பட்டு வேட்டி, தாவணியுடன் ம துரையில் நடந்த ஜப்பானிய தம்பதிகளின் அசத்தல் திருமணம்..!
யூடோ நீனகா என்பவர் டோக்கியோ பல்கலைக்கழகத்தில் பி.ஹெச்டி. பட்டம் பெற்றுள்ளார். டோக்கியோவிலுள்ள 'நிகு' என்ற நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.இவருக்கு நிச்சயம் செய்யப்பட்ட பெண் நிஹாரு ஐ-ஸ்பாட்ஸ் எனும் நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.இந்நிலையில் இருவரும் தமிழ் கலாச்சாரத்தால் பெரிதும் கவரப்பட்டு,தங்களின் திருமணத்தை தமிழ் கலாச்சார வழியில் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளனர்.பெற்றோர்களும் தலையசைக்கவே,இருவருக்கும் ஜாதகம் பார்க்கப்பட்டு நல்ல நாள்,நல்ல நேரம் குறித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை சுபமுகூர்த்தத்தில் ,பெற்றோர்களும் உறவினர்களும் சூழ,'மதுரை மக்கள்' முன்னிலையில் 'ஜாம் ஜாம்' என திருமணம் நடைபெற்றது.
பந்தக்கால் நடுவதில் இருந்து,பத்திரிக்கைை,பந்தி என A to Z தமிழ் கலாசாரத்தை பிரதிபலிக்கும் விதமாக இருந்தது.விழாவில் கலந்து கொண்ட ஜப்பானிய உறவுகள் அனைவருக்கும் வேஷ்டி,சேலை,தாவணி என நம் பாரம்பரிய உடை,அதற்கேற்ப நகை,பின்னிய ஜடை, அலங்காரம் செய்த சிகை என நம் கலாசாரத்தில் மிளிர்ந்தனர்.
தங்களின் முன்னிலையில் திருமணத்தை நடத்தி வைத்த மதுரை மக்கள்,தமிழ் கலாசாரத்தின் பெருமையை எண்ணி நெகிழ்ந்தனர்.
“தொன்மை மிக்க தமிழ் கலாசார முறையில் இவர்களின் திருமணம் நடைபெற்றது மகிழ்ச்சியளிக்கிறது.அதுவும் தொன்மையான நகரமான மதுரையில் நடைபெற்றது பெருமையாக இருக்கிறது.தமிழ் மக்களின் எதையும் எதிர்பாரத அன்பும் ஆதரவும் வியப்பாக இருக்கிறது.புதுமணத் தம்பதிகளை வாழ்த்திச் சென்ற நல்ல உள்ளங்களுக்கு நன்றி" என ஜப்பானிய தம்பதிகளின் பெற்றோர்களும்,உறவினர்களும் நெகிழ்ந்தனர்.
No comments:
Post a Comment