Monday, April 29, 2019

பசியின்மையைவென்று விடலாம்! thanks to dinamalar.com

Advertisement
பசியின்மையைவென்று விடலாம்!
கோடையில் பசியின்மை ஏற்படுவதற்கான காரணம், தீர்வு குறித்து கூறும், டயட்டீஷியன் வாணி: வேளா வேளைக்கு விதவிதமான உணவு கேட்பவர்கள் கூட, வெயில் வந்துவிட்டால் மாறிவிடுவர்; ஜூசாக குடித்து வயிற்றை நிரப்பி கொள்வர்.
கோடையில், இயல்பாகவே உடல் உஷ்ணம் அதிகமாக இருக்கும். நாம் உண்ணும் உணவுகளும் உஷ்ணம் நிறைந்ததாக இருந்தால், செரிமானம் தாமதமாகி, உடல் உஷ்ணம் இன்னும் அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தியின் உதவியுடன், உடல் சற்று குளிர்ச்சியான சூழலுக்கு வந்த பிறகே, பசி உணர்வு ஏற்பட துவங்கும்.
செரிமானத்தை தாமதப்படுத்தும் எண்ணெய் அதிகமுள்ள அல்லது வறுத்த உணவு கள், டீ, காபி போன்ற சூடான பானங்களை தவிர்க்க வேண்டும். 
உடல் உழைப்பு இல்லாதவர்களுக்கு, பசியின்மை ஏற்படுவது இயல்பு. எனவே, முடிந்தவரை எளிதில் செரிமானமாகும் உணவு களை சாப்பிடலாம்.
வெயிலில் அதிக நேரம் இருக்க நேர்ந்தால், உடல் உஷ்ணம் அதிகரிக்கும். எனவே, பகல் நேரத்தில் வெளியே செல்வதை தவிர்க்கலாம். 
உடல் உஷ்ணம் வியர்வையாக வெளியேறும் போது, 'சோடியம், பொட்டாசியம்' போன்றவையும் சேர்ந்து வெளியேறும்; இது, உடலில் வறட்சியை ஏற்படுத்தும்.
எனவே, உடலுக்கு குளிர்ச்சியூட்டும் இளநீர், நுங்கு, பானகம், பழச்சாறு போன்ற ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும். இல்லையெனில், உடலிலுள்ள சத்துகள் குறையும்; ரத்த அழுத்தம் குறைந்து, மயக்கம் கூட ஏற்படலாம்.
வெயில் காலத்தில் கிடைக்கும் பூசணிக்காய், மாம்பழம், தர்ப்பூசணியை அன்றாட உணவு பட்டியலில் சேர்த்து கொள்ளலாம். பகலில் அதிக நேரம் வெளியே இருப்பவர்கள், சீரகத் தண்ணீர், இஞ்சி மற்றும் எலுமிச்சை கலந்த தண்ணீரை குடித்து வந்தால், உடல் உஷ்ணம் குறையும்.
பசி உணர்வு, எல்லா நேரங்களிலும் வயிறு தொடர்பான பிரச்னையாக மட்டுமே இருக்காது. சில நேரங்களில் எண்ணம், மனம் தொடர்பானதாகவும் இருக்கலாம். 'மோர் குடி, ஜூஸ் அருந்து' என, மூளை அறிவுறுத்தும் உணவுகளை உட்கொண்டாலே போதும்; கோடையில் ஏற்படும் பசியின்மையை வென்று விடலாம்.
இந்த பசியின்மையை, பசியே எடுக்காத நிலை என்றோ, அது ஒரு பிரச்னை என்றோ வகைப்படுத்த முடியாது. காரணம், பசி, எல்லா நேரங்களிலும் உணவின் மீதான தேடலாக மட்டுமே இருக்காது. 
நீர்ச்சத்து, சூடான பானங்கள், குளிர்ச்சியான உணவுகளுக்கான தேடல்களாக கூட இருக்கலாம். அதன் அறிகுறிகளாக, நா வறட்சி, தொண்டை வறட்சி, அதிகம் வியர்ப்பது போன்றவை.
இப்படி உடல், தன் தேவையை ஏதாவதொரு விதத்தில் வெளிப்படுத்துவதே பசி உணர்வு. ஆகவே, இந்த வெயில் காலத்தில், பெரும்பாலும் ஏற்படும் பசியின்மையால், பிரச்னை இல்லை.

No comments:

Post a Comment