ஆரோக்கியம் காக்க உதவும் பழக்கங்கள்! நலம் நல்லது–17 #DailyHealthDose
இன்றைய அறிவியல் தேடலுக்குச் சற்றும் குறைவில்லாத, உலக நாகரிகத் தொட்டிலான தமிழ் மரபு கற்றுத்தந்த நலப் பழக்கங்கள் ஏராளம். கலோரி கணக்கிலும், காப்புரிமை சூட்சுமத்துக்குள்ளும் நவீன உணவாக்கம் கட்டமைக்கப்படுகிறது. ஆனால், எதைச் சாப்பிட வேண்டும் என்பதை மட்டும் சொல்லாமல், எப்படிச் சாப்பிட வேண்டும், எதற்குச் சாப்பிட வேண்டும் என எப்போதோ எழுதிவைத்த மரபு நம் மரபு மட்டும்தான்.
1,800 ஆண்டுகளுக்கு முன்னரே ஆசாரக் கோவை நூலில், `முன்துவ்வார் முன்னெழார் தம்மிற் பெரியார் தம்பாலிருந்தக்கால்’ எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள் நம் பெரியோர். அதாவது, நம்மைவிட வயதில் பெரியவர் நம்மோடு உணவருந்தினால், அவர்கள் சாப்பிட்டு எழுவதற்கு முன்னதாக நாம் எழுந்துவிடக் கூடாது. இது உணவு அறிவியல் கிடையாது; ஆனால், அதைவிட உயர்ந்த உணவுக் கலாசாரம். அதேபோல, `தலை தித்திப்பு, கடை கைப்பு’ எனச் சாப்பிடச் சொன்ன முறையில், இனிப்பை முதலில் சாப்பிடச் சொல்கிறது நம் பண்பாடு.
இது, விருந்தோம்பலில் மகிழ்வைத் தெரிவிக்கும் பண்பாட்டுக்கு மட்டுமல்ல; அந்த இனிப்பு, ஜீரணத்தின் முதல் படியான உமிழ்நீரை முதலில் சுரக்கவைக்கும் என்பதற்காகவும்தான். இப்படி எத்தனையோவிதங்களில் நம் மரபு நமக்கு உதவியிருக்கிறது. உதாரணமாக, நம் ஊர் நடைவண்டியையே எடுத்துக்கொள்வோமே... இதில் பக்கவாட்டுப் பிடி இல்லாததால், நடைக்கான தசைப் பயிற்சியை, இடுப்பு கால்தசைக்கு ஏற்றவாறு தந்து குழந்தையின் நடையைச் செம்மையாக்கும்! இப்படி பேசிப் பேசி தீராத எத்தனையோ விஷயங்கள் நம் பண்பாட்டில் கலந்து வந்திருக்கின்றன. `பதார்த்த குண சிந்தாமணி’ எனும் பழம்பெரும் சித்த மருத்துவ நூல் அற்புதமான சில நலவாழ்வுப் பழக்கங்களை எடுத்துச் சொல்கிறது. அவற்றைக் கடைப்பிடிப்பது எளிது; பின்பற்றினால் நம் ஆரோக்கியமும் மேம்படும். அப்படி நாம் கடைப்பிடிக்கவேண்டிய பழக்கங்கள்... செய்யக் கூடாத விஷயங்கள் என சில உண்டு. அவை...
கடைப்பிடிக்கவேண்டிய பழக்கங்கள்...
* ஒரு நாளைக்கு இரு முறை மலம் கழிக்க வேண்டும்.
* வாரத்துக்கு ஒரு முறை எண்ணெய்க் குளியல் எடுக்க வேண்டும்.
* 45 நாட்களுக்கு ஒரு முறை மூக்கில் மருந்து (Nasal Drops) விட வேண்டும்.
* நான்கு மாதங்களுக்கு ஒரு முறை பேதி மருந்து சாப்பிட வேண்டும்; குடல் சுத்தமாகும்.
* வருடத்துக்கு இரண்டு முறை வாந்தி மருந்து சாப்பிட வேண்டும்.
செய்யக் கூடாத விஷயங்கள்...
* முதல் நாள் சமைத்த உணவு அமுதமாகவே இருந்தாலும் சாப்பிடக் கூடாது.
* கருணைக்கிழங்கு தவிர பிற கிழங்குகளைச் சாப்பிடக் கூடாது.
* ஒரு நாளைக்கு இரண்டு பொழுதுகள் மட்டுமே சாப்பிட வேண்டும். மூன்று வேளை சாப்பிடக் கூடாது. (இன்றைக்கு உடல் உழைப்பு குறைந்துவிட்ட காலகட்டத்தில், உணவை ஆறு வேளையாக பிரித்துச் சாப்பிட அலோபதி பரிந்துரைக்கிறது.)
* பசிக்காமல் உணவு உண்ணக் கூடாது.
* தும்மல், சிறுநீர், மலம், கொட்டாவி, பசி, தாகம், வாந்தி, இருமல், ஆயாசம், தூக்கம், கண்ணீர், உடலுறவில் சுக்கிலம், கீழ்க்காற்று, மூச்சு இவற்றை அடக்கக் கூடாது.
கண்டிப்பாக பின்பற்றவேண்டிய பழக்கங்கள்...
* உணவு சாப்பிட்ட பிறகு சின்னதாக ஒரு நடை (குறு நடை) நடந்துவிட்டு வருவது நல்லது.
* நீரைச் சுருக்கி, மோரைப் பெருக்கி, நெய்யை உருக்கி உண்ண வேண்டும். (அதாவது, தண்ணீரை கொதிக்கவைத்து, ஆற வைத்து சுத்தமான நீராக குடிக்க வேண்டும். தயிரில் ஆடையை நீக்கி, நீர்த்த மோராக குடிக்க வேண்டும். நெய்யை எப்போதும் உருக்கிய பிறகே, உணவில் சேர்க்க வேண்டும்.)
* வாழைப்பழத்தை கனிந்த பழமாகச் சாப்பிடாமல், இளம் பிஞ்சாகப் பார்த்து சாப்பிடுவது நல்லது.
* எண்ணெய்க் குளியலின்போது, குளிர்ந்த நீரில் அல்லாமல், வெந்நீரில் குளிக்க வேண்டு
No comments:
Post a Comment