அளவாகச் சாப்பிடுங்க ஆரோக்கியமாக இருங்க!
12 ஹெல்த்தி டிப்ஸ்...உணவு
என்ன செய்தாலும் வெயிட் மட்டும் குறையவே மாட்டேங்குது. வாயை கட்டவே முடியல... சாப்பிட வேண்டும் என்ற தூண்டுதல் மட்டும் இருந்துகொண்டே இருக்கிறது. இதை எப்படிக் கட்டுப்படுத்துவது? அளவாகச் சாப்பிடும் பழக்கத்தை எப்படிப் பின்பற்றுவது?
உங்களுக்காகவே இந்த டிப்ஸ்...
* பசியில் ‘பொய்ப் பசி' என்பதும் இருக்கிறது. டயட்டில் இருக்கும்போது, இந்த உணவைச் சாப்பிடக்கூடாது என்கிற கட்டுப்பாடு இருக்கும்போது பசி உணர்வு தோன்றும். இது பொய்ப்பசியின் வேலைதான். ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்தால் போதும், பசி அடங்கிவிடும். சர்க்கரை சேர்க்காத பழச்சாறும் அருந்தலாம்.
* பசி வரும்போது, சுகர் ஃப்ரீ சூயிங்கம் மெல்லலாம். அதேநேரம், சமைக்கும்போது வயிற்றில் அமிலம் சுரந்து பசியை ஏற்படுத்தும். அப்போதும் கூடச் 'சூயிங்கம்' மென்று பசியை வெல்லலாம்.
* கிரேவிங் உணர்வு வரும்போது, சிறிது தூரம் நடக்கலாம்.
* இரண்டு உணவு இடைவெளிக்கு நடுவே பசி எடுத்தால், ஏதேனும் ஒரு பழத்தைச் சாப்பிடலாம்.
* பைட் ரூல் (Bite Rule) என்பார்கள். எந்த உணவைச் சாப்பிட்டாலும் நன்றாக மென்று, சுவைத்துச் சாப்பிட்டால் சாப்பிட்ட திருப்தி கிடைக்கும். வயிறு நிறையும். நடுவில் பசிக்காது.
* காலை, இரவு என இருவேளைகளிலும் பல் தேய்க்கும் பழக்கத்தை அவசியமாக்குங்கள். எப்போதெல்லாம் உணவு உண்கிறோமோ, அதன் பிறகு நன்றாக வாய்க் கொப்பளிக்க வேண்டும்.
* நின்றுகொண்டே சாப்பிடும் பழக்கத்தை நிறுத்திவிடுவது நல்லது. இது ஆரோக்கியத்துக்கும் கேடு!
* குழந்தைகள் மிச்சம் வைக்கும் உணவுகளைச் சாப்பிடாதீர்கள். அவை உங்களுக்கான உணவல்ல.
* உங்கள் வீட்டு சமையலறையை 8 மணிக்கு மேல் திறக்காதீர்கள். அதற்குள் இரவு உணவை முடித்தாக வேண்டும் என்ற சூழலை உருவாக்குவது நல்லது.
* உணவைச் சாப்பிடும் அரை மணி நேரத்துக்கு முன்பாகவே, சாலட், சுண்டல், சூப் போன்றவற்றைச் சாப்பிடலாம். இதனால், சாப்பிடும் உணவின் அளவு குறையும்.
* இன்று என்ன சாப்பிட்டோம், நாளை என்ன சாப்பிடப்போகிறோம் என டயட் லிஸ்ட்டை எழுதுங்கள். இதனால், எவ்வளவு சாப்பிடுகிறீர்கள் என்கிற அளவு தெரியும். எது நல்ல உணவு, துரித உணவு என்று புரிந்துகொள்ளவும் முடியும்

No comments:
Post a Comment