Monday, December 30, 2019

குழந்தைகளின் கனவுகளுக்கு துணை நிற்போம் thanks to dinamalar.com


Advertisement
 குழந்தைகளின் கனவுகளுக்கு துணை நிற்போம்!
உறவுகள் கூடும் உன்னததருணங்கள் விடுமுறை தினங்கள். அதுவும் பள்ளிக் கூட விடுமுறை நாட்கள் எப்போதும் வசந்த காலங்களை ஞாபகம் செய்யும். கடைசித் தேர்வு எழுதும் நாளுக்கு முந்தைய நாளே மனதிலே இனம்புரியாத மகிழ்ச்சி ஒன்று பிறக்கும்.

நண்பர்களையும்உறவினர்களையும் சந்திக்கப் போகிறோம் என்பதை விட, ஒன்றாக உண்டு உறங்கி விளையாடிமகிழப் போகிறோம் என்ற அளவில்லா மகிழ்ச்சி மனதிற்குள்ஒட்டிக்கொள்ளும். பொதுவாக குழந்தைகள் எப்போதும் ஓய்வெடுப்பதில்லை. வீட்டில்உள்ளோர்களையும் அந்தநேரத்தில்ஓய்வெடுக்க விடுவதில்லைஎன்பதும் கூடுதலான செய்திதான்.
ஓடி விளையாடு பாப்பா - நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா
கூடி விளையாடு பாப்பா -ஒரு
குழந்தையை வையாதே பாப்பா என்பான் பாரதி.
கொண்டாட்ட காலங்கள்
குழந்தைகளைக் கொண்டாட்டத்
தில் ஆழ்த்தும் அற்புதம் அவர்கள்
விளையாடும் விளையாட்டுக்களிலேஉள்ளது. நவீன உலகில் விளையாட்டு என்றாலே அது வீடியோ கேம் என்ற அளவிலேயும் அலைபேசி விளையாட்டுகள் என்ற அளவிலும் சுருங்கி விட்டது.

குழந்தைகளை குற்றம் சொல்லி பயனில்லை. பாதுகாப்பாக குழந்தைகள் வளரவேண்டும்
என்பதிலே அக்கறையோடு இருக்கும்நாம் உடல் வன்மையோடும் ஆன்மபலத்தோடும் அந்த குழந்தைகள்வளர்கிறார்களா? என்பதைசிந்திப்பது இல்லை. விடுமுறை காலங்களே குழந்தைகளின்

கொண்டாட்ட காலங்கள்.

அந்ததருணங்களில் அவர்கள் விரும்பும்விளையாட்டுகளை விளையாடவைத்து, விரும்பும் இடங்களுக்கும்அழைத்துச் சென்றால் அவர்களுடையமனமும் உடலும் வளம் பெறும்.உண்மையில் நமதுகுழந்தைகளை மிகவும் பாதுகாப்பாக வளர்க்கிறோம். அவர்களுக்கு சுதந்திரம் கொடுக்கிறோமோ? நம்மை நமது பெற்றோர்வளர்த்த விதங்களை விட சற்றேகடினமான சூழலில்தான்
அவர்களை அணுகி விடுகிறோம்.

பாரதியும் கண்ணதாசனும்

மிகவும் கட்டுப்பாடோடு வளர்க்கும் குழந்தைகள் ஒரு காலத்தில் அந்த தடைகளை உடைத்து வெளியேறி பிரச்னை குழந்தைகளாக மாறும் அபாயங்களைக்கண்டிருக்கிறோம். அதீத
சுதந்திரம் கொடுத்து வளரும் குழந்தைகள் அவர்களின் பொறுப்பினை உணர்ந்து நல்ல மனிதராக மாறும் நிதர்சனங்களையும் காண்கிறோம்

பாரதியும்கண்ணதாசனும்கண்ணனைக் கொண்டாட காரணம் நிறையஇருந்தாலும் அதில்
முக்கியகாரணம் கண்ணன் குழந்தை மனம்மாறாதவன் என்பதே ஆகும். நம்மை அறியாமல் நமதுகுழந்தைமை வெளிப்படும் தருணம்ஆனந்தத்தின் உச்சமே. எந்த நிலையிலும் மகிழ்ச்சியை இழக்காத இழக்க விரும்பாத பால்யத்தைகொண்டாடி மகிழுங்கள்அம்புலி மாமாவும்,தெனாலி ராமன், மரியாதை ராமன், அக்பர் , பீர்பால் ஆகியோர் விதைத்த நல்லறங்களைமீண்டும்
அவர்களுக்கு ஞாபகம் செய்வோம். நல்ல நுால்களே சிறந்த நண்பர்கள் என்பதை
மாணவர்களுக்கு புரிய வைக்க இந்த விடுமுறைக் காலங்களை பயன்படுத்தலாம்.

நன்னெறிக் கதைகள் நம்பிக்கை வழங்கும் புத்தகங்கள் என்ற வகையில் அவர்களுக்கு அறிமுகம் செய்து அவர்களோடு சிறிது நேரம் நாமும் வாசித்து பழக்கினோம் என்றால் அவர்களுக்கு ஒரு புதிய உலகத்தை நாம் அறிமுகம் செய்து வைக்க முடியும்.

படிக்கும் பழக்கம்

படிக்கும் பழக்கத்தைகுழந்தைகளிடம் கொண்டு சேர்த்து விட்டாலே அவர்களின் எதிர்காலம் குறித்து நாம் அதிக கவலைப் படவேண்டிய அவசியம் இல்லை.வரலாற்றுச் சிறப்புமிக்க சில ஊர்களுக்கு அழைத்துச் செல்லுங்கள். அந்த ஊரின் வரலாற்றைக் கூறி அவர்களை உற்சாகம் கொள்ளச் செய்யுங்கள். அவர்களோடு செலவழிக்க நேரத்தை ஒதுக்குங்கள். அந்த நேரத்தில் முழுமையாக அவர்களின் நண்பராகவே மாறுங்கள்.

அவர்கள் நமக்கும் நிறைய கற்றுக்கொடுப்பார்கள். எவ்விதசங்கடமும் இல்லாமல் அவர்களிடம் சில பாடங்களை நாம் படிக்க தொடங்கும்போது மகிழ்வின்உச்சத்தில் நாம் இருப்போம் சிறிது நேரம் உங்கள் அலைபேசியை அணைத்து விட்டு அவர்களோடு உரையாடுங்கள். அவர்களின் தேவையை உணருங்கள். அவர்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு பேசுங்கள்.

நம்முடைய கனவுகளையும் , கருத்துக்களையும் அவர்களின் மீது திணிக்காதீர்கள். அவர்கள் விரும்பும் விஷயங்களை செய்ய விடுங்கள். அது தவறாக இருந்தால் கனிவோடு கூறுங்கள். அதை ஏற்காத பட்சத்தில் அவர்கள் உணரும் காலமும் வரும். நிச்சயமாக நம்மிடம் திரும்பி வருவார்கள் என்பதே நிதர்சனம்.

வாழ்வதற்கு வழிகள்

பாடங்களைத் தாண்டிய வாழ்வு உள்ளது என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.
தோல்விகளை தாங்கும் பக்குவத்தை அவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். வாழ்வதற்கு வழிகள் நிறைய உண்டு என்பதை அவர்களுக்கு உணர்த்தி விட்டாலே போதும். வாழ்வினை வெல்லும் வழிகளை அவர்களே கண்டு கொள்வார்கள். வென்று வருவார்கள். நமது தோல்வி அனுபவங்களை அவர்கள்மீது திணித்து அவர்களின்புதிய முயற்சிகளுக்கு தடையாக நின்று விடக் கூடாது.

ஒவ்வொரு முறையும் அவர்கள் செய்யும் சிறிய முயற்சிகளைக் கூட பெரிய அளவில் பாராட்டுங்கள். அவர்கள் செய்யும் தவறுகளை பக்குவமாக எடுத்துச் சொல்லுங்கள். இனி அந்த தவறுகள் நேராதவாறு அவர்களே பார்த்துக் கொள்வார்கள். அந்த வயதில் அவர்களின் மனம் ஒரு அழகிய நிலம் போல இருக்கும். நாம் அறுவடை செய்ய வேண்டியதை நேர்மறையோடு விதைக்க வேண்டும்.

அப்போதே அவர்கள் மனம் அதை ஏற்றுக் கொண்டு மனதிற்குள் நல்ல எண்ணங்களின் விளைச்சல் தொடர ஆரம்பிக்கும். அந்த விளைச்சல் வேண்டும் என்றால் நம்பிக்கை என்ற உரம் போட்டு தவறுகள் என்ற களைகளை எடுத்து விடுங்கள். இன் சொல் எனும் நீரைப் பாய்ச்சுங்கள். நீங்கள் நினைப்பது போலவே சிறந்த அறுவடை சாத்தியமாகும்.

விளையாட விடுங்கள்

உண்மையில் அவர்கள் வயது என்பது விளையாட்டை அதிகம் நேசிக்கும் வயது. ஆனால் நாம் அவர்களை விளையாட விடுகிறோமோ என்பது கேள்விக்குறி. வியர்வை சிந்தி விளையாடும்போது தடுமாறி கீழே விழுந்து மீண்டும் எழுந்து ஓடும் நம்பிக்கையை தானாகவே பெற்றுத் தரும் விளையாட்டுக்களை குழந்தைகளுக்கு அறிமுகம் செய்யுங்கள். அவர்களைஅவர்களின்
நண்பர்களோடு விளையாட விடுங்கள்.

நன்றாக விளையாடி விட்டு படிக்க ஆரம்பிக்கும் குழந்தைகள் எளிதாக படித்து விடும். நன்றாக விளையாடும் குழந்தைகள் மனதினை ஒருமுகப்படுத்தும் விதைகளை எளிதாக கற்றுக் கொள்ளும். மற்ற குழந்தைகளோடு ஒப்பிட்டு பேசி உங்கள் குழந்தைகளை அவமரியாதை செய்து விடாதீர்கள். அவர் களின் வளர்ச்சிக்கு அது தடையாக அமைந்து விடும். அவர்களின் வெற்றிக்கு துாண்டுகோலாக இருங்கள்.

தோல்விகளுக்கு ஆறுதலாக இருங்கள். அவர்களின் தனித்திறமைகளைக் கண்டு கொண்டு அதன்படிஅவர்களுக்கு பயிற்சி கொடுங்கள்.அவர்கள் எந்தவித மறுப்பும் சொல்லாமல் முழு
ஈடுபாட்டோடு அதை ஏற்றுக் கொள்வார்கள். உங்கள் கஷ்டங்களை குழந்தைகளிடம் கூறுங்கள். மிக அதிகமாக கூறி அவர்களை பிழிந்து எடுத்து விடாதீர்கள். உங்களின் குழந்தை பருவத்தில் நீங்கள் பட்ட கஷ்டங்களை சொல்லுங்கள்.

அதிலிருந்து மீண்ட கதைகளை சொல்லுங்கள்.வாழ்வின் மகிழ்வான பருவம் என்றால் அது பால்யப் பருவமே. மீண்டும் நாம் அடைய விரும்பும் பருவமும் அதுதான். நாம் கடந்து வரும் போது எத்தகைய மகிழ்வை அடைந்தோமோ அதைவிடமகிழ்வான மனநிலையோடு நமது குழந்தைகள் அந்தப் பருவத்தை கடந்திட உதவி செய்யுங்கள்.அவர்கள் மீது நமது கனவுகளை திணிக்காமல் அவர்களின் கனவுகளை உணர்ந்து துணை நிற்போம்!
-முனைவர். நா.சங்கரராமன்
பேராசிரியர்
எஸ்.எஸ்.எம் கலை அறிவியல் கல்லுாரி
குமாரபாளையம்
70102 21913

No comments:

Post a Comment