Sunday, April 15, 2018

சொல்லாமல் சந்யாசி ஆனால் தண்டணை! சாணக்கிய நீதி (Post No.4913) thanks to tamil and vedas.com

st] சொல்லாமல் சந்யாசி ஆனால் தண்டணை! சாணக்கிய நீதி (Post No.4913)
Yahoo/Inbox
  • Tamil and Vedas <comment-reply@wordpress.com>
    To:theproudindian_2000@yahoo.co.in
    14 Apr at 7:19 AM
    Respond to this post by replying above this line

    New post on Tamil and Vedas

    சொல்லாமல் சந்யாசி ஆனால் தண்டணை! சாணக்கிய நீதி (Post No.4913)

    by Tamil and Vedas
    சொல்லாமல் சந்யாசி ஆனால் தண்டணை! சாணக்கிய நீதி (Post No.4913)


    WRITTEN by London Swaminathan 

    Date: 14 April 2018

    Time uploaded in London –  14-18 (British Summer Time)

    Post No. 4913

    Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.



    WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.


    கௌடில்யன் எனப்படும் சாணக்கியன் 2300 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய, உலகின் முதல் பொருளாதார நூலான அர்த்தசாஸ்திரத்தில், தண்டனை பற்றி பல சுவையான விஷயங்கள் உள்ளன.

    கடுமையான தண்டனை கொடுத்தால் மக்கள் வெறுக்கிறார்கள்;
    குறைவான தண்டனை கொடுத்தால் மக்கள்  நிந்திப்பார்கள்;
    தவற்றுக்கு ஏற்ற தண்டனை கொடுத்தால் மக்கள் மதிப்பார்கள் (அர்த்தசாஸ்திரம் 1-4

    யார் ஒருவன் அதிகமாகக் குடிக்கிறானோ சூதாடுகிறானோ, வேட்டை ஆடுகிறானோ அவர்களை, சட்டம் சந்தேகத்துடன் பார்க்கும் - (4-6)

    பெண்கள் விஷயத்திலோ அல்லது வேறு எதிலோ அதிக ஈடுபாடு கொண்டிருப்பது குற்றம் - (8-1)

    ஒரு ஆணும் பெண்ணும் திருமணத்துக்குப் பின்னர் கூடி வாழ வேண்டும். மாத விலக்குக்குப் பின்னர் மனைவியுடன் படுக்க மறுக்கும் கணவன் குற்றம் இழைத்தவன் ஆவான் (1-3; 3-2)
    மஹா பாரதமும் இந்தக் கருத்தைச் சொல்கிறது.
    ஒரு ஆண்மகன் இஷ்டப்பட்டால் வீட்டை விட்டு ஓடிப் போய் சந்யாசி ஆகிவிட முடியாது. அவன் தனது மனைவியும், மகனும் வாழ வேண்டிய வசதிகளைச் செய்து கொடுத்த பின்னரே சந்யாசம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
    வயதானவ ஒருவர் காவி ஆடை போட்டுக்கொள்ள விரும்பினாலும் அரசாங்க அதிகாரிகளுக்குச் சொல்லாமல் செய்வது தண்டணைக்கு உரிய குற்றம் ஆகும் - (2-1)

    ஒரு அரசன் கூட எதிலும் நிதானம் காட்ட வேண்டும் என்பது 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த கொள்கை. அரசன் சுக போக விஷயங்களில் ஈடுபட்டால் அறமும் இல்லை, பொருளும் இல்லை என்று ஆகிவிடும் (பொருள்= செல்வம்; அறம்= தர்மம்) – மநு 7-46

    தொல்காப்பியமும் திருக்குறளும் அறம், பொருள், இன்பம் ( தர்ம, அர்த்த, காம) என்ற சொற்களைப் பல இடங்களில் வலியுறுத்துகிறது. இதையே கௌடில்யன் எனப்படும் சாணக்கியன் அவ்விரு நூல்களுக்கும் முன்னரே சொல்லிவிட்டான்.
    இன்பம் இல்லாமல் வாழாதீர்கள் (ந நிஸ்ஸுகஸ்யாத்- 1-7) என்று கௌடில்யன் கூறுவான். உள்ளத்தில் ஆசைத் தீ எரியட்டும். ஆனால் அறத்துக்கும் பொருளுக்கும் ஊறு விளைவிக்காத வகை யில் காமம் (ஆசை) இருக்க வேண்டும் என்பான் (1-7).

    சாணக்கியன் சொல்லும் பல விஷயங்கள் மஹா பாரத சாந்தி பர்வத்திலும் உள்ளது. இது 3000 ஆண்டுகளுக்கு முன்னரே இருந்ததால் தமிழர்களும் தொல்காப்பியத்திலும் திருக்குறளிலும் அறம், பொருள் இன்பமென்பதை அதே வரிசையில் அப்படியே (தர்ம, அர்த்த, காம) விளம்பினர்.

    திருக்குறளின் பெயர்களில் ஒன்று முப்பால் (அறம், பொருள், இன்பம்).
    இந்த மூன்று விஷயங்களை (த்ரிவர்க) என்று இயம்புவர்.
    வாத்ஸ்யாயனர் எழுதிய காம சூத்ரமும் இது பற்றிக் கூறும்:-

    ஒரு மனிதனுடைய வாழ்வு 100 ஆண்டுகள். இதை அவர்கள் முறையாகப் பிரித்து, ஒன்றுக்கு ஒன்று மோதாமல், அனுசரணையாக இருக்கும்படி அமைத்துக்  கொள்ள வேண்டும். மாணவப் பருவத்தில் கல்வியும், பொருள் ஈட்டும் வழிகளும் நோக்கம் ஆக இருக்க வேண்டும்.
    வாலிபப் பருவத்தில் காம சுகங்களை நாட வேண்டும்; முதுமையில் மோட்சத்துக்கான வழிகளில் மனம் செலுத்த வேண்டும். வாழ்க்கையின் நிலையாமையை உணர்ந்து, தக்க விதத்தில் இக்குறிக்கோள்கள்களைப் பின்பற்ற வேண்டும்.

    திருக்குறளுக்கு முப்பால் என்று பெயரிட்டது ஏன்?
    த்ரிவர்கங்களில் (அறம், பொருள் இன்பம்) மூன்றையும் அல்லது இரண்டையாவது அடையும்   செயல்களைச் செய்ய வேண்டும்.  ஆனால் மூன்றில் எந்த ஒன்றும்  அடுத்த இரண்டு குறிக்கோள்களைப் பாதிக்கக்கூடாது.(காமசூத்திரம் 1-2-51)
    இவற்றைக் காணும் போது திருக்குறளுக்கு முப்பால் என்று பெயர் வந்தது ஏன்? திருவள்ளுவர் ஏன் தன் நூலை முப்பால்களாகத் தொகுத்தார் என்பது நன்கு விளங்கும்.

    கிரேக்க அறிஞர் அரிஸ்டாடிலும் கூட கிட்டத்தட்ட இந்தக் கருத்துகளை எதிரொலிக்கிறார்.

    எந்த ஒரு விஷயத்திலும் மிக அதிக ஈடுபாடோ மிகக் குறைவான ஈடுபாடோ அழிவை ஏற்படுத்தும். உடற்பயிற்சியில் இப்படி ஏற்ற தாழ்வு இருந்தால் பலம் பாதிக்கப்படும்; மதுவிலோ, மாமிச உணவிலோ இப்படி ஏற்ற தாழ்வு இருந்தால் ஆரோக்கியம் பாதிக்கப்படும். தைரியம், கோபம் முதலிய குணங்களில் ஏற்ற தாழ்வு இப்படி இருந்தால் அழிவை உண்டாக்கும்; நடுநிலை வகிப்பதே சாலச் சிறந்தது (ETHICS , ARISTOTLE எதிக்ஸ் 2-2)

    மநுவும் மனு நீதி நூலில் இதையே உரைக்கிறார்:
    மன்னன் என்பவன் தர்ம அர்த்த காம விஷயங்களைக் கற்றவன் ஆக இருத்தல் அவசியம்; தன் ஆட்சி அதிகாரத்தில் இம்மூன்றிலும் படிப்படியாக முன்னேற்றம் காண வேண்டும் (தர்ம காமார்த்தகோவிதம்; த்ரைவர்கேனாபிவர்ததே- மநு 7-26/27)

    அர்த்தசாஸ்திரம் இதை இன்னும் தெளிவாகச் செப்பும்:

    அறம், பொருள் இன்பம் ஆகிய மூன்றில் ஏதேனும் ஒன்றை அளவுக்கு அதிகமாகப் பின்பற்றினால் பின்பற்றப்பட்ட ஒரு விஷயம் பாதிப்பதோடு மற்ற இரண்டையும் கெடுத்துவிடும் (1-7)

    2000 அல்லது 3000 ஆண்டுகளுக்கு முன்னரே இதையெல்லாம் சிந்தித்துஎழுதி இருப்பது சிறப்புக்குரியது.
    xxxx

    தொல்காப்பியத்தில் அறம் பொருள் இன்பம்
    https://tamilandvedas.com/.../தொல்காப்பியத்தில...
    ... (மோட்சம்)= அறம்பொருள்இன்பம், (வீடு) என்ற வடமொழி வரிசை திருக்குறள் காலத்தில் தோன்றி பதினென் கீழ்க்கனக்கு நூல்களில் பெருகுவதைக் காணலாம். புறம் 28, 31 பாடல்களில் காணப்படும் இந்த இந்து மதக்கருத்துக்கள் தொல். இல் 1363, 1038 சூத்திரங்களிலும் காணக்கிடக்கிறது. 9.
    ''தர்ம, அர்த்த, காம'' என்ற வட மொழிச் சொற்றொடர் ''அறம்,பொருள்இன்பம்'' என்று தமிழில் அதே வரிசையில் வருகிறது. இவை வாழ்க்கை மூல்யங்கள்- இந்தியர்களின் ஆதார சுருதி- பாரதீய வாழ்வின் அஸ்திவாரக் கற்கள்.–இதை மஹாபாரதத்திலும் காணலாம். தொல்காப்பியம்(சூத்திரம்1037, 1363) ...
    https://tamilandvedas.com/.../தொல்காப்பியத்தில...
    தொல்காப்பியத்தில் எட்டுவகைத் திருமணங்கள்!! ... ஆரிய திராவிட வாதம் பேசும் அரை வேக்காடுகளுக்கு சூத்திரம் சூத்திரமாகத் தொல்காப்பியர் அடிமேல் அடி கொடுக்கிறார். ... வாழ்க்கையின் லட்சியங்களை அறம்பொருள் இன்பம், வீடு (தர்மார்த்த காமமோக்ஷ) என்று பிரிப்பது.

Thursday, April 12, 2018

கோடை கால நோய்களை தவிர்க்க, thanks to dinamalar.com



கோடையும் குளுமையாகும்!
கோடை கால நோய்களை தவிர்க்க, 'டிப்ஸ்' தரும், ஆயுர்வேத மருத்துவர், சாந்தி விஜய்பால்: கோடை காலத்தில் பெரும்பாலானோர் எதிர்கொள்கிற பிரச்னை, 'புட் பாய்சனிங்!' சுகாதாரமற்ற, ஐஸ் கட்டி கலந்த பழச்சாறு, மைதா, அசைவ உணவுகள், புட் பாய்சனிங்குக்கு முக்கிய காரணமாக அமைகின்றன. சீரகத்தை வறுத்துப் பொடி செய்து, ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை, ஒரு டீஸ்பூன் பொடியை, மோரில் கலந்து குடிக்க, வயிற்றுப் போக்கு, புட் பாய்சன் சரியாகும்.குளிர்ந்த நீர் குடித்தால் தான், தாகம் தணியும் என்று நினைப்போர், மண் பானையில் தண்ணீர் ஊற்றிக் குடிக்கலாம். அதற்கு முன், நீரைச் செம்புப் பாத்திரத்தில் ஊற்றி வைத்து, அதன் பின் பானையில் ஊற்றிக் குடிக்கும்போது, சுத்தமான மற்றும் குளிர்ச்சியான தண்ணீர் கிடைக்கும். அதோடு உஷ்ணம் குறைந்து, வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னை வராது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, அவரவர் உடல் எடையைப் பொறுத்து, தண்ணீர் குடிப்பது நல்லது. பெண்கள் பணிக்குச் செல்வோராக இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை, தண்ணீர் குடிப்பது அவசியம்.ஜூஸ் குடித்தாலும், தர்பூசணி, கிர்ணிப்பழம், திராட்சை என, பொட்டாஷியம் அதிகம் உள்ள பழச்சாறாக அருந்துங்கள். குறைந்த அளவு இஞ்சி கலந்து கரும்புச்சாறு அருந்தினால், சிறுநீர் பிரச்னைகள் வராது; இளநீரும் அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். இரவில் பனங்கற்கண்டு கலந்த பாலை அருந்தினால், உடல் சூடு தணியும். அதேபோல், கொத்துமல்லித் தழையை அரைத்து, மோரில் கலந்து குடித்து வர நன்மை அளிக்கும்.நீர்க் காய்கறிகளை அதிகம் சமைத்துச் சாப்பிட்டால், சூட்டினால் வரும் வேனல் கட்டிகள் ஏற்படாது. உடலில் சூடு அல்லது அழுக்கு சேர்வதால் கூட, வேனல் கட்டி உருவாகும். கூடுமான வரை காட்டன் துணிகளை உடுத்துங்கள். தண்ணீர் அதிகம் குடிக்காமல் இருப்பதால், குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்படும். இதற்கு, கொய்யாப் பழம் நல்ல மருந்து. இரவு உணவை சீக்கிரமே முடித்து, பனங்கற்கண்டு பால் அருந்த கொடுக்கலாம் அல்லது கிஸ்மிஸ், திராட்சை, 20 சாப்பிடக் கொடுக்கலாம்.வெயிலில் அதிக நேரம் வெளியில் செல்வோர், தலையில் எண்ணெய் வைக்க வேண்டாம். ஏனெனில், வெயிலின் சூட்டை எளிதாக எண்ணெய் தலை இழுத்துக் கொள்ளும். இரவில் உறங்கும்போது தலைக்கு எண்ணெய் வைத்துக் கொள்ளலாம். நல்லெண்ணெயை விட தேங்காய் எண்ணெயை, கால் பாதங்களில், நகங்களில், வயிற்றில் தேய்த்தால் சூடு இறங்கும்.கோடை காலத்தில் அளவோடு சாப்பிடுங்கள்; இயற்கையோடு இணைந்து வாழுங்கள். உணவில் கவனம் செலுத்தினால், கோடை காலமும் நமக்கு, குளிர் காலம் தான்.

Saturday, April 7, 2018

கோவிலுக்கு செல்வது ஏன்? thanks to dinamalar.com

கோவிலுக்கு செல்வது ஏன்?

எழுத்தின் அளவு:

Advertisement

பதிவு செய்த நாள்

08ஏப்
2018 
00:00

கோவில் என்பது வெறும் வழிபாட்டு தலம் மட்டுமல்ல; அது, ஆன்ம பலத்தை தரும் இடம். கோவில்களில் அபரிமிதமான காந்த சக்தியும், பாசிட்டிவ் எனர்ஜியும் நிறைந்துள்ளது.
கோவிலின் மையப்பகுதியில், மூலவர் சிலை இருக்கும் இடத்தை, கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என்போம். இந்த மூலஸ்தானம் தான், காந்த மற்றும் பாசிட்டிவ் எனர்ஜி குவிந்துள்ள பகுதி.
பழைய கோவில்களில், கர்ப்பகிரகத்தின் கீழ், செப்பு தகடுகள் பதிக்கப்பட்டிருக்கும்.
இதுவே, கீழே இருக்கும் காந்த சக்தியை பன்மடங்காக்கி வெளிக் கொணரும். மூன்று புறமும் மூடப்பட்டு, வாசல் பகுதி மட்டும் திறந்திருக்கும் கர்ப்பகிரகத்திலிருந்து வெளியேறும் காந்த சக்தி, வாசலில், இடது மற்றும் வலது புறத்தில் நின்று, இறைவனை வணங்கும் பக்தர்களை சென்றடைகிறது. இதனாலேயே, தினமும் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், கோவிலுக்கு சென்று வந்ததும், ஒருவித சக்தி, அமைதி கிடைப்பது போல் உணர்கின்றனர்.
மேலும், கர்ப்ப கிரகத்திலிருந்து வெளியேறும் காந்த சக்தியின் சுற்றுப் பாதை, இடமிருந்து வலமாக இருப்பதாலேயே, பிரகாரத்தை இடமிருந்து வலமாய் சுற்றுகிறோம். அவ்வாறு சுற்றும் போது, காந்த மற்றும் பாசிடிவ் மின் சக்தி நம் உடல், மனம் மற்றும் மூளைக்கு தேவையான சக்தியை தருகிறது.
மூலஸ்தானத்தில், எப்போதும் ஒரு விளக்கு எரிந்து கொண்டிருக்கும். விக்ரகத்திற்கு பின்புறம், ஒரு விளக்கும், அதைச் சுற்றி கண்ணாடியும் வைக்கப்பட்டிருக்கும். அது, ஒளி வட்டம் வருவதற்கு அல்ல; மூலஸ்தானத்திலிருந்து வெளிப்படும் காந்த சக்தியை, அப்படியே திருப்பி அனுப்புவதற்கான ஏற்பாடுதான்.
மந்திரம் சொல்லும் போதும், மணி அடிக்கும்போதும் அங்கே செய்யப்படும் அபிஷேகமும், காந்த சக்தியை மென்மேலும் அதிகரிக்கச் செய்து, அபரிமிதமான சக்தியை கோவில் முழுக்க பரவ செய்கிறது.
அடுத்தது தீர்த்தம்... பச்சை கற்பூரம், துளசி, குங்குமப்பூ, கிராம்பு சேர்த்து, செம்பு பாத்திரத்தில் வைக்கப்பட்டு, கொடுக்கும் தீர்த்தம், அபரிமித சுவையை தரும்; சில சொட்டு அருந்தினால் கூட, நோய் எதிர்ப்பு சக்தி கூடும். இத்தீர்த்தத்தை தினமும் உட்கொள்வோருக்கு, இது, 'ஆன்டிபயாட்டிக்' ஆக செயல்படும். இதனாலேயே, முன்பெல்லாம் கோவிலுக்கு தினமும் சென்று வருவோருக்கு, எந்த வித நோயும் நெருங்காமல் இருந்தது.
அத்துடன், வாய் துர்நாற்றம், பல் மற்றும் ரத்தத்தை சுத்தப்படுத்தும் தன்மையும், இந்த தீர்த்தத்திற்கு உண்டு.
அபிஷேகம் முடிந்து, வஸ்திரம் சாத்தும் போதும், மஹா தீபாராதனை காட்டும்போதும் கதவை திறக்கக் காரணம், சுயம்புக்கு அபிஷேகம் செய்ததால் வெளிப்படும் சக்தி, மொத்தமாக உருவெடுத்து, அங்கு கூடி நிற்கும் மக்களை சென்றடையும். அந்த அபிஷேக நீரை எல்லாருக்கும் தலையில் தெளிக்கும்போது, உடம்பில் சிலிர்ப்பு வரும். இதனால் தான், ஆண்கள் மேல் சட்டை அணியாமல் கோவிலுக்கு வர வேண்டும் என்று கூறுகின்றனர்.
பெண்கள் தாலி அணிவதும் இதுபோன்ற காரணத்தால் தான். ஆண்களை போன்று, பெண்களுக்கு இதய நோய் அதிகம் வருவதில்லை. காரணம், மார்பில் தொங்கும் தாலியில் உள்ள தங்கம், இதயத்தின் வெளியே நல்ல பாசிட்டிவ் எனர்ஜியை உள்வாங்கி, கொழுப்பை கரைக்கிறது.
கோவிலின் மேல் இருக்கும் கலசம், சில சமயம் இரிடியமாக மாறவும், இந்த காந்த சக்தி தான் காரணம். கீழிருந்து கிளம்பும், மேக்னெட்டிக் வேவ்ஸ் மற்றும் இடியின் தாக்கம் தான் சாதாரண கலசத்தையும், இரிடியமாக மாற்றுகிறது. கோவிலில் இடி தாக்கும் அபாயம் இல்லாமல் இருப்பதற்கு, கோபுரத்தில் உள்ள இந்த கலசங்கள், சிறந்த மின் கடத்தியாக செயல்படுவது தான் காரணம். மேலும், கோவிலின் கொடி மரத்திற்கும், பிரகாரத்திற்கும் நேரடி, 'ஒயர்லெஸ்' தொடர்பு உண்டு.
கொடி மரம் இன்னொரு இடி தாங்கி; கோவிலின் வெளி பிரகாரத்தை காக்கும் சாதனமும் இதுதான்!

உடலை கவனித்து உணவை தேர்ந்தெடுங்கள் thanks to dinamalar.com

உடலை கவனித்து உணவை தேர்ந்தெடுங்கள்!

 Added : ஏப் 02, 2018 


Advertisement
உடலை கவனித்து உணவை தேர்ந்தெடுங்கள்!
சிறந்த உணவு சைவமா? அசைவமா? என்ற விவாதம் தொடர்ந்து நடந்துவரும் நிலையில், உடலைக் கவனித்து உணவைத் தேர்ந்தெடுப்பதன் அவசியத்தைத் தெளிவுபடுத்துகிறார் சத்குரு. முழுமையாகப் படித்து, ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை உங்களுடையதாக்குங்கள்! 
கேள்வி: உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதில், உணவின் பங்களிப்பு என்ன? ஒரு சாரார் சைவ உணவுதான் சிறந்தது என்றும், மற்றொரு சாரார் உணவில் அசைவம் சேர்க்காமற்போனால், உடல் ஆரோக்கியமாக இருக்காது என்றும் கூறுகின்றனர். இது குழப்பத்தை ஏற்படுத்துகிறது…
சத்குரு: நீங்கள் எந்த விதமான உணவை எடுத்துக்கொள்ள வேண்டுமென்பது, உங்களது உடலின் விருப்பத்தைப் பொறுத்தது. மற்றபடி உங்களின் எண்ணத்தைப் பொறுத்ததோ அல்லது உங்களின் மதிப்பீடுகள் மற்றும் நெறிமுறைகளைப் பொறுத்ததோ அல்ல. உணவு என்றாலே, அது உடலைப் பற்றிய ஒரு விஷயம்தான். வித்தியாசமான பல உணவுகளையும் முயன்று பாருங்கள். ஒரு குறிப்பிட்ட உணவைச் சாப்பிட்டதும் உங்களது உடல் எப்படி உணர்கிறது என்று கவனியுங்கள். உடல் மிகவும் சுறுசுறுப்பாகவும், சக்தி நிரம்பியிருப்பதாகவும் உணர்ந்தால், உங்கள் உடல் “மகிழ்ச்சி”யாக இருப்பதாகப் புரிந்துகொள்ளலாம். மாறாக உடல் சோம்பலாக இருப்பதை உணர்ந்து, அதைச் சுறுசுறுப்பாக்குவதற்கு உங்களுக்கு காபியோ அல்லது நிகோடின் புகையோ தேவைப்பட்டால், உடல் மகிழ்ச்சியாக இல்லை என்று புரிந்துகொள்ளலாம். நீங்கள் இதனைப் பரிசோதித்துப் பார்க்கலாம். 
உங்கள் உடலைக் கூர்ந்து கவனித்தால், அது எந்தவிதமான உணவினால் மகிழ்ச்சி கொள்கிறது என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்வீர்கள். ஆனால் நீங்கள் எப்போதும் உங்கள் மனதையே கவனிக்கிறீர்கள், அது எப்போதும் பொய்தான் சொல்லிக்கொண்டிருக்கும். அது இன்றைக்கு ஒன்றைக் கூறுகிறது. மறுநாளே வேறொன்றைக் கூறுகிறது. முதல் நாள் கூறியதை நம்பியதற்காக அடுத்த நாளே அது உங்களை ஒரு முட்டாளாக உணர வைக்கிறது. ஆகவே உங்களது மனதின் பின்னால் செல்லாதீர்கள். உங்களது உடலைக் கேட்பதற்கு நீங்கள் கற்றுக்கொண்டால் மட்டும் போதுமானது. 
ஒவ்வொரு விலங்கும், ஒவ்வொரு உயிரினமும், தான் எதைச் சாப்பிட வேண்டும் மற்றும் எதைச் சாப்பிடக்கூடாது என்று அறிந்து வைத்துள்ளது. இந்த ஒட்டுமொத்த பூமியிலேயே மனித இனம் மட்டும்தான் அதிகபட்ச புத்திசாலித்தனத்துடன் படைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்களுக்கு என்ன சாப்பிடுவது என்பதுகூடத் தெரியவில்லை. உங்கள் உடல் கூறுவதைக் கேட்கக் கற்றுக்கொள்வதற்கு, ஒரு குறிப்பிட்ட கவனம் தேவைப்படுகிறது. அத்தகைய கவனம் இருந்தால் என்ன சாப்பிடுவது என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள். 
உங்களுக்குள் செல்லும் உணவின் தன்மையைப் பொறுத்தவரை, அசைவ உணவைக் காட்டிலும், நிச்சயமாக சைவ உணவே உடலுக்கு மிகவும் ஏற்றதும், சிறந்ததுமாகும். ஏதோ ஒழுக்கநெறியின் காரணமாக நாம் இதைச் சொல்லவில்லை. உடலுக்கு எது சிறந்ததாக உள்ளது என்பதை மட்டுமே நாம் பார்க்கிறோம். உடல் சௌகரியமாக உணரும் உணவுகளை மட்டுமே நாம் சாப்பிட வேண்டும் என்று சொல்ல முயற்சிக்கிறோம். நீங்கள் மாணவராக இருந்தாலும் அல்லது பணியாற்றுபவராக இருந்தாலும் எந்தச் செயலையும் சிறப்பாகச் செய்வதற்கு உங்களது உடல் தளர்வாகவும், சுகமாகவும் இருக்கவேண்டியது மிகமிக முக்கியம். எந்த உணவு சாப்பிட்டால் உடல் அதிகபட்ச தளர்வாகவும், சுகமாகவும் இருக்குமோ, எந்த உணவிலிருந்து எளிதில் ஊட்டச்சத்து பெறமுடியுமோ, அந்த வகை உணவுகளை நாம் சாப்பிடவேண்டும். நீங்கள் இதனைப் பரிசோதித்துப் பார்க்கலாம். சைவ உணவை அது “உயிருடன்” இருக்கும்போதே சாப்பிட்டுப் பாருங்கள். அது எவ்வளவு வித்தியாசமாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்வீர்கள். எந்தெந்த உணவுகளை சமைக்காமல் பச்சையாக சாப்பிடமுடியுமோ, அது போன்ற உணவுகளை அதிகபட்சமாக சாப்பிடுவதுதான் சைவ உணவின் சிறப்பம்சம்.
உயிரோட்டமுள்ள ஒரு உயிரணு, உயிரைக் காப்பாற்றக்கூடிய அனைத்தையும் கொண்டுள்ளது. நீங்கள் உயிரோட்டமுள்ள உயிரணுவை உட்கொண்டால், மிகவும் சிறப்பான உடல் ஆரோக்கியத்தை உணர்வீர்கள். உணவை நாம் சமைக்கும்போது, அதிலுள்ள உயிர்ச்சத்து அழிக்கப்படுகிறது. உணவிலுள்ள உயிர்ச்சத்து அழிக்கப்பட்ட நிலையில் சாப்பிடுவதால், பச்சையாக சாப்பிடும்போது கிடைக்கக்கூடிய அதே அளவு உயிர்ச்சக்தியை, சமைத்த உணவு தருவதில்லை. உயிருள்ள உணவைச் சாப்பிடுவதால், அது நமக்குள் ஒரு முற்றிலும் வித்தியாசமான உயிர்த்தன்மையைக் கொண்டு வருகிறது. உயிருள்ள நிலையில் சாப்பிடக்கூடிய காய்கள், பழங்கள், முளைகட்டிய தானியம் என்று எதுவானாலும் குறைந்தபட்சம் முப்பதிலிருந்து, நாற்பது சதவிகிதம் வரை உங்களின் தினசரி உணவில் இருந்துவிட்டால், பிறகு அது உங்களுக்குள் இருக்கும் உயிருக்கு உறுதுணையாக இருக்கிறது. 
ஆனால், இன்றைய நாகரீக உலகத்தில், மூன்று நாட்களுக்கு முன்பு சமைத்த உணவைச் சாப்பிடுவது இப்போது சாதாரணமாகிவிட்டது. மக்கள் மேலை நாட்டு கலாச்சாரத்தைப் பின்பற்றுவது என்று முடிவு செய்தால், முதலாவதாக அவர்கள் செய்வது நாள்பட்ட உணவை, டின்னில் அடைத்துவைத்திருக்கும் உணவை சாப்பிடுவதே. ஒரு கிராமத்து பாமர மனிதரைக் கேளுங்கள், அவர் கூட பழைய உணவைத் தொடமாட்டார். நம் நாட்டில் அப்படிப்பட்ட பழைய உணவை சாப்பிடுபவரை பொதுவாக பிச்சைக்காரர் என்றுதான் கூறுவோம். ஆனால் இப்போது உலகளவிலேயே செல்வந்தர்கள் கூட பழைய உணவைத்தான் சாப்பிடுகின்றனர். உங்களுடைய உடல் ஒரு குறிப்பிட்ட சக்தி நிலையில் பராமரிக்கப்படுவதற்கு, நாள்பட்ட உணவாக இல்லாமலிருக்க வேண்டியது மிகவும் முக்கியம். சமைத்த உணவில் ஒவ்வொரு கணமும் உணவில் நுண்கிருமிகள் மெல்ல வளர்ச்சி பெறுகின்றன. உணவானது துர்நாற்றம் வீசும்வரை நீங்கள் அதை உணர்வதில்லை. ஆனால், நீங்கள் உணவை சமைத்த கணத்திலிருந்தே, அது கெடத் தொடங்கிவிடுகிறது. 
அனைத்திற்கும் மேலாக நீங்கள் உணரவேண்டியது ஒன்றுள்ளது. நீங்கள் சாப்பிடும் உணவும் ஒரு உயிர்தான். வேறொரு பரிமாணத்திலிருக்கும் ஒரு உயிரை நாம் சாப்பிடுகிறோம். உங்களது உயிர் நிலைத்திருக்க, வேறொரு உயிர் தன்னை வழங்குகிறது. உங்களது உயிரைக் காப்பதற்காக, தனது உயிரை வழங்கும் அந்த உயிர்களுக்கு மனப்பூர்வமான நன்றியறிதலுடன் நீங்கள் சாப்பிட முடிந்தால், அந்த உணவு, உங்களுக்குள் செயல்படும் விதமே மிக மிக வித்தியாசமானதாக இருக்கும்.

உறவுகள் இனிக்கும்; வாழ்வும் சிறக்கும்! உறவுகளை தக்க வைத்து கொள்ள thanks to dinamalar.com


 
Advertisement
சொல்கிறார்கள்

உறவுகள் இனிக்கும்; வாழ்வும் சிறக்கும்!
உறவுகளை தக்க வைத்து கொள்ள, உன்னத வழிமுறைகளை கூறும், மனநல ஆலோசகர், ஜெயமேரி: 'நம் குடும்பம், மற்ற குடும்பங்களை விட சிறப்பானது' என்ற, 'பாசிட்டிவ்' எண்ணத்தை, முதலில் வளர்த்துக் கொள்ள வேண்டும். குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும், மற்றவருடன் மனம் விட்டு பேசக் கூடியவர்களாக இருக்க வேண்டும்; மற்றவர்களின் உணர்வுகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.இன்றைய வாழ்க்கை முறையில் பணிச்சுமையும், 'டிவி'யும், நம் பொன்னான நேரத்தை ஆக்கிரமித்து கொள்கின்றன. இதை முற்றிலும் தவிர்க்க முடியாவிட்டாலும், சிறிது குறைத்து கொள்ளலாம். விடுமுறை நாட்களில் ஒன்றாக சேர்ந்து சாப்பிடுவது, விளையாடுவது, வெளியே செல்வது போன்றவற்றை வழக்கமாக்கிக் கொள்ளலாம்.பொருளாதார தேடலுக்காக பிரிந்திருந்தாலும், அவ்வப்போது உறவினர்களுடன் கூடி மகிழ்ந்து, உறவுகளை வளர்க்க வேண்டும். குடும்பத்தில் நடக்கக் கூடிய எந்த விஷயத்தையும், பெரிதாக்க கூடாது. அனைத்தையும் நேர்மறையாக எடுத்துக் கொள்ள வேண்டும். சிறியவர்கள், பெரியவர்கள் என்றில்லாமல், ஒருவர் தவறிழைக்கும் போது, மற்றவர்களிடம் மன்னிப்பு கேட்கும் பழக்கத்தை வளர்க்க வேண்டும். உறவுகளில் ஒவ்வொருவரும், அவர்களுக்கான கடமை களையும், பொறுப்புக்களையும் உணர வேண்டும்; தங்கள் பொறுப்புக்களை தட்டிக்கழிக்க கூடாது. ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தும், மற்றவர்களின் மீது அக்கறையுடனும் நடந்து கொள்ள வேண்டும்.குறிப்பாக, மற்றவர்களிடம் நம் குடும்பத்தையும், குடும்ப உறுப்பினர்களையும் விட்டுக் கொடுக்க கூடாது. நம் குடும்பத்தை பற்றி, மற்றவர்களிடம் விவாதிக்கவும் வேண்டாம். குழந்தைகளுக்கு சுதந்திரம் கொடுக்கும் அதேநேரம், அவர்கள் மீது கண்காணிப்பும் அவசியம். மற்றவர்களுடன் எந்த வகையிலும், அவர்களை ஒப்பீடு செய்யக் கூடாது. குழந்தைகளின் சிறு வெற்றிகளையும் கொண்டாடி, உற்சாகம் கொடுக்க வேண்டும்.மற்றவர்களுடன் ஒப்பிட்டு, 'அவர்களை போல் நமக்கு வசதிகள் இல்லை' என, எண்ணக் கூடாது. எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ள வேண்டும். எது சாத்தியமோ, அதற்கு மட்டுமே ஆசைப்பட வேண்டும்; பேராசை கூடாது. நம்மிடம் உள்ளவற்றை வைத்து, நாம் நலமாக வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். இவற்றையெல்லாம் கடைப்பிடித்தால், நம் குடும்பத்தில் உறவுகள் இனிக்கும்; வாழ்வும் சிறக்கும்.

Friday, April 6, 2018

thanks to (Post No.4886) by Tamil and Vedasநான் ஏன் நன்றாக இருக்கிறேன்?

நான் ஏன் நன்றாக இருக்கிறேன்? (Post No.4886)

by Tamil and Vedas
Date- 6 April 2018

British Summer Time- 6-42 am

Written by S Nagarajan

Post No.4886

Pictures are taken from various sources; thanks.


ச.நாகராஜன்


நல்ல மனிதர் ஒருவரைச் சந்தித்தேன். அவரிடம் அவர் நன்றாக இருப்பதற்கான காரணத்தைப் பணிவுடன் கேட்டேன். அவர் கூறிய பதில்:

நான் ஏன் நன்றாக இருக்கிறேன்?
நான் யார் சொத்துக்கும் ஆசைப்படுவதில்லை. ஒரு பைசா என்றாலும் கூட அடுத்தவர் காசு என்றால் தவறாக தரப்பட்டாலும் திருப்பித் தந்து விடுவேன். ஏனெனில் கர்ம பலன் விடாது என்பது எனக்குத் தெரியும். ஆகவே நான் நன்றாக இருக்கிறேன்.

தினமும் லோகாஸ் ஸமஸ்தா சுகினோ பவந்து; சர்வே ஜனா சுகினோ பவந்து; எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே என்று சொல்லத் தவறுவதில்லை. இதில் எனது சுயநலமும் இருக்கிறது என்பதை நான் பூரணமாக உணருகிறேன். ஏனெனில் அனைவரும் நலமாக இருந்தால் அதில் நானும் ஒருவன் தானே. ஆகவே நான் நன்றாக இருக்கிறேன்.

பிரார்த்தனை செய்ய நான் தவறுவதில்லை. அது அனைத்துச் சமயங்களிலும் உடனடியாகப் பலிப்பதில்லை என்று தெரியும். ஆனால் எது தரப்பட வேண்டும் என்பதை நம்மை விட எங்கும் நிறைகின்ற பொருளுக்குத் தெரியாதா என்ன? ஆகவே நான் நன்றாக இருக்கிறேன்.

எனது சம்பிரதாயங்களை நான் விட்டுக் கொடுப்பதில்லை. எனது வழிபாட்டு மதம் எனக்கு போற்றத் தகுந்தது. ஆனால் மற்றவர் வழிபாட்டு முறையையும் நான் மதிக்கிறேன். ஆகாயத்திலிருந்து விழும் நீரானது எப்படி கடலைச் சென்று கலக்கிறதோ அதே போல எந்த்த் தெய்வத்தை வழிபட்டாலும் அது கேசவனைச் சேர்கிறது என்ற மந்திரத்தைச் சிறு வயது முதலே நான் சொல்லி வருகிறேன்.ஆகவே நான் நன்றாக இருக்கிறேன்.

முன்னோர் வழிபாடு முக்கியம் என்பதால் எனது முன்னோர்களை நினைக்காமல் இருப்பதில்லை. தேவையான வழிபாடுகளைச் செய்வதால் அவர்களின் பரிபூரண ஆசி எனது குடும்பத்திற்கு இருக்கிறது.ஆகவே நான் நன்றாக இருக்கிறேன்.

அடுத்தவர் விஷயங்களில் நான் தலையிடுவதில்லை. அவர்கள் மனம் புண்படும் படி பேசுவதில்லை. வலியச் சென்று பிறருக்கு யோசனைகள் கூறுவதில்லை. சொற் குற்றம் நேரக் கூடாது என்பதில் கவனத்துடன் இருக்கிறேன். ஆகவே நான் நன்றாக இருக்கிறேன்.
வருமானம் பெரிதாக இல்லாவிட்டாலும் நான் கவலைப் படுவதில்லை. ஆனால் வருகின்ற வருமானம் அறத்தின் அடிப்படையில் லஞ்சம் போன்ற ஊழல் பணம் இல்லாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்கிறேன். வருகின்ற வருமானத்திற்குள் செலவு இருக்கும்படி பார்த்துக் கொள்கிறேன்.
ஆகவே நான் நன்றாக இருக்கிறேன்.

சொந்த நாட்டில் வாழ்வதைப் பெருமையாகக் கருதுகிறேன். ஆகவே நான் நன்றாக இருக்கிறேன்.

பெண்களை நான் நன்கு மதிக்கிறேன். அவர்களிடம் கண்ணியத்துடன் பழகுகிறேன்.ஆகவே நான் நன்றாக இருக்கிறேன்.

உடல் ஆரோக்கியத்திற்கு முதலிடம் தருகிறேன். உடலை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்ற படி உடல் பெரும் பேறை அடைவதற்கான சாதனம் என்பதை உணர்ந்து செயல் படுகிறேன். உடல் பயிற்சி, தியானம் இவற்றில் முழுமனதுடன் ஈடுபடுகிறேன். அதே சமயம் சுற்றுப்புறச் சூழ்நிலையால் என்னை மீறி வரும் வியாதிகளை ஏற்க வேண்டியதிருந்தால் ஏற்று உரிய மருத்துவ உதவியால் மீள்கிறேன். ஆகவே நான் நன்றாக இருக்கிறேன்.

ஆடம்பரப் பொருள்கள் என்னிடம் ஏதுமில்லை. தீமை விளைவிப்போர் செய்யும் அரசியலுக்குள் நுழைவதுமில்லை. ஆகவே நான் நன்றாக இருக்கிறேன்.

எனது நேரத்தின் ஒரு  பகுதியை சமுதாயப் பணிக்காக ஒதுக்குகிறேன். மருத்துவ உதவி, படிப்பு உதவி, ஆலயங்களைச் சுத்தம் செய்தல், அன்ன தானம் ஆகியவற்றைப் புரிவோருடன் இணைந்து என்னால் முடிந்ததைச் செய்கிறேன்.ஆகவே நான் நன்றாக இருக்கிறேன்.
எனது வருமானத்தில் ஒரு பகுதியை சமுதாய நலனுக்காக ஒதுக்குகிறேன். இந்தப் பணத்திற்கு பலன் ஒன்றும் எதிர்பார்ப்பதில்லை. ஆகவே நான் நன்றாக இருக்கிறேன்.

மொழிச் சண்டை, இனச் சண்டை, மதச் சண்டை போன்றவற்றில் ஈடுபடுவதில்லை. அரசின் அனைத்து விதிகளையும் பின்பற்றுகிறேன்.ஆகவே நான் நன்றாக இருக்கிறேன்.

நண்பர்களை பெரிதும் மதிக்கிறேன். அவர்கள் நட்பினால் ‘இடித்தல்’ செய்தாலும் அதை ஏற்கிறேன். ஆனால் நம்பிக்கை துரோகிகளுடன் மட்டும் நான் பழகுவதில்லை. அவர்களை ஏற்பதுமில்லை. ஆகவே நான் நன்றாக இருக்கிறேன்.

குடும்ப உறுப்பினர்கள் நலமே முக்கியம் என உழைக்கிறேன்.அவர்களை உயர்த்தப் பாடுபடுகிறேன். ஒரு குடும்பம் முன்னேறினால் ஒரு தெரு உயரும். ஒரு தெரு உயர்ந்தால் ஒரு நகர் உயரும். நகர் உயர்ந்தால் நாடு உயரும்.  ஆகவே நான் நன்றாக இருக்கிறேன்.



தேச பக்தியும் தெய்வ பக்தியும் எனக்கு இரு கண்கள். தேச சேவை எனக்கு மிக முக்கியம்.ஆகவே நான் நன்றாக இருக்கிறேன்.
முன்னோர்களின் அற நூல்கள் உள்ளிட்ட புத்தகங்கள் கொண்ட சிறிய நூலகம் என்னிடம் உள்ளது. அவ்வப்பொழுது அதைப் படித்து என்னை உற்சாகப்படுத்திக் கொள்கிறேன், அறிவைப் பெருக்க விழைகிறேன். ஆகவே நான் நன்றாக இருக்கிறேன்.

இசை தரும் பயன்கள் அனைத்தும் தெரியும் என்பதால் அதைப் பயன்படுத்தி மன அமைதி பெறுகிறேன்.ஆகவே நான் நன்றாக இருக்கிறேன்.

ரிஷிகள், பெரியோர், மகான்கள், அறவோர் ஆகியோரை மிகவும் போற்றுவதாலும் அவர்களை அணுகி ஆசி பெறுவதாலும் கஷ்டங்கள் வருவதில்லை. சிறிய கஷ்டங்கள் வந்தாலும் அவற்றை பெரியோர் ஆசியால் எதிர் கொண்டு சமாளித்து மீள முடிகிறது. ஆகவே நான் நன்றாக இருக்கிறேன்.

அறநூல்களின் அறிவுரைப்படி இரகசியமாகக் காக்க வேண்டிய விஷய்ங்களைக் காக்கிறேன். அடுத்தவர் இரகசியங்களை அறிய விழைவதில்லை. வம்புப் பேச்சை ஆதரிப்பதுமில்லை. அப்படி வம்பு பேசுவோருடன் பழகுவதுமில்லை.ஆகவே நான் நன்றாக இருக்கிறேன்.
வயதாக ஆக, நல்ல செயலகளும் செய்த நற்பணிகளும் மனதில் நிழலாடுவதால் அமைதியுடன் இருக்க முடிகிறது. ஆகவே நான் நன்றாக இருக்கிறேன்.