Sunday, March 30, 2014

நெற்றியடிக் கூற்றுகள்!

தொப்புள்கொடி உறவு !

"தொப்புள்கொடி உறவுகள் அறுந்து போகாமல் காப்பது தாய்மொழி மாத்திரமே.
பிற மொழிகள் பிழைபதற்கு; தாய் மொழி ஒன்றே வாழ்வதற்கு!
நாளை என் மொழி சாகுமானால் இன்றே நான் இறந்து விடுவேன்!"

- ருஷ்ய கவிஞர் ரசூல் கம்சதோவ்.

பொறாமை!

"பொறாமை என்பது மனத்தின் மலம்; பொறாமை என்பது மரணத்தின் கருப்பை; தன்னம்பிக்கை இழந்தவன் எவனோ அவனே பொறாமையின் பிதா;  பொறாமை என்பது தோல்வியின் தொடக்கம்!; தோல்வி என்பது பொறாமையின் முடிவு!"

- பத்மஸ்ரீ கவிஞர் வைரமுத்து

"தாயோடு அறுசுவை போம்
தந்தையோடு கல்வி போம்
சேயோடு தான் பெற்ற செல்வம் போம்
மாய வாழ்வு உற்றாருடன் போம்
உடன் பிறப்பால் தோள் வலி போம்
பொற்தாலியோடு எவையும் போம்"

- ஔவையார் 

No comments:

Post a Comment