மணிமேகலை நூலிலிருந்து:
இளமையும்
நில்லா! யாக்கையும் நில்லா!
வளவிய வான்பெறும்
செல்வமும் நில்லா!
புத்தேள்
உலகம் புதல்வரும் தாரார்
மிக்க அறமே
விழுத் துணையாவது
ஔவையார் பாடலிலிருந்து:
கொடியது கேட்கின்
வரிவடி வேலோய்
கொடிது கொடிது
வறுமை கொடிது
அதனினும்
கொடிது இளமையில் வறுமை
அதனினும்
கொடிது ஆற்றொணா கொடு நோய்
அதனினும்
கொடிது அன்பில்லா பெண்டீர் -
அதனினும்
கொடிது அவர் கையால் இன்புற உண்பதுதானே!
ஓர் தமிழ் கவிஞன்:
காலையில்
இஞ்சி கடும்பகல் சுக்கு
மாலையில்
கடுக்காய் மண்டலம் உண்டால்
கோலை ஊன்றி
குறுகி நடப்பன
காலை வீசி
குலுக்கி நடப்பனே
No comments:
Post a Comment