மஞ்சள் கறைக்கு நோ... வெண்மைக்கு வெல்கம்! பல் பராமரிப்பு வழிகள் #PhotoStory
அனைவரையுமே எளிதாக தாக்கக்கூடிய ஆயுதம் புன்னகை. ஆனால், அந்த ஆயுதத்தால் நாம் பறிப்பதோ அன்பையும் நேசத்தையும். `அந்தப் புன்னகையின்போது பற்கள் முத்துப்போல் பளிச்சிட்டால்தானே அழகு!’ என்பது பலரின் எண்ணம். அதில் சிறிது உண்மையும் உண்டு. பற்கள் மஞ்சள் வண்ணத்தில் இருப்பதால், சிலருக்கு தன்னம்பிக்கையே சமயத்தில் நொறுங்கிவிடும். இங்கே, மஞ்சள் பற்களை வெண்மையாக மாற்றுவதற்கு எட்டு எளிய வழிமுறைகளைக் கூறுகிறார் சித்த மருத்துவர் ஜெய வெங்கடேஷ்...
* வெட்பாலை இலை
தினமும் இரு வேளை வெட்பாலை இலைகளைப் பறித்துத் தொடர்ந்து மென்றுவர, வெண்ணிறமான பற்களைப் பெறலாம்.
தினமும் இரு வேளை வெட்பாலை இலைகளைப் பறித்துத் தொடர்ந்து மென்றுவர, வெண்ணிறமான பற்களைப் பெறலாம்.
* பொடி
நாயுருவி வேர், கொட்டைப் பாக்கு, காசுக்கட்டி, கிராம்பு, தவிடு ஆகியவற்றை நன்கு அரைத்துப் பொடியாக்கி பல் துலக்கி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
நாயுருவி வேர், கொட்டைப் பாக்கு, காசுக்கட்டி, கிராம்பு, தவிடு ஆகியவற்றை நன்கு அரைத்துப் பொடியாக்கி பல் துலக்கி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
* பழத் தோல்கள்
எலுமிச்சை அல்லது ஆரஞ்சுப்பழத் தோல்களை நன்கு வெயிலில் உலர்த்தி, அதனைப் பொடியாக்கி காலை, மாலை இரு வேளை பல் துலக்கலாம்.
* வாய் கொப்பளித்தல்
தேங்காய் எண்ணெயைச் சிறிதளவு எடுத்து வாயில் ஊற்றி ஐந்து முதல் பத்து நிமிடங்கள் கழித்துக் கொப்பளிக்கலாம். இப்படித் தொடர்ந்து செய்துவர, பற்கள் வெண்ணிறமாகும்.
* உப்பு
வீட்டில் சமையலுக்குப் பயன்படுத்துகிற உப்புகூட பற்களின் வெண்மைக்கு உதவும். சிறிதளவு உப்பை வெந்நீரில் கலக்கி, தினசரி வாய் கொப்பளித்துவந்தால், பற்கள் வெண்மையாக மாறிப் பளிச்சிடும்.
* ஓம இலை
மிக எளிதாகக் கிடைக்கக்கூடிய ஓம இலைகளைப் பறித்து அதனை நன்கு மென்றுவர வெகு விரைவில் பற்கள் வெண்ணிறத்துக்கு மாறும்.
* மரக்கரி
மரக்கரியை தினசரி உபயோகப்படுத்தும் டூத் பேஸ்ட்டுகளுடன் கலந்து அன்றாடம் பயன்படுத்திவந்தாலும் பற்களில் உள்ள மஞ்சள் கறை நீங்கும்.
No comments:
Post a Comment