Advertisement
தாலாட்டால், குழந்தைகளுக்கு கிடைக்கும் நன்மை குறித்து கூறும், குழந்தைகள் மனநல மருத்துவர் ஜெயந்தினி: அம்மாவின் தாலாட்டை கேட்ட படியே துாங்கும் குழந்தைக்கு கிடைக்கும் முதல் நன்மை, 'நான் தனியாக இல்லை' என்ற பாதுகாப்பு உணர்வு. குழந்தைகளுக்கு பேச்சை விட, பாட்டு ரொம்ப பிடிக்கும். அதுவும், அதிக சத்தமில்லாமல், அம்மாவின் மென்மையான குரலில் பாடப்படும் தாலாட்டை, குழந்தைகள் ரசிப்பர்.அதனால் தான், அழுகிற குழந்தைகளை, தாலாட்டு சமாதானப்படுத்துகிறது; அவர்களின் பிடிவாதத்தை குறைக்கிறது; சந்தோஷப்படுத்துகிறது; துாங்கவும் வைக்கிறது. இன்று, 50- குழந்தைகளில், ஒரு குழந்தை, தாமதமாக பேசுகிறது. அந்தக் காலத்தில், தாமதமாக பேசும் குழந்தைகளின் எண்ணிக்கை, மிக மிகக் குறைவு. அதற்கு காரணம், பிறந்தது முதல், அம்மா, பாட்டி, அத்தை, சித்தி என்று, பலரின் தாலாட்டையும் கேட்டு வளர்ந்தது தான்.தாலாட்டு தான், குழந்தைகள் கேட்கும் முதல் மொழி. அந்த மொழியை கேட்டு வளரும் குழந்தைகள், சரியான வயதில் பேச ஆரம்பித்து விடுவர். தாய்மொழியை குழந்தைகளிடம் சேர்க்கும் முதல் கருவி, தாலாட்டு தான்.இன்றைய அம்மாக்கள், ஆங்கில பாடல்களை போட்டு, குழந்தைகளை துாங்க விடுகின்றனர். அதில் ஒலிப்பது, அம்மாக்களின் குரல் கிடையாது என்பதால், குழந்தைகளுக்கு பாதுகாப்பு உணர்வு கிடைக்காது.அடுத்து, அம்மா பேசுவது தாய் மொழி; ஆங்கில பாடலில் ஒலிப்பது, வேறு மொழியாக இருக்கும். குழந்தை, தாய்மொழியை சரளமாக பேச வேண்டுமென்றால், அம்மாக்கள், தாலாட்டு பாட வேண்டும்.சில தாலாட்டு பாடல்கள், குழந்தைக்கும், உறவினர்களுக்கும் இடையே ஒட்டுதலை, பாசத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கும். உதாரணத்துக்கு, 'யாரடிச்சு நீ அழுதே...' என்ற தாலாட்டில், ஒவ்வோர் உறவின் பெயரையும் குறிப்பிட்டு, 'மாமன் அடிச்சாரோ மல்லிகைப்பூ செண்டாலே, தாத்தா அடிச்சாரோ தாமரைப்பூ தண்டாலே, பாட்டி அடிச்சாரோ பாலுாட்டும் கையாலே' என்ற வரிகள், குழந்தைகளின் பிஞ்சு மனதில் விதைக்கப்படுகிறது. அதாவது, உறவினர்கள் கோபத்தை கூட, தன்னிடம் வலிக்காமல் தான் காட்டுவர் என்ற நம்பிக்கையை, குழந்தைகளிடம் ஏற்படுத்துகிறது.'குழந்தைகளின் மனதுக்குள் மட்டுமல்ல, மூளைக்குள்ளும் இதமான சூழ்நிலையை, தாலாட்டு ஏற்படுத்தும்' என்கின்றன, ஆய்வுகள்.மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது, தாலாட்டு கேட்டு வளரும் குழந்தைகளின் மனதில், வன்முறை எண்ணம் குறைவாக இருக்கும்
|
Saturday, March 23, 2019
Vote for BJP AND Vote for H.raja ANNA
- வை
- தரமானவை
YOU - MUMBAI,இந்தியா
சிவகங்கை வேட்பாளர் யார் இந்த ஹெச்.ராஜா ?1."எங்களுக்குத்தான் சரக்கிருக்கு மிடுக்கிருக்கு அதனால் மற்ற சாதி பொண்ணுங்க எல்லாம் எங்களைத் தேடி வருதுங்க", எனத் தொடர்ந்து அச்சில் பதிவேற்ற முடியாத வார்த்தைகளைப் பேசி இந்து சமூகங்களிடையே ஜாதிக் கலவரங்களுக்கு தூபம் போட்டு வந்த சமூக விரோதி திருமாவளவனை எதிர்த்து குரல் கொடுத்த தமிழகத்தில் முதல் ஆண்மகன்..
. 2. வன்னியர் குல க்ஷத்ரியர்களின் குல தெய்வமான திரெளபதி அம்மனை கேவலமாகப் பேசிய அரசியல் அயோக்கியன் பழ.கருப்பையா கண்டித்தவர். 3.தாயார் ஆண்டாளை வேசி எனப் பேசிய வைரமுத்துவை விளாசியவர்
. 4. திமுகவின் இந்துவிரோத அயோக்கியத்தனத்தை தோலுரித்துக் காட்டியவர். 3. விநாயகர் சதுர்த்திக்கு ஊர்வலம் செல்லத் தடை என்ற சட்டத்தை துடைத்தெறிந்த துணிச்சல்காரர் .
.. 5 இந்து கோயில்களின் வருமானம் இந்துக்களுக்கே என்று சட்டத்தின் மூலம் குரல் கொடுத்தவர்.ம 5. மதமாற்ற கைக்கூலிகளின் அராஜகங்களை வெளிக்கொணர்ந்தவர்
. 6. இந்து கடவுள்களை கொச்சைப்படுத்திய சீமானை "இந்துக் கடவுள்களை விமர்சிக்க யாராடா நீ?" என களத்தில் குதித்தவர்.
7. ஜல்லிக்கட்டு தடையின்போது தான் வளர்த்த காளையை தடையை மீறி களத்தில் விட்டு கெத்து காட்டியவர்.
8 இந்து தர்ம போராளிகள் கல்யாணராமன், ஜெகதீசன் போன்றவர்கள் கைது செய்யப்பட்டதில் முன்னின்று மீட்டவர்.
9 கும்பகோணம் திருபுவனத்தில் மாவீரன் ராமலிங்கம் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டதை உடனே சென்று போராடி குற்றவாளிகளை கைது செய்யக் காரணமானவர். பாதிக்கப்பட்ட அந்தக் குடும்பத்துக்கு பத்தே நாளில் இந்து இயக்கங்கள் மூலமாக ரூ.56 லட்சங்களை திரட்டிக் கொடுத்தவர். இந்தக் கொலை வழக்கை தேசிய புலனாய்வுத் துறைக்கு மாற்ற அழுத்தம் கொடுத்தவர்.
. 10. இந்து ஆலயங்கள் மீட்பு இயக்கத்தை உருவாக்கி ஆலயங்கள், ஆலய நிலங்கள், ஆலய சொத்துக்கள் காக்க போராடி இந்துக்களிடம் விழிப்புணர்வை உருவாக்கியவர்..
. 11. இந்து சமய அறநிலையத்துறையின் ஊழல்களை உலகறியச் செய்து சிலை கடத்தல் கும்பல் சிறை செல்லும் சூழ்நிலையை தமிழகத்தில் உருவாக்கியவர்..
. 12. திராவிட இயக்கங்கள், கம்யூனிஸ்ட் மாவோயிஸ்ட் தேசவிரோதிகள், இஸ்லாமிய பயங்கரவாதிகள், கிறிஸ்தவ மிஷனரி குற்றவாளிகள், மொழி பிரிவினைவாதிகள் அனைவருக்கும் சிம்ம சொப்பனமாக விளங்குபவர்...
13. இந்துத்வா எனும் தேசிய சித்தாந்தத்தின் அடையாளமாக ஹெச்.ராஜா எனும் பெயரை தமிழக அரசியலில் உச்சரிக்க வைத்த இந்து தேசிய போராளி ... 14 ஆர்எஸ்எஸ் ஸ்வயம் சேவகராக தேசப் பணி தொடங்கி பாஜகவின் தேசிய செயலாளர் பொறுப்பு வரை 54 ஆண்டுகள் தனது வாழ்வை தேசத்திற்காகவும் இந்து சமுதாயத்திற்காகவும் அர்ப்பணித்த உதாரணமாக புருஷர் .
.. தமிழக இந்துக்களின் ஒட்டுமொத்த பாதுகாவலராகவே வாழ்ந்து வருபவர் திரு.ஹெச்.ராஜா ஜி அவர்கள்... வெகுவிரைவில் அவரது சிங்க கர்ஜனை பாரத பாராளுமன்றத்தில் ஒலிக்க அரெங்கனை பிரார்த்திக்கிறேன். இந்து தர்ம போராளி திரு.ஹெச்.ராஜா ஜி அவர்கள் வாழ்க வளர்க வெல்க
மீண்டும் வரவே வராது! thanks to dinamalar.com
கள்
Advertisement

பேன் தொல்லையில்இருந்து விடுபட, எளிமையான தீர்வுகளை கூறும், ஆயுர்வேத மருத்துவர், ரா.பாலமுருகன்: பள்ளி பிள்ளைகளுக்கு, பேன் தொல்லை அதிகம் வந்தாலும், பெரியவர்கள், சிறு குழந்தைகள் கூட, இந்த தொல்லைக்கு தப்புவது இல்லை. ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு, தொற்றிக்கொள்ள கூடியது இது; அதேபோல், சீக்கிரமே பெருகவும் கூடியது.ஒரேயொரு பேன் மட்டும், ஒரு மாதத்தில், 300 முட்டை - ஈறுகளை இடுகிறது. இவை, ரத்தத்தை உணவாக உறிஞ்சும். முக்கியமாக, எப்போதும் தலையை சொறிந்தபடி இருக்கும் மிக மோசமான பழக்கமும், இதனால் ஏற்படுகிறது.பேன் மற்றும் ஈரு வராமல் தடுக்க, வாரம் இருமுறை தலைக்கு குளித்து, அழுக்கின்றி சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். தலை வறண்டு போகாமல், எண்ணெய் பதம் இருக்கும்படி பார்த்து கொள்ளலாம். நெருக்கமான சிறிய பல் சீப்பில், அவ்வப்போது சீவி பராமரிக்கலாம். தலை துவட்டும் துண்டு, சீப்பு, தலையணை போன்ற வற்றை, தனியாக பயன்படுத்தலாம்.முடக்கத்தான் இலை அல்லது சீதாப்பழ விதையை அரைத்து தலைக்கு தேய்த்து குளிக்கலாம். படிகாரத்தை தண்ணீரில் கரைத்து அல்லது கருந்துளசி கஷாயம் வைத்து, தலை அலசலாம். வேப்பெண்ணெய் உடன், தேங்காய் எண்ணெயை கலந்து, தலையில் தடவி, ஒரு மணி நேரம் ஊறவைத்த பின் குளிக்கலாம். இப்படி தொடர்ந்து, மூன்று வாரங்களுக்கு தேய்த்து குளிக்க, நீண்ட நாட்களாக இருந்த ஈரு மற்றும் பேன் தொல்லை குறையும்.கறுப்பு அல்லிக்கிழங்கு, சிறுநாகப்பூவை நெல்லிக்காய் சாற்றில் அரைத்து, தலைக்கு தடவினால், பேன் தொல்லை நீங்கும்; மீண்டும் வரவே வராது! வேப்பிலையை அரைத்து தலையில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து அலசினால், பேன் ஒழியும்.வேப்பிலை மற்றும் துளசி இலைகளை, தலையணையின் மீது பரப்பி, அதன் மேல் ஒரு துணியை வைத்து படுக்கலாம். வசம்புடன் தண்ணீர் சேர்த்து அரைத்து, தலையில் தேய்த்து, ஊற வைத்து, முடியை அலசினால், பேன் தொல்லை குறையும்.அரை டீஸ்பூன் வேப்பிலைத் துாள், அரை டீஸ்பூன் கடுக்காய்த் துாள், இரண்டு டீஸ்பூன் வெந்தயத் துாள், இரண்டு டீஸ்பூன் பயத்தமாவு, ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச்சாறு ஆகியவற்றை வெந்நீரில் கலந்து, தலையில் தேய்த்து, 10 நிமிடம் ஊற வைத்து தலையை அலசினால், பேன் தொல்லை நீங்கும்.
Sunday, March 10, 2019
உடல், பொருள், ஆவி - மனைவி thanks to dinamalar .com
உடல், பொருள், ஆவி - மனைவி
Advertisement

'யாயும் ஞாயும் யாராகியரோ.....எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்யானும் நீயும் எவ்வழி அறிதும்செம்புலப் பெயல்நீர் போலஅன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே”என்னுடைய தாயும், உன்னுடைய தாயும் உறவினரா?என் தந்தையும் உன் தந்தையும் உறவினரா?நானும், நீயும் எவ்வாறு முன்பு அறிந்தோம்?செம்மண் நிலத்தில் பெய்த மழைநீர் போல...மழைநீரானது மண்ணின் நிறத்தை ஏற்று ஒன்றியபின் யாரால் இரண்டையும் மீண்டும் தனித்தனியே பிரிக்க முடியும்? அன்புடைய நம் இருவருடைய நெஞ்சம் இரண்டற கலந்தபின்.....எப்படிப்பட்ட புனிதமானது இந்த கணவன், மனைவி உறவு. அக்னி சாட்சியாக சுக, துக்கங்களில் துணையிருப்பேன் என்று சத்தியம் செய்து, குடும்ப வாழ்க்கையை துவங்குகிறோம். என்னுடைய தோழிகள் இருவரின் வாழ்வில் நடந்த யரங்களையும், ஒருவர் அதிலிருந்து எப்படி மீண்டு வந்தார், இன்னொருவருடைய வாழ்க்கை பயணம் எப்படி கரடுமுரடாகி போனது என்பது பற்றியதே இக்கட்டுரை.
திக்கற்ற காட்டில்
என் தோழியின் கணவர் சாலை விபத்தில் அகால மரணம் அடைந்தார் என்ற செய்தியை கேட்டதும், அதிர்ந்து போனேன். அவளுடன் கல்லுாரியில் படித்த தோழிகள் சேர்ந்து அவள் இருக்கும் ஊர் நோக்கி விரைந்தோம். போகும் வழியெல்லாம், அவள் கல்லுாரி நாட்களில் இளவரசியாக சுற்றி திரிந்தது, பட்டப்படிப்பு, மேற்படிப்பு படிக்கும் பொழுது எங்கள் கல்லுாரியின் தலைவியாக இருந்து திறமையாக செயல்பட்டது, அவளின் அழகு, சுறுசுறுப்பு என்று சந்தோஷமாக திரிந்தவளை இப்படி ஒரு சூழ்நிலையில் சந்திக்க போகிறோமே என வருத்தப்பட்டுக் கொண்டே அவள் வீட்டைச் சென்றடைந்தோம்.தோழி, அவளுடைய அம்மா, அவளுடைய இரண்டு பெண் குழந்தைகளையும் சமாதானம் செய்யும் பொருட்டு அவர்களின் அருகில் அமர்ந்து ஆறுதல் கூறினோம். அப்பொழுது தோழியின் தாய் கூறிய விஷயங்கள் எங்களை மிகவும் மனவேதனையில் ஆழ்த்தியது. தோழியின் கணவர், மனைவியை மதித்து எந்தவொரு விஷயத்தையும் கலந்து பேச மாட்டாராம். அவருக்கு எவ்வளவு வருமானம், எந்த வங்கியில் அவர் கணக்கு வைத்துள்ளார், எங்கெல்லாம் சொத்து வாங்கி வைத்துள்ளார், வங்கி பாஸ்புக், சொத்து பத்திரங்களை எங்கு பாதுகாப்பாக வைத்துள்ளார் என்ற எந்த வொரு விபரத்தையும் மனைவியிடம் கூறியதே இல்லையாம். ஏதாவது இன்ஸ்சூரன்ஸ் செய்துள்ளாரா? என நாங்கள் கேட்டபொழுது தெரியாதும்மா. ஏதாவது விபரம் கேட்டால் உடனே சத்தம் போட்டு என் மகளை மருமகன் அடக்கிவிடுவார். என் மகளும் அவரை எதிர்த்து பேசாமல் அடங்கிவிடுவாள்.இப்பொழுது என்னுடைய மகளின் வாழ்க்கை கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் உள்ளது. மருமகன் இறந்துவிட்டான் என்ற சோகத்திற்கு மேல் தன்னுடைய மகள் இனி எப்படி வாழ்வாள் என்ற பயமே அவரின் அழுகையில் ஓங்கி இருந்தது.
பெண் தொழில் அதிபர்
என் ஒரு தோழியின் கணவர் கட்டுமானத் தொழிலுக்கு தேவையான பொருட்களை விற்பனை செய்யும் கடையை நடத்தி வந்தார். தினமும் டைரி எழுதும் பழக்கம் உள்ளவர். அவர் ஆறடி உயரம், நல்ல சிகப்பு நிறம், அழகான உருவம் கொண்டவர். என் தோழியை அவருக்கு பெற்றோர்கள் தேர்ந்தெடுத்து நிச்சயம் செய்யும்பொழுது நாங்களே பிரமித்துவிட்டோம். தோழி குண்டாக, கறுப்பாக, குட்டையாக இருப்பார். ஆனால், இனிமையாக பேசுவாள், நல்ல குணவதி. தோழியும் அவர் கணவரும் அவ்வளவு அன்னோனியமாக இருப்பார்கள். பார்ப்பதற்கே ஆசையாக இருக்கும் அவர்கள் குடும்பம் நடத்தும்முறை. தினமும் இரவு 10:00 மணிக்கு கடையை அடைத்துவிட்டு, அவர் வரும்வரை வீட்டிலுள்ள அனைவரும் காத்திருப்பார்கள். அவர் வந்தபிறகே அனைவரும் ஒன்றாக சேர்ந்து அமர்ந்து சாப்பிடுவார்கள். சாப்பிடும்பொழுது தோழியின் கணவர் எந்த டீலரிடம் இருந்து எந்த பொருள், என்ன விலைக்கு வாங்கினேன், அன்று எப்படிப்பட்ட கஸ்டமர்கள் கடைக்கு வந்தார்கள், அவர்களை அவர் எப்படி சமாளித்தார், என்ற விபரங்களை குழந்தைகளிடமும், மனைவியுடனும் கலந்து பேசுவார். வீட்டில் ஒரு டைரி வைத்திருப்பார். அதில் வங்கி விபரங்கள், ஆதார், ஸ்மார்ட் கார்டு, எல்லா வகையான இன்சுரன்ஸ் விபரங்கள், சொத்து விபரங்கள், மேலும், சொத்துக்கள் எங்கெங்கு உள்ளது, அவற்றை என்ன விலைக்கு வாங்கினார் என்ற விபரங்களையும் எழுதி வைத்திருப்பார்.சில வருடங்களுக்கு முன்பு டெங்கு காய்ச்சலில் அவர் இறந்துவிட்டார். ஆனால், கணவர் இறந்த ஐந்தாவது நாள் அந்த சோகத்தை மறைத்து கடையில் அமர்ந்து வேலை செய்ய ஆரம்பித்துவிட்டார் என் தோழி. கணவன் நடத்திய வியாபாரத்தைவிட பல மடங்கு வியாபாரத்தை பெருக்கிவிட்டார். இன்று இரண்டு பெரிய கடைகளுக்கு அவர்தான் அதிபர். கணவர் எதையும் மறைக்காமல் மனைவிக்கு அனைத்து தொழில் ரகசியங்களையும் கூறிய காரணத்தால் என்னுடைய தோழி அதே கடை ஊழியர்களை வைத்து, அழகாக திறம்பட பலரும் புகழும் வண்ணம் அந்த கடையை நடத்தி வருகிறார்.
நிச்சயமில்லா வாழ்க்கை
என்னுடைய அம்மா, இரவு துாங்குவதற்கு முன்பு நாளை போக வேண்டிய இடம் அல்லது நாளை செய்யவேண்டிய செயலை நினைவு கூர்ந்தால், உடனே 'பிழைத்துக் கிடந்தால் பிச்சைக்காரனுக்கு” என்பார். இது நிதர்சனம் அற்ற வாழ்க்கை, எடுத்து வைத்த பழைய உணவு பொருட்களை, நாளை காலை நாம் உயிரோடு இருந்தால்தான் பிச்சைக்காரனுக்கு கொடுக்க முடியும் என்பது இதன் அர்த்தம்.ஒவ்வொரு மனிதனுக்கும் இறப்பு என்பது உறுதி. ஆனால், எப்பொழுது என்பது உறுதியில்லாதது. விரும்பியோ, விருப்பம் இல்லாமலோ, பெற்றோரின் வற்புறுத்தலினாலோ அல்லது விதியின் வசத்தாலோ வாழ்க்கை அமைந்து, சட்ட ரீதியாக கணவன், மனைவியாக உறுதி செய்யப்படுகிறதோ அன்றிலிருந்து அவனும் அவளும் வேறு வேறு அல்ல. மனைவி, கணவன் ஆகியோரின் குறைகளையும், நிறைகளையும் இருவரும் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.கணவன், மனைவியாக ஒன்று சேர்ந்து வாழ ஆரம்பித்த நாள்முதல் ஒவ்வொரு நாளையும், நிமிடத்தையும், வினாடியையும் இருவரும் சேர்ந்து அழகான குடும்பமாக செதுக்க ஆரம்பியுங்கள். இந்த தாய், தந்தைக்கு குழந்தையாக பிறக்க என்ன தவம் செய்தோமோ என உங்களது குழந்தைகள் பெருமைப்படும்படி குடும்பத்தை நடத்திச் செல்லுங்கள்.ஆணாகிப் பெண்ணாகிப் நின்றானவன்அவையொன்று தானென்று சொன்னானவன்தான் பாதி உமைபாதி கொண்டானவன்சரிபாதி பெண்மைக்கு தந்தானவன், என அனைத்துலகையும் ஆளும் ஈசனே உமையவளுக்கு தன்னுடைய உடம்பில் சரிபாதியை கொடுக்கும்பொழுது அவனுடைய குழந்தைகளாகிய நாம் எல்லாம் எம்மாத்திரம்...-அமுதா நடராஜன்எழுத்தாளர், மதுரைr_amudha@yahoo.com
Saturday, March 9, 2019
காரம், சூடு வேண்டாமே! - ஜீவன்குமார், குடல் மற்றும் இரைப்பை மருத்துவர். நன்றி: ஹெல்த் விகடன்-20190215
நன்றி: ஹெல்த் விகடன்-20190215
காரமான உணவுகளிலிருக்கும் `கேப்சாய்சின்’ (Capsaicin) என்ற மூலக்கூறு, வயிறு, குடல், மூச்சுக்குழாய், வாய் போன்ற பகுதிகளில் உபாதைகளை ஏற்படுத்தும். தவிர, அந்தப் பகுதிகளில் வெப்பத்தை அதிகரித்து, எரிச்சலை ஏற்படுத்தும். இது தொடக்கநிலைதான். தொடர்ந்து இதேபோல் சாப்பிட்டுவந்தால், செரிமானக் கோளாறுகள் ஏற்படும். ஏற்கெனவே, நெஞ்செரிச்சல் அல்லது அல்சர் பிரச்னைகள் இருப்பவர்களுக்கு, பாதிப்புகள் தீவிரமடையலாம். 
காரமான உணவுகளில், அமிலங்கள் அதிகமாக இருக்கும் என்பதால், ‘உணவு எதுக்களித்தல்’ பிரச்னை வரலாம். தொடர்ந்து காரமான உணவுகளைச் சாப்பிட்டு வருபவர்களுக்குப் பசியின்மை ஏற்படலாம். காலப்போக்கில் இரைப்பை அழற்சியும் சேர்ந்துகொள்ளும். முதன்முறையாகக் காரமான உணவு சாப்பிடுபவர்களுக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி, செரிமானக் கோளாறுகள் ஏற்படலாம். அவர்கள் உடனே மருத்துவ ஆலோசனை பெற்று உணவு முறையில் மாற்றம் ஏற்படுத்திக்கொள்வது நல்லது.
காரமான உணவுகளைப்போலவே அதிக சூடான உணவுகளும் தவிர்க்கப்பட வேண்டியவை. சுடச்சுட உணவு உண்ணும் பழக்கம் இல்லாதவர்கள்கூட டீ, காபியைச் சூடாகக் குடிப்பார்கள். எந்த உணவையும், வெதுவெதுப்பான சூட்டில் சாப்பிடுவதே சரி. அதிகமாக வறுத்த உணவுகளிலும் கவனமாக இருக்கவேண்டியது அவசியம். காரம் குறைவான, வெதுவெதுப்பான, வேகவைத்த உணவுகளைச் சாப்பிடும் பழக்கமே ஆரோக்கியமானது.’’
Subscribe to:
Posts (Atom)