Respond to this post by replying above this line New post on Tamil and Vedas

கூஜா, குடை, தயிர்சாதம், ஊறுகாய் பயணம் (Post No.5674)
by Tamil and Vedas
Written by London Swaminathanswami_48@yahoo.comDate: 18 November 2018GMT Time uploaded in London –9-43 am
Post No. 5674Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blogநூறு வருஷங்களுக்கு முன்னால், யாத்திரை போகும் மக்கள், கூஜாவில் தண்ணீர், கையில் குடை, படுக்கை, பெட்டி, கட்டுச் சாதம் , ஊறுகாய், மாவடு, மோர் மிளகாய், கைவிளக்கு முதலியன கொண்டு செல்வர். பின்னர் டார்ச் லைட், தண்ணீர் பாட்டில் என்று காலம் மாறியது. இப்போதோ கிரெடிக் கார்டு அல்லது பணம் + மொபைல் போன் இருந்தால் போதும், மீதி எல்லாம் ஆங்காங்கே வாங்கிக் கொள்ளலாம் என்றாகி விட்டது. ஆயினும் அந்தக் காலத்தில் மக்கள் என்ன செய்தார்கள் என்பதை அறிவதில் பலருக்கும் ஆவல் உண்டு. குறிப்பாக வரலாற்று நவீனங்களைப் படிப்போருக்கும் யாத்திரை வரலாற்றைப் பயில்வோருக்கும் சுவை தரும் விஷயங்கள் இவை.அநதக் காலத்தில் ஊர் பேர் தெரியாத ஒரு தமிழ்ப் புலவர் அருமையாகப் பாடி வைத்த நூல் விவேக சிந்தாமணி. அதில் யாத்திரை பற்றி இரண்டு பாடல்கள் உள. அவற்றைப் படித்துச் சுவைப்போம்.யாத்திரைக்கு அழகு!
தண்டுல ,மிளகின் றூள் புளியுப்புதாளிதம் பதார்த்த மிதேஷ்டம்தாம்பு நீர் தோற்ற மூன்றுகோலாடைசக்கிமுக்கி கைராந்தல்கட்டகங் காண்பான் பூஜை முஸ்தீபுகழல் குடை யேவல் சிற்றுண்டிகம்பளி யூசி நூலடைக் காயிலையைக்கரண்டகங் கண்ட கேற்றங்கிதுண்டமுறிய காகரண்டி நல்லெண்ணெய்தட்டன் பூட்டுமே கத்திசொல்லிய தெல்லாங் குறைவறத்தி ருத்தித்தொகுத்துப் பற்பலவினு மமைத்துப்பெண்டுக டுணையோ டெய்து வங்கன்னாயம்பபெருநிலை நீர்நிழல் விறகுபிரஜையுந் தங்குமிடஞ் சமைத்துண்டுபுறப்படல் யாத்திரைக் கழகே.--விவேக சிந்தாமணிபொருள்
அரிசி (தண்டுலம்), மிளகுப்பொடி, புளி, உப்பு, மிகுதியான தாளிதப் பதார்த்தக் கறிவடகம், கயிறு, தண்ணீர், அளவறிய ஊன்றுகோல், வஸ்திரங்கள் (ஆடை), சக்கிமுக்கிக் கல் அல்லது நெருப்பு உண்டாக்கும் கருவி, கைராந்தல், அரிவாள், பாதரட்சை (செருப்பு), குடை, வேலையாள், சிற்றுணவு அல்லது பலகாராதிகள், கம்பளி, ஊசி, நூல், எழுத்தாணி, ஊறுகாய்த் துண்டு, கரண்டி, நல்ல எண்ணெய், துட்டு, பூட்டு, கத்தி இவை முதலாகச் சொல்லப்பட்டவைகள் எல்லாம் குறைவில்லாமல் திருத்தத்தோடு பல வகைகளுஞ் சேகரித்து பெண்கள் துணையோடு, சரியான வாகனத்தோடு, பெருத்த நிலையான நிலம், நல்ல நிழல், விறகு, ஜனங்கள், தங்குமிடங்கண்டு பிரயாணஞ் செய்தல் யாத்திரைக்கு அழகாம்.Tags-- விவேக சிந்தாமணி, யாத்திரை, அழகுxxxxxxxxxxxx SUBHAM xxxxxxxxxxxxxxxxx
Tuesday, November 20, 2018
திருக்குறளில் ஸ்ரீ தேவி, மூதேவி (Post No.5671) thanks to tamil and vedas.com
[New post] திருக்குறளில் ஸ்ரீ தேவி, மூதேவி (Post No.5671)
Yahoo/Inbox
- Tamil and Vedas <comment-reply@wordpress.com>To:theproudindian_2000@yahoo.co.in20 Nov at 10:04 AM
Respond to this post by replying above this line New post on Tamil and Vedas

திருக்குறளில் ஸ்ரீ தேவி, மூதேவி (Post No.5671)
by Tamil and Vedas
Written by London Swaminathanswami_48@yahoo.comDate: 17 November 2018GMT Time uploaded in London –17.24
Post No. 5671Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blogJyeshta picture, posted by Lalgudi Vedaதிருவள்ளுவர் தீவிர இந்து. ஆரம்பத்திலேயே பகவான் பெயருடன் குறளை ஆரம்பிக்கிறார். அது மட்டுமல்ல; அவர் காலத்திலேயே வாழ்ந்த ஒரு புலவர் அவரைத் திருவள்ளுவ மாலையில் பாராட்டுகையில், நல்லவேளையாக இதைப் பாடினீர்களே; இவ்வளவு காலமாக வேதம் போன்ற ஒரு ஸம்ஸ்க்ருத நூல் தமிழில் இல்லையே என்று கவலைப் பட்டேன். நீர் தமிழ் வேதத்தைப்பாடி அந்தக் குறையை நிவர்த்தி செய்துவிட்டீர்’ என்று பாராட்டுகிறார். அவர் கொடுத்த பெயர்தான் தமிழ் வேதம்= தமிழ் மறை.திருக்குறளில் இந்திரன் என்னும் வேத கால தமிழ்க் கடவுளின் பெயர் வருவதை எல்லோரும் அறிவர். இந்திரனையும் வருணனையும் தமிழ்க் கடவுள் என்று தொல்காப்பியம் செப்பும். இன்னும் ஒரு குறளில் வேந்தன் என்றும் இந்திரனைக் குறிப்பிடுகிறார். அடி அளந்தான் என்று வாமன/ த்ரிவிக்ரம அவதாரத்தை ஒரு குறளில் பாடுகிறார். பல் மாயக் கள்வன் என்று கண்ண பிரானை மறைமுகமாக ஒரு குறளில் பாடிப் பரவுகிறார்.
JYESHTA DEVI POSTED BY LALGUDI VEDAதேவ லோகம் (புத்தேள் உலகு), தேவர்கள் (அமரர்), அமிழ்தம் (அம்ருத), ஏழுபிறப்பு (எழுமை), அணங்கு (அப்ஸரஸ் அழகிகள்), வேள்வி (யாகம்), பிராமணாள் (அறு தொழிலோர், பார்ப்பான்,அந்தணர்), யமன் (கூற்றுவன்) ,பிரம்மா (உலகு இயற்றினான்),மஹா லக்ஷ்மி (திரு)--- பற்றி அதிகாரத்துக்கு அதிகாரம் பாடிப் போற்றுகிறரர்; பிரம்மா, கூற்றுவன் (யம தர்மன்), தேவர் போன்றோரை சில இடங்களில் கோபத்தில் ஏசுகிறார்.திருக்குறளைப் படிக்கையில் இவர் ‘பக்கா ஹிந்துத்வா’ பேர்வழி என்பது தெரிகிறது. ஏனெனில் அதர்மம் செய்வோருக்கு மரணதண் டனை கொடுப்பது பற்றி இரண்டு குறள்களில் ஆதரவு தெரிவிக்கிறார். கருமிகள் கையை முறுக்கி முகவாய்க் கட்டையில் ஒரு குத்து விட்டு பணம் பறி என்கிறார். இது எல்லாம் பலருக்கும் தெரிந்த விஷயமே. முதல் குறளை ஸம்ஸ்க்ருதத்தில் துவக்கி கடைசி குறளை ஸம்ஸ்க்ருதத்தில் முடித்து தமிழும் ஸம்ஸ்க்ருதமும் ஒன்றே என்றும் காட்டினார். ஒரு அதிகாரம் கூட ஸம்ஸ்க்ருதச் சொல் இல்லாமல் பாடக்கூடாது என்ற பாலிஸியையும் கடைப் பிடித்தார்.மநு தர்ம நூல், காம சாஸ்திரம், பகவத் கீதை ஆகியவற்றை அழகியகு றள்களில் வடித்துக் கொடுக்கிறார். கடந்த நூற்றாண்டில் இவ்வளவற்றையும் பலரும் பதின்மர் உறை கொண்டு பறை சாற்றிவிட்டனர்.ஆனால் பலருக்கும் தெரியாத ஒரு விஷயம் ஸ்ரீதேவியைப் பாடிய-- திருமகளைப் பாடிய --- திருவள்ளுவர் மூதேவியையும் பாடி இருக்கிறார் என்பதாகும்.இதோ திருமகள் பற்றிப் பாடிய குறள்கள்
179, 519, 617, 920அறனறிந்துவெஃகா அறுவுடையார்ச் சேரும்திறன் அறிந்தாங்கே திரு-179பிறர் பொருளை மனதிலும் நாடாதவன் வீட்டுக்கு லக்ஷ்மீ தானாகவே போவாள்வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாகநினைப்பானை நீங்கும் திரு - 519உண்மையாக உழைப்பவனை , ஒருவன் தப்பாக எடை போட்டால்,லக்ஷ்மீ (செல்வம்) அவனை விட்டுப் போய்விடுவாள்.இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்திரு நீக்கப்பட்டார் தொடர்பு - 920விலைமாதர், கள், சூதாட்டம்-இவை மூன்றும் திருமகளால் கைவிடப்பட்டாரின் அடையாளங்கள்..இங்கு ஒரு இயல்பான சந்தேகம் எழும்; ‘திரு’ என்பதை எல்லாம் செல்வம் என்று பொருள் கொண்டால் லக்ஷ்மி என்ற இந்துக் கடவுள் மறைந்து போவாளே! என்று.இந்துக்கள் மட்டுமே நம்பும் ‘முகடி’ என்னும் மூதேவியை (ஜேஷ்டா தேவி) அவர் மேலும் இரண்டு குறள்களில் வைத்துப் பாடியதும் பதின்மரின் உறையும் திரு என்பது லக்ஷ்மியையும், முகடி என்பது மூதேவியையுமே குறிக்கும் என்பதைத் தெளிவாக்கும்.இதோ முகடிக் குறள்கள்617, 936மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்தாளுளாள் தாமரையினாள்- 617சோம்பல் உள்ளவனிடத்தில் மூதேவியும், சுறுச்சுறுப்பானவர் இடத்தில் தாமரை மலரில் வீற்றிருக்கும் லக்ஷ்மியும் வாழ்வதாக சான்றோர்கள் பகர்வர்.அகடரார் அல்லல் உழப்பர் சூதென்னும்முகடியால் மூடப்பட்டார் -936சூதாட்டம் என்னும் மூதேவியால் விழுங்கப்பட்டவர், சோற்றுக்கே வழியின்றித் தவிப்பர்இப்படி மூதேவியையும் திருமகளையும் ஒப்பிட்டுப் பாடுவதால் திருவள்ளுவன் தெய்வீக ஹிந்து என்பதும் தெளிவுபடும்.Tags-- ஸ்ரீ தேவி, மூதேவி, திருவள்ளுவர்--சுபம்--
அப்பர் தெரிவிக்கும் இரகசியமும், எறும்புகளின் அணிவகுப்பும் thanks to tamil and vedas.com
ரகசியமும், எறும்புகளின் அணிவகுப்பும்! (Post No.5670)
Yahoo/Inbox
- Tamil and Vedas <comment-reply@wordpress.com>To:theproudindian_2000@yahoo.co.in20 Nov at 9:58 AM
Respond to this post by replying above this line New post on Tamil and Vedas

அப்பர் தெரிவிக்கும் இரகசியமும், எறும்புகளின் அணிவகுப்பும்! (Post No.5670)
by Tamil and Vedas
Written by S NagarajanDate: 17 November 2018GMT Time uploaded in London –7-09 am
Post No. 5670Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blogஅப்பர் தெரிவிக்கும் இரகசியமும், எறும்புகளின் அணிவகுப்பும்!ச.நாகராஜன்1அப்பர் தனது பாடல்களில் நூற்றுக்கணக்கான இரகசியங்களைப் போகிற போக்கில் தெரிவித்துக் கொண்டே இருப்பார்.அதை ஊன்றிக் கவனித்து அறிய வேண்டியது நமது கடமை.ஐந்தாம் திருமுறையில் பொதுப் பாடலாக அமையும் ஒரு பாடலை இங்கு பார்ப்போம்.நூறு கோடி பிரமர்கள் நொந்தினார் ஆறு கோடி நாராயண ரங்ஙனே ஏறு கங்கை மணலெண்ணில் இந்திரர் ஈறி லாதவன் ஈசன் ஒருவனே.ஈசனின் வயது என்ன என்ற இரகசியத்தை போகிற போக்கில் இப்படி அப்பர் சொல்கிறார்.இதுவரை நூறு கோடி பிரம்மாக்கள் பிறந்து இறந்து விட்டனர்.அதே போல ஆறு கோடி நாராயணர்கள் அவதரித்து மறைந்து விட்டனர்.இந்திரனைப் பற்றிச் சொல்லப் போனாலோ, கங்கை ஆற்றின் மணலை எண்ண முடியுமா? அதை எண்ணிப் பார்த்தால் எவ்வளவு எண்ணிக்கை வருகிறதோ, அந்த அளவு தோன்றி மறைந்து விட்டனர்.ஆனால் ஈறு இல்லாதன் - முடிவே இல்லாதவன் - ஈசன் ஒருவனே என்பதை அறியுங்கள்.
Picture posted by Lalgudi Veda2பிரம்மாவின் ஆயுள் என்ன என்பதை வேதம் கூறுகிறது.ஒரு மனித வருடம் - ஒரு தேவ அஹோராத்ரம் (அதாவது தேவரின் ஒரு பகலும் இரவும்)360 தேவ அஹோராத்ரம் - 1 தேவ வருடம்12000 தேவ வருடம் - ஒரு சதுர் யுகம்ஒரு சதுர் யுகம் - ஒரு கிருதயுகம், ஒரு த்ரேதா யுகம், ஒரு த்வாபர யுகம், ஒரு கலியுகம் கொண்டது.ஒரு கலியுகம் - 4,32,000 மனித வருடங்கள்ஒரு த்வாபர யுகம் - 8,64,000 மனித வருடங்கள்ஒரு த்ரேதா யுகம் - 1,296,000 மனித வருடங்கள்ஒரு கிருத யுகம் - 1,728,000 மனித வருடங்கள்ஆக ஒரு சதுர் யுகம் - 4,320,000 மனித வருடங்கள்71 சதுர் யுகம் - ஒரு மன்வந்தரம்14 மன்வந்தரம் ஒரு கல்பம்2 கல்பம் - பிரம்மாவின் ஒரு பகல் ஒரு அஹோராத்ரம்360 நாட்கள் - ஒரு பிரம்ம வருடம்100 பிரம்ம வருடம் பிரம்மாவின் ஆயுள்*சிவ புராணத்தில் (7.4 TIME CALCULATION) பிரம்மாவின் ஆயுள் பற்றி இப்படி கூறப்படுகிறது.பிரம்மாவின் ஒரு வருடம் = 1000 கல்பங்கள்ஒரு பிரம்ம யுகம் என்பது அப்படிப்பட்ட 8000 வருடங்கள் கொண்டது.ஒரு பிரம்ம சவனம் என்பது அப்படிப்பட்ட 1000 யுகங்களைக் கொண்டது.பிரம்மாவின் ஆயுள் அப்படிப்பட்ட 3000 சவனங்களைக் கொண்டது.இப்படிப்பட்ட பிரம்மாவின் ஆயுளுக்குள் ஐந்து லட்சத்து நாற்பதினாயிரம் இந்திரர்கள் வந்து போகின்றனர்!பிரம்மாவின் முழு ஆயுள் விஷ்ணுவிற்கு ஒரு நாள்.விஷ்ணுவின் முழு ஆயுளும் ருத்ரனுக்கு ஒரு நாள்.ருத்ரனின் முழு ஆயுளும் சிவனுக்கு ஒரு நாள்.சிவனின் ஆயுள் காலத்தில் ஐந்து லட்சத்து நான்காயிரம் ருத்ரர்கள் வந்து போகின்றனர்.முழு விவரங்களுக்கு சிவ புராணத்தை கீழ்க்கண்ட தளத்தில் பார்க்கலாம்.ஆக, அம்மாடியோவ் என்று இருக்கிறது கணக்கு!
3பிரம்ம வைவர்த்த புராணத்தில் கிருஷ்ண ஜன்ம காண்டத்தில் ஒரு சம்பவம் குறிப்பிடப்படுகிறது.இந்திரனுக்கு எங்கும் இல்லாத ஒரு அரண்மனை அமைக்க ஆசை. விஸ்வகர்மாவைக் கூப்பிட்டு அப்படி ஒரு அழகிய அரண்மனையை அமைக்கப் பணித்தான். விஸ்வகர்மாவும் தன் திறமையை எல்லாம் காட்டி ஒரு நகரையே அமைத்தான். ஆனால் இந்திரன் திருப்தியுறவில்லை. இன்னும் அதிகமாக எதிர்பார்ப்பதாகக் கூறிக் கொண்டே இருந்தான்.சோர்ந்து போன விஸ்வகர்மா பிரம்மாவிடம் முறையிட நாளை உன் பிரச்சினை ஒரு முடிவுக்கு வரும் என்று அருளினார்.அடுத்த நாள் காலை இந்திரனின் வாசலில் ஒரு பிரம்மச்சாரி பிராம்மணன் வந்து சேர்ந்தான். அவனை வரவழைத்த இந்திரன் அவன் வந்த் நோக்கத்தைக் கேட்கவே, “நீங்கள் ஒரு அழகிய நகரை நிர்மாணிப்பதாகக் கேள்விப்பட்டேன். இன்னும் எத்தனை வருடங்கள் ஆகும் அது முடிய? இதுவரை எந்த இந்திரனும் செய்யாத ஒரு அரிய காரியத்தை ஆரம்பித்திருக்கிறாயே!” என்றான்.இந்திரன் சிரித்தான்.“இது வரை எத்தனை இந்திரர்களை நீ பார்த்திருக்கிறாய்?” என்று கேட்டான்.அதற்கு அந்த பிராம்மண பையன் ஒவ்வொருவரின் ஆயுளையும் விவரமாக எடுத்துரைக்க ஆரம்பித்தான்.“கணக்கிலடங்கா எத்தனை உலகங்கள். நீர்க்குமிழிகள் போல உடைந்து உடைந்து எத்தனை பிரபஞ்சங்கள். எத்தனை பிரம்மாக்கள். எத்தனை இந்திரர்கள்“ என்று விவரமாக ஒரு சொற்பொழிவையே ஆற்றிச் சிரித்தான்.அப்போது அங்கு எறும்புகளின் அணிவகுப்பு ஒன்று சென்றது. அந்த எறும்புகளைப் பார்த்துச் சிரித்தான் அவன்.“எதற்குச் சிரிக்கிறாய்?” என்று இந்திரன் கேட்டான்.“இதோ, போகின்றனவே, கணக்கிலடங்கா எறும்புகள். இவை அனைத்துமே ஒரு காலத்தில் இந்திரர்களாக இருந்தவர்களே. புண்ணியம் போன பின் அந்த இந்திரர்கள் இதோ, இந்த எறும்பாக ஊர்கின்றனர்” என்றான்.இதைக் கேட்ட இந்திரன் திடுக்கிட்டு பூரண ஞானத்தை அடைந்தான். கர்வ பங்கம் அடைந்தான்.கர்மத்தினாலேயே ஒருவன் நல்ல பதவியை அடைகிறான் என்றும் அதே கர்மத்தினாலேயே அவன் கீழ் நிலையையும் அடைகிறான் என்பதையும் உணர்ந்து கொண்டான்.எறும்புகளின் அணிவகுப்பு (The Parade of Ants)!இதைப் படித்தால் எல்லையற்ற பிரபஞ்சத்தின் முடிவற்ற காலம் என்பது பற்றி அறிய முடியும்.*
அப்பர் பிரான் இந்தக் கணக்கையெல்லாம் எண்ணி எண்ணி வியந்தார்.அந்தமில்லா - ஈறு ஒன்று இல்லா - பிரானின் பெருமை அவரை விக்கித்தது. உடனே, தனக்குத் தெரிந்த கால இரகசியத்தை உள்ளடக்கி, ஈறு இல்லா ஈசனைப் போற்றிப் பாடினார் :நூறு கோடி பிரமர்கள் நொந்தினார் ஆறு கோடி நாராயண ரங்ஙனே ஏறு கங்கை மணலெண்ணில் இந்திரர் ஈறி லாதவன் ஈசன் ஒருவனே.ஈசனின் வயது என்ன - ஈறு இல்லை - என்ற இரகசியத்தை போகிற போக்கில் இப்படி அப்பர் சொல்கிறார்.அப்பர் பிரானின் பாடல்கள் ஆழ்ந்த ரகசியங்களை விளக்குபவை; பொருளாழம் கொண்டவை.தேவாரம் படிப்போம்; இரகசியம் அறிவோம்!!
Subscribe to:
Posts (Atom)