Tuesday, November 13, 2018

எனக்கென ஒரு நண்பன் இருக்கிறான்! thanks to vikatan.com

எனக்கென ஒரு நண்பன் இருக்கிறான்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஆண் குழந்தைகளை வளர்ப்பது எப்படி? யாழ் ஸ்ரீதேவி
ண் குழந்தைகளின் நட்பு வட்டத்தை வைத்தே அவர்களைப் புரிந்துகொள்ளலாம். அந்தளவுக்கு அவர்களின் உயர்விலும் தாழ்விலும் அந்த நட்பு ஆதிக்கம் செலுத்தும். அதைப் பெற்றோர் எப்படிக் கையாள வேண்டும்? விடையளிக்கிறார், மனநல மருத்துவர் ஷாலினி.

டீன் ஏஜ் பருவத்தில் ஆண் குழந்தைகள் நண்பர்கள் சொல்வதையே அதிகம் கேட்பது ஏன்?

குழந்தைகள் பதின்பருவத்தை எட்டும்வரை அப்பா அம்மா சொல்வது சரியாக இருக்கும் என நம்புவார்கள். 12 வயதுக்குப் பின், இந்த மனநிலை மாறும். அப்போதுதான் பருவமடைவதற்கான ஹார்மோன் சுரப்பினால் மூளையின் தகவமைப்பு மாறும். தங்கள் வயதையொத்த பையன்கள் என்ன சொல்கிறார்களோ, செய்கிறார்களோ, அதோடு தானும் பொருந்திப்போக வேண்டும் என்கிற உந்துதல் அவர்களுக்குள் உண்டாகும். நண்பர்களைப்போலவே தாங்களும் இருக்க விரும்புவார்கள்.
நல்லதொரு நட்புச் சூழலை அவர்கள் அமைத்துக்கொள்ள, பெற்றோர்களால் உதவ முடியுமா? 

13 வயதில் இருக்கும் பையனிடம், ‘ஃப்ரெண்ட்னா இப்படியெல்லாம் இருக்கணும், அப்போதான் அவன் நல்லவனா இருப்பான்’ என்றால், உங்கள் மகன் அதற்குச் செவிமடுப்பது கடினம். ஆனால், ஐந்து வயது முதலே அவனுக்கு நட்புக் கதைகள் சொல்லி வளர்ப்பதன் மூலம், நல்ல நட்பு என்றால் என்ன என்கிற அடிப்படையை அவனுக்குப் புரியவைக்க முடியும்.

அதென்ன நட்புக் கதைகள்?

அம்மாவும் அப்பாவும் தங்களின் நண்பர்கள், தோழிகளுடனான கதைகளை அவர்களுக்குச் சொல்லலாம். நட்பு விஷயத்தில், ஆண் குழந்தைகள் அம்மாவைவிட அப்பாவின் வார்த்தைகளையே அதிகம் உள்வாங்குவார்கள் என்பதால், இதில் அப்பாவின் பங்களிப்பு அதிகமாக இருக்கலாம். ‘எனக்கு இப்படி ஒரு ஃப்ரெண்ட் இருந்தான், அவன்கிட்ட இருந்துதான் நான் இந்த நல்ல விஷயங்களை எல்லாம் கத்துக்கிட்டேன், அவன் அவசர நேரங்களில் எல்லாம் எனக்கு உதவி செய்து பக்கபலமா இருந்தான்’ என்று சொல்லலாம். அதேபோல, ‘டீச்சர்ஸை மரியாதை இல்லாம பேசுறது, கேர்ள்ஸை டீஸ் பண்றதுனு எனக்கு ஒரு ஃப்ரெண்ட் இருந்தான். அவன் பண்ணின விஷயங்கள் எல்லாம் தப்பு என்பதாலே, அவன்கிட்ட இருந்து நான் விலகிட்டேன். எப்பவும் நல்ல நண்பர்கள்கூடதான் நாம இருக்கணும்’ என்று ஃப்ரெண்ட்லியாக குழந்தைகளுக்குச் சொல்ல வேண்டும். இதில் அறிவுரை டோன் இல்லாமல், கதை சொல்லல் சுவாரஸ்யம் இருக்க வேண்டியது முக்கியம்.

பதின்பருவ ஆண் குழந்தைகளின் நட்பைக் கண்காணிக்க வேண்டுமா?

நிச்சயமாக... `Never underestimate the influence of people you allow in your life' என்றொரு பொன்மொழி உண்டு. நம் வாழ்க்கைக்குள் நாம் அனுமதிப்பவர்கள் நம்மீது ஏற்படுத்தும் தாக்கத்தைக் குறைத்து மதிப்பிடக் கூடாது. ஆண் குழந்தைகளின் நண்பர்கள், அவர்களின் கேரக்டர் பில்டிங்கில் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். எனவே, அந்த நட்பு வட்டம் ஆரோக்கியமானதாக இருக்கிறதா என்பது, பெற்றோர்களின் கவனத்துக்கு உட்பட்ட விஷயமாக இருக்க வேண்டும். நட்பு மிகவும் முக்கியமானது; அதேநேரம், கவனமாக இருப்பதும் முக்கியமானது.
பெற்றோர், தங்கள் பையனின் நட்பு வட்டம் தொடர்பாகக் கண்டிப்புடன் இருக்க வேண்டுமா?

கண்காணிப்பு அவசியம்; கண்டிப்பு தேவையில்லை. சொல்லப்போனால், அந்தக் கண்டிப்புதான் பிரச்னையே. ‘ஃப்ரெண்ட்ஸ்கூட ஏன் வெளிய போற?’, ‘அவனுங்ககூட சுத்துற நேரத்துல படிக்கலாம்ல?’, ‘உன் ஃப்ரெண்ட் ஒருத்தன் வருவானே, அவனைப் பார்த்தாலே எனக்குப் பிடிக்கலை’ - இந்த வகையறா டென்ஷன், கோபம் வேண்டாம். பெற்றோர் - குழந்தைகள் ரிலேஷன்ஷிப் என்பது ஒரு காலத்தில் பாஸ் - சப்ஆர்டினேட் உறவாக இருந்தது. இன்றைய பேரன்ட்டிங்கில், பெற்றோர் லைஃப் கோச்சாக இருக்க வேண்டும். ‘நான் பெரிய பிளேயர் இல்லை. 

ஆனா, உனக்கு கோச்சா இருக்கிறதுக்கு எனக்குத் தகுதி இருக்கு’ என்பதுதான் இன்றைய பேரன்ட்டிங் ஸ்டைல். ‘இந்த கேம் எப்படி விளையாடணும் தெரியுமா?' என்பதைச் சொல்வதைப்போலவே, அவர்கள் நட்பு வட்டத்துக்கு நல்லது கெட்டதை நிதானத்துடன் சொல்லித்தர  வேண்டும். உண்மையில், நல்ல நட்பு உங்கள் குழந்தைக்கு அடிப்படை, அவசிய தேவை. நண்பர்கள் இல்லாமல் வளரும் குழந்தைகள் ஆரோக்கியமானவர்கள் இல்லை.

நண்பர்கள் அவ்வளவு அவசியமா?

ஆம். மாணவப் பருவத்தில், படிப்பு அவர்களுக்கு சந்தோஷத்தைக் கொடுக்கும் காரணி இல்லை. அது அவர்களைப் பொறுத்தவரை பொறுப்பு, கடமை. இந்த வயதில் அவர்களுக்குச் சந்தோஷத்தைத் தரும் விஷயம் என்னவென்றால், தன் சுக துக்கங்களைப் பகிர்ந்துகொள்ள தனக்கென ஒரு நண்பன் இருக்கிறான் என்ற உணர்வு. ‘என்னைப் புரிஞ்சுக்க என் நண்பன் இருக்கான்’ என்கிற சப்போர்ட், பதின்பருவக் குழந்தைகளுக்கு மிகப்பெரிய மன ஊக்கத்தைத் தரும். மன உளைச்சலில் இருந்து காக்கும். நட்பு என்பது மன அழுத்தம் தணிக்கவல்ல நல்லதோர் உறவு (ஆன்டி டிப்ரசன்ட்). எனவே, கண்டிப்பு, ஒழுக்கம் என்ற பெயரில் ஆண் குழந்தைகளை நண்பர்கள், நட்பு வட்டம் இல்லாத குழந்தையாக வளர்த்தெடுப்பது ஆரோக்கியமானது அல்ல. வாழ்க்கையில் ஒவ்வொரு தருணத்திலும் நல்ல நண்பர்கள் அவர்கள் உடனிருக்க வேண்டும். அதை உணர்ந்து, அந்த உயிரோட்டமான உறவை பெற்றோர்கள் ஆரம்பத்தில் இருந்தே அவர்களின் வாழ்க்கையில் இணைத்துவிட வேண்டும்.

ஆண் குழந்தைகளின் எதிர்பாலின நட்பு, எதிர்பாலின ஈர்ப்பாகும்போது, காதலாகும்போது, அதைப் பெற்றோர் எப்படிக் கையாள்வது?

பெற்றோர் முதலில் இதன் அடிப்படையைப் புரிந்துகொள்ள வேண்டும். பருவ வயது ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கலாம். நட்பு, காதல் ஆகலாம். காதல், எந்த வயதிலும் எல்லா சுவாரஸ்யங்களோடும் வரும். எனவே, முதல் காதலை அரும்பாடுபட்டுக் காப்பாற்றத் தேவையில்லை. இதையெல்லாம் குழந்தைகளிடம் பேசும் பக்குவம் பெற்றோருக்கு வர வேண்டும். சொல்லப்போனால், காதல் என்ற மாயையை உடைக்கப் பெற்றோர் அதிகமாகவே உழைக்க வேண்டியிருக்கிறது. காரணம், மீடியா இதற்கு எதிரான வேலையைச் செய்து கொண்டிருக்கிறது. அது காதலைப் புனிதப்படுத்துகிறது. ‘காதல் ஒரே ஒரு தடவைதான் வரும்... அந்த ஒற்றைக் காதலை எப்படியாவது காப்பாத்தணும்; இல்லைன்னா, வாழ்க்கையில தோத்துப்போயிட்டேனு அர்த்தம்’ போன்ற கற்பிதங்களைத் திரைப்படங்கள் முதல் சீரியல்கள்வரை விதைக்கின்றன. அவர்கள் ஏன் காதலை இப்படிச் செயற்கையாக பூஜிக்கிறார்கள் என்றால், அதை வைத்துதான் அவர்கள் பிழைப்பு நடத்துகிறார்கள். அதனால் காதலை மிகைப்படுத்தி, பிரமாண்டப்படுத்தி, புனிதப்படுத்தி எனப் படுத்தியெடுக்கிறார்கள். இந்த டெக்னிக்கை தங்கள் வியாபாரத்துக்காகப் பயன்படுத்து கிறார்கள்.

படிப்பில் ஏன் சறுக்குகிறார்கள்? thanks to vikatan.com

வன் வகுப்பில் நன்றாகப் படிக்கும் மாணவன். பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் பள்ளியில் அவனே முதலிடம் பெறுவான் என எல்லோரும் எதிர்பார்த்திருந்தனர். வீட்டிலும் நொடிப்பொழுதையும் வீணாக்கவிடாமல் அவனைப் படிப்பிலேயே மூழ்கவைத்தனர். நடந்ததோ வேறு. மிட் டெர்ம் தேர்வில் இயற்பியல் விடைத்தாளில் எதுவும் எழுதாமல் பேப்பரை அப்படியே கொடுத்துவிட்டு வந்தான். என்ன ஆனது அவனுக்கு? மனநல ஆலோசகரிடம் அழைத்துச் சென்றபோது அவன் சொன்ன பதில் மருத்துவரையே அதிரவைத்தது. “நான் ஃபெயிலானா அப்பா வருத்தப்படுவார். அவர் வருத்தப்படணும்கிறதுக்காகத்தான் நான் எதுவும் எழுதலை” என்றான்.  
ஆண் பிள்ளைகள் திடீரெனப் படிப்பில் கவனம் சிதற, இப்படி யூகிக்க முடியாத காரணங்களும் இருக்கலாம். பதின்பருவத்தில் அந்தளவுக்கு அவர்களின் மனம் காட்டாறுபோல ஓடும். ஆண் குழந்தைகள் படிப்பில் சறுக்குவதற்கான காரணங்கள் மற்றும் தீர்வுகள் பற்றிப் பேசுகிறார், சேலத்தைச் சேர்ந்த உளவியல் நிபுணர் மற்றும் பள்ளி மாணவர்களுக்கான ஆலோசகர் பிரவீன்குமார். 

*ஆண் குழந்தைகள் பருவம் அடையும் வயதில், எட்டாம் வகுப்புக்கு மேல் படிப்பில் ஒரு தேக்கத்தைச் சந்திக்கின்றனர். உடல்சார்ந்த மாற்றங்கள், ஹார்மோன் குழப்பங்கள் என அவர்களுக்குள் நடக்கும் ஒருவிதமான மனப்போராட்டத்தால் கவனச்சிதறலுக்கு ஆளாகின்றனர். இந்த வயதில் பருவமடைதல் பற்றி ஆண் குழந்தைகளுக்குத் தெளிவை ஏற்படுத்த வேண்டும். 

*பொதுத்தேர்வுகளில் மதிப்பெண், தேர்ச்சி விகிதம் இரண்டிலும் பெண்களே பெரும்பாலும் முன்னிலை வகிப்பதைப் பார்க்கிறோம். ஆண் குழந்தைகளுக்குத் தேக்கத்தைக் கொடுப்பது எது? குறிப்பிட்ட வயதுக்கு மேல் மாணவர்கள் தங்களது பர்சனல் பிரச்னைகளை ஆசிரியர்களிடம் - குறிப்பாகப் பெண் ஆசிரியர்களிடம் பகிர்ந்து கொள்வதில்லை. சக நண்பர்களிடம் பகிர்ந்துகொள்பவர்களுக்குத் தீர்வு கிடைப்பதில்லை. மேலும், குழப்பம் அதிகரிக்கவே செய்கிறது. இதுபோன்ற சூழல்களாலும் ஆண் குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படுகிறது. 

*எப்போதுமே படிப்பில் சராசரியாக இருக்கும் ஆண் பிள்ளைகளுக்கு, அவர்களின் படிப்பு விஷயத்தில் பெற்றோர் தங்களால் ஆன கவனம் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். நன்றாகப் படிக்கும் மாணவர்கள், திடீரென மதிப்பெண் குறைவது, படிப்பில் நாட்டம் இழப்பது என்கிற நிலைவந்தால், பெற்றோர் அதை அகாடமிக்ஸ் பிரச்னையாக மட்டுமன்றி... பள்ளி, நண்பர்கள், ட்யூஷன், பர்சனல் என அவர்களின் சூழலில் ஏதோ பிரச்னை என்பதை உணர்ந்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். உளவியல் ஆலோ சகரை அணுகுவது, சரியான காரணத்தைக் கண்டுபிடித்துத் தீர்வு காண உதவும். 

*ஆண் என்கிற அடையாளத்தை நிரூபிக்க வேண்டும் என்கிற உணர்வு பதின்பருவத்தில் மாணவர்களுக்கு ஏற்படும். இதன் காரணமாகச் சிலர் தீய பழக்கங்களுக்கும் ஆளாவதுண்டு. இதை ‘பியர் குரூப் பிரஷர்’ என்பார்கள். உதாரணமாக, மூன்று மாணவர்கள் நண்பர்களாக இருந்து, அதில் இருவர் புகைபிடித்தால், அந்தப் பழக்கமில்லாத மூன்றாவது மாணவனை மற்ற இருவரும் புறக்கணிப்பார்கள்; அல்லது ‘நீயெல்லாம் ஒரு ஆம்பளையாடா?’ என்று அவனைச் சீண்டுவார்கள். இதனால் உந்தப்பட்டு அல்லது புறக்கணிப்பை ஏற்றுக்கொள்ள முடியாமல் அவனும் தீய பழக்கங்களுக்கு ஆளாகலாம். எனவே, பிள்ளைகளின் நட்பு வட்டம் ஆரோக்கியமாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும். 

*பதின்பருவப் பிள்ளைகளுக்கு ஏற்படும் காதல், அவர்களைப் படிப்பில் கவனம் சிதறவைக்கும். மாணவிகளைவிட, மாணவர்கள் இதனால் அதிகமாக நேரத்தை விரயம் செய்வார்கள். இதைக் கையாளும் பக்குவத்தைப் பெற்றோர் ஏற்படுத்தி பேரன்ட்ஸ் ஃப்ரெண்ட்ஸ் ஆகும்போது, அது சாத்தியமாகும். 

*குடும்பத்தின் பொருளாதாரச் சூழல், சில வீடுகளில் ஆண் குழந்தைகளின் படிப்பை பாதிப்பதாக இருக்கிறது. அவர்களுக்குப் பகுதிநேர வேலை பார்க்கவேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. என்றாலும், ‘என்ன வாழ்க்கை இது?’ என்கிற கழிவிரக்கமோ, விரக்தியோ அவர்களுக்கு ஏற்படாமல், ‘நம் நிலை ஒருநாள் மாறும்; அது உன்னால்தான் நிகழவிருக்கிறது; அப்போது நீ பட்ட கஷ்டங்களுக்கெல்லாம் பலன் கிடைக்கும்’ என்று பெற்றோர் அவர்களுக்கு நேர்மறை எண்ணங்களைச் செலுத்திக்கொண்டே இருக்க வேண்டும். தன்னம்பிக்கை புத்தகங்களைப் படிக்கக் கொடுக்கலாம்; தன்னம்பிக்கை உரைகளைக் கேட்க வைக்கலாம். சுற்றம் நட்புகளில் கல்வியால் சிறப்புப் பெற்ற மனிதர்களை அடையாளம் காட்டி, நம்பிக்கை அளிக்கலாம்.  

*விளையாட்டுத்தனமும், `கடைசியில் பார்த்துக் கொள்ளலாம்' என்று தேர்வுவரை பாடங்களைப் படிக்காமல் விட்டுவைப்பதும் பெரும்பாலான ஆண் குழந்தைகளின் பழக்கமாக இருக்கிறது. இவர்களுக்கு அன்றைய பாடத்தை அன்றே முடிக்கும் பழக் கத்தை முதலில் ஏற்படுத்த வேண்டும். 

ஆரோக்கியத்தின் அட்சய பாத்திரம்! thanks to vikatan.com

ஆரோக்கியத்தின் அட்சய பாத்திரம்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஆண் குழந்தைகளை வளர்ப்பது எப்படி?யாழ் ஸ்ரீதேவி
பதின்பருவத்தில் ஆண் குழந்தைகளின் வளர்ச்சியை முழுமைப்படுத்த, விளையாட்டு மிக மிக முக்கியம். வயது மற்றும் ஆரோக்கியத்தின் அடிப்படையில், அதற்கான ஆலோசனைகளைப் பகிர்கிறார்கள் துறைசார்ந்த நிபுணர்கள்.

எந்தெந்த வயதில் என்னென்ன விளையாட்டுகள்?

ஆண் குழந்தைகளுக்கு எந்தெந்த வயதில் என்னென்ன விளையாட்டுகளை அறிமுகப்படுத்தலாம் என்பது பற்றிச் சொல்கிறார், சேலம் அம்மாபேட்டை நகரவை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் முத்துக்குமார்.

“ஆண் குழந்தைகளின் வளர்ச்சி நிலைகளைப் புரிந்துகொண்டால், அந்தந்த வயதில் அவர்களுக்கான விளையாட்டுகளை அறிமுகம் செய்வது எளிதாகும். ஒரு வயது முதல் மூன்று வயது வரை ஆண் குழந்தையின் உடல் உறுப்புகள் வேகமாக வளர்ச்சி அடையும். இந்த வயதில் தொடு உணர்வின் வழியாக எந்த விஷயத்தையும் புரிந்துகொள்ள குழந்தை முயற்சி செய்யும். அள்ளி அணைப்பதையும், மடியில் இருப்பதையும், நெற்றியில் முட்டி, விரல்கள் பிடித்து விளையாடுவதையும் அவர்கள் விரும்புவார்கள். ஆண் குழந்தைக்கு நான்கு வயது முதல் ஏழு வயது வரை உடலின் தசை மற்றும் எலும்பு வளர்ச்சி அதிகமாக இருக்கும். ஏழு வயதில் இருந்து 10 வயது வரை உடல் உறுப்பு வளர்ச்சியுடன் ஹார்மோன் மாற்றங்களும் தொடங்கும். 11 வயதில் இருந்து 13 வயது வரை ஆணாக அவன் பருவமடைதல் நிகழும்.
ஏழு வயதில்...

தன் சுத்தம், மற்றவர்களோடு பழகுவது, படிப்பது, விதிகளைப் பின்பற்றுவது என ஏராளமான விஷயங்களைப் பழக்கப்படுத்த வேண்டிய பருவம் இது. இந்தப் பருவத்தில் ஜிம்னாஸ்டிக், நீச்சல் இரண்டிலும் ஆண் குழந்தைகளை ஈடுபடுத்தலாம். மரபு விளையாட்டுகளோடு மற்ற குழந்தைகளுடன் இணைந்து ஆடும் மனமகிழ் விளையாட்டுகளும் அவசியம். இந்த விளையாட்டுகள் நரம்பு மண்டலத்தின் செயல்திறனைத் தூண்டி, மூளைக்குத் தேவையான அளவு ஆக்சிஜன் கிடைக்க வழி செய்யும். இரண்டு பக்க மூளையையும் உற்சாகத்துடன் செயல்பட வைக்கும்.
பதின்பருவத்தில்...

11 வயதுக்கு மேல் எல்லாவற்றையும் அறிந்து கொள்ளும் ஆர்வம் அதிகரிக்கும். விஷமத் தனங்களையும் பார்க்க முடியும். பதின் பருவத்தில் குரல் உடைவது முதல், உடல் வளர்ச்சியில் அதிகபட்ச மாற்றங்கள் வரைஆண் குழந்தைகள் பல விஷயங்களைக் கடக்கின்றனர். ஹீரோயிசம், பெண்களை ஈர்ப்பது போன்ற செயல்களிலும் ஆர்வம் அதிகரிக்கும்.

பதின்பருவத்தின் தொடக்கத்திலேயே ஆண் குழந்தைகளை ஷட்டில், ஃபுட்பால், சிலம்பம், கிரிக்கெட் என ஏதேனும் ஒரு விளையாட்டில் ஈடுபடுத்துவது அவசியம். இந்தப் பருவத்தில் அவர்கள் உடலில் அதிகபட்ச ஆற்றல் உருவாகும். அதற்கான ஆரோக்கியமான வடிகாலாக விளையாட்டு இருக்கும். மூளை சுறுசுறுப்பாக இருப்பதால் படிப்பிலும் ஆர்வமாக இருப்பார்கள். தேவையற்ற சிந்தனைகள் தவிர்க்கப்படும்.

விளையாட்டால் மேம்படும் மன வளம்!


 ஆண் குழந்தைகள் விளையாட்டில் ஈடுபடும்போது சம வயது சிறுவர்களின் நட்பு கிடைக்கும்.

 விளையாட்டு விதிகளைப் பின்பற்றுவது, குழுவாக இணைந்து வெற்றிக்கு முயல்வது, தோல்வி பழகுவது, தனக்கான தனித்துவத்தை அறிந்துகொள்வது போன்றவற்றுக்கான வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவார்கள்.

 பதின்பருவ சவால்களை எளிதாகக் கடக்கவும், தங்களுக்கான அடையாளத்தை உருவாக்கவும் விளையாட்டு அவர்களுக்கு உதவும்’’ என்கிறார் முத்துக்குமார்.

ஆரோக்கியத்துக்குக் கைகொடுக்கும்!


ஆண் குழந்தைகளுக்குப் பருமன் மற்றும் அதனால் ஏற்படும் உடல்நலப் பிரச்னைகள் இன்றைய காலகட்டத்தில் சவாலாக உள்ளன. விளையாட்டு, இந்த விஷயத்தில் ஆண் குழந்தைகளுக்கு எந்த விதத்தில் கைகொடுக்கிறது என்பது பற்றிச் சொல்கிறார், சேலத்தைச் சேர்ந்த பிஸியோதெரபிஸ்ட் ரம்யா செந்தில்குமார்.
பருமன்... பருவமடைதல் தள்ளிப்போதல்...

“பதின்பருவ ஆண் குழந்தைகள் 13 வயதில் இருந்து 17 வயது வரை வழக்கத்தைவிடச் சற்று அதிகளவு உணவு சாப்பிடுவார்கள். பியூபர்டி காலகட்டத்தில் உடலில் ஏற்படும் வளர்ச்சிகளுக்காக நிறைய சாப்பிடத் தோன்றும். அதனால், போதிய அளவு வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் உள்ள உணவுகளாகச் சாப்பிட வேண்டும்.  ஆனால், இன்றைய குழந்தைகள் கொழுப்பு, கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுகளையே நாடுகின்றனர். விளையாட்டு, உடற்பயிற்சிகளில் ஈடுபடாமல் இருப்பதால் பருமன் பிரச்னைக்கு ஆளாகின்றனர்.  இதைக் கண்டுகொள்ளாமல் விட்டால் பருவமடைதல் தள்ளிப்போகும். 30 வயதுக்குள்  நீரிழிவு, இதயநோய் தாக்கத்துக்கு ஆளாகும் அபாயமும் அதிகரிக்கும்.

பெற்றோர் கவனத்துக்கு...

 இன்றைய குழந்தைகள் ஆன் ஸ்க்ரீனிலேயே அதிகம் விளையாடுகின்றனர். இதைத் தவிர்த்து, தசை வளர்ச்சிக்கு உதவும் அவுட்டோர் விளையாட்டு அல்லது உடற்பயிற்சிகளில் ஈடுபடலாம். 

 மகனின் நண்பர்களையும் ஊக்கப்படுத்தி உடற்பயிற்சியில் ஈடுபடவைப்பதன் வழியாக, அவர்கள் அனைவரும் தொடர்ந்து விளையாடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கலாம். படிப்பால் ஏற்படும் மன அழுத்தத்தை விளையாட்டில் அவர்கள் கரைத்துக்கொள்வார்கள். 

 விளையாடும்போது ஒருவேளை காயம் பட்டால் பெற்றோர், ‘அந்த விளை யாட்டே வேண்டாம்’ எனக் குழந்தைகளை முடக்குவது தவறு. ‘எல்லா காயங்களும் ஆறிவிடும்’ என்று தட்டிக்கொடுத்து அவர்களை மீண்டும் விளையாட வைக்க வேண்டும்.

 இந்த வயதுக்கான மூடு (mood) மாற்றங்களைக் கையாள விளையாட்டு அவசியமாகிறது. உடற்பயிற்சியின் மூலம் உடல் அழகை மேம்படுத்திக்கொள்ளும் மனநிலை இந்த வயதில் ஆண் குழந்தை களுக்கு உண்டாகும். சிக்ஸ் பேக் வைத்துக்கொள்ள விரும்புவார்கள். விளையாட்டை அதிகப் படுத்த அதிகப்படுத்த, பருவமாற்றத்தினால் உண்டாகும் உடல் வளர்ச்சி, அவர்கள் தோற்றத்தை அழகாக்கும். உடல் ஃபிட் ஆகும். அது அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.

 விளையாட்டில் ஆர்வமுள்ள குழந்தைகள் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். மூளைக்கான ரத்த ஓட்டம் அதிகரிப்பதால் கவனிக்கும் திறனும், நினைவாற்றலும் அதிகரிக்கும். குழுவாக விளையாடுவதால் மற்றவர்களுடன் பழகுவது அவர்களுக்கு எளிதாகும். நேரத்தைத் திட்டமிட்டுப் பயன்படுத்த கற்றுக்கொள்வார்கள். எதிர்கால வேலைவாய்ப்புக்கும் விளையாட்டு அவர்களுக்கு உதவும். உடற்பயிற்சியும் விளையாட்டும் குழந்தைகளின் உணவு முறையை ஆரோக்கியமாக மாற்றும்” என்கிறார் ரம்யா.

இந்த டிசைன் இப்படித்தானா?! thanks to vikatan.com

இந்த டிசைன் இப்படித்தானா?!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஆண் குழந்தைகளை வளர்ப்பது எப்படி?யாழ் ஸ்ரீதேவி
``தங்கைக்கு அண்ணனாக வளரும் ஆண் பிள்ளை, தன்னிடம் கூடுதல் பொறுப்பை உணர்கிறான். அவளுடைய எதிர்காலக் கனவுகளையும் சேர்த்தே அவன் தோளில் சுமக்கிறான். ஆனால், அவள் சார்ந்த அத்தனை முடிவுகளிலும் அவனது ஆதிக்கம் இருக்கும். தம்பியாக வளரும் ஓர் ஆண் பிள்ளைக்கு, அவன் அக்கா பல விஷயங்களிலும் விட்டுக்கொடுத்து ஒரு சின்னத் தாயாகவே அவனுக்காக மாறிப்போகிறாள். ஆனால், தாயாகி தன்னை வளர்த்தெடுப்பவள் மீதான ஆதிக்கமே அவன் இயல்பாக இருக்கிறது. வயது, உறவு என்பவற்றையெல்லாம் தாண்டி, ஓர் ஆணை எங்கும் எப்போதும் ஆதிக்க மனநிலையுடன் வளர்த்தெடுப்பதில் தன் தவற்றைக் குடும்பங்கள் சரிசெய்து கொள்ள வேண்டிய நேரம் இது’’ என்று சொல்லும் உளவியல் மருத்துவர் வசந்தா ஜெயராமன், அதற்கான ஆலோசனைகளை அளிக்கிறார்.
அம்மாவிலிருந்து ஆரம்பிக்கிறது!

“ஆண் குழந்தைக்குள், தான் உயர்ந்தவன் என்ற எண்ணம் தோன்ற முதல் காரணம், அவன் வீட்டின் சூழல். அப்பாவுக்கு அம்மா தரும் முக்கியத்துவமும் மரியாதையும் அம்மாவுக்கு அப்பா அவற்றை ஒருபோதும் தராமலேயே இருப்பதும், குழந்தையின் மனதில் ‘இந்த டிசைன் இப்படித்தான்’ என்று பதியவைத்துவிடுகிறது. அவனும் அதன் வார்ப்பாகவே வளர ஆரம்பிக்கிறான். கணவர், மாமியார், மாமனார், நாத்தனார் என எல்லா  உறவுகளிடமும் தன் அம்மா பொறுத்தும் அடங்கியும் செல்வதைப் பார்க்கும் ஆண் குழந்தை, நாளை தன் வாழ்க்கையில் வரும் பெண்களையும் அதே இயல்புகளுடன் எதிர்பார்ப்பவன் ஆகிப்போகிறான். எனவே, குடும்ப அமைப்பில் ஒவ்வோர் அம்மாவும் தனக்கான சுயமரியாதையை மீட்டெடுப்பதே, அவர்கள் அடுத்த தலைமுறைப் பெண்களுக்குச் செய்யக்கூடிய உதவி; அதைச் செய்யவேண்டியது அவர்கள் கடமை.

விதிகள் பொதுவானவைதானே?

ஆண், பெண் குழந்தைகள் சேர்ந்து வளரும் வீடுகளில் இருவருக்குமான விதிகள் பொதுவானவையாகவே இருக்க வேண்டும். பெண் குழந்தைகளைப்போலவே ஆண் குழந்தைகளின் நட்பு வட்டத்தையும் வெளிப்படையாக இருக்கச் சொல்லிக் கேட்க வேண்டும். வீட்டைவிட்டுக் கிளம்பும்போது, எத்தனை மணிக்குள் வீடு திரும்ப வேண்டும் என்கிற கால அவகாசம் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒன்றுபோல வகுக்கப்பட வேண்டும். அப்போதுதான், ‘நான் ஆம்பள, என்ன வேணும்னாலும் செய்யலாம், எப்படி வேணும்னாலும் இருக்கலாம்’ என்ற எண்ணம் முதலில் வெட்டப்படும். ஆண், பெண் என இருபால் குழந்தைகளையும் வீட்டு வேலைகளைச் செய்யப் பழக்க வேண்டும். சகோதரனின் துணியைச் சகோதரி மடிப்பதைப் போல, சகோதரியின் டம்ளர், தட்டை சகோதரன் கழுவிவைப்பதும் இயல்பாக வேண்டும். அப்போதுதான் நாளைய இல்லறத்தில் கணவன் மனைவி வேலைப் பகிர்வு என்பது சாத்தியப்படும்.

பாரபட்சம் கூடாது!


`ஆண் குழந்தை நிறைய சம்பாதிக்க வேண்டும்' என்பதற்காக அவனை உயர்ந்த படிப்பு படிக்கவைப்பது, `பெண் குழந்தை திருமணமாகி அடுத்த வீட்டுக்குப் போகப்போகிறவள்தானே' எனப் பெயருக்கு ஒரு டிகிரி வாங்கவைப்பது... மலையேற வேண்டிய பாரபட்சப் பார்வை இது. அதேபோல, காலேஜ் டூர் முதல் டூவீலர் விருப்பங்கள்வரை, ஆண் பிள்ளையின் பட்ஜெட்டைக் கணக்குப் பார்க்காமல் இருப்பதும், ‘பொம்பளைப் புள்ளைக்கு  எதுக்கு அவ்வளவு செலவழிக்கணும்?’ என்று முட்டுக்கட்டை போடுவதும் தவறு. பின்னாளில், உங்கள் பெண் பிள்ளையை உங்கள் ஆண் பிள்ளை பாரபட்சமாக நடத்த நீங்களே காரணமாகிவிடா தீர்கள். சகோதர - சகோதரி உறவு என்றும் உயிர்ப்புடன் இருக்க இனிவரும் காலகட்டங்களில் சமத்துவம் அவசியம் தேவை.

அடி அறவே கூடாது!

கோபத்தில் அப்பா, அம்மாவை அடிக்கும் வீடுகள் இங்கு உண்டு. விளையாட்டில் சகோதரன், சகோதரியை அடித்தால், ‘சரி விடு, அண்ணன்/தம்பிதானே அடிச்சான்’ என்று சமாதானப்படுத்துபவர்கள்... அதுவே சகோதரி, சகோதரனை விளையாட்டுப் பொழுதுகளில் அடித்தால்கூட, ‘ஆம்பளப் புள்ளைய அடிக்கிறியா?’ என்று ஆத்திரப்படுவதையே பார்க்கிறோம். வன்முறையை ஆண்களின் இயல்பாக வளர விடுவது, இந்தக் குடும்ப அமைப்பே. இந்த வன்முறை விதை, ஆண் குழந்தைகளின் மனதில் அறத்தை அகற்றி விடுகிறது. பாலியல் சீண்டல் முதல் ஆசிட் வீச்சு வரை அவனுக்குள் குரூரம் வளர்வதற்கு, அவன் வீட்டில் அவன் பழகிய, ‘தவறில்லை’ என்று தட்டிக்கொடுக்கப்பட்ட வன்முறையே காரணமாக அமையலாம். பெண்ணை எக் காரணம்கொண்டும் அடிக்கக் கூடாது, துன்பப் படுத்தக் கூடாது, அவள் கண்ணீருக்குக் காரணமாகக் கூடாது என்பதையே ஆண் மகனின் இலக்கணங்களாகச் சொல்லி வளர்க்க வேண்டும்.

ஆண் கல்வி அவசியம்!

சில சமூகங்களில் பெண்களுக்கு அதிக கட்டுப்பாடு இருக்கும்; பெண் குழந்தை களுக்கும்கூட. இது பழக்க வழக்கங்களில், உரிமைகளில் இருந்தாலும் கல்வியிலிருந்து ஓரளவு அகற்றப்பட்டிருக்கிறது. எனவே, அந்தப் பெண் பிள்ளைகள், பள்ளிக்கல்வி, கல்லூரி, உயர்கல்வி என்று முன்னேறுகிறார்கள். இன்னொரு பக்கம், அதே சமூகங்களில் கட்டுப்பாடின்றி வளரும் ஆண்கள், கல்வி யிலிருந்து விலகுகிறார்கள். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது, இந்தச் சமூகங்களில் பெண்கள் படித்தும் ஆண்கள் அவர்களுக்குச் சமமாகப் படிக்காமலும் இருக்கிறார்கள். தன்னைவிட படிப்பில் குறைந்த ஆணை மணக்க பெண்கள் மறுக்கிறார்கள். இந்தச் சூழலில் இது ஒரு சமூகப் பிரச்னையாக உருவெடுக்கிறது. எனவே, ஆண்களுக்குத் தரப்படும் ஒழுக்க விதிவிலக்குகளே, அவர்களைக் கல்வியிலிருந்து விலக்கிவைக்கும் காரணியாகவும் ஆகிவிடுகிறது என்பதைப் பெற்றோர் உணர வேண்டும்.

‘`கூந்தல் வறட்சியால் பாதிக்கப்பட்டவர்கள் விளக் கெண்ணெயை லேசாகச் சூடுசெய்து உச்சந்தலையில் தடவி, தலை முழுக்க மசாஜ் செய்யவும். இரவு முழுக்க ஊறவிட்டு மறுநாள் காலை தலையை அலச, வறட்சி நீங்கி, கூந்தல் பட்டுப்போலப் பளபளக்கும்.

டீன் ஏஜ் ஆண் குழந்தைக்கும் சிறப்பு உணவுகள் அவசியம்! thanks to vikatan.com

டீன் ஏஜ் ஆண் குழந்தைக்கும் சிறப்பு உணவுகள்  அவசியம்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஆண் குழந்தைகளை வளர்ப்பது எப்படி?யாழ் ஸ்ரீதேவி
``பெண் குழந்தைகள் பதின்பருவத்தை எட்டும்போதே, அவர்களுக்குக் கொடுக்கப்படும் உணவில் அம்மாக்களின் கவனம் கூடும். பருவமடைந்த பின்னர், அவர்களது கர்ப்பப்பையைப் பலப்படுத்தும் உணவுகள் அவர்களுக்குக் கொடுக்கப் படும். மாதவிடாய் நாள்களில் ஏற்படும் சோர்வைக் கணக்கில்கொண்டு அதற்கேற்ற சிறப்பு உணவுகள் அப்போது தரப்படும். ஆண் குழந்தைகளுக்கோ இப்படி சிறப்பு உணவுகள்  எதுவும் கொடுக்கப்படுவதில்லை. ஆனால், பதின்பருவத்தை எட்டியவுடன், ஆண் குழந்தைகளுக்கான உணவையும் அம்மாக்கள் பார்த்துப் பார்த்தே கொடுக்க வேண்டும்'' என்கிறார் டயட்டீஷியன் அபிராமி வடிவேல்குமார்.
உயரம், எடை... ஈடுகொடுக்கும் உணவு
``அடுத்த தலைமுறைக்கான உயிரணுக்களின் உற்பத்தி உடலில் ஆரம்பிக்கும் பருவத்தில், ஆண் குழந்தைகளுக்குக் கொடுக்கும் உணவில் அம்மாக்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இந்த வயதில் அவர்கள் திடீரென்று அதிகமாகச் சாப்பிடத் தொடங்குவார்கள். அடிக்கடி `பசி, பசி' எனச் சாப்பிடக் கேட்பார்கள். அவர்கள் பருவமடையும் வளர்ச்சியை எட்டுவதே இதற்குக் காரணம். இந்த மாற்றங்கள் 12 வயதில் தொடங்கி 18 வயதுவரை தொடரும். இந்தக் காலகட்டத்தில் அவர்களுக்கு உடலளவிலும் மனதளவிலும் பலவிதமான மாற்றங்கள் தோன்றும்.

12 வயதில் சுமார்
40 முதல் 50 கிலோ எடையில் இருக்கும் ஆண் குழந்தைகள், அடுத்த ஆறு ஆண்டுகளில் கிட்டத்தட்ட 70 முதல் 80 கிலோ எடையை அடைந்திருப்பார்கள். உயரத்திலும் அபரிமிதமான வளர்ச்சியை எட்டுவார்கள். ஐந்து அடியில் இருந்து சுமார் ஆறு அடி உயரத்தை எட்டுவார்கள். இந்த உடல் வளர்ச்சிகளுடன் ஹார்மோன் சுரப்பும் அதிகரிக்கும்.
எலும்பு வளர்ச்சி, தசை வளர்ச்சி மற்றும் ரத்த உருவாக்கத்துக்கு, இந்த வளர்ச்சிப் பருவத்தில் ஆண் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவு அவசியம். சரியான ஊட்டச்சத்து கிடைக்கத் தவறினால், அவர்களின் முழுமையான வளர்ச்சி பாதிக்கப்படும். நோய் எதிர்ப்புச் சக்தி குறையும். இந்தப் பருவத்தில் சத்துகள் மிகுந்த உணவுகளைக் கொடுக்கத் தவறினால் பின்னாளில் மலட்டுத்தன்மைகூட ஏற்படும்.
என்னென்ன உணவுகள் கொடுக்க வேண்டும்?
பதின்பருவத்தில் ஆண் குழந்தைகளின் வளர்ச்சிக்கு ஈடுகொடுக்க 2,500 கலோரி உணவு தேவைப்படும். அதுவே விளையாட்டில் அதிகம் பங்கேற்கும் ஆண் குழந்தைகளுக்கு 3,000 - 4,000 கலோரி உணவு தேவைப்படும். மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து, வைட்டமின், மினரல் என அனைத்துச் சத்துகளும் சரிவிகித அளவில் உணவில் இடம்பெறும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

மாவுச்சத்து
ஆண் குழந்தைக்குத் தேவைப் படும் எனர்ஜியை அளிக்கும் மாவுச்சத்து, அனைத்து வகை தானியங்களிலும் கிடைக்கும். அரிசி, கோதுமை, கம்பு, சோளம், கேழ்வரகு, சிறுதானியங்களைக் கொண்டு தயாரிக்கும் சாதம், ரொட்டி, அடை, தோசை, உப்புமா ஆகிய மாவுச்சத்து உணவுகளை, தினமும் மூன்று அல்லது நான்கு வேளைகளுக்குக் கொடுக்கலாம்.
கொழுப்புச்சத்து
பதின்பருவ ஆண் குழந்தையின் நரம்பு வளர்ச்சிக்கும் ஹார்மோன் தேவைகளுக்கும், நல்ல கொழுப்புச்சத்தை தினசரி உணவில் சேர்க்க வேண்டும். கொட்டை வகைகளான பாதாம், முந்திரி, நிலக்கடலை ஆகியவற்றில் இருந்து நல்ல கொழுப்பு கிடைக்கிறது. சமையலுக்கு உபயோகிக்கும் எண்ணெய், பால், தயிர் மற்றும் அசைவ உணவுகளிலும் கொழுப்புச் சத்து உள்ளது. இவற்றைக் குறிப்பிட்ட அளவில் உணவில் சேர்க்க வேண்டும்.
புரதச்சத்து
உடல் வளர்ச்சிக்குப் புரதச்சத்து மிகவும் முக்கியம். பதின்பருவ ஆண் குழந்தையின் எடை கூடவும், எலும்பு, தசை வளர்ச்சிக்கும் புரதச்சத்து அவசியம். இது பருப்பு வகைகள், சுண்டல், பால், தயிர், சீஸ் (பாலாடைக்கட்டி) முட்டை, மீன், பிற அசைவ உணவுகள், கொட்டை வகைகள் ஆகியவற்றில் கிடைக்கிறது. 
தினமும் ஒரு கப் சுண்டல், ஒரு கப் பருப்பு, 300 - 500 மில்லி பால் அல்லது தயிர், இவற்றுடன் முட்டை அல்லது மீன் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். சைவம் எனில், பருப்பின் அளவை அதிகப்படுத்த வேண்டும்.
வைட்டமின் மற்றும் மினரல் சத்துகள்
ஆண் குழந்தையின் வளர்ச்சியை முழுமையடையச் செய்ய, பலவிதமான வைட்டமின் மற்றும் மினரல் சத்துகள் அவசியம். முக்கியமாக கால்சியம், அயோடின் மற்றும் இரும்புச்சத்து. காய்கறிகள், கீரைகள், பழங்கள், கொட்டை வகைகளிலிருந்து இந்தச் சத்துகளைப் பெறலாம். கால்சியம் அதிகமாகக் கிடைக்க பால், தயிர், பருப்பு வகைகள், கொட்டை வகைகளை அதிகம் உணவில் சேர்க்கலாம். இரும்புச்சத்துக்கு கீரை, கொட்டை வகைகள், முட்டை மற்றும் அசைவ உணவுகளைக் கொடுக்கலாம்.
உணவில் சில தவறுகள்...
* ஆண் குழந்தைகளுக்குத் தேவைப்படும் ஆரோக்கிய உணவின் அவசியம் குறித்து அறியாமல் இருக்கும் அம்மாக்கள், `நூடுல்ஸ் செஞ்சு தர்றேன் சாப்பிடு', `பிரெட் வாங்கிட்டு வந்து சாப்பிடு' என்று அவர்களின் பசிக்கு நல்லுணவு கொடுப்பதிலிருந்து தவறுகிறார்கள். இதைச் சரி செய்துகொள்ள வேண்டும்.

* பெரும்பாலான சிறுவர்கள் காய்கறி, பழம் சாப்பிடுவதைத் தவிர்க்கின்றனர். இதனால் வைட்டமின், மினரல் சத்து குறைபாட்டுக்கு ஆளாகின்றனர். நோய் எதிர்ப்புச் சக்தி குறையும். உடல்பருமன் அடையும். சோர்வாகக் காணப்படுவார்கள். கவனம் செலுத்துதல் மற்றும் நினைவாற்றலும் பாதிக்கப்படும். எனவே, காய்கறிகளும் பழங்களும் மிகவும் அவசியம்.

* அதிகமாக வெளியிடங்களில் சாப்பிடும் சிறுவர்களுக்கு வயிற்றில் பூச்சித்தொல்லை ஏற்படலாம். இதன் விளைவாக வயிற்றுவலி மற்றும் சத்துக் குறைபாடுகள் ஏற்பட்டு வளர்ச்சியைப் பாதிக்கும். எப்போதாவது வெளி உணவு `ஓகே'. அடிக்கடி என்றால், அம்மாக்கள் அலர்ட்.

* வளரும் பருவத்தில் உள்ள குழந்தைகளுக்கு, ஜங்க் ஃபுட்களில் உடல் வளர்ச்சிக்குத் தேவையான சத்துகள் கிடைக்காது. மேலும், தேவையற்ற உப்பு, கொழுப்பு உடலில் சேரும். இதனால் உடல்பருமன் முதல் பலவிதமான பாதிப்புகளுக்கும் ஆளாவார்கள். ஆண் குழந்தைகளுக்கு வளர்ச்சியில் இருந்து தன்னம்பிக்கைவரை இது பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் தவிர்க்க வேண்டியது அவசியம்.

ஆண் குழந்தையை ஆரோக்கிய உணவு கொடுத்து வளர்த்தெடுங்கள்!"

ஸ்மார்ட்போன் போதை thanks to vikatan.com


நாம் நினைப்பதைவிடவும் ஆபத்தானது!
ண் குழந்தை வளர்ப்பு பற்றி ஆலோசனை வழங்கிவரும் மனநல மருத்துவர் ஷாலினி, இந்த இதழில் `ஸ்மார்ட்போன் போதை, நாம் நினைப்பதை விடவும் ஆபத்தானது' என்கிறார்.

``ஒரு பொருளைப் போதை வஸ்து என்று எதன் அடிப்படையில் வரையறுக்கிறோம்? அதைப் பயன்படுத்தும்போதெல்லாம், சட்டென ஒரு சந்தோஷம் ஏற்படும்; உடனடி மனநிறைவை ஏற்படுத்தும். காலையில் எழுந்தவுடனேயே மனம் அதைத் தேட ஆரம்பித்துவிடும். அதைப் பயன்படுத்துவது குறித்து யாராவது கண்டிக்கும்போது கோபமாக வரும். நாளுக்கு நாள் அதைப் பயன்படுத்துவது அதிகரித்துக்கொண்டே போகும். போதை வஸ்துக்கான முக்கிய அம்சங்களான இவை  ஸ்மார்ட்போனுக்கும் 100% பொருந்துபவை. ஆரோக்கியக் கேட்டில் இருந்து மன அழுத்தம் வரை, ஸ்மார்ட் போனால் ஏற்படக்கூடிய ஆபத்துகளுக்குக் குறைவில்லை. என்னதான் சமாதானம் சொல்லிக்கொண்டு பிள்ளைகளின் கையில் ஸ்மார்ட்போன் கொடுத்தாலும், அது பொழுதுபோக்கல்ல... ஆபத்து என்பதை பெற்றோர் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்.
போர்ன் வீடியோ

ஸ்மார்ட்போன் அடிக்‌ஷன், சோஷியல் மீடியா அடிக்‌ஷன்... இவையெல்லாம்  நிறையவே பேசப்படுகிற பிரச்னைகள். இவற்றில் பரவலாகப் பேசப்படாத பிரச்னை, ஆபாச வீடியோக்களைப் பார்க்கத் தூண்டும் போர்ன் அடிக்‌ஷன். இன்றைய டெக் யுகத்தில்  நண்பர்கள், தோழிகள், சர்ச் இன்ஜின்கள் என ஏதேனும் ஒரு காரணி போர்ன் வீடியோக்களை அறிமுகப்படுத்திவிடும்.

குழந்தைகள் சாப்பாடு, விளையாட்டை எப்படித் தேடுவார்களோ, அதுபோல பதின் பருவப் பிள்ளைகள் காதலையும் காமத்தையும் மிக முக்கியமான இன்ஸ்டிங்ட்களாக உணர்வார்கள். முன்பெல்லாம் இளம்வயதில் திருமணமாகி, குழந்தை பெற்றிருந்தார்கள் நம் முன்னோர். இன்றைய வாழ்க்கைச் சூழலுக்காக, இன்றைய குழந்தைகளைப் படிப்பில் அதிக வருடங்கள் கவனம் செலுத்தவைத்து, அவர்களின் பாலியல் விருப்பங்களுக்கான வயதைச் செயற்கையாகத் தள்ளிப்போட்டிருக்கிறோம். ஆனால், உடலின் இயற்கைத்தன்மை மனிதனின் சொல்லுக்கெல்லாம் கட்டுப்படாதது. அது இந்த வயதில் அவர்கள் மனதில் ஒருவித உந்துதலை ஏற்படுத்தவே செய்யும். எனவே, இதைப் பெருங்குற்றமாகப் பார்க்காமல், இதன் அடிப்படை அறிவியலைப் பெற்றோர் புரிந்துகொள்ள வேண்டும்.
காதல், காம ஈடுபாடுகள் மேலெழும்பும் பதின்பருவத்தில், அவற்றை நேரடியாகப் பூர்த்தி செய்துகொள்ள முடியாத சூழலில், வேறு ஒருவர் காதலிலோ கலவியிலோ ஈடுபடுவதைப் பார்க்க உந்தப்படுகிறார்கள். அதன் விளைவுதான் போர்ன் வீடியோக்கள் பார்க்க ஆரம்பிப்பதும், ஒருகட்டத்தில் அதற்கு அடிமையாக மாறுவதும். அது மிகப்பெரிய போதையாக அவர்கள் மனதில் ஆழப் பதியும். மனதை மீண்டும் மீண்டும் அதிலேயே செலவு செய்துவிட்டு, தங்கள் மொத்த எனர்ஜியையும் அதிலேயே தொலைப்பார்கள். இதனால் படிப்பு உள்ளிட்ட விஷயங்களில் கவனம் செலுத்தமுடியாமல் போகும். இவை அனைத்துக்கும் வாசல், குழந்தைகளின் கைகளில் நாம் தரும் ஸ்மார்ட்போன்களும், வீட்டில் உள்ள கணினியுமே.
தவறு பெற்றோரிடமிருந்தே 

குழந்தைகள் ஸ்மார்ட்போன் கேட்பது என்பது, ஒருவரைப் பார்த்து ஒருவர் செய்யும் ‘பியர் குரூப் பிரஷர்’. இந்த விஷயத்தில் எல்லாப் பெற்றோர்களும் ஒருங்கிணைந்து ஒரே விதியைக் கடைப்பிடிக்கும்போது, ‘இதுதான் உலக வழக்கம்’ என்று பிள்ளைகளும் அதை ஏற்றுக்கொள்வார்கள். பெற்றோர் சிலர், ‘எங்கிட்ட காசு இருக்கு... வாங்கிக் கொடுக்கிறேன்’, ‘பையன் அழுது அடம்பிடிச்சான்’, ‘லேர்னிங் ஆப்ஸுக்காக வாங்கிக் கொடுத்தேன்’ என ஆளுக்கு ஒரு சாக்கைச் சொல்லும்போது, வாங்கிக் கொடுக்காத பெற்றோர்களுக்கு அது பிரச்னையாகிவிடுகிறது. ‘யார் வெச்சிருந்தாலும் சரி, கெடுதல்னு தெரிஞ்சும் உனக்கு அதை நான் வாங்கிக்கொடுக்க மாட்டேன்’ என்று கண்டிப்புடன் இருந்து தங்கள் பிள்ளைகளைக் காக்கும் பெற்றோருக்கு வாழ்த்துகள். அதே நேரம், ஸ்மார்ட்போன் தேடல், ஏக்கம், கவர்ச்சி உங்கள் குழந்தையை வேறு யார் கைகளுக்கும் அழைத்துச் செல்லாமலும் பார்த்துக்கொள்ளவும்.

மொத்தத்தில், பதின்பருவத்தினர் கல்லூரிக்குச் செல்வதற்கு முன்னால், ஸ்மார்ட்போன், ஐபாட், லேப்டாப் என எந்த ஸ்க்ரீனையும் வாங்கிக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். கல்வித் தேவைக்காக, கேம்ஸுக்காக என அவர்கள் ஆன்லைனில் இருக்கும்போது, பெற்றோரின் கண்கள் அவ்வப்போது ஸ்க்ரீனை நோட்டமிட வேண்டும். மொபைலில் இன்டர்நெட் பயன்படுத்தும்போது அறைக்குள் செல்லாது, ஹாலிலேயே அமர்ந்திருக்க அவர்களை வலியுறுத்த வேண்டும். ஹாலில் அல்லது அனைவரின் பார்வையிலும் படும்படியான இடத்தில் கணினியை நிறுவ வேண்டும். அன்வான்டட் லிங்க்குகள் ஏதேனும் ஓப்பன் ஆகிவிட்டால், அதிலிருந்து வெளியே வந்துவிட வேண்டும் என்றும், அதைப் பற்றி அம்மா/அப்பாவிடம் தெரிவித்துவிட வேண்டும் என்றும் சொல்லிவைக்க வேண்டும்; அதுபோன்ற லிங்க்குகளுக்கான டெக்னாலஜி ஃபில்டர்களைப் பயன்படுத்த பெற்றோர் கற்றுக் கொள்ள வேண்டும்.''

ஆபத்துக்குள் குதிக்க அனுமதிக்காதீர்கள்! thanks to vikatan.com

ஆபத்துக்குள் குதிக்க அனுமதிக்காதீர்கள்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஆண் குழந்தைகளை வளர்ப்பது எப்படி?யாழ் ஸ்ரீதேவி
ண் குழந்தைகள் பருவமடைவது பற்றி, சென்ற இரு இதழ்களில் பேசிய மனநல மருத்துவர் ஷாலினி, இந்த இதழில் அந்தக் குழந்தைகள் தொடர்பாகக் கவனம் செலுத்தவேண்டிய விஷயங்கள் பற்றிச் சொல்கிறார்...  
விழிப்பு உணர்வு  தேவை!

``பருவமடைதல் என்பது உடல் சார்ந்த ஓர் ஆரோக்கிய வளர்ச்சி; சந்தோஷமான நிகழ்வும்கூட. பெண் குழந்தைகள் பூப்படைந்தால் ‘மஞ்சள் நீராட்டு விழா’ என்ற பெயரில் அதைக் கொண்டாடுகிறோம். ஆனால், ஆண்கள் பருவமடைதல் பற்றி இதுவரை வெளிப்படையாகப் பேசப்படுவதில்லை. இது அந்தக் குழந்தைகளுக்கு நாம் செய்யும் புறக்கணிப்பு. ‘பெண்கள் பருவமடைதலையே கொண்டாட வேண்டியது இல்லை’ என்றொரு கருத்து இப்போது வைக்கப்படுகிறது. அந்தச் சடங்கை, பெண்களுக்கு அதுபற்றிய விழிப்பு உணர்வைத் தரும் விழாவாகப் பார்த்திருக்கிறார்கள் நம் முன்னோர். வயதுக்கு வந்த பெண்ணிடம் பாட்டி, அம்மா, அத்தை, சித்தி, அக்கா என ஒவ்வொருவரும் கேலியாகவும் அனுபவங்களாகவும் அறிவுரைகளாகவும் மாதவிடாய் நாள்கள் பற்றிய தகவல்களைச் சொல்வார்கள். இப்படி ஒரு வெளிப்படையான இன்டராக்‌ஷன் ஆண் பிள்ளைகளுக்குக் கிடைப்பதில்லையே? எனவே, ஆண் பருவமடைதல் பற்றிப் பொதுத் தளங்களில் விழிப்பு உணர்வு நோக்கில் தொடர்ச்சியாக வெளிப்படையாகப் பேசவேண்டியதும், அந்தத் தருணத்தில் அவர்களை வாழ்த்தும்விதமாக சுற்றத்தினர் நடந்துகொள்வதும் நல்ல மாற்றமாக இருக்கும். ‘இது இயல்பான மாற்றம். இதில் உன் தவறு எதுவும் இல்லை. நீ ஆரோக்கியமாக இருக்கிறாய் என்று உன் உடல் உனக்குத் தரும் சான்றிதழாக அமைவதே இந்தப் பருவம்’ என்று அவர்களுக்கு உணர்த்தினால்தான், அவர்கள் தங்களின் சுயமரியாதையைச் சந்தேகிக்காமல் இருப்பார்கள். ஆம், நாம் ஆண் குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டியது அவசியம்.

ஸ்மால் டோஸ்களாக பேச வேண்டும்!

அம்மாவோ, அப்பாவோ சிங்கிள் பேரன்ட்டாக தன் ஆண்பிள்ளையை வளர்ப்பதில் சிக்கலான விஷயமென்று எதுவுமில்லை. குறிப்பாக, அம்மாக்கள் இதுபற்றிக் கவலைப்படத் தேவையில்லை. குழந்தைகளுக்குப் பாலியல் கல்வி வகுப்புகள் எடுக்கிறவர்கள் பெரும் பாலும் பெண்களாகவே இருக்கிறோம். யார் கற்றுத்தருகிறார் என்பது குழந்தை மனதுக்கு ஒரு பொருட்டல்ல. அதை அவர்களுக்குப் புரிகிற மொழியில், அவர்களை சங்கோஜப்படுத்தாத, அவமானப்படுத்தாத அணுகுமுறையில் கற்றுத்தருகிறோமா, எளிமையாகச் சொல்லித்தருகிறோமா என்றுதான் குழந்தைகள் பார்ப்பார்கள். ஆண் குழந்தைகள் பருவமடைந்த நாளிலேயே அனைத்து விஷயங்களையும் அவர்களிடம் பேசிவிட வேண்டும் என்பதில்லை. அவர்களால் புரிந்து கொள்ள முடியாது. வயதுக்கு வருவதற்கு முன்பும் பின்பும் ஸ்மால் டோஸ்களாக அவர்களிடம் பேச வேண்டும்.

வீட்டுக்குள் போட்டி

போட்டிமனப்பான்மை என்பது ஆண்களின் இயல்பு. பருவமடைதல் விஷயத்தில், ஒருவரின் மீது ஒருவர் பொறாமை, கோபம் கொள்ள வைக்கலாம். ஒரு வீட்டில் ஓர் ஆண் குழந்தை வயதுக்கு வந்துவிட்டால், அந்த வீட்டில் இருக்கும் அவன் அண்ணனோ, சில நேரங்களில் அப்பாவோ கூட, ‘என்ன நீ பெரிய ஆம்பளை ஆகிட்டியா?’ என அந்தக் குழந்தையிடம் போட்டி மனப்பான்மையுடன் நடந்துகொள்ளலாம். அவனை எதிரியாக நடத்தும் அளவுக்கு இந்த மனப்பான்மை சிக்கலை வளர்க்கும். ஆண் மிருகங் களுக்கிடையே ஆதிக்கம் செலுத்து வதில் நடக்கும் போராட்டத்தின் மனித வெர்ஷன் இது. எனவே, இப்படி ஒரு பிரச்னை தலைதூக்க வாய்ப்பிருக்கிறது என்பதை அம்மாக்கள் உணர்ந்து, தன் வீட்டு ஆண்களுக்கு இடையில் இந்தப் போட்டியைத் தவிர்ப் பதில் கவனம்கொடுக்க வேண்டும். அப்பா, மகன்கள் என அனைவருக்கு இடையிலும் அமைதியான சூழல் நிலவ, அந்த வீட்டுப் பெண்கள் புரிந்துணர்வுடன் செயல்பட வேண்டும். ஒருவரையொருவர் மட்டம்தட்டிப் பேசுவது, ஒருவரோடு ஒருவர் மல்லுக்கு நிற்பது போன்ற சூழல்களைத் தவிர்க்கச்செய்ய வேண்டும். 
பெண் பருவமடைதலைப் பற்றிச் சொல்லலாம்!

பருவமடையும் ஆண்களிடம், ‘பெண்ணுடலிலும் இதுபோன்ற மாற்றங்கள் நிகழ்கின்றன’ என்பதையும் சொல்ல வேண்டும். ஆணும் பெண்ணும் எதற்காகப் படைக்கப்பட்டார்கள் என்பதையும் இருபாலினரிடமும் பேச வேண்டும். இயற்கையின் இப்படி ஓர் உடலியல் அமைப்பை வைத்திருக்கிறது என்ற முழு வரையறையும் புரிந்தால்தான், இதில் தன்னுடைய பங்கு என்ன, தன்னை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது, மேம்படுத்திக் கொள்வது எப்படி போன்ற விஷயங்கள் அவர்களுக்குப் புரியவரும்.

ஆண்களுக்குப் பாலியல் கல்வியைக் கற்றுத்தருவது பெண்களின் மீதான ஈர்ப்புக்கோ, பெண்ணுடல் மீதான வேட்கைக்கோ வழிவகுக்கும் என்று நினைப்பதற்கு அவசியமில்லை. ஒரு விஷயத்தை மூடிவைக்கும்போதுதான் அதைப் பற்றி மனம் தீவிரமாக யோசிக்கும். அதையே அறிவியல் ரீதியாக விளக்கிச் சொல்லும்போது, அந்த விழிப்பு உணர்வு அவன் ஆரோக்கிய மனநிலையுடன் கூடிய ஆணாக வளர வழிநடத்தும். பருவமடையும் வயதில் ஆண்களுக்கு ஏற்படும் காதல் உணர்வும், அந்தக் காதலும் இயல்பானது. ‘திருமணம் செய்யும் வயதில் ஒரு பெண்ணின் மீது காதல் மட்டுமல்லாது, இவளை நன்றாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற பொறுப்பும் வரும். அப்போது பேசிக்கொள்ளலாம்’ என்று பக்குவமாகச் சொல்லிவைக்க வேண்டும். அப்போது, காதல் உணர்வைத் தாண்டி, தான் நேசிக்கும் பெண்ணுக்காக வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணமும் அந்த ஆணுக்கு ஏற்படும்.

ரிஸ்க் டேக்கர்ஸ்!

ஆண் குழந்தைகளைப் பொறுத்தவரையில் ஓர் ஆபத்து என்னவென்றால், அவர்கள் ரிஸ்க் டேக்கர்ஸ். என்ன, ஏதென்று யோசிக்காமல் விபரீதத்துக்குள், ஆபத்துக்குள் குதித்துவிடுவார்கள். எனவே, அவர்கள் வேகத்துக்கான கடிவாளத்தை அவ்வப்போது போட்டுக்கொண்டே இருக்க வேண்டும். குருகுல காலத்தில் அதற்கான பிரத்யேகப் பயிற்சிகள் கிடைத்தன. இன்றோ, அகடெமிக் தேவைகள் பெருகிவிட்டன. படிப்பை முடிக்கவே அவர்களுக்கு நேரம் போதவில்லை. எனவே, பெற்றோர் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்... அல்லது ஆண் குழந்தைகளுக்கென ஓரியன்டேஷன் ட்ரெயினிங் பயிற்சிகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

நட்பு வட்டத்தில் பாலியல் குறித்த உரையாடல்கள்  இயல்பானதே!


பருவமடைகிற வயதில், ஆண் குழந்தைகளுக்குள் பாலியல் குறித்த உரையாடல்கள் முளைக்கலாம். ஒரு வகுப்பில் ஒரு பெண் பருவமடைந்தால், அனைத்துப் பெண்களும் அதைப் பற்றிப் பேசுவதுபோல இதுவும் இயல்பானதே. ஆனால், இன்றைய டெக்னாலஜி யுகத்தில் இன்டர்நெட், யூடியூப்  வாயிலாக தவறான பாலியல் தகவல்களைத் தேடுவதிலிருந்து அவர்களைக் கண்காணிக்க வேண்டியதும் பெற்றோரின் கடமையே. அதேபோல, ஆண் குழந்தைகளுக்கும் குட் டச், பேட் டச் சொல்லிக்கொடுத்து, அவர்களை எச்சரிக்கை உணர்வுடன் வளர்த்தெடுப்பதும் முக்கியம்.”