Friday, July 7, 2017

புது மணத் தம்பதிகள் இதைக் கவனிக்கவும்


 தம்பதிகள்

ங்கோ பிறந்த இருவரும் இணைவதே திருமண பந்தம்.  தம்பதிகள் ஒருவரையொருவர் புரிந்து கொள்வதற்கு முன்னரே திருமண வாழ்க்கைத் துவங்கி விடுகிறது. விட்டுக் கொடுத்து வாழணும்,   ஒற்றுமையா இருக்கணும், எதிர்த்துப் பேசக்கூடாது என்று புதுமணப் பெண்களுக்கு பல திசைகளில் இருந்து அட்வைஸ்கள் அம்புகளாக வரும். கணவருக்கும் இதேபோல் ஏகப்பட்ட அறிவுரைகள் வந்த வண்ணம் இருக்கும். இதில் எதை எடுத்துக் கொள்ளலாம்? அவற்றுக்கெல்லாம் ஆலோசனைகள் தருகிறார் செங்கல்பட்டு  அரசு மனநலப்பிரிவுத் தலைவர் டாக்டர் அமுதா. 
* எவர் ஒருவருக்கும் நிறை, குறை இருக்கும். அந்த நிறை, குறைகளோடு இருவரும் தங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
* பெண்கள் திருமணமாகி கணவர் வீட்டுக்கு புது இடத்துக்கு, புது சூழலுக்கு வருகின்றனர். புது சூழலுக்கு தன்னைப் பழக்கிக் கொள்ள சில காலம் தேவைப்படும். அக்காலத்துக்கு  கணவரும், குடும்பத்தினரும் உறுதுணையாக இருக்க வேண்டும். அதே போல தன் வீட்டுக்கு வருவது ஒரு புதுப் பெண். அவளுக்கு நம்மைப் பற்றி புரிய வைப்பது, அவளைப் புரிந்து கொள்ள முயல்வது நம்முடைய கடமை என்பதை கணவரும், அவருடைய வீட்டினரும் உணர வேண்டும். 
* உங்கள் இருவருக்கும் இருந்த காதல், க்ரஷ் என எல்லாவற்றையும் துணையோடு பகிர வேண்டும் என்கிற எந்த அவசியமும் இல்லை. அப்படி பகிர்ந்தால்தான் நீங்கள் உண்மையானவர் என்கிற எந்த நியதியும் இல்லை. நம்முடைய பாஸ்ட் லைஃப் என்பது வேறு. அவை நடந்து முடிந்ததாகவே இருக்கட்டும். கையில் கிடைத்திருக்கும் வாழ்க்கையை முழுமையான அர்ப்பணிப்போடு வாழுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.
* கணவர் பேசும்போது மனைவியும், மனைவி பேசும்போது கணவரும் என்ன சொல்ல வருகிறார் என்பதை முழுவதுமாக புரிந்து கொள்ள வேண்டும். அனைத்தையும் உள்வாங்கிக் கொண்டு  அமைதியாக, சொல்ல வருகின்ற விஷயத்தை தெளிவாகப் பேசுதல் அவசியம். பேசிக் கொண்டிருக்கும்போதே குறுக்கீடுதல் எரிச்சலை ஏற்படுத்துவதோடு, மனதில் என்ன நினைக்கிறார் என்பதை முழுவதுமாக தெரிந்து கொள்ள இயலாமல் போய்விடும்.
* குடும்ப வாழ்க்கை என்பது உறவுகளின் சங்கமம். இதில் பெண்கள் கணவர் மட்டும் போதும் என நினைப்பதோ, கணவர் மனைவி மட்டும் போதும் என நினைப்பது தவறு. குடும்பத்தினரின்  உறவும் அவசியம். இரு வீட்டு குடும்பத்தினரையும் நிறை, குறைகளோடு ஏற்றுக் கொள்ள வேண்டும். உறவுகளைப் பற்றி ஒருவரிடம், மற்றவர் புகார் சொல்லிக் கொண்டே இருக்கக்கூடாது. ஒவ்வொரு உறவுகளிடம் இருக்கின்ற பாசிட்டிவைப் பார்க்க வேண்டும். நெகட்டிவ் கேரக்டரை எப்படிச் சமாளிக்கலாம் என மனதில் கலந்தாலோசித்து நடைமுறைப்படுத்த வேண்டும்.
* கணவர் இப்படித்தான் இருக்க வேண்டும். மனைவி இப்படித்தான் இருக்க வேண்டும் என எந்தவித எதிர்பார்ப்பும் வைத்துக் கொள்ளக்கூடாது. அந்த எதிர்ப்பார்ப்புப்படி தம்பதியினர் இல்லாதபோது வாழ்க்கையே வீணாகிப் போனதாக கவலை கொள்வதுண்டு. இது தவறு. ஒருவரையொருவர் முடிந்தவரை புரிந்து நடந்து கொள்ள  வேண்டும்.
* சிலர் ஓவராக விட்டுக் கொடுக்கிறோம் என்ற பெயரில் விருப்பு, வெறுப்பு என அனைத்தையும் விட்டுக் கொடுத்து விடுவார்கள். ஒரு கட்டத்தில் விட்டுக் கொடுப்பதாலேயே  மனஉளைச்சலுக்கு  உள்ளாவார்கள். விருப்பு, வெறுப்புகளை துவக்கத்திலேயே வெளிப்படுத்தி, தெரியப்படுத்த வேண்டும்.
* திருமணத்துக்கு முன்னர் தம்பதியினர் இருவருக்கும் காதல் கதை இருந்திருக்கலாம். அதனை ஒருவரிடம் மற்றவர் சொல்ல வேண்டிய அவசியமில்லை. துவக்கத்தில் ஸ்போர்ட்டிவ்வாக எடுத்துக்  கொள்பவர்கள்  சில நாட்கள் கழித்து அதைப் பற்றி வேறு விதமாக சிந்திக்கலாம். அதனால் தேவையான விஷயங்களை மட்டும் பகிர வேண்டும்.
* திருமண வாழ்வில் நுழைந்ததும் தம்பதியினர் தங்கள் லட்சியத்தை விட்டுக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. உங்கள் லட்சியம் என்ன? நீங்கள் தொடர்ந்து படிக்கப் போகிறீர்களா?  வேலைக்கு  செல்லப் போகிறீர்களா? அதற்கு ஒருவருக்கொருவர் எவ்வகையில் துணை நிற்க முடியும் என்பதை பற்றிப் பேச வேண்டும். ஆனால் அதெல்லாம் திருமணமான அன்றே பேச வேண்டும் என்பதில்லை. மெதுமெதுவாக ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். நேரம் கிடைக்கும்போது உங்கள் முடிவை தெளிவாக சொல்லுங்கள்.   
* நட்பு வட்டம், பண விஷயங்களில் எந்த ஒளிவு, மறைவின்றி இருவரும் இருத்தல் வேண்டும். இல்லையென்றால் ஒருவர் மீது ஒருவர் தேவையற்ற சந்தேகம் ஏற்பட வழி வகுக்கும்.
* திருமணமாகி விட்டால் பெண்கள் தங்களின் பிரண்ட்ஷிப் மற்றும் ஹாபியை விட்டுவிட வேண்டும் என அவசியமில்லை. அதைத் தொடரலாம். அதே போல் கணவரின் பிரண்ட்ஷிப், ஹாபிக்களுக்கும்  மதிப்பளியுங்கள்.
* வாழ்வின் வெற்றியே கிவ் அண்டு டேக் பாலிசி தான். அதாவது விட்டுக் கொடுத்து வாழ்வது. இதில் விட்டுக் கொடுப்பது என்பது சமமாக இருக்க வேண்டும். ஆரம்பத்தில் எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்து அதை ஒரு பழக்கமாக்கிக் கொண்ட பிறகு, அதை மாற்ற முயல்வது கடினம்

No comments:

Post a Comment