Thursday, December 26, 2019

கலியுகத்தில் இப்படியெல்லாம் நடக்குமாம்! thanks to aanmigam.com


கலியுகத்தில் இப்படியெல்லாம் நடக்குமாம்!






கிருதயுகம் 17 லட்சத்து 28 ஆயிரம் ஆண்டுகள்
திரேதாயுகம் 12 லட்சத்து 96 ஆயிரம் ஆண்டுகள். (ஸ்ரீ ராமர் வாழ்ந்த யுகம் எனப்படுகிறது)
துவாபரயுகம் 8 லட்சத்து 64 ஆயிரம் ஆண்டுகள். (ஸ்ரீ க்ருஷ்ணர் வாழ்ந்த யுகம் எனப்படுகிறது)
கலியுகம் 4 லட்சத்து 32 ஆயிரம் ஆண்டுகள்.
(கலியுகத்தில் அசுரர்களும் தேவர்களும் ஒரே மனிதனுக்குள் வாழ தொடங்குவங்குவார்களாம். (50க்கு50) , சில நேரம் தேவர் பல நேரங்களில் அசுரர். கடவுள் பாதி மனிதன் பாதி. அதனால் தான் இந்த காலத்தில் யாரையும் நிரந்தரமான நல்லவர்கள் என்று முழுமையாக நம்ப முடிவதில்லை.)
யுகங்களில் கலியுகம் குறைந்த வருடங்களைக் கொண்டது. இப்போது நாம் கலியுகத்தில் இருக்கிறோம். கலியுகம் பிறந்தது பிப்ரவரி 18, 3102 என்று காலக்கணக்கீட்டு நிபுணர்கள் கண்டறிந்து இருக்கிறார்களாம், ஆக இந்த 2010 ஆம் வருடம் கலியுகத்தின் 5112 ஆம் வருடம் ஆகின்றது என்கிறார்கள்.
அதாவது கலியுகம் முடிய இன்னும் சுமார் 4,26,888 வருடம் இருக்கின்றது என்கிறார்கள். கலியுகம் முடிந்ததும் மீண்டும் கிருதயுகம் ஆரம்பிக்கும், அடுத்து திரேதாயுகம், துவாபரயுகம், மீண்டும் கலியுகம் இவ்வாறு மீண்டும் மீண்டும் வந்துகொண்டேயிருக்கும்.
ஆம், காலம் சக்கரம் அல்லவா!
இவற்றில் கலியுகத்தில் தர்மங்கள் சார்ந்த வாழ்க்கை சீர்குலையுமென்றும் கலியுகத்தின் முடிவில் அதர்மவாதிகளே உச்சமாக ஆட்சி செய்யும் தருணத்தில் கல்கி அவதாரம் நிகழும் என்றும் கூறப்படுகிறது. கலியுகத்தில் அப்படி என்னென்ன நடக்குமாம். பார்ப்போம்..
கலியுகத்தில் தர்மம், ஸத்யம், பொறுமை, தயை, ஆயுள் தேஹ பலம், ஞாபகம் ஆகிய இவைகள் நாளுக்கு நாள் குறையும்.
கலியில் பணமுள்ளவனே மேலான குலத்தில் பிறந்தவன் ஆவான்.
பணமுள்ளவன் எவனோ அவனே ஆசாரம் உள்ளவனாக கருதப்படுவான்.
பலமுள்ளவன் எவனோ அவன் மட்டுமே தர்மம், ஞாயம் போன்றவற்றை தீர்மானிப்பான்.
மணம் செய்து கொள்பவர்கள் அவரவர் சொந்த விருப்பத்தின் படியே இயங்குவார்கள். குலம் மறைந்து போகும்.
மனிதர்கள் அவர்களின் குணங்களைக் கொண்டு சிறந்தவர்களாக போற்றப்பட மாட்டார்கள்.
பிராமணர்களுக்கு பூனூல் அடையாளமாக மட்டுமே இருக்கும்.
அதிகமாகப் பேசுபவனே பண்டிதன் என்ற புகழை அடைவான்.
(மேடைக்கு மேடை பேசியே மயக்கும் அரசியல் வாதிகளைப் பார்த்தாலே தெரிகிறதே!)
ஏழையாக இருப்பவர்களே பழிபாவங்களுக்கு ஆளாவார்கள். பணமுள்ளவனே நல்லவன் என்று பெயரெடுப்பான்.
மனிதர்கள் அதிகம் சாப்பிடுபவர்களாகவும், காமவெறி கொண்டவர்களாகவும், தரித்திரர்களாகவும் இருப்பார்கள்.
ஆணும் பெண்ணும் சம்மதித்து புணர்ந்தாலே விவாஹம் செய்து கொண்டதாகக் கருதப்பட்டு விடும். விவாஹம் தேவையற்றதாகும். (விவாகரத்தை வரவேற்கும் பெரிய கூட்டமும் திருமணம் தாலி போன்றவற்றை அவமதித்து வெளியேறத்துடிக்கும் கூட்டமுமே இதற்கு அறிகுறியாகிறார்கள் என்று தோன்றுகிறது)
ஸ்த்ரீகள் பதிவிரதைகளாக இருக்க மாட்டார்கள். வேசிகளைப் போலவே நடந்துகொள்பவராக இருப்பார்கள். ஸ்த்ரீகள் வெட்கம் இல்லாதவர்களாகவும், கடுஞ்சொல் பேசுபவர்களாகவும், திருட்டுத்தனம், மாயை, பிடிவாதம் அதிகம் கொண்டவர்களாக இருப்பர்.
மனிதர்கள் பூமியை தங்களுடையது என்று சொல்லிக்கொள்வார்கள். பூமையை சொந்தம் கொண்டாட தந்தையுடன் சண்டையிடுவார்கள். சகோதரர்கள் அடித்துக் கொள்வார்கள்.
அருகிலிருக்கும் கோவிலை விட தூரதேசத்தில் இருக்கும் க்ஷேத்திரமே புண்ணிய க்ஷேத்திரமாக கருதப்படும்.
புகழுக்காக மட்டுமே தானங்கள் செய்யப்படும்.
மயிர் வளர்ப்பு அழகுக்கான முக்கியப் பொருளாகிவிடும்.
தைரியமாகப் பேசுபவனே சபைக்குரியவனாகக் கருதப்படுவான்.
(இப்போதெல்லாம், உதார் விடுறவன் தானே பெரிய ஆள்! ரௌடிகள் வளர்வதும் இப்படித்தானோ!)
திருடர்கள், கருணையற்றவர்கள் மற்றுக் அயோக்கியர்கள் போன்றவர்களே அரசனாக இருப்பார்கள்!
அரசாள்பவர்கள் இறை நம்பிக்கை மற்றும் வழிபாடுகளை பாதுகாக்க மாட்டார்கள். வேதமார்கம் கெடுக்கப்படும்.
ப்ரஜைகளுடைய பணங்களை அரசர்களே திருடிக்கொள்வார்கள்! அவர்களால் உபத்திரவிக்கப்பட்டு மக்கள் மலைகளிலும் காடுகளிலும் ஒளிந்து வாழ நேரிடும்.
பருவகாலங்கள் மாறிப்போகும். மக்கள் குளிர், காற்று, வெயில், மழை, பசி, தாகம், வியாதி, கவலை இவர்களால் கஷ்டப்படுவார்கள்.
கலியுகத்தில் இருபது, முப்பது வயதே பரம ஆயுளாகும்.
பசுக்கள் பாலிலும் உருவத்திலும் ஆடுகள் போல் ஆகிவிடும். கறக்காத பசுவை பாதுகாக்கவோ வளர்க்கவோ விரும்பமாட்டார்கள்.
(அடிமாடு கொண்டு செல்லும் லாரியைப் பார்த்தாலே தெரிகிறதே)
ஜாதிகளெல்லாம் பெரும்பாலும் சூத்திர ஜாதிகளாகிவிடும்.
சந்நியாசிகள் எல்லாம் குடும்பஸ்தர்கள் போலவே நடந்துகொள்வார்கள். பணத்திலேயே மிக்க ஆசை கொண்டவர்களாக இருப்பார்கள்.
ஆண்களுக்கு பெண்டாட்டி வீட்டு பந்தங்களே முக்கியமானவர்களாகிப் போவார்கள். மச்சினி, மைத்துனர்களிடம் பிரிமயாகப் பழகுவார்கள். சொந்த தந்தை, சகோதர சகோதரிகளிடம் பிரியம் வைக்க மாட்டார்கள்.
மரங்கள் எல்லாம் வன்னி மரங்களாகவே இருக்கும்.
மேகங்களில் மின்னல்கள் அதிகமாக இருக்கும். வீடுகள் மகிழ்ச்சியற்று சூனியமாகவே காட்சியளிக்கும்.

Wednesday, December 25, 2019

சுடு தண்ணீர் தலை முடிக்கு நல்லதல்ல! - ஆயுர்வேத மருத்துவர், ரா.பாலமுருகன் - நன்றி: தினமலர்

சுடு தண்ணீர் முடிக்கு நல்லதல்ல!
தினமலர்-ல் பதிவு செய்த நாள் : டிச 13, 2018  00:00

தலை குளியல் முறை குறித்து கூறும், ஆயுர்வேத மருத்துவர், ரா.பாலமுருகன்:

தலைக்கு, எண்ணெய் மற்றும் சீயக்காய் பொடி தேய்த்த பின், சாதாரண தண்ணீரால் தலையை அலசலாம். அதைவிட, மூலிகைகள் கலந்து கொதிக்க வைத்த தண்ணீரில் அலசினால் நல்லது. தலைக்கு சுடு தண்ணீர் பயன்படுத்தினால், முடிக்கும், கபாலத்திற்கும் கேடு விளைவிக்கும். அதனால், குளிர்ந்த அல்லது வெதுவெதுப்பான தண்ணீரிலேயே, தலை குளிக்க வேண்டும்.

நெல்லிக்காய், தான்றிக்காய், கடுக்காய், அதிமதுரம், நெருஞ்சில், சிறிதளவு தேயிலைப் பொடி ஆகியவற்றை கஷாயம் போல் கொதிக்க வைத்து, தலை அலசினால், முடி மிருதுவாவதுடன், உதிர்வது நிற்கும்; பொடுகுத் தொல்லையும் நீங்கும். மருதப்பட்டை, வாகை மரப்பட்டையை கஷாயம் போல் காய்ச்சி, முடியை அலசினால், தலை அரிப்பு குணமாகும்.

நெல்லிக்காய், தான்றிக்காய், கடுக்காய், வசம்பை தண்ணீரில் கலந்து, கொதிக்க வைத்து அலசினால், புழுவெட்டு குணமாகும்.மருதோன்றி இலையை கஷாயம் வைத்து அலசினால், முடி கறுமை நிறமடையும்; இளநரை நீங்கும்.

படிகாரத்தை தண்ணீரில் கரைத்து அல்லது கருந்துளசி கஷாயத்தால் அலசினால், பேன் தொந்தரவு நீங்கும். கரிசலாங்கண்ணி, நெல்லிக்காய், ரோஜா இலை சேர்த்து காய்ச்சிய கஷாயத்தால் தலையை அலசினால், முடி நன்றாக வளரும். தேக்கு மர இலையில் கஷாயம் வைத்து அலசினால், முடி உதிருவது நிற்கும்; நன்கு செழித்து வளரும்.

'ஸ்நானம்' என்பது, உச்சி முதல் உள்ளங்கால் வரை, உடலைக் குளிர்வித்தல். இதுவே, 'குளித்தல்' என்று மாறிவிட்டது. தவிர, தினமும் தாராளமாக, தலைக்குக் குளிக்கலாம். ஆனால், அதற்கென சில வழிமுறைகள் உள்ளன. பெண்களுக்கு அதிக முடி இருப்பதால், சளி தொந்தரவு ஏற்படும் என்பதாலேயே, தினமும் தலைக்குக் குளிக்கக் கூடாது என்கின்றனர். ஆயுர்வேதத்தின்படி, தினமும் குளிப்பது தான் சிறந்தது. தலைக்கு குளிக்கும்போது, உடலுக்கு வெதுவெதுப்பான நீரும், தலைக்கு குளிர்ச்சியான நீரும் ஊற்றிக் குளிக்கக்கூடாது.

தற்போதைய இளைய தலைமுறையினர், சரியாக தலையைத் துவட்டுவதில்லை. இப்படிபட்டவர்கள், 'ஹெல்மெட்'டால் வியர்வை ஏற்படும் நிலையில் உள்ளவர்கள், தலை அதிகமாக வியர்ப்பவர்கள், தலையில் நீர்கோர்த்து இருப்பவர்கள், சாம்பிராணி புகை போடலாம். இது, தலையில் நீர் கோர்த்துக் கொள்வதைத் தடுக்கும்.தவிர, நம் முன்னோர், கோவில் குளம், நீர்நிலைகளில் குளித்த பின், நெற்றி நிறைய திருநீற்றால் பட்டை அடிப்பர். அந்த திருநீறானது, தலையில் உள்ள நீரை முற்றிலுமாக இறக்கிவிடும். இப்போதைய தலைமுறையினர், இந்த வழிமுறையைப் பின்பற்றுவதை தவிர்க்கின்றனர். அதனால், இதற்கு மாற்றாக, தலையை துவட்டிய பின், 'ராஸ்னாதிக்' என்ற பொடியை, உச்சியில் சிறிதளவு வைத்துக் கொண்டால், தலையில் நீர் கோர்த்துக் கொள்ளாது!

மனம் எண்ணிடுமோ தெரியாது தெரியாது தெரியாது ....

ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா
ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா நொந்துடலும் கிழமாகி தளர்ந்து பின் நோயில் நடுங்கிடும் போது ஜீவ நாடிகள் நைந்திடும்போது மனம் எண்ணிடுமோ தெரியாது தெரியாது தெரியாது இன்று சிந்தை கசிந்துனைக் கூவுகிறேன் அருள் செய்திடுவாய் ஹரி நாராயணா ஓம் ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா
ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா நீடு கபம் கோழை ஈழை நெருக்கி என் நெஞ்சை அடைத்திடும் போது விக்கி நாவும் குழறிடும் போது மனம் எண்ணிடுமோ தெரியாது தெரியாது தெரியாது அன்றுனைக் கூவிட இன்றழைத்தேன் எனை ஆண்டருள்வாய் ஹரி நாராயணா ஓம் ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா
ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா

ஐம்பொறியும் கரணங்களும் வாயுவும் ஆடியடங்கிடும் போது எந்தன் ஆவி பிரிந்திடும் போது மனம் எண்ணிடுமோ தெரியாது தெரியாது தெரியாது நம்பியுனைத் தொழுதேன் அழைத்தேன் ஜகன் நாயகனே ஹரி நாராயணா ஓம் ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா
ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா உற்றவர் பெற்றவர் மற்றவர் சுற்றமும் ஓவென்று நின்றழும் போது உயிரோசைகள் ஓய்ந்திடும் போது மனம் எண்ணிடுமோ தெரியாது தெரியாது தெரியாது பற்றி உனைப் பணிந்தேன் அழைத்தேன் ஆபத்பாந்தவனே ஹரி நாராயணா ஓம் ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா
ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா என் பொருள் என் மனை என்பதெல்லாம் இனி இல்லை என்றாகிடும் போது மனம் எண்ணிடுமோ தெரியாது தெரியாது தெரியாது அன்றுனைக் கூவிட இன்றழைத்தேன் அருள் அச்சுதனே ஹரி நாராயணா ஓம் ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா
ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா வந்தெமதூதர் வளைத்துப் பிடித்து வாவென்று இழுத்திடும் போது மனம் எண்ணிடுமோ தெரியாது தெரியாது தெரியாது அந்தத அந்தியம் நீ வர இன்றழைத்தேன் ஸச்சிதானந்தனே ஹரி நாராயணா ஓம் ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா
ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா

Friday, December 20, 2019

பெற்றோர் கவனிக்க வேண்டியது thanks to dinamalar.com

பெற்றோபெற்றோர் கவனிக்க வேண்டியது!

பெற்றோர்  கவனிக்க வேண்டியது!
வீட்டின் சின்னச்சின்ன வேலைகளில், குழந்தைகளை ஈடுபடுத்துவதால், அவர்களின் ஆற்றல் மேம்படுவது பற்றி, நாகர்கோவில், குழந்தைகள் டாக்டர் ஷபி: குழந்தை கள், 2 வயதாக இருக்கும் போது, தட்டில் இருக்கும் சாப்பாட்டை எடுத்து தாங்களே சாப்பிட துவங்குவர். பெற்றோர் போல, ஆபிஸ் கிளம்புவது, சமைப்பது என, நடிக்கத் துவங்குவர். குழந்தைக்கு, 3 வயதானதும், கழிவறைக்கு தானே சென்று வர பழக்க வேண்டும். 4 வயதானதும், கழிவறையை சுத்தப்படுத்த, அந்தக் குழந்தையை பழக்க வேண்டும். இப்படியே, 5 வயது குழந்தை, பள்ளிக்கூட பை மற்றும் சாப்பாட்டு கூடையை மறக்காமல் எடுத்து வர வைக்க வேண்டும்.நன்கு நடமாட, பேச, வார்த்தைகளுக்கான அர்த்தங்கள் தெரிய துவங்கிய குழந்தைகளுக்கு, வீட்டின் சின்னச்சின்ன வேலைகளை செய்ய கொடுக்கலாம். உதாரணமாக, பாட்டிலில் தண்ணீர் நிரப்புவது; சாப்பிட உணவு தட்டை எடுத்து வருவது; ஷூ பாலிஷ் போடுவது; விடுமுறை நாட்களில், வீட்டின் சுற்றுப்புறங்களை சுத்தம் செய்வது என்பன போன்ற வேலைகளை செய்ய சொல்லலாம்.எனினும், சமையல் அறையில் நேரடியாக ஈடுபடுத்துவது, துணிகளை இஸ்திரி போடுவது போன்ற கடினமான பணிகளில் குழந்தைகளை ஈடுபடுத்தவே கூடாது. மாறாக, மீன் வளர்த்தல், பறவை, நாய்க்குட்டி, பூஞ்செடிகள் பராமரிப்பு போன்றவற்றை மேற்கொள்ளச் செய்யுங்கள். இவ்வாறு அவர்கள் வேலை செய்யும் போது, அவற்றில் குறைகளை காண்பிக்காமல், இன்னும் சிறப்பாக செய்வது எப்படி என்பதை, பக்குவமாக சொல்லிக் கொடுங்கள். முடிந்த வரை, மொபைல் போன்கள், கணினி விளையாட்டுகள், தொலைக்காட்சி போன்றவற்றில், அவர்களின் ஆர்வம் செல்லாத வகையில், பெற்றோர் கவனித்துக் கொள்ள வேண்டும்.இதனால், எந்தச் சூழ்நிலை என்றாலும், தன்னைத் தானே பராமரித்துக் கொள்ளும் மனப் பக்குவம், திறமை குழந்தைகளுக்கு வந்து விடும். இதற்கு, பெற் றோரின் ஒத்துழைப்பும், அரவணைப்பும் குழந்தைகளுக்கு அவசியம்.அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகம் நடத்திய ஒரு ஆய்வில், 'அன்றாட வீட்டு வேலைகளில் இருந்து குழந்தைகளை விலக்கி வைப்பது தவறு. அவ்வாறு செய்தால், குழந்தைகளின் திறன் குறைய வாய்ப்பு உள்ளது. மன தைரியம், வெற்றி, தோல்விகளை பகுத்தறியும் பக்குவம், உடனிருப்போருடன் உறவாடும் உளவியல் தன்மை போன்றவற்றில் பாதிப்பு ஏற்படும்' என்கிறது.வீடு என்றால், வேலைகளை எல்லாரும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதை, குழந்தைகளுக்கும் உணர்த்துங்கள்!
Yours sincerely,
Parvathi Visweswaran
(780) 705-7101


If you believe this email violates Canada's Anti-Spam Legislation (CASL), please contact us.
Edmonton Public Schools, Centre for Education, 1 Kingsway NW, Edmonton AB T5H 4G9

ர் கவனிக்க வேண்டியது!

Monday, December 16, 2019

சித்த மருத்துவத்தால் சுவாச நோயை விரட்டலாம் thanks to dinamalar.com

திண்டுக்கல்: 'மூச்சு பயிற்சி, சுடுநீர் குளியல் மூலம் சுவாச நோயை விரட்டலாம்' என, திண்டுக்கல் சித்த மருத்துவர் பேச்சி ஆலோசனை வழங்கினார்.
பனிக்காலத்தில் ஏற்படுகிற நோய்களில் சுவாச பிரச்னையும் உண்டு. வயது வித்யாசமின்றி எல்லோரையும் பாதிக்கிற நோய் இது. பரம்பரையாக, ஒவ்வாமை, பருவநிலை மாற்றம், கிருமி தொற்று, புகைப்பழக்கம், மனக்கவலை, நோய் எதிர்ப்பு சக்தி குறைவு போன்ற காரணங்களால் சுவாச நோய்கள் ஏற்படுகிறது.
இந்நோயை குணப்படுத்த எண்ணெய் குளியல், நசியம், மூச்சுப் பயிற்சி, யோகா, வர்மம், நீராவி குளியல், வேது பிடித்தல், பற்றிடுதல் போன்ற சிகிச்சைகள் சித்த மருத்துவத்தில் உள்ளன.
மேலும் ஆடாதொடை, நஞ்சறுப்பான், கண்டங்கத்திரி, துளசி, திப்பிலி, அதிமதுரம், பவளம், கபசுர குடிநீர், கற்பூராதி தைலம் போன்றவை சுவாச பிரச்னையை குணப்படுத்த உதவும். சுடுநீர் குளியல், இருப்பிடத்தை துாய்மையாக வைத்து கொள்ளுதல், படுக்கை விரிப்புகள் மற்றும் தலையணை உறைகளை அடிக்கடி மாற்ற வேண்டும். இரவில் எளிதில் செரிக்கும் உணவுகளை சாப்பிடுதல், உடல் எடையை குறைப்பது, தினமும் பிராணயாமம், மார்பு விரிவாக்க மற்றும் மூச்சு பயிற்சி செய்யலாம். குளிர் காற்று நேரடியாக அறைக்குள் வருவதை தடுக்க வேண்டும். இவற்றின் மூலம் சுவாச பிரச்னை ஏற்படுவதை தடுக்கலாம் என, அவர் கூறினார்.

Monday, December 9, 2019

நோய்களைத் தீர்க்கும் மழைக்கால மூலிகைகள் thanks to vikatan.com

Published:Updated:

நல்மருந்து 2.0 - நோய்களைத் தீர்க்கும் மழைக்கால மூலிகைகள்!

மருத்துவம் - 11 - தெரிந்த செடிகள்… தெரியாத பயன்கள்!
ஒடு ஒடுக்கி
ஒடு ஒடுக்கி
ழைக்காலங்களில், நிலத்தில் தன்னிச்சையாக முளைத்துக் கிளம்பும் சில தாவரங்களே மழைக்கால மூலிகைகள். இவை ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் முளைக்கத் தொடங்கி, மார்கழி மாதத்தில் பூத்து, தை மாதம் காய், கனிகளை உருவாக்கி, மாசி, பங்குனி மாதங்களில் கோடை வெப்பம் அதிகரிக்கத் தொடங்கியவுடன் விதைகளை உதிர்த்துவிட்டு, வெயிலில் கருகி அழிந்துவிடும். வீழ்ந்த விதைகள், பத்திரமாக மண்ணில் உயிர்ப்புடன் ஆறு மாதங்கள் இருந்து, மீண்டும் ஐப்பசி மழை ஆரம்பித்தவுடன் முளைக்கத் தொடங்குவது இயற்கையின் விந்தை.
கலப்பைக் கிழங்கு (செங்காந்தள்)
கலப்பைக் கிழங்கு (செங்காந்தள்)
கலப்பைக் கிழங்கு (Gloriosa Superba)
கலப்பைக் கிழங்கு தாவரம் ‘செங்காந்தள்’ என அழைக்கப்படுகிறது. இதன் மலர், தமிழ்நாட்டின் மாநில மலராக இருக்கிறது. மழையின்போது இடி, மின்னல் விழுந்தால் மட்டுமே முளைக்கும் இயல்புடையது செங்காந்தள். இதன் பூ, `கண்வலிப் பூ’ என்றும் அழைக்கப் படுகிறது. சித்த மருத்துவத்தில் இது தனியாகக் கையாளப்படுவதில்லை. இதன் கிழங்கைத்தான் ‘வெண்ணாபி’ என்று சில மருந்துக் கடைகளில் விற்கிறார்கள். இதன் கிழங்கு, மிகவும் கொடிய நஞ்சுத் தன்மை வாய்ந்தது. `பாம்புக்கடி, தேள்கடி நஞ்சுகளை குணமாக்கும்’ என நூல்கள் கூறினாலும், அதற்கு உறுதியான ஆதாரங்கள் இல்லை. எனவே இதன் பூக்களின் அழகைக் கண்டு ரசிப்பதோடு நிறுத்திக் கொள்வது நல்லது. இதன் கிழங்குடன் கார்போகரிசி, கருஞ்சீரகம், காட்டுச்சீரகம், சந்தனத்தூள் சேர்த்து மேற்பூச்சாகப் பூச, மிக மோசமான தோல் நோய்கள், குறிப்பாக நாள்பட்ட பற்றுகள் மாறும்.
இம்பூறல்
இம்பூறல்
இம்பூறல் (Oldenlandia umbellata)
`இன்புறா’, `சாயவேர்’ போன்ற பெயர்களிலும் இது அழைக்கப்படுகிறது. மழைக்காலங்களில் தரிசு நிலங்களில் குறிப்பாக, செம்மண் தரைகளில் மிக வேகமாக முளைத்தெழும் புல்வகையைச் சேர்ந்த தாவரம். மிகச்சிறிய, சிறிது தடிமனான இலைகளையும் கொத்துக் கொத்தாக வெள்ளை நிறப் பூக்களையும் உடையது. ரத்தவாந்தி, ரத்த இருமல் ஆகிய அறிகுறிகள்கொண்ட காசநோய்க்கு இது மிகச்சிறந்த மருந்து.
இம்பூறல் அடை
இம்பூறல் இலைகளை நிழலில் உலர வைத்து, பொடியாக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு பங்கு பொடியுடன், இரண்டு பங்கு அரிசிமாவு சேர்த்து, தேவையான அளவு வெந்நீர்விட்டுப் பிசைந்துகொள்ளவும். அதை அடையாககத் தட்டி, பசுநெய்யில் சுட்டு காசநோயாளிகள் சாப்பிடலாம். அவர்கள் சாப்பிட்டுவரும் ஆங்கில மருந்துகளைத் தொடர்ந்து எடுத்துக்கொண்டே இந்த அடையை உண்டு வரலாம். இதன் வேரைச் சேகரித்து மண்போகக் கழுவி, நிழலில் உலர்த்தி சூரணமாகச் செய்து கொள்ளவும். இந்தச் சூரணத்தில் 10 கிராம் எடுத்து, 100 கிராம் அரிசிமாவு சேர்த்து அடையாகச்சுட்டுச் சாப்பிட்டு வர, எல்லாவிதமான சளித் தொல்லைகளும், வறட்டு இருமலும் குணமாகும்.
விஷ்ணுகிரந்தி
விஷ்ணுகிரந்தி
விஷ்ணுகிரந்தி (Evolvulus alsinoides)
‘விடாத காய்ச்சலுக்கு விஷ்ணுகிரந்தி’ என்பது நாட்டார் வழக்கு. இது மழை பெய்தவுடன் தரிசு நிலங்களில் வேகமாகப் படர்ந்து வளரும். இதில் நீலநிறப் பூக்கள் பூக்கும். இதன் சமூலம், தூதுவளைக் கொடி, துளசி சமூலம், கண்டங்கத்திரி சமூலம், பற்படாகம், ஆடாதொடை இலை, நிலவேம்பு ஆகிய மூலிகைகளைப் பச்சையாக 30 கிராம் எடுத்துக்கொள்ள வேண்டும். அவற்றை உரலில் இட்டு, ஒன்றிரண்டாகச் சிதைத்து, அதனுடன் ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து 250 மி.லியாகக் காய்ச்சி வற்றவைக்க வேண்டும். அதை ஃப்ளாஸ்க்கில் வைத்துக்கொண்டு இரண்டு அல்லது மூன்று வேளை குடித்துவர எல்லா வகைக் காய்ச்சல்களும் குணமாகும்.
‘மாலாகச் சூரண மழையிட னுண்டியச்
சூலக மாந்தர்க்கு சூட்சிய தாக்குமே’ தேரன் காப்பியம்
விஷ்ணுகிரந்திப் பொடியை இளஞ்சூடான நீருடன் கலந்து குடித்து வர, பிள்ளைப்பேறு உண்டாகும் என்பது இதன் விளக்கம். இந்தக் குறிப்பு சித்த மருத்துவக் கல்லூரிப் பாடநூலில் இடம்பெற்றாலும், சித்த மருத்துவர்கள் இதை அதிகம் பயன்படுத்துவதில்லை. வட இந்திய ஆயுர்வேத மருந்து நிறுவனங்கள், பெண் மலடு நீக்கும் மருந்துகளில் விஷ்ணுகிரந்தியை அதிகம் பயன்படுத்துகின்றன.
சித்த மருத்துவர் பி.மைக்கேல் செயராசு
சித்த மருத்துவர் பி.மைக்கேல் செயராசு
நத்தைச்சூரி (Spermacoce hispida)
இது, மழைக்காலங்களில் தரையில், நீளமான கொடிகளாகப் படர்ந்து வளரும் தாவரம். வெண்மையான நீல நிறத்தில் சிறிய பூக்கள் காணப்படும். ‘எதையும் செய்யுமாம் நத்தைச்சூரி’ என்பது பழமொழி. நத்தைச்சூரி வேரை 20 கிராம் எடுத்து ஒன்றிரண்டாக இடித்து, 200 மி.லி கொதிக்கும் நீரில் போட்டு, இரண்டு மணி நேரம் ஊறவைத்து, வடிகட்டி வைத்துக்கொள்ள வேண்டும். அதை வேளைக்கு 30 முதல் 50 மி.லி வீதம் தினமும் மூன்று வேளை குடித்துவந்தால், உடல் முழுதுமோ, ஏதாவது ஒரு குறிப்பிட்ட உறுப்பில் தாக்கும் நோயோ குணமாகும். இவ்வாறாகக் குடிநீர் வழங்கி ‘சரவாங்கி வாதம்’ எனப்படும் ரூமட்டாய்டு வாத (Rheumatoid arthritis) நோயாளிகளின் வலி நன்கு குறைந்துவருவதை என் அனுபவத்தில் கண்டிருக்கிறேன்.
நத்தைச்சூரி, அம்மான் பச்சரிசி
நத்தைச்சூரி, அம்மான் பச்சரிசி
நத்தைச்சூரிக் கொடி நன்கு முற்றியதும் பிடுங்கி, எள்ளுச்செடியை சண்டு அடிப்பதுபோல அடித்தால் அதன் விதைகள் கொட்டிவிடும். இது எள்போலவே மிகச் சிறியதாக இருக்கும். விதையைப் பொடி செய்து தனியாகவோ லேகியமாகவோ கிண்டி சாப்பிட்டுவர சீதபேதி, சூட்டுக்கழிச்சல் ஆகியவை குணமாகும். இதன் வேரை மட்டும் அரைத்து பற்றுப் போட, கல் போன்ற வீக்கங்கள் கரையும்.
அம்மான் பச்சரிசி (Euphorbia hirta)
இதற்குச் ‘சித்திரப் பாலாடை’ என்ற இலக்கியப் பெயர் உண்டு. ‘பாலாட்டங் கொழை’ என்பது பாமர மக்களின் வழக்குப் பெயர். இதில் வெள்ளைத் தண்டுடையதும், சிவப்பு நிறத்தண்டுடையதும் உண்டு. இதன் பூமஞ்சரி, பச்சரிசியைப்போலக் காணப்படுவதால் இந்தப் பெயர் வந்தது. இதன் தண்டை ஒடித்தால் பால் வரும். தண்டு, இலை, அரிசி என அனைத்தையும் சேகரித்து, பசுந்தயிர்விட்டு அரைத்துத் துவையல் பதத்தில் நெல்லிக்காய் அளவு காலையில் வெறும் வயிற்றில் உண்டுவர, நாள்பட்ட வெள்ளைப்படுதல், நீர்க்கடுப்பு, இந்திரிய ஒழுக்கு போன்ற மேகநோய்கள் குணமாகும். தொடர்ந்து 48 நாள்கள் உண்டுவர, உடல் குளிர்ச்சியாகி, தாதுக்கள் வலுப்பெற்று உடல் பலம் பெறும். கண்கள் குளிர்ச்சியடையும். வேர் நீங்கலாக முழுச்செடியை, காய்ச்சிய பசும்பாலில் அரைத்து வடிகட்டி, பாலூட்டும் தாய்மார்கள் உண்டுவர, பால் சுரப்பு அதிகரிக்கும். இதன் பாலை, நகச்சுற்று, சொத்தை நகம், மரு, பாலுண்ணிகள், முகப்பரு ஆகியவைமீது பூசிவர அவை தழும்பின்றி மறையும்.
நாய்த்துளசி, முள்ளுக்கீரை
நாய்த்துளசி, முள்ளுக்கீரை
நாய்வேளை (Cleome viscosa)
இது மூன்று கூட்டிலைகளைக்கொண்ட சிறு தாவரம். மஞ்சள் நிறத்தில் பூப்பூத்து, காய் காய்க்கும். இதன் விதைகள் கடுகுபோல இருக்கும். இதில், வெள்ளை கலந்த நீலநிற பூக்களுடைய இனமும் உண்டு. இதன் இலையுடன், சிறிது சின்ன வெங்காயம் சேர்த்து துவையல் பதத்தில் அரைத்து வழித்து, நல்லெண்ணெயில் வதக்கி, இளஞ்சூட்டில் வைத்துக் கட்டிவர மூலமுளை வலி குறைவதுடன் மூலமுளைக் கட்டிகளும் அமுங்கிவிடும். இதே பக்குவத்தை வேறு கட்டிகள்மீதும் பயன்படுத்தலாம். பூப்பதற்கு முன்னர் இளந்தளிராக இருக்கும்போது இதைப் பறித்து, பிற கீரைகளுடன் கலந்து சமைத்து உண்டுவந்தால், வாய்வுத் தொல்லை நீங்கும். பெண்களின் மாதவிடாய் சிக்கலுக்கும் இது நல்ல தீர்வு.
பேராமுட்டி, திருமேனி
பேராமுட்டி, திருமேனி
முள்ளுக்கீரை (Amaranthus spinosus)
இது, சாலையோரங்களிலும், நீர்நிலைகளின் கரையோரங்களிலும் மழை பெய்தவுடன் கூட்டம் கூட்டமாக முளைக்கும். பார்ப்பதற்குத் தண்டுக்கீரைபோலவே இருக்கும். இதன் இலைகளில் நிறைய முட்கள் காணப்படுவதால், `முள்ளுக்கீரை’ என அழைக்கப்படுகிறது. இதன் சாறு சேர்த்து தங்கபஸ்பம் தயாரிக்கப்படுகிறது. சிவப்புத் தண்டுடைய முள்ளுக்கீரை, `செம்முள்ளிக்கீரை’ என அழைக்கப்படுகிறது. இளந்தண்டாக இருக்கும்போது அதாவது, முள் முளைப்பதற்கு முன்னர் இதைக் கீரையாகச் சமைத்துச் சாப்பிட, சிறுநீர் நன்கு பிரியும்; உடலும் மெலியும். முற்றிய முள்ளுக்கீரையை வேருடன் பிடுங்கி, குறுகத் தறித்து நிழலில் உலரவிட வேண்டும்.
பிறகு, ஒன்றிரண்டாக இடித்து, 50 கிராம் பொடியுடன் ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து கால் லிட்டராக சுண்டக் காய்ச்சி வடிகட்டிக் குடித்துவர, மூன்று மாதங்களுக்குள் பருத்த உடல் நன்கு இளைக்கும். இலையைத் தண்ணீர்விட்டு அரைத்து, கட்டிகள் மீது பற்றுப்போட அவை அமுங்கும்.
கோபுரந்தாங்கி, கானவாழை
கோபுரந்தாங்கி, கானவாழை
அதேபோல வேரைச் சுட்டு சாம்பலாக்கி, சோறு வடித்த கஞ்சியில் குழப்பி, கட்டிகள்மீது போட அவை விரைவில் பழுத்து உடையும். வேருடன் முள்ளுக்கீரையை முழுமையாக இடித்து 500 மி.லி தண்ணீர் சேர்த்து எட்டில் ஒரு பங்காக வற்றவைத்து வடிகட்டிக்கொள்ளவும். இதைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குடித்துவர நீர்க்கட்டு நீங்கிச் சிறுநீர் பிரியும். இப்படி மூன்று முதல் ஐந்து நாள்கள் தொடர்ந்து செய்துவரவும்.
ஒடு ஒடுக்கி
ஒடு ஒடுக்கி
வெட்டுக்காயத்தைக் குணமாக்கும் பச்சிலைகள்
வெட்டுக்காயப்பூண்டு, கிணற்றுப்பூண்டு, தாத்தாப்பூச்செடி (Tridax procumbans); அரிவாள்மனைப்பூண்டு, அரிவாள் மூக்குப் பச்சிலை (Sida acuta); ஒடிவு அடக்கி, ஒடொடக்கி, ஒடு ஒடுக்கி (Justicia simplex)... இந்த மூன்று பச்சிலைகளுமே வெட்டுக்காயங்களை குணப்படுத்துவதில் மிகச் சிறந்தவை. இவற்றில் மூன்றாவதாகச் சொல்லப்பட்ட தாவரம், டெட்டனஸ் கிருமித்தாக்குதலைக் கட்டுப்படுத்துவதாக நூல்கள் கூறுகின்றன. மிக ஆழமான காயங்களைக்கூட இந்தப் பச்சிலைகள் குணப்படுத்தியுள்ளன. வெட்டுக்காயங்கள்மீது இந்தப் பச்சிலைகளில் ஏதாவது ஒன்றையோ கிடைப்பவற்றின் சாற்றையோ வடிகட்டிப் பூசிவர ஆறும். அரைத்துப் பூசினால் சில நேரங்களில் சீழ்பிடிக்க வாய்ப்புள்ளது. எனவே, சாற்றை மட்டும் பூசிவருவது நல்லது.
பேராமுட்டி (Pavonia odorata)
தரிசு நிலங்களில், மழைக்காலங்களில் தானே வளரும் இந்தத் தாவரம், பிசுபிசுப்பான இலைகளை உடைய குறுஞ்செடி. வெள்ளை நிறத்தில் பூப்பூக்கும் இந்தச் செடி `பிசுறு செடி’ என்றும் சொல்லப்படுகிறது. காய்ச்சல் கஷாயங்களில் இது சேர்க்கப்படுகிறது. இதன் வேர் சிறுநீரகக்கல்லைக் கரைக்க, மாவிலங்கப் பட்டைக் குடிநீரில் சேர்க்கப்படுகிறது. மழைக்காலத்தில் மட்டுமே இதைப் பார்க்க முடியும்.
‘‘கலப்பைக் கிழங்கு (செங்காந்தள்), மிகவும் கொடிய நஞ்சு. `பாம்புக்கடி, தேள்கடி நஞ்சுகளைக் குணமாக்கும்’ என நூல்கள் கூறினாலும், அதற்கு உறுதியான ஆதாரங்கள் இல்லை. எனவே இதன் பூக்களின் அழகைக் கண்டு ரசிப்பதோடு நிறுத்திக்கொள்வது நல்லது.’’
திருமேனி (Acalypha indica)
இது குப்பைமேனியில் ஒருவகை. இது ‘ஆண் குப்பைமேனி’ எனவும் சொல்லப்படுகிறது. வர்ம மருத்துவத்தில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் காயத்திருமேனி தைலத்தில் இதன் சாற்றைச் சேர்க்கிறார்கள்.
கோபுரந்தாங்கி (Indoneesiella echioides)
மழைக்காலங்களில் மட்டும் காணக் கிடைக்கும் இதன் இலைச்சாற்றுடன் சம அளவு நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி, தலைக்குத் தேய்த்துக் குளித்துவர, முடி உதிர்வது நிற்கும்; கபாலச்சூடு குறைந்து முடி செழித்து வளரும்; கரப்பான், புழுவெட்டு, தலையில் ஏற்படும் சொரியாசிஸ், படைகள், செதில் உதிரல் நிற்கும்.
‘‘கானவாழை இலைகளை அப்படியே அரைத்துக் கட்டிவரப் படுக்கைப்புண், மார்புக்காம்பைச் சுற்றி வரும் ஆறாப்புண்கள் ஆறும்.’’
கானவாழை (Commolina benghalensis)
வயல் வரப்புகளில் மிக வேகமாகப் பரவிவளரும் தாவரம். வாழைபோலவே இலையமைப்புடையது என்பதால், `கானவாழை’ ஆனது. நீல நிறத்தில் பூக்கள் உடைய இந்தத் தாவரம் `கோழிக்கானான் கீரை’, `கன்றுக்குட்டிப்புல்’ எனவும் அழைக்கப்படுகிறது. இதன் இலைகளை அப்படியே அரைத்துக் கட்டிவரப் படுக்கைப்புண், மார்புக்காம்பைச் சுற்றி வரும் ஆறாப்புண்கள் ஆறும்.
சாறுவேளை, சாரணை, சத்திச்சாரணை, மூக்கிரச்சாரணை ஆகியவை குறித்து அடுத்த இதழில் பார்ப்போம்

Sunday, December 8, 2019

மனசே, மனசே குழப்பம் என்ன! - கோபம் தவிர்ப்பது கோடி நன்மை தரும்! thanks to dinamalar.com