Sunday, September 29, 2019

சுண்டல் thanks dinamalar/com

சுண்டல்

 பதிவு செய்த நாள் : செப் 30, 2019  கருத்துகள் (1)
Advertisement
 சுண்டல்
சுண்டலில் உள்ள சத்துகள்; யாரெல்லாம் சாப்பிடலாம்; சுண்டல் சாப்பிட்டால், வாய்வு கோளாறு வருமா என்பதை கூறுகிறார், உடல் எடை குறைப்பு நிபுணர், எஸ்.டி.வெங்கடேஷ்வரன்: யாருக்கெல்லாம் செரிமானக் கோளாறு இருக்கிறதோ; செரிமானத் தன்மை குறைவாக இருக்கிறதோ; புரதச் சத்தை செரிக்கக் கூடிய அமிலங்களின் சுரப்பு குறைவாக இருக்கிறதோ, அத்தகையோர், சுண்டல் சாப்பிடக் கூடாது. அதுபோல, வயது முதிர்ந்தவர்கள், சுண்டல் சாப்பிடக் கூடாது. முழங்கால் வலி, மூட்டு வலி உள்ளவர்கள், வயிறு உப்புசம் உள்ளவர்கள், வயிற்றில் வாய்வு தொல்லை உள்ளவர்கள், சுண்டல் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். சர்க்கரை நோயாளிகள், சுண்டலை மிகக் குறைந்தளவு எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், சுண்டலில் உள்ள, 'கிளைசமிக் இன்டக்ஸ்' ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை உடனடியாக அதிகரிக்கும். இதனால், வெறும் வயிற்றில், சுண்டல் சாப்பிடக் கூடாது.
சுண்டல் சாப்பிட வேண்டும் என்ற ஆசை இருந்தால், கிளைசமிக் இன்டக்ஸ் குறைவாக இருக்கும், சோயா மற்றும் ராஜ்மா சுண்டலை கொஞ்சமாக சாப்பிடலாம். சரி, வாய்வுக் கோளாறு இருக்கிறது என்பதை எப்படி அறிந்து கொள்வது என்றால், உடலில் ஆங்காங்கே குத்துவது, பிடித்துக் கொள்வது போன்ற உணர்வு இருந்தால், அறிந்து கொள்ளலாம். அதை வைத்து, வாய்வுக் கோளாறு என்பதை அறியலாம். அத்தகையோர், சுண்டல் சாப்பிட்டதும், ஒரு ஸ்பூன் பெருங்காயத் துாளை, ஒரு டம்ளர் வெந்நீரில் கலந்து குடித்தால், வாய்வுக் கோளாறில் இருந்து விடுபடலாம்.அதுபோல, சுண்டல் சாப்பிட்ட பின், நாட்டுப்பூண்டில், ஆறு பல் எடுத்து, தண்ணீரிலோ அல்லது பாலிலோ வேக வைத்து, ஆறிய பின் குடிக்கலாம். மேலும், சீரகப் பொடி, மிளகு, இஞ்சி, சுக்கு மல்லி காபி அருந்துவதால், வாய்வுக் கோளாறில் இருந்து தப்பிக்கலாம்.செரிமானக் கோளாறு உள்ளவர்களுக்கு, சுண்டல் சற்று சிரமத்தை கொடுக்கும். ஏனெனில், சுண்டலை தோலோடு சேர்த்து சாப்பிடும் போது, தோலில் உள்ள, 'பைபர்' செரிமானக் கோளாறை ஏற்படுத்தும். இதனால், வாய்வுக் கோளாறு ஏற்படும்.இதை சரி செய்ய, சுண்டலுடன் பூண்டு சேர்த்துக் கொள்ளலாம் அல்லது சுண்டலுடன் சிறிதளவு பெருங்காயத்துாள் சேர்த்து சாப்பிடலாம்.
சுண்டலை மெதுவாக சாப்பிட வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக பொறுமையுடன் மென்று சாப்பிடும் போது, சாப்பிடும் உணவு நன்றாக உள்ளிழுக்கப்படுகிறது. அதனால், வயிறு நன்றாக நிறையும். சத்துகளும் உடலில் முழுமையாக சேர்கின்றன. சுண்டலில் கார்போஹைட்ரேட், புரதச்சத்து, நார்ச்சத்து மற்றும் அத்தியாவசியமான அமினோ ஆசிட்கள் உள்ளதால், அவை உடலுக்குள் மெல்ல செல்வதால், சக்தி கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கும். இது, நல்லது!

No comments:

Post a Comment