Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 18 November 2018
GMT Time uploaded in London –9-43 am
Post No. 5674
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog
நூறு வருஷங்களுக்கு முன்னால், யாத்திரை போகும் மக்கள், கூஜாவில் தண்ணீர், கையில் குடை, படுக்கை, பெட்டி, கட்டுச் சாதம் , ஊறுகாய், மாவடு, மோர் மிளகாய், கைவிளக்கு முதலியன கொண்டு செல்வர். பின்னர் டார்ச் லைட், தண்ணீர் பாட்டில் என்று காலம் மாறியது. இப்போதோ கிரெடிக் கார்டு அல்லது பணம் + மொபைல் போன் இருந்தால் போதும், மீதி எல்லாம் ஆங்காங்கே வாங்கிக் கொள்ளலாம் என்றாகி விட்டது. ஆயினும் அந்தக் காலத்தில் மக்கள் என்ன செய்தார்கள் என்பதை அறிவதில் பலருக்கும் ஆவல் உண்டு. குறிப்பாக வரலாற்று நவீனங்களைப் படிப்போருக்கும் யாத்திரை வரலாற்றைப் பயில்வோருக்கும் சுவை தரும் விஷயங்கள் இவை.
அநதக் காலத்தில் ஊர் பேர் தெரியாத ஒரு தமிழ்ப் புலவர் அருமையாகப் பாடி வைத்த நூல் விவேக சிந்தாமணி. அதில் யாத்திரை பற்றி இரண்டு பாடல்கள் உள. அவற்றைப் படித்துச் சுவைப்போம்.
யாத்திரைக்கு அழகு!
தண்டுல ,மிளகின் றூள் புளியுப்பு
தாளிதம் பதார்த்த மிதேஷ்டம்
தாம்பு நீர் தோற்ற மூன்றுகோலாடை
சக்கிமுக்கி கைராந்தல்
கட்டகங் காண்பான் பூஜை முஸ்தீபு
கழல் குடை யேவல் சிற்றுண்டி
கம்பளி யூசி நூலடைக் காயிலையைக்
கரண்டகங் கண்ட கேற்றங்கி
துண்டமுறிய காகரண்டி நல்லெண்ணெய்
தட்டன் பூட்டுமே கத்தி
சொல்லிய தெல்லாங் குறைவறத்தி ருத்தித்
தொகுத்துப் பற்பலவினு மமைத்துப்
பெண்டுக டுணையோ டெய்து வங்கன்னாயம்ப
பெருநிலை நீர்நிழல் விறகு
பிரஜையுந் தங்குமிடஞ் சமைத்துண்டு
புறப்படல் யாத்திரைக் கழகே.
--விவேக சிந்தாமணி
பொருள்
அரிசி (தண்டுலம்), மிளகுப்பொடி, புளி, உப்பு, மிகுதியான தாளிதப் பதார்த்தக் கறிவடகம், கயிறு, தண்ணீர், அளவறிய ஊன்றுகோல், வஸ்திரங்கள் (ஆடை), சக்கிமுக்கிக் கல் அல்லது நெருப்பு உண்டாக்கும் கருவி, கைராந்தல், அரிவாள், பாதரட்சை (செருப்பு), குடை, வேலையாள், சிற்றுணவு அல்லது பலகாராதிகள், கம்பளி, ஊசி, நூல், எழுத்தாணி, ஊறுகாய்த் துண்டு, கரண்டி, நல்ல எண்ணெய், துட்டு, பூட்டு, கத்தி இவை முதலாகச் சொல்லப்பட்டவைகள் எல்லாம் குறைவில்லாமல் திருத்தத்தோடு பல வகைகளுஞ் சேகரித்து பெண்கள் துணையோடு, சரியான வாகனத்தோடு, பெருத்த நிலையான நிலம், நல்ல நிழல், விறகு, ஜனங்கள், தங்குமிடங்கண்டு பிரயாணஞ் செய்தல் யாத்திரைக்கு அழகாம்.
Tags-- விவேக சிந்தாமணி, யாத்திரை, அழகு
xxxxxxxxxxxx SUBHAM xxxxxxxxxxxxxxxxx
No comments:
Post a Comment