Saturday, June 27, 2020

ஒவ்வொரு நொடியும்... thanks to dinamalar.com

ஒவ்வொரு நொடியும்...
 எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28ஜூன்
2020
00:00
ஒரு நாளின், 24 மணி நேரத்தில், கல்லுாரி, வேலை, வீடு, நண்பர்கள் என்று, அனைத்துக்கும், அனைவருக்கும் நேரம் ஒதுக்க வேண்டியுள்ளது. சரியான நேரத்தில், வேலை செய்ய முடியாமல், 'டென்ஷன்' ஏற்பட்டு, அதனால், மன அழுத்தம் போன்ற நோய்களுக்கு ஆளாக வேண்டியுள்ளது. இதிலிருந்து தப்ப, சில, நேர மேலாண்மை டிப்ஸ்...
* துாக்கமும், சோம்பலுமாக பொழுதை கழிக்கும் வெட்டி ஆபீசர்களுக்கு, காலம் கொடுத்திருக்கும், அதே, 24 மணி நேரத்தையே, வெற்றியாளர்களுக்கும், மேதைகளுக்கும் கொடுத்திருக்கிறது என்ற உண்மையை உணர வேண்டியது, நேர மேலாண்மையின் முதல் படி
* எப்போதும், வேலை செய்ய அமர்ந்த அடுத்த, ஐந்து நிமிடங்களில் வேலையை துவங்கி விடுங்கள். இல்லையெனில், கணினி முன் அமர்ந்ததும், இணையத்தில் அலைபாய அரை மணி நேரம், 'வாட்ஸ் - ஆப்' செய்திகளுக்கு பதில் அனுப்ப, கால் மணி நேரம் என, தாமதப்படுத்தினால், வேலையின் துவக்க புள்ளி தள்ளிக்கொண்டே போகும்
* குறித்த நேரத்தில் வேலையை முடிக்க, உங்களை சுற்றி உள்ளவர்களிடம், பணி அட்டவணையை தெரியப்படுத்துங்கள். '10:00 மணிக்குள் இந்த வேலையை முடித்து, 11:00 மணிக்கு, வாடிக்கையாளரை பார்க்க போவதாக, அவனிடம் சொல்லிட்டோமே... முடிக்கலையா, கிளம்பலையான்னு கேட்பானே...' என்று, பக்கத்து இருக்கையில் உள்ளவருக்கு பதில் சொல்லும் சங்கடத்தை தவிர்க்க, குறித்த நேரத்தில் வேலையை முடிக்க பாருங்கள்
* பத்து சிறிய வேலைகள், அதோடு ஒரு முக்கியமான பெரிய வேலை, உங்கள் பொறுப்பில் இருக்கும்பட்சத்தில், பெரிய வேலையை முதலில் முடிப்பது, புத்திசாலித்தனம்
* 'டைம் லாக்கர் ஆப்'பை, நீங்கள் வேலை செய்யும் நேரத்தில், 'ஆன்' செய்து, வேலையை முடித்த பின், 'ஆப்' செய்ய வேண்டும். நீங்கள் நேரம் செலவழிக்கும் விதத்தை வாரம் ஒருமுறை, பட்டியல் மற்றும் புள்ளி விபரங்களுடன் இது காட்டிவிடும். நேர மேலாண்மைக்கும் கைகொடுக்கும் எளிமையான, 'ஆப்!'
* 'மை லைப் ஆர்கனைஸ்டு ஆப்'பில், சுற்றுலாவுக்கு செல்ல திட்டமிடுவது துவங்கி, பரீட்சைக்கு படிப்பது வரை, எல்லா வேலைகளையும் வரிசையாக பதிவு செய்ய வேண்டும். இதையடுத்து, குறிப்பிடப்பட்டிருக்கும் நேரத்தில், அதுவே உங்களை, 'அலர்ட்' செய்யும். இதை, 'கஸ்டமைஸ்' செய்து, 'மேப்'பில், செய்ய வேண்டிய விஷயங்களை குறித்து வைத்துக் கொள்ளலாம்
* 'டைம் ஷீட் - டைம் டிராக்கர் ஆப்' வேலைக்கு செல்வோரும், மாணவர்களும் அதிகம் பயன்படுத்துவது. 'புராஜெக்ட்' அல்லது 'அசைன்மென்ட்'டை முடிக்க எவ்வளவு நேரம் ஆகிறது என்பதை கணக்கிட்டு, 'கிராப்ட்' வடிவில் பார்க்க முடிவதோடு, கணினியிலும் பதிவேற்றலாம். ஒரு குழுவில் உள்ளோர், தனித்தனியாக வேலை செய்ய, எவ்வளவு நேரம் எடுக்கின்றனர் என்பதை சுலபமாக கணக்கிடவும் உதவும்
* வண்ண மை பேனாக்களில், நீங்கள் செய்யும் செயல்களை, 'பாக்கெட் டைரி'யில், தினமும் குறித்து வாருங்கள். உதாரணமாக, நேரத்தை வீணாக்க கூடிய செயல்களை, கருப்பு மை பேனாவாலும், வெற்றிகரமாக செய்து முடித்த காரியங்களை, பச்சையிலும், நிலுவையில் உள்ள வேலைகளை, சிவப்பிலும் குறித்துக் கொண்டே வர வேண்டும். எந்த நிறம், 'டைரி'யில் அதிகம் ஆக்கிரமிக்கிறதோ, அதிலிருந்து உங்களுக்கான நேர மேலாண்மை மதிப்பெண்களை பெற்றுக் கொள்ளலாம்
* குறைந்தபட்சம், வாரத்தின் ஏதாவது ஒரு நாளில், உங்கள் செயல்பாடுகளை மணிகணக்கில் குறித்து வைத்து, அன்று, யாரால் அல்லது எதனால் அதிக நேரம் வீணாக நேரிட்டது என்பதை கண்டறிந்து, சரி செய்து கொள்ளுங்கள்
* மிக சோர்வாக இருக்கும்போது, இழுத்து பிடித்து வேலை செய்வதை விட, 10 நிமிடம் ஓய்வெடுத்து, அதை தொடரும்போது, செயல் திறன் அதிகரிக்கும்
* பணத்தை போலவே நேரத்தையும், தேவையின்றி செலவழிக்காமல் சிக்கனப்படுத்துங்கள். பணம், போனால் வரும்; ஆனால், ஒருபோதும் திரும்ப கிடைக்காது, நேரம்

Tuesday, June 23, 2020

திரையிசையின் கம்பர் கண்ணதாசன் thanks to dinamalar.com

திரையிசையின் கம்பர் கண்ணதாசன்

Advertisement
 திரையிசையின் கம்பர் கண்ணதாசன்
காவியத் தாயின் மூத்த மகன் கம்பன் என்றால், இளைய மகன், காலத்தை வென்றவன், காவியம் ஆனவன் கண்ணதாசன் எனலாம். 'தாடி இல்லாத தாகூர்; மீசை
இல்லாத பாரதி' என்று கண்ணதாசனைப் பாராட்டுவார் கவிஞர் வாலி. திரையுலகில் க.மு., க.பி. என்றால் 'கண்ணதாசனுக்கு முன்', 'கண்ணதாசனுக்கு பின்' என்று பொருள். கண்ணதாசன் கல்லுாரிக்கோ பல்கலைக்கழகத்திற்கோ சென்று படித்ததில்லை. எனினும் அவர் சங்க இலக்கியம் முதல் இக்கால இலக்கியங்கள் வரை, சித்தர் பாடல்கள் முதல் சிற்றிலக்கி
யங்கள் வரை கற்று அறிந்தவர்; அதனால் அவருடைய திரையிசைப் பாடல்களில் இலக்கியங்களின் தாக்கம் இருக்கும். கவிச்சக்கரவர்த்தி கம்பன் கவிதைகளின் தாக்கம் கண்ணதாசனின்
திரையிசைப் பாடல்களில் அதிகம் இடம்பெற்றுள்ளன.

கைவண்ணம்


ராமனும் இலக்குவனும் விசுவாமித்திரரோடு மிதிலைக்குச் செல்லும்போது, ராமனது திருவடித் துகள்பட்டுத் தனது சாபம் நீங்கி முன்னைய பெண் வடிவத்தைப் பெறுகிறாள் அகலிகை. அப்பொழுது அகலிகையின் வரலாற்றை எடுத்துரைத்த விசுவாமித்திரர். 'மேகம் போன்ற கரிய திருமேனியுடைய ராமனே! வருகிற வழியில் வனத்தில் அஞ்சனம் போலும் கரிய நிறத்தையுடைய தாடகை என்னும் அரக்கியோடு செய்த போரில் உன் கையின் திறத்தை வில்லின் ஆற்றலை பார்த்தேன்; இங்கு உன் திருவடியின் திறத்தைக் கண்டேன்' என்று கூறுகிறார்.
'இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்; இனி இந்த உலகுக்கு எல்லாம் உய்வண்ணம் அன்றி, மற்றுஓர் துயர்வண்ணம் உறுவது உண்டோ? மைவண்ணத்து அரக்கி போரில், மழைவண்ணத்து அண்ணலே உன் கைவண்ணம் அங்குக் கண்டேன்; கால் வண்ணம் இங்கு கண்டேன்'
கம்பனின் இப்பாடல் கண்ணதாசனை ஈர்த்தது. அதன் விளைவாக உருவானதுதான் 'பாசம்' என்னும் திரைப்படத்தில் திருமணம் ஆன கணவனும் மனைவியும் இணைந்து பாடுவதாக அமைந்த புகழ்பெற்ற இப்பாடல்...
ஆண்:பால்வண்ணம் பருவம் கண்டு
வேல் வண்ணம் விழிகள் கண்டு
மான் வண்ணன் நான் கண்டுவாடுகிறேன்!
பெண்:கண் வண்ணம் அங்கே கண்டேன்
கை வண்ணம் இங்கே கண்டேன்
பெண் வண்ணம் நோய் கொண்டுவாடுகிறேன்!
கம்பர் பயன்படுத்திய 'வண்ணம்'என்னும் சொல்லே
மீண்டும் மீண்டும் வர, இத்திரைப்படப் பாடலைப் புனைந்துள்ளார் கண்ணதாசன்.

தோள் கண்டார்


தேர் ஏறி வீதி உலா வரும் ராமனைக் கண்டு மகிழ மிதிலை நகரத்து மகளிர் மொய்க்கின்றனர். ராமபிரானது தோள் அழகைக் கண்டவர்கள், அவ்வழகை முற்றும் கண்டு களித்து முடியாமையால் அத்தோள் அழகினையே கண்ட வண்ணம் இருந்தார்களாம். வாள் போன்ற கண்களையுடைய மிதிலை நகரப் பெண்டிருள் ராமனது திருமேனியழகினை
முழுவதும் பார்த்தவர்கள் ஒருவரும் இல்லையாம்.
'தோள் கண்டார், தோளே கண்டார்; தொடுகழல் கமலம் அன்ன தாள் கண்டார், தாளே கண்டார்; தடக் கை கண்டாரும், அதே வாள் கொண்ட கண்ணார் யாரே வடிவினை முடியக் கண்டார்?
ஊழ் கொண்ட சமயத்து அன்னான் உருவு கண்டாரை ஒத்தார்'
இப்பாடலின் தாக்கம்தான்
'இதயக் கமலம்'படத்தில்
'தோள் கண்டேன் தோளே கண்டேன்
தோளில்இரு கிளிகள் கண்டேன்;
வாள் கண்டேன் வாளே கண்டேன்.
வட்டமிடும் விழிகள் கண்டேன்'
என்று கண்ணதாசன் பாட
துாண்டுகோலாக அமைந்தது.

நதியின் குற்றமல்ல

ராமனிடம் மன்னனாகிய தசரனது ஆணையை கைகேயி கூறிய அளவில், கானகம் செல்லப் புறப்பட்டு விடையும் பெற்று விடுகிறான் ராமன். ராமன் காடு செல்வது கேட்ட நாட்டு மக்கள் துயரம் அடைகிறார்கள். இலக்குவன் போர்க்கோலம் பூணுகிறான். இதையறிந்த ராமன், இலக்குவன் இருக்கும் இடத்திற்கு விரைந்து வந்து அவனது சீற்றத்தைத் தணிக்க முற்படுகிறான்.
'மழைநீர் வரத்து இன்மையால் சில காலம் ஆற்றில் நீர் வற்றுவது ஆற்றின் குற்றம் அன்று; அதுபோல என்னைக் காடு செல்லும்படி சொன்னது தந்தையின் குற்றம் அன்று; காடு செல்லும்படி வரம் வாங்கியது, பெற்று நம்மைக் காப்பாற்றி வளர்த்தவள் ஆகிய கைகேயியின் அறிவினது குற்றமும் அன்று; நமது ஊழ்வினையால் விளைந்த குற்றமே ஆகும். இதனை ஆராயாது, நீ இந்தச் செயலுக்கு இவர்களைக் காரணமாக்கிக் கோபித்தது ஏன்?'
என்று வினவுகிறான் ராமன்.'நதியின் பிழைஅன்று நறும்புனல் இன்மை; அற்றே பதியின் பிழை அன்று; பயந்து நமைப் புரந்தாள்மதியின் பிழை அன்று; மகன் பிழை
அன்று; மைந்த!
விதியின் பிழை; நீ இதற்கு என்னை வெகுண்டது?' என்றான்.
கம்பரின் இப்பாடற் கருத்தினை கண்ணதாசன் 'தியாகம்' என்னும் படத்தில் எடுத்தாண்டுள்ளார். கதைத் தலைவன் 'தன்மீது சுமத்தப்பட்ட பழிக்குத் தான் காரணம் இல்லை; விதிதான் காரணம்' என்று கூறுவதாக வரும் அப்பாடல்...
'நல்லவர்க் கெல்லாம் சாட்சிகள் ரெண்டு
ஒன்று மனசாட்சி, ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா!....... நதிவெள்ளம் காய்ந்து விட்டால்நதி செய்த குற்றமில்லை;விதி செய்த குற்றம் அன்றி
வேறே யாரம்மா?'

வசந்த மாளிகை


கடலைத் தாவி இலங்கைக்குச் சென்ற அனுமன், அசோக வனத்தில் சீதை சிறை வைக்கப்பட்டிருப்பதைக் காண்கிறான்; எப்படியாவது சீதையைச் சிறையிலிருந்து விடுவிக்க எண்ணுகிறான். 'தாயே! தாங்கள் என் தோளில் அமர்ந்து கொள்ளுங்கள், தங்களை யான் ராமன்பால் சேர்ப்பிப்பேன்' என்று சீதையிடம் விண்ணப்பிக்கிறான். அது கேட்ட சீதை, அது பொருத்தமற்ற செயல் என்று விளக்கிக் கூறி அதற்கு உடன்படாது மறுக்கிறாள். பிராட்டியின் வார்த்தைகளைக் கேட்டுத் தெளிந்த அனுமன் தன் கருத்தை விலக்கிக் கொண்டு, 'ராமபிரானுக்கு யான் கூற வேண்டிய செய்தி யாது? கூறுக' என்று கேட்கிறான். சீதை, 'அண்ணல்பால் நினைவுறுத்துக' என்று தனித்திருந்த போது இருவரும் பேசிப் பகிர்ந்து கொண்ட சில அடையாள மொழிகளைக் கூறுகிறாள். அவற்றுள் ஒன்று, ராமன் மிதிலையை அடைந்து, தன்னைத் திருமணம் செய்து கொண்ட காலத்தில், 'இந்தப் பிறவியலில் இரண்டாவது பெண்ணை மனத்தால் கூடத் தீண்ட மாட்டேன்' என்று கூறிய செவ்வரத்தை அண்ணலின் செவியில் சாற்றுக'என்பது. ராமன் சீதைக்கு அளித்த செவ்விய வரத்தினை, திருவார்த்தையை, ஒரு திரைப்பாடலில் நயமாகப் பொதிந்து வைத்துள்ளார் கண்ணதாசன். 'வசந்த மாளிகை' திரைப்பட பாடலில், 'மயக்கமென்ன இந்த மவுனமென்ன மணி மாளிகை தான் கண்ணே; தயக்கமென்ன இந்தச் சலனமென்ன அன்புக் காணிக்கைதான் கண்ணே' என்று காதலிக்குத் தான் கட்டி வைத்திருக்கும் மாளிகையைக் காட்டிக் கூறும் காதலன்,
'உன்னையல்லால் ஒரு பெண்ணை இனிநான்
உள்ளத்தினாலும் தொட மாட்டேன்!'
என்று உறுதி கூற,'
உன் உள்ளம் இருப்பது என்னிடமே
- அதைஉயிர் போனாலும் தர மாட்டேன்!'
என்று காதலியும் நெகிழ்ந்து கூறுவதாகப் பாடுகிறார் கண்ணதாசன்.

லட்சுமி கல்யாணம்


கம்ப ராமாயணத்தில் கூறப்படும் ராமனின் அவதாரச் சிறப்பு முழுவதையுமே 'லட்சுமி கல்யாணம்' என்னும் திரைப்படத்திற்காக எழுதிய பாடலில் ரத்தினச் சுருக்கமான மொழியில் எடுத்துக்காட்டியுள்ளார் கண்ணதாசன்.
'ராமன் எத்தனை ராமனடி அவன்நல்லவர் வணங்கும் தேவனடி
தேவன் ராமன் எத்தனை ராமனடி!
கல்யாணக் கோலம் கொண்ட கல்யாணராமன் காதலுக்குத் தெய்வம் அந்தச் சீதாராமன்,
அரசாள வந்த மன்னன் ராஜாராமன்'என்று நீள்கிறது அந்த பாடல். இப்படி கம்பனின் கவித்திறம் கவியரசர் கண்ணதாசனின் திரையிசைப் பாடல்களில் எங்கும் நீக்கமறப் படிந்து அவற்றிற்குத் தனி வண்ணமும் வனப்பும், கூடுதல் வளமும், வலிமையும் சேர்த்திருக்கிறது.-முனைவர் நிர்மலா மோகன்எழுத்தாளர், மதுரை94434 58286

Tuesday, June 16, 2020

மூலிகைகளால் கொரோனாவை வெல்லலாம்! thanks to dinamalar.com

மூலிகைகளால் கொரோனாவை வெல்லலாம்!

Advertisement
 மூலிகைகளால் கொரோனாவை வெல்லலாம்!
31Shares
facebook sharing button
messenger sharing button
twitter sharing button
இன்று, எல்லாரையும் மிரட்டிக் கொண்டிருக்கும் கொரோனா வைரசை அழிக்கும் சித்த மருத்துவ மூலிகைகளைப் பற்றி, மக்களுக்கு அறிமுகப்படுத்துவதன் மூலம், பெருகி வரும் கொரோனா மரணங்களை தடுக்கலாம் என்ற சிந்தனையே, என்னை இக்கட்டுரையை எழுதத் துாண்டியது.

தமிழகத்தின் முதல் மருத்துவம், மூலிகை மருத்துவம். 2,500 ஆண்டுகளுக்கு மேலாக, நம்மை நோய்களிலிருந்து இன்றும் பாதுகாத்து வருவது, 'வேம்பு!' கொடிய வைரசான, எச்.ஐ.வி., வைரசைக் கட்டுப்படுத்துவதில் வேப்பம் பட்டை நன்கு செயல்படுவதாக, இன்றைய விஞ்ஞானிகள் அறிவித்து, அந்த ஆய்வு தொடர்கிறது.

வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் மூலிகைகள்!


வேப்பம் பட்டை, அரை பிடியை இடித்து, 50 கிராம் தனியா, 30 கிராம் சுக்கு, 10 கிராம் இலவங்க பட்டை, 10 கிராம் அதிமதுரம் என, இந்த ஐந்து மருந்துகளையும் நன்கு அரைத்து சூரணம் செய்து காலை, மாலை ஒரு ஸ்பூன் எடுத்து, ஒரு குவளை கொதிநீரில் போட்டுக் காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.அதில், தேன் அல்லது சர்க்கரை ஒரு ஸ்பூன் சேர்த்து பெரியவர்கள், 100 மி.லி., சிறுவர்கள், 50 மி.லி., பருகி வர, கொரோனா தொற்றைத் தடுக்கும். இதை, 15 நாட்களாவது தொடர வேண்டும்.

தொல்காப்பியர் துவங்கி, இன்றைய விஞ்ஞானிகள் வரை போற்றும் வேம்பு இருக்க, கொரோனாவுக்கு பயப்படுவானேன்! தினமும் மேற்கண்ட முறையை பின்பற்றுங்கள்; நிச்சயம் கொரோனா நெருங்காது.


நுரையீரல் பாதுகாப்புக்கு


1. கண்டங்கத்திரி வேர், கருந்துளசி, ஆடாதோடை வேர், தாளிசபத்திரி, நிலவேம்பு, சீந்தில், அதிமதுரம், திப்பிலி, சுக்கு, சிற்றரத்தை, ஓமம் இவற்றை வகைக்கு, 10 கிராம் எடுத்து, இடித்து, இரண்டு குவளை கொதிநீரில் போட்டுக் காய்ச்சி, ஒரு குவளையாகக் சுருக்கி, வடிகட்டி, ஆற விடுங்கள்.அதனுடன் தேன் கலந்து பெரியவர்கள், 150 மி.லி.,யும், சிறியவர்கள், 75 மி.லி.,யும் பருகி வர, நுரையீரல் எந்த வைரசாலும் பாதிப்பு அடையாமல் காக்கப் பெறும். இதை, 15 நாட்கள் தொடர வேண்டும்.

2. இம்பூறல் எனப்படும் மூலிகை முக்கியமானது. கால்படும் இடங்களில் சர்வ சாதாரணமாக வளரக் கூடியது. இதை வேருடன் பிடுங்கி, ஒரு கைப்பிடி எடுத்து, நீரில் அலசி, நிழலில் உலர்த்தி, இடித்து அதை, ஒரு குவளை கொதிநீரில் போட்டுக் காய்ச்சுங்கள். கொதி நிலையில் கருந்துளசி, 20 இலை, இஞ்சி ஒரு துண்டு, அதிமதுரம் ஒரு துண்டு, இலவங்கப்பட்டை சிறிது சேர்த்து கலந்து, 5 நிமிடம் கழித்து இறக்கி ஆறியபின் தேன், 2 ஸ்பூன் கலந்து பருக வேண்டும். காலை, மாலை பெரியவர்கள், 100 மி.லி., சிறியவர்கள் 50 மி.லி., பருக வேண்டும். 10 முதல், 15 நாட்கள் தொடர வேண்டும்.

3. எல்லா இடங்களிலும் கொடியாகப் பரவக் கூடியது, வேலிப்பருத்தி எனும் உத்தாமணி. இதை இடித்து அரைத்து அதில், 100 கிராம் மிளகு சேர்த்து, மூன்று நாட்கள் வெயிலில் காய வைத்து, அதை அரைத்துப் பொடி செய்து,பாட்டிலில் பத்திரப்படுத்தி, தினம் காலை, இரவு இந்த பொடியை, கால் ஸ்பூன் எடுத்து பால் அல்லது தேனில் குழைத்து சாப்பிட்டு வர, ஐந்திலிருந்து, 10 நாளில் குணம் பெறலாம்.

4. விஷ்ணுக்கரந்தையை, ஒரு பிடி எடுத்து அரைத்து, அத்துடன், நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் குருந்துளசி, ஆடாதோடை, சீந்தில், நிலவேம்பு, பற்பாடகம், ஆவாரை, அதிமதுரம், இஞ்சி, தாளிசபத்திரி போன்றவற்றை, தலா, 20 கிராம் வாங்கி, பொடி செய்து, 300 மி.லி., கொதிநீரில் போட்டுக் காய்ச்சி, 150 மி.லி.,யாகச் சுருக்கி வடிகட்டி, ஆறியபின், தேன், மூன்று ஸ்பூன் கலந்து, காலை, மாலை, 100 மி.லி., பெரியவர்களும் - 50 மி.லி., சிறியவர்களும், 10 நாட்கள் பருகி வர, நிச்சயம் வைரஸ் முற்றிலும் அழியும். நிலவேம்புவை விட வீரியம் மிக்கது, விஷ்ணுக்கரந்தை.

5. கண்டங்கத்திரி, ஆடாதோடை, அதிமதுரம், கற்பூரவல்லி, சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவற்றை சம அளவு எடுத்து இடித்து, கஷாயம் செய்து தினம், காலை, மாலை, பெரியவர்கள், 100 மி.லி., சிறுவர்கள், 50 மி.லி., சாப்பிட்டு வர, 15 நாட்களில் குணம் காணலாம்.

6. துாதுவளை இலையை எல்லாரும் அறிவர். இதன் இலைகள், 15 எடுத்து, அத்துடன் கொத்துமல்லி, கருவேப்பிலை, உளுந்து, மிளகு, சீரகம், இஞ்சி, பூண்டு சேர்த்து நெய்யில் வதக்கி துவையல் செய்து தினம் காலை, மாலை, இரண்டு ஸ்பூன் சிறிது நெய் சேர்த்து, இரண்டு பிடி சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டு வர, நுரையீரலுக்கு கவசம் போல் பாதுகாப்பு கிடைக்கும்.

7. சீந்தில், பற்பாடகம், சந்தனம், சுக்கு, சித்தாமுட்டி, கோரைக்கிழங்கு, இலவங்கப்பட்டை, அதிமதுரம், தனியா, சோம்பு ஆகியவற்றை சம அளவு எடுத்து இடித்து, 300 மில்லி லிட்டர் தண்ணீரில் போட்டுக் காய்ச்சி, 100 மி.லி.,யாகச் சுருக்கி, காலை, மாலை சாப்பிட்டு வர வேண்டும்.

8. நொச்சி இலைக் கஷாயத்தில் சுக்கு, இலவங்கப்பட்டை மற்றும் கருஞ்சீரகம் பொடி செய்து கலந்து பருகி வரலாம்.9. புற்றுநோயைக் குணப்படுத்தக் கூடிய திறன் வாய்ந்த குங்குமப்பூ, வைரஸ்களை அழிக்கும் குணமும் கொண்டதாகும். துாய்மையான குங்குமப்பூ, 10 முதல், 20 இதழ்கள் எடுத்து கம்மாறு வெற்றிலையில் வைத்து, தேனில் குழைத்து, காலை, இரவு இரு வேளை பருகி வரலாம். இதில் பக்க விளைவு ஏதுமில்லை.

இந்த, முறைகளை முதல் வாரம் சாப்பிட, வைரஸ் கட்டுப்படும். எனினும், அனுபவம் வாய்ந்த சித்த மருத்துவர் வழிகாட்டலில் மேற்கொள்ள வேண்டும்.இரண்டாம் நிலை - இரண்டாவது வாரம்ஒருவேளை நோயாளி இரண்டாவது வாரம் இரண்டாவது நிலையான இருமல், கடும் காய்ச்சல், தலைவலி, நுரையீரலில் சளி அடைப்பு என்று அவதிப்படும் போது, உடனடியாக கீழ்க்கண்ட பஸ்பங்களை தயாரித்து தரலாம்.இது தான் அகத்தியர் கூறும் இரண்டாம் நிலை.

1. நற்பவள பற்பம்2. முத்துச்சிப்பி பற்பம்3. சங்கு பற்பம்4. கஸ்துாரி கருப்புஇந்த நான்கையும் வயது, நோய் நிலைக்கேற்ப அளவுப்படி சேர்த்து, அனுபவம் வாய்ந்த மருத்துவர் ஆலோசனையின் படி சூரணத்துடன் தேனில் குழைத்து, தினம் காலை ஒரு வேளை, இரவு ஒரு வேளை சாப்பிட்டு வர, 15 நாளில் முற்றிலும் குணமாகும். இந்த மருந்துகள், 'இம்ப்காப்ஸ்' கடையில் கிடைக்கக் கூடியவை.

மூன்றாவது வாரம் - மூன்றாம் நிலை

ஒரு வேளை வைரஸ் தாக்கம் அதிகமாகி, மூச்சுத் திணறல் அதிகமாகும் போது, அகத்தியர் கூறும் செந்துாரத்தை கொடுப்பதால், கொரோனா வைரசை கொல்ல முடியும்.

1. லிங்கசெந்துாரம், 30 மி.கி., தாளிசாதி சூரணத்துடன் தேனில் குழைத்து தர வேண்டும் அல்லது
2. சண்டமாருத செந்துாரம், 30 மி.லி., கிராம் அளவு தாளிசாதி சூரணத்துடன் தேனில் குழைத்து தரலாம்.கட்டாயம் இவற்றை, தேர்ந்த சித்த மருத்துவர் மேற்பார்வையில் தான் தரவேண்டும்., அதிகபட்சம், 10 நாட்கள் மட்டுமே இதை தர வேண்டும். அதற்குள் கொரோனா வைரஸ் கட்டாயம் உடம்பிலிருந்து ஒழியும்.இவ்வளவு தான், கொரோனாவை கொல்லும் சித்த மருத்துவ சிகிச்சை!

இதில், மூன்று முக்கிய விஷயங்களை கவனிக்க வேண்டும்.1. மூலிகைக் கஷாயங்கள், சூரணங்கள் அனைத்தும் நச்சுத்தன்மை இல்லாதவை. இவை அனைத்தையும், கடந்த, 25 ஆண்டுகளில் நவீன ஆய்வுக்குட்படுத்தி அவற்றின் பலன்களை, விஞ்ஞானிகள் பதிவு செய்துள்ளனர். எனவே, இவற்றை பரிசோதனை செய்ய வேண்டியதில்லை.

2. பவள பற்பம், சங்கு பற்பம், முத்துச் சிப்பி பற்பம், கஸ்துாரி கருப்பு போன்றவை நுரையீரல் நோய்களை வேரறுக்கும் வல்லமை கொண்டவை என்பது, பல்லாண்டுகளாக அனுபவ ரீதியாக நிறுவப்பட்டும், இன்றும் நம்பகமான மருந்துகளாக மக்களால் ஏற்கப்பட்டும் வருகிறது.

3. மூன்றாவது நிலையான உலோக மருந்துகளான சண்டமாருத செந்துாரம் மற்றும் லிங்க செந்துாரம் ஆகியன, நீண்ட நெடுங்காலமாக சித்த மருத்துவர்களால் பயன்படுத்தப்பட்டு வருபவை.இங்கே குறிப்பிடப்பட்டுள்ள முதல் சிகிச்சையையும், இரண்டாம் நிலை சிகிச்சையையும் அச்சமோ அல்லது ஆராய்ச்சியோ இன்றி, இன்றே துவங்கலாம். ஏனெனில், இந்த மூலிகை முறைகளும், பஸ்ப வகைகளும் கடந்த, 50 ஆண்டுகளாக தமிழகத்தில் ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு அளித்து வருவதில், நல்ல பலனை அடைந்து வருகின்றனர்.

இன்றும் தமிழகத்தில் நுாற்றுக்கணக்கான சித்த மருத்துவமனைகளில் பயன்பாட்டில் உள்ளவை. கொரோனாவை, மூலிகைகள் மூலம் வெல்லலாம். இதை, உலகளாவிய ஆய்வாக நிகழ்ந்தால், கொரோனாவுக்கு தீர்வு நிச்சயம் கிடைக்கும். எனவே, தமிழகத்தில், தமிழக அரசின், இந்திய மருத்துவத் துறை இயக்குனர் நினைத்தால், இதை மேற்கொள்ள முடியும்.

நம் நாட்டின் ஆங்கில மருத்துவ வல்லுனர்கள் பலர், மூலிகை மருத்துவத்தை உலகளவுக்கு உயர்த்த விரும்பினர். கொரொனாவை கண்டுபிடிக்க செலவிடப்படும் தொகையில், நுாறில் ஒரு பங்கு செலவு செய்தாலே போதும், கொரோனாவை முற்றிலும் ஒழிக்கலாம். இந்த ஆராய்ச்சியை மேற்கொள்ள, தமிழக முதல்வர், உத்தரவிட வேண்டிய காலகட்டம் இது தான்!

மூலிகைமணி வெங்கடேசன்

தொடர்புக்கு:90030 31796

Wednesday, June 10, 2020

இல்லறம் இனிக்க இனிய வழிகள் thanks to dinamalar.com

இல்லறம் இனிக்க இனிய வழிகள்

 Added : ஜூன் 08, 2020  கருத்துகள் (2)
Share
26Shares
facebook sharing button
messenger sharing button
twitter sharing button

இந்த உலகம் பரந்துபட்டது. அன்பும், உறவுகளும் பின்னிப்பிணைந்த கூட்டுக் கலவை தான் இவ்வுலக வாழ்வியல். இவை இல்லாமல் வாழ்க்கை முற்றுப்பெறாது. இந்த உறவுகளில் கணவன், மனைவி என்ற உறவு வலிமையானது என்று முன்னோர் சொன்னார்கள்.

வலி நிறைந்தது என்று இன்றைய தலைமுறை சொல்லிக் கொள்கின்றனர்.அம்மி மிதித்து அருந்ததி பார்த்து, நாளும் கோளும் தேர்வு செய்து மங்கல அணி கட்டப்பட்ட திருமண வாழ்க்கை கடந்த காலத்தில் வரமாக பார்க்கப்பட்டது. சொர்க்கமாக நினைக்கப்பட்டது. உறவில் உரிமையும், அன்பில் உண்மையும் இருந்தது. காலங்கள் கடந்தோடின; எல்லாம் மாறிப்போனது. உண்மையான அன்பிலும் உறவிலும் விரிசல்தான் எட்டிப்பார்க்கிறதே தவிர உயிர்த்துடிப்பு இல்லையென்றே சொல்லலாம். அதனால் தான் காவல் நிலையத்திலும், நீதிமன்றங்களிலும் படியேறி விவகாரத்துக்கேட்டு காத்துக் கொண்டிருக்கின்றனர் இன்றைய இளைய தலைமுறை.


விட்டுக்கொடுத்தல்


'விட்டுக்கொடுத்தவன் கெட்டுப் போனதில்லை' என்பது பழமொழி. இது இல்லற வாழ்க்கையின் இலக்கணம் என்பதனை மறந்துவிடாதீர்கள். கடந்த காலத்தில் ஆண் சம்பாதித்தான்; பெண் வீட்டிலிருந்தாள். ஆனால் இன்றைய நிலை அதுவல்ல. ஆணிற்கு இணையாக பெண் வேலைக்குச் செல்கிறாள். பணம் சம்பாதிக்கிறாள். இதனால் இணையர்கள் இருவருக்கும் இடையே ஈகோ எனும் கொடிய நோய் தொற்றிக் கொள்கிறது. இந்நோய்க்கு மருந்துமில்லை; மாத்திரையுமில்லை. விளைவு விவகாரத்து.இதற்காகவா இந்த இல்லறப் பாதையில் பயணித்தோம். யோசித்துப்பாருங்கள், வாழ்வது கொஞ்ச காலம் அதனை ஏன் வாழ்ந்து அனுபவிக்கத் தெரியவில்லை. திருமணம் ஆன சில மாதங்கள், சில வருடங்களிலேயே மண வாழ்க்கை கசந்துபோகிறது. நிச்சயித்த திருமணங் களிலும் இந்தநிலை என்றால், காதல் திருமணங்களில் எண்ணிக்கை ஒருபடி மேலேயே இருக்கிறது.
ஒரு கை தட்டினால் ஓசை வராது. இரண்டு கையும் சேர்த்து தட்டினால் அந்த ஓசை பத்து பேருக்குக் கேட்கும். அதே போல் தான் வாழ்க்கையும். ஆம் ஒருவர் பேசும் பொழுது ஒருவர் விட்டுக் கொடுத்துச் சென்றால் வீட்டில் அமைதி நிலவும். இரண்டு பேரும் நீயா நானா என்றால் கடைசியில் காலம்தான் ஜெயிக்கும். காலத்தை நாம் ஜெயிக்க முடியாது. எனவே இல்லற வாழ்க்கையில் ஈகோவை துாக்கி எறிந்து இன்பமாக வாழப் பழகிக் கொள்வது அவசியம்.
கடந்த காலத்தில் கூட்டுக் குடும்பமாக இருந்த போது, பிரச்னைகளை பெரியவர்கள் பேசித்தீர்த்தனர். அன்றைக்கு இணையம் இல்லை; அலைபேசி இல்லை. ஒருவருக் கொருவர் உண்மையாக, அன்பாக மனம்விட்டு பேசிக் கொள்ளும் மந்திரச்சாவி மட்டும் இருந்தது. அதனால் குடும்பங்களில் குழப்பம் இல்லை.


சமூகத்தில் ஆபத்து


ஆனால் இன்றைய நிலை... அவசர உலகம், இருபத்து நான்கு மணி நேரமும் இணையத்தில் இணைப்பு; சமூக வலைத்தளங்களில் இருத்தல் என்பதை தாண்டி எங்கே எப்பொழுது தங்கள் பிரச்னைகளை மனம் விட்டு பேசப் போகிறார்கள்? அதற்கான நேரமும் இல்லை; சூழலும் இல்லை. அதனால் தான் வாழ்க்கை திசைமாறுகிறது. வாழ்வின் வசந்தம் வறண்டு போகிறது. உண்மை காணாமல் போகிறது. உறவுகள் முறிந்து போகிறது. கல்யாணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர் என்பார்கள். அந்தப் பயிரை தண்ணீர் ஊற்றி வளர்க்கத் தெரியாமல் தரிசு நிலமாக்கிக் கொண்டிருக்கிறது இன்றைய தலைமுறை. வீட்டிலேயே பேசுவதை மறந்து முகம் தெரியாத மனிதர்களிடம் முகம் காட்டி தன் வாழ்க்கையை தொலைத்துக் கொண்டிருக்கும் சந்ததியினர் அதிகரித்து வருவது இச்சமூகத்தின் ஆபத்தினை எடுத்துரைக்கிறது. எனவே தம்பதியினர் மனம் விட்டுப் பேசுங்கள்; வீட்டுப் பிரச்னைகளை வீட்டுக்கு வெளியே எடுத்துச் செல்லாதீர்கள். மனம் போல் மாங்கல்ய வாழ்க்கை மகிழ்ச்சி தரும்.

மதுவும் மணமுறிவும்


சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கும் குடும்பத்தில் மது எனும் அரக்கனால் மணமுறிவு பெற்ற தம்பதியர் பலர். கணவன், மனைவிக்கிடையே எப்போதும் சண்டை நடப்பதால், ஒரு பாவமும் செய்யாத குழந்தைகள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். பெற்றோர்களின் சண்டையால் பிள்ளைகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் நடக்கின்றன. போதை பழக்கமுள்ளவர்கள் அதனை மறந்து மனைவியை நேசித்து பிள்ளைகளிடம் அன்பு செலுத்துங்கள். இல்லறம் இனிக்கும்.கணவனும், மனைவியும் ஒருவரை ஒருவர் சந்தேகப்படுவது இல்வாழ்க்கையின் சந்தோஷத்தை சவக்குழிக்குள் கொண்டு போய்விடும்.

நம்பிக்கை தானே வாழ்க்கை


கணவன், மனைவி மீதும் மனைவி, கணவன் மீதும் நம்பிக்கை வைக்க வேண்டும். இல்லாத பொழுது கொலையும், தற்கொலையும் தலைதுாக்கி நிற்கும். இருவரிடமும் உண்மையும், அன்பும் இல்லாதபொழுதுதான் இதுபோன்ற வன்மங்கள் ஏற்படுகின்றன.இல்லற வாழ்க்கைக்கு தனிமனித ஒழுக்கம் அவசியம். ஒருவனுக்கு ஒருத்தி என்ற தமிழ்ப்பண்பாடு மீறும் பொழுது அங்கே அமைதியான வாழ்க்கை கேள்விக்குறியாகிறது. இன்றைய சமூகத்தில் கள்ளக்காதலால் நடக்கும் கொலையும், குடும்ப வன்முறையும் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் தம்பதியர் வாழ்க்கையில் அச்சமும் அவமானமும் குடிகொள்கிறதே தவிர ஆனந்தம் அசைபோடுவதில்லை. ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் ஒழுக்கம் தவறி நடந்தால் அங்கே துன்பம் வருமே தவிர இன்பத்திற்கு ஒரு நாளும் வழியில்லை.

இல்லறம் நல்லறமாக


இல்லறம் எனும் பந்தம் நல்லறமாக சில தியாகங்களை இணையர்கள் இருவரும் செய்ய வேண்டும். நான் ஆண்... நான் என்ன வேண்டுமென்றாலும் செய்வேன் என்று கணவன் கூறக்கூடாது. மனைவியும் தான் பேசுவதே சரி என பிடிவாதம் செய்யக்கூடாது. தம்பதியர் தங்களுக்குள் இருக்கும் பிடிவாதத்தை துரத்திவிட்டு இருவரும் ஒருவராகப் பயணியுங்கள். பணத்திற்கான முக்கியத்துவத்தை விட அன்பிற்கு முக்கியத்துவம் தாருங்கள். ஒருவருக்கொருவர் உண்மையாக இருங்கள்; அன்பு செலுத்துங்கள். இணைந்து நின்று ஒருவொருக்கு ஒருவர் தோள் கொடுங்கள். இல்லறம் எனும் நல்லறத்தில்'அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கைபண்பும் பயனும் அது' எனும் வள்ளுவத்தின் வழிநின்று வாழப்பழகிக் கொண்டால் அந்த வாழ்க்கையை வரலாறு பேசும். இல்லத்தில் வசந்தம் குடிகொள்ளும்.-மு.ஜெயமணி