Friday, March 31, 2017

எ ப்படி பேச வேண்டும்... எப்படி பேசக் கூடாது? - ஸ்ரீ அன்னையின் அமுத மொழிகள் thanks to vikatan.com

எ ப்படி பேச வேண்டும்... எப்படி பேசக் கூடாது? - ஸ்ரீ அன்னையின் அமுத மொழிகள்

'பேசுவதற்கு முன் யோசி, யோசிப்பதையெல்லாம் பேசிவிடாதே' என்பார்கள். மற்றவர்களுக்கும் நமக்குமான தொடர்பே பேச்சில்தான் இருக்கிறது. கோபத்தில் வார்த்தைகளை இறைத்துவிடாமல் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு பேசுபவனை, சிறந்த வீரன் என்றும் மன வருத்தத்தில் இருப்பவர்களுக்கு, ஆறுதலான வார்த்தைகள்தான் மருந்து என்றும் நபிகள் நாயகம் கூறியுள்ளார். 'சில சமயங்களில் அமைதியாக இருப்பதைக் காட்டிலும், எது உண்மையோ அதை உள்ளபடியே கவனமாகப் பேசுவது நல்லது' என்கிறார் ஸ்ரீஅன்னை.
அன்னை
வாழ்வில் நமக்கு இறைவன் கொடுத்த மிகப்பெரிய பரிசுகளில் ஒன்று பேச்சு. கனிவான வார்த்தைகள் போரையும் நிறுத்தக்கூடிய வல்லமையுடையது. அதேநேரத்தில் மனதைக் காயப்படுத்தும் ஒரு சிறிய வார்த்தையால் ஒருவருக்கொருவர் பல ஆண்டுகளாகப் பேசிக்கொள்ளாமல் இருப்பதையும் நாம் பார்த்திருப்போம். 
பேசுவது என்பது ஒரு வகையான கலை. பேச்சால் வாழ்ந்தவர்களும் இருக்கின்றார்கள், பேச்சால் வீழ்ந்தவர்களும் இருக்கின்றார்கள்.நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் இறைவனிடம் பதில் சொல்லத் தயாராக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
கூட்டத்தில் பேசும்போதோ, மற்றவர்களிடம் பேசும்போதோ எப்படிப் பேச வேண்டும் என்பதைப் பற்றி பார்ப்போம். 
* தேவையில்லாமல் பேசி மதிப்பைக் குறைத்துக்கொள்ள வேண்டாம். தேவையிருந்தால், மட்டுமே பேசுங்கள்.
* பிறர் மனம் புண்படாமல், அன்பாகப் பேசுங்கள். 
* நன்மைதரும் பேச்சை மட்டும் பேசுங்கள்.
* மலர்ந்த முகத்துடன் கண்ணியமாகப் பேசுங்கள்.
எப்படி பேச வேண்டும் எப்படி பேசக் கூடாது
* நீதி தவறாமல் பேசுங்கள்.
* தீய பேச்சுக்களால்  உங்கள் நாவைக் கறைப்படுத்திக்கொள்ளாதீர்கள்.
* பிறருடைய குறைகளைப் பற்றிப் பேசாதீர்கள்
* பிறரைக் கேலி செய்யும் வகையில் பேசாதீர்கள்.
* யாரைப் பற்றியும் தவறாகப் பேசாதீர்கள் குறிப்பாக, அவர்கள் இல்லாத நேரத்தில்!
* உரையாடும்போது எதிரே உள்ளவர் மட்டும் கேட்கும்படிப் பேசுதல் வேண்டும். பலருடைய காதிலும் விழுமாறு பேசுவதைத் தவிர்க்கவேண்டும்.
பேசும் முறை
* பேசும்போது கண்களை உருட்டுதலும் அடிக்கடி இமைத்தலும் கைகளையும் தலையையும் மிகையாக அசைப்பதைத் தவிர்க்க வேண்டும்.
பயனற்ற உரையாடலைத் தவிர்த்தல் வேண்டும்.
* பேசும்போது சொற்களை முழுமையாக உச்சரித்தல் வேண்டும். சொல்லின் கடைசி எழுத்து வரையில் தெளிவாக உச்சரித்தல் வேண்டும்.
* ஒருவர் கேட்கும் கேள்விக்குச் சரியாக பதிலளிக்க, முதலில் அவர் கூற வரும் முழுக் கருத்தையும் தெளிவாகப் புரிந்த பின்னரே பதில் அளிக்க வேண்டும்.
* முகஸ்துதி செய்வதை நிறுத்துங்கள். ஏனெனில் அன்பைக் காட்டும் வழி அதுவல்ல!

No comments:

Post a Comment