Advertisement
கண்ணதாசன் பாடல்பாக்டீரியாக்களுக்கும்பொருந்தும்!
தொற்றுநோய் சிறப்பு மருத்துவர், வி.ராமசுப்பிரமணியன்: மனித உடம்பு, செல்களால் ஆனது. அதாவது, ௧௦க்கு பக்கத்தில், ௧௩ சைபர் போட்டால் வரும் எண்ணிக்கையில், செல்களும்; ௧௦க்கு பக்கத்தில், ௧௪ சைபர் போட்டால் வரும் எண்ணிக்கையில் பாக்டீரியாக்களும், உடலில் உள்ளன.'மைக்ரோபயோம்' என்பது, ஓர் இடத்தில் என்ன மாதிரியான கிருமிகள் இருக்கின்றன என்பதைக் கண்டுபிடிப்பதற்கான கணக்கீடு. 'ஹீயூமன் மைக்ரோபயோம்' பற்றி, நிறைய ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.பாக்டீரியாக்கள் எல்லாமே கெட்டவை அல்ல; எல்லாமே நல்லவையும் அல்ல. நம் குடலுக்குள் உள்ள பாக்டீரியாக்கள், சாப்பிடும் உணவு செரிமானமாக, முக்கிய பங்கு வகிக்கின்றன.பாக்டீரியாக்கள், உணவை சிதைத்து செரிக்க செய்யும் போது, சில வாயு, அமிலங்களும் உருவாகும். அவை தான் வாயு, கழிவாக, வாடையோடு வெளியேற்றுகின்றன. ஆனால், நல்ல பாக்டீரியாக்களை அடையாளம் கண்டு, அவற்றை மட்டும் வளர்த்தெடுப்பது சவாலான வேலை.ஜலதோஷத்திற்காக சாப்பிடும் ஆன்டிபயாடிக் மாத்திரைகள், அவை உருவாக்கிய பாக்டீரியாக்களை மட்டும் கொல்லாமல், குடலில் இருக்கிற பல நல்ல பாக்டீரியாக்களையும் கொன்று விடும். அதேநேரத்தில், கெட்ட பாக்டீரியாக்கள் அதிகமாகி விடும்.உதாரணத்துக்கு, 'குளோஸ்ட்ரிடியம் டிபிசிள்' என்ற பாக்டீரியா அதிகமாகி, கடுமையான பேதியை உருவாக்கி விடும்; கடுமையான காய்ச்சலும் வரும். இதை வெளியேற்றுவது சிரமமான வேலை.அதேபோல், மனித உடலின் சராசரி அமிலத்தன்மை, 7.4 பி.எச்., பெண்களின் பிறப்புறுப்பில், 7.2 அல்லது 7.3 பி.எச்., இருக்கும். இந்த அமிலத்தன்மையை நிர்வகிப்பதில், 'லாக்டோபேசில்லஸ்' என்ற பாக்டீரியாவின் பங்கு முக்கியமானது.சுத்தம் செய்யும் போதோ, ஆன்டிபயாடிக் மாத்திரைகள் எடுத்துக் கொள்ளும் போதோ, லாக்டோபேசில்லஸ் பாக்டீரியாக்கள் இறந்து விட்டால், அந்த இடத்தில் கெட்ட பாக்டீரியாக்கள் அமர்ந்து விடும்.அதனால், அமிலத்தன்மை கட்டுப்பாடு இழந்து, 7.6 - 7.7 பி.எச்., அளவுக்கு அதிகமாகி விடும். அமிலத்தன்மை அதிகமானால், வாடை அதிகமாகி விடும். இதை, 'இன்பெக் ஷன்' என சொல்ல முடியாது; இது பிரச்னைக்கான துவக்கம். இதை, 'பாக்டீரியல் வெஜினோசிஸ்' என
சொல்வோமலாக்டோபேசில்லஸ் பாக்டீரியாவை, நன்மை செய்யும் பாக்டீரியா என, சொல்ல முடியாது. இந்த பாக்டீரியா ரத்தத்துக்குள் போனால், மனிதன் காலி. 'யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் சவுக்கியமே' என, பாடினாரே கண்ணதாசன், அது பாக்டீரியாக்களுக்கும் பொருந்தும்.

No comments:
Post a Comment