சிறப்பு பகுதிகள் செய்தி
சொல்கிறார்கள்
சி.ஏ., தேர்வு: கவனச்சிதறல் இருக்கக் கூடாது!
Advertisement
'சார்ட்டட் அக்கவுன்டன்ட்' எனப்படும், சி.ஏ., தேர்வை எப்படி அணுகுவது, ஜெயிப்பது குறித்து கூறும், ஆடிட்டர், கோபால் கிருஷ்ண ராஜு: சி.ஏ., படிப்பதற்கு இரண்டு வழிகள் இருக்கின்றன. பிளஸ் 2 முடித்தவர்கள், சி.ஏ., பவுண்டேஷன் தேர்வு எழுதிய பின், 'இன்டர்மீடியட்'டில் ஒரு குரூப் எழுத வேண்டும். கூடவே, ஆடிட்டர் அலுவலகத்தில் மூன்றாண்டு பயிற்சி எடுத்து, 'இன்டர்மீடியட்' இரண்டாவது குரூப் தேர்வும், அடுத்து, பைனலில் இருக்கிற இரண்டு குரூப்பையும் படித்து, தேர்ச்சி பெற வேண்டும்.பட்டப் படிப்பு முடித்த பிறகு எனில், ஆடிட்டர் அலுவலகத்தில் மூன்றாண்டு பயிற்சி பெற்றபடியே, 'இன்டர்மீடியட்' இரண்டு குரூப்பையும், அடுத்து, பைனலில் இருக்கிற இரண்டு குரூப்பையும் படித்து தேர்ச்சி பெற வேண்டும். இந்த இரண்டு வழிகளில் உங்களுக்கு எது சுலபமாக தெரிகிறதோ, அதை தேர்ந்தெடுக்கலாம்.இது, 'புரொபஷனல் கோர்ஸ்' என்பதால், ஒரு தாள் தோல்வியடைந்தாலும், மறுபடியும் அந்த குரூப்பில் இருக்கிற அத்தனை தாள்களையும் எழுத வேண்டும். அதனால், சி.ஏ-.,வுக்கு, 'ஸ்மார்ட்போன்' மாதிரியான எந்த கவனச் சிதறல்களும் இருக்கக் கூடாது.சி.ஏ., பைனலில், எட்டு தாள் உள்ளதால், ஒவ்வொன்றுக்கும் ஒரு மாதம் நேரம் ஒதுக்கி படிக்க வேண்டும். எட்டு மணி நேரம் துாக்கம் போக, மீதம், 16 மணி நேரத்தில் தினமும், நான்கு மணி நேரம் கண்டிப்பாக படிக்க ஒதுக்க வேண்டும். கடைசி ஒரு மாதம் மட்டுமே படித்தால், நிச்சயம் ஜெயிக்க முடியாது.ஆடிட்டர் அலுவலகத்தில் பயிற்சி எடுக்காமல் படித்தால், பாடங்கள், 'தியரி'யாகத்தான் தெரியுமே தவிர, 'பிராக்டிக்'கலாக மனதில் பதியாது. ஒருவேளை சில தாள் மட்டும் கடினமாக இருந்தால், அதற்கு மட்டும் பயிற்சி வகுப்புக்கு போகலாம்.'இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டட் அக்கவுன்ட்டன்ட்ஸ் ஆப் இண்டியா' - ஐ.சி.ஏ.ஐ., அமைப்பு, மாணவர்களுக்கு, 'ஆன்லைன் வீடியோ'க்கள் வழியாக பயிற்சி அளிக்கிறது. இதில், மாதிரி தேர்வு தாள்கள் இருக்கின்றன. அவற்றை வீட்டிலேயே எழுதி பார்க்கலாம்.சி.ஏ-.,வை பொறுத்தவரை, 'புளு பிரின்ட்' எல்லாம் உதவாது. ஏனெனில், ஒரு பேப்பருக்கு நான்கு பேர் கேள்வித்தாள் தயாரித்து, அவற்றிலிருந்து ஒரு கேள்வித்தாளை தயார் செய்வர். சில நேரம், மூன்று கேள்வித்தாள்களை அப்படியே நிறுத்தி, ஒருவருடைய கேள்வித்தாளை மட்டும் எடுத்துக் கொள்வர்.வேலைக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துவிட்ட நிலையில், ஆடிட்டரின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது; வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment