Sunday, April 28, 2019

கொப்பளங்களை தவிர்க்க என்ன செய்யலாம்? thanks to dinamalar.com


 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29ஏப்
2019 
04:29
தாம்பரம் : ''கோடை கொப்பளங் களில் இருந்து தப்பிக்க, சந்தன ஊறல் குடிநீரை, அதிகளவு குடிக்க வேண்டும்,'' என, சித்த மருத்துவமனையின், குணப்பாடத் துறை, இணை பேராசிரியர், டாக்டர் எஸ்.சிவகுமார் கூறினார்.


இது குறித்து, அவர் கூறியதாவது:கோடை அதிகரித்து உள்ள நிலையில், உடலில் இருந்து, அதிகளவு வெளியேறும் வியர்வையால், நமச்சல் அதிகரிக்கும். உடலில் ஆங்காங்கே, வெயில் கொப்பளங்கள் மற்றும் வேர்க்குரு உருவாகும்.இதை தவிர்க்க, இளநீர், நன்னாரி சாறு, வெட்டி வேர், விளாமிச்ச வேர் ஆகியவற்றை, நான்கு டம்ளர் தண்ணீரில் கலந்து, அரை டம்ளர் அளவு வரும் வரை, கொதிக்க வைத்து, சூடாறிய பின், குடிக்க வேண்டும்.அதேபோல், தரமான சந்தனத்தை, தேவைக்கேற்ப சமமான அளவு, தண்ணீரில் கலந்து, குடிநீராக பருகலாம்; இதை, 'சந்தன ஊறல் குடிநீர்' என, சித்த மருத்துவத்தில் கூறுவர். தமிழ்நாடு காதி வஸ்திராலய கடைகளில், தரமான சந்தனம் கிடைக்கும்.ஒரு வேளை கொப்பளங்கள் மற்றும் வேர்க்குருக்கள் வந்தாலும், அவற்றால் ஏற்படும் எரிச்சல் மற்றும் நமச்சலில் இருந்து தப்பிக்க, சந்தனம், பச்சை கற்பூரத்தை சம அளவு, தண்ணீரில் கலந்து அரைத்து, உடலில் பூசலாம்.இதை, செய்ய முடியாதவர்கள், நுங்கு நீரை மட்டும், உடலில் பூசலாம். இது தவிர, தேங்காய் பாலில், சீரகத்தை அரைத்தோ அல்லது ஏலக்காய், கார்போகி அரிசி, ஆல மரம் அல்லது அரச மரம் பட்டையை அரைத்தோ, உடலில் பூசலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment