Parvathi Visweswaran

Saturday, November 3, 2018

ஹிந்து மதம் பற்றி டேவிட் ஃப்ராலி (வாமதேவ சாஸ்திரி ) (Post No.5601) thanks to tamil and vedas.com

ஹிந்து மதம் பற்றி டேவிட் ஃப்ராலி (வாமதேவ சாஸ்திரி ) (Post No.5601)
Yahoo/Inbox
  • Tamil and Vedas <comment-reply@wordpress.com>
    To:theproudindian_2000@yahoo.co.in
    Oct. 31 at 2:49 a.m.
    Respond to this post by replying above this line

    New post on Tamil and Vedas

    ஹிந்து மதம் பற்றி டேவிட் ஃப்ராலி (வாமதேவ சாஸ்திரி ) (Post No.5601)

    by Tamil and Vedas
    WRITTEN BY S NAGARAJAN
    Date: 29 October 2018
    Time uploaded in London – 6-13 AM (British Summer Time)
    Post No. 5601
    Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
    ஹிந்து மதம் பற்றி டேவிட் ஃப்ராலி (வாமதேவ சாஸ்திரி)
    ச.நாகராஜன்
    1
    வாமதேவ சாஸ்திரி எனப்படும் அமெரிக்கரான டேவிட் ஃப்ராலி (பிறப்பு :21-9-1950) ஹிந்து மதத்தின் சிறப்பியல்புகளைத் தொடர்ந்து தனது நூல்களாலும் சொற்பொழிவுகளாலும் விளக்கி வருபவர்.
    சுமார் 30 நூல்களை எழுதியவர். நியூ மெக்ஸிகோவில் அமெரிக்கன் இன்ஸ்டிடியூட் ஆஃ வேதிக் ஸ்டடீஸ் நிறுவனத்தை நிறுவியவர். யோகா, ஆயுர்வேதம், ஜோதிடம் ஆகியவற்றில் நிபுணர். Hinduism Today இதழில் அவரது கட்டுரைகள் அவ்வப்பொழுது இடம் பெற்று வருகின்றன.
    அவரது மனைவி யோகினி சாம்பவி சோப்ராவும் அவருக்கு உறுதுணையாக அவரது பணிகளில் இணைந்து செயல்பட்டு வருகிறார்.
    இந்திய அரசால் 2015ஆம் ஆண்டு பத்ம பூஷண் பட்டம் கொடுக்கப்பட்டு அவர் கௌரவிக்கப்பட்டார்.
    2
    அவர் How I became a Hindu - ஹௌ ஐ பிகேம் எ ஹிந்து - என்ற அருமையான நூலை எழுதியுள்ளார்.
    எப்படி கிறிஸ்துவோ அல்லது கிறிஸ்தவ மதமோ தனது ஆன்மீகத் தேடலுக்கு உகந்த தீர்வைத் தரவில்லை என்பதையும், எப்படி இஸ்லாமும் தனக்கு திருப்தி அளிக்கவில்லை என்பதையும் அவர் தெள்ளத் தெளிவாக இந்த நூலில் குறிப்பிடுகிறார்.
    ஹிந்து மதத்தின் தொன்மையையும், வேதத்தின் சிறப்பையும் ஆய்ந்து உணர்ந்த அவர் தன் வாழ்க்கையை அதைப் பரப்புவதிலேயே அர்ப்பணிக்க முன் வந்தார்.
    319பக்கங்கள் கொண்ட இந்த நூல் பல கோணங்களில் ஹிந்து மதத்தை ஆராய்கிறது.
    ஹிந்து என்ற வார்த்தையைப் பற்றி நூலின் இறுதி அத்தியாயத்தில் அவர் விளக்குகிறார்.
    1) இந்தியா என்பது சிந்து ஸ்தானம்
    2) உண்மை ஒன்றே; அதை அறிஞர்கள் பலவாறாகச் சொல்கின்றனர் (ஏகம் சத்; விப்ரா: பஹுதா வதந்தி)
    3) வேதம் அற்றது என்று சொல்லிக் கொள்ளும் தர்மம் உட்பட அனைத்து தர்மங்களையும் வேத பாரம்பரியம் ஒருங்கிணைக்கும் அடிப்படையைக் கொண்டது.
    4) இந்தியாவிற்கும் அப்பால் உள்ள, பிரபஞ்ச லயத்துடன் இணைந்து வாழ விரும்பும், அனைத்துப் பண்பாடுகளையும் அது ஏற்கிறது. அனைத்து உயிரினங்களையும் அது மதிக்கிறது.
    5) ஆக இப்படிப்பட்ட ஹிந்து மதம் இந்தியாவின் மதம் மட்டுமல்ல; பிரபஞ்சம் முழுமைக்குமான உண்மையை எல்லாவிடங்களிலும் உள்ள மனிதர்களுக்கு, காலம், இடம், ஆகியவற்றிற்கு பொருத்தமான தேவைகளுக்கென ஏற்ற ஒன்று.
    6) ஹிந்து தர்மம் மானவ தர்மம். மனித வாழ்வின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியது. மனிதருக்கு தேவைப்படும் ஆரோக்யம், சந்தோஷம், படைப்பாற்றல் திறத்ன் மற்றும் முக்தி ஆகியவற்றைக் காட்டும் மதம் அது.
    7) அதன் ஆசிர்வாதம் உலகில் உள்ள அனைவருக்கும் கிடைக்குமாக!
    3
    இறுதி அத்தியாயத்தின் மூலத்தை அப்படியே கீழே வழங்குகிறோம்:
    THE MEANING OF THE TERM HINDU
    In the Vedic age the land of India was called Sapta Sindhu, the land of the seven rivers. The same name appears in the Zend Avesta, the holy book of
    the ancient Persians, as Hapta Hindu, with the Sanskrit ‘s’ replaced with an ‘h’, a sound shift that occurs in various Indian dialects as well. The
    Greeks called the land India or Indika, which also derives from the term Sindhu, removing the initial sound altogether. So clearly Sindhu or Hindu was a name for India going back to very ancient times.
    India was Sindhu Sthana, the land of the rivers or Sapta Sindhu Sthana, the land of the seven rivers.
    Sindhu has three meanings in Sanskrit. It means a particular river now called the Indus, a river in general, or the ocean. Clearly Sindhu in the land of
    Sapta Sindhu refers to river in general and not simply to the Indus as a particular stream only.
    It meant India as a great land of many rivers. The main river in Vedic India was the Saraswati and in later times became the Ganges. So Sindhu Sthana is also Saraswati Sthana and later Ganga Sthana, not
    simply the region of the Indus.
    Dharma, Sindhu Dharma or Hinduism is the name of the culture and religions of this great and diverse subcontinent. Hinduism as Sindhu Dharma
    has three meanings following the meanings of Sindhu.
    1) It is the river religion (Sindhu Dharma). It flows and develops like a river. Not limited by an historical revelation, Hinduism continues to grow
    and develop through time without losing track of its origins in the eternal.
    2) It is a religion of many rivers, a pluralistic
    tradition that accepts the existence of many paths,
    many sages and many holy books and is always
    open to more.
    3) Sindhu means the ocean. Hinduism is a religion like the ocean that can accept all streams without overflowing. This is also the meaning of Hinduism as Sanatana Dharma or the universal tradition.
    Sindhu became Hindu not only among the Persians but also in some dialects in India, particularly in the West of the country. By the twelfth century in the Prithviraj Raso by the poet Chand Baradai, probably the oldest work in the
    Hindi language, we already find the term Hindu proudly used in India for the religion and people of the region.
    Since Hinduism as Sindhu Dharma refers to all the religions and philosophies of India, it naturally includes Buddhist, Jain and other Indic traditions.
    In this regard Hinduism is not limited to the Vedic tradition and accepts both Vedic and non-Vedic streams.
    On the other hand, the Vedic tradition itself is pluralistic and is not limited to existing Vedic paths. It is based on the great Vedic statement,
    "That which is the One Truth, the sages speak in many ways (ekam sad vipra bahudha vadanti)."
    The Vedic tradition, therefore, has the basis to integrate all the dharmas of India including those that regard themselves as non-vedic.
    Yet beyond India, Hinduism can accept all cultures that seek to live in harmony with the universe and respect all creatures. Such a definition would make
    Hinduism a religion not merely of India but a way of organically adapting the universal truth to the needs of time, place and person everywhere.
    Hindu Dharma is a human or Manava Dharma, encompassing all aspects of human life. It shows what all human beings require for health,
    happiness, creativity and liberation. May its blessings come to all!
Posted by svisweswaran at 4:00 PM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

குருவுக்கா, கோவிந்தனுக்கா, யாருக்கு முதல் நமஸ்காரம்?! thanks to tamil and vedas.com

[New post] குருவுக்கா, கோவிந்தனுக்கா, யாருக்கு முதல் நமஸ்காரம்?! (Post No.5607)
Yahoo/Inbox
  • Tamil and Vedas <comment-reply@wordpress.com>
    To:theproudindian_2000@yahoo.co.in
    Nov. 2 at 11:34 a.m.
    Respond to this post by replying above this line

    New post on Tamil and Vedas

    குருவுக்கா, கோவிந்தனுக்கா, யாருக்கு முதல் நமஸ்காரம்?! (Post No.5607)

    by Tamil and Vedas

    WRITTEN BY S NAGARAJAN
    Date: 31 October 2018
    Time uploaded in London – 7-13 AM (British Summer Time)
    Post No. 5607
    Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
    குருவுக்கா, கோவிந்தனுக்கா, யாருக்கு முதல் நமஸ்காரம்?!
    ச.நாகராஜன்
    1
    கபீர்தாஸருக்கு ஒரு குழப்பம் வந்து விட்டது.
    திடீரென்று அவர் முன்னர் குருவும் கோவிந்தனும் ஒரே சமயத்தில் வந்து தோன்றி விட்டனர்.
    இப்போது இந்த இருவரில் யாரை முதலில் நமஸ்கரிப்பது?
    குருவையா?
    அல்லது கோவிந்தனையா?
    ஒரு நிமிடம் யோசித்த கபீர்தாஸர் கோவிந்தனை விடுத்து முதலில் குருவை நமஸ்கரித்தார்.
    அதற்கான காரணத்தை அவர் சொல்கிறார் இப்படி:
    “குரு கோவிந்த் தோனோ கடே காகே லாகௌ பாய் |
    பலிஹாரி குரு ஆப்னே கோவிந்த் தியோ பஹாய் ||”
    இந்த தோஹாவின் பொருள் :
    குரு கோவிந்தர் இருவரும் என் வாசலில் வந்து நின்றால் யாரை வணங்குவது?
    முதலில் குருவைத் தான் வணங்க வேண்டும். ஏனெனில் அவரில்லாமல் கோவிந்தரை எப்படி என்னால் அறிய முடியும்?
    கோவிந்தனைக் காட்டி அருளிய குருவுக்கே எனது முதல் நமஸ்காரம் என்பது கபீரின் முடிவு.
    Guru Govind dono khade kake lagu paay
    Balihari Guru aapki Govind diyo batay.
    Kabir wrote this verse to sing the glory of Guru, without whose help, one cannot cross this ocean of worldly life. He asks, “If both, Guru and God in form of Govind were to appear at the door, whose feet will I worship first?” He answers, “It has to be the Guru’s feet first, because without him, how would I have recognized (known) God?”
    2

    எம்பார் ஒரு சமயம் ஓரிடத்தில் பிரசங்கம் செய்து கொண்டிருந்தார். ஏராளமான கூட்டம்.
    யார் முதலில் ஆன்ம குருவாக இருக்கிறார் என்பதைப் பற்றி பிரசங்கம் நிகழ்ந்து கொண்டிருந்தது.
    கூட்டத்தில் ஒருவர், “சாஸ்திரங்களை குருவே உபதேசித்து அருள்கிறார். ஆகவே அவரே முக்கியம்” என்றார்.
    இன்னொருவரோ, “ பெரிய மகான் தான் நம்மை ஆன்ம குருவைக் காண்பிக்கிறார்” என்றார்.
    எம்பார் அவர்களை நிறுத்தினார்: “அது அப்படியில்லை” என்று கூறிய அவர் தொடர்ந்து சொன்னார்: “நம் உள்ளத்தில் உறைகிறானே, பரமன், நம் கண்ணுக்குத் தெரியாத அவன் தான் நல்ல விஷயங்களைத் தடை செய்து தடுத்து விடாமல் கண்ணுக்குத் தெரியும்படி நேரடியாக வந்து அருளும் குருமார்களையும், சேவைக்குத் தூண்டும் உதவியாளர்களையும் அவர்கள் சொல்வதை ஏற்றுச் செயல்படும்படி அருள்கிறான்.” என்றார்.
    ஆக உள்ளத்தில் உறைந்து அனைத்து நல்ல காரியங்களையும் தூண்டி அருளும் நாராயணனை எப்போதும் தியானிக்க வேண்டும் என்பது அவரது அருளுரையாயிற்று.
    இறைவன் தானே எப்போதும் நேரில் வருவதில்லை.
    பெரியவர்கள், மகான்கள், குரு இப்படி பல ரூபத்தில் தக்க சமயத்தில் வந்து உதவுபவனே இறைவன்.
    ஆதாரம் பகவத் விஷயம்
    God-the Guru in the heart.
    In the lecture-assembly of Embar, the subject of who is the first Spiritual Preceptor for the soul came to be discussed.
    " The Guru imparts to us the Scriptures," some said. Others opined : " The first is that godly man who helps to take us to the spiritual Preceptor for acceptance."
    " Not so," said Embar, " the First Preceptor is that Universal Lord who is seated in our hearts, and who unseen, gives us the impulse not to resist, but to yield to the proposals for good services offered by the visible Preceptors or Helpers."
    [Bhagavat Vishayam : Bk. II. p. 720-1. "Ottar" 11-3-2]
Posted by svisweswaran at 3:55 PM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

தன்னைத் தானே புகழாதே-குறள் கதை (Post No.5611 thanks to tamil and vedas.com


தன்னைத் தானே புகழாதே-குறள் கதை (Post No.5611)

by Tamil and Vedas

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 1 November 2018
GMT Time uploaded in London – 7-03 am
Post No. 5611
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog
தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளக் கூடாது. இதை அவ்வையார், மநு, வள்ளுவர், அதிவீரராம பாண்டியன் முதலிய பல அறிஞர்கள் சொன்னதைக் கீழே கொடுத்துள்ளேன். இதை விளக்க ஒரு உண்மைச் சம்பவத்தை எடுத்துரைப்பேன்.
கல்கத்தா நீதி மன்றத்துக்கு ஒரு வழக்கு வந்தது. அந்தக் காலத்தில் கடுமையான குற்றம் புரிந்தோரை அந்தமான் தீவிலுள்ள தனிமைச் சிறைக்கு அனுப்பி விடுவர். மனித வாடையே இல்ல்லாமல், புழுத்த கஞ்சியைச் சாப்பிட்டுக்கொண்டு வாழ்நாள் முழுதும் இருக்க வேண்டும். இந்திய தேச விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டோரையும் பிரிட்டிஷார் இப்படிக் கடும் குற்றம் இழைத்ததாகக் கருதி அனுப்பினர். சாவர்க்கர் போன்றோர் இப்படி அனுப்பப் பட்டனர். அது வேறு கதை. நான் சொல்வது உண்மைக் குற்றவாளி கதை.
வத்தலும் தொத்தலுமாக இருந்த ஒருவனைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி போலீஸார் சொன்னார்கள்:- இவன் அதி பயங்கரக் குற்றவாளி. இவனுக்கு ஜீவாந்தர சிக்ஷை கொடுத்து அந்தமான் சிறைக்கு அனுப்ப வேண்டும்.
நீதிபதி சொன்னார்-
ஐயோ பாவம்! காற்றடித்தால் பறந்துவிடுவான் போல் இருக்கிறதே. இவன் என்ன அப்படிக் குற்றம் புரிய முடியும்? இவனைப் போய் அந்தமானுக்கு அனுப்பச் சொல்லுவது நியாயமா?
இதைக் கேட்டதுதான் தாமதம்! அந்தக் குற்றவாளி, அனுமார் போல ஒரே தாவாகத் தாவி, கூண்டுக்கு வெளியே குதித்தான்.
“என்ன நினைத்தீர்கள் என்னை? நான் காற்றடித்தால் பறப்பவன் அல்ல. என்னால் எதுவும் செய்ய முடியும்” என்று மாரைத் தட்டி வீர வசனம் பேசினான்.

ஜட்ஜ் சொன்னார்:
யார் அங்கே? அவனை மீண்டும் கூண்டுக்குள் ஏற்றுங்கள். இந்த ஆள் எதையும் செய்ய வல்லவன். நோஞ்சான் அல்ல. அந்தமானுக்கு அனுப்புங்கள். இவனுக்குக் கடுங்காவல் தண்டனை.
தன்னைத் தானே புகழ்வது எவ்வளவு அபாயம்!
நுணலும் தன் வாயால் கெடும், எங்கப்பன் குதிருக்குள் இல்லை -- என்ற பழமொழிகளும் நினைவுக்கு வரும்.
From my old post:--
இதோ அறிஞர்கள் சொன்னது என்ன என்று படியுங்கள்:--
உடையது விளம்பேல் ( உனக்குள்ள சிறப்பினை நீயே புகழ்ந்து கூறாதே), வல்லமை பேசேல் (உனது திறமையை நீயே புகழ்ந்து பேசாதே) என்று ஆத்திச் சூடியில்  அவ்வையார்  அழகுபடப் பகர்ந்தார்.
வள்ளுவனும் சொன்னான்:
வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை (குறள் 439)
பொருள்:
தன்னையே புகழாதே; பயனில்லாத செயலைச் செய்யாதே என்பது வள்ளுவன் வாக்கு.
மனு, தனது மானவ தர்ம சாஸ்திரத்தில், இதைவிட அழகாகாக, சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே செப்பிவிட்டார்:-
“யாராவது உன்னைப் புகழ்ந்தால் அதை விஷம் போல ஒதுக்கு; யாராவது உன்னைக் குறைகூறினால் அதை அமிர்தம் போலக் கருது (மனு நீதி 2-162)
யாராவது குறைகூறி அதை நீ கேட்டால் சந்தோஷமாக உறங்கலாம்; சந்தோஷமாக விழித் தெழலாம்; சந்தோஷமாக நடமாடலாம்; குறை சொன்னவனுக்குத்தான் அழிவு (உனக்கல்ல)- மனு நீதி நூல் 2-16

கூரம் பாயினும் வீரியம் பேசேல்
–கொன்றை வேந்தன்
(கூர் அம்பாயினும் வீரியம் பேசக் கூடாது; அதாவது உன் கைகளில் கூரிய அம்பு இருந்து, எதிரி கைகளில் ஆயுதம் ஒன்றில்லாவிடினும் செருக்கு கொண்டு அதைச் செய்வேன், இதைச் செய்வேன் என்று புகழ்ந்து கொள்ளாதே)
குமரகுருபரரும் நீதி நெறி விளக்கத்தில் உரைப்பார்:
தன்னை வியப்பிப்பான் தற்புகழ்தல் தீச்சுடர்
நன்னீர் சொரிந்து வளர்த்தற்றால் – தன்னை
வியவாமை யன்றே வியப்பாவ தின்பம்
நயவாமை யன்றே நலம்
பொருள்:
தன்னைப் பிறர் மதிக்க வேண்டும் என்று தன்னைத் தானே புகழ்ந்து பேசுதல் தண்ணீரை ஊற்றி விளக்கு எரிப்பதற்குச் சமம் ஆகும்;  இன்பத்தை விரும்பாமல் இருபப்பதல்லவோ இன்பம்;  அது போல தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளாமல் இருப்பதன்றோ நன்மதிப்பு!
--SUBHAM--

Home
Compose
Posted by svisweswaran at 3:53 PM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Sunday, October 7, 2018

புரட்டாசி 22ம் நாள்.. முன்னோர் ஆசி பெற மகாளய அமாவாசை thanks to dinamalar.com

பொது செய்தி 

தமிழ்நாடு

புரட்டாசி 22ம் நாள்.. முன்னோர் ஆசி பெற மகாளய அமாவாசை

 Added : அக் 08, 2018  01:11
புரட்டாசி 22ம் நாள்.. முன்னோர் ஆசி பெற மகாளய அமாவாசை

நமது முன்னோரும், பெற்றோரும் ஏற்கனவே மேல் உலகம் சென்றவர்களாய் இருந்தாலும், அவர்கள் அனைவரின் ஆன்மாக்களும், நம்மை எங்கிருந்தோ ஆசிர்வதித்துக் கொண்டிருக்கின்றன என்பது, நம் நம்பிக்கை.

தாய் மற்றும் தாய் வழி உறவினர்களாகிய சந்திரனும், தந்தை மற்றும் தந்தை வழி உறவினர்களாகிய சூரியனும் ஒன்றாக இணையும் காலமே, அமாவாசை எனப்படுகிறது. மறைந்த நம் முன்னோர், அவர்களது சந்ததியினர் வாழ்வில் முன்னேற, தடைகள் அகல, பலவித தோஷங்கள் நிவர்த்தி பெற, அனைத்து அமாவாசையன்றும், இந்த உலகத்திற்கு எந்த ரூபத்திலாவது வந்து அருள் புரிவர் என்பது ஐதீகம்.

முக்கியமாய் புரட்டாசி மாத மஹாளய அமாவாசையான இன்று, இதன் சக்தியும் நம் பிரார்த்தனையின் பலனும் மிக அதிகமாய் இருக்கும்.மகாளய பட்சம் என்பது, 15 நாட்கள் கொண்ட ஒரு வழிபாடு. இது புரட்டாசி மாத பவுர்ணமிக்கு மறுநாள், பிரதமை திதியில் துவங்கி, அமாவாசை வரை நீடிக்கும். இந்த புரட்டாசியில் வரும் அமாவாசையே, மஹாளய அமாவாசை என, சிறப்புடன் செய்யப்படுகிறது.

மகாளயம் என்பது, மகான்களின் இருப்பிடத்தை குறிக்கும். இறந்த பின் நம் முன்னோர், நம் வீட்டு பெரியவர்கள், தர்மராஜனின் அனுமதியோடு, இந்த, 15 நாட்களும், பித்ருலோகத்திலிருந்து இறங்கி வந்து, இந்த பூலோகத்தில் நம்முடன் உண்டு உறங்கி மகிழ்ந்து, நமக்கு ஆசி வழங்கிச் செல்வர் என்பது, நம் நம்பிக்கையாக இருந்து வருகிறது.

இந்த புரட்டாசி மஹாளய அமாவாசை, தை மற்றும் ஆடி அமாவாசையை விட சிறப்பு பெற்றது. பிற மாதங்களில் வரும் அமாவாசை நாட்களில், முன்னோரை வணங்க மறந்தவர்களும், சந்தர்ப்பம் சரியாக அமையாதவர்களும், இந்தப் புரட்டாசியில் வரும் மஹாளய அமாவாசை நாளில், முன்னோர் வழிபாடு செய்ய, பிதுர்தோஷம் முற்றிலுமாக நீங்கி, புண்ணியம் அடைவர் என்பது ஐதீகம்,இந்த, 15 நாட்களிலும், நாம் செய்யக் கூடிய பூஜை, வழிபாடு, உணவு என, அனைத்துமே நம் முன்னோரை எண்ணியே இருக்க வேண்டும். பித்ருக்களுக்கு மகாளயத்தை தவறாமல் மறக்காமல் சாஸ்திரப்படி செய்து முடிக்க வேண்டியது அவசியம்.

திருமணம் செய்து கொள்ளாமல் இறந்துவிட்டவர்களுக்கு, அக்., 6 சனிக்கிழமையன்றும், விபத்தில் மரணம் அடைந்தவர்களுக்கு, அக்., 7 ஞாயிறன்றும், கணவருக்காக மனைவி செய்யும் மகாளயத்தை, அக்., 8 திங்களன்றும் செய்வது சிறப்பு.மறைந்த தாய் தந்தையருக்கு, ஆண்டு தோறும் மகாளயத்தை தவறாமல் செய்ய வேண்டும். ஏதாவது தடங்கல் ஏற்பட்டால், அது நீங்கிய பின், மற்றொரு நாளில் செய்ய வேண்டும்.

ஆறு பிராமணர்களை வரவழைத்து, முறைப்படி பூஜை புனஸ்காரங்களை செய்து, ஹோமம் ஏற்பாடு செய்து, அனைவருக்கும் உணவளிப்பது பார்வணம் என அழைக்கப்படும், மகாளயம்.நிறைய பேரை வரவழைத்து, ஹோமம் செய்து, உணவளிக்க மனம், பணம், நேரம் இல்லையென்போர், ஹிரண்யம் என சொல்லப்படும் முறையில், அரிசி, வாழைக்காய் ஆகியவற்றை படைத்து, அதை தானமாக கொடுக்கலாம்.மாதந்தோறும் வழிபடும் பித்ருக்களின் நினைவான அமாவாசையை போல, தர்ப்பணம் செய்து வழிபடலாம்.

நம் முன்னோரை மனதுருக வேண்டி, இந்த மூன்று வழிகளில் ஏதேனும் ஒன்றில், வழிபாடு செய்ய வேண்டும் என்கிறது, நம் சாஸ்திரம்.நம் சொந்தங்கள் தாண்டி, நம்மீது,அக்கறை கொண்டு உதவியோர், நண்பர்கள், ஆசிரியர்கள் என, நமக்கு அறிந்தவர் எல்லாரையும் திரும்ப நினைவிற்கு கொண்டு வந்து, கறுப்பு எள்ளுடன் கலந்த தண்ணீரை வார்த்து, தர்ப்பணம் செய்ய வேண்டும். அவர்களின் ஆன்மா மகிழ்ந்து, நமக்கு ஆசி வழங்கும் என்பது நம்பிக்கை.

எளிமையான வழிபாடு-, அனைத்து சாபங்களும் தீர, திருச்செந்துார், ராமேஸ்வரம், திருவெண்காடு, கோடியக்கரை, வேதாரண்யம், காசி, கயா, சென்னை மத்திய கைலாஷ் போல, இன்னும் பல புகழ் பெற்ற புனித திருத்தலங்களுக்கு செல்லலாம்.நம் வீட்டுக்கு அருகில் உள்ள, நீர் நிலையான ஏதேனும் ஒரு ஆறு, கடல், ஏரியில், காலை, 11:30 மணிக்கு மேல் குளிக்க வேண்டும். இந்த வருட திதி நேரப்படி, காலை, 11:30 மணிக்கு பிறகே, வழிபாடு செய்ய வேண்டும்.

தலை வாழை இலையில், கறுப்பு எள், பொரி, கற்கண்டு போன்றவற்றை வைத்து கொள்ள வேண்டும். முன்னோர் சாபம் நீங்க, தமது முன்னோரின் பெயரை, 21 முறை வெள்ளை தாளில் எழுதி, மஞ்சள் தடவி சுருட்டி, நுாலால் கட்டி எடுத்து கொள்ள வேண்டும். இலையில் அனைத்தையும் வைத்து, கையில் பிடித்து, ஆற்றில், கிழக்கு திசையில் சூரியனை நோக்கி நிற்க வேண்டும். தலைக்கு மேல் துாக்கி, ஆகாயத்தை காட்டி பிரார்த்தனை செய்து, பின் நீரில் மூழ்கி, தண்ணீரை மூன்று முறை தலைக்கு பின்னால் தெளித்து, முழுவதுமாய் மூன்று முறை மூழ்கி வெளியில் வர வேண்டும். இந்த எளிய பரிகாரம், எப்பேர்பட்ட முன்னோரின் சாபத்தையும் நீக்கிவிடும்.

தம் கர்மவினை தீர வேண்டுமே என அஞ்சுவோர், அங்கு, 11 பேருக்கு, வயிறார முழுச்சாப்பாடு வாங்கிக் கொடுங்கள். அதே தினத்தில், அந்தணர்களுக்கு ஆடைகள், ஏழைகளுக்கு உணவு, படிக்க சிரமப்படும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை என, தானமளிக்கலாம்.எதுவும் செய்ய இயலாத சூழல் இருந்தால், காகம், ஈ, எறும்பு, நாய், பசு போன்ற ஜீவராசிகளுக்கு முடிந்த உணவை வழங்கலாம். இந்த புனித தினத்தில் தான், இவர்கள் காருண்ய பித்ருக்கள் என்றும் அழைக்கப்படுவர்.

அமாவாசையன்று, நம் வீட்டு வாசலில், நம் வீட்டில் இறந்தவர்கள் காத்துக் கொண்டிருப்பராம். அவர்களுக்கு, கருப்பு எள் கலந்த நீரை தெளிப்பதன் மூலம், குடிக்க வைக்கிறோம். உடனே அவர்கள் மனம் மகிழ்ந்து, நல் ஆசிகள் வழங்கிச் செல்வார்களாம்.யார் இந்த பக்ஷத்தில், உணவு அளிக்கிறார்களோ, அவர்கள் பாக்கியம் பெற்றவர்கள். இந்த நாளில், இதை செய்யாவிட்டால், வாசலில் நீண்ட நேரம் காத்திருந்து, தாகத்திற்கு எள் கலந்த நீர் கிடைக்காமல், நம் மூதாதையரின் ஆவி, வருத்தத்தோடு கிளம்பி போகுமாம். அந்த தோஷம், பிறகு நம் சந்ததியரின் வாழ்க்கையை பாதிக்கும் எனவும் நம்பப் படுகிறது.

பிரதமையில் துவங்கி, துவிதியை, திரிதியை சதுார்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, அஷ்டமி, நவமி தசமி ஏகாதசி துவாதசி, த்ரையோதசி சதுர்தசி என, செப்., 25 முதல், வரிசையாய் ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் செய்து, அதன் மூலம் புண்ணியம் ஈட்ட வேண்டும்.இத்தனை திதிகளையும் விட்டுவிட்டாலும், பதினான்காம் நாளான இன்று, திங்கள் கிழமை, மஹாளய அமாவாசையில், முறைப்படி விரதம் இருந்து, நம் முன்னோருக்கு ஸ்ரார்தங்கள் செய்து, தர்ப்பணம் செய்ய, அத்தனை நாளின் புண்ணியங்களும் ஒன்று சேர்ந்து, நமக்கு கிடைக்கும் என்பது ஐதீகம்.

நம் மூதாதையருக்கே உரித்தான இந்தத் தர்ப்பண பூஜை, பித்ருக்களுக்கு மட்டுமின்றி, வம்சாவளியிலுள்ள நமக்கும் பெரிதும் புண்ணியம் கிடைக்கச் செய்கிறது. பொதுவாக, வலது ஆள்காட்டி விரலுக்கும், கட்டை விரலுக்கும் இடையிலுள்ள, பித்ரு பூம்ய ரேகைகள் வழியாக, தர்ப்பணங்கள் அளிக்கப்படுகின்றன. இந்த தர்ப்பண நீரின் சக்தி, பூமியின் ஆகர்ஷன சக்தியை மீறி, மேல்நோக்கி எழும்பி, பித்ரு லோகத்தை அடைகிறது.பித்ருகளுக்கு தர்ப்பணம் செய்யும் போது, பசு தயிர் கொண்டு தர்ப்பணம் செய்வது கூடுதல் நல்லது. 

தர்ப்பண மந்திரம்:
விளம்பி நாம ஸம்வத்ஸரே - தக்ஷிணாயணே - வர்ஷ ருதெள - கன்யா மாஸே - க்ருஷ்ண பக்ஷே - அமாவாஸ்யாம் - புண்யதிதெள - இந்து வாஸர யுக்தாயாம் - உத்தரபல்குனி நக்ஷத்ர யுக்தாயாம் - விஷ்ணு யோக - விஷ்ணு கரண - ஏவங்குண - விஸேஷேண விஸிஷ்டாயாம் - அஸ்யாம் - வர்த்தமானாயாம் - அமாவாஸ்யாம் - புண்யதிதெள - அமாவாஸ்ய புண்யகாலே - தர்ஸ ஸ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே
Posted by svisweswaran at 8:16 PM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Newer Posts Older Posts Home
Subscribe to: Posts (Atom)

Pages

  • Home
  • ஆறாம் திணை-2012-08-12

Followers

Blog Archive

  • ▼  2020 (161)
    • ▼  August (3)
      • மண் வீடுகள் thanks dinamalar
      • சரியான வயதில் திருமணம் செய்வது thanks to dinamalar...
      • தினமும் தலைக்குக் குளிப்பது அவசியம்! - நன்றி: தினம...
    • ►  July (3)
    • ►  June (8)
    • ►  May (3)
    • ►  April (16)
    • ►  March (69)
    • ►  February (31)
    • ►  January (28)
  • ►  2019 (59)
    • ►  December (16)
    • ►  November (2)
    • ►  September (1)
    • ►  June (6)
    • ►  April (10)
    • ►  March (12)
    • ►  February (7)
    • ►  January (5)
  • ►  2018 (123)
    • ►  December (5)
    • ►  November (20)
    • ►  October (2)
    • ►  September (2)
    • ►  August (16)
    • ►  July (16)
    • ►  June (8)
    • ►  May (6)
    • ►  April (6)
    • ►  March (16)
    • ►  February (13)
    • ►  January (13)
  • ►  2017 (197)
    • ►  December (53)
    • ►  November (12)
    • ►  October (2)
    • ►  September (4)
    • ►  August (2)
    • ►  July (20)
    • ►  June (3)
    • ►  May (17)
    • ►  April (19)
    • ►  March (30)
    • ►  February (17)
    • ►  January (18)
  • ►  2016 (101)
    • ►  December (5)
    • ►  November (11)
    • ►  September (4)
    • ►  August (7)
    • ►  July (21)
    • ►  June (23)
    • ►  May (17)
    • ►  April (2)
    • ►  March (6)
    • ►  February (2)
    • ►  January (3)
  • ►  2015 (18)
    • ►  September (3)
    • ►  August (6)
    • ►  July (9)
  • ►  2014 (1)
    • ►  March (1)
  • ►  2013 (2)
    • ►  December (2)
  • ►  2011 (1)
    • ►  January (1)

About Me

svisweswaran
View my complete profile
Simple theme. Powered by Blogger.