Tuesday, May 23, 2017

உடலை வலுவாக்கும், புற்றுநோயைத் தடுக்கும்... எக்கச்சக்க பலன்கள் தரும் 10 மூலிகை தோசைகள்!

ல வீடுகளில் தினமுமே இரவு உணவு, தோசை! `இன்னிக்கும் தோசைதானா?’ என்று எதிரொலிக்கும் குரல்களும் உண்டு. இது ஒரு புறம் இருக்கட்டும். இன்னொரு புறம், நெய்விட்டு முறுகலாக அம்மா சுட்டுத்தரும் தோசையை விரும்பாத குழந்தைகளே இருக்க முடியாது. தோசை, நம் பாரம்பர்ய உணவுகளில் ஒன்று. நாம் உண்ணும் அனைத்து உணவுகளுமே மருந்தாக முடியும்.  `மருந்து’ எனக் கருதும் மூலிகைகளை உணவுடன் கலந்து சாப்பிடும்போது உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக் கிடைக்கும்; நோய்கள் வராமல் தடுக்கும். இப்படி நோயாளிக்கு உணவே மருந்தாகவும் மாறும். இதனால் நோயிலிருந்து எளிதாக விடுபடவும் முடியும். ஆயுர்வேதக் குறிப்புகளைக் கொண்டு, அதன்படி தோசை செய்வது அந்தக்கால நடைமுறை. அதற்கான குறிப்புகளும் காணப்படுகின்றன. அந்தக் காலத்தில், உடல் பலத்தைப் பெருக்குவதற்கும் ஆண்மையை விருத்தி செய்யவும் மருந்துகளை அரிசி மாவுடன் கலந்து, அடையாகச் செய்து பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.  குறிப்பாக மூலிகை தோசைகள் பற்றி விளக்குகிறார் ஆயுர்வேத மருத்துவர் பாலமுருகன்...  
மூலிகை தோசை
உடலுக்கு வலு சேர்க்கும் மூலிகை தோசைகள்...
கல்யாண முருங்கை
முருங்கையை வீட்டுக்குப் பின்னாலும், கல்யாண முருங்கையை வீட்டுக்கு முன்னாலும் வளர்ப்பார்கள்.  பெண்மையைப் போற்றக்கூடிய மிகச் சிறந்த உணவு கல்யாண முருங்கை. இது, பெண்களுக்கான மாதவிடாய்க் கோளாறுகளைச் சரிசெய்யும். மாதவிடாய் சுழற்சியைச் சீராக்கும். மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியைக் குறைக்கும். சினைப்பை கட்டி, சளித் தொந்தரவு போன்றவற்றைச் சரிசெய்யும். கர்ப்பப்பையை வலுவாக்கும். மேலும், கருமுட்டை வளர்ச்சிக்கு உதவும். ஆண்களுக்குச் சளியைக் குணப்படுத்தும். சைனஸ் மற்றும் தலைவலியைத் தீர்க்கும். வயிற்றில் உள்ள பூச்சிகளைக் கொல்லும். புளித்த ஏப்பத்தைச் சரிசெய்யும். 
இதை, தோசையாகவும் சாப்பிடலாம். நரம்புகள் நீக்கப்பட்ட இலைகளைத் தோசை மாவில் கலக்க வேண்டும். அதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், சீரகம், மிளகு ஆகியவற்றைச் சேர்த்து கரைத்து, தோசையாக ஊற்றிச் சாப்பிடலாம். இதை வாரம் ஒரு முறை சாப்பிடலாம். இரண்டு அல்லது மூன்று தோசை என அளவாக எடுத்துக்கொள்வது நல்லது.
முடக்கத்தான் 
`முடக்கு வாதத்தை அறுத்தான்’ என்பதே முடக்கத்தான் என்பதன் பொருள். இது, மழைக் காலங்களில் வயல்களின் ஓரமாக வளரக்கூடியது. முடக்குவாதம் ஏற்படாமல் காக்கும். மூட்டுகளில் ஏற்படக்கூடிய வலி, வீக்கம் போன்றவற்றைச் சரிசெய்யும். முடக்கத்தானின் இலைச் சாற்றைத் தலையில் தடவி, சிறிது நேரம் கழித்துக் குளிக்கலாம். இது, வெயில் காலங்களில் வெளியில் செல்லும்போது தலையில் படியும் அழுக்கை நீக்கும். கூந்தலில் ஏற்படும் துர்நாற்றத்தைப் போக்கும்.
முடக்கத்தானை மாவுடன் சேர்த்து, தோசையாக ஊற்றிச் சாப்பிடலாம். மூன்றி ஒரு பங்கு என்ற விகிதத்தில் கலக்க வேண்டும். இதனால், செரிமானக் கோளாறு சரியாகும். எளிதில் ஜீரணமாகும்.
மூலிகை தோசை
மணத்தக்காளி 
பொதுவாக மணத்தக்காளி, `வயிற்றுப்புண்ணுக்கு நல்லது’ என்பார்கள். இது, வீட்டில் வளர்க்கக்கூடிய செடி. இதன் பழம், பூ, இலை, தண்டு... அனைத்தையும் உணவாகப் பயன்படுத்தலாம். இது ஒரு சிறந்த மலமிளக்கியாகச் செயல்படும். இதில் இரும்புச்சத்து, பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் வைட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளன. மணத்தக்காளிக்கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், சருமம் பொலிவு பெறும். இதயம் பலமடையும். குடல் புண்களைச் சரிசெய்யும்.
மணத்தக்காளிக்கீரையை நரம்பு நீக்கி, இலைகளை மட்டும் 1:3 என்ற விகிதத்தில் மாவுடன் சேர்த்து, தோசையாக ஊற்றிச் சாப்பிடலாம். இதனால் தொண்டைக் கமறல், தொண்டைப் புண், வாய்ப் புண், தொண்டையில் ஏற்படும் புளித்த ஏப்பம் மற்றும் தொண்டைக் கரகரப்பு போன்றவை சரியாகும்.
சிறுகீரை
சிறுகீரையின் தண்டு மற்றும் இலைகள் பெரிதாக இருக்கும். அதிக அளவு நீர்ச்சத்து, கலோரி நிறைந்த கீரை இது. கிட்டத்தட்ட சரிவிகித உணவைப்போல சரிவிகிதக் கீரை, சிறுகீரை. கண் எரிச்சலைப் போக்கும். கண்களில் ஏற்படும் கட்டியைக் குணப்படுத்தும். கல்லீரலை வலுப்படுத்தும்.
சிறுகீரையின் தண்டு மற்றும் இலையைப் பொடியாக நறுக்கி, மாவுடன் கலந்து தோசையாகச் சாப்பிடலாம். இது, சிறுநீர்ப் பாதையில் ஏற்படும் கோளாறுகளைச் சரிசெய்யும். வயிற்று எரிச்சல், அடிவயிற்றுவலி போன்றவற்றைச் சரியாக்கும். சிறுநீரைப் பெருக்கும். மலச்சிக்கலைச் சரியாக்கும். ரத்த உற்பத்தியைப் பெருக்கும். கல்லீரல் நோயைக் குணப்படுத்தும். 
மூலிகை தோசை
வல்லாரை
வல்லாரை என்றாலே முதலில் நினைவுக்கு வருவது, `இது மூளையைச் சுறுசுறுப்பாக்கும், மூளை வளர்ச்சிக்கு உதவும்’ என்பதுதான். வல்லாரைக்கு சைனஸை குணப்படுத்தும் சக்தியும் உண்டு. 
வல்லாரையைச் சற்று குறைந்த அளவில் உட்கொள்வது நல்லது. கொள்ளுவை வல்லாரையுடன் சேர்த்து அரைத்து மாவு கலந்து தோசை சுடலாம். இது சிந்தனைத் திறனை அதிகப்படுத்தும். மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கும். பெண்களின் மாதவிடாய்க் கோளாறுகள் சரியாகும். ரத்தத்தைச் சுத்தம் செய்யும். உடல் உஷ்ணத்தைக் குறைக்கும். குடற்புண், குடல் நோய், வாய்ப்புண், வாய் நோய்களைக் குணப்படுத்த உதவும்.
வெந்தயம்
வெந்தயம் என்றாலே உடல் குளிர்ச்சிதான் நினைவுக்கு வரும். வெந்தயம் உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்கும்;  ரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். 
வெந்தயத்தை அரைத்து, மாவுடன் சேர்த்துத் தோசை சுடலாம். வெந்தயத் தோசையை, சதக்குப்பைக் கீரையுடன் சேர்த்து சாப்பிட்டால், மாதவிடாயின்போது ஏற்படும் வயிற்றுவலி சரியாகும். மாதவிடாய்ச் சுழற்சியைச் சீராக்கும். கருமுட்டை வளர்ச்சிக்கு உதவும். மூட்டுவலி, வீக்கம் போன்றவற்றைச் சரிசெய்யும். 
வெந்தயம் குளிர்ச்சி, கொள்ளு உஷ்ணம். இவை இரண்டையும் சேர்த்து தோசையாகச் சாப்பிட்டால், கல்லடைப்பு நீங்கும். பித்தப்பையில் உண்டாகும் கற்களை நீக்க உதவும். உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கும். 
மூலிகை தோசை
துத்தி
துத்தியின் இலையைப் பொரியல் செய்து சாப்பிடலாம். இது, மூலத்துக்குச் சிறந்த மருந்து. ஆனால், அதே நேரத்தில் துத்தியைத் தோசையாக செய்து சாப்பிடும்போது, இதன் அளவைக் குறைத்துக்கொள்ள வேண்டும். நரம்புகள் நீக்கப்பட்ட துத்தி இலையை மாவுடன் கலந்து, தோசையாகச் சுடலாம்.
துத்தி இலை தோசையை வாரம் இரண்டு முறை சாப்பிடலாம். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், மூலநோய் குணமடையும். சிறுநீர் எரிச்சல், செரிமானக் கோளாறு போன்றவற்றைச் சரிசெய்யும். உடல் தசைகள் வலுப்பெற உதவும். 
மூக்கிரட்டை கீரை
மூக்கிரட்டைக் கீரையில் பல வகையான வேதிப்பொருள்கள் உள்ளன. `இவை இனப்பெருக்க உறுப்புகள், ஜீரண உறுப்புகள், சுவாச உறுப்புகள், சிறுநீரகம் ஆகியவற்றைக் காக்கும். கல்லீரலை பலப்படுத்தும். அது தொடர்பான மஞ்சள்காமாலையைத் தடுக்கும். இதயத்தைப் பாதுகாக்கும். இதயத்தில் ஏற்படும் கோளாறுகளைக் குறைக்கும்.  உடல் உள்ளுறுப்புகளின் புற்றுநோய்க்கு மருந்தாகும்’ என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பொதுவாக மூக்கிரட்டை கீரையைப் பொரியலாகவும் ரசமாகவும் சாப்பிடுவார்கள்.  மூக்கிரட்டைக் கீரையை தோசையாகவும் சாப்பிடலாம். சாதாரண தோசை அளவில் இதைச் சாப்பிட முடியாது. ஆகையால் சிறிய அளவில் செய்து சாப்பிடுவது நல்லது. சிறுநீரைச் சீராக வெளியேற்றும். சிறுநீரக அடைப்பைச் சரிசெய்ய உதவும். ரத்த உற்பத்திக்கு உதவும். ரத்தச்சோகையைச் சரிசெய்யும். சளி மற்றும் கோழையைக் கரைத்து, சிறுநீருடன் வெளியேற்றும். ரத்தச்சோகை மற்றும் ஆஸ்துமாவுக்கு சிறந்த மருந்தாகும்.
கீழாநெல்லி 
இது, நீர் நிறைந்த இடங்களில் வளரக்கூடியது. மஞ்சள்காமாலைக்குப் பரிந்துரைக்கப்படும் கீழாநெல்லி, கல்லீரல் நோய்க்கும் சிறந்த மருந்தாகும். கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாரத்தில் மூன்று முறை இதை உட்கொள்ளலாம். கல்லீரலில் உள்ள மாசுக்களை நீக்கும். 
கீழாநெல்லி இலைகளை அப்படியே அல்லது சாறாக மாவுடன் கலந்து தோசையாக ஊற்றிச் சாப்பிடலாம். பார்வைத்திறனை மேம்படுத்தும். சிறுநீரைப் பெருக்கும். ரத்த உற்பத்தியை அதிகரிக்கும். அதிகமாக மது அருந்துபவர்கள் கீழாநெல்லி தோசையை வாரம் இரண்டு முறை சாப்பிட்டால் கல்லீரலைக் காக்கலாம். சருமத்தில் ஏற்படும் வெண் புள்ளிகளைச் சரிசெய்யும்.
மூலிகை தோசை
கரிசலாங்கண்ணி
கரிசலாங்கண்ணி என்றாலே கூந்தல் பராமரிப்புதான் முதலில் நம் கண் முன் வந்து நிற்கும். கரிசலாங்கண்ணி ரத்தத்தைச் சுத்தம் செய்து, ரத்த உற்பத்திக்கு உதவும். சருமப் பிரச்னைகளைச் சரிசெய்யும். 
கரிசலாங்கண்ணியை துவையலாகவும் கூட்டாகவும் செய்வார்கள். கரிசலாங்கண்ணியை அரைத்து சாறு எடுத்து அதை தோசை மாவுடன் சேர்த்துச் சாப்பிடலாம். கண்ணுக்குக் குளிர்ச்சி தரும். கல்லீரலுக்குச் சிறந்த உணவு. கல்லீரலை வலுப்படுத்தும். உடலில் உள்ள கொழுப்பைக் குறைத்து, அழகான உடலமைப்பைப் பெற உதவும். மாதவிடாய்க் காலங்களில் ஏற்படும் அதிகக் குருதிப் போக்கைக் கட்டுப்படுத்தும்.

Tuesday, May 9, 2017


                                   
ஃபேஷன், டிரெண்ட் எனக் கருதி, தெருவோரக் கடைகளிலும் ஃபாஸ்ட்ஃபுட் கடைகளிலும் கிடைப்பதை  உண்டு, உடலை நோய்க்காடாக மாற்றி இருக்கிறோம். பாரம்பரிய உணவுகளில்தான் ஆரோக்கியம் நிறைந்திருக்கிறது. அவற்றை உண்டுதான் நம் முன்னோர் உடல் வளர்த்து; உயிர் வளர்த்து இன்புற்று வாழ்ந்தனர். 
அப்படி, ஆரோக்கியம் காக்கும் ஆறு உணவுகள் பற்றி இங்கே பார்ப்போம்...


சோளம்:
சோளத்தில் புரதம்,கொழுப்புச்சத்து, மாவுச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, தயமின், நியாசின் ஆகிய ஊட்டச்சத்துக்கள் நிரம்பியிருக்கின்றன. வயிற்றுப்புண்ணுக்கு மிகவும் உகந்தது. சர்க்கரை நோய் , ரத்தச்சோகை உள்ளவர்களுக்கு சோளம் மிக முக்கிய உணவாகக் கருதப்படுகிறது. உடம்பில் உள்ள உப்பைக் கரைக்கும் தன்மை கொண்ட சோளம், சிறுநீரைப் பெருக்கும்.உடல் பருமன் பிரச்னை உள்ளவர்கள், தங்களின் உணவில் சோளத்தை அதிக அளவில் பயன்படுத்தலாம்.
 
சாமை:
அனைத்து வயதினருக்கும் ஏற்ற உணவாக சாமை கருதப்படுகிறது. வயிறு சம்பந்தப்பட்ட நோய்களைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் சாமைக்கு உண்டு. மலச்சிக்கலைப் போக்கும்.  ஆண்களின் விந்து உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும்.  சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாமையில் தயாரித்த உணவை அதிகமாக உண்ணலாம். சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த,  நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை  உண்ண வேண்டியது அவசியம். அதன் அடிப்படையில், மற்ற அரிசி வகைகளைக் காட்டிலும் ஏழு மடங்கு நார்ச்சத்து  அதிகம் உள்ள தானியம் சாமை.
 
  
கம்பு:
கிராமப்புறங்களில் இன்றும் கம்பங்களியும், கம்பங்கூழும் வெகு பிரசித்தம். இது, தாய்ப்பாலைப் பெருக்கும்.  உடல் வலிமையை அதிகமாக்கும். தானிய வகைகளில்  கம்பில்தான் 11.8 சதவிகிதம் அளவுக்கு புரோட்டின் உள்ளது. ஆரோக்கியமான தோலுக்கும் தெளிவான கண்பார்வைக்கும் உகந்தது. 100 கிராம் கம்பில்,  12 மி.கி இரும்புச்சத்து, 42 கிராம் கால்சியம், 0.38 மி.கி,  வைட்டமின் பி 11 ஆகியவை நிறைந்துள்ளன. கம்பில் புரதம், சுண்ணாம்பு, பாஸ்பரஸ் போன்ற தாதுஉப்புக்களும் உயிர்ச்சத்துக்களும் உள்ளன. உடல் வெப்பநிலையைச் சமநிலையில் வைத்திருக்கும். வேண்டாத கொழுப்புகளைக் கரைத்து, பருமனைக் குறைக்கும். செரிமானத்தை மேம்படுத்தும். இரவு வேலைக்குச்  செல்பவர்கள், நீண்ட நேரம் இருக்கையில் அமர்ந்து வேலை பார்ப்பவர்கள் காலை, மதிய வேளைகளில் கம்பை உணவாக எடுத்துக்கொண்டால், உடல் வலுவடையும்.
 
கேழ்வரகு:
தானியங்களில் அதிக சத்துமிக்கது ராகி எனப்படும் கேழ்வரகு. கிராமங்களில் ராகிக் களி, ராகி தோசை, ராகிப் புட்டு, ராகிக் கூழ் போன்ற உணவுகள் இன்றளவும் உண்டு. ராகியில் புரதச்சத்து, தாதுஉப்பு, சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து மற்றும் உயிர்ச்சத்துக்கள் இருக்கின்றன. குடல் பிரச்னைகளைப் போக்கும். உடல் உஷ்ணத்தைச் சீராக்கும். உயர் ரத்த அழுத்தம், இதய நோய், ஆஸ்துமா போன்ற பிரச்னைகளுக்கு உகந்தது. ராகியில் உள்ள லெசித்தின், மெத்தியோனைன்  ஆகிய அமினோஅமிலங்கள், கல்லீரலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை வெளியேற்றி, கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது. உடலின் நைட்ரஜன் அளவைச் சமப்படுத்தவும், சேதமடைந்த திசுக்களைச் சரிசெய்வதற்கும் ராகி முக்கிய உணவாக விளங்குகிறது.
 
கோதுமை:
அரிசி மற்றும் சோளத்துக்குப் பிறகு, உலக நாடுகள் முழுவதும் அதிகம் பயன்பாட்டில் உள்ள உணவுப்பொருள் கோதுமையாகும். கோதுமையில் புரதம், சர்க்கரை, சுண்ணாம்பு, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கரோட்டின், நியாசின் போன்ற பல சத்துக்கள் உள்ளன. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது சிறந்த உணவாகும். வயிற்றில் புளிப்புத்தன்மை உடையவர்கள் மற்றும் புளித்த ஏப்பம் அடிக்கடி வருபவர்கள், கோதுமை ரவையில் கஞ்சி வைத்துக் குடிப்பது நல்லது. முதுகுவலி மற்றும் மூட்டு வலி உள்ளவர்களுக்கு கோதுமை மிகச் சிறந்த உணவாகும்.
பார்லி:
குழந்தை முதல் முதியவர் வரை, பார்லியில் தயாரிக்கப்படும் உணவுகளை உண்ணலாம்.   இரும்புச்சத்து உள்ளிட்ட தாதுஉப்புக்கள் பார்லியில் அதிகமாக இருக்கின்றன. காய்ச்சல் உள்ளவர்களுக்கு பார்லியில் கஞ்சி வைத்துக் கொடுக்கலாம். நீடித்த மலச்சிக்கல் உள்ளவர்களுக்குப் பார்லியில் கஞ்சி வைத்துக் கொடுப்பது நல்லது. உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி, உடல் எடையைக் குறைக்கும் ஆற்றல் பார்லிக்கு உண்டு. சிறுநீர் பிரச்னையைத் தீர்க்கும். உடலில் உள்ள நச்சுப்பொருட்களை அழிக்கவல்லது. உடல் வறட்சியைப் போக்கும். சளி, இருமலைத் தணிக்கும் ஆற்றலும் பார்லிக்கு உண்டு.

ஆரோக்கியம் காக்க உதவும் பழக்கங்கள்! நலம் நல்லது–17 #DailyHealthDose thanks to vikata



Posted Date : 08:22 (29/11/2016)

ஆரோக்கியம் காக்க உதவும் பழக்கங்கள்! நலம் நல்லது–17 #DailyHealthDose

நலம் காக்க உதவும் பழக்கங்கள்
ன்றைய அறிவியல் தேடலுக்குச் சற்றும் குறைவில்லாத, உலக நாகரிகத் தொட்டிலான தமிழ் மரபு கற்றுத்தந்த நலப் பழக்கங்கள் ஏராளம். கலோரி கணக்கிலும், காப்புரிமை சூட்சுமத்துக்குள்ளும் நவீன உணவாக்கம் கட்டமைக்கப்படுகிறது. ஆனால், எதைச் சாப்பிட வேண்டும் என்பதை மட்டும் சொல்லாமல், எப்படிச் சாப்பிட வேண்டும், எதற்குச் சாப்பிட வேண்டும் என எப்போதோ எழுதிவைத்த மரபு நம் மரபு மட்டும்தான். 
1,800 ஆண்டுகளுக்கு முன்னரே ஆசாரக் கோவை நூலில், `முன்துவ்வார் முன்னெழார் தம்மிற் பெரியார் தம்பாலிருந்தக்கால்’ எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள் நம் பெரியோர். அதாவது, நம்மைவிட வயதில் பெரியவர் நம்மோடு உணவருந்தினால், அவர்கள் சாப்பிட்டு எழுவதற்கு முன்னதாக நாம் எழுந்துவிடக் கூடாது. இது உணவு அறிவியல் கிடையாது; ஆனால், அதைவிட உயர்ந்த உணவுக் கலாசாரம். அதேபோல, `தலை தித்திப்பு, கடை கைப்பு’ எனச் சாப்பிடச் சொன்ன முறையில், இனிப்பை முதலில் சாப்பிடச் சொல்கிறது நம் பண்பாடு.
இது, விருந்தோம்பலில் மகிழ்வைத் தெரிவிக்கும் பண்பாட்டுக்கு மட்டுமல்ல; அந்த இனிப்பு, ஜீரணத்தின் முதல் படியான உமிழ்நீரை முதலில் சுரக்கவைக்கும் என்பதற்காகவும்தான். இப்படி எத்தனையோவிதங்களில் நம் மரபு நமக்கு உதவியிருக்கிறது. உதாரணமாக, நம் ஊர் நடைவண்டியையே எடுத்துக்கொள்வோமே... இதில் பக்கவாட்டுப் பிடி இல்லாததால், நடைக்கான தசைப் பயிற்சியை, இடுப்பு கால்தசைக்கு ஏற்றவாறு தந்து குழந்தையின் நடையைச் செம்மையாக்கும்! இப்படி பேசிப் பேசி தீராத எத்தனையோ விஷயங்கள் நம் பண்பாட்டில் கலந்து வந்திருக்கின்றன. `பதார்த்த குண சிந்தாமணி’ எனும் பழம்பெரும் சித்த மருத்துவ நூல் அற்புதமான சில நலவாழ்வுப் பழக்கங்களை எடுத்துச் சொல்கிறது. அவற்றைக் கடைப்பிடிப்பது எளிது; பின்பற்றினால் நம் ஆரோக்கியமும் மேம்படும். அப்படி நாம் கடைப்பிடிக்கவேண்டிய பழக்கங்கள்... செய்யக் கூடாத விஷயங்கள் என சில உண்டு. அவை...  
எண்ணெய்க் குளியல்
கடைப்பிடிக்கவேண்டிய பழக்கங்கள்...
* ஒரு நாளைக்கு இரு முறை மலம் கழிக்க வேண்டும். 
* வாரத்துக்கு ஒரு முறை எண்ணெய்க் குளியல் எடுக்க வேண்டும்.
* 45 நாட்களுக்கு ஒரு முறை மூக்கில் மருந்து (Nasal Drops) விட வேண்டும். 
* நான்கு மாதங்களுக்கு ஒரு முறை பேதி மருந்து சாப்பிட வேண்டும்; குடல் சுத்தமாகும். 
* வருடத்துக்கு இரண்டு முறை வாந்தி மருந்து சாப்பிட வேண்டும். 
செய்யக் கூடாத விஷயங்கள்... 
* முதல் நாள் சமைத்த உணவு அமுதமாகவே இருந்தாலும் சாப்பிடக் கூடாது. 

* கருணைக்கிழங்கு தவிர பிற கிழங்குகளைச் சாப்பிடக் கூடாது.
கருணைக்கிழங்கு
* ஒரு நாளைக்கு இரண்டு பொழுதுகள் மட்டுமே சாப்பிட வேண்டும். மூன்று வேளை சாப்பிடக் கூடாது. (இன்றைக்கு உடல் உழைப்பு குறைந்துவிட்ட காலகட்டத்தில், உணவை ஆறு வேளையாக பிரித்துச் சாப்பிட அலோபதி பரிந்துரைக்கிறது.)
* பசிக்காமல் உணவு உண்ணக் கூடாது. 
* தும்மல், சிறுநீர், மலம், கொட்டாவி, பசி, தாகம், வாந்தி, இருமல், ஆயாசம், தூக்கம், கண்ணீர், உடலுறவில் சுக்கிலம், கீழ்க்காற்று, மூச்சு இவற்றை அடக்கக் கூடாது. 
கண்டிப்பாக பின்பற்றவேண்டிய பழக்கங்கள்... 
* உணவு சாப்பிட்ட பிறகு சின்னதாக ஒரு நடை (குறு நடை) நடந்துவிட்டு வருவது நல்லது. 
* நீரைச் சுருக்கி, மோரைப் பெருக்கி, நெய்யை உருக்கி உண்ண வேண்டும். (அதாவது, தண்ணீரை கொதிக்கவைத்து, ஆற வைத்து சுத்தமான நீராக குடிக்க வேண்டும். தயிரில் ஆடையை நீக்கி, நீர்த்த மோராக குடிக்க வேண்டும். நெய்யை எப்போதும் உருக்கிய பிறகே, உணவில் சேர்க்க வேண்டும்.) 
வாழைப்பழம்
* வாழைப்பழத்தை கனிந்த பழமாகச் சாப்பிடாமல், இளம் பிஞ்சாகப் பார்த்து சாப்பிடுவது நல்லது. 
* எண்ணெய்க் குளியலின்போது, குளிர்ந்த நீரில் அல்லாமல், வெந்நீரில் குளிக்க வேண்டு

Monday, May 8, 2017

என் கண்மணிகள்! - கவிஞர் பொன்மணி

தாய் எனும் புத்தகம்பொன்மணி
`குழந்தையை வளர்ப்பதற்காக அநேகம் புத்தகங்களைத் தாய் படிப்பாள். அதன் பிறகு அவளே ஒரு புத்தகமாக மாறிப்போவாள்' என்று பல ஆண்டுகளுக்கு முன் குழந்தை வளர்ப்பு பற்றி விகடனில் எழுதியிருந்தேன். என் குடும்ப வாழ்வின் இனியதொரு பகுதியாக பிள்ளைகள் பிறந்து வளரத் தொடங்கியபோது... என் கனவுகளில் எப்போதும் அவர்கள் நிறைந்திருந்தார்கள். 
பெரியவன் மதன் கார்க்கிக்கும் சிறியவன் கபிலனுக்கும் இரண்டு வயது வித்தியாசம். ஒரே மாதிரியான அழகிய பல உடைகளை அவர்களுக்குப் போட்டு அழகு பார்ப்பேன். மரம், செடி, கொடி, மதில் சுவர், கடற்கரை, பூங்கா என்று நிற்கவைத்து, பேசவைத்து புகைப்படங்களை ஏராளமாக எடுத்திருக்கிறேன். மொட்டை மாடியில் ஜிலுஜிலுவென்ற காற்றில் பசும் மரங்களின் பின்னணியில் என் பிள்ளைகளோடு அமர்ந்துகொண்டு... பாரதி, பாரதிதாசன் பாடல்கள், ஔவையார், விவேக சிந்தாமணி எனும் பலவும் சொல்லி வந்திருக்கிறேன். 
மாலை நேரங்களில் வீட்டு வேலை முடிந்தபிறகு... ரிக்‌ஷாவில் அவர்களை உட்கார வைத்துக்கொண்டு வேடிக்கை பார்த்தபடியே டிரஸ்ட்புரம் விளையாட்டு மைதானத்தில் காற்று வாங்கியபடி நிதானமாக பல சுற்றுகள் சுற்றி வருவோம். பிறந்த நாள்களில் துணிமணிகளோடு, `ஹீமேன்' பொம்மைகளை விரும்பி வாங்குவார்கள். குறும்புத்தனங்களுக்குக் குறைவிருக்காது. வீட்டைத் தலைகீழாக்கி அமர்க்களம் செய்தாலும் வெளியில் பரமசாதுக் குழந்தைகளாகப் பாராட்டு வாங்கிவிடுவார்கள்!
உலகறிந்த மேன்மையும் புகழும் கொண்ட குடும்பத்தில் இருந்தாலும், நானொரு கிராமத்துப் பெண்ணாகவும், எளிய தமிழாசிரியரின் மகளாகவும் இருந்ததனாலோ என்னவோ... ஒரு நடுத்தரக் குடும்பத்து மனோபாவத்தில்தான் என் பிள்ளைகளை வளர்த்தேன். வீட்டு வேலைகளில் எனக்கு உதவியாக, அவர்களால் முடிந்த வேலைகளைச் செய்வார்கள். நல்ல மனிதாபிமானமும், அன்பும், கருணையும், தன்னம்பிக்கையும்... நல்லதோர் லட்சியத்தை நோக்கிய கடுமையான உழைப்பும் கொண்டவர்களாக அவர்கள் உருவாக வேண்டும் என்று நான் கண்டுவந்த கனவுகள் பலித்து வருவதாகவே நினைக்கிறேன்.
எங்கள் கல்லூரி ஆண்டு விழாவுக்கு அவர்களை அழைத்துப் போவதுண்டு. பெரியவன் மதன் கார்க்கிக்கு அப்போது ஆறு வயதிருக்கும். ஒருமுறை ஆண்டுவிழாவின்போது, மூவாயிரம் மாணவிகளுக்கு மேல் நிறைந்திருந்த கூட்டத்தின்முன் மேடையில் `மனிதன் மனிதன்' பாடலை அமர்க்களமாகப் பாடி, மாணவிகள் `ஒன்ஸ் மோர்' கேட்க... மீண்டும் உற்சாகமாகப் பாடி ஏகத்துக்கு கைத்தட்டல்களை வாங்கிக் கொண்டான்.

மதன்கார்க்கி எவரிடமும் தோழமை உணர்வோடு கலகலப்பாகப் பேசுவான். ஆஸ்திரேலியாவில் பட்டப் படிப்பு, டாக்டர் பட்டத்துக் கான ஆராய்ச்சிப் படிப்பு இரண்டையும் படித்தான். ஆசிரியப் பணியில் அவனுக்கு ஈடுபாடு இருந்தது. ஏராளமான திரைப்பாடல்களைக் கேட்டுக்கொண்டிருப்பான். எழுதுவான். இசையமைப் பான். அற்புதமாகச் சமைப்பான். அவனை நம்பி ஒரு வேலையைக் கொடுத்தால், அதை மிகச் சரியாகச் செய்து முடிப்பான். அவனுக்கு நம்பிக்கையில்லாத விஷயமாக இருந்தாலும், அன்போடும் நியாயத்தின் அடிப்படையிலும் உதவிபுரியச் சொல்லிக் கேட்டால் முடிந்தவரை செய்துவிடுவான். அவனுக்கு வழிபாட்டளவில் நம்பிக்கை இல்லை என்றாலும், என் அன்புக் கோரிக்கையின்படி என் குரு தெய்வமான சத்ய சாயிபாபாவின் தரிசனத்துக்கு என் தந்தையோடு என்னை புட்டபர்த்திக்கு அழைத்துப் போய்வந்ததை என்னால் மறக்க முடியாது. ஆஸ்திரேலியாவில் சாயி சென்டர்களுக்கு அழைத்துப் போய்வந்ததோடு, பாபாவைப் பற்றிய என் கவிதைகளையும் பேட்டிகளையும் பாராட்டிச் சொல்வான். இரண்டு பிள்ளைகளுக்கும் சிறுபோதில் கொடைக்கானலிலும், திருமணமானபிறகு புட்டபர்த்தியிலும் பகவான் சத்ய சாயிபாபாவின் ஆசீர்வாதம் கிட்டியிருக்கிறது. 
எந்தவிதமான பரிந்துரையும் இல்லாமல் நம்பிக்கையோடும் தொடர்ந்த முயற்சியோடும், அவன் திரையுலகில் அடி எடுத்து வைத்தான். வாழ்க்கையின் நல்ல சாரங்களை இயல்பாகவும் எளிமையாகவும் நளினமாகவும் நவீனமாகவும் வசனங்களாக, பாடல்களாகப் படைத்து வருகிறான். அவனுடைய திரைக்கனவு அழகாகப் பலித்து வருகிறது. `எந்திர'னிலிருந்து `பாகுபலி' வரை தேர்ந்தெடுத்த சில பாடல்களைத் தந்து கேட்கச் சொல்வான். இந்தப் பாகுபலியின், `சிவா சிவாய போற்றியே' அவனுடைய 500-வது பாடல்; அற்புதமான பாடல். பல ஆண்டுகளாக நான் திரைப்படங்கள் பார்ப்பதோ, தொலைக்காட்சி பார்ப்பதோ இல்லையென்றாலும், பிள்ளைகளின் சில பாடல்களைக் கேட்டு வாழ்த்துவதும் ஆலோசனை சொல்வதும் உண்டு. பத்தாம் வகுப்புக்கு மேல்தான் மதுவின் கல்வி, கலை அறிவு எல்லாம் விசாலப்பட்டன. எத்தனை முன்னேற்றங்கள் வந்தபோதும் பணிவு அவன் இயல்பாயிருக்கிறது; மனிதாபிமானம் குணமாகி 
இருக்கிறது. நவீன சாதனங்களை நான் பயன்படுத்த வேண்டும் என்பதில் ஆர்வ மாக இருப்பான். மருமகள் நந்தினி அவனுக்கு வாய்த்த நல்வாழ்க்கைத்துணை. மனைவியின் தனித் திறமைகளை அங்கீகரித்துப் போற்றுவான். நேரமிருக்கும்போதெல்லாம் மகன் `ஹைக்கூ'வுக்குப் பொறுமையாகப் பாடங்களைச் சொல்லித்தருவான்; முக்கியமாக தமிழ் கற்றுக்கொடுப்பான். ஆடம்பரத்தையும் படாடோபத்தையும் விரும்பியதில்லை. யாரையும் எதிர்பாராமல் தன் உழைப்பில் வாழும் வாழ்க்கையே இவனுக்குப் பிடித்தமானது. வீட்டுக்குள் நுழையும்போதே `அம்மா' என்று வாய்நிறையக் கூப்பிட்டுக்கொண்டே வருவான். அது ஓர் அழகாயிருக்கும்.
சிறிய பிள்ளை கபிலனைப் பொறுத்தவரையில் அளந்து பேசுவான்; இல்லையென்றால், அமைதியாக இருந்துவிடுவான். படிப்பில் கெட்டிக்காரன். லயோலா பள்ளியில் படிக்கும்போது இவனே சமூகச் சீர்த்திருத்த நாடகம் எழுதி நண்பர்களோடு சேர்ந்து நடித்தான். மிகப்பிரமாதமாக இருந்தது. பத்து வயதுக்குள் கவிதை எழுதத் தொடங்கிவிட்டான். `விடியலை நோக்கி' என்ற அவன் முதல் கவிதை குங்குமத்தில் வெளியானபோது அவனைவிடவும் நான் மிகுந்த மகிழ்ச்சிகொண்டேன். பள்ளிப்படிப்பை முடிக்கும்போதும் கல்லூரி யில் படிக்கும்போதும் கவிதை, கதை, நாவல் புத்தகங்களை எழுதி வெளியிட்டு எங்களுக்குப் பெருமை சேர்த்தான். அவன் படைப்புகள் சமூக விழிப்பு உணர்வு கொண்டவையாக இருந்தன. பழைய படங்களையும் பாடல்களையும் விரும்பிப் பார்ப்பான். அவனுடைய முதல் புத்தகத்துக்கு நீண்டதொரு முன்னுரையை எழுதியிருக்கிறேன். அவன் எழுதத் தொடங்கிய நாளிலிருந்து அவனுடைய கவிதைகள், கதைகளைக் கொண்டாடி வந்திருக்கிறேன். அவனுடைய நாவல் ஒரு பல்கலைக்கழகத்தில் பாடமாக வைக்கப்பட்டபோது பெரிதும் மகிழ்ந்தேன்.

அவனுடைய படைப்பு, அவன் விரும்பியது போல திரைத்துறைக்கு வருவதற்கு அவன் சற்று அதிகமாகப் போராட வேண்டியிருந்தது. இப்போது அவனுடைய 'மெய்நிகரி' என்ற நாவலை களமாகக் கொண்டு பாடல், வசனம் எழுதி வெளிவந்திருக்கும் `கவண்' அவன் வெற்றியின் அடையாளம். `அனேகன்' படத்தில் அவன் எழுதிய `தெய்வங்கள் இங்கே... திரவியம் இங்கே' எனக்குப் பிடித்த பாடல். அவன் எண்ணம் போல வாழ்க்கைக்கு வண்ணம் கூடியிருக்கிறது. தன் கதை, வசனம், பாடல்களுக்குக் கிடைக்கும் மகிழ்ச்சியான வரவேற்பில் அவன் உற்சாகமடைந்திருக்கிறான். மனைவி ரம்யாவின் மருத்துவத் தொழிலை உற்சாகப்படுத்துவான். மகள் மெட்டூரியைப் பள்ளிக்கு அழைத்துச் செல்வது, மாலை நேரங்களில் விளையாடுவது, கதைகள் சொல்வது என்று பொறுப்பான தந்தையாக நடந்துகொள்வான். கணவனின் வளர்ச்சிக்கு கவனமாகப் பாதை அமைத்துக்கொடுக்கும் அருமையான மருத்துவ மருமகள் ரம்யா.

இரண்டு பிள்ளைகளுமே தங்கள் உழைப்பின் மூலம் அமைத்துக்கொள்ளும் வாழ்க்கையையே பெருமையாகக் கருதுகிறார்கள். அவரவர் குடும்பத்தை மருமகப் பெண்கள் அழகாகத் தாங்குகிறார்கள்.

என் பேரக்குழந்தைகள் ஹைக்கூவும் மெட்டூரியும் பாசம்பொழியும் சின்ன சித்திரங்கள்; என் அன்புக்குரிய சமாதானப் பூக்கள்.

என் பிள்ளைகளுக்கு நான் சொல்வதெல்லாம் இதுதான்...

எத்தனை உயர்ந்தாலும், எத்தனை வளர்ந்தாலும் இன்று போல் என்றும் அன்பும் பணிவுமே உங்கள் வாழ்க்கையாயிருக்கட்டும்.

ஒருவர் உயர்வுக்கு ஒருவர் கைகுலுக்கிக் கொள்ளும் இந்த ஆரோக்கியமான மேன்மை எப்போதும் தொடரட்டும்.
உடன்பிறப்பின் மேன்மை ஸ்ரீராமனால் வெகு சிறப்பாக எடுத்துச் சொல்லப்படுவதுண்டு. வெவ்வேறு வாழ்க்கை, வெவ்வேறு நிலைப்பாடு, வெவ்வேறு நோக்கம் கொண்டு நீங்கள் வாழலாம். மனம் என்றும் ஒன்றாக இருக்கட்டும்; அன்பெனும் பாலம் உங்களுக்குள் எப்போதும் இருக்கட்டும்.

எந்த ஓர் ஒற்றுமைக்கும் அம்பெறியும் விலங்கு மனங்கள் உங்களைச் சுற்றி பேதங்களை உருவாக்கி மறைவில் குதூகலிப்பார்கள். அப்படிப்பட்ட எதிர்மறையாளர்களுக்குக் காதுகொடுக்காதீர்கள். எப்பேர்ப்பட்டவர் களாக இருந்தாலும் அவர்களை உங்கள் எல்லைக்குள்ளேயே வரவிடாதீர்கள்.

என் தேவைகளை அவ்வப்போது நிறைவேற்றி வந்திருக்கிறீர்கள். உங்களிடம் வேறு எதிர்பார்ப்புகள் எனக்கில்லை. உங்கள் வாழ்க்கையை நீங்கள் நல்லபடியாக வாழ்ந்து வருவதே போதும்.

உங்கள் புதிய முயற்சிகளை என்னிடம் பகிர்ந்துகொள்ளும்போது மகிழ்கிறேன். உங்களைப்பற்றி மற்றவர் புகழும்போது ஈன்றபொழுதிற் பெரிதுவக்கும் தாயாக இன்னும் மகிழ்கிறேன்.

பகவான் சத்ய சாயிபாபாவிடம் உங்களுக் கான என் நித்யபிரார்த்தனை எப்போதும் இருந்து கொண்டிருக்கிறது. இறைவனின் கருணையே உங்கள் வாழ்க்கை.

தெய்வம் தந்த வரங்களால் எனக்கு வாய்த்த கண்மணிகள் நீங்கள். `நல்ல பிள்ளைகளைப் பெற்று வளர்த்தோம்; அவர்கள் நல்லபடி வாழ்கிறார்கள்' என்ற மகிழ்ச்சியையும் மனநிறைவையும் எனக்குக் கொடுத்திருக்கிறீர்கள். இந்தப் பிறவியில் என் தாய்மைக்குக் கௌரவம் தந்த உங்களுக்கு என்றும் நான் நன்றி சொல்வேன்.

Saturday, May 6, 2017


மனசே...மனசே...குழப்பம் என்ன?

ஆர்.வைதேகி
``அவன் சரியான மென்டல்டா'' என்று ஜாலிக்காக கலாய்க்கப் பயன்படுத்தப்படும் வார்த்தைகள் இப்போது உண்மையாகிவிடுவோ என்கிற பதற்றத்துக்கு நம்மைத் தள்ளி யிருக்கின்றன. ஐந்து ஆண்டுகளுக்கு முன்புவரை மன அழுத்தம், டிப்ரஷன் என்றால், என்ன என்று தெரியாத இந்தியாவில் 10 வயது சிறுவன் முதல் 70 வயது பாட்டி வரை எல்லோரையும் தாக்கும் நோயாக முதலிடத்துக்கு முன்னேறியிருக்கிறது மன அழுத்தம்.

இந்தியாவில் இதயநோய், தொற்றுநோய், புற்றுநோய், சுவாசக்கோளாறுகள் மற்றும் சாலை விபத்துகள் என்ற இந்த ஐந்தும்தான் உயிரைப் பறிக்கும் ஆபத்து கொண்டவை என அடையாளப்படுத்தப்பட்டவை. ஆனால், இன்னும் மூன்று ஆண்டுகளில் இந்த ஐந்து காரணங்களைவிடவும், மன அழுத்தப் பாதிப்பினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கைதான் அதிகமாக இருக்கும் என்று எச்சரிக்கிறது உலக சுகாதார அமைப்பின் சமீபத்திய ஆய்வு. 

மாறிவரும் வாழ்வியல் சூழல், நம்முடைய பணிச்சுமை, குடும்ப உறவுச் சிக்கல்கள், காற்று தொடங்கி நீர் வரை அடைந்திருக்கும் மாசுபாடு என மன அழுத்தத்துக்கான காரணங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. மன அழுத்தத்திலிருந்து விடுதலை தேடி சாமியார்களை நாடுவதும், மனநல ஆலோசனை பெறுவதும் அதிகரித்துள்ளன.
``மன அழுத்தத்தை ஆரம்பநிலை, மிதமானது, தீவிரமானது என மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.

ஆரம்பநிலை மன அழுத்தத்தால் பாதிக்கப் படுவோர், தானாகவே சரிசெய்து கொள்வார்கள். இது கவலைக்குரியதல்ல. மிதமான மன அழுத்தத்தில் கவனமின்மை அதிகரிக்கும். தற்கொலை எண்ணம் வந்தாலும், அதைச் செயல்படுத்தத் தோன்றாது. நாளைக்கு சரியாகிவிடும் என்கிற நம்பிக்கை இருக்கும். கவுன்சலிங் கொடுத்தாலே அதிலிருந்து மீண்டு விடுவார்கள்.

விடுபடத் தெரியாமல் அதிலேயே மூழ்கிப் போய் கிடப்பதுதான் தீவிர மன அழுத்தம். தற்கொலை எண்ணம் துரத்தும். என்னால் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை எனத் தோன்றும். இதை மருந்து, மாத்திரைகளால் மட்டும்தான் சரிப்படுத்த முடியும். இந்த மூன்றுநிலைகள் தவிர, யூனிபோலார் டிப்ரெஷன், பைபோலார் டிப்ரெஷன் என மேலும், இரண்டு வகையான மன அழுத்த நோய்கள் இந்தியர்களைத் துரத்துகிறது'' என்கிறார் மனநல மருத்துவர் சுபா சார்லஸ்.

யூனிபோலார் டிப்ரஷன் என்பது சாதாரண  மன அழுத்தத்துக்கும் தீவிரமடையும் நிலைக்கும் இடைப்பட்டதுதான் யூனிபோலார் டிப்ரஷன்.   வருத்தமோ கவலையோ சில நாள்கள் மட்டுமே இருக்கும். அடுத்தடுத்த நாள்களில் அவற்றைக் கடந்து சாதாரண மனநிலைக்கு வந்துவிடுவார்கள். மீண்டும் மன அழுத்தத்துக்குள் போவார்கள். மறுபடி மீள்வார்கள். இதுதான் யூனிபோலார் டிப்ரெஷன்.

இன்னொருவகை... பைபோலார் டிப்ரஷன். இவர்களுக்கு கவலை அதீதமாக இருக்கும். அதிலிருந்து மீண்டு சகஜ நிலைக்கு வருவார்கள். உடனடியாக சந்தோஷ மனநிலைக்குப் போவார்கள். கவலைக்கும் காரணம் இருக்காது. அதீத சந்தோஷத்துக்கும் சரியான காரணம் இருக்காது. ஒருவாரம் கவலை, ஒரு வாரம் மகிழ்ச்சி அல்லது 15 நாள்கள் கவலை, அடுத்த 15 நாள்கள் மகிழ்ச்சி என இருப்பார்கள். புகழ் வெளிச்சத்தில் இருக்கும் பிரபலங்கள், அதிக வேலைப்பளு கொண்ட உயர் அதிகாரிகள் இந்தப் பிரச்னைகளை சந்தித்துவருகிறார்கள். 

``ப்ளஸ் - 2 வில் அதிக மதிப்பெண்கள் எடுத்து, நான் படிக்க வேண்டும் என கனவு கண்ட சென்னையின் மிக முக்கியமானப் பெண்கள் கல்லூரியில் சேர்ந்தேன். என் குடும்பத்தில் இருந்து கல்லூரிக்குச் சென்ற முதல் தலைமுறை நான் தான். கல்லூரிகள் இப்படித்தான் இருக்கும் என சினிமாவில் பார்த்துப் பார்த்துப் பழகிய எனக்கு நிஜம் வேறு மாதிரி இருந்தது. அந்தக் கல்லூரியில் அதிகம் படித்தது பிரபலங்கள் மற்றும் சென்னையின் முக்கியப் பிரமுகர்களின் மகள்கள்தான். அவர்களின் வேகத்துக்கும், அவர்களின் பழக்கவழக்கங்களுக்கும், பேச்சுக்கும் என்னால் ஈடுகொடுக்கமுடியவில்லை. எவ்வளவு நன்றாகப் படித்தாலும், அவர்களைப்போல் என்னால் இருக்க முடியவில்லையே என்பது எனக்கு நாளடைவில் பெரிய டிப்ரஷனாக மாறியது. இரண்டாம் ஆண்டில் முழுக்க முழுக்க படிப்பில் இருந்து கவனம் திசைதிரும்பியது.
யாரைக் கண்டாலும் கோபம், அளவுக்கு மீறி வீட்டில் உள்ளவர் களைத் திட்டுவது என மாறிப்போனேன். `இதற்கெல்லாம் யாருக்காவது தற்கொலை எண்ணம் வருமா' என்கிற அளவுக்கு தற்கொலை எண்ணம் என்னைத் துரத்தியது. தொடர்ந்து கவுன்சலிங் சென்று, பின்னர் இந்தத் தீவிர மன அழுத்தத்தில் இருந்து மீண்டேன். ஆனால், இப்போது வீட்டுச் சுமைகளையும், பணிச்சுமைகளையும் சுமக்க முடியாமல் திணறுகிறேன். மீண்டும் மன அழுத்தம் அதிகரிக்கிறது'' என்கிறார் மிக முக்கியப் பொறுப்பில் இருக்கும் அரசு அதிகாரி ஒருவர்.

ஒவ்வொருவருக்கும் மன அழுத்தத்துக்கான காரணங்கள் வேறு. மன அழுத்தத்திலிருந்து மீண்ட கதையைப் பகிர்வதைவிடவும், அப்படியொன்று இருப்பதை ஒப்புக்கொள்ளவும், அதற்குச் சிகிச்சை பெறவும்தான் அதிக தைரியம் தேவை. அது இருந்தால் மட்டுமே இந்த மன அழுத்த நோய்களிலிருந்து வெளியே வர முடியும். 

மன அழுத்தத்தை உண்டாக்குவதில் முக்கிய மானவை சமூகக் காரணங்கள். வறுமை, யதார்த்தத்தை மீறிய எதிர்பார்ப்பு, திருப்தியடையாத மனநிலை முதலானவை முக்கிய காரணிகள் என்கிறார்கள் மருத்துவர்கள். 

`` `கிளஸ்டர் சூஸைட்' என ஒன்று உண்டு. கொத்துக்கொத்தாக தற்கொலைகள் நடக்கும். ஒரு மாணவி தேர்வில் தோல்வியடைந்து தற்கொலை செய்திருப்பாள். அதைப் பார்த்து அதே தெருவில் வசிக்கிற இன்னொரு மாணவியும் வேறு ஏதோ ஒரு காரணத்துக்காக தற்கொலை செய்துகொள்வாள். விவசாயிகள் தற்கொலைகூட இந்த ரகம்தான்.
அப்பா, அம்மாவின் சரும நிறத்தையும் சுருள் முடியையும் மரபணு மூலம் பிள்ளைகள் பெறுவது போலவே மன அழுத்தத்தையும் பெறுவார்கள் என்கிறது அறிவியல். ஒரு குடும்பத்தில் தற்கொலை நடந்திருக்கிறது என்றால், அந்தக் குடும்பத்தின் மற்ற நபர்களை மிகக் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்தக் குடும்பத்துப் பிள்ளைகளை டேக் இட் ஈஸி பாலிசி மனப்பான்மையுடன் வளர்க்க வேண்டும்.

குழந்தைகளை விளையாட அனுமதிக்க வேண்டும். படிப்பு எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு விளையாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். சிரித்துக் கொண்டும் பேசிக்கொண்டும், துள்ளிக்கொண்டும் இருப்பதுதான் குழந்தைகளின் இயல்பு. ஆனால், அதைக் கட்டுப்படுத்தி, ஒரே இடத்தில் உட்காரவைத்து, பிஞ்சிலேயே மன அழுத்தத்துக்கான விதையை ஊன்றுகிறோம். குழந்தைகளுக்கு விளையாட்டு என்றால் பெரியவர்களுக்கு உடற்பயிற்சி. இவற்றின் மூலம்தான் மூளையின் நியூரோ கெமிக்கல் சமநிலையின்மையைச் சரிப்படுத்த முடியும்.
மனிதனை சமூக விலங்கு என்றே சொல் கிறோம். அவனைச் சுற்றி நிறைய உறவுகளும் நட்புகளும் இருக்க வேண்டும். சக மனிதர்களுடன் கலந்து பேசி, பழகும் குணத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். 
வெயில் படாத பகுதியிலேயே இருப்போருக்கும் மன அழுத்தம் அதிகமாக இருக்கிறது. வெயில் வெளிச்சம் தொடர்ந்து பட்டுக்கொண்டிருந்தாலே மன அழுத்தம் பாதியாகக் குறையும். பழங்கள் சாப்பிடுவதை எல்லோரும் பழக்கத்தில் கொண்டு வர வேண்டும். பழங்களில் `ஃபீல் குட் ஃபேக்டர்ஸ்' எனச் சொல்லப்படுகிற செரட்டோனின் போன்ற கெமிக்கல்கள் உள்ளன. அவை மனநிலையில் நல்ல மாற்றம் ஏற்படுத்தும்'' என சின்னச் சின்ன தீர்வுகள் சொல்கிறார் மனநல மருத்துவர் சுபா சார்லஸ்.

``பகிர்தல் இல்லாமல்போன வாழ்க்கை முறைதான் மன அழுத்தம் அதிகரித்ததுக்கான முதல் காரணம். துக்கமோ சந்தோஷமோ, வெறுமையோ எதுவாக இருந்தாலும் உடனடியாக வீட்டில் உள்ளவர்கள், பெற்றோர், நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும். எதையுமே பகிராமல்  பயந்துகொண்டே ஒவ்வொரு நாளையும் தொடர்வதுதான் மன அழுத்தத்தின் முதல் நிலை.

  பெரும்பாலான குடும்பங்களில் ஒரே குழந்தைதான். உறவினர் வீடுகளுக்குப் போவதோ, திருமணம், சாவு வீடுகளுக்குப் போவதோ குறைந்துவிட்டது. குழந்தைகளுக்காக உழைப்பதாக சொல்லிக்கொண்டு இரவும் பகலும் ஓடுகிறோம். ஆனால், அதே குழந்தைகளுடன் தினமும் அரைமணி நேரம் உட்கார்ந்து பேச எத்தனை பெற்றோர் தயாராக இருக்கிறார்கள்? எத்தனை அம்மாக்களுக்கு தம் பெண் குழந்தைகளின் மாதவிலக்கு சுழற்சி நினைவில் இருக்கிறது? மகளுக்கு மாதம் தவறாமல் மாதவிலக்கு வருகிறதா என்பதைக்கூட அம்மாவால் கவனிக்க முடியாதா? 
குடும்பத்துக்கென நேரம் ஒதுக்குவதுதான் மிக முக்கியமான தீர்வு. குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் மனம்விட்டுப் பேச வேண்டும்.  தங்கள் பிரச்னைகளைத் தைரியமாக பெற்றோரிடம் சொல்லலாம் என்கிற நம்பிக்கையைக் குழந்தைகளுக்கு ஏற்படுத்த வேண்டும். எதையாவது சொல்ல வரும்போது, எரிந்து விழுவதும், அப்புறம் பேசலாம் என விலகிப் போவதும் கூடாது...'' என்கிறார் உளவியல் ஆலோசகர் வசந்தி பாபு.  
நாம் முடிந்தவரை எளிமையான  வாழ்க்கையைத் திருப்திகரமாக வாழ்வதும், நம்மோடு இருக்கிற மனிதர்களோடு அதிக நேரம் செலவழிப்பதும், எதையுமே எளிய உரையாடல்களின் வழி கடப்பதும் மன அழுத்தத்தைத் தவிர்ப்பதோடு நம் வாழ்வையும் மகிழ்வானதாக மாற்றும்.

தாகம், சூடு தணிக்கும் பசலைக்கீரை!

தாகம், சூடு தணிக்கும் பசலைக்கீரை!

கோடை காலத்தில் வரக்கூடிய நோய்கள் மற்றும் உடல் கோளாறுகளை தீர்ப்பதில், கீரை வகைகளில் முக்கியக் கீரையாகக் கருதப்படும் பசலைக் கீரை பிரதானப் பங்காற்றுகிறது! 

பசலையில் கொடிப்பசலை, குத்துப்பசலை, தரைப்பசலை, வெள்ளைப் பசலை, சிலோன் பசலை என பலவகை உள்ளன. இதில் குத்துப்பசலை தாராளமாகக் கிடைக்கக்கூடியது. இதனை சிறுபசலை, பசறை என பல் வேறு பெயர்களில் அழைக்கிறார்கள். இந்தக் கீரையில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. அடிக்கடி இந்தக் கீரையைச் சாப்பிட்டு வந்தால் நோய்கள் அணுகாது. 

புது ரத்தத்தை உற்பத்தியாக்கி உடலுக்கு பலம் தரக்கூடிய இந்த குத்துப் பசலையின் இலையை நன்றாகச் சிதைத்து பற்று போட்டால் கொப்புளம், கழலை, வீக்கம் சரியாகும். இதன் இளம் தண்டை அரைத்து வேர்க்குரு, கைகால் எரிச்சல் போன்றவற்றுக் குத் தடவினால் குணம் கிடைக்கும். பசலைக்கீரை சாப்பிடுவதால் மூத்திரக் கடுப்பு, நீரடைப்பு, வெள்ளை ஒழுக்கு போன்றவை நீங்கும். 

மலச்சிக்கல், தொந்தி போன்றவற்றுக்கும் இந்தக் கீரை நல்லதொரு நிவாரணி. கால் மூட்டுகளில் வரக் கூடிய வாதத்தை போக்கக்கூடியது. கீரையின் சாறு, முகப்பருக்களை நீக்கக்கூடியது. வெள்ளைப்பசலை சாப்பிடுவது மூத்திரத்தை அதிகரித்து உட்சூட்டை குறைக்கும். கொடிப்பசலை சாப்பிடுவது தாகம், சூட்டை தணிக்கும்.
பாசிப்பருப்புடன் சேர்த்துச் சாப்பிட்டால் வெள்ளை, வெட்டை நோய்கள் சரியாகும். கர்ப்பிணிப் பெண்கள் இந்த கொடிப்பசலையை சாப்பிடுவதால் மலச்சிக்கல் ஏற்படாமல் காக்கும். குழந்தைகளுக்கு இதன் தண்டின் சாறை கற்கண்டுடன் சேர்த்து குடிக்கக் கொடுத்து வந்தால் ஜீரண வளர்ச்சிக்கு உதவுவதோடு சளி, நீர்க்கோவை போன்றவை சரியாகும். 

இது பெரியவர்களுக்குத் தாதுவைக் கெட்டிப்படுத்தி ஆண் - பெண் நல்லுறவை ஏற்படுத்தும். சிலோன் பசலைக் கீரை சாப்பிடுவதால் வாதம், பித்தம், கபம் ஆகிய முக்குற்றங்களை நீக்கி கண்ணுக்கு அதிக நன்மை தரும். இந்தக் கீரையுடன் பருப்பு சேர்த்துச் சாப்பிடுவதால் உடல் வெப்பம் தணிந்து நீர்ச்சுருக்கு, நீர்க்கட்டு, நீர்க்கடுப்பு நீங்கும். ஆசன வாயில் ஏற்படக்கூடிய புண், கடுப்பு, எரிச்சல் போன்றவை குணம் பெறும்.

அஸ்லன்-ஷா ஹாக்கி போட்டி: வெண்கலம் வென்றது இந்தியா!
அஸ்லன்-ஷா ஹாக்கி போட்டி: வெண்கலம் வென்றது இந்தியா!
சுத்தமான இடத்தை ஏன் யோகி மீண்டும் சுத்தம் செய்கிறார். இவங்களுக்கு இதே வேலையா போச்சு!!! நெட்டிசன்ஸ் நக்கல்
சுத்தமான இடத்தை ஏன் யோகி மீண்டும் சுத்தம் செய்கிறார். இவங்களுக்கு இதே வேலையா போச்சு!!! நெட்டிசன்ஸ் நக்கல்
#IPL10: தோனி கடைசிக்கட்ட அதிரடி...148 ரன்கள் குவித்தது புனே
#IPL10: தோனி கடைசிக்கட்ட அதிரடி...148 ரன்கள் குவித்தது புனே
தமிழக எல்லைக்குள் சீனக்கப்பல் நுழைய முயன்றது ஏன்? இலங்கை கடற்படை விளக்கம்
தமிழக எல்லைக்குள் சீனக்கப்பல் நுழைய முயன்றது ஏன்? இலங்கை கடற்படை விளக்கம்
மருத்துவ மேற்படிப்பில் 50% இடஒதுக்கீடு கிடையாது!  3-வது நீதிபதி அதிரடி தீர்ப்பு
மருத்துவ மேற்படிப்பில் 50% இடஒதுக்கீடு கிடையாது! 3-வது நீதிபதி அதிரடி தீர்ப்பு
இந்த நாட்டுக்குத்தான் விரைவில் வரவிருக்கிறார் ரொனால்டோ!
இந்த நாட்டுக்குத்தான் விரைவில் வரவிருக்கிறார் ரொனால்டோ!
தெலுங்குப் படம் ரீமேகில் ஜி.வி.பிரகாஷ்!
தெலுங்குப் படம் ரீமேகில் ஜி.வி.பிரகாஷ்!
பாகுபலி -2-ன் பாக்ஸ் ஆபீஸ் வசூல் எவ்வளவு தெரியுமா?
பாகுபலி -2-ன் பாக்ஸ் ஆபீஸ் வசூல் எவ்வளவு தெரியுமா?
கம்யூனிஸ்ட்டும் இல்லை; காங்கிரஸும் இல்லை, என்றுமே பாஜக தான்! அமித்ஷா பெருமிதம்!
கம்யூனிஸ்ட்டும் இல்லை; காங்கிரஸும் இல்லை, என்றுமே பாஜக தான்! அமித்ஷா பெருமிதம்!

குழந்தைகள் முன்பு சண்டையிடுவது தவறு... ஏன் தெரியுமா?

குழந்தைகள்

திகபட்ச அன்பும் உரிமையும்கொண்டது தம்பதியரின் உறவு. ஆனால், இருவரில் ஒருவர் சிறு தவறு செய்யும்போது, 'அது எனக்குத் தெரிந்துவிட்டது. அதை உனக்குப் புரியவைக்கிறேன் பார்' என்று உடனடியாக வரிந்துகட்டி இறங்கும்போதுதான் சண்டை ஆரம்பிக்கிறது. அடுத்தடுத்து வார்த்தைகள் தடித்து விழுகிறபோது, பெருங்கோபமாக உருவெடுக்கிறது. பெற்றோரின் சண்டையால், அதில் தொடர்பற்ற குழந்தைகள் மனவேதனை அடைகிறார்கள். 'அப்பா, அம்மா பிரிஞ்சுபோய் நம்மளையும் கைவிட்ருவாங்களோ' என்ற பய உணர்வுக்கு ஆளாகிறார்கள். ''எந்தச் சூழ்நிலையிலும் குழந்தைகளின் முன்னிலையில் பெற்றோர், தங்களுக்குள் மிதமிஞ்சிய கோபத்தை வெளிப்படுத்திக்கொள்ளக் கூடாது'' என்கிறார் குழந்தைகள் நல ஆலோசகர் சுகன்யா. இதுபோன்ற சூழலில் குழந்தைகள் முன்பு தம்பதியர் நடந்துகொள்ள வேண்டிய வழிமுறைகளையும் சொல்கிறார். 
* முழுமையாகப் பேசத் தெரியாத காலத்திலேயே குழந்தைகள், பெற்றோரின் முகங்களைப் பார்த்து உணர்வுகளைப் புரிந்துகொள்ள முயற்சிப்பார்கள். பெற்றோர் கோபத்தை வெளிப்படுத்தும் விதத்தில் இருந்துதான் அவர்களும் கற்றுக்கொள்கின்றனர். பெரிதாக கத்துவது, பேசாமல் புறக்கணிப்பது போன்ற செயல்களை பெற்றோரிடமிருந்தே கற்றுக்கொள்கிறார்கள். எனவே, காமம், கோபம் இரண்டையும் குழந்தைகள் முன்னிலையில் வெளிப்படுத்திக்கொள்ளாதீர்கள். 
குழந்தைகள்
* தம்பதியருக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டாலும், அதை அறிவுப்பூர்வமாகப் புரியவைக்க முயற்சியுங்கள். முரண்பாடுகளை எப்போதும் எதார்த்தமாக அணுகுங்கள். இணையிடம் எதையும் மறைக்க வேண்டாம். ஒரு விஷயம் ஏன் இணைக்கு அவசியமில்லை என்பதை தெளிவாகப் புரியும்படி சொல்லும் பொறுப்பு உள்ளது. இணையோடு ஆரோக்கியமாக விவாதித்து, உண்மை நிலையைப் புரியவைக்கலாம். வார்த்தைகளால் அடக்க முயற்சிப்பதும், கோபத்தைக் காட்டுவதும் தவறான அணுகுமுறை. 
* யாரும் தனக்கான தேவையைப் போராடித்தான் பெறவேண்டியுள்ளது. தனது கருத்தை எதிராளிக்குப் புரியவைக்க உரையாடலும், விவாதமும் அவசியம். எது நடந்தாலும் எந்தக் கேள்வியும் கேட்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும் என இணையை அடக்குவது இயல்புக்கு எதிரானது. உங்களுக்குள் சிறிய விஷயங்களில் பிரச்னை ஏற்படும்போது, குழந்தையை நீதிபதியாகப் பாவித்து, அவர்களிடம் சொல்லி கருத்தைக் கேளுங்கள். பிரச்னைகளால் என்னென்ன விளைவுகள் ஏற்படும், அதைத் தவிர்க்க என்ன செய்யலாம் என்றும் விளையாட்டாக குழந்தைகளோடு விவாதியுங்கள். இதனால், பிரச்னையின் டென்ஷன் குறையும். குழந்தைக்கும் ஒரு விஷயத்தைக் கற்றுக்கொடுத்ததாக இருக்கும். 
* தனிமனித சுதந்திர எல்லைகளை மதிக்காமல் ஊடுருவும்போதுதான் இருவருக்கும் இடையில் முரண்பாடு, கசப்பு எல்லாம் உருவாகின்றன. அன்பு, காதல், பாசம் எதுவாக இருப்பினும் இணையின் சுதந்திரத்தை பறிக்கும் அளவுக்கு ஆதிக்கம் செலுத்தும்போது வெறுப்பு உண்டாகிறது. இருவருக்குமான பிரைவசியை மதித்து சுதந்திரத்தை அனுமதிக்கலாம். பெற்றோர் விவாதிக்கும்போது, சம்பந்தமின்றி குழந்தைகள் தலையிடத் தேவையில்லை என்பதைப் புரியவையுங்கள். பரஸ்பரம் எவர் மனதையும் காயப்படுத்திவிடக் கூடாது என்பதில் கவனமாக இருங்கள். 
* சிறிய பிரச்னைகளும் ஈகோவால் பெரிதாக உருவெடுக்கிறது. குழந்தைகள் முன்பு கத்துவது, கடுமையான வார்த்தைகள் பேசுவதைத் தவிர்க்கவும். ‘நீ தேவையில்லை’’ என்று இணையைப் புறக்கணிப்பதும், குழந்தைகளிடம் ‘‘நீ யார் பக்கம்’’ என்று கேட்பதும் மிகப்பெரிய தவறு. இதுபோன்ற தம்பதியரை குழந்தைகள் மதிப்பதில்லை. தம்பதியருக்குள் ஒற்றுமை இல்லாதபோது, குழந்தைகள் வழி தவறுவது எளிதாகிறது. தம்பதியருக்குள் நடக்கும் இணக்கமற்ற சூழல், குழந்தைகளின் நம்பிக்கையையும் லட்சியத்தையும் சிதைக்கும். 
* பெற்றோர் சண்டையிடும் வீடுகளில், குழந்தைகள் அதைத் தங்களுக்குச் சாதமாகப் பயன்படுத்திக்கொள்வதும் உண்டு. குழந்தைகள் அதிகம் செலவழிக்கவும், பொறுப்பின்றி நடந்துகொள்ளவும் வாய்ப்புள்ளது. குழந்தைகள் தவறு செய்யும்போது அதைக் கண்டறியவும் பெற்றோருக்கு நேரம் இருக்காது. அவர்கள் மனம் முழுக்க இருவருக்குள்ளான பிரச்னை பற்றியே யோசித்துக்கொண்டிருக்கும். இதுபோன்ற சூழலில் பொய் சொல்வது, மனம்போன போக்கில் செல்வது போன்ற நடத்தை மாற்றங்களுக்கும் குழந்தைகள் ஆளாகின்றனர். 
எனவே, தம்பதியர்களுக்குள் நடக்கும் சண்டையால் பாதிக்கப்படுவது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை மட்டுமல்ல, அவர்களையே நம்பியிருக்கும் குழந்தைகளின் எதிர்காலமும்தான் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். 
* மனிதர்கள் நிறையும் குறையும் நிறைந்தவர்கள். அவரவருக்கென்று சில பிரத்தியேக குணங்கள் இருக்கும். தம்பதியர் பாசிட்டிவான விஷயங்களைக் கண்டுபிடித்து பாராட்டிக்கொள்வதன் வழியாக, நெகட்டிவ் விஷயங்கள் காணாமல்போகும். நல்ல விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது, சின்னச் சின்ன சந்தோஷங்களைக் கொண்டாடுவது என்று குடும்பத்தின் மகிழ்வைத் தக்கவைத்துக்கொள்வது அவசியம். இதன் மூலமே குழந்தைகள் வளர ஆரோக்கியமான சூழலை உருவாக்கித்தர முடியும்.