Thursday, January 2, 2020

நான்மணிக்கடிகை - எது, எதற்குச் சமம் ? Poems from Tamil Literature

நான்மணிக்கடிகை - எது, எதற்குச் சமம் ?



திரு ஒக்கும், தீது இல் ஒழுக்கம்; பெரிய
அறன் ஒக்கும், ஆற்றின் ஒழுகல்; பிறனைக்
கொலை ஒக்கும், கொண்டு கண்மாறல்; புலை ஒக்கும்,
போற்றாதார் முன்னர்ச் செலவு. 

செல்வம் வேண்டுமா ?

செல்வம் வேண்டாம் என்று யாரவது கூறுவார்களா ?

அந்த செல்வத்தைத் தேடித்தானே இத்தனை அலைச்சல்.

எப்படி அந்த செல்வத்தை அடைவது ?

படிக்க வேண்டுமா ? அதிர்ஷ்டம் வேண்டுமா ? பெரிய ஆட்களின் நட்பு வேண்டுமா ? எது இருந்தால் செல்வத்தை அடையலாம் ?

இது ஒண்ணும் வேண்டாம்.

குற்றம் இல்லாத ஒழுக்கம் இருந்தாலே செல்வம் தானாக வந்து சேரும் என்கிறது நான்மணிக்கடிகை.

அந்த ஒழுக்கமே செல்வத்திற்கு ஒப்பானது.

எப்படி என்று அறிவதற்கு முன்னால், ஒழுக்கம் என்றால் என்ன என்று அறிந்து கொள்வோம்.

ஒழுக்கம் என்றால் ஒழுகுதல்.

வீட்டின் கூரையில் ஒரு சிறு ஓட்டை இருந்தால் அதில் இருந்து நீர் ஒழுகுவதைப் பார்த்து இருப்பீர்கள்.

வீட்டில் குளியல் அறையில் உள்ள குழாய் சரியாக மூடாவிட்டால் நீர் ஒழுக்கிக் கொண்டே இருக்கும்.

அதே போல் நீங்கள் எதை விடாமல் செய்து கொண்டு இருக்கிரீர்களோ அது உங்களது ஒழுக்கம்.

காலையில் எழுந்தவுடன் காபி தினமும் காப்பி குடிக்கிறீர்களா ? அது உங்கள் ஒழுக்கம்.

தினமும் ஒரு மணி நேரம் நடை பயிற்சி செய்கிறீர்களா ? அதுவும் உங்கள் ஒழுக்கம்.

சரி, நான் தினமும் "தண்ணி" அடிக்கிறேன். அதுவும் ஒழுக்கமா ?

நான் தினமும் திருடுகிறேன் ? அதுவும் ஒழுக்கமா ?

மீண்டும் நம் உதாரணத்துக்குப் போவோம்.

நீர் எங்கிருந்து எங்கே ஒழுகுகிறது ? உயர்ந்த இடத்தில் இருந்து தாழ்ந்த இடம் இடம் நோக்கி ஒழுகுகிறது. தாழ்ந்த இடத்தில் இருந்து உயர்ந்த இடம் நோக்கிப் போவது இல்லை.

அதுபோல, சான்றோர், உயர்ந்தோர் செய்த செயல்களை நாம் திரும்ப திரும்பச் செய்தால் அது ஒழுக்கம்.

அந்த ஒழுக்கம் செல்வத்திற்கு இணையானது.

ஒரு மாணவன் தினமும் 2 மணிநேரம் படிக்கிறான் என்று வைத்துக் கொள்வோம்...அவன் கட்டாயம் நல்ல மதிப்பெண்கள் பெறுவான், நல்ல கல்லூரியில் அவனுக்கு இடம் கிடைக்கும், நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும், நிறைய சம்பளம் கிடைக்கும். செல்வம் கிடைக்கும். அதற்க்கு காரணம் என்ன - ஒழுக்கம்.

ஒருவன் தினமும் பாடல் பயிற்சி செய்கிறான், ஒரு விளயாட்டில் பயிற்சி செய்கிறான் என்று வைத்துக் கொள்வோம் ...செய்து கொண்டே இருந்தால் அவன் அந்தத் துறையில் சிறந்து விளங்குவான்.

அப்படி சிறந்து விளங்கினால், அவனுக்கு செல்வமும், பேரும் புகழும் கிடைக்கும் அல்லவா.

எனவே தான்,

திரு ஒக்கும் , தீது இல் ஒழுக்கம்

என்கிறது நான் மணிக்கடிகை.

நான் தினமும் தண்ணி அடிக்கிறேன், புகை பிடிக்கிறேன் என்றால் அதுவும் ஒழுக்கம் தான்.   ஆனால் அது தீய ஒழுக்கம். அது செல்வத்தைத் தராது.

இன்னும் சிந்திப்போம்

No comments:

Post a Comment