Saturday, June 30, 2018

tஎழுத்தறிவித்தவன் இறைவன் thanks to tamil and vedas.com

] ஒரு குட்டிக் கதை– ‘எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்’ (Post No.5161)
Yahoo/Inbox
  • Tamil and Vedas <comment-reply@wordpress.com>
    To:theproudindian_2000@yahoo.co.in
    Jun. 30 at 12:36 a.m.
    Resp

    ஒரு குட்டிக் கதை– ‘எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்’ (Post No.5161)

    by Tamil and Vedas
    Written by LONDON SWAMINATHAN



    Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.


    'எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்'-
    --- நறுந்தொகை/ வெற்றி வேற்கை

    பாகவத புராணத்தில் உள்ள கதை.
    கார்த்த வீர்யார்ஜுனன் என்ற மன்னன் மஹா வீரம் பொருந்தியவன்; புஜ பல பராக்ரமம் உடையவன். மாவீரன் ராவணனையே புரட்டி எடுத்தவன். ராவணனையும் பயமுறுத்திய ஒரே ஆள். நர்மதை நதிக்கரையில் உள்ள மஹிஸ்மதி நகரை தலைநகராகக் கொண்டு ஹைஹய நாட்டை ஆண்டு வந்தவன். அவன் நர்மதை நதியில் மனைவிமார்களுடன் குளித்துக் கொண்டிருந்த போது ராவணன் வந்து வாலாட்டினான். அவனைப் பிடித்து நகரின் ஒரு மூலையில் மிருகங்களைக் கட்டிவைப்பது போல கட்டி காட்சிப் பொருளாக வைத்தான். பின்னர் அவனது தாத்தா புலஸ்த்யர் வந்து வேண்டவே ராவணனை விடுதலை செய்தான்.

    கார்த்த வீர்ய அர்ஜுனனுக்கு ‘ஆயிரம் கையுடையோன்’ என்று ஒரு பெயர் உண்டு. இந்த ‘ஸஹஸ்ர பாஹு’ என்ற பெயர் வந்த காரணம் பாகவத புராணத்தில் உளது. ராமாயணத்திலும் இவன் பெருமை பேசப்படுகிறது.

    கார்த்த வீர்யனின் குரு தத்தாத்ரேயர். அவரிடம் அவன் பணிவுடன் வேத சாஸ்திரங்களைக் கற்று வந்தான். அவருக்குப் பணிவிடை செய்யும் முகத்தான், அவர் உறங்கும்போது கால்களை அமுக்கி விடுவான். ஒரு முறை இப்படிச் செய்கையில் குரு தத்தாரேயரின் காலில் இருந்த தீ , கார்த்த வீர்யனின் கைகளை எரிக்கத் துவங்கியது. ஆயினும் குருவின் நித்திரைக்குப் பங்கம் விளையக்கூடாதே என்ற எண்ணத்துடன் பொறுத்துக் கொண்டான். அவர் தூங்கி எழுவதற்குள் அந்தத் தீ முழங்கை வரை வந்து விட்டது.

    குரு தத்தாத்ரேயர் அதைப் பார்த்து என்ன ஆயிற்று? என்று வினவினார். கார்த்த வீர்யன், அவரது நித்திரை கலையாமல் இருக்க மிகவும் பிரயத்தனப் பட்டதைப் பகர்ந்தான்; குருவுக்கு மெத்த மகிழ்ச்சி. அவனது கைகளைத் தடவிக் கொடுத்தார். உனக்கு இன்று முதல் ஆயிரம் கைகள் இருந்தால் என்ன பலம் கிட்டுமோ அவ்வளவு பலம் கிடைக்கும்; உன்னை வெல்லுவது எவனுக்கும் இயலாது என்று வரம் அளித்தார்.

    கார்த்த வீர்ய அர்ஜுனன் ‘ஆயிரம் கையுடையோன்’ ‘ஸஹஸ்ரபாஹு’ என்ற பெயருடன் கொடிகட்டிப் பறந்தான். அவன் இருக்கும் மேற்கு , மத்திய இந்தியாவுக்கு ராவணன் வரவே பயந்து நடுங்கினான். நமது புராண இதிஹாசங்களின் படி ராவணன் அஞ்சிய ஒரே மன்னன் கார்த்த வீர்ய அர்ஜுனன்.

    வாழ்க தத்தாத்ரேயர்!

    அதிவீரராமன் என்ற பாண்டிய மன்னன் இயற்றியது நறுந்தொகை. அதில் கூறப்படும் 'எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்'
    கருத்து இந்து தர்மத்தின் உயரிய கருத்து “குருவே பிரம்மா, குருவே விஷ்ணு,  குருவே மஹேஸ்வரன்; அவரே பரப் ப்ரஹ்மம்” என்ற ஸ்லோகத்தைச் சொல்லி எல்லோரும் வணங்குவர். இது வேத கால வழக்கம். உலகில் எங்கும் காண முடியாதது. குமரி முதல் இமயம் வரை மட்டுமே உள்ள கருத்து. வேத கால இந்துக்கள் வெளி நாட்டில் இருந்து வந்ததாகக் கூறும் அரை வேக்காடுகளுக்கு வேட்டு வைக்கும் கருத்து இது. பாரத மண்ணில் பிறந்து வளர்ந்த கருத்து!
    உலகில் வேறு எங்கும் குரு குலமோ, ஆசார்ய வழிபாடோ இல்லாததால், ஆரிய-திராவிடம் பேசும் கூத்தாடிகளைப் புரட்டிப் புரட்டி அடிக்கும் வாக்கியம் இது

No comments:

Post a Comment