Saturday, November 26, 2016

Posted Date : 14:42 (18/07/2016)Last updated : 10:47 (19/07/2016) 24X7 உற்சாகமாக இருக்கலாPosted Date : 14:42 (18/07/2016)Last updated : 10:47 (19/07/2016) 24X7 உற்சாகமாக இருக்கலா மா?! #MondayMotivation

24X7 உற்சாகமாக இருக்கலா

மா?! #MondayMotivation

'ன் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு நாளும் நானா செதுக்குனது’ என பன்ச் அடிக்கும் பலரும், பல நொடிகளை, நாட்களை உபயோகமாகப் பயன்படுத்தாமல்தான் இருக்கிறோம். உபயோகமாகச் செலவழிக்கப்படும் இந்த நிமிடம், அடுத்த நிமிடத்தைப் பயனுள்ளதாக்குகிறது. ஒரு நாளில் 24 மணி நேரம் என ஒரு வாரத்தில் 168 மணி நேரம் நம் கையில் இருக்கிறது. இவற்றை எப்படி சிறப்பாக, செயல்திறனோடு செலவழிப்பது?

இந்த 168 மணி நேரத்தில் 49 மணி நேரத்தைக் கழித்து விடுங்கள். ஒரு நாளைக்கு ஒரு மனிதன் சராசரியாக 7 மணி நேரம் கட்டாயம் தூங்க வேண்டும்; இல்லையென்றால் அவனால் சரியாக வேலை செய்ய முடியாது என்கிறது மருத்துவ  ஆய்வு. அதனால் உங்களுக்கு அளிக்கப்பட்ட 168 மணி நேரத்தில் 49 மணி நேரத்தைக் கழித்து விடுங்கள். இப்போது உங்களிடம் மீதமுள்ளது 119 மணி நேரம்.

நீங்கள் ஏதோ ஓர் இடத்தில் வேலை செய்பவராக இருந்தால், ஒரு வாரத்தில் ஒரு நாளைக்கு 8 மணி நேரம் என்ற அடிப்படையில் 56 மணி நேரம் வேலை செய்கிறீர்கள். நம்மில் பலர் புத்திசாலித்தனமாக யோசித்து, "வார இறுதி நாட்கள் எனக்கு விடுமுறைதானே.. அதில் என்ன நான் வேலை செய்கிறேன்!" என்று கூறுவீர்கள். ஆனால், வார இறுதிகளிலும் மடிக்கணினி முன் அமர்ந்து எக்ஸ்.எல் ஃபைல்களையும், பவர்பாயிண்ட் தயாரிப்புகளையும் காபி கோப்பையோடு எடிட் செய்வது... வார இறுதிக்கான வேலை இல்லை. இதை சிலர் விரும்பிச் செய்வார்கள்... சிலர் வேறு வழியில்லாமல் செய்வார்கள். ஆக, எப்படியோ வாரத்தில் 56 மணி நேரம் வேலைக்காகப் போய்விட்டது. இப்போது மீதம் 63 மணி நேரம் கையில் இருக்கிறது.

   
இந்த 63 மணி நேரத்தில் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத அலுவலகப் பயணம், போக்குவரத்து நெரிசல், பெட்ரோல் பங்க் காத்திருப்பு போன்ற பல விஷயங்கள் ஒரு வாரத்தில் 13 மணி நேரத்தை ஆக்கிரமிக்கின்றன. குழந்தைகள் பாரமரிப்பு, வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்வது, உடற்பயிற்சி என 20 மணி நேரம் செலவாகிறது. இது போக, நாளொன்றுக்கு ’idle' எனப்படும் அமைதி மனநிலையில் (சும்மா இருக்கிறதைத்தான் அப்படிச் சொல்றோம் மக்களே) ஒரு நாளைக்கு 1 மணி நேரத்தைச் செலவழிக்கிறோம். இதனை நாம் மொத்தமாகச்  செலவழிப்பதில்லை. ஒரு மணி நேர இடைவெளியில் 10 நிமிடம்,  5 நிமிடம் என செலவாவது ஒரு வாரத்தில் 7 மணி நேரமாக உருவெடுக்கிறது.
ஆக, இப்படியெல்லாம் நமக்காக, பிறருக்காக, அலுவலகத்துக்காக என செலவழித்த பிறகு... நமக்கே நமக்கென்று  கையில் முழுமையாக 23 மணி நேரம் மீதமிருக்கிறது. இதைத் திட்டமிட்டுச் செலவழித்து, மனதில் புத்துணர்ச்சி ஏற்றிக் கொள்ளாமல்தான், ‘நேரமே பத்தல...’ என்று அலுத்துக் கொண்டிருக்கிறோம். இந்த 23 மணி நேரம் கிட்டதட்ட ஒரு முழு நாள். இந்த முழு நாளில் நாம் செய்யும் செயல்கள், வாரத்தின் மற்ற 6 நாட்களுக்குமான சார்ஜ் ஏற்றிக் கொடுக்கும். ஆனால், அதை அப்படி பயனுள்ளதாக ஆக்காமல், சமூக வலைத்தளங்களில் அதிக நேரம் உலாவல், சம்மந்தமில்லா செயல்கள் என வீணடிக்கிறோம்.
சமூக வலைத்தளங்களில் எனது நோட்டிஃபிகேஷன் பார்க்க செல்கிறேன்; அல்லது ஸ்டேட்டஸ் அப்டேட் செய்யச் செல்கிறேன் என்று களமிறங்கினால், நம்மையறியாமலே, கையிலிருக்கும் 23 மணி நேரத்தில் 14 மணி நேரத்தை செலவழித்துவிடுகிறோம். மீதமுள்ளது 9 மணி நேரம். சினிமா, சீரியல், வார இறுதி விண்டோ ஷாப்பிங் ஆகியவை போட்டி போட்டு அதைக் கபளீகரம் செய்துவிடும்.
எல்லாம் சரிதான்... நேரத்தை எப்படிதான் நம்ம கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது? சுயக்கட்டுப்பாடு மிக முக்கியம். அதோடு பின்வரும் சங்கதிகளையும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்..!
1. உங்கள் வேலை நேரமான 56 மணி நேரத்திலேயே, அடுத்த வாரத்துக்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ளுங்கள். உங்கள் வார இறுதிகளை அதற்காக காவு கொடுக்காதீர்கள். உங்கள் பவர்பாயிண்ட் தயாரிப்புகளையும், மடிக்கணினியையும் தள்ளி வையுங்கள்.குழந்தைகளோடு நேரத்தைச் செலவிடுங்கள். அது ஒரு வித அமைதியான சூழலையும் அடுத்த வாரத்திற்கான புத்துணர்ச்சியையும் தரும்.

2. சமூக வலைத்தள உலாவல் உங்களை ஆக்ரமிக்கும் 14 மணி நேரத்தைக் குறைக்க முயற்சியுங்கள். அருகில் இருப்பவருடன் ஆன்லைனில் சாட் செய்யாமல் நேரில் சந்தியுங்கள். அப்போது உங்கள் மனநிலையும் அமைதியாகும். அதிக நேரம் கணினி திரையில் கண் விழித்து உட்கார வேண்டிய அவசியம் இருக்காது..

3. உங்கள் திறமையை வளர்த்துக் கொள்ள அந்த நேரத்தை மூலதனமாக்குங்கள். ஒரு மொழி, நடனம், இசைக் கருவி மீட்டல் என ஏதேனும் ஒன்றைக் கற்றுக்கொள்ளலாம். ஒருவேளை உங்களுக்கு இதுபோன்ற விஷயங்களில் நாட்டம் இல்லை என்றால், உங்களது எதிர்காலத்தையோ அல்லது குறைந்தபட்சம் அடுத்த 168 மணிநேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதையாவது ஆற அமர நிதானமாகத் திட்டமிடுங்கள்.

வேலை - குடும்பம் சரியாக சமாளிக்கிறீர்களா? #DailyMotivation

வேலை - குடும்பம் சரியாக சமாளிக்கிறீர்களா? #DailyMotivation

இன்று வெள்ளிக்கிழமை..நாளை காலை எழுந்திருக்கும் போது ஆபீஸ் ஃபைல்களோடும், கணினியில் எக்ஸ்.எல் ஷீட்களோடும் ஆரம்பிக்கிறதா உங்கள் வார இறுதி நாட்கள். இந்த கட்டுரை உங்களுக்கானது தான். வாழ்க்கை - வேலை இரண்டுமே முக்கியமான விஷயங்கள்தான். ஆனால், வேலைக்கு அதிக முக்கியத்துவம் அளித்துக் குடும்பத்தைக் கவனிக்காமலோ அல்லது குடும்பத்துக்கு முக்கியத்துவம் அளித்து வேலையைக் கவனிக்காமல் போனாலோ சிரமம்தான். இதனை சமாளிக்க எளிமையான 5 வழிகள் இதோ...

1. திட்டமிடுங்கள்!

உங்களது ஒருநாளை அட்டவணைப்படுத்தி திட்டமிடுங்கள். ஒருநாளில் எத்தனை மணி நேரம் அலுவலக வேலைகளைக் கவனிக்க வேண்டும், எவ்வளவு நேரம் குடும்பத்தோடு செலவிட வேண்டும் என்பதைத் திட்டமிட்டால், உங்களது வேலை மற்றும் குடும்பத்துடனான நேரம் என்பது சமநிலையில் அமையும். இது அப்படியே சரியாக ஃபாளோ செய்ய முடியுமா? என்றால் இல்லை என்பது தான் பதில் ஆனால் இந்த நேரத்தை ஓரளவுக்கு பேலன்ஸ் செய்தாலே உங்கள் வார இறுதி நாட்கள் ஹாப்பி தான்.

2.நல்ல தருணங்களை இழக்காதீர்கள்!

உங்கள் வேலைதான் முக்கியம். அதுதான் உங்கள் குடும்பத்தை நடத்த உதவுகிறது. இதற்காக வேலையே கதி என்று இருந்து விடாதீர்கள் ஊரில் நடக்கும் திருவிழா போன்ற விழாக்களுக்கோ அல்லது உங்கள் உறவினர் கள் வீட்டு நிகழ்ச்சிகளுக்கோ அலுவலக வேலைகளை முன்னரே திட்டமிட்டு முடித்துவிட்டு, அந்த நிகழ்ச்சிகளுக்குத் தவறாமல் சென்று வாருங்கள். இது உங்களை மீண்டும் புத்துணர்ச்சியோடும், அதிக பொறுப்போடும் வேலையை தொடரவும் உதவும்.
3. அலுவலகம்- வீடு இணைக்காதீர்கள்!

அலுவலகத்தில் வேலை பார்க்கும் நேரத்தில் ஒருசிலர் தங்கள் வீட்டுக்கு போனில் பேசிக்கொண்டும்; வீட்டில், குழந்தைகளுடன் விளையாடு வதற்கு பதிலாக லேப்-டாப்பை எடுத்துவைத்து அலுவலக வேலை களையும் பார்த்துக் கொண்டு இருப்பார்கள்.இப்படி ஒன்றோடு ஒன்றை கலப்பதை நிறுத்தினாலே உங்கள் குடும்பம் - வேலை சமநிலை அடைந்து விடும். அலுவலகத்தில் குடும்பம் பற்றிய நினைப்பு வேண்டாம்; வீட்டுக்கு வந்தவுடன் அலுவலகம் பற்றிய சிந்தனை வேண்டாம். இரண்டையும் ஒன்றோடு ஒன்றை கலக்காமல் இருந்தாலே போதும்.

 
வொர்க்கஹாலிக்காக இருக்காதீர்கள்!
சிலர் எப்போதும் குடிபோதையில் இருக்கிற மாதிரி, வேலை, வேலை என்று வேலை போதையில் இருப் பார்கள். இப்படி வொர்க் ஹாலிக்காக இருப்பவர்கள்,  அலுவலக வேலையை அலுவலகத்தில் மாய்ந்து மாய்ந்து செய்தது போதாதென்று, அந்த வேலையை வீட்டுக்கு எடுத்துக் கொண்டுபோய் செய்வார்கள். அந்த நேரத்தில் குழந்தைகள் விளையாட அழைத்தால், வள்ளென்று விழுவார் கள்.  இந்த பழக்கத்தை மட்டும் கைவிடுங்கள் உங்கள் வொர்க்-லைஃப் பேலன்ஸ் தானாக சீராகும்.
5. மிஸ்டர் கூலாக இருங்கள்:
வீட்டில் உள்ள கோபத்தை அலுவலகத்திலோ அல்லது அலுவலகத்தில் ஏற்பட்ட மனக் கவலையை வீட்டிலோ காட்டா தீர்கள். வீட்டில் நுழையும் முன்பு செருப்பைக் கழற்றி வைக்கும் போதே, அலுவலகம் தொடர்பான அதிருப்தியான எண்ணங்களையும் மறந்து விடுங்கள். அதேபோல, வீட்டில் இருக்கும் பிரச்னையை அலுவலகத்தில் ஸ்வைப்பர் கார்டினைக் காட்டி வருகைப்பதிவை பதியும் போதே, மனதிலிருந்து அழித்துவிடுங்கள். இது இரண்டும் உங்களை கூலாக வைத்திருக்கும்.

Last updated : 17:28 (08/08/2016) திங்கட்கிழமை காலை இந்த 5 விஷயங்களை செய்யலாமா? #MondayMotivation


திங்கட்கிழமை காலை இந்த 5 விஷயங்களை செய்யலாமா? #MondayMotivation

ஞாயிறு இரவு முதலே ஃபேஸ்புக், வாட்ஸ் அப் என அனைத்து சமூக வலைதளங்களிலும் ''நாளைக்கு திங்கட்கிழமை, என்ற போஸ்ட்கள் தான் நிறைந்து காணப்படும். அவை உங்களை சோர்வடைய செய்யாமல் இந்த வாரத்தை 'தெறி'யாக துவக்க இந்த 5 விஷயங்களை செய்யலாமா?
1. எதிர்மறையாக யோசிக்காதீர்கள்!
ஞாயிறு இரவிலிருந்தே உங்களை சோர்வாக்கும் சமூக வலைதளப் பதிவு துவங்கி காலையில் நீங்கள் அலாரத்தை இன்னும் 5 நிமிடம் தாமதமாக்குவது வரை அனைத்துமே உங்களை சோர்வாக்கும் விஷயங்கள் தான். எதிர்மறையாக எதையும் யோசிக்காதீர்கள். யாருடனும் வாக்குவாதம் செய்யாதீர்கள். சிரித்த முகத்தோடு அன்றைய நாளை துவக்குங்கள்.
2.  கோபம் தவிருங்கள்!
அலுவலகத்திற்குள் காலை வந்தவுடன், வார இறுதியில் நடந்த தவறுக்காகவோ, காலையில் செய்ய வேண்டிய திட்டங்கள் ஏதாவது சற்று தாமதமானாலோ அதற்காக கோபமோ, எரிச்சலோ அடையாதீர்கள். அது அந்த வாரம் முழுவதையும் ஆக்கிரமித்துவிடும். அதனால் கூடியவரை கோபம் கொள்ளாமல் கூலாக அணுகுங்கள். பிரச்னைகளுக்கான தீர்வுகளை கண்டறிந்து அதனை செயல்படுத்துங்கள்.
3. உற்சாகமாக இருங்கள்!
வேலையில் மிகவும் உற்சாகமாக இருங்கள். உங்கள் அருகில் உள்ளவர் உங்களைப் பார்த்து இன்ஃப்ளுயன்ஸ் ஆகுமாறு நடந்து கொள்ளுங்கள். நீங்கள் சோர்வாக இருந்தால் அது அவரையும் தொற்றிக்கொண்டு அவரும் அப்படியே இருந்து விடுவார். இன்றைய நாளை நீங்கள் அதிக உற்சாகத்துடன் துவக்கும்போது அனைவரும் அதே உத்வேகத்தில் வேலை செய்யத் துவங்கி விடுவார்கள்.
4. புத்தகம் படியுங்கள்!
காலை செய்தித்தாள் துவங்கி உங்களது அலுவலக ஃபைல்கள் வரை கணினி முன்பே அதிக நேரத்தை செலவிடுபவராக இருந்தால், கொஞ்சம் Ctrl + Alt + Del செய்யுங்கள். கண்களுக்கு அழுத்தம் தராமல் ரிலாக்ஸாக ஆஃப் லைனில் வேலைகளை செய்யுங்கள். குறைந்தபட்சம் 5 மணி நேரம் கணினிக்கு விடை கொடுங்கள். மனதுக்கு பிடித்த புத்தகங்களை வாசிக்கலாம். இந்த வழக்கம் உங்களது அன்றைய தினத்தை உற்சாகமாக வைத்திருக்கும்.
5. டாப் 3 டாஸ்க்:
3 கிமீ நடைப் பயணம், பார்க்கும் அனைவரிடமும் சிரித்த முகத்துடன் காலை வணக்கம், 20 நிமிட உடற்பயிற்சி இது மூன்றையும் கட்டாயம் செய்யத் தவறாதீர்கள். அப்புறம் என்ன, உங்கள் திங்கட் கிழமை கெத்து காட்டும் நாளாக அமையும்

வெற்றி வேண்டுமா? இந்த 5 மந்திரங்களை மறக்கவேண்டாம்! #MorningMotivation vikatan

வெற்றி வேண்டுமா? இந்த 5 மந்திரங்களை மறக்கவேண்டாம்! #MorningMotivation


  தன்னம்பிக்கை, சுய முயற்சி, முறையான பயிற்சி,  பணியில் ஒழுக்கம் இந்த நான்கும் இருந்தால் நிச்சயம் எந்தவொரு விஷயமும் சாத்தியமானதே. நம் வாழ்க்கைக்கான ரோல் மாடல்களை இணையத்தில் தேட வேண்டும் என்ற அவசியம் இல்லை, நம் ஊரில், நம் அருகில் எவ்வளவோ  பேர் உதாரண புருஷனாக வாழ்ந்துகாட்டியிருக்கிறார்கள். ஆனால் நாம் மட்டும் தான் சின்ன சின்ன தோல்விகளை கூட சந்திக்க திராணியில்லாமல் முடங்கிப்போய்  விடுகிறோம்.  சோர்வை விட்டொழித்து மீண்டும் மீண்டும் முயற்சி செய்து,  நீங்கள் விரும்பிய விஷயத்தை அடைய ஐந்து  மந்திரங்களை மனதில்  பதிய வையுங்கள். 


1. இடர்பாடுகள் தான் வாய்ப்புகள்  : -
எதைச் செய்தால் வெற்றி கிடைக்கும் என கண்டுபிடிப்பதை விட, எதைச் செய்தால் வெற்றி கிடைக்காது என அறிவது புத்திசாலித்தனம். மின்சாரம் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த எடிசன் கிட்டத்தட்ட பத்தாயிரம் முறை தோல்விகளை சந்தித்தாராம். அவரது நண்பர் ஒரு நாள் அவரைச் சந்தித்தார். ஏனப்பா ? இவ்வளவு முயற்சி எதற்கு? எல்லாமே வீண் தானே, அதற்கு உருப்படியாக வேறு எதாவது செய்யலாமே என அட்வைஸ் செய்ய, " என்ன செய்தால் மின்சாரம் வரும் என்பதை மட்டும் தான் இன்னும் கண்டுபிடிக்கவில்லை, ஆனால் இந்த பத்தாயிரம் மாதிரிகளில் நிச்சயம் மின்சாரம் வராது என கண்டுபிடித்திருக்கிறேன். ஆக நான் பத்தாயிரம் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியிருக்கிறேன்" என்றாராம் எடிசன். அது தான் ஆட்டிடியூட். தோல்வி என்பதன் அர்த்தத்தை  வெற்றிக்கு தவறான வழியை கண்டறிந்துள்ளோம் என புரிந்து கொள்ளுங்கள். அவ்வளவு தான்.

2.  என் இலக்கை நானே தீர்மானிப்பேன் :- 
உங்கள்  வாழ்க்கையில் எவ்வளவு உயரத்தை  எட்ட வேண்டும் என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். வெற்றியோ, தோல்வியோ எல்லாத்துக்கும் நீங்கள் தான் பொறுப்பு. சாக்கு போக்கு சொல்வதை விட்டுவிட்டு உங்கள் இலக்கை தீர்மானித்து அதற்கான கதை, திரைக்கதை எல்லாம் பக்காவாக தயார் செய்து உங்களை நேர்மையாக  இயக்குங்கள்; உங்கள் வாழ்க்கை  நிச்சயம் வெற்றி அடையும். 

3.  நல்ல எண்ணங்களே நனவாகும் ; -
எண்ணம் போல்தான் வாழ்வு என்பதை முன்னோர்களை பல விதங்களில் சொல்லியிருக்கிறார்கள். அது நிஜம்.  பாசிட்டிவ் மைண்ட்செட்  தான்  'ஸ்பீடு'  ஊக்க மருந்து. பல  சமயங்களில் பாசிட்டிவ் மைண்ட்செட்டில் எக்கச்சக்க சாதனைகளை பலர் புரிந்திருக்கிறார்கள். எனவே உங்களை தயவு செய்து நம்புங்கள். நீங்கள் வெற்றி தேவதையின் கைகளில் தவழத் தகுதியானவர் என்பதை நினைவில் வையுங்கள். 

4.  நேரமே வரம் : -
'நன்றே செய் அதை இன்றே செய்' இதையும் நம் முன்னோர்கள் நமக்கு சொல்லிவிட்டு சென்றது தான்.  நல்ல விஷயங்களை செய்ய எப்போதும் நேரம், காலம் பார்க்காதீர்கள். எந்தவொரு முடிவையும் விரைவாக எடுத்துச் செயல்படுங்கள். ஒரு விஷயத்தை புதிதாக முயற்சித்து தோல்வியடைந்தால் கூட பரவாயில்லை, முயற்சிக்காமல் வெறுமனே தரையை  தேய்க்க வேண்டாம். இந்த உலகத்தில் எதையும் யார் வேண்டுமானாலும் வாங்கி விட முடியம், ஆனால் நேரம் மட்டும் தான் சாதி, மதம், பணக்காரன், ஏழை என பாகுபாடு இல்லாமல் எல்லாருக்கும் சமமாக இருக்கிறது.நேரத்தை சரியாக பயன்படுத்துபவனே வெற்றியாளன் ஆகிறான்.

5. எதையும் கவனமாக தேர்ந்தெடுங்கள் :- 
எந்தவொரு விஷயத்தையும் தேர்ந்தெடுப்பதில் மிகவும் கவனம் தேவை. நம்மால் தான் எதுவும் சாத்தியமே என நடுக்கடலில் குதிப்பதோ, பத்தாவது பெயிலாகி விட்டு மருத்துவ கல்லூரி வாசலில் நிற்பது போன்ற அபத்தங்களை செய்துவிடக் கூடாது. நீங்கள் எதுவாக விரும்பினாலும், அதன் பின் உள்ள சாதக பாதக அம்சங்களை ஆராய வேண்டும்.  வெற்றிக்கான வழியை பக்காவாக ஸ்க்ரிப்ட் செய்ய  வேண்டும். அதன் பின் தான்  களத்தில் இறங்க வேண்டும்.  இப்போது, இந்த ஐந்து  விஷயங்களை ஒன்ஸ்மோர் படியுங்கள். 
மகிழ்ச்சி. 

1 குழந்தைக்கு தினமும் சொல்லவேண்டிய 8 மந்திரங்கள்! #ChildCare


#INDvsENG - இங்கிலாந்து 283 ரன்களுக்கு ஆல்-அவுட்
#INDvsENG - இங்கிலாந்து 283 ரன்களுக்கு ஆல்-அவுட்
சிங்கம்-3 'முதல்முறையாக' பாடல் டீசர்!
சிங்கம்-3 'முதல்முறையாக' பாடல் டீசர்!
'ஃபிடல் காஸ்ட்ரோ ஒரு சர்வாதிகாரி' - ட்ரம்ப்
'ஃபிடல் காஸ்ட்ரோ ஒரு சர்வாதிகாரி' - ட்ரம்ப்
ஹாங்காங் ஓபன் பேட்மின்டன்: பி.வி. சிந்து, சமீர்வர்மா இறுதிசுற்றுக்கு முன்னேற்றம்
ஹாங்காங் ஓபன் பேட்மின்டன்: பி.வி. சிந்து, சமீர்வர்மா இறுதிசுற்றுக்கு முன்னேற்றம்
ஒற்றை செருப்புடன் வந்த மத்திய அமைச்சர்!
ஒற்றை செருப்புடன் வந்த மத்திய அமைச்சர்!
அதிபர் ஆவாரா ட்ரம்ப்? அமெரிக்காவில் மறுவாக்கு எண்ணிக்கை!
அதிபர் ஆவாரா ட்ரம்ப்? அமெரிக்காவில் மறுவாக்கு எண்ணிக்கை!
நேரடி பணப் பரிமாற்றத்தை கோவா முதலில் கைவிடும்- பாரிக்கர்
நேரடி பணப் பரிமாற்றத்தை கோவா முதலில் கைவிடும்- பாரிக்கர்
முதல்நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 268/8
முதல்நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 268/8
நூறு ரூபாய் லஞ்சம் வாங்கிய காவலர்கள் சஸ்பெண்ட்
நூறு ரூபாய் லஞ்சம் வாங்கிய காவலர்கள் சஸ்பெண்ட்
காஷ்மீர் குடிசை பகுதியில் தீ விபத்து
காஷ்மீர் குடிசை பகுதியில் தீ விபத்து
#INDvsENG - இங்கிலாந்து 283 ரன்களுக்கு ஆல்-அவுட்
#INDvsENG - இங்கிலாந்து 283 ரன்களுக்கு ஆல்-அவுட்
சிங்கம்-3 'முதல்முறையாக' பாடல் டீசர்!
சிங்கம்-3 'முதல்முறையாக' பாடல் டீசர்!
'ஃபிடல் காஸ்ட்ரோ ஒரு சர்வாதிகாரி' - ட்ரம்ப்
'ஃபிடல் காஸ்ட்ரோ ஒரு சர்வாதிகாரி' - ட்ரம்ப்
ஹாங்காங் ஓபன் பேட்மின்டன்: பி.வி. சிந்து, சமீர்வர்மா இறுதிசுற்றுக்கு முன்னேற்றம்
ஹாங்காங் ஓபன் பேட்மின்டன்: பி.வி. சிந்து, சமீர்வர்மா இறுதிசுற்றுக்கு முன்னேற்றம்
ஒற்றை செருப்புடன் வந்த மத்திய அமைச்சர்!
ஒற்றை செருப்புடன் வந்த மத்திய அமைச்சர்!
அதிபர் ஆவாரா ட்ரம்ப்? அமெரிக்காவில் மறுவாக்கு எண்ணிக்கை!
அதிபர் ஆவாரா ட்ரம்ப்? அமெரிக்காவில் மறுவாக்கு எண்ணிக்கை!
நேரடி பணப் பரிமாற்றத்தை கோவா முதலில் கைவிடும்- பாரிக்கர்
நேரடி பணப் பரிமாற்றத்தை கோவா முதலில் கைவிடும்- பாரிக்கர்
முதல்நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 268/8
முதல்நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 268/8
நூறு ரூபாய் லஞ்சம் வாங்கிய காவலர்கள் சஸ்பெண்ட்
நூறு ரூபாய் லஞ்சம் வாங்கிய காவலர்கள் சஸ்பெண்ட்
காஷ்மீர் குடிசை பகுதியில் தீ விபத்து
காஷ்மீர் குடிசை பகுதியில் தீ விபத்து

குழந்தைக்கு தினமும் சொல்லவேண்டிய 8 மந்திரங்கள்! #ChildCare

குழந்தைகளைத் தட்டிக் கொடுத்து; `ஷொட்டு' கொடுத்து வளர்க்க வேண்டும். பாராட்டி, ஊக்குவித்து வளர்க்கப்படும் குழந்தை தன்னம்பிக்கையோடு வளர்கிறது; தனித்துவம் பெறுகிறது. எதிர்காலத்தில் சாதனை படைக்கிறது. மாறாக, எப்போதும் குறை சொல்லி, தலையில் கொட்டி வளர்ப்பது, குழந்தைகளைக் குறுகவைத்துவிடுகிறது. 
``அந்த பையனை பாரு... எப்பவும் ஃபர்ஸ்ட் ரேங்க். நீயும் இருக்கியே!”, ``எப்பப் பாரு விளையாட்டு... நீயெல்லாம் எங்கே முன்னுக்கு வரப்போறே?” இப்படி எப்போதும் அடுத்த குழந்தைகளோடு ஒப்பிட்டு, மட்டம் தட்டி, குறைகூறி, குற்றம் சொல்லிச் சொல்லி குழந்தைகளின் தனித்திறமையை மங்கிப்போகச் செய்துவிடுகிறார்கள் பலர். குழந்தைகளின் இயல்பான ஈடுபாட்டில் இருந்து வேறெங்கோ திசைதிருப்பிவிடுகிறார்கள். அதனாலேயே குழந்தைகள் பிடிவாதக்காரர்களாக, தனித்திறமையோ, தன்னம்பிக்கையோ இல்லாதவர்களாக வளர்கிறார்கள். நம்மைப்போலத்தான் குழந்தைகளும். நம் எல்லோருக்குமே ஏதோ ஓர் அங்கீகாரம் தேவையாக இருக்கிறது. ஒரு சின்ன பாராட்டு, மலையளவு தெம்பைத் தந்துவிடும்; அதுவேதான் குழந்தைகளுக்கும். 
குழந்தைகளிடம் நாம் பேசவேண்டியவை, பேசக் கூடாதவை, அவர்கள் பயன்படுத்தும் பொருட்களில் கவனமாக இருத்தல் எனச் சில விஷயங்கள் இருக்கின்றன. அதை முறையாகக் கடைப்பிடித்தாலே போதும்... குழந்தைகள் உங்களை மட்டுமல்ல, தங்களையும் உணர்ந்துகொள்வார்கள்.
குழந்தைகளுக்கு அன்றாடம் சொல்லவேண்டிய எட்டு விஷயங்கள் இங்கே... 
1. இப்படித்தான் நடந்துக்கணும் செல்லம்!
விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை பெரியவர்களுக்கே இருப்பதில்லை. குழந்தைகளுக்கு இருந்தால் அது அபூர்வம், பாராட்டப்படவேண்டிய விஷயம் அல்லவா! அம்மா தன் எட்டு வயது மகளோடு நகரப் பேருந்தில் செல்கிறார். இருவருக்கும் உட்கார இருக்கை கிடைத்துவிடுகிறது. அடுத்த நிறுத்தத்தில், ஒரு தந்தை தன் நான்கு வயது மகனோடு பேருந்தில் ஏறுகிறார். கூட்ட நெரிசல். நிற்பதற்கே தள்ளாடுகிறான் அந்தச் சிறுவன். அப்போது, அந்தச் சிறுமி, “இங்கே வந்து உட்காருப்பா” என்று நகர்ந்து, தன் இருக்கையில் கொஞ்சம் இடம் கொடுக்கிறாள். பேருந்தில் இருந்து இறங்கியதும் அந்தத் தாய், மகளின் தலையை வருடி, “இப்படித்தான் நடந்துக்கணும் செல்லம்!” என்கிறார். குழந்தைகளின் நடத்தையில் நல்ல விஷயங்கள் தென்படும்போது சொல்கிற இந்த வார்த்தைகள் அவர்களை உற்சாகம் கொள்ளவைப்பவை; நன்னடத்தைப் பக்கம் அவர்களைத் திசை திருப்புபவை.  
2. ரொம்ப சந்தோஷமா இருக்குடா பட்டு! 
குழந்தை மாதாந்திரத் தேர்வில் நல்ல மதிப்பெண் வாங்கியதாக இருக்கட்டும்; பள்ளி ஃபுட்பால் போட்டியில் கலந்துகொள்ள பெயரைக் கொடுத்துவிட்டு வந்ததாக இருக்கட்டும்; அவ்வளவு ஏன்... பிரேயரில் அன்றையச் செய்திகளை வாசித்ததாகவே இருக்கட்டும்... “ரொம்ப சந்தோஷமா இருக்குடா பட்டு!” என மனமாரச் சொல்லுங்களேன். இது வெறும் வாசகம் அல்ல; அவர்களுக்குத் தங்கள் மேலான மதிப்பைக் கூட்டும் மாமந்திரம். தொடர்ந்து, இதுபோலப் பல செயல்களில் ஈடுபட வேண்டும் என்கிற உத்வேகம் அவர்களுக்கு எழும்.  
3. உன்னை நினைச்சு ரொம்பப் பெருமைப்படுறேன்!
“அப்பா, டிராயிங் போட்டியில எனக்கு இரண்டாவது பரிசு” என்று வந்து நிற்கிறது குழந்தை. பள்ளி, டியூஷன், ஹோம்வொர்க்... என அன்றாட வேலை பளுக்களைத் தாண்டி குழந்தையின் தனித் திறமைக்குக் கிடைத்த அங்கீகாரம் அது. அப்போது மறக்காமல், “உன்னை நினைச்சு ரொம்பப் பெருமைப்படுறேன் கண்ணா!” என்று நல்ல வார்த்தைகளைச் சொல்லிப் பாராட்ட வேண்டும். ஒரு நல்ல செயலைச் செய்து முடிக்கும்போது அவர்களுக்கு இது தேவையாக இருக்கிறது. 
4. உன்னால மட்டும்தான்டா இது முடியும்! 
எல்லா வேலைகளையும் எல்லோராலும் சிறப்பாகச் செய்ய முடியாது. ஆளுமைப் பண்போ, விளையாட்டில் சூரத்தனமோ, ஞாபகத்திறனில் அபாரத் தன்மையோ... ஏதோ ஒரு ஸ்பெஷல் அம்சம் குழந்தையிடம் இருக்கலாம். அப்படி ஒரு காரியத்தை அவர்கள் செய்து முடிக்கும்போது, ``உன்னால மட்டும்தான்டா இது முடியும்” எனச் சொல்லிப் பாராட்டுவது, தங்கள் தனித்தன்மையே பலம் என்பதை அவர்கள் உணர்ந்துகொள்ள உதவும். 
5. நான் உன்னை முழுமனசோட நம்புறேன்!
நம்பிக்கை ஏற்படுத்தும் தாக்கம் அபாரமானது. குழந்தையை மனதார நம்புங்கள். அதை அவர்களிடம் தெரிவிக்கவும் செய்யுங்கள். நம்மைப் பெற்றோர் நம்புகிறார்கள் என்கிற எண்ணத்திலேயே தவறு செய்யத் துணிய மாட்டார்கள். நம்பிக்கை என்ற அடித்தளத்தை இடுவது குழந்தைகளை நேர்மையான மனிதனாக வளர்க்கும். 
6. இதை நீ செய்வேங்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு! 
தயக்கம் பல நேரங்களில் பெரிய தடை; ஒரு நல்ல தொடக்கத்தையே முடக்கிப்போட்டுவிடும் ஆற்றல் அதற்கு உண்டு. புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்ளத் தொடங்கும்போது... அது மியூஸிக் கிளாஸோ, கராத்தே பயிற்சியோ, நீச்சலோ... குழந்தை தயங்கினால், அதை உடைக்க வேண்டும். ``இதை நீ செய்வேங்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு!” போன்ற வாசகம், அவர்களுக்குத் தாங்கள் எவ்வளவு மதிப்புக்குரியவர்கள், தன் மேல் பெற்றோர் எவ்வளவு மதிப்பு வைத்திருக்கிறார்கள் என்பதை உணர்த்தும். 
7. இதை செஞ்சு முடிச்சிடுவேன்னு எனக்குத் தெரியும்! 
`குருவி தலையில் பனங்காயை வைப்பதுபோல...’ என ஒரு பழைய பழமொழி உண்டு. இன்றைய பிள்ளைகளின் பாடச்சுமை என்பது அப்படித்தான். இந்தச் சூழலில் குழந்தைகள் செய்கிற ஒவ்வொரு செயலையும் பாராட்டி, அவர்களை ஊக்குவிப்பது மிக அவசியம். இரவு 9 மணி வரை படித்துவிட்டு, குழந்தை “அம்மா... நாளை டெஸ்ட்டுக்கு ரெடியாயிட்டேம்மா!” என்று சொல்கிறது. அப்போது, “வெரிகுட்! நீ படிச்சு முடிச்சிடுவேன்னு எனக்கு நல்லாத் தெரியும்!” என்று அவர்கள் ஒருபோதும் நம்பிக்கை இழக்க முடியாதபடிக்கு சொல்லி உற்சாகப்படுத்தவேண்டியது மிக அவசியம். 




8. இதை மறக்கவே மாட்டேன். ரொம்ப நன்றிடா செல்லம்! 
பிறந்த நாள், திருமண நாள் போல குழந்தைகளுக்கும் சில தினங்கள் மறக்க முடியாதவையாக இருக்கும். ஓட்டப் பந்தயத்தில் முதலாவதாக வந்த தினம், செஸ் போட்டியில் சாதனை படைத்த நாள், பரீட்சையில் நல்ல மதிப்பெண் பெற்ற ரிசல்ட் வந்த தினம்... எதுவாகவும் இருக்கட்டுமே! அதைக் குறித்து வைத்திருந்து, குழந்தைகளிடம் அதைப் பகிர்ந்துகொள்வதை வழக்கமாக வைத்துக்கொள்வது நல்லது. “இதை மறக்கவே மாட்டேன். ரொம்ப நன்றிடா செல்லம்!” என்கிற வாசகம், அந்த நாளை அவர்களுக்குத் தனிச்சிறப்புள்ளதாக மாற்றிவிடும்.