Saturday, June 30, 2018

தந்தையின் ஸ்பரிசம் குழந்தைக்கு முக்கியம்! thanks to dinamalar.com



 
Advertisement
   சொல்கிறார்கள்
தந்தையின் ஸ்பரிசம் குழந்தைக்கு முக்கியம்!'மான்டிசொரி' முறையில் குழந்தைகளை பயிற்றுவிக்கும் விஜயா: டெலிவரிக்காக பிரசவ அறைக்கு செல்லும் பெண்ணுக்கு, அரை நாளில் பிரசவம் ஆகலாம்; அரை மணி நேரத்தில் அல்லது ஒரு நாள் கூட ஆகலாம். கர்ப்பிணிக்கு அது, பயமும், மகிழ்ச்சியும் கலந்த வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.அதனால், கர்ப்பிணியை பிரசவ அறைக்கு அனுப்பி வைத்து, அறைக்கு வெளியே காத்திருக்கும் உறவுகள், ஆத்மார்த்தமாக பிரார்த்தனையில் ஈடுபட வேண்டும். அது மட்டுமல்ல; தங்கள் வீட்டுப் பெண்ணுக்கு, நல்லபடியாக பிரசவம் நடக்கும் என்ற ரீதியில், 'பாசிடிவ்'வாக பேசிக் கொண்டிருக்க வேண்டும்.இதையெல்லாம் விட்டு விட்டு, கையில் இருக்கும் மொபைலில், 'வாட்ஸ் ஆப்' பார்ப்பது, கேம்ஸ் விளையாடுவது, பிறரைப் பற்றி வம்பு பேசுவது, அலுவலக வேலைகளை கவனிப்பது உள்ளிட்ட செயல்களை செய்யக் கூடாது.அப்பா என்ற ஸ்தானத்தை கணவரும்; தாத்தா - பாட்டி என்ற ஸ்தானத்தை, மாமியார், மாமனாரும் அடையும் தருணம் என்பதால், அதை அழகாக உள்வாங்கி, அனுபவிக்க வேண்டும்.குறிப்பாக, பிரசவ நேரத்தின்போது, பெண்ணின் கணவர் கட்டாயம், அந்தப் பெண்ணுடன் இருக்க வேண்டும். தன் அன்பால், அப்பெண்ணுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டும். குழந்தை பிறந்த உடன், குழந்தையை பேருக்கு கொஞ்சி விட்டு, இனிப்புகளை கொடுக்கவும், நண்பர்களுக்கு தகவல் சொல்லவும், தான் அப்பா ஆனது குறித்து, 'பேஸ்புக்'கில், 'ஸ்டேட்டஸ்' போடவும், ஓடிவிடக் கூடாது.பிரசவம் முடிந்தவுடன், குழந்தைக்கு தாயின் சீம்பால் கட்டாயம் கொடுக்கப்பட வேண்டும். எப்படி தாயின் சீம்பால், குழந்தைக்கு தேவையோ, அதே அளவு, தந்தையின் முதல் ஸ்பரிசமும், பிறந்த குழந்தைக்கு மிக முக்கியமாக தேவை.ஏனெனில், பிரசவம் முடிந்த களைப்பில் தாய், குழந்தையை சரியாகக் கவனிக்க முடியாத சூழ்நிலையில் இருப்பார். இந்த வெற்றிடத்தை, தந்தை தான் நிரப்ப வேண்டும். தந்தையின் முதல் ஸ்பரிசம், குழந்தைக்கு மிக மிக முக்கியமானது.பிறந்த குழந்தையால், அப்பாவின் தொடுதலை நன்கு உணர முடியும். இது, அப்பா - குழந்தை இடையிலான பிணைப்பை, இன்னும் வலுப்படுத்தும். அதனால், தந்தையாக மட்டுமல்லாமல், தாயுமானவனாகவும் அவர், அந்த நேரத்தில் செயல்பட வேண்டும்.குழந்தையை இந்த நேரத்தில் நன்கு கவனித்துக் கொள்ள வேண்டியது எவ்வளவு முக்கியமோ, அதேபோல பிரசவித்த மனைவியையும், கணவர் அன்புடன் நடத்துவது மிக முக்கியம்.மனைவியிடம் சதா எரிச்சலுடன் நடத்துவது, கோபம் காட்டுவது, முகத்தை துாக்கி வைத்துக் கொள்வது உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும். கணவரின் அன்பும், ஆறுதலும் தான், பிரசவித்த பெண், தன் பழைய நிலைக்குத் திரும்ப உதவும்.

No comments:

Post a Comment