Friday, January 10, 2020

ஆயுளை அதிகரிக்கும் 'எண்ணெய் குளி' thanks to dinamalar.com

ஆயுளை அதிகரிக்கும் 'எண்ணெய் குளி'
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10ஜன
2020
00:00
ஆயுர்வேத சிகிச்சை முறைகள் என்னென்ன?

ஆயுளை நீட்டிக்கும் வாழ்வியல் முறையே ஆயுர்வேதம். இதில் மருந்து உட்கொள்ளுதல், உணவில் பத்தியம் பின்பற்றுதல், வாழ்க்கை முறையில் சில மாற்றங்கள் ஆகிய சிகிச்சை முறைகள் உள்ளன. இன்னும் பிரபலமானது பஞ்சகர்மா சிகிச்சை. அதில் ஓர் அங்கம் எண்ணெய் குளி.


ஆயுர்வேத சிகிச்சை என்பது எண்ணெய் குளியல் மட்டுமல்ல.எண்ணெய் குளியின் (மசாஜ்) பலன்கள்?

தினமும் உடலில் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என ஆயுர்வேதம் வலியுறுத்துகிறது. எண்ணெய் தேய்த்து குளிப்பதால் தசைகளின் இறுக்கம் தளர்த்தப்படும். எண்ணெய்க்கு எலும்பு வரை ஊடுருவும் தன்மை இருப்பதால் மூட்டு, எலும்பு தேய்மானம் தவிர்க்கப்படுகிறது.
உடம்பில் ரத்தம்,வெப்பம், காற்றோட்டம் சீராகின்றன. தோலின் வறட்சியும், அழுக்கும் நீங்கி சருமம்மென்மையும், பளபளப்பும் பெறும். மன அழுத்தம்நீங்கி உடலும் உள்ளமும்புத்துணர்வு பெறும்.

எண்ணெய் குளி வகைகள்?

மூட்டுவலி, தேய்மானம், கழுத்துவலி, இடுப்பு வலி, முதுகுத்தண்டு பிரச்னைகள், வாத நோய்களுக்கு என பல தரப்பட்ட நிலையில் உள்ள நோயாளிகளுக்கு அப்யங்கம் (மசாஜ்), கிழி (ஒத்தடம்), பிழிச்சல் (எண்ணெய் அபிேஷகம்), கடி வஸ்தி, ஜானு வஸ்தி (இடுப்பு, மூட்டில் பாத்தி கட்டி சூடு
எண்ணெய் விடுதல்) சிகிச்சை முறைகள் உள்ளன.

எண்ணெய் குளிக்கு ஏற்ற வயது?

பிறந்த குழந்தை முதல் முதியோர் வரை அனைவரும் எண்ணெய் தேய்த்து குளிக்கலாம். வயது, சீதோஷ்ண நிலை, உடல்நிலைக்கேற்ப எண்ணெய் தேய்த்த உடனேயே வெந்நீரில் குளிப்பது நல்லது. குழந்தைகளுக்கு சளித்தொல்லை, சைனஸ், தலைவலி இருந்தால் நல்லெண்ணையை தலைக்கு மட்டும் தேய்த்து விட்டு உடனேயே குளிக்க வேண்டும். நடுத்தர வயதினர், உடல்
உஷ்ணம் அதிகமுள்ள ஆண்கள், பெண்கள் எண்ணெய் தேய்த்து 10 - 15 நிமிடங்களுக்கு பின் வெந்நீரில் குளிக்கலாம்.

எந்த நேரத்தில் குளிக்கலாம்?

சைனஸ், சளித்தொல்லை, தலைவலியால் பாதிக்கப்பட்டவர்கள் சூரிய உதயத்திற்கு முன்பாக குளிக்க வேண்டும். வெயில் காலத்தில் உச்சி வெயிலுக்கு முன்பும், மழை மற்றும் குளிர்
காலத்தில் சூரியன் வந்ததும் எண்ணெய் தேய்த்து குளிக்கலாம். பக்கவாதம், வாத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மாலை 4:00 - 6:00 மணிக்குள் குளிக்கலாம்.

யாரெல்லாம் குளிக்க கூடாது?

காய்ச்சல், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, மூட்டு, வயிறு வீக்கம் உள்ளவர்கள், பெண்கள் மாதவிடாய் நேரம், நீண்ட பயணத்திற்கு பின், அதிக சோர்வுள்ள நேரங்களில் எண்ணெய் தேய்த்து குளிக்க கூடாது. இரவில் குளிப்பதை தவிர்க்க வேண்டும்.

குளித்த பிறகு செய்ய கூடாதது?

உணவு உட்கொண்ட உடனே குளிக்கக் கூடாது. உடலுறவு கூடாது. பகலில் உறங்கக் கூடாது. நீண்ட பயணம் கூடாது. உடற்பயிற்சி, விளையாட்டு போன்று உடலுக்கு ஆயாசம் தரும் செயல்களை செய்ய கூடாது. அசைவம் உண்ணக்கூடாது. அதிக புளி, காரம் சேர்க்கக் கூடாது. ஐஸ்கிரீம், குளிர்பானம் மற்றும் 'ஏசி'யில் இருப்பதை தவிர்க்க வேண்டும். எண்ணெய் பலகாரங்கள், விரைவில் ஜீரணிக்காத உணவுகள் சாப்பிடுவது கூடாது.


ஆர்.சங்கீதா
ஆயுர்வேத மருத்துவர்
திண்டுக்கல். 91592 22665

No comments:

Post a Comment