Saturday, June 15, 2019

தண்ணீர் சாப்பிடுங்கள்! thanks to dinamalar


தண்ணீர் சாப்பிடுங்கள்!
  
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14ஜூன்
2019 
00:00
'நீரை சாப்பிட வேண்டும்; உணவை குடிக்க வேண்டும்' என்று, ஒரு முதுமொழி உண்டு. உணவை, வாயில் நன்றாக மென்று, கூழாக்கி, நீராகாரமாக குடிக்க வேண்டும் என்பதே அதன் பொருள். தண்ணீரை, மெதுவாக, 'சப்பி சப்பி' சாப்பிட வேண்டும். தண்ணீரில், ஆறு சுவைகள் உள்ளன. 
தண்ணீரை, சப்பிக் குடிப்பதன் மூலம், உடலுக்கு தேவையான, ஆறு சுவைகளையும் பெற்றுக் கொள்ளலாம். சப்புவதால் நொதிகள் கலந்து, உடலுக்கு நன்மைகள் ஏற்படுகிறது. 
அண்ணாந்து, 'கடகட' என, தண்ணீர் குடிப்பவர்களுக்கு, 'டான்சில்' நோய் வர வாய்ப்புள்ளது. 
தொண்டை வழியாக தண்ணீர், கடக்கும் போது, டான்சில் என்ற பகுதி வேகமாக வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. எனவே, அதில் நோய் வர வாய்ப்புள்ளது. தண்ணீரை மெதுவாக குடித்தால், உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும். 
நுரையீரல் சம்பந்தப்பட்ட, இளைப்பு, நெஞ்சு சளி மற்றும் மூக்கு சம்பந்தப்பட்ட சைனஸ் போன்ற, எந்த வியாதியும் வராது. 

No comments:

Post a Comment