Tuesday, May 23, 2017

அனைத்து வகை தோல் நோய்களுக்கும் அருமருந்தாகும் பூவரச மரம்!

பூவரசு இலையில் `பீப்பீ' செய்து ஊதி விளையாடிய அந்தப்பொழுதுகள் இன்றைக்கும் நினைவில் நிழலாடுகிறது. அதுமட்டுமல்ல 1978-ம் ஆண்டு வெளிவந்த `கிழக்கே போகும் ரயில்' படத்தில் இடம்பெற்ற `பூவரசம்பூ பூத்தாச்சு... பொண்ணுக்குச் சேதியும் வந்தாச்சு... காவேரி போல பொங்குற மனசு பாடாதோ?' என்ற பாடல் பட்டிதொட்டி எங்கும் ஒலித்தது. இன்றைக்கு அதுபோன்ற பாடல்களையும் கேட்க முடியவில்லை, அந்த பூவரச மரம் கூட நம்மால் பார்க்க முடிவதில்லை.
பூவரச மரம்
அன்றைய காலத்து கிராமத்துச் சிறுவர்களின் விளையாட்டுப்பொருளாக இருந்து வந்த பூவரசு மரம் கிணற்றுமேடுகளில் நிச்சயம் இடம்பெற்றிருக்கும். நீர் இறைக்கும் கமலையை இழுத்துவரும் மாடுகள் சோர்ந்து போகாமல் இருப்பதற்காக இதை நட்டு வைத்திருந்தார்கள். இந்த மரங்கள் ஆக்சிஜனை அதிகளவு உற்பத்தி செய்யும் மரங்களில் ஒன்று என்பதால் கிராமம்தோறும் காணப்பட்டன. இன்றைக்குக் கிணற்றில் நீரும் இல்லை, அவற்றிலிருந்து நீர் இறைக்கும் கமலைகள் மட்டுமல்ல மாடுகளும் இல்லை, அவை இளைப்பாறுவதற்காக நடப்பட்ட மரங்களும் இல்லை.
அதுமட்டுமல்ல சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் மார்கழி மாதத்தின் காலைப்பொழுதுகளில் நம் வீட்டுப்பெண்கள் தமிழ்க் கலாசாரத்தின் அடையாளங்களில் ஒன்றாகக்கருதப்படும் கோலமிடுதல் முக்கியமானது. வீடுகளின் முற்றங்களில் விழுந்து கிடக்கும் இலைதழைகள் மற்றும் குப்பைகளை அகற்றி மாட்டுத்தொழுவத்துக்குப் பின்புறம் இருக்கும் உரக்குழியில் போடுவார்கள். பிறகு மாட்டுத்தொழுவத்தில் இருந்து சாணம் எடுத்து வந்து நீர் விட்டுக் கரைத்துத் தெளித்து மாக்கோலம் இட்டு அதன் நடுவே சாணத்தில் பிள்ளையார் பிடித்து அதில் பூவரசம் பூவை செருகி வைப்பார்கள். இது மரபின் மருத்துவம் என்றால் அது மிகையாகாது.
பூவரசம் மரத்தின் தாவரவியல் பெயர் தெஸ்பீசியா பாபுல்னியா (Thespesia poulnea (L) என்பதாகும். இதை கல்லால் பூப்பருத்தி என்றும், புவிராசன், அர்த்தநாரி, ஈஸ்வரம், பம்பரக்காய், பூளம் என்ற வேறு பெயர்களிலும் அழைப்பார்கள். சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற நூல்களிலும் பூவரசு மரம் பற்றி குறிப்பிட்டிருக்கிறது. இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் தென்மேற்குப்பகுதியில் உள்ள ஏழு தீவுகளில் ஒன்றான புங்குடுதீவில் பூவரசு மரங்கள் நிறைந்த காடு இடம்பெற்றிருக்கிறது.
இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க பூவரசு மருத்துவக்குணம் நிறைந்தது ஒரு மரமாகும். இதன் இலை, பூ, காய், விதை, பட்டை, வேர் என எல்லாவற்றுக்கும் மருத்துவக்குணங்கள் உண்டு. பூவரசு இலையை அரைத்து சொறி, சிரங்கு, தேமல் போன்றவற்றுக்குப் பற்று போட்டு வந்தால் பலன் கிடைக்கும். பூவரசு மரத்தின் காய்களை அம்மி அல்லது கருங்கல்லில் உரசினால் வரக்கூடிய மஞ்சள் நிறப்பாலை தேமல் உள்ள இடங்களில் தடவி வந்தால் நாளடைவில் தேமல் அகலும். படர்தாமரை என்று சொல்லக்கூடிய தோல் நோயும் குணமாகும். கை-கால் மூட்டு வீங்கியிருந்தாலும் இதே மஞ்சள் நிறப்பாலை பூசினால் குணம் கிடைக்கும்.
பூவரச மரம்
பூவரசு மரத்தின் வேர்ப்பட்டையை நீர் விட்டு நீர் சேர்த்து கொதிக்க வைத்து அதில் 50 மில்லி அளவு எடுத்து 10 மில்லி விளக்கெண்ணெய் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் பேதியாகும். இதன் மூலம் தோல் நோய்களிலிருந்து விடுதலை கிடைக்கும். செதில் செதிலாக உதிரக்கூடிய சொரியாசிஸ் நோய்க்கு பூவரசம்பட்டை நல்ல மருந்தாகும். அதாவது, 100 ஆண்டுகள் ஆன பூவரசு மரத்தின் பட்டையுடன் காய், பூ சேர்த்துப் பொடியாக்கி காலை, மாலை ஒரு டேபிள்ஸ்பூன் வீதம் சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும். முற்றிய மரத்தின் பட்டையை இடித்துச் சாறு எடுத்து அதை வாயில் வைத்துக் கொப்புளிப்பதோடு உள்ளுக்குள் விழுங்கி வந்தால் உதட்டில் வரக்கூடிய வெண்தேமல் சரியாகும்.
சர்க்கரை நோயாளிகளுக்குப் புண் ஏற்பட்டால் அது ஆறாமல் மிகுந்த பிரச்னையை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. அப்படிப்பட்ட சூழலில் பூவரசம்பட்டையை நீர் விட்டுக் கொதிக்க வைத்து சூடு ஆறியதும் கழுவி வந்தால் பலன் கிடைக்கும். கழுத்தில் அணியக்கூடிய செயின், கைக்கடிகாரம் போன்றவற்றை அணிவதால் சிலருக்குத் தோலில் கருமை நிறம் ஏற்படும். அப்படிப்பட்ட சூழலில் பூவரசம் பூவின் இதழ்களை நல்லெண்ணெய் விட்டு காய்ச்சி சூடு ஆறியதும் கருமை நிறத்தின் மீது பூசி வந்தால் கரும்படலம் நாளடைவில் மறையும். அல்சைமர் எனும் ஞாபகமறதி நோய்க்கும் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது என்று சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பூவரசு மரம்
மருத்துவக்குணம் நிறைந்த பூவரசு மரம் மிக எளிதாக வளரக்கூடியது. அதன் கிளைகளை வெட்டி நட்டாலே தளிர் விட்டு வளரும். அதிக பிராணவாயுவைப் பெறுவதோடு நோய்களையும் வெல்வோம்; மீண்டும் `பீப்பீ' ஊதப் புறப்படுவோம்

.

1 comment:

  1. எனது கட்டுரைகளை உங்கள் பிளாக்கில் பார்த்தேன். மகிழ்ச்சி. நீங்கள் என்ன செய்கிறீர்கள்? எனது பெயர் மரிய பெல்சின். உங்களது தொடர்பு எண் தரவும்.

    ReplyDelete