Sunday, February 19, 2017

உணவே மருந்தாக... மருந்தே உணவாக.. உதவும் பொடிகள்! நலம் நல்லது-75 #DailyHealthDose vikatan.com


சோமாலியா மார்க்கெட் பகுதியில் குண்டுவெடிப்பு!
சோமாலியா மார்க்கெட் பகுதியில் குண்டுவெடிப்பு!
காஷ்மீரில் 50 நாட்களில் 22 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!
காஷ்மீரில் 50 நாட்களில் 22 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!
மாட்டிறைச்சி ஏற்றுமதியை தடை செய்ய முடியுமா..? அகிலேஷ் யாதவ் கேள்வி.
மாட்டிறைச்சி ஏற்றுமதியை தடை செய்ய முடியுமா..? அகிலேஷ் யாதவ் கேள்வி.
இந்தியாவின் முதல் அதிவேக புல்லட் ரயில் திட்டம்!
இந்தியாவின் முதல் அதிவேக புல்லட் ரயில் திட்டம்!
நாகாலாந்து முதலமைச்சர் ராஜினாமா!
நாகாலாந்து முதலமைச்சர் ராஜினாமா!
வைரலாகும் குட்டி டொனால்ட் டிரம்ப்!
வைரலாகும் குட்டி டொனால்ட் டிரம்ப்!
பார்த்தசாரதி கோயிலில் பிப்.26 முதல் தெப்பத் திருவிழா!
பார்த்தசாரதி கோயிலில் பிப்.26 முதல் தெப்பத் திருவிழா!
ஹிப் ஹாப் ஆதிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!
ஹிப் ஹாப் ஆதிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!
காணாமல் போன போயிங்-777 கண்டுபிடிக்கப்பட்டது!
காணாமல் போன போயிங்-777 கண்டுபிடிக்கப்பட்டது!
திருக்குறளை வைத்து அரசியல் பேசிய வைரமுத்து!
திருக்குறளை வைத்து அரசியல் பேசிய வைரமுத்து!
சோமாலியா மார்க்கெட் பகுதியில் குண்டுவெடிப்பு!
சோமாலியா மார்க்கெட் பகுதியில் குண்டுவெடிப்பு!
காஷ்மீரில் 50 நாட்களில் 22 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!
காஷ்மீரில் 50 நாட்களில் 22 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!
மாட்டிறைச்சி ஏற்றுமதியை தடை செய்ய முடியுமா..? அகிலேஷ் யாதவ் கேள்வி.
மாட்டிறைச்சி ஏற்றுமதியை தடை செய்ய முடியுமா..? அகிலேஷ் யாதவ் கேள்வி.
இந்தியாவின் முதல் அதிவேக புல்லட் ரயில் திட்டம்!
இந்தியாவின் முதல் அதிவேக புல்லட் ரயில் திட்டம்!

உணவே மருந்தாக... மருந்தே உணவாக.. உதவும் பொடிகள்! நலம் நல்லது-75 #DailyHealthDose 

சில அத்தியாவசியமான பொடிகள் நம் வீட்டில் இருந்தால், நாம் மருத்துவமனைப் படிகளை அதிகம் மிதிக்கவேண்டிய அவசியம் இருக்காது. இந்தப் பொடிகளை சாதத்தில் பிசைந்தும், தேநீரில் கலந்தும், கஷாயமாகவும் தேவைப்படும் சமயத்தில் சாப்பிடும் மரபு, நம்மிடம் நெடுங்காலமாக இருந்து வந்திருக்கிறது. அதை மீண்டும் மீட்டு எடுப்போம். `உணவே மருந்தாக... மருந்தே உணவாக’ நல வாழ்வு வாழ்வோம். அதற்கு உதவும் பொடிகள்... 
பொடிகள் 

அஷ்ட சூரணம்! 
சிலருக்கு சாப்பிட்டு முடித்ததும் புளித்த ஏப்பம் வரும்; வயிறு உப்பிப் போகும்; லேசான அமிலத்துடன் சாப்பிட்ட ரசவடையின் வாசம் தொண்டை வரை எட்டிப் பார்க்கும். இவர்களுக்குத்தான் இந்த அஷ்ட சூரணம். சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம், கருஞ்சீரகம், பெருங்காயம், இந்துப்பு, ஓமம் இவற்றை சம அளவில் எடுத்து வறுத்துப் பொடித்துக்கொண்டு, சுடு சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால் வாயுக் கோளாறு குறையும். கழுத்துவலி இருந்தால் அதுவும் மட்டுப்படும். 
சுண்டவற்றல் பொடி 
சுண்டவற்றல் பொடி! 
குழந்தைகளுக்கு வயிற்றுப் புழுக்களுடன் சில சமயங்களில் வயிற்றுப் போக்கும் ஏற்படும். அந்த நேரத்தில் அருமருந்து இந்த சுண்டவற்றல் பொடி! சுண்டவற்றலுடன் கறிவேப்பிலை, மாங்கொட்டைப் பருப்பு, மாதுளையின் ஓடு, ஓமம், வெந்தயம், நெல்லிக்காய் வற்றல் ஆகியவற்றை தேவையான அளவுக்கு எடுத்துக்கொள்ளவும். இவற்றை தனித்தனியே வறுத்து, பொடித்து, கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். இதைக் குழந்தைகளுக்கு கைப்பிடி சாதத்தில் கலந்து, பிசைந்து கொடுக்கலாம். மாங்கொட்டையையும், மாதுளம் பழத்தோலையும் தூர எறியாமல், நன்கு கழுவி உலர்த்திவைத்துக்கொண்டால் இவை அனைத்தையும் வீட்டிலேயே செய்துகொள்ளலாம். 
பெரியவர்களுக்கு கொஞ்சம் மாற்றி செய்து கொடுக்க வேண்டும். சுண்டக்காயை சிற்றாமணக்கு எண்ணெயில் வறுத்து, உப்பு, மிளகு, சீரகம், கறிவேப்பிலை, வெந்தயம் ஆகியவற்றை தேவையான அளவுக்குச் சேர்த்து மொத்தமாக வறுத்து, பொடி செய்துகொள்ளலாம். இதைச் சிறிது சாதத்தில் கலந்து சாப்பிட்டால், செரிமானம் சீராகும்; மூல நோய் பிரச்னை குறையும். 
மிளகு கற்பப் பொடி! 
தினமும் உணவில் மிளகு சேர்க்கவேண்டியது அவசியம். 200 கிராம் மிளகை மூன்று நாட்கள் மோரிலும், அடுத்த மூன்று நாட்கள் இஞ்சிச் சாற்றிலும், இப்படி மூன்று மூன்று நாட்களாக வேலிப்பருத்தி, தூதுவளை, கற்பூரவல்லி, ஆடுதொடா இலைச் சாறு ஆகியவற்றில் ஊறவைத்துப் பிறகு உலர்த்தி எடுத்துக்கொள்ள வேண்டும். இதனுடன், சுக்கு, அதிமதுரம், திப்பிலி, கடுக்காய் அனைத்தையும் வகைக்கு 25 கிராம் அளவுக்கு சேர்த்து ஒன்றாக வறுத்து, இடித்து பொடியாக்கிக்கொள்ளவும். இந்தப் பொடியை சளி, இருமல், மூச்சிரைப்பு உள்ள குழந்தைகளுக்கு காலை உணவு கொடுப்பதற்கு முன்னர் தேனில் மூன்று சிட்டிகை போட்டு, குழைத்துக் கொடுக்கலாம். நாளடைவில் சளி வெளியேறி, மூச்சிரைப்பு நிற்கும். மீண்டும் வராத அளவுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும். 

வெந்தயக் கூட்டுப் பொடி 
வெந்தயக் கூட்டுப் பொடி! 
வெந்தயம், ஆவாரம் பூ, திரிபலா (கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய்), நாவல் கொட்டை, கறிவேப்பிலை அனைத்தையும் சம அளவில் எடுத்துப் பொடித்துக்கொள்ளவும். இந்தப் பொடியை 1/2 டீஸ்பூன் சாப்பிட்டுவிட்டு, மதிய உணவைச் சாப்பிட்டால், வரவிருக்கும் சர்க்கரைநோயைத் தள்ளிப்போடும். சர்க்கரைநோய் உள்ளவர்களுக்கு அதன் தீவிரத்தைக் குறைக்க உதவும். கறிவேப்பிலையும் வெந்தயமும் கலந்திருப்பதால், கெட்ட கொழுப்பும், திரிபலாவின் துணையால் மலச்சிக்கலும் குறையும். 
சிற்றரத்தைப் பொடி! 
நாட்டு மருந்துக் கடைகளில் இந்தப் பொடி கிடைக்கும். இதில் 2 சிட்டிகையை எடுத்து தேனில் குழைத்து குழந்தைக்குக் கொடுத்தால் இருமல் நீங்கும். வறட்டு இருமலுக்கு, சிற்றரத்தையுடன் அதிமதுரத்தை சமபங்கு எடுத்துச் சேர்த்துக் குழைத்துக் கொடுக்க வேண்டும். 
சுக்குக் கஷாயப் பொடி 
சுக்குக் கஷாயப் பொடி! 
சுக்கு, கடுக்காய், சீந்தில், நிலவேம்பு, பேய்ப்புடல் அனைத்தையும் வாங்கி நன்கு சுத்தம் செய்யவும். இவற்றை உலர்த்தி, வறுத்து, ஒன்றிரண்டாக இடித்து, பொடிசெய்து காற்றுப்புகாத பாத்திரத்தில் போட்டு வைத்துக்கொள்ளவும். ஜுரம் வந்தால், இந்தப் பொடியில் ஒரு டீஸ்பூன் எடுத்து, 200 மி.லி தண்ணீரில் போட்டு, அந்தத் தண்ணீர் 50 மி.லி ஆகும் வரை வற்றவைத்துக் கொள்ளவும். காலை, மாலை வேளைகளில் டீ குடிப்பதற்கு பதிலாக இந்தக் கஷாயத்தை மூன்று நாட்கள் இரண்டு வேளை சாப்பிட்டால், ஜுரம் காணாமல் போகும். 
தாது கல்ப பொடி! 
உலர்த்திய முருங்கைப் பூ, நிலப் பூசணி, அமுக்கரா கிழங்கு, பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, பாதாம் பிசின், முருங்கைப் பிசின் அனைத்தையும் சம அளவு எடுத்துக்கொள்ளவும். ஆளி விதை, சப்ஜா விதை, பூனைக் காலி விதை இவற்றை முதலில் எடுத்தவற்றில் பாதி அளவுக்கு எடுத்துக்கொள்ளவும். எல்லாவற்றையும் சேர்த்துப் பொடித்துக்கொள்ளவும். இரவு இளஞ்சூடான பாலில் இந்தப் பொடியை 1/2 டீஸ்பூன் அளவுக்குக் கலந்து சாப்பிட்டால் உடலுறவில் நாட்டம் மிகும்; விந்தணுக்களின் எண்ணிக்கை பெருகும். 
கடுக்காய்ப் பொடி 
கடுக்காய்ப் பொடி! 
கடுக்காய்ப் பிஞ்சை விளக்கெண்ணெயில் லேசாக வறுத்து, பொடித்து காற்றுப் புகாத இறுக்கமான பாட்டிலில் போட்டு வைத்துக்கொள்ளவும். சாப்பாட்டுக்குப் பிறகு 30-40 நிமிடங்கள் கழித்து 1/2 டீஸ்பூன் பொடியை வெந்நீரில் கலக்கி இரவில் சாப்பிடவும். மலச்சிக்கல் தீரும். மலச்சிக்கலின் தீவிரத்தைப் பொறுத்து, பொடியின் அளவை 2 டீஸ்பூன் வரை அதிகரித்துச் சாப்பிடலாம். 
ஆரோக்கியம் காக்கும் இந்தப் பொடிகளை பத்திரமாகப் பாதுகாக்கவேண்டியது அவசியம். இவை ஆயுளுக்கும் நலம் பயக்கும் நல் மருந்துகள்! 

No comments:

Post a Comment