்தினான்: வானோர்க் கேனும்
மாதரின்பம் போற்பிறிதோர் இன்பம் உண்டோ?
காதல்செயும் மனைவியே சதி கண்டீர்
கடவுள்நிலை அவளாலே எய்த வேண்டும்.

கொங்கைகளே சிவலிங்கம் என்று கூறிக்
கோக்கவிஞன் காளிதா சனும்பூ ஜித்தான்;
மங்கைதனைக் காட்டினிலும் உடன்கொண் டேகி
மற்றவட்கா மதிமயங்கிப் பொன்மான் பின்னே
சிங்கநிகர் வீரர்பிரான் தெளிவின் மிக்க
ஸ்ரீதரனுஞ் சென்றுபல துன்ப முற்றான்;
இங்குபுவி மிசைக்காவி யங்க ளெல்லாம்
இலக்கியமெல் லாங்காதற் புகழ்ச்சி யன்றோ?

நாடகத்தில் காவியத்தில் காத லென்றால்
நாட்டி னர்தாம் வியப்பெய்தி நன்றாம் என்பர்;
ஊடகத்தே வீட்டினுள்ளே கிணற்றோ ரத்தே
ஊரினிலே காதலென்றால் உறுமு கின்றார்;
பாடைகட்டி அதைக்கொல்ல வழிசெய் கின்றார்;
பாரினிலே காதலென்னும் பயிரை மாய்க்க
மூடரெலாம் பொறாமையினால் விதிகள் செய்து
முறைதவறி இடரெய்திக் கெடுகின் றாரே.

காதலிலே இப்மெய்திக் களித்து நின்றால்
கனமான மன்னவர்போர் எண்ணுவாரோ?
மாதருடன் மனமொன்றி மயங்கி விட்டால்
மந்திரிமார் போர்த்தொழிலை மனங்கொள் வாரோ?
பாதிநடுக் கலவியிலே காதல் பேசிப்
பகலெல்லாம் இரவெல்லாம் குருவி போலே
காதலிலே மாதருடன் களித்து வாழ்ந்தால்
படைத்தலைவர் போர்த்தொழிலைக் கருது வாரோ?

விடுதலைக் காதல்

காதலிலே விடுதலையென் றாங்கோர் கொள்கை
கடுகிவளர்ந் திடுமென்பார் யூரோப் பாவில்;
மாதரெலாம் தம்முடைய விருப்பின் வண்ணம்
மனிதருடன் வாழ்ந்திடலாம் என்பார் அன்னோர்;
பேதமின்றி மிருகங்கள் கலத்தல் போலே
பிரியம்வந்தால் கலந்தன்பு; பிரிந்து விட்டால்,
வேதனையொன் றில்லாதே பிரிந்து சென்று
வேறொருவன் றனைக்கூட வேண்டும் என்பார்.

வீரமிலா மனிதர்சொலும் வார்த்தை கண்டீர்!
விடுதலையாங் காதலெனிற் பொய்மைக் காதல்!
சோரரைப்போல் ஆண்மக்கள் புவியின் மீது
சுவைமிக்க பெண்மைநல முண்ணு கின்றார்

காரணந்தான் யாதெனிலோ ஆண்க ளெல்லாம்
களவின்பம் விரும்புகின்றார்; கற்பே மேலென்று
ஈரமின்றி யெப்போதும் உபதே சங்கள்
எடுத்தெடுத்துப் பெண்களிடம் இயம்பு வாரே!

ஆணெல்லாம் கற்பைவிட்டுத் தவறு செய்தால்,
அப்போது பெண்மையுங்கற் பழிந்தி டாதோ?
நாணற்ற வார்த்தையன்றோ? வீட்டைச் சுட்டால்,
நலமான கூரையுந்தான் எரிந்தி டாதோ?
பேணுமொரு காதலினை வேண்டி யன்றோ
பெண்மக்கள் கற்புநிலை பிறழு கின்றார்?
காணுகின்ற காட்சியெல்லாம் மறைத்து வைத்துக்
கற்புக்கற் பென்றுலகோர் கதைக்கின் றாரே?

சர்வ மத சமரசம்

கோவிந்த ஸ்வாமியுடன் சம்பாஷணை

மீளவுமங் கொருபகலில் வந்தான் என்தன்
மனையிடத்தே கோவிந்த வீர ஞானி,
ஆளவந்தான் பூமியினை,அவனி வேந்தர்
அனைவருக்கும் மேலானோன்,அன்பு வேந்தன்;
நாளைப்பார்த் தொளிர்தருநன் மலரைப் போலே
நம்பிரான் வரவுகண்டு மனம்ம லர்ந்தேன்;
வேளையிலே நமதுதொழில் முடித்துக் கொள்வோம்.
வெளிலுள்ள போதினிலே உலத்திக் கொள்வோம்;

காற்றுள்ள போதேநாம் தூற்றி கொள்வோம்;
கனமான குருவையெதிர் கண்ட போதே
மாற்றான அகந்தையினைத் துடைத்துக் கொள்வோம்;
மலமான மறதியினை மடித்துக் கொள்வோம்;
கூற்றான அரக்கருயிர் முடித்துக் கொள்வோம்;
குலைவான மாயைதனை அடித்துக் கொல்வோம்;
பேற்றாலே குருவந்தான்;இவன்பால் ஞானப்
பேற்றையெல்லாம் பெறுவோம்யாம்” என்றேனுள்ளே

சிந்தித்து“மெய்ப்பொருளை உணர்த்தாய் ஐயோ!
தேய்வென்ற மரணத்தைத் தேய்க்கும் வண்ணம்
வந்தித்து நினைக்கேட்டேன் கூறாய்” என்றேன்.
வானவனாம் கோவிந்த சாமி சொல்வான்;
“அந்தமிலா மாதேவன் கயிலை வேந்தன்
அரவிந்த சரணங்கள் முடிமேற் கொள்வோம்;
பந்தமில்லை பந்தமில்லை; பந்தம் இல்லை;
பயமில்லை; பயமில்லை; பயமே இல்லை.

“அதுவேநீ யென்பதுமுன் வேத வோத்தாம்;
அதுவென்றால் எதுவெனநான் அறையக் கேளாய்!
அதுவென்றால் மன்னிற்கும் பொரளின் நாமம்;
அவனியிலே பொருளெல்லாம் அதுவாம்; நீயும்
அதுவன்றிப் பிறிதில்லை; ஆத லாலே,
அவனியின்மீ தெதுவரினும் அசைவு றாமல்
மதுவுண்ட மலர்மாலை இராமன் தாளை
மனத்தினிலே நிறுத்தியிங்கு வாழ்வாய், சீடா!

“பாரான உடம்பினிலே மயிர்க ளைப்போல்
பலப்பலவாம் பூண்டுவரும் இயற்கை யாலே;
நேராக மானுடர்தாம் பிறரைக் கொல்ல
நினையாமல் வாழ்ந்திட்டால் உழுதல் வேண்டா;
காரான நிலத்தைப்போய்த் திருத்த வேண்டா;
கால்வாய்கள் பாய்ச்சுவதில் கலகம் வேண்டா;
சீரான மழைபெய்யும் தெய்வ முண்டு;
சிவன்செத்தா லன் றிமண்மேல் செழுமை உண்டு

“ஆதலால் மானிடர்கள் களவை விட்டால்
அனைவருக்கும் உழைப்பின்றி உணவுண் டாகும்;
பேதமிட்டுக் கலகமிட்டு வேலி கட்டிப்
பின்னதற்குக் காவலென்று பேரு மிட்டு
நீதமில்லாக் கள்வர்நெறி யாயிற் றப்பா
நினைக்குங்கால் இது கொடிய நிகழ்ச்சி யன்றோ?
பாதமலர் காட்டிநினை அன்னை காத்தாள்;
பாரினிலித் தருமம் நீ பகரு வாயே.

“ஒருமொழியே பலமொழிக்கும் இடங்கொ டுக்கும்
ஒருமொழியே மலமொழிக்கும் ஒழிக்கும் என்ற
ஒருமொழியைக் கருத்தினிலே நிறுத்தும் வண்ணம்
ஒருமொழி “ஓம் நமச் சிவாய”வென்பர்:
“ஹரி ஹரி” யென் றிடினும் அஃதே “ராம ராம”
“சிவ சிவ” வென் றிட்டாலும் அஃதே யாகும்;
தெரிவுறவே“ஓம் சக்தி” யென்று மேலோர்
ஜெபம்புரிவ தப்பொருளின் பெயரே யாகும்.

“சாரமுள்ள பொருளினைநான் சொல்லி விட்டேன்;
சங்சலங்கள் இனிவேண்டா. சரதந் தெய்வம்;
ஈரமிலா நெஞ்சுடையார் சிவனைக் காணார்
எப்போதும் அருளைமனத் திசைத்துக்கொள்வாய்
வீரமிலா நெஞ்சுடையார் சிவனைக் காணார்;
எப்போதும் வீரமிக்க விகைள் செய்வாய்;
பேருயர்ந்த யேஹேவா அல்லா நாமம்
பேணுமவர் பதமலரும் பேணல் வேண்டும்.

“பூமியிலே,கண்டம் ஐந்து,மதங்கள் கோடி!
புத்த மதம்,சமண மதம் பார்ஸி மார்க்கம்
சாமியென யேசுபதம் போற்று மார்க்கம்.
சநாதன மாம் ஹிந்து மதம்,இஸ்லாம்,யூதம்.
நாமமுயர் சீனத்துத் “தாவு”மார்க்கம்,
நல்ல‘கண் பூசி’மதம் முதலாப் பார்மேல்
யாமறிந்த மதங்கள் பல உளவாம் அன்றே:
யாவினுக்கும் உட்புதைந்த கருத்திங் கொன்றே

“பூமியிலே வழங்கிவரும் மதத்துக் கெல்லாம்
பொருளினைநாம் இங்கெடுத்துப் புகலக் கேளாய்;
சாமி நீ: சாமி நீ:கடவுள் நீயே;
தத்வமஸி; தத்வமஸி; நீயே அஃதாம்;
பூமியிலே நீ கடவு ளில்லை யென்று
புகல்வதுநின் மனத்துள்ளே புகுந்த மாயை;
சாமிநீ அம்மாயை தன்னை நீக்கி
சதாகாலம் சிவோஹ’ மென்று சாதிப் பாயே
 பாப்பாப் பாட்டு
 
 ஓடி விளையாடு பாப்பா!-நீ
ஓய்ந்திருக்க லாகாகது பாப்பா!
கூடி விளையாடு பாப்பா!-ஒரு
குழந்தையை வையாதே பாப்பா!

சின்னஞ் சிறுகுருவி போலே-நீ
திரிந்து பறந்துவா பாப்பா!
வன்னப் பறவைகளைக் கண்டு-நீ
மனதில் மகிழ்ச்சிகொள்ளு பாப்பா!

கொத்தித் திரியுமந்தக் கோழி-அதைக்
கூட்டி விளையாடு பாப்பா!
எத்தித் திருடுமந்தக் காக்காய்-அதற்கு
இரக்கப் படவேணும் பாப்பா!

பாலைப் பொழிந்துதரும் பாப்பா!-அந்தப்
பசுமிக நல்லதடி பாப்பா!
வாலைக் குழைத்துவரும் நாய்தான்-அது
மனிதர்க்கு தோழனடி பாப்பா!

வண்டி இழுக்கும்நல்ல குதிரை,-நெல்லு
வயலில் உழுதுவரும் மாடு,
அண்டிப் பிழைக்கும் நம்மை,ஆடு,-இவை
ஆதரிக்க வேணுமடி பாப்பா!

காலை எழுந்தவுடன் படிப்பு-பின்பு
கனிவு கொடுக்கும்நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு-என்று
வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா!

பொய்சொல்லக் கூடாது பாப்பா!-என்றும்
புறஞ்சொல்ல லாகாது பாப்பா!
தெய்வம் நமக்குத்துணை பாப்பா!-ஒருன
தீங்குவர மாட்டாது பாப்பா!

பாதகஞ் செய்பவரைக் கணடால்-நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா!
மோதி மிதித்துவிடு பாப்பா!-அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!

துன்பம் நெருங்கி வந்த போதும்-நாம்
சோர்ந்துவிட லாகாது பாப்பா!
அன்பு மிகுந்ததெய்வ முண்டு-துன்பம்
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா!

சோம்பல் மிகக்கெடுதி பாப்பா!-தாய்
சொன்ன சொல்லைத் தட்டாதே பாப்பா!
தேம்பி யழுங்குழந்தை நொண்டி,-நீ
திடங்கொண்டு போராடு பாப்பா!

தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற-எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா!
அமிழ்தில் இனியதடி பாப்பா!-நம்
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா!

சொல்லில் உயர்வுதமிழ்ச் சொல்லே!-அதைத்
தொழுது படித்திடடி பாப்பா!
செல்வம் நிறைந்த ஹிந்துஸ்தானம்-அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா!

வடக்கில் இமயமலை பாப்பா!-தெற்கில்
வாழும் குமரிமுனை பாப்பா!
கிடக்கும் பெரியகடல் கண்டாய்-இதன்
கிழக்கிலும் மேற்கிலும் பாப்ப!

வேத முடையதிந்த நாடு,-நல்ல
வீரர் பிறந்ததிந்த நாடு;
சேதமில் லாதஹிந்து ஸ்தானம்-இதைத்
தெய்வமென்று கும்பிடடி பாப்பா!

சாதிகள் இல்லையடி பாப்பா!-குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;
நீதி உயர்ந்த மதி,கல்வி-அன்பு
நிறை உடையவர்கள் மேலோர்.

உயிர்க ளிடத்தில்அன்பு வேணும்;-தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும்;
வயிர முடையநெஞ்சு வேணும்;-இது
வாழும் முறைமையடி பாப்பா!



நல்லதோர் வீணைசெய்தே-அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி, சிவசக்தி;-எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்,
வல்லமை தாராயோ,-இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி,சிவசக்தி!-நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?
1

விசையுறு பந்தினைப்போல்-உள்ளம்
வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்,
நசையுறு மனங்கேட்டேன்-நித்தம்
நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்,
தசையினைத் தீசுடினும்-சிவ
சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்,
அசைவறு மதிகேட்டேன்;-இவை
அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ?
2
<< Previous








காலா!உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்; என்தன்
காலருகே வாடா! சற்றே உனை மிதிக்கிறேன்-அட (காலா)

சரணங்கள்
வேலாயுத விருதினை மனதிற் பதிக்கிறேன்-நல்ல
வேதாந்த முரைத்த ஞானியர் தமை யெண்யித் துதிக்கிறேன்-ஆதி

மூலா வென்றுகதறிய யானையயைக் காக்கவே-நின்தன்
முதலைக்கு நேர்ந்ததை மறந்தாயோ,கெட்ட மூடனே? அட-(காலா)

ஆலால முண்டவனடி சரணென் றமார்க்கண்டன்-தன
தாவி கவரப்போய் நீ பட்ட பாட்டினை யறிகுவேன்-இங்கு

நாலாயிரம் காதம் விட்டகல்!உனை விதிக்கிறேன்-ஹரி
நாராயண னாகநின் முன்னே உதிக்கிறேன்-அட (காலா)*

‘சுதேசமித்திரன்’ வருஷ அநுபந்தம் 1919-ல் வெளி வந்த முழுப் பாட்டு.
<< Previous




பக்தி்
ராகம்-பிலஹரி
பல்லவி
பக்தியினாலே-தெய்வ-பக்தியினாலே
சரணங்கள்
பக்தியினாலே-இந்தப்
பாரினிலெய்திடும் மேன்மைகள் கேளடி!
சித்தந் தெளியும்,-இங்கு
செய்கை யனைத்திலும் செம்மை பிறந்திடும்,
வித்தைகள் சேரும்,-நல்ல
வீர ருறவு கிடைக்கும்-மனத்திடைத்
தத்துவ முண்டாம்,-நெஞ்சிற்
சஞ்சலம் நீங்கி உறுதி விளங்கும்.                                       (பக்தியினாலே)

காமப் பிசாசைக் -குதிக்
கால்கொண் டடித்து விழுத்திட லாகும்;இத்
தாமசப் பேயைக்-கண்டு
தாக்கி மடித்திட லாகும்;எந் நேரமும்
தீமையை எண்ணி-அஞ்சுந்
தேம்பற் பிசாசைத் திருகியெறிந்து பொய்ந்
நாம மில்லாத-உண்மை
நாமத்தினாலிங்கு நன்மை விளைந்திடும்,                        (பக்தியினாலே)


ஆசையைக் கொல்வோம்,-புலை
அச்சத்தைக் கொன்று பொசுக்கிடுவோம்,கெட்டட
பாச மறுப்போம்,-இங்கு
பார்வதி சக்தி விளங்குதல் கண்டதை
மோசஞ் செய்யாமல்-உண்மை
முற்றிலுங் கண்டு வணங்கி வணங்கி யோர்
ஈசனைப் போற்றி-இன்பம்
யாவையு முண்டு புகழ்கொண்டு வாழ்குவம்,                 (பக்தியினாலே)

சோர்வுகள் போகும்,-பொய்ச்
சுகத்தினைத் தள்ளிச் சுகம்பெற லாகும்,நற்
பார்வைகள் தோன்றும்,-மிடிப்
பாம்பு கடித்த விஷமகன் றேநல்ல
சேர்வைகள் சேரும்,-பல
செல்வங்கள் வந்து மகிழ்ச்சி விளைந்திடும்
தீர்வைகள் தீரும்,பலபல இன்பங்கள் சேர்ந்திடும்,        (பக்தியினாலே)

கல்வி வளரும்,-பல
காரியுங் கையுறும்,வீரிய மோங்கிடும்,
அல்ல லொழியும்-நல்ல
ஆண்மை யுண்டாகும்,அறிவு தெளிந்திடும்,
சொல்லுவதெல்லாம்-மறைச்
சொல்லினைப் போலப் பயனுள தாகும் மெய்
வல்லமை தோன்றும்,-தெய்வ
வாழ்க்கையுற்றே யிங்கு வாழ்ந்திடலாம்,உண்மைப் (பக்தியினாலே)

சோம்ப லழியும்-உடல்
சொன்ன படிக்கு நடக்கும்,முடி சற்றுங்
கூம்புத லின்றி-நல்ல
கோபுரம் போல நிமிர்ந்த நிலைபெறும்
வீம்புகள் போகும்-நல்ல
மேன்மையுண்டாகிப் புயங்கள் பருக்கும்,பொய்ப்
பாம்பு மடியும்-மெய்ப்
பரம் வென்று நல்ல நெறிகளுண்டாய் விடும்.                (பக்தியினாலே)

சந்ததி வாழும்,-வெறுஞ்
சஞ்சலங் கெட்டு வலிமைகள் சேர்ந்திடும்
இந்தப் புவிக்கே-இங்கொர்
ஈசனுண்டாயின் அறிக்கையிட் டேனுன்தன்
கந்த மலர்த்தாள்-துணை;
காதல் மகவு வளர்ந்திட வேண்டும்,என்
சிந்தை யறிந்தே-அருள்
செய்திட வேண்டும்’ என்றால் அருளெய்திடும்               (பக்தியினாலே)
<< PreviousIndex>> Next