நன்றி சொல்லும் நல்ல நாள் இன்று ஆடி அமாவாசை
Advertisement
பதிவு செய்த நாள்
23ஜூலை2017
01:59
சூரியன் வானில் சஞ்சரிப்பதன் அடிப்படையில், ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயன புண்ணிய காலமாகும்.
இதில் கடக ராசியில் சூரியனுடன் சந்திரன் இணையும் நாளான ஆடி அமாவாசை முன்னோர் வழிபாட்டுக்குரியதாகும். இந்நாளில் ராமேஸ்வரம், கன்னியாகுமரி, கோடியக்கரை,
குற்றாலம், பாபநாசம் உள்ளிட்ட புனித தலங்களில் நீராடி முன்னோரை வழிபட்டால் அவர்களின் அன்பும் ஆசியும் கிடைக்கும். பெற்றோர் இறந்த தேதி, திதி மறந்தவர்கள், திதி கொடுக்க தவறியவர்கள் இன்று திதி கொடுப்பது நல்லது.
சூரியன் தந்தையைக் குறிக்கும் கிரகம் என்பதால் 'பிதுர்காரகர்' என்றும், சந்திரன் தாயைக் குறிக்கும் கிரகம் என்பதால் 'மாதுர்காரகர்' என்றும் சாஸ்திரம் கூறுகிறது. ஆண்மை, நிர்வாக ஆற்றல், வீரத்தை தரவல்லவர் சூரியன். மகிழ்ச்சி, தெளிந்த அறிவு, உற்சாகத்தை தரவல்லவர் சந்திரன். இருவரும் இணையும் அமாவாசை நாளில் மறைந்த பெற்றோரை வழிபட்டால் வாழ்வு மென்மேலும் சிறக்கும்.
விரதமிருப்பவர்கள் காலையில் நீராடி, முன்னோர் படத்துக்கு மாலையிட்டு அவர்களுக்கு பிடித்த உணவுகளை படைத்து வணங்க வேண்டும். காகத்துக்கு உணவிட்ட பின்பு விரதம் முடிக்க வேண்டும். பசுவுக்கு கீரை, பழம் கொடுப்பது, அன்னம், ஆடை தானம் செய்வது சிறப்பு.
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்க முன்னோரை நன்றியுணர்வுடன் இன்று வழிபடுவோம்.

No comments:
Post a Comment