தலைமுடி பராமரிப்பு... எளிய வழிகள்!
முடி பராமரிப்புக்கும், பாதுகாப்புக்கும் சில டிப்ஸ்...
சிறு வயதிலிருந்தே சாப்பாட்டில் முருங்கைக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, சிறுகீரை சேர்த்துச் சாப்பிட வேண்டும். கம்மஞ்சோறு, நெல்லிக்காய், கறிவேப்பிலைத் துவையல்... போன்றவற்றை வாரத்துக்கு 2-3 நாட்கள் அவசியம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
மாதுளை ஜூஸ், உலர்ந்த திராட்சை, உலர் அத்திப்பழம் சாப்பிடுவது மிக நல்லது.
வாரத்துக்கு ஒரு நாளைக்காவது தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்துக் குளிப்பது அவசியம்.
தினமும் தலைக்குக் குளித்தால் முடி கொட்டும்’ என்பது மூட நம்பிக்கை. தலைக்குக் குளிப்பது முடியை வளர்க்கும் என்பதே உண்மை.
சிறு வயதிலிருந்தே வீட்டில் அடிக்கடி சுண்டல், நவதானியச் சத்துமாவுக் கஞ்சி, சிறுதானிய உணவு, பீன்ஸ், அவரை முதலான காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்வது, முடி கொட்டும் குறைபாட்டைத் தடுக்கும்.
பொடுகுத் தொல்லை, தலையில் உள்ள சரும உலர்வால் ஏற்படுவதே தவிர, பூச்சித் தொற்று காரணம் கிடையாது. இதைத் தவிர்க்க, ‘பொடுதலை’ என்ற மூலிகையின் சாற்றை தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி, வாரம் 2-3 நாட்கள் தலைக்குத் தேய்த்துக் குளிக்கலாம். Scalp Psoriasis எனும் தோல் நோயை பலரும் பொடுகுத் தொல்லை எனத் தவறாக நினைத்து அலட்சியப்படுத்துகின்றனர். பொடுகுத் தொல்லை அதிகமாக இருந்தால், மருத்துவரிடம் கலந்தாலோசிப்பது அவசியம்.
No comments:
Post a Comment