ஏன் டாக்டர் உங்களுக்கு கோபமே வராதா'?' என்று கேட்கின்றனர். எனக்கும் கோபம் வரும்; அதிலும் இளம் வயதில் நிறைய கோபப்பட்டிருக்கிறேன்; கோபப்படுவதால் எனக்கு நானே எவ்வளவு தீங்கு செய்து கொள்கிறேன் என்பது அந்த வயதில் புரியவில்லை. அதைக் கற்றுக் கொள்ள பல ஆண்டுகள் ஆனது. கோபப்படுவதால் ஏற்படும் பின் விளைவுகளைப் பற்றி மருத்துவ ரீதியிலான உண்மைகளை டாக்டரான பின்பே புரிந்து கொண்டேன்.
கோபம் வரும் போது என்ன செய்வோம்? முதலில் படபடப்பாக சத்தமாக பேசுவோம்; ஆவேசப்படுவோம்... கோபம் அடங்கிய பின் நம்மை நாமே கவனித்தால் உடல் சோர்வாக இருப்பதை உணர முடியும். இது ஆறு - எட்டு மணி நேரத்திற்கு இருக்கும்; நாள் முழுவதும் மனம் பாரமாக இருப்பதை உணர முடியும்.
இதற்கு பின்னால் இருக்கும் மருத்துவ அறிவியல் விளக்குகிறேன்:
பத்து வினாடிகள் கோபப்படுவதால் அந்த அதிர்ச்சியிலிருந்து உடல் மீண்டு வர எட்டு மணி நேரம் ஆகிறது. 'கார்ட்டிசால்' என்ற ஸ்ட்ரெஸ் ஹார்மோன் அதிக அளவில் சுரக்கும். கோபம் வரும் நேரத்தில் உள் உறுப்புக்களுக்கு ரத்த ஓட்டம் குறையத் துவங்கும். அமிலங்கள் அதிக அளவில் சுரந்து உள் உறுப்புகளை பாதிக்கும்.
கோபப்படும் நேரத்தில் அட்ரினல் சுரப்பிகள் அதிகமாக சுரப்பதால் கோபப்பட்டு முடிந்தவுடன் ஆறு - எட்டு மணி நேரத்திற்கு நம்மால் இயல்பாக செயல்பட முடியாது; திறன் வெகுவாக குறைந்து விடும். 10 வினாடிகள் கோபப்பட்டாலே உடம்பு பழைய நிலைக்கு வருவதற்கு எட்டு மணி நேரம் ஆகிறது.
இப்படியிருக்க ஒரு நாளில் எத்தனை முறை நாம் கோபப்படுகிறோம் என யோசித்துப் பாருங்கள்...
அவசியம் இல்லாத விஷயங்களுக்கெல்லாம் கோபப்பட்டு நம் ஆரோக்கியத்தைக் நாமே கெடுத்துக் கொளளக்கூடாது.
- டாக்டர் அஸ்வின் விஜய்
தன்னம்பிக்கை பேச்சாளர்
சென்னை. 90940 10777

Advertisement
No comments:
Post a Comment