Saturday, May 6, 2017


மன அழுத்தத்துக்கு உடற்பயிற்சி சிறந்த மருந்து! 

இனம்புரியாத கவலை, நம்பிக்கையின்மை, விரக்தி போன்ற உணர்வுகள் ஒருவருக்கு இருந்தால் அவை மன அழுத்தத்தின் அறிகுறிகள் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய மருத்துவர்கள், ''விரக்தியாகப் பேசுதல், அளவுக்கு மீறிய கோபம், இனம் புரியாத கவலை, தூக்கமில்லாமல் இருப்பது, பசியின்மை, பிறருடன் பேசுவதைக் குறைத்துக் கொள்வது, அடிக்கடி சோர்ந்து போவது, இனம் புரியாத பயம், தனிமையில் அழுவது, தேவையின்றி பதற்றமடைவது, காரணமே இல்லாமல் எப்போதும் சோகமாக இருப்பது, அடிக்கடி தற்கொலை எண்ணம் ஏற்படுவது ஆகிய அனைத்துமே மன அழுத்தத்துக்கான அறிகுறிகள்'' என்று கூறியுள்ளனர்.

முக்கியமாக மன அழுத்தம் உள்ளவர்கள், தனிமையைத் தவிர்க்க வேண்டும் என்றும், பிடித்தமானவரிடம் மனம்விட்டுப் பேச வேண்டும் என்றும் கூறியுள்ளனர். மன அழுத்தம் ஏற்படாமலிருக்க உடற்பயிற்சிதான் சிறந்த மருந்து என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

No comments:

Post a Comment