நாவல் பழத்தின் மீது சிறிதளவு உப்பு, மிளகுத்தூள், ஏலக்காய்த்தூள் போன்றவற்றை தூவிச் சாப்பிடுவது நல்லது. அதுவே ஒரு நாவல் கொட்டையை சூரணமாக்கியோ, வேர், இலைகளைக் கஷாயம் வைத்தோ சாப்பிடுவதாக இருந்தால் மருத்துவர்களின் ஆலோசனையின்றி சாப்பிடக் கூடாது.
`சர்க்கரை நோயைக் கட்டுக்குள் கொண்டுவர கசப்பு மற்றும் துவர்ப்பு சுவை நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்’ என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். அந்த வகையில் நாவல் பழத்தில் இயற்கையிலேயே துவர்ப்புச் சுவை மிகுந்தும் இனிப்புச் சுவை குறைவாகவும் இருக்கும். குறைந்த விலையில் கிடைக்கும் பழங்களில் இதுவும் ஒன்று என்பதால் நாவல் பழத்தை அனைவருமே உண்ணலாம். ஆனால், அளவோடு உண்பதே நல்லது.
நாவல் பழத்தில் பல வகை உள்ளன. அவற்றின் மருத்துவப் பயன்களை விளக்குகிறார் ஆயுர்வேத மருத்துவர் ஆர்.பாலமுருகன்.
"பழங்காலத்தில் பாரத தேசமானது `ஜம்புத் தீவு’, அதாவது `நாவல் தீவு’ என்றே அழைக்கப்பட்டு வந்திருக்கிறது. நாவல் மரங்கள் அதிகம் நிறைந்த நாடாக இந்தியா இருந்திருக்கிறது.
நாவல் பழத்தை உட்கொண்டால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும் என்பது பெரும்பாலானோருக்குத் தெரிந்திருக்கும். விநாயகர் மந்திரத்தில் `கபித்தஜம்புபல சாரு பக்ஷணம்' என்றொரு வரி உண்டு. இதில், 'கபித்த' என்பது விளாம்பழத்தைக் குறிக்கும். 'ஜம்பு' என்பது நாவல் பழம்.
இந்தப் பழங்களை விநாயகர் விரும்பிச் சாப்பிடுவார் என்பது அதன் பொருள். பொதுவாக, உடல் பருமனாக உள்ளவர்கள் சர்க்கரை நோய் வராமல் தற்காத்துக்கொள்ள பருவகால பழமான நாவல் பழத்தை உட்கொள்ளலாம்.
நாவல் மரத்தின் பட்டையும் அதன் வேரும் வயிற்றுப்போக்குக்கு மருந்தாகப் பயன்படுகின்றன. இதன் இலையானது குமட்டல், எச்சில் அதிகமாக ஊறுதல், வயிற்றுப்புண்ணால் ஏற்படும் வாந்தி போன்றவற்றுக்கு மருந்தாகிறது.ஆயுர்வேத மருத்துவர் ஆர்.பாலமுருகன்
மூன்று வகை நாவல் பழம்!
நாவல் பழத்தில் மூன்று வகை உண்டு. ராஜ ஜம்பு(பெரிய நாவல் பழம்), காக ஜம்பு(மிகவும் கறுப்பாக இருக்கக்கூடிய நாவல் பழம்) மற்றும் நதி ஜம்பு(நதிகள் ஓரமாகக் கிடைக்கக்கூடிய சிறிய வகை நாவல் பழம்). இந்த மூன்று வகையான நாவல் பழம் குறித்தும் ஆயுர்வேத மருத்துவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பழத்துக்கும் ஒவ்வொருவிதமான குணாதிசயம் இருக்கிறது. நாவல் பழம் மட்டுமல்ல... நாவல் மரத்தின் இலை, பட்டை, வேர் வரை அனைத்துமே மருத்துவக் குணங்கள் நிறைந்தவை!
மருத்துவப் பயன்கள்!
நாவல் மரத்தின் பட்டையும் அதன் வேரும் வயிற்றுப்போக்குக்கு மருந்தாகப் பயன்படுகிறது. இதன் இலையானது குமட்டல், எச்சில் அதிகமாக ஊறுதல், வயிற்றுப்புண்ணால் ஏற்படும் வாந்தி போன்றவற்றுக்கு மருந்தாகிறது. ஏதாவது ஒரு வேலையில் ஈடுபட்டிருக்கும்போது சிலர் சீக்கிரமாகவே சோர்வடைந்துவிடுவார்கள்.
அவர்கள் சிறிய வகை நாவல் பழத்தை உட்கொண்டால் சுறுசுறுப்பாக அதிக ஆற்றலோடு பணியாற்ற முடியும். தோலில் அதிகமாக எரிச்சல் உள்ளவர்கள் கறுப்பு நாவல் பழம் உண்ணலாம். பெரிய நாவல் பழமானது வயிற்றுப்போக்கு, சர்க்கரை நோய், தோல் எரிச்சல் மூன்றுக்குமே மருந்தாகப் பயன்படுகிறது.
எப்படிச் சாப்பிட வேண்டும்?
நாவல் பழத்தின் மீது சிறிதளவு உப்பு, மிளகுத்தூள், ஏலக்காய்த்தூள் போன்றவற்றை தூவிச் சாப்பிடுவது நல்லது. அதுவே ஒரு நாவல் கொட்டையை சூரணமாக்கியோ, வேர், இலைகளைக் கஷாயம் வைத்தோ சாப்பிடுவதாக இருந்தால் மருத்துவர்களின் ஆலோசனையின்றி சாப்பிடக் கூடாது.
நாவல் விதை சூரணம் மற்றும் கஷாயத்தை எவ்வளவு காலத்துக்கு, எந்த அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை ஆயுர்வேத, சித்த மருத்துவர்களின் அறிவுரையின்படியே உட்கொள்வது அவசியம்.
நாவல் பழத்தில் இனிப்பும் துவர்ப்பும் கலந்திருக்கும். நாவல் விதையில் அதிக துவர்ப்புச் சுவை இருக்கும். இந்தச் சுவையானது உடலில் வாயுவை அதிகப்படுத்தக்கூடியது.
No comments:
Post a Comment